வெள்ளி, 9 மார்ச், 2018

உலக சிறுநீரக தினம்: சிறுநீரக நோய் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு

உலக சிறுநீரக தினமான இன்று சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வு பெண்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. #WorldKidneyDay

சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

சிறுநீரக நோயானது பெண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாட்பட்ட சிறுநீரக நோயினால் உலகளாவிய அளவில் சுமார் 195 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் இறப்பதற்கு காரணமான நோய்களில் நாள்பட்ட சிறுநீரக நோய் எட்டாவது இடத்தில் உள்ளது. ஆண்களில் 12 சதவீதம் பேரும், பெண்களில் 14 சதவீதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணி பெண்களுக்கு  உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் இந்நோய் பெண்களை எளிதாக தாக்குகிறது. 

இந்த ஆண்டு சிறுநீரக தினம் உலக மகளிர் தினத்துடன் ஒன்றிணைந்து கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்களிடையே சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. #WorldKidneyDay