வியாழன், 8 மார்ச், 2018

குழந்தைகளிடம் ஐபோன் கொடுத்தால் இதுதான் நடக்கும்

சீன குழந்தை செய்த காரியம் அவரது பெற்றோர் பயன்படுத்தி வந்த ஐபோனினை 47 ஆண்டுகளுக்கு லாக் செய்திருக்கிறது.

ஷாங்காய் நகரில் வசிக்கும் இரண்டு வயது குழந்தை தனது தாயின் ஐபோனை 47 ஆண்டுகளுக்கு லாக் செய்துள்ளது. 

தொடர்ச்சியாக தவறான பாஸ்வேர்டினை பதிவு செய்ததால் ஐபோன் 2.5 கோடி நிமிடங்கள், அதாவது 47 ஆண்டுகளுக்கு லாக் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை தவறான பாஸ்வேர்டு பதிவு செய்யும் போதும் சில நிமிடங்கள் அளவு ஐபோன் லாக் செய்யப்படும். 

ஷாங்காய் நகரில் உள்ள ஆப்பிள் ஸ்டோர் ஊழியர் இதுகுறித்து கூறும் போது, ஐபோனினை சரி செய்ய ஒன்று சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் அல்லது ஐபோனில் உள்ள தகவல்களை முற்றுலுமாக அழித்து அனைத்து ஃபைல்களையும் ரீஇன்ஸ்டால் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக தவறான பாஸ்வேர்டு பதிவு செய்து ஐபோன் 80 ஆண்டுகள் வரை லாக் செய்யப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் நடைபெற்ற இச்சம்பவத்தில் கல்வி சார்ந்த வீடியோக்களை ஆன்லைனில் பார்க்க ஐபோன் குழந்தையிடம் வழங்கப்பட்டு இருக்கிறது. இரண்டு மாதங்கள் காத்திருந்த நிலையில், ஐபோனினை மீட்டெடுக்க எவ்வித வழியும் இல்லை என ஐபோன் வைத்திருக்கும் லு தெரிவித்து இருக்கிறார். 

ஆப்பிள் தயாரிக்கும் அனைத்து ஐபோன் மாடல்களிலும் பாதுகாப்பு அம்சத்தை பலப்படுத்த இவ்வாறான அம்சங்களை வழங்குகிறது. இதனால் மென்பொருள் அல்லது வன்பொருள் மூலம் ஐபோன்களை மிக எளிமையாக யாரும் ஹேக் செய்ய விடாமல் பார்த்து கொள்ளும்.

ஆறு முறை தொடர்ச்சியாக தவறான பாஸ்வேர்டு பதிவு செய்யும் போது ஐபோன் டிசேபிள் செய்யப்படும், பத்து முறை தவறான பாஸ்வேர்டு பதிவு செய்யும் போது ஐபோன் தகவல்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விடும்.