புதன், 21 மார்ச், 2018

மார்ச் 21 - உலக வன தினம் இன்று!

ஆதிமனிதன் காட்டினை நேசித்தான்
காற்றை சுவாசித்தான்
இன்றையமனிதன் காட்டினை அழித்து - பணத்தை நேசிக்கிறான்.
சுவாசகாற்றுக்கு யாசிக்கிறான்...

உலகில் பருவம் தப்பாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது. 

பொதுவாக மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன.

காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும்.வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50% உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன.உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன.

நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள் நன்மை தருகின்றன. மறுபுறம் பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படப் போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பருவம் மாறாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தத் தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது. 

மனித இனம அதன் வரலாற்றில் சந்தித்துள்ள நெருக்கடியான பிரச்னைகளில் இது வரை சந்திக்காதது புவி வெப்பமடைதலால் ஏற்படும் பல்வேறு அழிவுகள். முக்கியமாக காடுகளை அழிப்பதை நிறுத்துவது மற்றும் புதிதாக அதிக மரங்களை வளர்ப்பது மூலம்தான் புவி வெப்பம் அடைதலை தடுக்க முடியும்.வனம் என்பது காட்டு விலங்குகளுக்கு உரியது. அங்குள்ள மரங்களை நாம் வெட்டி விடுவதால் மழை குறைந்துவிடுகிறது. இதனால், விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக நாட்டுக்குள் நுழைந்து விடுகின்றன.

இயற்கையோடு இயைந்த வாழ்வை நடாத்தியவனாகத் தமிழன் வாழ்ந்தான் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. அன்பின் ஐந்திணையாக இருப்பினும் சரி, புறத்திணையாக இருப்பினும் சரி, அதற்குக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, வெட்சி, வஞ்சி, கரந்தை, வாகை, உழிஞை, என மலர்த் தாவரங்களின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தமையும் ஐந்திணைக்கான நிலப்பாகுபாடும் அவற்றிற்கான உயிரினங்கள் உள்ளிட்ட கருப்பொருள்களை வகுத்தமையும் இயற்கையின் மீதான ஆதித் தமிழனது ஈடுபாட்டினைக் காட்டி நிற்கின்றன.

இன்றைய நாளில் உயிரிழந்த உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் சூடான்னை நினைவு கூறுவோம். இயற்கையின் அவசியத்தை உணருவோம். அதை நேசிப்போம். பாதுகாப்போம்.

"பூமி மேல் படிந்த பசுமையான வானம் தான்.. வனம்..!" ஆம் இன்று உலக வனம் தினம்...!

International Day of Forests is celebrated on 21st March 2018. intlForestDay