வெள்ளி, 17 மே, 2019

“வாக்களிக்காவிட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து...!”  சோம்பேறி குடிமகன்களுக்கு செக் வைத்த அரசு!

வாக்காளர்கள் தேர்தலில் தங்களது வாக்கை செலுத்தாவிட்டால் அபராதம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யபடும் என்ற ஆஸ்திரேலியா அரசின் சட்டம் அனைத்து நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அஸ்திரேலிய நாட்டில் பொதுமக்கள், தேர்தல்களில் வாக்களிகாமல் இருப்பதை தடுக்கும் வகையில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதன்படி அந்நாட்டு தேர்தல்களில் வாக்களிக்க தவறுபவர்கள் தகுந்த காரணத்தை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அப்படி அளிக்காவிட்டால் அவர்களுக்கு முதற்கட்டமாக 1400 ரூபாயும், தாமதமாக கட்டுபவர்களுக்கு 12000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் இதனை பொருட்படுத்தாமல், ஆஸ்திரேலியாவில் நடக்கும் மாநில அரசுக்கான தேர்தலில், வாக்களிக்க தவறுபவர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் உரிமங்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்  என அந்நாட்டு தேர்தல் அணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை எனக்கூறி டார்வின் பென்சினர் என்பவர் 21 ஆயிரம் ரூபாய் அபராதமாக கட்டியுள்ளார்.

இது மாதிரியான சட்டங்களை இந்தியா போன்ற பிற நாடுகளிலும் விதிக்கப்படவேண்டும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில், நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலில் இந்திய தலைநகர் டெல்லியில் 60% சதவிகித வாக்கு மட்டுமே பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.