செவ்வாய், 17 ஜனவரி, 2017

நாட்டுப்புறக்கலைகள்


தமிழ் மொழியை போல் தமிழ் கலைகளும் பண்பாடுகளும் தனித்துவமானவை. பாரம்பரியம் மிக்கவை. தமிழ் கலைகளின் அடிவேரை ஆராய வேண்டுமெனில் தமிழகத்தில்தான் தேட வேண்டும். பாரம்பரிய கலைகளை ஈழத்தமிழனம் தன்னகத்தே கொண்டிருந்தாலும் காலச்சுழற்சியின் நவீனத்துவத்தில் இங்கு பாரம்பரியக்கலைகள் மருவி வருகின்றது. இருந்தும் சிலருடைய அர்ப்பணிப்பும் காலத்துக்கேற்ற பாணியில் சில மாற்றத்துக்கூடான பாரம்பரிய கலைகளின் தனித்துவம் காக்கப்படுகிறது.

ஒரு நாட்டின் கலை மற்றும் கலாச்சாரம் அச்சமூகத்தினைப் பிரதிபலிக்கும் சிறந்த கருவியாகும். கலை என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும், கலாச்சாரப் பலகனியாகவும் திகழ்கின்றது. கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடு. குறிப்பாக நாட்டுப்புறக் கலைகள் நமது மண்ணோடு, நம்மோடு தொடர்புடையவை. நமது பாரம்பரியத்தையும் அடி ஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவை. கலை, சமூக வளர்ச்சிக்கும், மன எழுச்சிக்கும் சிறந்த கருவி.


நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியமுடிகிறது. இக்கலைகளே சமுதாயத்தின் ஆவணமாகத் திகழ்கின்றன. இக்கிராமியக் கலைகளே, தகவல் பரப்பும் ஊடகமாகவும் பழக்க வழக்கப் பண்பாட்டுப் பெட்டகமாகவும் திகழ்ந்துள்ளன.


இன்று தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியான தகவல் தொடர்பிற்கும் பொழுது போக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவாகி வருகின்றன. இம்மாறுதல் இயற்கையானதே. இவற்றினை நாம் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. காலத்திற்கு ஏற்ற மாறுதல்கள் தேவைதான்.


அதே சமயம் நாம் நம்முடைய பாரம் பரியத்தன்மைகளையும், கலை மரபுகளையும் ஒதுக்கிட வேண்டியதில்லை. நம்முடைய பாரம்பரியத் தன்மைகளை இழந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கடமையும், பொறுப்பும் அவசியமும் நமக்கு இருக்கிறது. தொழில் நுட்பத்தின், வளர்ச்சி அடைந்த நாடுகளும், அதிநவீன நாகரிகத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நாடுகளும்கூட, தங்களுடைய பாரம்பரியக் கலைகளைப் புறக்கணித்துவிடவில்லை தங்களுடைய எல்லா வளர்ச்சிக்கும் அதனையே ஆதராமாகக் கொண்டுள்ளன.


நமது இந்தியக் கிராமங்கள் ஒவ்வொன்றும் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றினைக் கொண்டுள்ளன. இவை தனக்கே உரித்தான தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் கொண்டவை.


வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் கலவையாக சில கலைகளை கிராமங்கள் நமக்கு அளித்துள்ளன. அவை பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி மன வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் வளம் சேர்ப்பனவாகும். ஒருங்கிணைந்த சமூக முன்னேற்றத்திற்கு உரம் சேர்ப்பதாகவும் அமைந்திருப்பதனை அறியமுடிகிறது.


இந்திய நாட்டுப்புறக் கலைகளில் தமிழக நாட்டுப்புறக் கலைகள் பல்வேறு வகைகளில் சிறப்பும் தனித்தன்மையும் கொண்டவை. இவைகளை நிகழ்த்துக் கலைகள் (Preforming Arts) நிகழ்த்தாத கலைகள் (Non-Performing Arts) பொருட்கலை (material Arts) என நாட்டுப்புறவியல் வல்லுனர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

பொதுவாக தமிழக நாட்டுப்புற கலைகள்:-

ஒயிலாட்டம்
ஆலியாட்டம்
கோலாட்டம் 
கரகாட்டம்
காவடி ஆட்டம்
கும்மி
வில்லுப்பாட்டு
தெருக் கூத்து
பாவைக் கூத்து (பொம்மலாட்டம்)
கனியான் ஆட்டம்,
வர்மம் 
சிலம்பாட்டம்.
களரி 
தேவராட்டம் 
சக்கையாட்டம்
பொய்க்கால் குதிரை ஆட்டம்
மயிலாட்டம்
உறியடி விளையாட்டு (கண்ணன் விளையாட்டு)
தப்பாட்டம்
உக்கடிப்பாட்டு
இலாவணி
கைச்சிலம்பாட்டம்
குறவன் குறத்தியாட்டம்
துடும்பாட்டம்
புலி ஆட்டம்
பொம்மைக் கலைகள்
மண்பாண்டக் கலை
கோலக் கலை

இதுபோன்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலைகள் உள்ளன. இந்தக்கலைகள் வெளியே தெரியாமல் உள்ளன. மேலும் நாடகம், வீதி நாடகம், இசை நாடகம், நாட்டிய நாடகம், பரதநாட்டியம், இசைச் சிற்பம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.


கிராமியக் கலைகள்:-


ஒயிலாட்டம்


கிராமக் கோவில்களில் ஒயிலாட்டம் விழாக்காலங்களில் ஆடப்படுகிறது. இதிகாச புராண வரலாற்றுக் கதைகளே ஒயிலாட்டத்தில் பாடப்படும், கட்டபொம்மன், மதுரைவீரன், வள்ளி, திருமணம் கதைகள் இடம் பெறும். ஒயிலாட்டம் ஆடுபவர் வெள்ளை ஆடை அணிந்து இருப்பர். காலில் சலங்கையும் கட்டியிருப்பர். கையில் ஆளுக்கொரு கைக்குட்டையைப் பிடித்து இருப்பர். நுனியில் பிடித்து அதை அழகாக வீசியபடியே பாடி ஆடுவர்.


கோலாட்டம்


கோலாட்டம் என்பது பெண்களுக்கென்றே உரிய ஆட்டமாகும். இரண்டு கோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பி ஆடுகின்ற ஆட்டமே கோலாட்டம் ஆகும். சமுதாயத்தைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும் கோலாட்டப் பாடல்கள் எழுதப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலும் கோலாட்டம் ஆடப்படுகிறது.


கரகாட்டம்


மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் கரகம் எடுப்பது தமிழ் நாடெங்கும் உள்ள வழக்கமாகும். மலர்களைக் கொண்டு அழகான ஒப்பனை செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் கரக ஆட்டமாகும். இறைவழி பாட்டுடன் தொடர்பு உடையது இந்த கலை பல்வகை வண்ண மலர்களால் போர்த்தப்பட்டு அழகாகச் செய்யப்பட்டிருக்கும். இந்த கரகாட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக ஆடுவது பல அடுக்குகள் கொண்ட கரகத்தைத் தாங்கி ஆடுவது கரகாட்டத்தின் தனிச்சிறப்பு.


காவடி ஆட்டம்


காவடியாட்டம் சமய உணர்விற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் நிகழ்த்தப்படுகிறது. காவடி, தண்டைக் கொண்டு ஆடுவதால் இவ்வாட்டம் காவடியாட்டம் எனப் பெயர் பெற்றது காவடி எடுத்து முருகக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியாகக் காவடி ஆட்டம் நடைபெறுவது தமிழர்கள் மரபாகும். காவடியாட்டம் இறைத் தொடர்புடையது ஆதலால் பல கடுமையான நோன்புகளை மேற்கொண்டு காவடி எடுப்பர். கலைத்திறனும் ஆடல் நுட்பமும் இதில் மிகுதியாக இருக்கும்.


கும்மியாட்டம் 


தமிழகமெங்கும் நிகழும் ஆட்டங்களில் கும்மியாட்டம் முக்கிய இடம் வகித்து வருகின்றது. கும்மிக்கென்று தனிமெட்டு உண்டு. ஒருவர் முதலில் பாட, அதனைத் தொடர்ந்து பெண்கள் குழுவாகச் சேர்ந்து பாடுவர்.


வில்லுப்பாட்டு


தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைகளில் மிகச் சிறந்தது வில்லுப்பாட்டு. வில்லுப்பாட்டு பிறப்பிடம் குமரி மாவட்டம் வில்லுப்பாட்டில் குறைந்தது ஐந்து பேர் இருப்பர். வில்லுப்பாட்டில் கதைப் பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். தலைவர் இருவர் கதையைப் பாட்டாகக் கூறிச் செல்லும்போது விளக்க வேண்டிய இடத்தில் விளக்கி, உரைநடையாக கூறுவர். தெய்வங்களின் வரலாறு. தெய்வ நிலை பெற்ற வீரர்களின் வரலாறு. அரசர்களின் வரலாறு இவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறவே வில்லுப்பாட்டு பயன்பட்டது. விழாக்களில் பாடப்பட வில்லுப்பாட்டு, இன்று இலக்கியம், அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரசியல் சமுதாயத் தலைவர்களின் வரலாறுகள் வில்லுப்பாட்டில் இடம் பெறுகின்றன. காந்தி மகான் கதையை மறைந்த கலைவாணர் பாமர மக்களிடையே பரப்பினார்.


தெருக்கூத்து


பிறநாட்டுப்புறக் கலைகளைப் போன்றே இதுவும் தெய்வ வழிப்பாட்டோடு தொடர்பு உடையது. திரௌபதி விழாக்களில், மாரியம்மன் விழாக்களில், சிவன், திருமால், கணேசன், ஆகியோருக்கு எடுக்கப்படும் விழாக்களில் தெரு கூத்தானது நிகழ்த்தப்பட்டு வருகிறது.


கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாற்பது கூத்து குழுக்கள் உள்ளன. தெரு கூத்து பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டு நிகழ்த்தப்படுகிறது. தெருகூத்தில வரும் கதாபாத்திரங்களின் பண்புகளை வண்ணங்களும் ஒப்பனையும் வெளிப்படுத்தும், துரியோதனனுக்கு சிவப்பும், துச்சாதனுக்கு மஞ்சள், பீமனுக்கு மேகவண்ணமும், கிருஷ்ணனுக்கு பச்சையும், திரௌபதிக்கு இளஞ்சிவப்பும், அர்ச்சுனனுக்கு நீலமும் தீட்டுவர்.


தெருக்கூத்தில் முதன் முதலாக அரங்கினுள் நுழையும் பாத்திரம் கட்டியக்காரன் ஆவான். அவன் கூத்தின் நடுநாயகமான பாத்திரமாகி, அரசனைப் புகழ்பவனாகவும், தூதுவனாகவும், வேலைக்காரனகவும், கோமாளியாகவும், பொது மக்களுள் ஒருவனாகவும், மாறிமாறிப் பாடுவான். கூத்தைத் துவக்கி, காட்சிகளை விளக்கி கதைகளைத் தெரியப்படுத்தி அறிவுரைகளை தூவி, காலநேரச் சூழல்களை முறைப்படுத்தி வாழ்த்துக் கூறுவதுடன் கூத்தை முடிக்கும் பல வேலைகளையும் செய்கின்றவனாக கட்டியக்காரன் தெருக்கூத்தில் இடம் பெறுகிறான். கூத்தின் இறுதிக்கட்டம் பொது வசனம், முடிவுப்பாட்டு, மங்களம் பாடுவதோடு முடியும். தெரு கூத்தானது இவ்வாறு அனைத்து நாட்டுப்புற கலைகளுக்குச் சிறப்பு செய்வதனை காணலாம்.


பொம்மலாட்டம் (பாவைக்கூத்து)


பொம்மைகள் வைத்து நிகழ்த்துவதால் பாவைக் கூத்து எனப்படுகிறது. பொம்மைகள் தோல் பொம்மைகள், மண் பொம்மைகள் என இருவகைப்படும்.


தமிழ் நாட்டில் இக்கலை தஞ்சை, திருச்சி, இராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. பாவைகளை மரத்தாலும், தோலாலும் செய்து நூல்களைக் கட்டி ஒரு திரைக்குப் பின்னாலிருந்து ஒருவர் ஆடியசைத்துக் கதைகளை விளங்கச் செய்யும் நாட்டுப்புறக் கலைக்கு ''பாவைக் கூத்து'' எனப்பெயர்.


மரப்பாவைகள் நல்ல ஆடைகள் அணிவிக்கப் பெற்றிருக்கும் தரையில் புரளுமாறு ஆடைகள் பெரிதாக இருக்கும் காண்பதற்கு கால்களே இல்லாமல் மனப்பாவனையில் கால்கள் உள்ளது போல் காட்டப்பெறும். கயிறுகள் இன்றி பொம்மைகள் தாமே. இயங்குவதாக மனத்தோற்றத்தை முழுமையாகத் தோற்றுவிக்கிறபோது அது கலையாகிவிடுகிறது.


சிலம்பாட்டம்


சிலம்பம் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிலம்பம் சிறப்புற்று விளங்கினாலும் குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் விளையாடும் சிலம்பாட்டமே சிறப்பானது. இதில் கம்பிகளைக் கொண்டு ஒலியெழுப்பி விளையாடுவர். இக்கலையைப் பயிற்றுவிக்கும் செயலைக் ''களிரிப்பயிற்று'' என்று கூறுவர். புத்த சமயத்துறவிகள் மூலம் இந்தப் போர்க்கலை žனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்றது என்பர் வரலாற்று ஆசிரியர்கள். இக்கலை சிறந்த மாற்றங்களுடன் ஜப்பான் நாட்டில் கராத்தே என்று அழைக்கப்படுகிறது.


பொய்க்கால் குதிரை


புராணக் கதைகளைப் பொய்க்கால் குதிரை ஆட்டத்தின் மூலம் நடித்துக் காட்டுவதுண்டு தஞ்சையை ஆண்ட மராட்டியர்களால் இக்கலை சிறப்புற்றது. ஆணும், பெண்ணும் பங்கேற்கும் இவ்வாட்டத்தில் ஆண் அரசர் வேடந்தாங்கியும், பெண் அரசி வேடந்தாங்கியும் ஆடுவர்.


கேரளா நாட்டு கதகளி பஞ்சாபி நாட்டுக் கதை ஆகியவற்றின் நடனக் கூறுகள் பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.


உறியடி விளையாட்டு


உறியடி என்பது ஒரு கிராமியக் கலையாகக் கருதப்படுகிறது. உறியடி விழா என்பதும் கோவில் சார்ந்த கலையாகக் கருதப்படுகிறது. உறி 10 அல்லது 15 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும். உறியை அடிப்பவர் மூன்று அடி நீளமுள்ள கம்புடன் காத்திருப்பர்.


உடுக்கடிப்பாட்டு


மழையின்றித் தவிக்கும் காலத்தில் பல ஊர்களில் உடுக்கடிப்பாட்டு நடத்தப்படும் இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இக்கலை நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. காத்தவராயன் கதையைப் பாடுவதே பெரு வழக்கமாக உள்ளது.


புலியாட்டம்


தேரோட்டம், சாமி ஊர்வலம் போன்ற திருவிழா நிகழ்ச்சிகளில் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது. ஒருவர் புலி போன்ற வேடமிட்டு ஆடுவர். மற்றொருவர் வேட்டைக்காரன் போல் வேடமிட்டு ஆடுவர். இவ்விருவரும் சேர்ந்து ஆடும் ஆட்டந்தான் புலி ஆட்டம் என்பர்.

பாபிலோன் தொங்கும் தோட்டம் - Hanging Gardens of Babylon


பண்டைக்கால நகரங்களுள் பாபிலோன் மிகவும் புகழ்பெற்ற நகரமாகத் திகழ்ந்தது. பாபிலோனின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாக ஹமுராபி மன்னர் இருந்தார். இவருக்குப்பின், இவரது தளபதி நெபோபலாசர் மன்னரானார். பின்பு, நெபோபலாசரின் மகன் நெபுகட்நேசர் மன்னரானார். இவரே தொங்கு தோட்டத்தை அமைத்த பெருமைக்குரியவர். காசர் குன்றுப் பகுதியில் புகழ்பெற்ற அரண்மனை ஒன்றினைக் கட்டி, அருகில் தொங்கு தோட்டத்தையும் அமைத்துள்ளார். இத்தோட்டத்தினை அமைத்ததற்குச் சுவையான கதை ஒன்று சொல்லப்படுகிறது.

மீட்ஸ் அரசர் சையாக்சரசின் மகள் அமிடிசை மன்னன் நெபு திருமணம் செய்கிறார். உலகப் புகழ்பெற்ற அழகு ராணியாக அமிடிஸ் திகழ்ந்தார். பாபிலோன் நகரமும், அரண்மனையும் அமிடிசின் மனதைக் கவரவில்லை. எனவே, எந்த நேரமும் சோகமாகவே இருந்தார். இதனைக் கவனித்த மன்னன் அமிடிசிடம், ராணி எப்போதும் சோகமாக இருக்கக் காரணம் என்ன? என்று கேட்டார்.


அதற்கு அமிடிஸ், அரசரே மனதில் இருப்பதைச் சொல்கிறேன். நான் மலைநாட்டு இளவரசி. என் நாட்டில் உயர்ந்த குன்றுகளும், மலைகளும், காடுகளும், நறுமண மலர்களும், கொடிகளும் சலசலத்து, கண்ணையும் மனதையும் நிறைத்துக் கொண்டிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வளர்ந்ததால் என் மனம் இயற்கையையே நாடுகிறது. இங்குள்ள பரந்த வயல்வெளிகள், வெற்றிடங்களைப் பார்த்துப் பார்த்து என் மனம் சோர்வடைகிறது என்றார்.


இதனைக் கேட்ட மன்னன், கவலைப்பட வேண்டாம் ராணி, உன் நாட்டையொத்த இயற்கை எழிலை உருவாக்கிக் காட்டுகிறேன் என்றார். அரசவையினைக் கூட்டி, பாபிலோனில் மலைக் குன்றுகளை உண்டாக்க முடியுமா என விவாதித்தார். ராணியின் ஆதங்கத்தைக் கூறி, ஏதேனும் வழி உள்ளதா என்றார். பலரும் பலவிதமான யோசனைகளைக் கூறினர்.


அதில் வயதான ஒருவர், மன்னரே, பாபிலோன் நகரம் இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும். மாளிகையினருகில் ஏராளமான மரங்களும் வானமண்டலம் வரை உயர்ந்து வளர்ந்திருக்கும். அது உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் என்று நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார் என்றார். இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ராணியின் விருப்பத்தை நிறைவேற்ற வேலைகளை ஆரம்பித்தார் மன்னர்.


ஒவ்வொரு அடுக்கின் மேலும் சற்று உட்புறமாக பல மாடிகளைக் கொண்ட சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டது. 56 மைல் நீளத்தில், 80- அடி அகலத்தில், 320 அடி உயரத்தில் அமைத்து, இரு சுவர்களுக்குமிடையில் ஏராளமான மண் கொட்டப்பட்டது. சுவரின் உள், வெளிப்புறத்தில் மிக மெல்லிய ஓட்டைகளுடன் கூடிய அலுமினியத் தகடுகள் பொருத்தப்பட்டன. இத்தகடு, உட்புற மண் சரிந்து விழுந்துவிடாதபடி மிக கவனமாகப் பலப்படுத்தப்பட்டது.



அதற்குமேல் சற்று உட்புறம் தள்ளி இரண்டாவது மாடச்சுவர் கட்டப்பட்டது. இடைப்-பகுதியில் மண்போட்டு நிரப்பி அலுமினியத் தகடுகள் பதிக்கப்பட்டன. இப்படியே 8 மாடங்கள் ஒன்றன்மீது ஒன்றாகக் கட்டப்-பட்டன. வானத்தைத் தொடுவதற்குப் போட்டி-யிட்டது போல் அமைக்கப்பட்ட இந்தக் கட்டடச் சுவர்களின் இடையில், பல பழம் தரும் மரங்கள், செடார், பைன், பர்ச், புரூஸ் போன்ற மரங்களும், பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்ச் செடிகளும், கொடிகளும் அமைக்கப்பட்டன.


படர்ந்த கொடிகள் மேல் மாடத்திலிருந்து கீழ் மாடத்திற்குப் படர்ந்து ஒரு தொங்கும் தோட்டம்போல் காட்சியளித்தது. பூத்துக் குலுங்கிய வண்ண மலர்கள் பார்ப்பவர்களின் கண்ணிற்கும் மனதிற்கும் விருந்தளித்து நின்றன. திராட்சைக் கொடிகள் ஆங்காங்கே நடப்பட்டு, பழங்கள் பழுத்துத் தொங்கின.



உச்சி மாடத்தில் விருந்தினர் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாடத்திற்கும் செல்ல, உட்புறமும் வெளிப்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அலுமினியத் தகடுகளிலிருந்து உட்புறத்திற்குத் தண்ணீர் கசிந்துவிடாதபடி கவனமாக வெளியேற்றப்பட்டது. ஒவ்வொரு மாடத்திலும் 4 வாயில்கள் இருந்தன. எட்டாவது திறந்த மாடத்திலும் மாடவெளியிலும் நந்தவனம் அமைக்கப்பட்டிருந்தது. மலர்ச் செடி-களிலும் பழ மரங்களிலும் பலவிதமான பறவைகள் சிறகடித்துப் பறந்தன; வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டன. பறவைகளின் இனிய ஓசை மனதிற்கு இதமளித்தது. செயற்கையான முறை-யில் ஓர் இயற்கைக் காட்சி அழகாக உருவாக்கப்பட்டது.


யூப்ரடீஸ் நதியிலிருந்து ஹைட்ராலிக் என்ஜின்மூலம் நீரை மேலே ஏற்றி, தொங்கு தோட்டத்திற்கு நீர் பாய்ச்சினர். இவ்வளவு பெரிய அளவிற்கு மண்ணை ஏற்றினாலும், ஒவ்வொரு மாடமும் சரியாமல் திட்டமிட்டுக் கட்டிய பணி, அக்கால அறிஞர்களின், பொறியியல் வல்லுநரகளின் திறமையை நினைத்துப் பிரமிக்க வைத்துள்ளது. வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் ஹெரடோட்டஸ் எழுதிய தொங்கு தோட்டத்தின் வருணனை மிகவும் புகழ்-பெற்றதாகும்.



பாபிலோனின் தொங்கும் தோட்டம் எங்கே இருக்கிறது என்பதே ஒரு ரகசியம்தான். கி.மு. 400 இல் பெரோசஸ் என்பவர்தான் முதன் முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம்பற்றி எழுதினார். பாக்தாத்துக்குப் பக்கத்தில் கி.மு. 600 ஆம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75 அடி அகல சுவரைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

பேய் இருப்பது உண்மையா?

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
வெளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க;
உன் வீரத்தைக் குழுந்திலேயே கிள்ளி வப்பாங்க.
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே -நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!

- இந்தப் பாடல் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் பாடல்.

பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் அடைமழையாய்ப் பொழிந்த காலகட்டத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்.


கடவுள் மூடநம்பிக்கைக்கு இணையாக மட்டுமல்ல, அதற்குத் துணையாகப் பரப்பப்பட்டது பேய், பூதம், பிசாசு, ஆவி மூடநம்பிக்கைகள். நம் நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் இந்த மூடநம்பிக்கை உண்டு. தொலைக்காட்சித் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் ஊடக வியாபாரிகள் கிராபிக்ஸைப் பயன்படுத்தி பேய் அச்சத்தை இன்னும் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பகுத்தறிவுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் நாம் கேள்விகளை எழுப்பி வருகிறோம். இதுவரை யாரும் பதில் சொன்னதில்லை. மாறாக அவர் சொன்னார் என்றோ, நான் பார்த்தேன் என்றோ சொல்லித் தப்பிவிடுவார்கள். எங்களுக்குக் காட்டு என்றால் அதற்கு உடன்பட மாட்டார்கள். மூடநம்பிக்கை வணிகர்களின் பித்தலாட்டங்கள் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்க அமெரிக்காவிலிருந்து வெளிவரும் skeptical inquirer மாதமிருமுறை இதழின் மேலாண்மை ஆசிரியர் பெஞ்சமின் ரட்ஃபோர்ட் (Benjamin Radford) எழுதியுள்ள இந்தக் கட்டுரை அறிவியல் பூர்வமாக பேய்-பிசாசு பற்றி ஆராய்கிறது.

பேய் பிசாசுகளை நம்புகிறீர்களா? நீங்கள் மட்டும் தனி ஆளல்ல. 2005ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 37 விழுக்காடு, பேய் வீடுகளையும் மூன்றில் ஒரு பங்கு பேய் பிசாசுகளையும் நம்புகின்றனர். உலக முழுவதிலும், ஆயிரக்கணக்கான மக்கள், ஒரு பொழுதுபோக்காக, ஆனால், மும்முரமாக, பேயைத் தேடி வருகின்றனர்! அய்யத்திற்கிடமான செய்திக் கோப்பைச் சேர்ந்த ஷாரன் ஹில் என்ற ஆய்வாளர் அமெரிக்காவில் 2000 தீவிர தொழில் முறையில்லாத பேய் வேட்டைக் குழுக்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்..

கோடிக்கணக்கான ஆண்டுகளாக பேய்கள் மாக் பெத்திலிருந்து விவிலியம் வரை, மற்றும் எண்ணமுடியாத கதைகளிலும், நாட்டுப்புறக் கதைகளிலும் ஒரு மிகுந்த ஜனரஞ்சகமான பொருளாகவே இருந்து வந்துள்ளன. உலகம் முழுவதும், பேய் பிசாசு பற்றிய இயற்கைக்கு மாறான நம்பிக்கைகள் பரவிக் கிடக்கின்றன.

சாவின் விளிம்பில் ஏற்படும் அனுபவங்கள், மரணத்திற்குப் பின் வாழ்வு, ஆவி உலகத் தொடர்பு உட்பட பல காரணங்கள் இயற்கைக்கு மாறான நம்பிக்கைகளாக அமைகின்றன.

இறந்தவர்கள் ஆவியாக நம்முடன் இருக்கிறார்கள் என்பது ஒரு பழைய நம்பிக்கை. அது பலருக்கு அமைதியைக் கொடுக்கிறது. நமது அன்புக்குரிய, ஆனால் இறந்துபட்ட ஒரு குடும்ப உறுப்பினர் நம்மைத் தேடவில்லை; ஆனால் தேவைப்படும் நேரங்களில் நம்முடன் இருக்கிறார்களா? என்றெல்லாம் அவர்கள் நம்ப விரும்பவில்லை. பலர் பேய் பிசாசுகளில், சொந்த அனுபவத்தின் காரணமாகவே நம்பிக்கை கொண்டுள்ளனர்; சிலர் பார்த்துள்ளதாகக் கூறுகின்றனர். அல்லது, விளங்கிக் கொள்ள முடியாத சில தோற்றங்களை உணர்ந்து இருக்கின்றனர்.

பிசாசுகளைப் பற்றிய வாக்குவாதமும் அறிவியலும்

சொந்த அனுபவங்கள் என்பது ஒன்று ; ஆனால், அறிவியல் ஆதாரம் என்பது வேறு. பிசாசுகளைப் பற்றி ஆராய்வதில் உள்ள தொல்லை என்னவென்றால், பேய், பிசாசு என்பது பற்றி, உலக முழுதும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு விளக்கம் இல்லாததுதான். சிலர் அவை இறந்தவர்களின் ஆவி என்றும் ஏதோ சில காரணங்களுக்காக தாங்கள் போகவேண்டிய இடத்தைத் தவறவிட்டதாகச் சொல்லுகிறார்கள். வேறு சிலர், பேய் பிசாசுகள், தொலை உணர்வு உள்ள பிம்பங்கள் என்றும், உலகத்திற்கு நமது மனங்களிலிருந்து காட்டப்படுவதாகும் என்று கூறுகின்றனர்.


சிலர் வேறுவிதமான பிசாசுகளை உண்டாக்குகிறார்கள். மிச்சமான அச்சங்கள், புத்திசாலி பூதங்கள், நிழல் மனிதர்கள் போன்றவை அவை. பல இனமக்களின் தேவதைக் கதைகள் போலவும் டிராகன் கதைகள் போலவும், எத்தனை விதமான பேய் பிசாசுகளை நீங்கள் விரும்புகிறீர்களோ, அத்தனையும் உள்ளன. பேய்கள் பற்றிய கருத்துகளில், பல முரண்பட்டும், உள்ளடங்கியதாகவும் உள்ளன. உதாரணமாக, பேய்கள் என்பது பொருளா? அல்லது பொருளாக இல்லையா? அவை திடப் பொருள்களுக்கு ஊறு செய்யாமல், ஊடுருவிச் செல்ல முடியுமா? அல்லது அவை தானே அறைக் கதவைச் சாத்திக் கொள்ளவோ, பொருள்களை விட்டெறியவோ முடியுமா? தர்க்க நியாயத்தின்படியும், உருத்தோற்றத்தின் படியும் அவை இருக்க வேண்டும்; அல்லது இல்லாது இருக்க வேண்டும். பேய்கள் மனித ஆன்மாக்களாக இருந்தால் அவை ஏன், ஆடை அணிந்து தோன்ற வேண்டும்? மேலும், இயங்காத பொருள்களான தொப்பி, பிரம்பு, ஆடைகளுடன் காணப்பட வேண்டும்? ரயில்கள், கார்கள், வண்டிகளிலும் கூட பேய் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பழி வாங்கப்படாது இறந்தவர்களின் ஆவிதான் பேயென்றால், அவை ஒரு ஆவியுலகு சார்ந்த(?) இடைமனிதன் வாயிலாகப் பேசுவதாகச் சொல்லப்படுவதால், அவை கண்டுபிடிக்க முடியாத கொலைகளைப்பற்றி ஏன் சொல்லுவதில்லை? அவை தங்களது கொலைகாரர்களைப் பற்றி அடையாளம் காணமுடியும். அதைப்போல, பேய் பிசாசுகளைப் பற்றி எந்த ஒரு செய்தியும், தர்க்க ரீதியான காரணங்களுக்கு உட்பட்டுத்தானே இருக்க வேண்டும்?

பேய் வேட்டையாடுவோர் பலரும் பேய்களின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க பல ஆக்கப்பூர்வமான முறைகளையும் ஏமாற்று வழிகளையும் கையாளுகின்றனர். உண்மையில் எல்லா பேய் தேடுவோர்களுமே, தாம் அறிவியல் முறையில் செயல்படுவதாகவே கூறுகின்றனர். அப்படியே தங்களைத் தோற்றப்படுத்திக் கொள்ளவும் செய்கின்றனர். ஏனென்றால், அவர்கள் உயர்ந்த அறிவியல் கருவிகளையும், கதிர் இயக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான கருவி(Geiger counter), மின்காந்த நில கண்டுபிடிப்பான்கள், அயன் (Ion) கண்டுபிடிப்பான், இன்ஃப்ராரெட் (Infrared) காமிராக்கள், மிக நுண்ணிய மைக்ரோபோன் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதுவரை எந்தவொரு கருவியும் உண்மையில் பேய்களைக் கண்டுபிடிக்க உதவியதாகத் தெரியவில்லை.

சிலர் இதற்கு மாறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். பேய்கள் இருப்பதை நிரூபிக்க முடியாததற்குக் காரணம், ஆவி உலகத்தைப் பற்றி அறிய நாம் தகுந்த தொழில்நுட்பம் கொண்டு இருக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.. ஆனால், இதுவும் சரியாக இருக்க முடியாது. பேய்கள் நாம் வாழும் சாதாரண உலகத்தில் இருந்தால், அவை கண்டுபிடிக்கப்பட்டு, வீடியோ, ஆடியோ, ஃபிலிம் நிழற்படங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு இல்லாததால், அவை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பேய்கள் இருந்து அவை அறிவியல்பூர்வமாக காணப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதற்கான சான்றுகள் நம்மிடம் இருப்பதாகக் கூற முடியும். நாம் அவ்விதம் சான்றுகள் கொண்டிருக்கவில்லை. பேய்கள் இருந்து, அவைகள், அறிவியல்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பதிவு செய்யப்படாமலிருந்தால், பின் எல்லா நிழற்படங்களும், வீடியோ, மற்றும் பேய்தான் என்று சொல்லப்படும் எல்லா பதிவுகளும், பேய்களினுடையதாக இருக்க முடியாது.

பேய்களைப் பற்றிய பல்வேறு கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. பல பத்தாண்டுகளாக, தொலைக்காட்சி உட்பட பல பேய் வேட்டைக்காரர்களும் ஒரு சிறிய சாட்சியத்தைக் கொண்டு கூட பேய் இருப்பது நிரூபிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமூட்டவில்லை.

சமகால கேள்விகள்…? இணையம்

மனித இனம் மட்டும் இவ்வுலகில் தனித்து காணப்படுவது இல்லை, மிருக இனங்களும் உண்டு.
அப்போது இறைச்சிக்காக கொல்லப்படும் கோழிகளும், ஆடுகளும், மாடுகளும் ஏன் போயாக அலைவதில்லை? எல்லாமே உயிர்கள் தானே ஏன் இந்த வேறுபாடு?
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலைகளில் ஆயிரமாயிரம் உயிர்கள் பலியாயின அவர்கள் எங்கே இப்போது இடுகாடுகளுக்கு மத்தியில் குடியேற்றங்கள் காணப்படவில்லையா? 
இன்னும் விஞ்ஞான மெய்ஞான ஆராய்ச்சிக்கட்டுரைகளுடன்.. விரைவில் சந்திப்போம். பேய்களோடு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!!!!

வெள்ளி, 13 ஜனவரி, 2017

தசாவதாரமும் டார்வினிசமும் ! (Hindusim Vs darwinism)

இந்திய இந்து புராணங்கள் அணைத்தும் உண்மை தத்துவங்களை மக்கள் மனதில் எளிதில் பதிய கற்பனை கலந்து எழுதப்பட்ட காவியங்கள், கதைகள். அவற்றின் உள்ள கருத்துகளை மேம் போக்காக பார்க்காமல் ஊன்றி கவனித்தால் மட்டுமே அவ்வுண்மைகளை புரிந்து கொள்ள இயலும்.

தசவதாரம் அதில் ஒன்று. தசாவதாரம் நமக்கு சொல்லும் கருத்துகள் இவ்வுலகம் தோன்றியது எப்படி ? மற்றும் அதில் உயிர்கள் எப்படி படிப்படியாக தோன்றின என்பது. இது டார்வின் கோட்பாடான பரிணாம வளர்ச்சியின் அடிப்படை உண்மைகளை நமக்குத்தெரிவிக்கிறது.

இந்திய நாட்டில் வாழ்ந்த பேரறிஞர்கள் தெள்ளத்தெளிவாகவும் பரிணாமக்கொள்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

பரிணாம வளர்ச்சியின் தோற்றம் நீரிலிருந்து தொடங்குகிறது. முதலில் நீர் பாசி இதிலிருந்து புழு, பூச்சி, நத்தை, மீன், தவளை, ஆமை, பாம்பு, பல்லி, எலி, பெருச்சாளி, பன்றி, கரடி,எருமை,யானை, ஓநாய்,புலி,சிங்கம், முதலிய ஜீவப் பிராணிகள் தோன்றின இறுதியில் குரங்கு. குரங்கிலிருந்து மூதாதையினத்தின் ஒரு பிரிவு கால கிரம வளர்ச்சியின் பின் மனிதன்.

பரிணாம வளர்ச்சி என்பது ஒன்றிலிருந்து ஒன்று என்பதை கவனத்தில் கொள்ளவும்.

73 வருடங்கள் வாழ்ந்த மாமேதை டார்வின் [1809 – 1882]  பற்றி சில தகவல்கள் :

இரண்டாயிரத்து முப்பது ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டு பேரறிஞன் அரிஸ்டாட்டில் பரிணாமதத்துவத்திற்கு வித்திட்டார்.

அவரின் கூற்று ‘சத்தியத்தின் உரைக்கல் ஞானம் அல்ல இயற்கைதான் அதற்கு உரைக்கல்’

வைத்தியரான இராமஸ் டார்வின் (சார்லஸ் டார்வினுடைய தாத்தா) லிச்பீல்டு (இங்கிலாந்து) ல் வசித்தவர். உலகின் ஒவ்வொரு ஜீவராசியும் பரிணாம ரீதியில் வளர்ச்சி பெற்றவை என்ற கருத்தை எழுதி வைத்திருந்தார். ( மூன்றாம் ஜார்ஜ் மன்னர் காலத்தவர்) இவரின் மறைவுக்கு (1802) பிறகு பிரஞ்சு நாட்டின் விலங்கியில் வல்லுனர் லாமார்க் இவரின் கருத்துக்களை மூலாதாரமாக வைத்து விலங்கு சாஸ்திர தத்துவம் (1809) முதுகெலும்பு மிருகங்களின் சரித்திரம்.(1815) ஆகிய நூல்களை வெளியிட்டார்.

பரிணாம வளர்ச்சி பற்றி அவர் வகுத்த கொள்கைகள் ஒரே தினத்தில் எழுதப்பட்டவை அல்ல.

1859 ல் சார்லஸ் டார்வின் ஜீவராசிகளின் பரிணாமத் தத்துவத்தை வெளியிட்டார் (ஜீவராசிகளின் மூலம் 230 பக்கங்கள்) உலகின் எல்லா மதங்களும் இந்த தத்துவத்தை எதிர்த்தன. சம்பிரதாயப்பிடிகளை விட்டுவிட எந்த மதமும் ஒப்புக்கொள்ளலாது. அதனால் கண்ணைமூடி மறுதளித்தன. இன்றுவரை அவரின் கொள்கைக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. ஆனால் நிரூபிக்கப் படவில்லை.

இந்து மதத் தத்துவங்களை குறிப்பாக ஆதிகால சிருஷ்டி தத்துவங்கள் சிலவற்றை மற்ற மதங்கள் தத்து எடுத்து கொண்டதாக சொல்கிறார்கள். பழைய ஏற்பாடான விவிலியத்தில் சொல்லப்படும் நோவா கால ஜல பிரளய கதை, ரோமானியர்கள் வணங்கும் நீரஸ் என்ற கடவுள் (மச்சவதாரம் – மீனுடல் மனித தலை) இவை சில உதாரணங்கள் [ … இங்கு தசாவதாரம் – டார்வினிஸத்தை பற்றி எழுதுவதால் இந்த கருத்துக்குள் அதிகம் செல்லவேண்டாம் என நினைக்கிறேன்…]

இயற்கை மீது அதீத பற்று கொண்ட டார்வினின் பல ஆண்டுகால உழைப்பு. பீகிள் எனும் கப்பலில் அவர் மேற்கொண்ட கடற்பயணம்(1831) தென் அமெரிக்க கடற்கரை, பகாஸ் தீவுகள், சாஹீதி,ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, டாஸ்மானியா, மால்டிவ், மொரீசியஸ், செயின் ஹலினா, கேப்வொ தீவுகள், அஸோரஸ், அவரி வியக்க வைத்தது. திரும்ப வரும்போது அவரது பெட்டகத்தில் நிறைய உயிரினங்கள் நிரம்பியிருந்தது. இவற்றை வைத்து பல ஆண்டுகால ஆராய்ச்சியின் முடிவே பரிணாம தத்துவம்.

ஒரு ஆச்சர்யமான தகவல் ” மூட நம்பிக்கைகளுக்கு வேட்டு வைத்த டார்வின் இளவயதில் மதகுருவாக ஆசைப்பட்டவர்.”

டார்வினிஸத்திற்கும் இந்து மத தத்துவத்திற்கு முள்ள ஒப்புமைகள்.




இந்துக்களால் போற்றப்படும் விஷ்ணுவின் தசாவதாரம் டார்வினிஸத்துடன் ஒத்துப் போகிறது.

தசாவதாரத்தை கருத்தில் கொள்ளும் போது டார்வின் வகுத்தளித்த கருத்துகள் முன்னமேயே இந்திஸத்தில் போதிக்கப்பட்டு வந்துள்ளது விளங்கும்.

முக்கிய வளர்ச்சி பருவத்தைக் கொண்டு முதல் 5 அவதாரங்களின் உருவ அமைப்புகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு தாய் தந்தை இல்லை. ஒவ்வொரு அவதாரத்திற்கும் நான்கு கைகள்(வாமன அவதாரத்தை தவிர). அவ்விலங்கு பருவங்கள் நான்கு கால் உயிரினங்கள்.

வாழ்க்கை நீரிலிரிலிருந்து தொடங்குகிறது. இவற்றின் வளர்ச்சி 600 மிலியன் – 400 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

முதல் அவதாரம் : மச்ச அவதாரம் (மீன்)
வாழ்க்கை நீரிலிரிலிருந்து தொடங்குகிறது. இவற்றின் வளர்ச்சி 600 மிலியன் – 400 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

இரண்டாம் அவதாரம்: கூர்மம் (ஆமை)

நீரிலிருந்து நிலத்தில் நடப்பவை (amphibians) வளர்ச்சி 100 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

மூன்றாம் அவதாரம் : வராகம் (பன்றி) : தரையில் வாழும் பாலூட்டி விலங்கு (mammals) 60 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை.

நான்காவது அவதாரம் : நரசிம்மம் (மனித உருவில் உள்ள சிங்கம்) : பாதி மனிதன் பாதி சிங்கம் 30 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை

ஐந்தாவது அவதாரம்:வாமன (குள்ளமான கரடி) Homo Erectus : ஆயுதம் அற்ற இரண்டு காலில் நடக்கும் உருவம். காலம் 5மிலியன் முதல் 2மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

இந்த ஐந்து அவதாரங்ளுக்கு அடுத்து வரும் 5 அவதார தத்துவங்கள் மனித இனத்தின் படிபடியான நாகரீக வளர்ச்சியை விளக்குவதாகும். ஆதிகால மனிதன் முதலில் நிலத்தை உழுது பயிரத்தெரிந்து கொண்டான் இது பரசுராம அவதாரம்.[ Homo Sapiens (350,000-100,000 years ago)] ஏற்கலப்பையுடன் இருப்பது காண்க.

பின்னர் ஆடுமாடுகளை தங்களின் வேலைகளுக்கு பயன்படுத்த கற்றுக்கொள்கிறான். இது கிருஷ்ணவதாரம்( மாடு மேய்ப்பவர்.)

இறுதியில் சமுதாய ஆட்சிமுறை அதை பலப்படுத்த போர் பயிற்சி பெற்றார்கள் மனித பரம்பரையின் வளர்ச்சி சரித்திரம். பிற்பட்ட அவதாரங்களின் விளக்கம்.

இராம அவதாரத்தில் துணைப்பாத்திரமாக அதி புத்திசாலியாகவும், பலம் பொருந்திய அனுமன் (குரங்கு) சித்தரிக்கப்பட்டது ஏன் ? இதை பரிசீலிக்கும் பொழுது முதல் ஐந்து அவதாரங்கள் முன்பே வெளிப்படுத்த பட்ட பின்னரே அடுத்த அவதாரங்கள் விளக்கப்படுகின்றன. அந்த விளக்கத்தின் போதே சிங்கத்திலிருந்து மனித உருவம் தோன்றவில்லை குரங்கினத்திலிருந்தே மனித இனம் தோன்றியது இதை முக்கிய தகவலாக இடை செருகப்பட்ட முக்கிய கதாபாத்திரமே அனுமன் என விளங்கிக்கொள்ளலாம்.

தேடுவோம். மாற்றுஊடகப்பார்வையினூடு..!!!

PETA அமைப்பின் மறுபக்கமும் ஜல்லிக்கட்டும்

சல்லிக்கட்டு என இன்று அடையாலப்படுத்தப்படும் தமிழர்களின் பண்டைய வீர விளையாட்டான
ஏறுதழுவுதலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் PETA தலைமையிலான மிருக நல ஆர்வலர்களூடாக மேற்கொள்ளப்பட்டுவருவதை நாம் அனைவரும் அறிவோம்.

PETA அமைப்பு :

“விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals) ” என்ற முழுப்பெயரை உடைய இவ் நிறுவனம், 1980 ஆம் ஆண்டு Ingrid Newkirk மற்றும் Alex Pacheco ஆகிய இருவரால் அமெரிக்காவில் தொடக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டில் சில வழக்குகள் மூலம் மக்களிடையே பிரபலமாகி இன்று விலங்குகளின் உரிமைகளுக்கான மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. (மேலதிக விபரங்கள் இணையத்தில் உள்ளன)


விலங்குகளை காப்பாற்ற முனைவதாக கூறும் இந்த அமைப்பின் மறுபக்கத்தை ஆதாரங்களுடன் இப்போது பார்ப்போம்.


PETA கொலை வீதம்!

VDACS, என்ற விவசாயத்தொடர்புடைய அமைப்பு மேற்கொண்ட கணிப்பின்படி,
ஒரு வருடத்தில் PETA அமைப்பால் மீட்கப்பட்டதாக கூறப்படும் விலங்குகளின் எண்ணிக்கைக்கும், அந்த ஆண்டு முடிவில் PETA அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த விலங்குகளிற்கும் இடையிலான எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, மீட்கப்பட்ட விலங்குகள்; தத்தெடுக்கும் திட்டங்களுக்கமைய தத்துக்கொடுக்கப்படுகின்றன. சில விலங்குகள் உடல் நலம் இன்றி இறக்கின்றன. மீதி விலங்குகள் மிச்சமாக இருக்கவேண்டும்.
ஆனால், மீட்கப்பட்ட விலங்குகளில் இருந்து தத்து, நோயால் இறந்த விலங்குகளின் எண்ணிக்கைய கழித்துப்பார்க்கும் போது மிஞ்சும் விலங்குகள் PETA இன் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படும் விலங்குகளின் எண்ணிக்கைக்கு சமமாக‌ இருக்கவில்லை. அதாவது மீட்கப்பட்ட விலங்குகளில் மெகப்பெரும் எண்ணிக்கையிலான விலங்குகள் PETA அமைப்பினால் கொல்லப்பட்டுள்ளன.

இவ் விலங்குகள் தெருவோரங்கள், பிச்சை எடுப்போர், கட்டிவைத்து வளர்ப்போர் மற்றும் துன்புறுத்துபவர்களிடம் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தெருவோரங்களில் வாழ்ந்த இவ் விலங்குகள் விட்டிருந்தால் அவ்வாறே சுதந்திரமாக வாழ்ந்திருக்கும். நோய் பரப்பியாக இருக்கும் என காரணம் சொன்னால், அது விலங்கு நல அமைப்பில்லை. “மனித சுய நல அமைப்பே.
பிச்சை எடுப்போரிடம் வாழும் விலங்குகள் மகிழ்வுடன் வாழ்வ்தை நாமே கண்கூடாக பார்க்கமுடியும்.
கட்டி வைத்து வளர்ப்போர் (கண்டிக்கப்படவேண்டியது தான்) இடம் இருந்து கைப்பற்றப்பட்ட விலங்குகள். PETA வால் அமைக்கப்பட்ட சிறைகள் போன்ற கூடாரங்களில் வளர்க்கப்பட்டுள்ளன. பெரிய வித்தியாசமில்லை. (தத்தெடுக்கப்பட்டவற்றை தவிர)

PETA அமைப்பால் கொல்லப்பட்ட விலங்குகளின் வீதாசார விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கான விளக்கம் PETA அமைப்பால் இதுவரை கொடுக்கப்படவில்லை.


PETA அமைப்பானது பல நிறுவனங்கள் மூலமும் சாதார‌ன எம்மைபோன்ற மக்கள் மூலமும் நிறுவனத்திற்கு தேவையான பணத்தை ஈட்டி வருகிறது. அவ் பணம் கொடுக்கப்படுவதற்கான காரணம் விலங்குகளை பாதுகாப்பதற்கே. ஆனால், விளம்பரம் என்ற பெயரில் உலக பிரபலங்களை (ஆபாசமாக) காட்டுவதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக கூறி குறித்த பணத்தை விரையம் செய்துவருகிறது இவ் அமைப்பு.
தெருக்களில் நடாத்தப்படும் இவ்வாறான விழிப்புணர்வு என வகைப்படுத்தப்படும் நிகழ்வுகளால் அத்தெருக்களில் சென்றுவரும் சிறார்களின் மனது பாதிக்கப்படுவதாகவும், தெருக்களில் ஆபாச நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் அவ் நிறுவனம் உருவாக்கப்பட்ட அமெரிக்காவிலேயே பல எதிர்ப்புக்கள் கிழம்பியுள்ளமை சுட்டிக்காட்டப்படவேண்டிய விடையம்.

மேலும் சில விளம்பரங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் விளம்பரப்படுத்தப்படுகிறது..
உதாரணமாக, சைவம் சாப்பிடுவோர் பாலியல் விடையத்தில் திறமையானவர்கள் என விளம்பரப்படுத்தப்படுகிறது. இதற்கு எந்த விதமான மருத்துவ விஞ்ஞான ஆதாரமும் இல்லை.

PETA அமைப்போடான நேர்காணல் காணொளி பகிரப்பட்டுள்ளது.


அடுத்து,
PETA அமைப்பிற்கு பின்னான வர்த்தக அரசியல் பற்றி ஏற்கனவே பல பதிவுகள், காணொளிகள் பகிரப்பட்டு விட்டன. அவற்றை இணையத்தில் பார்க்கலாம்.

PETA அமைப்பு உண்மையிலேயே கருனை மிக்கதுதான். ஏறுதழுவுதல் தேவையில்லை என வாதிடுவோருக்கு.

ஏறுதழுவுதலை தடுப்பதனால், வலிமை மிக்க நாட்டு காளை மாடுகளை ஒழித்து அதன் அடுத்த கட்டமாக நாட்டு மாட்டு இனம் இல்லாமல் போகும். இது ஒரு இன அழிப்பு. எவ்விதத்திலும் கருனையாகாது.
மேலும் இன்னும் கொஞ்சம் காலம் கடந்து பார்த்தால், இயற்கையாக மாட்டில் கறக்க கூடிய பாலை விட அதிக பாலை கறக்க வைக்க மரபணு மாற்றப்பட்ட Jersey வகை மாடுகளின் பால்கள் சந்தையில் முதன்மை பெறும். (ஏற்கனவே அவை தான் முன்னிலை. நாட்டு மாடுகள் அற்ற நிலையில். போட்டியில்லை.)
மரபணு மாற்றப்பட்ட பாலினால், 50-60 ஆண்டுகளிற்கு பிறகு மனிதர்களுக்கு என்ன என்ன நோய் வரும் என்பதை எதிர்வு கூறமுடியாது. 50-60 ஆண்டுகளின் பின்னர்தான் அதன் விளைவுகளை பார்க்க முடியும். (அப்போது நாட்டு மாட்டினம் அழிந்திருக்கும்.) இப்போதே, சில நோய்களுக்கு இவ்வகை மாட்டுப்பால் காரணமாக இருப்பதாக அறியப்பட்டுவருகிறது.
+ மாடுகள் அற்ற நிலையில், விவசாயத்திற்கு பல் நாட்டு நிறுவன உழுதியந்திரங்களை வாங்கவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள்.

அதே நேரம் PETA, செயற்கை விவசாய உணவுகளுக்கும் ஆதரவு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அவற்றின் பின் விளைவுகளுக்கு 100 ஆண்டுகள் பொறுத்திருக்கவேண்டும்.

பெரும் கேள்வி.
பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களுக்கென சொந்தமான பகுதியில் தமிழர் அடிப்படை தொழிலான விவசாயத்திற்கு பயன்பட்டு தமிழரோடு ஒன்றி வாந்துவரும் இவ் மாட்டு இனத்தையும், அதன் விளையாட்டையும் அவர்கள் விரும்பும் போது. 60 ஆண்டுகளுக்குட்பட்ட ஒரு அமைப்பு எப்படி தடுக்க முடியும். இத்தனைக்கும் அவ் அமைப்பினரே வெளி நாட்டு வகை நாய்களை வெப்பம் நிறைந்த பகுதிகளில் வளர்க்க கூடியவர்கள்.

எவளவு தான் நாம் பேசினாலும், தடை உத்தரவு பெறப்படத்தான் போகிறது. ஒரு 10-20 வருடம் தடைய மீறி நடாத்தப்படும். அதன் பின்னர் காங்கேயன் மாடு என்று ஒரு இனம் வாழ்ந்ததாக புத்தகங்களில் படிக்க முடியும். :)

மேலும் சில…
#வெள்ளைக்காரன்_சொன்னாத்தான்_கேட்போம்_moment





Ref : petakillsanimals.com / vdacs.virginia.gov / Youtube / wikipedia / google search

பேஸ்புக்கின் மர்ம பின்னனி! – Illuminati & facebook


பலரால் அறியப்படாததும்.. ஆனால், சுய சிந்தனைவாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த illuminati ஐக்கூற வேண்டும்.
“உலகின் புதிய கட்டளை (New world order)” எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது. எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல… மிக நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும். 20 ஆம், நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.

தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது. அவர்கள் தான் உலகின் “கிங் மேக்கர்”களாக இருகிறார்கள். ( நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்… லொஜிக் இல்லாதது போன்று தோன்றும்… ஆனால், உண்மையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன… பின்னரான பதிவுகளில் பார்க்கலாம்…)

எனினும், இந்த ஆக்கத்தை எழுதும் எனக்கு ஒரு விடையம் அப்போதே உறுத்தியது. அதாவது “ஒலிம்பிக்கில் தாக்குதல் நடாத்தப்பட உள்ளது” என்ற ஒரு ஐயக்கருத்தை இலுமினேட்ட உறுப்பினர்களே பரப்பினால், எதிர் இலுமினேட்ட உறுப்பினர்கள் நிச்சயமாக அந்த கருத்தை ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். அதாவது இவ்வாறான ஒரு தாக்குதல் இலுமினேட்டி எனும் குழுவினால் நடாத்தப்படவுள்ளதாக அறிவிப்பார்கள்.

அப்படி ஆதாரங்களுடன் அறிவிக்கப்பட்டும், அத்தாக்குதல் நடைபெறாது போனால், “இலுமினேட்டி” என்ற குழு பற்றி மக்களிடையே அரிதாக பரவிவரும் நம்பிக்கை தகவல்கள் அனைத்துமே பொய்பிக்கப்படும். அதாவது “எதிர் இலுமினேட்டி” உறுப்பினர்கள் என்ன சொன்னாலும் அதை மக்கள் நம்பாத நிலையை ஏற்படுத்தமுடியும்.
2012 ஒலிம்பிக் தாக்குதல் நடைபெறும் என்ற தகவலை இலுமினேட்டியே கசியவிட்டு பின்னர் அதை பொய்ப்பித்து, அன்டி இலுமினேட்டி உறுப்பினர்களின் வார்த்தைகளை நிரந்தரமாக நம்ப விடாமல் செய்திருக்கலாம்! ( நான் கூட இத்தொடர் பதிவை நிறுத்தியதன் காரணம், “இலுமினேட்டி” என்ற வார்த்தை மீதே ஏற்பட்ட சந்தேகம் தான்… எனினும், தொடர்ச்சியான தேடலில் இந்த குழு நாம் எதிர் பார்ப்பதை விட அதி புத்திசாலித்தனமானதாக இருக்கவேண்டும் என்ற எண்ணமும், சான்றுகளும் கிடைத்தன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

எம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்… அல்லது அடிமைகளாக வேண்டிய நிலை ஏற்படலாம்.
எம்மில் பலருக்கு ஏற்கனவே தெரியும்… பல வகையில் சிந்திக்க விடாமல் அடிமைகளாக்கப்பட்டுவிட்டோம் என…
எம்மை சூழ நடக்கும் சில செயற்பாடுகளை சுயமாக சிந்திங்கும் பொருட்டு உங்கள் எண்ணங்களோடு விவாதியுங்கள்.

முதலில் நாம் அனைவரும் பயன்படுத்தும் சமூகத்தளமான ஃபேஸ்புக் தொடர்பான இலுமினேட்டி தன்மையை ஆராய்வோம்.

பிரபல சமூகத்தளமான ஃபேஸ்புக் 2004 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டு, இப்போது சுமார் 1,15 பில்லியனுக்கு மேற்பட்ட பாவணையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் நிறுவனரான Mark Zuckerberg பற்றியே இன்று பார்க்கப்போகின்றோம். மார்க் ஒரு யூதர் என்பதை இங்கு நீங்கள் கருதில் கொள்ளுங்கள். காரணம், யூதர்களுக்கும் இலுமினேட்டிக்கும் தொடர்பிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அது தொடர்பாக பின்னர் பார்க்கலாம். இப்போது மார்க் தொடர்பாக பார்ப்போம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மார்க் ஃபேஸ்புக் தளத்தின் பாவணையாளார்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அமெரிக்க புலனாய்வுத்துறையுடன் உத்தியோக பூர்வமாக பகிர்ந்துகொண்டமையை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

D8 எஅ அழைக்கப்படும் பிரபல தொழில்நுட்ப நேர்காண‌ல் நிகழ்ச்சியொன்றில் ஃபேஸ்புக் தளம் தொடர்பான கேள்விகளுக்கு மார்க் நேரடியாக பதில் அளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது தனிதகவல் பாதுகாப்புத்தொடர்பான பேச்சு எழுந்த போது, பேட்டிகளின் போது மார்க் அணிந்துவரும் மேலங்கிய பார்வைக்கு காட்டுமாறு எதேச்சையாக நேர்காணலை நடாத்தியவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அந்த கேள்வி கேட்ட அடுத்த கணமே மார்க்கின் முகம் மாறியது. எனினும் அவர்கள் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டதன் பின்னர் தனது மேலங்கியை கழற்றினார். கழற்றும் போதே… தமது ஃபேஸ்புக் திட்டம் அந்த அங்கியில் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறினார். எனினும், அந்த அங்கியை உற்று நோக்கும் போது அது இலுமினாட்டியின் சின்னத்தையும், பகுதி திட்டத்தையும் குறிப்பதாக அமைந்திருந்தது!

யூதர்களின் நாடான இஸ்ரேலின் கொடியிலுள்ள மைய நட்சத்திரத்தை மையமாகக்கொண்டு அந்த வடிவமைப்பு அமைக்கப்பட்டிருந்தது. கீழ் வரும் புகைப்படங்களில் அவற்றை உண்ணிப்பாக அவதானியுங்கள்…

“மேலங்கி” தொடர்பான கேள்வியின் பின்னர் மார்க்கின் சஞ்சல முகம் :


மேலங்கியில் பொறிக்கப்பட்ட அடையாளம் :



மேலங்கி அடையாளத்திற்கும் இஸ்ரேலிய கொடிக்கும் இடையிலான ஒற்றுமை :


இலுமினேட்டியை குறிக்கும் அடையாள வடிவமைப்புக்கள் :



மேலும், ஃபேஸ்புக் உடன் இணைந்து இயங்கும் அமைப்புக்களை ஆராயும் போது அதில், அமெரிக்க புலனாய்வு அமைப்பு இருப்பதுடன்; ஃபேஸ்புக்கின் அடிப்படை இணை அமைப்பான information awareness office இல் இலுமினேட்டி சின்னம் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலுமினேட்டியின் இஸ்ட இலக்கம் 13 என இத்தொடரில் நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம். ஃபேஸ்புக் உள் நுழைவு முகப்பை அவதானியுங்கள். 13 நபர்கள் காட்டப்படுவார்கள். அவர்கள் நாம் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அதே 13 குடும்பங்களை குறிப்பதாக இருக்கலாம்!



இணையத்தில் தேடிப்பெற்றவற்றின் தொகுப்பை என் போக்கி ல் பதிவிட்டுள்ளேன். இது தொடர்பாக மேலும் தகவல்களை அறிந்து வைத்திருப்பவர்கள் கருத்திடவும். மர்மமாகவே இயங்கிவரும் இந்த இலுமினேட்டி மர்மக்குழுவின் திட்டங்களையும் அது எம்மிடையே ஏற்படுத்தப்போகும் பாதிப்புக்களையும் அறிந்திருப்பதும் எதிர்வுகூறுவதும் அவசியமான ஒன்று.

எதிர் கால அவர்களின் அடிமைப்படுத்தல் திட்டங்களையும் அவற்றிற்கு இருக்கும் இடையூறுகளையும் பார்வையிட முன்னர்; அடுத்த பதிவில், சில வாசகர்கள் கேட்டிருந்த இலுமினேட்டி அட்டைகள் பற்றிய தகவல்களை பார்க்கலாம். இணைந்திருங்கள். அடுத்த பதிவில் மிகவும் அதிர்ச்சிகரமான இவ்வருடம் திட்டமிட்டு நடைபெறவுள்ள ஒரு சம்பவத்தை பார்க்க ஆரம்பிப்போம்! இணைந்திருங்கள்!
பதிவை பகிர்ந்து ஊக்குவியுங்கள்! பல உண்மைகள் மண்டிக்கிடக்கின்றன!

References : cuttingedge, izismile, SyriaDefender, TheTruthIsFromGod6 & google