சனி, 27 ஏப்ரல், 2024

இயற்கையை நுகர்ந்து கொள்வோம்

வெப்பம் என்று அழுதோம். இனி வெள்ளம் என்று  சிலிர்ப்போம். வற்றி விடும் என்பதற்காக அணையில் நீரை தேக்காதீர்கள்.  அலையில் மக்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கை. வரும் பேரிடர் பொல்லாதது. 

நீர் வடிந்தொடும் பிரதேசங்களை முன்கூட்டியே தூர்வாரி கொள்ளுங்கள். ஆறுகள், குளங்கள், அணைக்கட்டுகளை  இப்பொழுது பூட்டாதீர்கள்.  அனைத்தும் வற்றி  விடட்டும்.  நிலைபெறான  பாதுகாப்புக்கான எச்சரிக்கை

சனி, 20 ஏப்ரல், 2024

இனா -- ஈயன்னா

வரும் வாரம் இலங்கை உலகச் செய்திகளில் முதன்மை பெறும். 

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

ஹமாஸ் மேற்கொள்ள போகும் ஓயாத அலை படை நடவடிக்கை

திடீரென ஹமாஸ் அமைப்பினர்  காசாவுக்குள் முன்னேறிய  இஸ்ரேல் ராணுவத்தின் மீது கடுமையான தாக்குதலை  மேற்கொள்ள கூடும். இழக்கப்பட்ட தங்கள் நிலத்தை மீண்டும் கைப்பற்ற கூடும். இஸ்ரேல் ராணுவத்தின் தாங்கிகள், கனரக ஆயுதங்கள்,  வெடி பொருட்களை கைப்பற்ற கூடும். அதிக எண்ணிக்கையில் படையினர் பலியாவார்கள். 

ஆள ஊடுருவும் ஹமாஸ் வீரர்கள் இஸ்ரேல் விமானப் படைத்தளத்தை குறி வைக்கக் கூடும். அதிகமான பொதுமக்களும் இங்கே பலியாவார்கள். இக்கட்டட நிலையில் இஸ்ரேல் தேசமானது மேற்கத்திய நாடுகளின் உதவிகளை நேரடியாக அழைக்க கூடும். அமெரிக்க ராணுவ  கூட்டணி பிரசன்னமாகும்.  தென்னாசிய வல்லரசு நாட்டின் கூலிப்படை நட்புக்காக களமிறங்கும்.

இவை நடக்கப் போகும் உலக அரசியல் தொடர்பான எனது கணிப்பு. இந்த தளத்தில் என்றும் பொய்த்தது இல்லை. 

திங்கள், 31 அக்டோபர், 2022

அவர்களும் அங்கு உண்டா

 "நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் ரஷ்யா யுத்தம் தொடர்பாக எனது அவதானிப்பு இது. யுத்த களத்தில் உக்ரைன் படைகளால் கையாளும் சில தந்திரோபாய நடவடிக்கைகள் பல விடயங்களை வாழ்வியல் நினைவூட்டல்களுடன் ஆய்வுக்குட்படுத்துகின்றன. அவற்றில் ஒரு சில...!


1. முதலில் ரஷ்ய படைகளை உக்ரைன் எல்லைக்குள் வரவிட்டு அகலக்கால் வைக்க அனுமதித்த பின்பு உக்ரைனிய படைகளால் தாக்குதல்களை ஆரம்பித்தமை. (offensive/defensive)


2. 'ஏழு' மாதங்களாக ரஷ்யாவினால் யுத்தத்தின் மூலம் கைப்பற்றபட்ட தனது நிலத்தின் பகுதிகளை ஓயாத அலை தொடர் தாக்குதல் மூலமாக '5' நாட்களில் முழுமையாக உக்ரைன் படைகளால் மீட்டெடுக்கப்பட்டமை (Kharkiv)


3. 'லைமன்' நகரை ஒரே இரவில் பெட்டி அடித்து உக்ரைன் படைகளால் கைப்பற்றியமை.


4. வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட படகுகள் மூலம் உக்ரைனால் பெரும் இலக்குகள் தகர்க்கப்டுகின்றமை. 


5. உக்ரைனின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் UAV மற்றும் தற்கொலை தாக்குதல் படகுகள் மூலம் நேற்றிரவு நடைபெற்ற கடற்சமர். ரஷ்யா கடற்பரப்பு மற்றும் துறைமுகத்துக்குள் நடந்தது. பெரும் இலக்குகளை சிறிய வளங்களை கொண்டு அழிக்கின்ற உக்ரைனின் படைப்பிரிவுகளால் எதிர்தரப்புக்கு பாரிய பேரிழப்புக்களை ஏற்படுத்தியமை


6. வெடிமருந்துகளால் நிரப்பப்பட்ட லொறிகளால் பாலங்கள் தகர்க்கப்படுகின்றமை (Crimean Bridge).. கேந்திர நிலையங்கள் இலக்கு வைக்கப்படுகின்றமை.


7. முழுமையாக முற்றுகையை ஏற்படுத்தி தாக்குதலை செய்தாலும் ஒரு பாதையை ரஷய இராணுவத்தினர் பாதுகாப்பாக தப்பி ஓடும் கடவையை ஏற்படுத்தியமை.

(ஆயுதங்களை முழுமையாக கைப்பற்றும் உத்தி. மற்றும் தப்ப முடியாத நிலையில் போராடும் மனோ நிலையை சிதைக்கும் முயற்சி) இவை உக்ரைனிய படைகளால் சிறப்பாக கையாளப்படுகின்றன.


8. உக்ரைன் தனது படைப்பிரிவுகளை சிறு குழுக்காக பிரித்து சிறிது சிறிதாக இணைக்கபட்ட கரந்தடி தாக்குதல் மூலம் மரபுவழி ரஷ்ய படைகளை நிலைகுலையச்செய்கின்றமை. மீள் கைப்பற்றலின் பின்பு கரந்தடி குழுக்கள் எல்லையில் மரபுவழி இராணுவ இணைப்பாக செயற்படுக்கின்றமை. (இதனால் எதிர்தரப்பின் ஏவுகணை தாக்குதலால் ஏற்படும் இழப்புக்கள் ஏவுகணையின் பெறுமதியை விட மிகக்குறைவு)


9. உக்ரைனில் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட பின்தள விநியோகம். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் அதீத பங்களிப்பு 


10. பேரிழப்புக்கு பின்பு தற்போது ரஷ்யாவினால் பயன்படுத்தப்படும் ஈரானின் அதிக எண்ணிக்கையிலான தற்கொலை தாக்குதல் ஆளில்லா விமானங்கள் Shahed 129 (UAV). ( ----அவர்கள் எவ்வாறு தற்கொலை தாக்குதல் படகுகள் மற்றும் தற்கொலை விமான உத்தியை அறிந்து கொண்டார்கள் என்பதை உங்கள் ஊகத்தில் விட்டு விடுகின்றேன்.) 


...இவ்வாறு பெரும் பொருட்செலவுகளுடனும் மனித பேரிழப்புகளுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த யுத்தம் இனி அடுத்த பேரழிவை நோக்கி நகரப்போகின்றது. ஆகவே யுத்தம் கற்போம்!


"If we don't end war, war will end us. ..." 

அ. எல்றோய்


2022 #ukrainwar முற்றிலும் மேற்கத்திய போர் முறையில் இருந்து மாற்றிடான சமர் இது.  ஆனால் ஏற்கனவே சிலருக்கு பரிச்சயமானது. கரந்தடி முறைமைகள் பல சந்தேகங்களை எனக்குள் விதைக்கின்றன. இது மேற்குலகை புதிய யுத்த ஒழுக்கு முறையில் அழைத்துச் செல்கின்றது. நீங்களும் இதில் தேடல் உள்ளவர்களாய் இருப்பின்...


தொடரும்...


#ukrainwar #RussiaUkrainConflict 

#stopwar #gameofwar #ArtOfWar

திங்கள், 24 அக்டோபர், 2022

ரிஷி சுனக் மீதான எதிர்வுகூறல்

இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமராக பதவியேற்றதை  கொண்டாடுவதை விட  எதிர்கால உலக அரசியல் தொடர்பாக விழிப்புடன் இருப்பது இந்திய தலைமைகளுக்கு சிறப்பு.  ஏனென்றால் இந்தியாவுக்கு எதிரான நகர்வுகளை முன்னெடுப்பதற்கு இப்பொழுது அவர்களுக்கு பிரித்தாளும் தந்திரம் தேவைப்படுகின்றது. காலம் கற்பிக்கும் போது இன்றைய வாரத்தை புரியும்.  ரஷ்ய இந்திய உறவின் நெருக்கங்கள் மேற்குலகம் இந்தியா மீதான விமர்சனங்களுக்கு அவர்களின் கையை வைத்து அவர்களுக்கு குத்துவதற்கு எத்தனிக்கின்றார்கள்.  காலம் வரும் போது புரியும்...! 

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

ஆண்களுக்கான பற்றாக்குறையை எதிர்கொள்ளப் போகும் ரஷ்ய தேசம்

மூன்று தசாப்தங்களுக்கு ஒரு முறை ஆண்களுக்கான பற்றாக்குறையை எதிர்கொள்ளப் போகும் ரஷ்ய தேசம்.  ஏற்கனவே இரண்டாம் உலக யுத்தத்தில் இருந்து கற்று கொள்ளப்படாத பாடம்... 

வரப்போகும் சக்தி வாய்ந்த அணுகுண்டு

இரண்டாம் யுத்தகாலத்தில் நாங்கள் வாழ்ந்ததில்லை. ஆனால்..!  வரப்போகும் சக்தி வாய்ந்த அணுகுண்டு தாக்குதலின் வீரியத்தை அறிந்து கொள்ளப் போகும்  எங்கள் தலைமுறையினர் கொடுத்துவைத்தவர்கள். 💥 மேற்கத்திய திருவிளையாடல்களும், தனிமனித  பிடிவாதங்களும் மனித குலத்தின் சாபங்கள்..!

வியாழன், 12 மே, 2022

ரணில் விக்கிரமசிங்க

 "அறிவுக்கு கூட்டம் தேவையில்லை. தனி மனித மூளை போதுமானது.


'ரணில் விக்கிரமசிங்க'


அசாத்தியமாக காய்களை நகர்த்த கூடிய நரி மூளை. அன்று அவர்களும் அஞ்சினார்கள்.."