வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

சினிமா சமூகத்தின் சிந்தனை தளம்

( This Was my very first article I have ever written, which was initially published in Thinakkural in 2006 soon after my Advanced Level Examination. Though Some of opinions I have expressed in this article have changed through out the times, I thought of post this article exactly in the same way, as it was published earlier).



கலை என்பது ஒரு சமூகத்தின் உணர்வுகளையும் விழுமியங்களையும் பறை சாற்றும் ஒரு விடயமாகும். ஒரு சமூகத்தின் பெறுமானங்களும், விழுமியங்களும் உயரிய நிலையில் இருந்து கீழ் நோக்கி வரும் பொது, அச்சமூகத்தின் கலை, இலக்கிய வடிவங்களும் ஆபாச, வக்கிர உணர்வுகளை பிரதிபலிப்பனவாக பரிணானம் பெறுகின்றன.
இன்றைய நவீன சினிமாவில் இந்நிலையை நன்கு அவதானிக்கலாம். ஏனைய கலை இலக்கிய வடிவங்கள் போலன்றி, சினிமா சமூகத்தின் சமூகத்தின் சிந்தனை தளத்தை படம் பிடித்து காட்டுவதோடு, தான் விரும்பிய சிந்தனை கட்டமைப்பை மிகக் கூர்மையாக, ஆழமாக கட்டமைக்கின்ற, அதி சக்தி வாய்ந்த, கலை, இலக்கிய வடிவமாகவும் திகழ்கின்றது.
எடுத்துக்காட்டாக, இன்றைய ஹாலிவுட் சினிமா துறையை எடுத்துக் கொண்டால், அது அரசியல் மேலதிக்கத்திற்காகவும், ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை, நடைமுறை படுத்துவதற்கும், நன்கு திட்டமிட்டு பயன்படுத்தப்படுகின்றது.
ஹாலிவுட் சினிமா துறையில் 9௦% பங்கு யூதர்களின் கைகளிலேயே உள்ளது. ஹாலிவுட் சினிமாத்துறை சார்ந்த நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள் என 150௦ இற்கும் மேற்பட்ட கலைஞர்கள் யூதர்கள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதனால், திட்டமிட்ட அடிப்படையில் யூதர்களின் மேலதிக்கத்திட்காகவும், அவர்களின் எதிரிகளை மட்டம் தட்டவும், ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவும், ஹாலிவுட் ஐ கனகச்சிதமாக அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இன்று அமெரிக்காவை வழிநடாத்துவது யூத சியோநிசமே..! யூதர்களினதும், இஸ்ரேளினதும் நலனுக்கு விரோதமாக செயல்படும் எவரும் இன்று அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது. அமெரிக்க வெளிநாட்டுக்கொள்கை கூட, அமெரிக்க தேசிய நலனை விடவும், இஸ்ரேலின் நலனை மையப்படுத்தும் போக்கு பல ஆண்டுகளாக தொடர்கிறது. இத்தனைக்கும் அமெரிக்காவில் வாழும் யூதர்களின் சதவீதம் 3% மாத்திரமே.
அமெரிக்காவில் மட்டுமன்றி, உலக அரசியல், சர்வதேசிய பொருளாதாரம் என்று சகல துறைகளிலும் யூதர்களின் வலிமையான மறைகரம் செயல்படுவதை இத்துறை சார்ந்தோர் நன்கு அறிந்திருப்பர.
இத்தகைய யூதர்களின் மேலாதிக்கதிற்ற்கு பல்வேறுபட்ட காரணிகள் பங்களிப்பு செய்த போதிலும், ஹாலிவுட் சினிமா துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
யூதர்கள் தமது எதிரிகளை , குறிப்பாக அரபு முஸ்லிம்களை கொச்சைப் படுத்தவும், அவர்களை தீவிரவாதிகளாகவும், சிந்திக்க தெரியாதவர்ளாகவும் கட்டமைப்பதிலும் ஹாலிவுட் சினிமா பெரும் பங்களிப்பை ஆற்றுகிறது.


செப்டம்பர் 11 இற்கு பின்னர் வெளியான ஹாலிவுட் சினிமாக்களின் 1/3 ஆனவை யுத்தப்படங்களாக மாறியதாக ஒடோவா பல்கலைகழக உலகமயமாக்கல் தொடர்பான ஆய்வுகளின் பணிப்பாளர் மைகள் குறிப்பிடுகிறார். இத்திரை படங்கள் அரபு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், முரடர்களாகவும் சித்தரித்தன.


"பயங்கரங்களின் கோடை காலம்" அணு ஆயுத யுத்தம் பற்றி பேசியது. "Some of All Fears", "the Coiled", "Sepert", "Rules of Engagement" போன்ற படங்கள் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மிக அதிகமாக கொச்சை படுத்துவதாக முஹம்மது ஜமால் என்பவர் அரபு சஞ்சிகை ஒன்றில் எழுதுகிறார்.
தமிழ் சினிமாவிலும் அவ்வப்போது அரசியல் நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்ட சினிமாக்கள் வெளிவராமலில்லை.


இடதுசாரி சிந்தனையையும், மதச்சார்பற்ற போக்கையும் ஆதரித்து வெளிவந்த எம்.ஜி.ஆர, கமல் ஹசன் போன்றோரின் பல திரைப்படங்கள் அவர்களது கொள்கைகளை தமிழ் ரசிகர்கள் மத்தியில் வளர்க்க உதவின. பலர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தனர். எம்.ஜி.ஆர, ஜெயலலிதா, விஜயகாந்த், கருணாநிதி, அண்ணாதுரை, சரத்குமார், கார்த்திக் என்று இந்த வரிசையில் பலர்.
சில கோலிவுட் சினிமாக்களும், பல பாலிவுட் சினிமாக்களும் இனவாதிகளை கவர்வதற்காக, காஷ்மீர் மக்களின் தார்மிக நியாயங்களை மறுதலித்து, அவர்களது நியாமான போராட்டத்தை கொச்சை படுத்தும் பணியை செய்கின்றன.
இத்தகைய அரசியல் நோக்கிலான திரைப்படங்கள் ஒருபுறம் இருக்க, ஒழுக்க, பண்பாட்டு எல்லைகளை தாண்டும் பல திரை படங்களே இன்று பெருமளவில் வெளி வருகின்றன. நிர்வான கலாசாரத்தை இவை போதிக்கின்றன. ஆண் - பெண் உறவில் உள்ள புனிதத்தை மறுதலித்து, சகல பண்பாட்டு வேளிகையும் இவை தகர்த்து எரிகின்றன. எமது பண்பாட்டு பெரிமைகள் அனைத்தும் காற்றில் அடித்து செல்கின்றன. குடும்ப கட்டுகோப்பை முழுமையாக சிதைக்கும் பணியை இவை செய்கின்றன.

தமிழ் சினிமாக்களை பொறுத்தவரை, சமூகத்தின் சிந்தனை வீழ்ச்சியை அவை அப்பட்டமாக பிரதி பழிப்பதை காணலாம். வெறும் வியாபார நோக்கில் சினிமாவிற்குள் நுழையும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சமூகத்தின் சிந்தனை வீழ்ச்சியை தமக்கு சாதகமாக பாவித்து, அதில் இலாபம் உழைக்கவே இவர்கள் முனைகின்றனர். இதனால் எட்டுக்கு போட்டியாக சினிமா கலாசாரத்தை சிதைக்கும் வேலையை செய்கின்றது.

சிங்கள சினிமாவும் கிட்டத்தட்ட இதே நிலையில் தான் உள்ளது.
இருப்பினும், தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் "நல்ல சினிமாக்கள்" என பட்டியல் படுத்த மொடியுமான ஒரு சில நல்ல படைப்புக்கள் வெளிவருவதை மறுப்பதற்கில்லை.
எனினும் ஒட்டு மொத்தமாக இன்றைய சினிமா துறையை நோக்கும் இடத்து, அது நாற்றம் எடுக்கும் ஒரு சாக்கடை என்றே கூறலாம். இச்சினிமாக்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கம் புத்தி ஜீவிகளின் ஆழ்ந்த கவலை மிக்க கவன ஈர்ப்பைப்பெற்றுள்ளது.
இதன் விளைவாக ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகவும், வியாபார நோக்கிலும் தயாரிக்கப் படும் அதீத கற்பனைகளையும், மாயாஜால வித்தைகளையும் ஆபாசத்தையும், வன்முறையையும் நம்ப முடியா வீர தீரத்தையும் கொண்ட சினிமாக்களுக்கு மாற்றாக, சமூகத்தின் இயல்பான பிரச்சினைக்கும், அதன் இயல்பான போக்கையும், அவலங்களையும், குறைபாடுகளையும் சித்தரிக்கும், மாற்று சினிமாக்கள் குறித்து பலர் சிந்திக்க முற்பட்டுள்ளனர்.

இலங்கையை பொறுத்தவரை பேசப்பட வேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. வேலை இல்லா பிரச்சினை, வருமான இடைவெளி, ஏற்றத் தாழ்வுகள், மதுப்பாவனையால் சீரழிந்து வரும் குடும்ப அமைப்புக்கள், சேரிப்புற மக்களின் பிரச்சினை, உள்நாட்டு யுத்தத்தின் கொடூரம், வெளி நாட்டிலும் உள்நாட்டிலும் வாசிக்கும் அகதிகள் பிரச்சினை என்று எண்ணற்ற பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை பற்றி பல கோணங்களில் எம்மால் பேசி இருந்திருக்க முடியும்.

இந்தியாவை பொறுத்தவரை கதைக்கான களம் இன்னும் விசாலமானது. பல இனகுளுமங்களையும், கலாசாரத்தையும், விரிந்த நிலப்பரப்பையும் கொண்ட பிரதேசம் என்பதால் அவர்களுக்கு எவ்வலவோ விடயங்கள் குறித்து யதார்த்த பூர்வமாக பேசி இருந்திருக்க முடியும். அத்தனையையும் விடுத்து பாலிவுடும், கோலிவுடும் குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டமை வருந்தத்தக்கதாகும்.


நாம் வலியுறுத்தும் சமூகப்பிரச்சினைகளை வலியுறுத்தும், யதார்த்தபூர்வமான "மாற்று சினிமாக்கள்" ஏற்கனவே பல நாடுகளில் தயாரிக்கப்பட்டு சர்வதேச விருதுகள் பலவற்றையும் அவை வென்று எடுத்துள்ளன. குறிப்பாக துருக்கியிலும் இரானிலும் அரச ஆதரவுடன் மாற்று சினிமாக்கள் தயாரிக்கப்படுகின்றன. ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் தனியார் துறையினர் இவற்றை தயாரிக்கின்றனர். தமிழில் மாற்று சினிமாக்கள் போதிய வளர்ச்சி காணவில்லை என்றே கூற வேண்டும்.


உண்மையில், இன்றைய சமூக, கலாசார தளத்தில் சினிமா ஏற்படுத்தி வரும் அதிர்வுகளை அவதானிக்கும் போது, ஒரு சீரிய சமூக, பண்பாட்டு, கலாசார தளத்தை உருவாக்க எத்தனிக்கையில், அதற்கு மாற்று சினிமாவின் தேவையை மறுதலிக்க முடியாதுள்ளது.

இது தவிர, இன்றைய சாக்கடை சினிமாவில் உழன்று சீரழியும், இளம் சந்ததியை அதிலிருந்து மீட்டு எடுப்பதானால், அவர்களின் அழகியல் தேவையை பூர்த்தி செய்ய எம்மிடம் இல்லாத குறையை பூர்த்தி செய்ய இம் மாற்று சினிமா உதவும்.


இப்போது நம் முன்னாள் உள்ள கேள்வி, ஈழச்சினிமா தேக்க நிலையில் உள்ள ஒரு காலத்தில், இலங்கை மக்கள் தமது இளம் சந்ததிக்கு சாக்கடை சினிமாவுக்கு மாற்றாக, மாற்று சினிமாவை வழங்கப் போகும் காலம் எப்போது என்பதுதான்...!