வெள்ளி, 13 ஜனவரி, 2017

பேஸ்புக்கின் மர்ம பின்னனி! – Illuminati & facebook


பலரால் அறியப்படாததும்.. ஆனால், சுய சிந்தனைவாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த illuminati ஐக்கூற வேண்டும்.
“உலகின் புதிய கட்டளை (New world order)” எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது. எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல… மிக நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும். 20 ஆம், நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.

தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது. அவர்கள் தான் உலகின் “கிங் மேக்கர்”களாக இருகிறார்கள். ( நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்… லொஜிக் இல்லாதது போன்று தோன்றும்… ஆனால், உண்மையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன… பின்னரான பதிவுகளில் பார்க்கலாம்…)

எனினும், இந்த ஆக்கத்தை எழுதும் எனக்கு ஒரு விடையம் அப்போதே உறுத்தியது. அதாவது “ஒலிம்பிக்கில் தாக்குதல் நடாத்தப்பட உள்ளது” என்ற ஒரு ஐயக்கருத்தை இலுமினேட்ட உறுப்பினர்களே பரப்பினால், எதிர் இலுமினேட்ட உறுப்பினர்கள் நிச்சயமாக அந்த கருத்தை ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். அதாவது இவ்வாறான ஒரு தாக்குதல் இலுமினேட்டி எனும் குழுவினால் நடாத்தப்படவுள்ளதாக அறிவிப்பார்கள்.

அப்படி ஆதாரங்களுடன் அறிவிக்கப்பட்டும், அத்தாக்குதல் நடைபெறாது போனால், “இலுமினேட்டி” என்ற குழு பற்றி மக்களிடையே அரிதாக பரவிவரும் நம்பிக்கை தகவல்கள் அனைத்துமே பொய்பிக்கப்படும். அதாவது “எதிர் இலுமினேட்டி” உறுப்பினர்கள் என்ன சொன்னாலும் அதை மக்கள் நம்பாத நிலையை ஏற்படுத்தமுடியும்.
2012 ஒலிம்பிக் தாக்குதல் நடைபெறும் என்ற தகவலை இலுமினேட்டியே கசியவிட்டு பின்னர் அதை பொய்ப்பித்து, அன்டி இலுமினேட்டி உறுப்பினர்களின் வார்த்தைகளை நிரந்தரமாக நம்ப விடாமல் செய்திருக்கலாம்! ( நான் கூட இத்தொடர் பதிவை நிறுத்தியதன் காரணம், “இலுமினேட்டி” என்ற வார்த்தை மீதே ஏற்பட்ட சந்தேகம் தான்… எனினும், தொடர்ச்சியான தேடலில் இந்த குழு நாம் எதிர் பார்ப்பதை விட அதி புத்திசாலித்தனமானதாக இருக்கவேண்டும் என்ற எண்ணமும், சான்றுகளும் கிடைத்தன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

எம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்… அல்லது அடிமைகளாக வேண்டிய நிலை ஏற்படலாம்.
எம்மில் பலருக்கு ஏற்கனவே தெரியும்… பல வகையில் சிந்திக்க விடாமல் அடிமைகளாக்கப்பட்டுவிட்டோம் என…
எம்மை சூழ நடக்கும் சில செயற்பாடுகளை சுயமாக சிந்திங்கும் பொருட்டு உங்கள் எண்ணங்களோடு விவாதியுங்கள்.

முதலில் நாம் அனைவரும் பயன்படுத்தும் சமூகத்தளமான ஃபேஸ்புக் தொடர்பான இலுமினேட்டி தன்மையை ஆராய்வோம்.

பிரபல சமூகத்தளமான ஃபேஸ்புக் 2004 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டு, இப்போது சுமார் 1,15 பில்லியனுக்கு மேற்பட்ட பாவணையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் நிறுவனரான Mark Zuckerberg பற்றியே இன்று பார்க்கப்போகின்றோம். மார்க் ஒரு யூதர் என்பதை இங்கு நீங்கள் கருதில் கொள்ளுங்கள். காரணம், யூதர்களுக்கும் இலுமினேட்டிக்கும் தொடர்பிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அது தொடர்பாக பின்னர் பார்க்கலாம். இப்போது மார்க் தொடர்பாக பார்ப்போம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மார்க் ஃபேஸ்புக் தளத்தின் பாவணையாளார்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அமெரிக்க புலனாய்வுத்துறையுடன் உத்தியோக பூர்வமாக பகிர்ந்துகொண்டமையை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

D8 எஅ அழைக்கப்படும் பிரபல தொழில்நுட்ப நேர்காண‌ல் நிகழ்ச்சியொன்றில் ஃபேஸ்புக் தளம் தொடர்பான கேள்விகளுக்கு மார்க் நேரடியாக பதில் அளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது தனிதகவல் பாதுகாப்புத்தொடர்பான பேச்சு எழுந்த போது, பேட்டிகளின் போது மார்க் அணிந்துவரும் மேலங்கிய பார்வைக்கு காட்டுமாறு எதேச்சையாக நேர்காணலை நடாத்தியவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அந்த கேள்வி கேட்ட அடுத்த கணமே மார்க்கின் முகம் மாறியது. எனினும் அவர்கள் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டதன் பின்னர் தனது மேலங்கியை கழற்றினார். கழற்றும் போதே… தமது ஃபேஸ்புக் திட்டம் அந்த அங்கியில் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறினார். எனினும், அந்த அங்கியை உற்று நோக்கும் போது அது இலுமினாட்டியின் சின்னத்தையும், பகுதி திட்டத்தையும் குறிப்பதாக அமைந்திருந்தது!

யூதர்களின் நாடான இஸ்ரேலின் கொடியிலுள்ள மைய நட்சத்திரத்தை மையமாகக்கொண்டு அந்த வடிவமைப்பு அமைக்கப்பட்டிருந்தது. கீழ் வரும் புகைப்படங்களில் அவற்றை உண்ணிப்பாக அவதானியுங்கள்…

“மேலங்கி” தொடர்பான கேள்வியின் பின்னர் மார்க்கின் சஞ்சல முகம் :


மேலங்கியில் பொறிக்கப்பட்ட அடையாளம் :மேலங்கி அடையாளத்திற்கும் இஸ்ரேலிய கொடிக்கும் இடையிலான ஒற்றுமை :


இலுமினேட்டியை குறிக்கும் அடையாள வடிவமைப்புக்கள் :மேலும், ஃபேஸ்புக் உடன் இணைந்து இயங்கும் அமைப்புக்களை ஆராயும் போது அதில், அமெரிக்க புலனாய்வு அமைப்பு இருப்பதுடன்; ஃபேஸ்புக்கின் அடிப்படை இணை அமைப்பான information awareness office இல் இலுமினேட்டி சின்னம் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலுமினேட்டியின் இஸ்ட இலக்கம் 13 என இத்தொடரில் நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம். ஃபேஸ்புக் உள் நுழைவு முகப்பை அவதானியுங்கள். 13 நபர்கள் காட்டப்படுவார்கள். அவர்கள் நாம் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அதே 13 குடும்பங்களை குறிப்பதாக இருக்கலாம்!இணையத்தில் தேடிப்பெற்றவற்றின் தொகுப்பை என் போக்கி ல் பதிவிட்டுள்ளேன். இது தொடர்பாக மேலும் தகவல்களை அறிந்து வைத்திருப்பவர்கள் கருத்திடவும். மர்மமாகவே இயங்கிவரும் இந்த இலுமினேட்டி மர்மக்குழுவின் திட்டங்களையும் அது எம்மிடையே ஏற்படுத்தப்போகும் பாதிப்புக்களையும் அறிந்திருப்பதும் எதிர்வுகூறுவதும் அவசியமான ஒன்று.

எதிர் கால அவர்களின் அடிமைப்படுத்தல் திட்டங்களையும் அவற்றிற்கு இருக்கும் இடையூறுகளையும் பார்வையிட முன்னர்; அடுத்த பதிவில், சில வாசகர்கள் கேட்டிருந்த இலுமினேட்டி அட்டைகள் பற்றிய தகவல்களை பார்க்கலாம். இணைந்திருங்கள். அடுத்த பதிவில் மிகவும் அதிர்ச்சிகரமான இவ்வருடம் திட்டமிட்டு நடைபெறவுள்ள ஒரு சம்பவத்தை பார்க்க ஆரம்பிப்போம்! இணைந்திருங்கள்!
பதிவை பகிர்ந்து ஊக்குவியுங்கள்! பல உண்மைகள் மண்டிக்கிடக்கின்றன!

References : cuttingedge, izismile, SyriaDefender, TheTruthIsFromGod6 & google