வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

ஹிட்லருக்கு யூதர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது ஏன்?

ஜெருசலேம் : "ஜெர்மன் சர்வாதிகாரியாக இருந்த அடால்ப் ஹிட்லர், தன் தாயை, யூத இனத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் விஷம் கொடுத்து கொன்றார், என, நம்பியதாலேயே, அவருக்கு யூதர்கள் மீது வெறுப்பு உண்டாகியது' என, புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகிம் ரீக்கர் என்பவர், "முதல் உலகப் போர் படுகொலைகளுக்கு எப்படி வழிவகுத்தது' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.

 
அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஹிட்லரின் தாய் கிளாரா, அவரின் வாழ்க்கையில் ஒரு அழியாத நினைவை விட்டு சென்றார். ஹிட்லருக்கு 18 வயதிருக்கும் போது, அவரது தாய்க்கு, மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, அவருக்கு யூத இனத்தை சேர்ந்த டாக்டரான, எட்வர்டு பிளாக் என்பவர் சிகிச்சை அளித்து வந்தார். அவர், கிளாராவிற்கு, ஐயடோபார்ம் மருந்து அளித்தார். இதை தொடர்ந்து, கிளாரா, கடந்த 1907ம் ஆண்டு, தன் 47வது வயதில் உயிரிழந்தார். இதிலிருந்து, யூத டாக்டர், தன் தாய்க்கு விஷம் கொடுத்து கொன்றதாக, ஹிட்லர் நம்ப தொடங்கினார். இதனாலேயே, அவருக்கு யூதர்கள் மீது வெறுப்பு உண்டாகியது.இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது