ஞாயிறு, 31 ஜனவரி, 2010

எது சுதந்திரம் என்றால்..!



சுயநலமில்லாத மனிதர்களால்சுத்தமாக வார்த்தெடுத்துசுமைகளை சுமக்கும் மக்கள்சுவாசிக்கும் காற்றே சுதந்திரமாகும்சுடுமணலில் வாழ்ந்த மக்கள்சுவையாக பேசிமகிழ எங்கள்சுகபோகங்களை மறந்து என்றும்சுபீட்சம் பெற்று கொடுப்பதே சுதந்திரமாகும்சுயம்வரம் நடாத்தி தேர்வு எழுதிசுயமரியாதையை காப்பாற்றி அவர்களைசுயாட்சிதனை கையில் கொடுத்து மக்களின்சுந்தரத்தை காணுவதே சுதந்திரமாகும்..
சுரண்டல் இல்லாத சமாந்தர புவியில்சுயநலவாதிகளை இல்லாதொழித்துசுய அதிகாரம் கொண்ட உள்ளங்களாகசுற்றிவரச் செய்வதே சுதந்திரமாகும் சுயசேவை மனப்பாண்மை பரவிடசுகபோகம் அனுபவிக்கும் சித்தர்களைசுககேடு அற்ற கல்விமான்களாய்சுத்தம் செய்து வருவது சுதந்திரமாகும்



சுடு தீபம்அணையுமுன்னர்சுடர்விட்டு பிரகாசித்த விளக்கு போலசுய உணர்வு உள்ளவர்களாகசுட்டி உலகிற்கு காட்டுவதே சுதந்திரமாகும்
சுருக்கு பைதனை கையில் வைத்துசுமந்துவாழும் வயோதிபரைசுடுநீரில் தவிக்க விடாமல் நாம்சுகமாக நீராடுவதே சுதந்திரமாகும்
சுயநலம் எனும் வலையில் சிக்காமல்சுயபுத்தியுடன் சிந்தித்து நாம்சுத்தீகரித்த நல் எண்ணையாய்சுடர்விட்டு எரியும் மக்கள் விளக்கில்.. அதுவே…சுதந்திரமாகும்….கிளியின் ஓர் கிராமத்து நாயகன்..