திங்கள், 6 ஆகஸ்ட், 2018

மரங்களின் பாட்டு

ஐரோப்பாவில் இருக்கும் எஸ்டோனியன் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் கல்லூரி ஒரு புதுமையான கருவியை உருவாக்கி இருக்கிறது.


மரங்களின் மெகாபோன் என்று இதை  அழைக்கிறார்கள். அதாவது மரங்களின் தனித்துவமான மொழியை கேட்கவும், அவை இயற்கையோடு பேசுவதை உணரவும், செடி-கொடிகளின் பாஷையை கேட்பதற்காகவும் இந்த பிரமாண்ட இசை சேகரிப்பு கருவியை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதில் என்ன சிறப்பு தெரியுமா..? இந்த மெகாபோனிற்குள் அமர்ந்தால் மட்டுமே செடி-கொடி, மரங்களின் சங்கீதத்தை கேட்கமுடியுமாம்.