சனி, 31 அக்டோபர், 2015

பனிப்போர் என்றுமே முடிவுக்கு வரப்போவதில்லை

கிரிமியா, சிரியாவுக்குள் மூக்கை நுழைத்தது தற்செயலானது அல்ல. கடந்த கால ரஸ்யாவின் செயற்பாடுகளும் முன்னோக்கிய நகர்வும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இனி பின்வைக்குமளவு என் கால் இல்லை என்று தெளிவான நகர்வுகளுடன் ரஸ்யா…!!!

கோர்க்காசிய பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த ஆயத மோதலைச் சாக்காக வைத்துக் கொண்டு அப்பிராந்தியத்தில் மூக்கை நுழைக்க அமெரிக்கா முயற்சித்துவரும் வேளையில், ~நான் ஒன்றும் சளைத்தவன் அல்ல| என்பதை நிரூபிப்பது போன்று ரஸ்யா அமெரிக்காவின் கொல்லைப் புறத்திலே இராணுவ ஒத்திகையொன்றைச் செய்ய களத்தில் இறங்கியிருக்கிறது.
சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் குடியரசும் தற்போதைய அயல் நாடுமான ஜோர்ஜியாவின் பிரிவினை கேட்டுப் போராடிய மாநிலமான தெற்கு ஒஸ்ஸற்றியாவை தனது கட்டுப் பாட்டின் கீழ் பலவந்தமாக ஒன்றிணைக்க ஜோர்ஜியா எடுத்த முயற்சியில் தெற்கு ஒஸ்ஸற்றியா பகுதியில் சமாதானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ரஸ்யா ஜோர்ஜியாவுடன் யுத்தம் புரிய வேண்டிய நிலை உருவானது.
ஒரு சில நாட்களே நீடித்த இந்த யுத்தத்தின் விளைவாக உருவான அரசியல் சூழலும் மேற்குலகின் ஒரு தலைப்பட்சமான அணுகுமுறையும் தெற்கு ஒஸ்ஸற்றியா மட்டுமன்றி ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற அப்காசியாவினதும் தனிநாட்டுக் கோரிக்கையை ரஸ்யா அங்கீகரிக்கும் நிலையை உருவாக்கியது. இந்த இரு தேசங்களும் 1992 இலேயே தம்மை தனிநாடுகளாக பிரகடனப்படுத்திய போதிலும் எந்தவொரு நாடும் அவற்றை அங்கீகரிக்கவில்லை. எனினும் ஆகஸ்டில் இடம்பெற்ற மோதலை அடுத்து உருவான சூழ்நிலைகளால் ரஸ்யா அவற்றை அங்கீகரித்தது.
இந்நிலையில் செப்டம்பர் 6ஆம் திகதி மத்திய அமெரிக்க நாடான நிக்கரகுவாவும் இந்த இரு தேசங்களையும் தனிநாடாக அங்கீகரித்துள்ளதுடன் விரைவில் அந்நாடுகளில் தனது தூதுவராலயங்கள் திறக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் குடியரசும் தற்போதைய ரஸ்யாவின் அயல் நாடுமான பெலாரஸ் இம்மாத முடிவிற்குள் இந்த இரண்டு தேசங்களையும் தனிநாடுகளாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில் தெற்கு ஒஸ்ஸற்றியாவில் ஜோர்ஜியா இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ரஸ்யா இவ்வளவு தூரம் அதிரடி நடவடிக்கையில் இறங்கும் என எதிர்பார்த்திராத அமெரிக்க நடப்பு விவகாரங்களால் மிகவும் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருக்கின்றது. கடும்போக்காளர் எனக் கருதப்பட்ட விளாடிமிர் புட்டின் ஜனாதிபதி பதவியில் இருந்து அகன்று பிரதமர் பதவியில் அமர்ந்ததும் அவரது நண்பரான மெட்வடேவ் ஜனாதிபதி பதவியில் அமர்ந்ததும் ரஸ்யாவின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என நினைத்திருந்த அமெரிக்காவுக்கு நடப்பு நிகழ்வுகள் ஏமாற்றத்தையே தந்தன.
ஒஸ்ஸற்றிய விவகாரத்தில் மத்தியஸ்தம் வகித்த ஐரோப்பிய ஒன்றியம் ரஸ்யப் படைகள் ஜோர்ஜிய மண்ணில் இருந்து அகல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தபோது தெற்கு ஒஸ்ஸற்றியா மற்றும் அப்காசியா மீது ஜோர்ஜியா மீண்டுமொரு முறை பலாத்காரத்தைப் பிரயோகிக்காது என்ற உறுதிமொழியைப் பெற்றுக் கொண்ட ரஸ்யா ஜோர்ஜியாவிலிருந்து படைகளை வாபஸ் பெறத் தொடங்கியுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின் படி அக்டோபர் முதலாம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 200 வரையிலான கண்காணிப்பாளர்கள் ஜோர்ஜியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவர். இதனையடுத்து 10 நாட்களுக்குள் ரஸ்யப் படைகள் ஜோர்ஜிய மண்ணைவிட்டு முற்றாக அகல வேண்டும்.
இதனை ஏற்றுக் கொண்ட ரஸ்யா தனது பிடியை வலுப்படுத்த புதிய தந்திரமொன்றைக் கையாண்டுள்ளது. 1992 இல் ஜோர்ஜியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி தெற்கு ஒஸ்ஸற்றியா மற்றும் அப்காசியா ஆகிய தேசங்களில் சமாதானப் படைகளை ரஸ்யா நிறுத்தியிருந்தது. புதிய ஒப்பந்தத்தின்படி தனது படைகளை விலக்கிக் கொள்ளும் ரஸ்யா, புதிதாக உருவான நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பிரகாரம் ஒவ்வொரு நாட்டிலும் 3,800 படையினர் வீதம் நிறுத்த முடிவு செய்துள்ளது. சமாதானப் படையினர் போலல்லாது புதிதாக நிலைகொள்ளும் படையினர் முழுச் சுதந்திரமும் பெற்றவர்களாகவும் சர்வதேச சட்டவிதிகளுக்கு அமையச் செயற்படக்கூடிய அதிகாரம் மிக்கவர்களாகவும் விளங்குவர். அதாவது இந்த 2 தேசங்களினதும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் சந்தர்ப்பத்தில் அதற்குக் காரணமான நாட்டின் மீது ரஸ்யா போர் தொடுப்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இதன் மூலம் கிடைத்திருக்கின்றது. இதனை வேறு விதத்தில் சொல்வதானால்
சும்மா இருந்த சங்கை அமெரிக்கா ஊதிக் கெடுத்திருக்கின்றது.
இதேவேளை விடாக்கண்டனான அமெரிக்காவும் ஒரு கை பார்த்துவிடுவது என்ற அடிப்படையில் ஜோர்ஜியாவுக்கு தனது கடற்படைக் கப்பல்களை அனுப்பி வைத்திருக்கின்றது. கருங்கடல் பிராந்தியத்துக்குள் நுழைந்துள்ள அமெரிக்காவின் 6 ஆவது கடற்படைப்பிரிவு அணுவாயுத யுத்தக் கப்பலான மவுண்ட் வைற்னி உட்பட 3 கப்பல்கள் ஜோர்ஜிய துறைமுகமான போற்றி இல் நங்கூரம் இட்டுள்ளன.
இதனால் ரஸ்யா பெரிதும் சீற்றமடைந்துள்ளது. ஜோர்ஜியாவுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காகவே தனது கப்பல்கள் ஜோர்ஜியா சென்றிருப்பதாக அமெரிக்கா கூறினாலும் அதற்கு எதற்காக அணுவாயுத யுத்தக் கப்பல்கள் என்ற கேள்விக்கு அமெரிக்காவிடம் பதிலில்லை.
இதேவேளை நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு யேர்மனி, ஸ்பெயின், போலந்து ஆகியவையும் நமது கப்பல்களை இப்பிராந்தியத்துக்கு அனுப்பி வைத்துள்ளன. 90 களின் முன்னர் ரஸ்யாவைத் தவிர வேறு யாருமே நுழைய முடியாமல் இருந்த
இப்பிராந்தியத்தில் இன்று யார் யாரோவெல்லாம் நுழைவது ரஸ்யாவுக்குப் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தனது கப்பல்கள் மூன்றை அப்காசியத் துறைமுகங்களுக்கு ரஸ்யா அனுப்பி வைத்திருக்கின்றது. இது தவிர ஜோர்ஜியா மீது இராணுவத் தடை விதிக்குமாறும் ரஸ்யா அழைப்பு விடுத்துள்ளது.
நடப்பு நிகழ்வுகள் மூன்றாவது உலக யுத்தம் ஒன்றுக்கு வித்திட்டுவிடுமோ என்ற அச்சமொன்று உருவாகியுள்ள சூழ்நிலையில் தென்னமெரிக்க நாடான வெனிசுவேலாவுடன் இணைந்து கடற்படை ஒத்திகையொன்றைச் செய்யப் போவதாக ரஸ்யா அறிவித்துள்ளது. நவம்பர் 10 முதல் 14 வரை நடைபெறப் போகும் இந்த ஒத்திகையில் உலகிலே சிறந்த அணுவாயுத நாசகாரி கப்பல்களுள் ஒன்று எனக் கருதப்படும் ரஸ்யக் கப்பலான ~பீற்றர் த கிரேட்| கலந்து கொள்ளவுள்ளது. இதனுடன் மேலும் 3 கடற்படைக் கப்பல்களும் கலந்து கொள்ளும் ஆயிரம் கடற்படை வீரர்களும் இந்த ஒத்திகையில் பங்கெடுப்பர்.
ஜோர்ஜியாவில் தரித்து நிற்கும் அமெரிக்க யுத்தக் கப்பல்கள், போலந்தில் அமெரிக்கா செய்து கொண்டுள்ள ஏவுகணைத் தடுப்பு ஏற்பாடு ஒப்பந்தம், உக்ரைனை நேட்டோவில் இணைத்தல் என ரஸ்யாவைச் சூழ்வதற்கு அமெரிக்க முயற்சித்து வரும் நிலையில் அமெரிக்காவின் கொல்லைப் புறத்தில் அத்திலாந்திக் சமுத்திரத்தினூடாக கரீபியன் கடலை ரஸ்யா எட்டுவதென்பது தற்செயல் நிகழ்வாகக் கருதப்பட முடியாதது. 20 வருடங்களின் பின் ரஸ்யா இத்தகையதொரு போர் ஒத்திகையில் அதுவும் மிகவும் பலம்பொருந்திய ஒரு கடற்படைக் கப்பலின் உதவியுடன் ஈடுபடுவது அமெரிக்காவுக்கு பல சேதிகளைச் சொல்லவே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கெடுபிடி யுத்தம் முடிந்து அமெரிக்கா தலைமையிலான ஏக தலைமையின் வழிநடத்தலில் உலகம் பயணிப்பதாக நிலைமைகள் தென்பட்ட போதிலும் அமெரிக்கக் கழுகு ஏகபோக உரிமையை அனுபவிப்பதை ரஸ்யக் கரடி அனுமதிக்கப் போவதில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப் படுகின்றது. உலகின் என்ன தான் மாறினாலும் இந்த இரண்டு வல்லரசுகளுக்கும் இடையிலான பனிப்போர் என்றுமே முடிவுக்கு வரப்போவதில்லை என்பதுவும் இதன் மூலம் உணர முடிகின்றது.
இந்தக் கடற்படை ஒத்திகைக்கு மற்றுமொரு முக்கியத்துவமும் இருக்கிறது. எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி அமெரிக்க அரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற
இருக்கின்றது. இக்காலப்பகுதியிலேயே இந்த ஒத்திகையும் அமெரிக்கக் கண்டத்தில் நடைபெறுகின்றது. இந்நிலையில் தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பதிலும் இது செல்வாக்குச் செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.
கடந்த யூலையில் ரஸ்யாவுக்கு விஜயம் செய்த வெனிசுவேலா அதிபர் ஹியூகோ சாவேஸ், ரஸ்யாவின் அணுவாயுதம் தாங்கிய யுத்த விமானங்களுக்கு தனது நாட்டின் கதவுகள் திறந்திருக்கின்றன என பகிரங்கமாக அறிவிப்புச் செய்திருந்தார்.
சோவியத் ஒன்றியம் உலகில் இருந்த 70 வருடங்கள் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் உந்து சக்தியாக, பக்க பலமாக அமைந்திருந்தது.
இதன்விளைவாக உலகின் போக்கில் பல சாதகமான மாற்றங்களும் ஏற்பட்டன.
கடந்த 2 தசாப்தங்களாக விடுபட்டுப் போயிருந்த அப்பணியை ரஸ்யா தொடர்ந்தும் முன்னெடுக்குமானால் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் உலக அரங்கில் மீண்டும் ஒலிக்கும் வாய்ப்பு உருவாகலாம். அதனை ரஸ்யா செய்யுமா என்பதே இன்று முற்போக்குச் சக்திகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

போகும் போக்கில் புரியவைத்து விட்டாய் வாழ்வு பொய் என்று

புரியவில்லை அன்பே... நீ நடத்தும்
நாடகங்கள்
ஒவ்வொன்றும் !!!
மறந்து விட்டேன் உன்னை.....!! என்று தான்
சொல்ல
நினைக்கிறன் ????
ஆனால் சொல்லி முடிக்கும் மறுகணம்
நினைவில்
நீ..!!!
பிரிந்து விட்ட பின்னும் உன் பெயர்
படித்தால் உள்ளம்
புல்லரிப்பது என்னவோ உண்மை தான்
அன்பே..!!
இந்த முறை உன் பிரிவு என்னை ஸ்தம்பிக்க
செய்யவில்லை.. காரணம் நீ என்னுள்
விட்டு சென்ற ரணங்கள்..!!!..
போகும் போக்கில் புரியவைத்து விட்டாய்
வாழ்வு பொய் என்று!!

கிழிந்த பக்கங்கள்

உனக்காக நான் இழந்தது 
என்னை மட்டுமல்ல, 
என்னை சார்ந்த அனைத்துமே..!! 

நம் காதலை மறைக்க 
நண்பர்களிடம் கூறிய பொய்.!! 
தொலைபேசியில் உன் பெயரோ 
அழகிய ஆண் பெயர்..!! 
படிப்பதாக புத்தகம் திறந்து 
உனக்கு அனுப்பிய குறுந்தகவல்..!! 
உன்னை சந்திக்க வேண்டுமெனில் 
திடீரென வரும் காய்ச்சல்..!! 
நண்பர்கள் தூங்கிய நடு இரவில் 
உன் புகைப்படம் பார்ப்பது 
என எத்தனை போராட்டங்களில் 
உன்னை காப்பாற்றி இருக்கிறேன்..!! 

ஆனால் நீயோ, 
அழகில்லை என என்னை ஒதுக்கி 
உன் அழகின் அழகை காட்டி விட்டாய்..!! 
அடி போடி கிறுக்கி, 
என் வாழ்கையை கிறுக்கி விட்டு 
உன் ஓவியம் வரைய பார்க்கிறாய்..!! 
என்னை கண்ணீரில் அமிழ்த்தி 
உன் தாகம் தீர்க்க நினைக்கிறாய்..!! 

இப்படி நடுவழியில் விட்டு போகவா, 
நடு இரவில் விழிக்க வைத்தாய்..!! 
பேய் காதல் கூட 
உண்மையெனில் சேர்ந்து விடும்..!! 
பொய் காதல் என்றும் 
சூரியனை நோக்கிய பனித்துளி தான்..!!

என்னவள்

என்னுள்ளே பல மாற்றங்களை
ஏற்படுத்தியவள், பார்த்த நாள்
முதல் பின் தொடர்கிறேன்,
அவள் பாத சுவடுகள் வழியே!

அவளின் பாதம் பாதமல்ல பல்லக்கு,
என் இதயத்தை காதலில் உறைய வைத்த 
பல்லக்கு,அவள் வைக்கும் ஒவ்வொரு அடியும்
இம்மண்ணில் விழவில்லை என் மனதில்!

தேவதை அவள்!
அல்லித்தண்டு பாதம்,தேன் சிந்தும் பாதம்
அவளின் பாதம், தண்ணீர் கூடஅமிர்த சுவை 
கண்டது அவளின் பாதம் தரிசித்ததால்!

பாதத்தோடு பூட்டிய இரண்டடுக்கு கொலுசு
அதில் பதித்த மூன்று முத்துக்களின் கொத்து
அதுவே அவளின் அழகிய பாதத்தின் சொத்து, அவை
உன் பாதத்தோடு பூட்டவில்லை, என் இதயத்தோடு!

உன் பாத கொலுசொலி ஒலித்தது என்
நாடித்துடிப்பாய் ,நான் துடிதுடித்துப்போனேன் 
துவண்டு போனேன், தூக்கமற்று
பசியற்று, காதல் எனும் கருவறைக்குள்! 

கருவறையை விட்டு கரை சேர்க்க
வருவாயா உன் பாதத்தால் எனை நோக்கி
காதலை முத்துக்களாய் கோர்த்து
இல்லற வாழ்வில் இன்புற,
துடியாய் துடிக்கிறது என் இதயம்,
உன் பாத கொளுசொலியாய்!

உன் காதலை என்னிடம் நீ கரை சேர்க்க 
உன் நிழற்படம் பார்த்து மட்டுமே 
வார்த்தைகளை கோர்த்து கவிதையாய் 
கரை சேர்த்த என் காதலை நீ
நிழற்படமாகவே மாற்றிவிட்டாய்!!!

இதற்காகவா உன் பொய் காதலை கரை 
சேர்த்தாய் , புலப்பட்டது பிறகு, உன்
 பாத சுவடுகள் அல்ல புதைகுழிகளின் 
பூங்காவனம் , உன் கொலுசின் ஓசை 
அல்ல நீ எனக்கு அடித்த சங்கு ஓலி என்று!!!

சனி, 17 அக்டோபர், 2015

இயற்கையான தானியங்களையும் காய்கறிகளையும் சமைப்போம்.

பூமியில் உணவுகளை உற்பத்திசெய்வதும் பராமரிப்பதும்தான் நம் உலக குடும்பத்தின் முதன்மை கடமை.

மனிதனுக்கு உடனடி தேவையாக எல்லா காலத்திலும் இருந்துவருவது காற்று, நீர், உணவுதான்.

இந்த மூன்றின் அவசியத்தை கருதி இயற்கையும் தன்னகத்தே உயிரினங்களுக்காக அதிகமாகவே வைத்திருக்கிறது.

காற்றையும் நீரையும் ஆதிகாலத்தில் இருந்து அப்படியே பயன்படுத்திவரும் மனிதன் உணவுகள் விடயத்தில் மட்டும் தன் விருப்பங்களுக்கு ஏற்றபடி மாற்றங்களை நாளுக்கு நாள் பெருக்கிக்கொண்டான்.

அரிசி, கோதுமை, கேழ்வரகு, போன்ற தானிய வகைகளையும் பருப்பு வகைகளையும் காய்கறிகளையும், பழங்களையும் அதிகமாக பயிரிட்டுக்கொண்டான்.

அவைகளை வேகவைத்து சுவையாக சப்பிடும் வித்தையை பழக்கிக்கொண்டான். வேகவைத்தால் மாமிசமும் தனக்கு உணவு என்பதை தெரிந்துகொண்டான்.

இப்படி உணவு அடிப்படையில் செய்துவந்த மாற்றங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சுவைக்காக உப்பு, புளி, காரம் சேர்த்தான்.

மணத்துக்காக மசாலாவை சேர்த்தான். இப்படி எல்லாம் இயற்கையிலிருந்தே எடுத்து தனது உணவு என்ற ஒரு கட்டமைப்பை பலப்படுத்தினான்.

ஒரு காய்கறியை 10 விதமான முறைகளில் கறிசெய்யும் அளவில் மனிதனின் சிந்தனை சமையற்கலையில் புகுந்து விளையாடியது.

இந்த வளர்ச்சியே ஒரு நிலையில் மக்களை வெறுப்படைய செய்தது. உணவு பார்க்க கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக வண்ணங்கள் சேர்க்கப்பட்ட போதும் துரித உணவுகள் துவங்கிய போதும்.

புதிய உணவு வகைகள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எதையாவது பீட்சா, பார்க்கர், என்றும் க்ரீம் சேர்த்து அலங்கார கேக்குகளை உருவாக்குவதும் அதை கவர்ச்சியான விளம்பரங்களால் மக்களிடம் திணிப்பதும், உண்மையை கூட வெளியில் சொல்லமுடியாத வெற்று ஆடம்பர மோகத்தில் மக்களை சிக்க வைத்திருப்பதாலும் இப்போது உள்ள உணவு முறைகள் நல்ல உணவு ஞானம் உள்ள மனிதர்களால் விரும்பப்படாத நிலையிலே உள்ளது.

புதிய உணவுகளில் மக்கள் மதிப்பிட முடியாத வகையில் பொருள்கள், ஆடம்பரங்கள் சேர்க்கப்படுகின்றன.

எவ்வளவு விதவிதமான பாத்திரங்கள் வீட்டில் இருந்தாலும் பாலித்தின் தாள்கள்தான் அவசரகால உணவுதளங்களாக மாறுகின்றன.

இதனால், ஒரு நாளைக்கே கோடானகோடி கணக்கில் அவைகள், குவிந்து உலகில் அழிக்க முடியாத செயற்கை குப்பைமேடுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

நாகரீக உணவு வகைகள் நம்மிடையே புகுந்ததால், நாம் இழந்த சுவையான ஆரோக்கியமான பழைய இயற்கை உணவு வகைகள் ஏராளம்.

அந்த உணவு வகைகள் தொலைந்து போனதால் வரும் தலைமுறைகளும் ஆரோக்கியமற்று உடல் பருத்து நரை விழுந்து, நடுத்தர வயதிலே மருந்து மாத்திரைகளோடு நோயாளியாக வாழ்கின்றனர்.

அதேசமயம் பழமையான உணவுகளை திரும்பிப் பார்க்கும் கலாச்சாரமும் மக்களிடையே கொஞ்சம் பரவி வருவது ஒரு ஆறுதலான விடயமாக உள்ளது.

சமீபத்தில், நெஸ்ட்லே நூடூல்ஸ் தீங்கானது என்று அரசால் தடை செய்யப்பட்டது. அதுபோல, பல தீங்கான உணவு பொருள்கள் நம்மிடையே இன்னும் உண்டு.

பேக்கிங் செய்யப்படும் உணவு சம்பந்தப்பட்ட பொருள்கள் எல்லாமே வணிகம் ஓங்குவதற்காக, மனிதனுக்கு தீங்குசெய்ய தயங்காத கொள்கை கொண்டதுதான்.

எண்ணெய் வித்துக்களில் பிழிந்து எடுக்கப்பட்ட எண்ணெய் கெடுதியல்ல, அதை பலமுறை காய்ச்சி வடித்து ப்ளாஸ்டிக் பைகளில் அடைத்தால் கேடுதான்.

சர்க்கரை (சீனி), மைதா, இவற்றின் தயாரிப்பில் வெண்மை நிறத்துக்காக சேர்க்கப்படும் ரசாயனப்பொருள்கள் நீரிழிவு போன்ற பல நோய்களுக்கு காரணமாவதை ஆய்வு முடிவுகள் தெரிவித்தும், தவிர்க்க முடியாத பொருளாகவே இன்னும் விளங்குகிறது.

உணவின் அவசியம் கருதி, அதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த ஆண்டில் ஒரு தினமாக அக்டோபர் 16 ம் திகதியை ஐ.நா. அறிவித்து கொண்டாடி வருகிறது.

இந்த தினத்திலிருந்தாவது, இயற்கையான தானியங்களையும் காய்கறிகளையும், கடல் உணவு வகைகளையும் சமைப்போம்.

அதற்கு சுவை, மணம், நிறம் கொடுக்கவும் தீங்கில்லாத தாவரங்களில் இருந்து பெறப்பட்ட பொருளையே சேர்ப்போம்.

தீங்கான பொருளை நாம் புறக்கணித்தால், நல்ல பொருள்கள் வியாபாரிகளுக்கு தானே தெரியவரும்.

சர்வதேச வறுமை ஒழிப்பு

சமுதாயத்தில் மக்களிடம் பொருளாதாரத்தில் நிலவும் வேறுபாடுதான் எல்லா வித சமத்துவமின்மையையும் வன்மையாக பிரதிபலிக்கச் செய்கிறது.

வறுமை ஏற்பட்ட குடும்பம் ஆனாலும், ஒரு இனம் ஆனாலும், ஒரு நாடு ஆனாலும் தாழ்ந்த மனநிலைக்கு செல்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை 1993 ம் ஆண்டில் ஐ.நா. அறிவித்து ஆண்டுதோறும் அக்டோபர் 17 ம் திகதியில் கொண்டாடி வருகிறது.

உழைக்க தயாராக ஒருவன் இருப்பதால் மட்டும் தன் வறுமையை ஒழித்துவிட முடியாது என்ற நிலை உலகில் உருவாகியிருப்பது தான் சிக்கலே.

வறுமையில் சிக்கிய மக்கள் உழைக்க துணிந்தும் எங்கே எப்படி என, பண வரவான தொழிலுக்கு வழிதெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

முதலாளித்துவத்திலும் அரசியலிலும், கனவு தொழிற்சாலைகளிலும் ஒருவனின் உழைப்புக்கு பொருத்தமின்றி குவியும் கோடிக்கணக்கான பணத்தோடு, ஒரு கூலித் தொழிலாளியின் சம்பளம் எப்படி போட்டிபோட முடியும். அதேசமயம், கூலித்தொழிலாளி வேலைகளும் ஒழிக்கப்படக் கூடியது அல்ல.

இந்த ஏற்றத்தாழ்வுகளை எப்படி சமப்படுத்துவது கடினமோ, அதே சிரமம் வறுமை ஒழிப்பிலும் இருக்கிறது.

பணம் என்ற உலகின் ஒரு தலையாய கொள்கை, சமுதாயத்தின் அத்தியாவசியப் பொருள், அத்தியாவசிய உழைப்பு, தொழிலை கூட மதிப்பற்றதாக்கிவிடும்.

மாறாக, உபயோகம் குறைந்த பொய்யான ஒரு பொருளையும் விலைவைத்துவிடும் தந்திர கருவியாக மனிதர்கள் கையில் தவழ்கிறது.

இதனால், நல்ல உழைப்பாளர்களாலும் வறுமையை போக்கிக்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. உன்னதமான உணவு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளும் மீனவர்களும் வறுமையில் வாடுவதே இதற்கு சாட்சி.

அறிவுப்பூர்வமான உழைப்பும் மக்களின் அத்தியாவசியமும் அந்த தொழிலுக்கு இருந்தும் கூட, பணத்தின் விளைவு மட்டும் ஏன் பரிதாபத்திற்கு உரியதாக கிடைக்கிறது.

இதுபோல எத்தனையோ அவசியமான வேலைகள் அடிமாட்டு விலையிலேயே நடக்கின்றன.

இதற்கான காரணத்தை அறிந்திருந்தாலும், பொறுப்பிலிருக்கும் எந்த ஆட்சியாளர்களாலும் ஆராய்ந்து தீர்வு காண முடியவில்லை.

இன்றைய வாழ்வின் போதாத நிலைக்கு காரணங்கள்:

தவறான இலக்கு நோக்கிய முன்னேற்றங்கள், லஞ்சம், ஊழல், வேலைவாய்ப்பின்மை, மக்கள்தொகை, ஆட்சியாளர்களின் இயலாமை, சுயநலம், சந்தர்ப்ப முடிவுகள், இன மொழி மத பிரிவினை தாக்கங்கள், இளைஞர்களை திசைமாற்றும் அரசியல் கட்சிகள், விளையாட்டு, சினிமா, வலைதளங்கள். முதலாளித்துவம், வணிகமயம் இவைகளோடு பணம் என்ற கண்டுபிடிப்பும் நிச்சயமாக முதன்மை காரணமாகவே இடம்பெறும்.

இந்த கடினமான காரணங்கள் வேர் வலுவடைந்து சரிசெய்யப்பட முடியாத தூரத்துக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

தன் நாட்டைப் பற்றி வெளி உலகுக்கு பொய் தோற்றத்தை காட்டும் திறமையற்ற ஆட்சியாளர்கள்.

50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமலும் ஒரு நாளைக்கு இரு வேளை உணவுக்கே வழியில்லாமலும் இருக்கும்போது, அந்த நாட்டில் மெட்ரோ ரயில், பல்லாயிரம் கோடிகளில் ராணுவ தளவடங்கள், உலக அளவிலான விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என பணக்கார நாடு போல காட்டி தங்கள் மரியாதையை தேடிக்கொள்கிறார்கள்.

இது நோயால் சீரழிந்த உடலுக்கு, உயர்ரக ஆடையும் தலைப்பாகையும் உடுத்திப்பார்க்கும் நிலையே, அதனால், ஆரோக்கியம் வந்துவிடாது.

என்றாலும், என்றாவது இந்த வறுமை எல்லோரிடமும் ஒழிக்கப்படும் என்று, அணு விஞ்ஞானி அப்துல் கலாம் கூறியதுபோல, ஒவ்வொருவரும் கனவு காண இந்த வறுமை ஒழிப்பு தினத்தை பயன்படுத்துவோம்.

கனவு என்பது தூங்குவதல்ல, தூங்கவிடாமல் செய்வது.

புதன், 7 அக்டோபர், 2015

மத்திய கிழக்கில் மிகப்பெரிய சத்திரசிகிச்சை நடைபெற ஆரம்பித்துள்ளது…!!!

தலைமை வைத்தியர் குலாம் - அமெரிக்கா. ரஷ்யா
மேற்பார்வை - இஸ்ரேல்
தாதியார்கள் - பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் நட்பு நாடுகள்
கத்திரிக்கோல் - துருக்கி, ஜோர்தான், சவூதி
தையல் நூல் - புரட்சிப்படை
அகற்றப்பட வேண்டிய கட்டி - ஜ.எஸ்.ஜ.எஸ்
காரணி - அசாத்
வைத்தியசாலை - சிரியா, ஈராக்
சிதிலமடையும் பகுதி - பொதுமக்கள்
சிதைக்கப்பட வேண்டிய பகுதி - ஈரான்
மருத்துவச்சான்றிதழ் - ஜ. நா
உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய மருந்து - குர்திஸ்தான், யேசிடிஸ்தான்
பாவிக்கப்படும் குளுசைகள் - SU - 25, AV-8B, F-35B, SAMs, chemical weapons, 9K11, 9A- 91, KPV, 9M133, BMP-1, BM-21 and more tablets...

திங்கள், 5 அக்டோபர், 2015

சக்தி டீவி தொலைக்காட்சி தொடர்களில் நான் நடித்த நாடகத்தொடர்கள்

புன்னகை -  2013

சில நேரங்களில் சில மனிதர்கள் - 2014

தூண்டில் மீன் - 2014


இரண்டு - 2015


ஆசை - 2015




மூன்றாம் உலகப்போரின் களங்கள் World War 3

சிரியாவை மைப்படுத்தி வல்லரசுகள் திறந்துவிட்ட போர்களம் இனி மெல்ல பரவும்.
தென்சீனக்கடலில் மையம் கொண்டுள்ள சுறாவளி இனிமெல்ல வீசும்
ஒரே பாய்ச்சலில் அருணாச்சலம் உட்பட கிழக்கிந்திய மாநிலங்கள் கைமாறும்
பாக்கிஸ்தானில் பலுஸ்கிஸ்தான் பிளவுபடும்
தென் ஆசியாவில் சில மாற்றங்கள்.
பல வல்லரசுகளின் சித்துவேலைகளால் சின்னாபின்னமாகப்போகும் முத்துத்தீவுகள்
வடகொரியாவின் பொழுதுபோக்கில் தென்கொரிய பற்றி எரியும்

மொத்தத்தில் அமெரிக்க அவுஸ்ரேலிய ஜரோப்பாவை தவிர்ந்த மற்றக்கண்டங்களுக்கான யுத்தம் இது... முடிவில் வரைபடங்கள் மாறுபடும்.

சின்னத்திரையின் அடுத்த படைப்பில்…!

சக்தி டீவியின் தயாரிப்பில் ஒரு சராசரி குடும்பத்தில் சந்திக்கும் பிரச்சனைகளும் பிளவுகளையும் வித்தியாசமான கோணத்தில் ... நிறைவடைந்த படப்பிடிப்பில் வெளிவராவாய் இருக்கிறது.



இயக்கம் - அஸ்வின் பாஸ்கர் (இந்திய இயக்குநர்)
ஒளிப்பதிவு - சுஜித்
நடிகர்கள் - அ. எல்றோய் , கிருசாந்தினி , சிறுவன் கார்த்தி மற்றும் பலர்…


அமெரிக்க இஸ்ரேலிய நிகழ்ச்சி நிரலின் படி போரில் குதித்த ரஷ்யா


சிரியா உள்நாட்டுப்போர் பல நாடுகளின் ஆயுத தளபாடங்களை பரீட்சித்துப்பார்க்கும் களமாக திறந்துவிடப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Lf9-723BZw8