ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பூரணச் சுதந்திரம் ?

பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டிப்
போராடினோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
பூகம்பம் நிற்காமல்
மும்மூர்த்தி யானது
பங்களா தேசமாய் !
கட்டுப்பாடுள்ள சுதந்திரம்
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டிகளுக்கு !
ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
கண்ணன் குளிக்கும் மாதர்
புடவை
களவாடு வான் !
பூரணச் சுதந்திரம் ஒரு போர்க்களம் !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுச் சேலையைப்
பலர்முன்
பற்றி இழுப்பான்
துச்சாதனன் !
பூரணச் சுதந்திரம் ஒரு குருச்சேத்திரம் !
ஆலயத்தை இரவில் தகர்த்து
வேரறுப்பது
பூரணச் சுதந்திரம் !
பாதிரியார் உடையில்
தீ வைப்பது
வேதியர் சுதந்திரம் !
ரயில் பெட்டிகளை எரித்துச்
சவப்பெட்டி