வெள்ளி, 30 அக்டோபர், 2015

என்னவள்

என்னுள்ளே பல மாற்றங்களை
ஏற்படுத்தியவள், பார்த்த நாள்
முதல் பின் தொடர்கிறேன்,
அவள் பாத சுவடுகள் வழியே!

அவளின் பாதம் பாதமல்ல பல்லக்கு,
என் இதயத்தை காதலில் உறைய வைத்த 
பல்லக்கு,அவள் வைக்கும் ஒவ்வொரு அடியும்
இம்மண்ணில் விழவில்லை என் மனதில்!

தேவதை அவள்!
அல்லித்தண்டு பாதம்,தேன் சிந்தும் பாதம்
அவளின் பாதம், தண்ணீர் கூடஅமிர்த சுவை 
கண்டது அவளின் பாதம் தரிசித்ததால்!

பாதத்தோடு பூட்டிய இரண்டடுக்கு கொலுசு
அதில் பதித்த மூன்று முத்துக்களின் கொத்து
அதுவே அவளின் அழகிய பாதத்தின் சொத்து, அவை
உன் பாதத்தோடு பூட்டவில்லை, என் இதயத்தோடு!

உன் பாத கொலுசொலி ஒலித்தது என்
நாடித்துடிப்பாய் ,நான் துடிதுடித்துப்போனேன் 
துவண்டு போனேன், தூக்கமற்று
பசியற்று, காதல் எனும் கருவறைக்குள்! 

கருவறையை விட்டு கரை சேர்க்க
வருவாயா உன் பாதத்தால் எனை நோக்கி
காதலை முத்துக்களாய் கோர்த்து
இல்லற வாழ்வில் இன்புற,
துடியாய் துடிக்கிறது என் இதயம்,
உன் பாத கொளுசொலியாய்!

உன் காதலை என்னிடம் நீ கரை சேர்க்க 
உன் நிழற்படம் பார்த்து மட்டுமே 
வார்த்தைகளை கோர்த்து கவிதையாய் 
கரை சேர்த்த என் காதலை நீ
நிழற்படமாகவே மாற்றிவிட்டாய்!!!

இதற்காகவா உன் பொய் காதலை கரை 
சேர்த்தாய் , புலப்பட்டது பிறகு, உன்
 பாத சுவடுகள் அல்ல புதைகுழிகளின் 
பூங்காவனம் , உன் கொலுசின் ஓசை 
அல்ல நீ எனக்கு அடித்த சங்கு ஓலி என்று!!!