செவ்வாய், 13 நவம்பர், 2018

காந்தியைச் சுட்ட நாலாவது குண்டு யாருடையது?

நாலாவது குண்டு யாருடையது?

அவரைக் கண்டுபிடித்தபோது அவரிடம் அதே பெரட்டா ரக துப்பாக்கி இருந்தது. அதன் பதிவு எண் 719791. ஆனால், அதே பதிவு எண்ணில் குவாலியரைச் சேர்ந்த உதய் சந்த் என்பவரிடமும் ஒரு துப்பாக்கி இருந்துள்ளது. காந்தியின் உயிரைப் பறிக்க காரணமாக இருந்த அந்த நான்காவது குண்டு, பதிவு எண் 606824 மற்றும் 719791 ஆகிய இரண்டு துப்பாக்கிகளில் இருந்தும் வந்தது அல்ல என்று 48-ம் ஆண்டு வெளிவந்த போலீஸ் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


மும்பாய் ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு;

மகாத்மா காந்தியை கோட்சேவைத் தவிர வேறு யாரும் சுடவில்லை என்று நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அம்ரேந்தர் ஷரன் விளக்கம் அளித்துள்ளார்.
தேசப்பிதா காந்திஜி கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கோட்சே, நாராயணன் ஆப்தே ஆகியோருக்குக் கடந்த 1949 நவ.15ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றச்சாட்டு நிரூபணமாகாததால் சந்தேகத்தின் அடிப்படையில் சாவர்கர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் , காந்தியின் மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறி ‘அபினவ் பாரத்’ அமைப்பின் அறங்காவலர் பங்கஜ் குமுத்சந்த் பத்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், காந்தி மீது 4 குண்டுகள் பாய்ந்ததாகவும், அதில் 3 குண்டுகள் கோட்சோவால் சுடப்பட்டது என்றும், 4வது குண்டு யாருடையது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த நான்காவது குண்டுதான் காந்தி உயிரிழக்கக் காரணமாக அமைந்தது. இதில் வெளிநாட்டுச் சதி அடங்கியுள்ளது. இது குறித்து மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகாத்மா காந்தி கொலை வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் படித்து இந்த மனு மீதான விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் அம்ரேந்தர் ஷரனை நியமித்தது.
அவர் ஆவணங்கள் முழுவதையும் படித்து, இன்று (ஜனவரி 8) உச்ச நீதிமன்றத்தில் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

அதில், மர்ம நபர் சுட்ட 4வது குண்டுதான் காந்தியின் உயிரைப் பறிக்கக் காரணம் என்று வீர் சாவர்கரின் தொண்டர் என்று தன்னைத் தானேக் கூறிக் கொள்பவரும், அபினவ் பாரத் நிறுவனருமான பங்கஜ் பட்னிஸ் கூறுவது போல, காந்தி மீது 4 குண்டுகள் பாய்ந்தது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.
1948ம் ஆண்டு காந்தி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட சுமார் நான்கு ஆயிரம் பக்கங்களையும் ஆய்வு செய்த அம்ரேந்தர் ஷரன் தலைமையிலான குழுவினர், இந்தக் கொலையில் வெளிநாட்டுத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்றும் அக்குழு உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.