வியாழன், 8 மார்ச், 2018

பார்வையற்றோருக்கு வழிகாட்டும் சவுண்ட்ஸ்கேப்

மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்திருக்கும் சவுண்ட்ஸ்கேப் எனும் புதிய செயலி, பார்வையற்றோருக்கு வழிகாட்டும் வேலையை 3D ஆடியோ தொழில்நுட்பம் மூலம் செய்கிறது.

சான்ஃபிரான்சிஸ்கோ:

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சவுண்ட்ஸ்கேப் செயலி பார்வையற்றோருக்காக வெளியிடப்பட்டுள்ளது. 3D ஆடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சவுண்ட்ஸ்கேப் செயலி பார்வையற்றோருக்கு ஆடியோ வடிவில் வழிகாட்டும் படி உருவாக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் சவுண்ட்ஸ்கேப் செயலியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஸ்டீரியோ ஹெட்செட்களை பயன்படுத்த வேண்டும். தற்சமயம் வரை சவுண்ட்ஸ்கேப் செயலி ஆண்ட்ராய்டு பதிப்பு குறித்து எவ்வித தகவலும் இல்லை.

மைக்ரோசாஃப்ட் தளத்தில் சவுண்ட்ஸ்கேப் குறித்த தகவல்களில் இந்த செயலி ஆடியோ கியூ மற்றும் லேபெல்களை 3D வடிவில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செயலி வழங்கும் ஆடியோ தகவல்கள் குறிப்பிட்ட இடம் இருக்கும் திசையை பார்வையற்றோருக்கு உணர்த்தும் வகையில் மிகவும் நேர்த்தியாக இருக்கும் என்றும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.