சனி, 13 பிப்ரவரி, 2010

இயந்திரகொசு – bionic hornet

போட்டி உலகில் ஆக்கவழியில் பலர் சிந்திக்க வழக்கம்போல அழிவுவேலைக்கும் சிலர் சிந்திக்கின்றார்கள்.
கொசுவை மாதிரியாக கொண்டு, படத்தில் காண்பது போல “bionic hornet” எனும் “இயந்திரகொசு”-வை இஸ்ரேல் ( Israel Scientist ) விஞ்ஞானிகள் உருவாக்கிவருகின்றார்கள்.
இது நனோ தொழிநுட்பத்தை ( nanotechnology-based) அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இயந்திர-கொசுவாகும். இது ஓடோடி விரட்டி பறந்து எதிரியை தாக்கி கொல்வதோடு கூடவே கேமராவால் படமும் எடுத்துக்கொண்டு மீண்டும் வருமாம்.
“சிறு ஆயுதங்களின் தேவையை லெபனான் போர் உணர்த்தியது. தற்கொலைபடை தீவிரவாதியை கொல்ல 100 மில்லியன் டாலர் விமானத்தை அனுப்புதல் அனாவசியம். அதனால் எதிர்காலத்திய ஆயுதங்களை உருவாக்குகிறோம்” என்கிறார் இஸ்ரேலிய துணைபிரதமர்.


மிகப்பெரிய ஆயுதங்கள் இனிதேவையா யுத்தத்துக்கு…?

1 comments:

roy சொன்னது…

உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் எனக்கு மறுமொழி மூலம் எழுதி…..பின்னூட்டத்தை அழுத்தவும் ( வலைத்தள பெயர் அவசியமில்லை..)…உங்கள் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கபடமாட்டாது என அறியத்தருகிறேன்.