செவ்வாய், 17 ஜூலை, 2018

"கல்கி" ரா.கிருஷ்ணமூர்த்தி.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரித்திரப் பாடங்களைப் படிக்க அலுத்துக் கொள்ளும் மாணவர்கள்கூட மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடும் படித்து கடைச்சோழர்களான விஜயாலயனுடைய வம்சத்தைப் பற்றியும், காஞ்சி மாநகரைக் கட்டியாண்ட மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், வாதாபியை ஆண்ட புலிகேசி ஆகியோரைப் பற்றியும், உறையூரையாண்ட சோழர்கள் பற்றியும் விரும்பிப் படிக்க வைத்த வரலாற்றுக் கதையாசிரியர் “கல்கி” ரா.கிருஷ்ணமூர்த்தியாவார். அதுமட்டுமா? இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற மதக் கலவரங்களின் தீவிரத்தை நாம் பிறர் சொல்லக் கேட்டிருக்கலாமே தவிர பார்த்ததில்லை அல்லவா? “அலை ஓசை” எனும் நாவலைப் படித்தால் நாம் அதை அப்படியே உணரலாம். அமரர் கல்கியின் “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின் சபதம்”, “பார்த்திபன் கனவு”, “அலை ஓசை”, இன்ன பிற நூல்கள் ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய சாகா வரம் பெற்ற அமர காவியங்களாகும். இவற்றையெல்லாம் படைத்த இந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், ஒரு விடுதலைப் போராட்ட வீரரும்கூட. இவரது அந்த முகத்தைச் சற்று இங்கே பார்க்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் மாயவரத்தை அடுத்த புத்தமங்கலம் எனும் கிராமத்தில் 1899இல் பிறந்தார் கிருஷ்ணமூர்த்தி. மாயூரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிறகு திருச்சி தேசியக் கல்லூரியில் படிக்கச் சென்றார். 1920இல் நடந்த நாகபுரி காங்கிரஸ் தீர்மானத்தின்படி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது. மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும், கிருஷ்ணமூர்த்தியும் கல்லூரியை விட்டு வெளியேறினார். இவருக்கு மகாத்மா காந்தி, ராஜாஜி, டாக்டர் ராஜன் ஆகியோர் ஆதர்ச தலைவர்களாக விளங்கினர். 1922இல் முதன்முதல் ராஜத்துவேஷப் பேச்சுக்காக கைது செய்யப்பட்டார். வயதில் குறைந்தவர் என்பதற்காக இவரை எச்சரித்து விட்டுவிட நினைத்த நீதிபதியிடமே, இவர் தான் தெரிந்தே ராஜ துவேஷப் பேச்சு பேசுவதாக இவர் தெரிவித்ததும், ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.
திருச்சியில் அப்போது தமிழ்நாடு காங்கிரசின் தலைமையகம் இருந்தது, விடுதலையானதும் கிருஷ்ணமூர்த்தி அங்கு வேலையில் சேர்ந்தார். 1921இல் மகாத்மா காந்தி தமிழகம் வந்தபோது இவர் டாக்டர் ராஜனுடன் சேர்ந்து வரவேற்பு, கூட்டம் ஆகிய ஏற்பாடுகளில் ஈடுபட்டு, மகாத்மாவால் ‘அச்சா தேஷ் சேவக்” என்று பாராட்டப் பெற்றார். கரூரில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் தலைமையில் கூட்டத்தில் பேசிய பேச்சிற்காக கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் இருந்தபோது மதுரையைச் சேர்ந்த இளைஞர் சதாசிவம் என்பவரின் நட்பு கிடைத்தது. இந்த நட்பு வாழ்நாளெல்லாம் தொடர்ந்தது. “கல்கி” பத்திரிகை தோன்றவும் காரணமாக இருந்தது. இவரது முதல் நாவல் வ.ரா. ஆசிரியராக இருந்த நடத்திய “சுதந்திரன்” எனும் பத்திரிகையில் வெளிவந்தது.
பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களிலேயே ராஜாஜியைப் பற்றி தெரிந்து கொண்டு அவரிடம் பக்தி கொண்டார். திருச்சி காங்கிரஸ் அலுவலக வேலையைத் தொடர்ந்து, இவர் சிலகாலம் ஈரோடு கதர் அலுவலகத்தில் வேலை செய்தார். டாக்டர் ராஜனின் வேண்டுகோளின்படி இவர் திரு வி.க.வைச் சந்தித்தார். அவர் நடத்தி வந்த “நவசக்தி” இதழில் வேலை செய்தார். மகாத்மா காந்தி “யங் இந்தியா”வில் எழுதி வந்த சுயசரிதையை இவர் மொழிபெயர்த்து “நவசக்தி”யில் வெளியிட்டார். இவர் ராஜாஜியின் திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்து அங்கிருந்து வெளியான “விமோசனம்” எனும் மதுவிலக்குப் பிரச்சார இதழிலும் எழுதி வந்தார். 1930இல் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவரது ஆரோக்கியம் கருதியும், ஏற்கனவே ஓராண்டு சிறையில் தவமிருந்ததாலும் ராஜாஜி இவரைத் தன் படையில் சேர்ந்துக் கொள்ளவில்லை. உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் கலந்து கொண்டு சிறை செல்லவில்லையாயினும், இவரது எழுத்துக்கள் ஆயிரமாயிரம் தொண்டர்களை உசுப்பி இந்தப் போரில் கலந்து கொள்ளத் தூண்டுதலாயிருந்தது என்பது உண்மை. இவர் எழுதி வெளியிட்ட துண்டு பிரசுரங்களுக்காக இவருக்கு மறுபடியும் ஒரு ஆறுமாத சிறை தண்டனை கிடைத்தது.
விடுதலையான பிறகு “ஆனந்த விகடனில்” தொடர்ந்து எழுதிவரலானார். அதில் இவர் எழுதிய “தியாக பூமி” நாவல் தமிழ்நாட்டை மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும் ஓர் புதிய எழுச்சியையும், தேச பக்தியையும் தூண்டியது. அந்த காலகட்டத்தில் அந்த நாவலில் வந்த ‘சரோஜா’ எனும் குழந்தையின் பெயரைப் பலர் தங்கள் குழந்தைகளுக்கும் வைத்தனர் என்பது ஒரு சுவையான செய்தி. “ஆனந்த விகடனில்” ஒன்பது ஆண்டுகள் வேலை பார்த்த பின் “கல்கி” எனும் பெயரில், இவரும் சதாசிவமும் இணைந்து ஒரு புதிய பத்திரிகையை வெளியிட்டனர். அதில் வெளியான இவரது வரலாற்றுப் புதினங்கள், கட்டுரைகள், இசை விமரிசனங்கள், தலையங்கங்கள் ஆகியவை வரலாற்றுப் புகழ் மிக்கன. அவையெல்லாம் மீண்டும் நூல் வடிவம் பெற்று இப்போது விற்பனையாகின்றன. இப்போதும்கூட அவை படிப்பதர்கு சுவையும், சூடும் நிறைந்திருப்பதைக் காண முடியும்.
மகாகவி பாரதியாரின் பால் மிகவும் ஈடுபாடு கொண்டு, அவர் நினைவாக எட்டயபுரத்தில் ஓர் மணிமண்டபம் கட்டுவதர்கு முன்முயற்சி எடுத்து, கட்டி முடித்து அதனை கவர்னர் ஜெனரல் ராஜாஜியினால் திறந்து வைத்த சேவையைத் தமிழகம் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றும். இவருக்கு நாட்டு நன்மை என்பதுதான் தாரக மந்திரம் இதை அவர் பாணியில் கூறுவதென்றால், அவருக்கு இருந்த மூன்று நோக்கங்கள் முதலாவது தேச நன்மை, இரண்டாவது தேச நன்மை, மூன்றாவது தேச நன்மை.
இந்த வரலாற்று ஆசிரியர், சுவாரசியமான எழுத்தாளர், இசை ரசிகர், பாரதி அன்பர், தேச பக்தர், தமிழ் நாவல்களைப் படிக்கத் தூண்டிய அபூர்வமான கதாசிரியர் 1954ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 5ஆம் நாள் தனது 55ஆம் வயதில் காலமானார். தமிழ் நாட்டில் ஓர் சகாப்தம் நிறைவடைந்தது. வாழ்க கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி புகழ்!

முதல் முறையாக டிரம்ப் - புதின் நேருக்கு நேர் சந்திப்பு: பின்லாந்து நாட்டில் நடந்தது

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இருவரும் முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்து பேசினர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சந்திப்பு பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நடந்தது.

Donald Trump meets Vladimir Putin: The key moments from the summit

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேச விரும்புவதாக கடந்த மார்ச் மாதம் ரஷிய அதிபர் புதின் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதை டிரம்பும் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிரம்புடன், புதின் பின்லாந்தில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து இருவரும் பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நேற்று சந்தித்தனர். இரு தலைவர்களும் முதன் முதலாக தனிப்பட்ட முறையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

மாஸ்கோ நகரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நீண்ட நெடிய பயணமாக புதின் நேற்று காலை தனி விமானம் மூலம் ஹெல்சிங்கி நகர் சென்றடைந்தார்.

இதைத் தொடர்ந்து டிரம்பும், புதினும் பின்லாந்து அதிபர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது ஒருவரையொருவர் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். மேலும், உலககோப்பை கால்பந்து போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக புதினை டிரம்ப் பாராட்டினார். இரு பெரும் வல்லரசு நாடுகளின் தலைவர்களின் இந்த சந்திப்பை உலக நாடுகள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தன. தலைவர்களின் இந்த சந்திப்பு 2 அமர்வுகளாக பல மணி நேரம் நீடித்தது.

பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது பேச்சுவார்த்தை நிச்சயம் செறிவு மிகுந்ததாகவும், இரு நாடுகளுக்கும் இடையே மிகச் சிறந்த உறவை ஏற்படுத்துவதாகவும் அமையும். எங்களது பேச்சு வர்த்தகம் முதல் ராணுவம் வரையிலும் ஏவுகணை முதல் அணு ஆயுத விவகாரம் வரை இருக்கும். சீனா குறித்தும் விவாதிப்போம்.

வெளிப்படையாகச் சொல்லப்போனால் அமெரிக்காவும், ரஷியாவும் இணைந்து செயல்படுவதற்கு சிறந்த வாய்ப்பாக இந்த சந்திப்பு உருவாகி இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் போனது. நான் நீண்ட காலம் ஜனாதிபதியாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் இன்னும் 2 ஆண்டுகள்தான் மீதி உள்ளது. என்றபோதிலும் இரு நாடுகளும் மிகச்சிறப்பான உறவை பேண முடியும் என்று நம்புகிறேன்.

எங்கள் இரு நாடுகளையும் இந்த உலகம் ஒன்று சேர்ந்து பார்க்கவே விரும்புகிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் நாங்கள் இரு பெரும் அணுசக்தி நாடுகள். உலக அணு ஆயுதங்களில் 90 சதவீதம் எங்களிடம்தான் உள்ளன. இது நல்லதுக்கு அல்ல. இது மோசமான ஒன்றாகும். இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று உலகம் எங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் இப்பிரச்சினையை நாங்கள் முன்னெடுத்து விவாதிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதின் கூறுகையில், “எங்கள் இரு நாடுகளின் உறவு மற்றும் உலகப் பிரச்சினைகள் குறித்து விரிவான முறையில் பேசுவதற்கு சரியான நேரம் அமைந்திருக்கிறது” என்றார்.

எனினும், இந்த பேச்சுவார்த்தையின்போது, 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ரஷியா(புதின் அரசு) தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் எதுவும் இல்லை.

முன்னதாக ரஷியாவுடன், அமெரிக்காவின் உறவு பல காலம் சரியாக அமையாததற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளின் மோசமான அணுகுமுறையே காரணம் என்று டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்திருந்தது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: 7 நாட்களாக ரேடியேட்டர் நீரை குடித்து உயிர் பிழைத்த இளம்பெண்

பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 7 நாட்களாக காரின் ரேடியேட்டர் நீரை குடித்து இளம்பெண் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. #California

கலிபோர்னியா மலைமுகட்டில் இருந்து 250 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் சிக்கிய இளம்பெண் 7 நாட்களாக உயிருக்கு போராடிய சம்பவம்  நிகழ்ந்துள்ளது.

கலிபோர்னியாவில் பிக் சர் பகுதியில் ஏஞ்செலா ஹெர்னாண்டெஸ் என்ற 23 வயது பெண் போலந்தில் இருந்து தனது சகோதரி வீட்டுக்கு காரில் சென்றுள்ளார். அப்போது சாலையின் குறுக்கே வனவிலங்கு வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க முயற்சிக்கும்போது கார் பள்ளத்தில் விழுந்தது. அவர் குறிப்பிட்ட நேரத்திற்கு தனது சகோதரியின் வீட்டுக்கு செல்லாததால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கடற்கரை பகுதியில் நடைபயணம் மேற்கொண்டிருந்த ஒரு ஜோடி, ஏஞ்செலா ஹெர்னாண்டெஸ் காயங்களுடன் விபத்தில் சிக்கியிருப்பதை கண்டனர். உடனடியாக அவரை மீட்ட அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதுதொடர்பாக, அவர்கள் கூறும்போது, ஏஞ்செலாவை மீட்கும்போது அவர் விலா எலும்புகளில் காயங்களுடனும், மூளை இரத்த அழுத்ததினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினர். மேலும் அவர் உயிர் பிழைத்தது ஆச்சர்யம் அளிப்பதாகவும், அந்த சூழ்நிலையில் வேறு யாரும் இருந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான் என தெரிவித்தனர்.

7 நாட்களாக உடலில் காயத்துடன் தனிமையில் உயிர்தப்பிய ஏஞ்செலா, 7 நாட்களாக உணவு இன்றி தனது காரின் ரேடியேட்டரில் இருந்த நீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்ததாக தெரிவித்தார். ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

மரங்களின் பயன் பற்றிய கல்வியை சேர்க்க வேண்டும்

எனது கோரிக்கை என்னவென்றால் பள்ளிக்கூட பாடத்திட்டத்தில், மரங்களின் பயன் பற்றிய கல்வி சேர்க்கப்பட்டால், அவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவம் புரியவரும். மரங்களை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு அரசே நற்சான்றிதழ் வழங்கி அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

அப்படி சேர்த்தால் மரங்களின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு, சிறு வயதிலேயே உருவாகிவிடும். இதுதான் எனது கோரிக்கை. ஒவ்வொரு மாணவரும் மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும். அதை அவர்கள் பராமரிப்பதை கண்காணித்து, அரசு சார்பில் நற்சான்றிதழ் வழங்க வேண்டும். இது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.

சனி, 30 ஜூன், 2018

இன்று சமூக வலைத்தள தினம் - June30

உலகம் முழுக்க இன்று சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக வலைத்தள வாசிகள் பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #SocialMediaDay

தொழில்நுட்ப யுகத்தின் அகன்ற கண்டுபிடிப்புகளில் நமக்கு அதிகம் பயன்தரும் சிலவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன.


இணைய வசதி மட்டும் இருந்தால் உலகில் உயிருடன் வாழும் எவருடனும் நட்பு கொள்ள வைக்கும் வலைத்தளங்களாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கம்ப்யூட்டரில் அமர்ந்து வலைத்தளங்களில் உலவி, சில மணி நேரங்களில் புதிய நட்பு வட்டாரத்தை டிஜிட்டல் உலகில் உருவாக்கக்கூடிய நிலை இருந்து வந்தது. 

ஆனால் ஸ்மார்ட்போன் வரவுக்கு பின், சமூக வலைத்தளங்கள் நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் நட்புகளை கடல் கடந்தும் காதல் செய்ய இவை பாலமாக இருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை நீளும் தருவாயில் உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 30% பேர் இவற்றில் நீந்துகின்றனர்.


மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கினால் கொண்டாட்டம் என்ற வகையில், இன்று உலகம் முழுக்க சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் சமூக வலைத்தளம் குறித்து பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.


உலக மக்கள் தொகை சுமார் 760 கோடியாக இருக்கும் நிலையில், இணையத்தை பயன்படுத்துவோர் மட்டும் சுமார் 420 கோடி என கண்டறியப்பட்டு இருக்கிறது.


உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 300 கோடி ஆகும்.


உலகின் பிரபல பிராண்டுகள் குறைந்தபட்சம் இரண்டுக்கும் அதிகமான சமூக வலைத்தள சேனல்களை பயன்படுத்துகின்றன.


வியாபாரம் செய்வோரில் 81% பேர் ஏதேனும் வகையில் வியாபார வளர்ச்சி காரணங்களுக்காக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். 


2017-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து 2017 மூன்றாவது காலாண்டு வரை மட்டும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 12.1 கோடியாக அதிகரித்தது. அந்த வகையில் ஒவ்வொரு 15 நொடியிலும் ஒருவர் சமூக வலைத்தளத்தில் சேர்கின்றனர்.


ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் தினமும் 6000 கோடி குறுந்தகவல்கள் தினசரி அடிப்படையில் பரிமாறப்படுகின்றன.


சமூக வலைத்தள விளம்பரங்களில் மட்டும் 2017-ம் ஆண்டு சுமார் 4000 கோடி டாலர்கள் செலவிடப்பட்டிருக்கிறது.


உலகின் 38 சதவிகித நிறுவனங்கள் 2015-ம் ஆண்டு வாக்கில் சமூக வலைத்தள செலவினங்களை சுமார் 20 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கின்றன, இது முந்தைய ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகம் ஆகும்.


ட்விட்டரில் குறிப்பிட்ட பிரான்டு மீது புகார் தெரிவிப்போர் அந்நிறுவனத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் பதில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


ஃபேஸ்புக்கில் இருக்கும் வீடியோக்கள் தினமும் சராசரியாக 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன.


ஸ்னாப்சாட் தளத்திலும் வீடியோக்கள் தினமும் சுமார் 800 கோடி முறை  பார்க்கப்படுகின்றன.


2018ம் ஆண்டு மொத்த ஆன்லைன் தரவுகளில் 74 சதவிகிதம் வீடியோவாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.


உலகில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மற்றும் இத்துறை சார்ந்த வளர்ச்சி பல்வேறு பரிணாமங்களை கடந்து வருகிறது. உலக அரசியல் வரை ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளங்கள் பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்கினாலும், இவற்றால் நமக்கு ஏற்படும் அபாயங்களும் அதிகமாவதை அனைவரும் உணர வேண்டிய காலக்கட்டம் இது. #SocialMediaDay 

www.amalathaselroy.blogspot.com

வியாழன், 14 ஜூன், 2018

உலக இரத்த தானம் நாள் - இரத்த தானம் வழங்குவோம், வாழ்வை பகிர்வோம்

உலகம் முழுவதும் இன்று இரத்த தானம் நாள் அனைவராலும் இரத்த தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. #WorldBloodDonorDay

கடவுள் எப்படி இருப்பார்? விஞ்ஞானிகள் உருவாக்கிய உருவம்

கடவுள் எப்படி இருப்பார்? என நடத்திய ஆய்வு ஒன்றில் விஞ்ஞானிகள் அவரது உருவத்தை உருவாக்கி உள்ளனர்.

கடவுள் எப்படி இருப்பார்?  கடவுள் எங்கோ வானில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை  கடவுள்  நீக்க மற நிறைந்தவர் அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்.   ஆனால் எப்படி இருப்பார்.   கடவுள் உருவம்  என்பது அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப  என ஆய்வு கூறுகிறது. 

‘கடவுள் எப்படி இருப்பார்?, கடவுளின் குணம் எப்படிப்பட்டது? கடவுள் எந்த வண்ணம் கொண்டவர்?’  

உலகில்  நெருப்பில் இருந்து அனைத்திலும் கடவுள் இருப்பதாக  ஆதிகாலம் தொட்டு மனிதன் வணக்கி வந்து இருக்கிறான். அதில் உருவம் இல்லாமலும் கடவுளை வணங்குகிறோம்.

புதிய ஆய்வு ஒன்றில் கடவுள்  பெண்ணின் அம்சங்களைக் கொண்ட ஒரு இளமையான  முகத்துடன் இருப்பார் என கூறப்படுகிறது.

வட கரோலினாவைச் சேர்ந்த  விஞ்ஞானிகளின் வினோதமான ஆய்வு  ஒன்றை நடத்தினர். ஆய்வு முடிவு சுவாரஸ்யமாக, வேதாகம பதிவுகளிலிருந்து ஒரு பழைய மனிதராக இருந்தது. அவர்கள் இளம் வயதினரைப்  போல் கடவுளைப் புரிந்துகொள்வார்கள்.

சேப்பல் ஹில்லில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் உளவியலாளர்கள் குழு 511 அமெரிக்க கிறிஸ்தவர்களின் உதவியுடன் இந்த ஓவியத்தை உருவாக்கியது.

இந்த ஆய்வில்   பங்கேற்றவர்கள்  நூற்றுக்கணக்கான தோற்றமளிக்கும் முகம்-ஜோடியைப் பார்த்து, ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் முகத்தைத் தேர்வு செய்தனர்.

தேர்ந்தெடுத்த முகங்களை இணைப்பதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் கடவுளை எவ்வாறு தோற்றமளிக்க நினைத்தார்கள் என்பதைப் பிரதிபலிக்கும் ஒரு கலப்பு 'கடவுளின் முகத்தை' கொண்டு வந்தார்கள். அவர்களின் முடிவு ஆச்சரியம் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.

எல்லோரும் கடவுளால் எடுத்துக் கொள்ளப்பட்ட விளக்கங்கள், மைக்கேலேஞ்சலோவிலிருந்து மோனி பைத்தான் வரை, அவரை ஒரு பழைய மற்றும் ஆகஸ்ட் வெள்ளை தாடி வைத்த கவுகேசிய மனிதன்,  ஆராய்ச்சியாளர்கள் பல கிறிஸ்துவர் கடவுளை  இளமையாக  வரைந்து உள்ளனர் மற்றும் இன்னும் பெண்பால், மற்றும் குறைந்த கெளகேசியன்  பிரபலமான கலாச்சாரத்துடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சொல்லப்போனால், கடவுளுடைய மக்களின் உணர்வுகள் அவர்களின் அரசியல் தொடர்புக்கு முற்றிலும் உட்பட்டுள்ளன என்று அந்த ஆய்வு காட்டுகிறது. தாராளவாதிகள் கடவுளை இன்னும் பெண்பால், இளையவர், கன்சர்வேடிவ்களை விட அன்பாகக் கருதுகிறார்கள்.

கன்சர்வேடிவ்கள் மேலும் தாராளவாதிகளை விட கெளகேசியனாகவும்  சக்தி வாய்ந்தவராகவும்  கடவுள் காண்கிறார்கள்.

அதைப் பற்றி பேசுகையில், ஜோன்ட் கான்ட்ரட் ஜாக்சனின் ஆய்வு எழுதிய எழுத்தாளர்  தாராளவாதிகள் மற்றும் பழமைவாதிகள் விரும்பும் சமுதாயங்களின் வகைகளில் இருந்து வேறுபாடுகள் தோன்றியிருக்கலாம் என கூறினார்.

மக்களின் உணர்வுகள் அவற்றின் சொந்த மக்கள்தொகை பண்புகளுடன் தொடர்புடையவையாகும்.

அமெரிக்காவில் கடவுள் முகங்கள்  மக்கள் மற்றும் அரசியலில் மத வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது.

இளைஞர்கள் இளம் வயதினராக கடவுள்  இருப்பதாக நம்புகிறார்கள், மேலும் அதிக உடல்ரீதியாக கவர்ச்சிகரமானதாக அறிவிக்கப்பட்டவர்கள் மேலும் உடல்ரீதியாக கவர்ச்சிகரமான கடவுளை நம்புகின்றனர். ஆய்வின் முழுமையான முடிவுகள் PLOS பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

சனி, 9 ஜூன், 2018

தான் வசித்த மரங்களை அழித்த ஊழியர்களுடன் சண்டை போட்ட குரங்கு

தான் வசித்த மரங்களை அழித்த ஊழியர்களுடன் ஒரு ஓரங்குட்டான் குரங்கு சண்டை போட்டுள்ளது.

ஓரங்குட்டான் குரங்கு ஒன்று தான் தங்கிய மரத்தை அழிக்க வேண்டாம் என்று சண்டை போட்டது தொடர்பான வீடியோ பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. (https://youtu.be/R4zzbwM07bw)

இந்தோனிசியாவின் போர்னியோ பகுதியில் உள்ள சுங்காய் புத்ரி காட்டில் உள்ள மரங்களை புல்ட்ரோசர் வைத்து அழித்துள்ளனர்.அப்போது மரம் ஒன்றை புல்ட்ரோசர் உடைத்து கொண்டிருந்த போது, அந்த மரத்தில் இருந்த ஓரங்குட்டான் குரங்கு ஒன்று, புல்ட்ரோசரனை பிடித்து ஒன்றும் செய்ய வேண்டாம் என்பது போல் செய்கை காட்டியது.

அதன் பின் கீழே சென்ற போது மீண்டும் மரத்தை உடைப்பதற்கு புல்ட்ரோசர் வைத்து முயற்சி செய்த போது, மீண்டும் குரங்கு மேலே வந்து தடுத்தது.இது தொடர்பான வீடியோ 2013-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த செவ்வாய் கிழமை சர்வதேச விலங்கு நல அமைப்பு வெளியிட்டுள்ளது.ஆனால் காட்டில் இருந்த மரங்கள் ஏன் அழிக்கப்பட்டதற்கான காரணம் சரிவர தெரியவில்லை. இருப்பினும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது