வெள்ளி, 25 அக்டோபர், 2019
டென்மார்க்கில் ஆச்சரியம்: நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்
அமெரிக்கா வேற்றுகிரகவாசிகளை மறைத்து எந்த ஆராய்ச்சியையும் நடத்தவில்லை-எட்வர்டு ஸ்னோடன்
கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு: நினைத்து பார்க்க முடியாதது -பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிர்ச்சி
All 39 people found dead in shipping container in Essex were Chinese nationals, officials confirm.
புதன், 23 அக்டோபர், 2019
கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் புதிய உச்சம்.. செயற்கை தோல் கண்டுபிடிப்பு
அதேபோல், கிள்ளுதல், தொடுதல், கூச்சம் போன்ற உணர்வுகளை மனித மூளை தோல் மூலமே கண்டறியும். இந்நிலையில், மனித உணர்வுகளை கண்டறியும் செயற்கை தோலை, பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் பிரான்ஸ் சோபோர்ன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்காம் பாரிஸ்டெக் நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த செயற்கை தோல், சிலிக்கான் (silicone membrane) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மனித தோல் மாற்று அறுவை சிகிச்சைதான் எங்கள் இலக்கு என்று செயற்கை தோலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகள்மருத்துவம்உலகம்பரம்பரை நோய்களை திருத்தியமைக்கும் பொறிமுறை கண்டுபிடிப்பு
விக்கிப்பீடியாவை விரைவில் இழந்து விடுவோமா? - புதிய தகவல்
செய்திகளுக்கு என்று பிரத்யேக பிரிவை அறிமுகம் செய்ய உள்ள பேஸ்புக்..!
செய்திகளுக்கு என்று பிரத்யேக பிரிவை பேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வானொலியைத் தவிர, 1990கள் வரை நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள அடுத்தநாள் காலையில் வரும் நாளேடுகளுக்காக மக்கள் காத்திருந்தனர். பின்னர் செய்தி தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் என்று பரிணமித்து வந்த செய்தித்துறை இன்று முழுக்க முழுக்க இணைய மயமாகிவிட்டது. ஒரு செய்தி ஒரே நொடியில் மில்லியன் கணக்கான மக்களின் கைகளில் உடனடியாக சென்று விழுந்துவிடுகிறது. இதற்கு முழு முதற்காரணம் சமூக வலைதளங்களின் பயன்பாடுதான்.
சமூக வலைத்தளங்களின் இந்த அபரிமிதமான வளர்ச்சி, தொலைக்காட்சியில் செய்தி நேரத்திற்காக காந்திருந்தவர்களை செல்போனை நோக்கி வரவைத்திருக்கிறது. அதிலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் எளிதில் மக்களை அடைந்துவிடுகிறது. இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது பேஸ்புக் நிறுவனம்.
நம்பகமான செய்திகளைப் பெறவும், உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் முக்கியமான செய்திகளை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாக கொண்டு புதிய செய்தி பிரிவை அறிமுகம் செய்வது தான் அந்த புது முயற்சி. செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களான Wall Street Journal, News Corp, Dow Jones, New York Post, the Washington Post போன்ற செய்தி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
செய்தியை வெளியிட விரும்பும் நிறுவனங்கள் மக்களுடன் நேரடி உறவை ஏற்படுத்த இந்த புது வசதிகள் உதவும்.மேலும் அதன் உண்மைத்தன்மை உயர்தரமாக இருப்பதையும் இந்த புது வசதி உறுதி செய்கிறது. பயனர்களுக்கு எந்த வகையிலான செய்திகள் தேவைப்படுகின்றன என்பதை செயற்கை நுண்ணறிவு மற்றும் இதற்கென சிறப்பாக நியமிக்கப்பட உள்ள செய்தி ஆசிரியர்கள் தீர்மானிப்பார்கள். செய்தி சேனல்களில் வரும் தலைப்புச் செய்திகளைப் போலவே, 10 முக்கிய தலைப்புச் செய்திகளைக் கொண்ட ஓர் பகுதி இங்கு பிரதானமாக இருக்கும்.
இனி மக்கள், செய்திகளை தெரிந்துகொள்ள தொலைக்காட்சிகள், யூடியூப், செய்தி நிறுவனங்களின் பேஸ்புக் பக்கங்களை தேடவேண்டியதில்லை. பேஸ்புக் செய்தி சேவையின் மூலமாக பேஸ்புக்கே இனிமேல் நமக்கு செய்தி வாசிக்கப்போகிறது. இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த சேவைக்காக சுமார் 30 லட்சம் டாலர் பணத்தை முதலீடு செய்யவுள்ளது பேஸ்புக். செய்திகளை வழங்கும் செய்தி நிறுவனங்களுக்கு பேஸ்புக் ஓர் குறிப்பிட்ட கட்டணத்தையும் வழங்கும்.
செய்தி சேனல்களில் ப்ரேக்கிங்கை பார்த்து தங்களை அப்டேட் செய்துகொண்ட சமூகம் இனிமேல் பேஸ்புக்கிலேயே செய்திகளை பார்த்து, கேட்டு தெரிந்துகொள்ளப்போகின்றனர். இனி அடுத்து வரும் சந்ததிகளும் செய்திகளுக்காகவும் பேஸ்புக்கை உபயோகப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மார்க் ஜீகர்பெர்க்.
செவ்வாய், 22 அக்டோபர், 2019
கருப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் வெளியான ஆஸ்திரேலிய பத்திரிகைகள்- பின்னணி இதுதான்
சிட்னி:
போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிக்கை நிறுவனமான ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் போலீசார் சோதனை நடத்தினர்.
அரசின் இரு முக்கிய விவகாரங்களை வெளியிட்டதால் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக பத்திரிக்கை நிறுவனங்கள் குற்றம் சாட்டின. பத்திரிக்கைகளுக்கு அரசு ஆதரவு அளிக்கிறது, ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றே என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ‘இரகசிய கலாச்சாரம்’ உருவாகி வருவதாகவும் ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் விளைவாக ஆஸ்திரேலியாவில் இன்று முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும் தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து வெளியிட்டுள்ளன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன.
நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா பத்திரிக்கை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மைக்கேல் மில்லர், அவரது பத்திரிக்கை, தி ஆஸ்திரேலியன் மற்றும் தி டெய்லி டெலிகிராப் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் அச்சிடப்பட்ட கறுப்பு நிற முதல் பக்கத்தின் படத்தை (போட்டோவை) ட்விட்டரில் பதிவு செய்தார்.
மேலும், ‘என்னிடமிருந்து எதை மறைக்க முயற்சிக்கிறார்கள்?’ என அரசாங்கத்திடம் கேள்வி கேட்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
ஏபிசி நிர்வாக இயக்குனர் டேவிட் ஆண்டர்சன் கூறுகையில், ‘ஆஸ்திரேலியா உலகின் மிக ரகசியமான ஜனநாயகமாக மாறும் அபாயம் உள்ளது’ என தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்
இந்த சம்பவத்தை குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், “ஊடக அமைப்புகளுக்கு என்ன வேண்டும்? கடந்த இரண்டு தசாப்தங்களாக இயற்றப்பட்ட கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் புலனாய்வு பத்திரிகை துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. இது பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கிறது என்கின்றனர்.
பத்திரிகை சுதந்திர விசாரணையின் முடிவுகள் அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
பத்திரிகை சுதந்திரம் ஆஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்கு உட்பட்டது. அதில் நான், பத்திரிகையாளர், வேறு யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்,” என்றார்.
'இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் எமர்ஜன்சி கால ஊடக வெளியீடுகளை நினைவுபடுத்திய ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள். இதே போல் அன்றும் இந்திய பத்திரிக்கைகள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டன'
In India, "the Emergency" refers to a 21-month period from 1975 to 1977 when Prime Minister Indira Gandhi had a state of emergency declared across the country.
Related Tags :
Australia | Australian newspapers | black out | ஆஸ்திரேலியா | ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் | கருமைநிற பக்கம்
கார்ட்டூன்க்குள் நடந்த அரசியல் - 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் திரைப்படம்
தென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி - ‘அபோமினபிள்’ அனிமேஷன் திரைப்படத்தை வெளியிட 3 நாடுகளில் தடைவிதிக்கப்பட்டது.
‘Abominable’ pulled from Vietnamese cinemas because of a map of China
( DreamWorks Animation)
|
கோலாலம்பூர்:
அமெரிக்காவை சேர்ந்த பெண் இயக்குனரான ஜில் கில்டன் இயக்கி இருக்கும் அனிமேஷன் திரைப்படம் ‘அபோமினபிள்’. 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.531 கோடியே 75 லட்சம்) செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த முழு நீள அனிமேஷன் படத்திற்கு உலக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.ஆனால் படத்தில் ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் காட்சியால் 3 நாடுகளில் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அது, தென் சீனக்கடல் தொடர்பான சிறிய காட்சி.சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலின் பெரும்பகுதி தனக்குரியது என சொந்தம் கொண்டாடும் வகையில் சீனா தன்னிச்சையாக வெளியிட்டுள்ள வரைபடம் ‘அபோமினபிள்’ படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வரைபடம்தான் சர்ச்சைக்கு காரணம்.ஆனால், தென் சீனக்கடல் தங்களுக்கு சொந்தமானவை என மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் புரூனே ஆகிய 4 தென்கிழக்கு ஆசிய நாடுகளும், இன்னொரு பக்கம் தைவானும் குரல் எழுப்பி வருகின்றன.
எனவே சர்ச்சைக்குரிய அந்த வரைபடம் இடம்பெற்றுள்ள காட்சியை மட்டும் நீக்க வேண்டும் என வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் வலியுறுத்தின.
அபோமினபிள் அனிமேஷன் திரைப்படம் |
Related Tags :
Malaysia | Ban | Abominable | Controversial Map | South China Sea | தென் சீனக்கடல் | அனிமேஷன் திரைப்படம் தடை | அபோமினபிள்
சொகுசு ஓட்டலாக மாறும் நாஜி படையின் பதுங்கு குழி
எகிப்தில் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிக்கள் கண்டெடுப்பு...!
எகிப்து நாட்டில் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகளுடன் கூடிய 30 சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
எகிப்தைச் சேர்ந்த தொல்லியல் துறையினர், தெற்கு பகுதியான லக்ஸாரில் மம்மிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு பலன் கிடைக்கும் வகையில், ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட ஆண், பெண், குழந்தைகள் அடங்கிய 30 சவப்பெட்டிகளை தோண்டி எடுத்துள்ளனர்.
அழகிய பூ வேலைப்பாடுகளுடன பல வண்ணத்துடன் காணப்படும் சவப்பெட்டிக்குள் மம்மிக்கள் இருப்பதையும் தொல்லியல் துறையினர் உறுதி செய்துள்ளனர். எகிப்தில் முற்காலத்தில் இறந்தவர்களை முற்றிலும் துணியால் சுற்றி, சவப்பெட்டிக்குள் வைத்து புதைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிக பழமையான முத்து கண்டுபிடிப்பு!
8000 ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முத்துதான் உலகின் மிகவும் பழமையானது என்றும், இவை நியோலித்திக் காலத்திலேயே வணிகம் நடைபெற்றதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாரவா தீவுகளில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்தபோது ஒரு அறையின் தளத்தில் அந்த முத்து கெண்டெடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீவானது அமீரகத்தின் தலைமையகமான அபுதாபியின் மேற்குப்பகுதியில் உள்ளது. அந்த தீவில் மிகப்பழமையான கட்டுமானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியில் நடந்த ஆராய்ச்சியில் இந்த முத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட முத்தின் லேயர்களை ஆராய்ச்சி செய்ததில் அது கிமு 5800-5600 நூற்றாண்டைச் சேர்ந்த நியோலித்திக் காலத்தைச்சேர்ந்ததாக இருக்கலாம் என்று அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பழமையான முத்து அபுதாபியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அவர்களது தற்போதைய பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் மிகப்பழமையான பின்னணியைக்கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது என்று அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறையின் சேர்மன் முகமது அல் முபாரக் தெரிவித்துள்ளார்.
மராவா பகுதியில் நடைபெறும் ஆராய்ச்சியின் மூலம் அங்கு நியோலித்திக் காலத்தைச் சேர்ந்த சிதைந்த நிலையில் காணப்படும் கற் சிலைகள், சங்கு மற்றும் செராமிக் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள் அதிகம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாது கூர்மையான பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
“10000 ஆண்டுகள் சொகுசு” என்ற பெயரில், அக்டோபர் 30ம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கும் கண்காட்சியில் இந்த முத்து உலகிற்கு முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. அமீரக வல்லுநர்கள் இந்த முத்து வணிகம் செராமிக் மற்றும் இதர பொருட்களுக்கு மாற்றாக, மெசபடோமியா நாகரிகத்துடன் வணிகம் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
அதோடு, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஒருகாலத்தில் முத்து வணிகத்தில் சிறந்து விளங்கியதாகவும், அந்த வணிகம்
ஜப்பானிய வளர்ப்பு முத்துக்களின் வருகையால் 1930 களில் சரிந்ததோடு, உலகளாவிய பொருளாதார மோதல்களை உருவாக்கியதால் அந்த வணிகம் கைவிடப்பட்டது. முத்து வணிகத்தை கைவிட்ட பிறகு தற்போது அரபுநாடுகளின் பொருளாதார சக்தியாக விளங்கும் எண்ணெய் உற்பதிக்கு திரும்பின என்பது குறிப்பிடத்தக்கது.
சனி, 19 அக்டோபர், 2019
அறிவியலின்படி உலகிலேயே மிக அழகான பெண் இவர்தான்... ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள்...
உலக பத்திரிகை சுதந்திர அமைப்பின் தலைவரை நாட்டிற்குள் வரவிடாமல் தடுத்த பாகிஸ்தான்!
கடந்த ஆண்டு மறைந்த பாகிஸ்தானின் பிரபல மனித உரிமை ஆர்வலர் ஆஸ்மா ஜஹாங்கிர் நினைவாக நடத்தபடவிருக்கும் மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக உலகளாவிய பத்திரிகை சுதந்திர அமைப்பின் ஆசியாவிற்காக ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் பட்லர் அமெரிக்காவிலிருந்து லாகூருக்கு விமானத்தில் வந்திறங்கினார்.
அப்போது விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், தாங்கள் உள்துறை அமைச்சகத்தின் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளீர்கள் என்பதால் உங்களை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என தடுத்ததுடன் அவரை உடனடியாக வேறு விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக உலக பத்திரிகை சுதந்திர அமைப்பின் தலைவர் ஜோயல் சைமன் கூறுகையில், பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் பற்றி கவலை கொள்பவர்களின் முகத்தில் விடப்பட்ட மிகப்பெரிய அறை இது. இது தொடர்பாக பாகிஸ்தான் விளக்கம் தர வேண்டும். பத்திரிகை சுதந்திரம் பற்றி அரசு கவலைப்படுவதாக இருந்தால் மிகவும் நேர்மையான முறையில் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ஸ்டீவன் பட்லர் பாகிஸ்தானுக்கு வாடிக்கையாக வரக்கூடியவர் என்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களுடன் இணைந்து பணியாற்றுபவர் என்றும் அவரை பாகிஸ்தான் அரசு நடத்தியுள்ள விதம் மிகவும் கலவை கொள்ளச்செய்வதாக இருப்பதாகவும் சைமன் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் பல முன்னணி பத்திரிகைகள் கூட சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் சில செய்தி இணையதளங்கள் முடக்கப்பட்டு மூடப்பட்டு வருவதாகவும் கூறப்படும் நிலையில் உலக பத்திரிகை சுதந்திர அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி
சிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக விமர்சித்த டிரம்ப்
தலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு: கேட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை
வியாழன், 17 அக்டோபர், 2019
ராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில் சிரித்து மகிழ்ந்த உறவினர்கள்
மேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - நோ பிரா’ (உள்ளாடை இல்லை) புரட்சி சுல்லி!
ஐஎஸ் பயங்கரவாதிகளை குர்திஷ் போராளிகளே விடுதலை செய்கின்றனர்- துருக்கி அதிபர் திடீர் குற்றச்சாட்டு
தக்கன பிழைக்கும் 'குர்தீஸ்'
வியாழன், 10 அக்டோபர், 2019
குர்துக்கள் யார்? அவர்கள் மீது தாக்குதல் ஏன்? உலக நாடுகள் என்ன சொல்கின்றன?
சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான் வழியாகவும் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், பதற்றம் நிலவுகிறது.
துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்துக்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் வாழும் நிலப்பரப்பை குர்திஸ்தான் என்று அவர்கள் அழைக்கின்றனர். இவர்கள் ஒரு இன சிறுபான்மை குழு, சுமார் இரண்டரை கோடியில் இருந்து 3 கோடி வரை இருப்பார்கள் பெரும்பாலானவர்கள் சன்னி முஸ்லிம்கள். அவர்கள் ஒரு தனித்துவமான இனம், கலாச்சாரம் மற்றும் மொழியால் ஒன்றுபட்டுள்ளனர்.
குர்துகள் எங்கு வாழ்கிறார்கள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், குர்திஸ்தான் என்று அழைக்கப்படும் தாயகத்தை உருவாக்குவதற்கு குர்துகள் பாடுபட்டு வருகிறார்கள். இப்போது உலகின் மிகப்பெரிய நாடற்ற நாடுகளில் குர்திஸ்தான் ஒன்றாகும்,
அரசு சாரா பிராந்தியமான மக்களுக்கு உத்தியோகபூர்வ தாயகமோ நாடோ இல்லை. இன்று, குர்திஸ்தான் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் மற்றும் ஆர்மீனியா ஆகிய ஐந்து வெவ்வேறு நாடுகளில் உள்ள நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
ஒய்.பி.ஜி என் அழைக்கப்படும் குர்தீஷ் மக்கள் பாதுகாப்புப் படை தான் குர்து மக்களை பாதுகாக்கிறது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் இந்த அமைப்பு பெரும் பங்கு வகித்தது.'

அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் சேர்ந்து கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டியது ஒய்.பி.ஜி., அமைப்பு. சிரியாவில் நிலைமை இப்படி இருக்க, துருக்கியில், குர்துக்களுக்கு பெரிய அளவில் மதிப்பு கிடையாது. மேலும் தனி தேசம் கேட்கும் குர்துக்கள் தங்கள் நாட்டிலும், தங்கள் நாட்டின் எல்லை அருகேயும் இருப்பதை துருக்கி விரும்பவில்லை.
துருக்கியில் குர்துகள் தங்கள் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகின்றனர், பெரும்பாலும் துருக்கியில் இவர்கள் "மவுண்டன் டர்க்ஸ்" என்று அழைக்கப்படுகிறார்கள், அங்கு அவர்கள் பாரம்பரிய குர்திஷ் ஆடைகளை அணியவோ அல்லது அவர்களின் மொழியைப் பேசவோ தடை செய்யப்பட்டு உள்ளனர்.

துருக்கியில் குர்துகள் மிகப்பெரிய இன சிறுபான்மையினராக இருந்தாலும், சுமார் 20 சதவீத மக்கள் உள்ளனர், அவர்கள் துருக்கியில் ஒரு சிறுபான்மைக் குழுவாக அங்கீகரிக்கப்படவில்லை.
குர்துக்களின் தனி தேசத்தை விரும்பாத துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் குர்துக்கள் போராளிகள் குழுவின் ஆதரவுடன் தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் செயல்பட்டு வரும் குர்திஸ்தான் வொர்க்கர்ஸ் கட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டவர்.
எல்லையோரம் உள்ள குர்து இனப் போராளிகளை தீர்த்துக்கட்ட தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த துருக்கி அதிபர் எர்டோகனுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தது.
தங்கள் நாட்டு படைகளை சிரியாவில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்த டிரம்ப், அதே வேளையில், குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி போர் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இருப்பினும் இதைப் பொருட்படுத்தாத துருக்கி அரசு, குர்து இனப் போராளிகளுக்கு எதிராக போரைத் தொடங்கியுள்ளது.

புதன்கிழமை இரவில் சிரியாவின் ரஸ் அல் அயின் நகரை நோக்கி, துருக்கி ராணுவம் வான் வழித்தாக்குதலைத் தொடங்கியது. டல் அப்யத் உள்பட 2 நகரங்களில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த நகரங்கள் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன.
உயிருக்கு அஞ்சி அங்கு வசிக்கும் 2 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இதுவரை ஒய்.பி.ஜி. போராளிகள் குழுக்களின் 181 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக துருக்கி கூறியுள்ளது.
குர்திஷ் சிரிய ஜனநாயகப் படைகள் (எஸ்.டி.எஃப்) வியாழக்கிழமை, தல் ஹலாஃப் மையத்திலும், வடகிழக்கு சிரியாவின் ஸ்லுக் நகரத்திலும் "துருக்கிய ஆக்கிரமிப்பு இராணுவம்" மேற்கொண்ட தரை ஊடுருவல் முயற்சியைத் தடுத்து விட்டதாக கூறி உள்ளது.
ஆபரேஷன் ' அமைதி வசந்தம் ' இரவில் விமானம் மற்றும் நிலம் மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் அடையப்பட்டன. திட்டமிட்டபடி செயல்பாடு வெற்றிகரமாக அமைந்தது என கூறியது.
துருக்கியின் இராணுவ நடவடிக்கையின் முதல் நாளில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது
சிரியாவின் எல்லையை ஒட்டிய அக்காக்கலே என்ற இடத்தில் ராணுவ டாங்குகள் குவிக்கப்பட்டுள்ளன. குர்து போராளிகள் குழுக்களுக்கு எதிராக துருக்கி தொடங்கியுள்ள இந்தப் போரால், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதம் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
துருக்கி நடவடிக்கையை பஹ்ரைன், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் கண்டித்துள்ளன. இங்கிலாந்து, ஈராக் போன்ற பல நாடுகள் "கடுமையான கவலையை" வெளிப்படுத்தியுள்ளன.
நிலைமை குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இன்று காலை தனிப்பட்ட முறையில் கூடியது. ஆபரேஷன் ' அமைதி வசந்தம் ' என்ற பெயரில் குர்துக்கள் மீது துருக்கி நடத்தும் தாக்குதல் பற்றி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கவலை தெரிவித்து உள்ளது.
சைரா நரசிம்ம ரெட்டி - அதிர வைக்கிறது
அங்கயற்கண்ணி, யாழினி போன்ற சகோதரிகளின் நினைவுகளுள் ஈகைகளும் கண் முன்னே நிழலாடியது. அதுவும் பாளையக்காரர்கள் பலர் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் எதனால் வீழ்த்தப்பட்டது என்பதும் ஆரம்பகால இயக்கங்களின் செயற்பாடுகளையும் முரண்பாடுகளையுமே திரையிட்டு காட்டியது.
Sye_Raa_Narasimha_Reddy |
இது போன்ற தமிழர் நாகரீக வரலாறுகளையும், வீரர்களுடைய கதைகளையும் தயாரிப்பதற்கு முன் வர வேண்டும். தெலுங்கு சினிமா உலகம் அதை பலமுறை நிரூபித்திருக்கிறார்கள். இவ்வாறான படைப்புக்கள் தலைமுறை கடந்தும் வாழ வைக்கும்.'"
#HistoricalBlockbuster
புதன், 9 அக்டோபர், 2019
அணைக்கட்டு திட்டத்தால் நீரில் மூழ்கும் வரலாற்று சின்னங்கள்..!
துருக்கியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹசன்கீஃப் பகுதி புதிதாக கட்டப்பட்டுள்ள அணைக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது.
துருக்கியில் டைக்ரிஸ் ஆற்றங்கரையுல் அமைந்துள்ள மிகவும் பழமையான பகுதிகளில் ஹசன்கீஃப் பகுதியும் ஒன்று. இயற்கையை தன்னுள் புதைத்துள்ள பாலைவனச் சோலை மற்றும் மனித நாகரிகத்தின் பழமையான குடியிருப்புகளை கொண்ட அப்பகுதியில் 12 ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பிரமிப்பை ஏற்படுத்தும் ஆயிரக்கணக்கான குகைகள், நினைவு கல்லறைகள், தேவாலயங்கள் என உலகின் நினைவுச் சின்னமாகமே அறியப்படும் ஹசன்கீஃப் பகுதியில் துருக்கி அரசானது இலிசு என்ற அணையை கட்டியுள்ளது. இதனால் அங்கு பழங்காலம் தொட்டு வாழ்ந்து வந்த 80 ஆயிரம் மக்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மொசபடோமியா, பைசான்டியம், ஓட்டோமன் மற்றும் அரேபிய பேரரசுகளின் வரலாற்று எச்சங்களை தன்னுள் கொண்டுள்ள ஹசன்கீஃப் பகுதியை அணைத்திட்டத்திற்கு துருக்கி அரசு பலி கொடுத்துவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மக்களின் பல ஆண்டுகால போராட்டம் வேருடன் பிடுங்கியெறியப்பட்ட நிலையில், ஹசன்கீஃப் பகுதியை இன்னும் சில நாட்களில் மறையும் என்றும் அவர்கள் கவலையுடன் கூறினர்.