ஞாயிறு, 19 மே, 2019

சர்வதேச அருங்காட்சியக தினம் May 18

உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. அதில் சில வரலாற்று மாற்றங்களாக மாறுகின்றன. அதற்கு சிறந்த சான்றாக விளங்குவது அருங்காட்சியகம். இன்று சர்வதேச அருங்காட்சியக தினம். 

மனிதர்களின் வரலாறு, கண்டுபிடிப்பு, கலாச்சாரம், மரபுகள், பண்பாடு போன்றவற்றை பாதுக்காத்து எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் அமைப்பதற்கு உதவியாக இருப்பது அருங்காட்சியங்கள் மட்டும் தான்.

 இப்படி பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த அருங்காட்சியங்களை மக்கள் உணர்ந்துகொள்ளவும், அதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காவும், சர்வதேச பன்னாட்டு கூட்டமைப்பு , 1977ஆம் ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக தினத்தை கடைபிடிக்கத்தொடங்கியது. 

இந்த தினத்தில் முக்கியமாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான 4 அருங்காட்சியகங்கள்:

1. பாரிஸில் உள்ள லூவர் (LOUVRE) அருங்காட்சியகம்:

மன்னர்களின் அரண்மனையாக இருந்த இந்த கட்டடம், கடந்த 2 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இங்குதான் புகழ்பெற்ற மோனாலிசா வரைபடம் வைக்கப்பட்டுள்ளது.


2. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்:

1753ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில், புத்தகங்கள், ஆதிகாலத்து பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


3. கியார்கோவில் உள்ள எஜிப்தியன் அருங்காட்சியகம்:

எகிப்தியர்களின் முக்கிய அம்சங்களான மம்மிக்கள், எகிப்து வரலாறு உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கியுள்ள இந்த அருங்காட்சியகம், இன்றும் உலக மக்கள் பலரால் விரும்பப்படும் ஒரு இடமாகவே இருக்கிறது.


4. நியூ யார்க்கில் உள்ள மெட்ரோபாலிடன் அருங்காட்சியகம்:

20 லட்சத்திற்கும் ஆதிகமான ஐரோப்பிய மக்களின் கலைப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆதாம் மற்றும் ஏவாலின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு.