வியாழன், 2 ஆகஸ்ட், 2018

ஹிட்லர் ஜெர்மனியின் தலைவராக பதவியேற்ற நாள் இன்று!

ஹிட்லர் ஜெர்மனி தலைவராக பதவியேற்ற நாளான இன்று சர்வாதிகாரம் வளர்ச்சியை தருமா என்பது பற்றிய சிறப்புச் செய்தி. ஏனெனில் இலங்கையில் இனி வரப்போகும் காலங்கள் அரசியல் நடைமுறை சித்தாந்தங்களின் எதிர்கால மாற்றங்களை தோற்றுவிக்கலாம்.

“ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நான்காவது ஆண்டில் ஏதாவது காரணத்தால் அவர் உயிரிழந்திருப்பாரேயானால், உலகமே அவரை மிகச் சிறந்த மாமனிதன் என பாராட்டியிருக்கும்“ என்கிறார் “அடால்ப் ஹிட்லர்“ என்ற புத்தகத்தை எழுதியுள்ள JOHN TOLAND என்ற அமெரிக்க எழுத்தாளர் 

உலக மக்கள் பெரும்பாலானோரால் வெறுக்கப்படும், கொடூரமானவராக சுட்டப்படும் ஹிட்லர் குறித்த இந்த கருத்து உயர்வு நவிழ்ச்சிக்காக கூறப்பட்டதல்ல. 
ஹிட்லரைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னர், சர்வாதிகாரம் என்ற பதத்தை பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது.

உலக மக்களின் நலனுக்காக, உலக அமைதியை நிலை நாட்ட முன்வைக்கப்படும் கம்யூனிஸம், மக்களாட்சி, மன்னராட்சி போன்ற சித்தாந்தங்களின் வரிசையில் சர்வாதிகாரத்திற்கும் தனித்த இடமுண்டு. அந்த வகையில் ((பார்த்தால்)), உலக வரலாற்றில் அதிக காலம் நிலைத்து நின்ற ஒரு சித்தாந்தம் சர்வாதிகார சித்தாந்தம். ஒற்றை மனிதர் அல்லது ஒரு குழுவிடம் அதிகாரங்கள் அனைத்தும் இருப்பதே மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அது கட்டமைக்கப்பட்டுள்ளது. 

சர்வாதிகாரம் என்பது மக்களிடையே திணிக்கப்பட்ட ஒன்று எனவும், அது எக்காலத்திலும் மக்களால் விரும்பப்பட்டதில்லை என்ற வாதம் இங்கு இயல்பாகவே எழக்கூடும்.

லூயி மன்னர்களின் ஆட்சிக்கு எதிராகவும், மக்களாட்சி கோரியும்தான் பிரஞ்ச் புரட்சி நடத்தப்பட்டது. அப்புரட்சி வெற்றிப்பெற்ற சில ஆண்டுகளுக்குள்ளாகவே நெப்போலியன் தன்னை பிரான்சின் சக்கரவர்த்தியாக, முடிசூட்டிக்கொண்டார். மக்களும் அவரது தலைமையை ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல், மக்களாட்சிக்கு பெயர் பெற்ற ரோம் நாட்டில், ஜூலியர் சீசர் சர்வாதிகாரியாக முடிசூட்டிக்கொண்டார். அதுவரை மக்களாட்சியை விரும்பி வந்த ரோம் மக்களும், ஜூலியஸ் சீசர் சர்வாதிகாரத்துடன் ஆட்சி நடத்த சம்மதம் தெரிவித்தனர். இந்த பின்னணியில்தான், சர்வாதிகார ஆட்சி என்பது அதை யார் தருகிறார்கள் என்பதில் அடங்கியுள்ளதாக கருதுகின்றனர் அதன் ஆதரவாளர்கள்.

ஹிட்லரின் ஆட்சி, உலக மக்களால் கொடூரமான ஆட்சியாக கருதப்பட்டாலும், ஒரு தரப்பினரால் அது பொற்கால ஆட்சியாகவே பார்க்கப்பட்டது. முதல் உலகப்போரின் தோல்வியால், பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த ஜெர்மனியை, பழைய நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பை விரும்பி ஏற்றதுடன் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டினார் ஹிட்லர். 

ஜெர்மனியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலான முதல் உலகப்போரின் முடிவில் போடப்பட்ட ஒப்பந்தங்களை கிழித்தெறிந்தார். வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. போதைப்பொருட்கள், விபச்சாரம் உள்ளிட்டவை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன. 

தனது சீர்திருத்தங்களால், செயல்பாடுகளால் உலக வரலாற்றில் தனி இடம் பிடித்த ஹிட்லர், யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளால் தனது தரத்தை  தாழ்த்திக்கொண்டார். 

அதேபோல், ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின், முசோலினி தொடங்கி, சதாம் உசேன், இடி அமீன், முகமது கடாஃபி வரையிலான பட்டியலில் சிலர் மட்டுமே தங்களது சர்வாதிகாரத்தை சரியாக பயன்படுத்தி மக்களால் விரும்பப்படும் தலைவராக தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர். அந்த அன்பான சர்வாதிகாரிகள் வரிசையில், ஜூலியஸ் சீசர், நெப்போலியன், லெனின், பிடல் காஸ்ட்ரோ, மாசேதுங், லீகுவான் யூ ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

#Adolf_Hitler #German_Politician #Dictators