வெள்ளி, 20 மார்ச், 2015

எது கனவு? யார் நிஜம்? ‘எனக்குள் ஒருவன்’. திரை விமர்சனம்

கனவு நனவென சம்பவங்கள் மாறி மாறி நிகழும் படம் மாறுபட்ட கதைக் களத்தைக் கொண்டுள்ளது ‘எனக்குள் ஒருவன்’. கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘லூசியா’ படத்தின் மறு ஆக்கம் என்ற போதும் தமிழ்ப் படமாகவே உள்ளது. நனவுலகில் நடிகர் விக்கி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அது தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விக்கியை அவருடைய காதலியே கொலை செய்ய முயல்கிறார். எது கனவு? யார் நிஜம்? ஏன் இந்தக் கொலை முயற்சி? காதலியின் பிரச்சினை என்ன? நாயகனின் உண்மையான பிரச்சினை என்ன? இறந்து போவது யார்? இப்படிக் குழப்பமான பல விஷயங்கள் எந்தக் குழப்பமுமின்றி அழகான திரைக்கதையாக்கப்பட்டுள்ளன. 


இரு கதைகளும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துதான் ஆக வேண்டும் என்பதும் அதுவரையில் பார்வையாளர்களின் குழப்பம் அல்லது எதிர்பார்ப்பு தக்கவைக்கப்பட வேண்டும் என்பதும் இதுபோன்ற படங்களில் கட்டாயம். அதை இயக்குநர் ஓரளவு சிறப்பாகவே கையாண்டிருக்கிறார். ஆனால் புலனாய்வுக் கட்டத்தில் பங்கு பெறும் நாயகனின் காதலி சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அந்தக் குழப்பத்தைத் தக்கவைப்பதற்காகச் செய்யப்பட்டுள்ள செயற்கையான திணிப்பாகவே உள்ளது.





அதாகப்பட்டது.. Sankoviiii :)

இன்செப்சன் படத்தின் இன்ஸ்பிரேசனில் கன்னடத்தில் உருவான படம், லூசியா. க்ரவுட் ஃபண்டிங் முறையில் வெளியாகி மெகா ஹிட் ஆனது. அந்தப் படத்தினை தமிழில் ‘எனக்குள் ஒருவனாக’ ரீமேக் செய்திருக்கிறார்கள். சி.வி.குமாரின் தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவான படம்.

 
ஒரு ஊர்ல :
நிஜ வாழ்வில் சலிப்புற்ற ஹீரோவுக்கு, கனவில் நினைத்த வாழ்க்கையை வாழ லூசியா எனும் மாத்திரை மூலம் ஒரு வாய்ப்பு வருகிறது. அது ஹீரோவின் வாழ்க்கையை

எப்படி திருப்பிப் போடுகிறது என்பதே கதை.

உரிச்சா:

திரைக்கதை தான் படத்தின் மிகப்பெரிய பலம்.

கோமாவில் கிடக்கும் சித்தார்த். அதற்கான காரணத்தை விசாரிக்கும் போலீஸ்.

தியேட்டரில் டார்ச் அடித்து, ஆட்களை உட்கார வைக்கும் ஏழை சித்தார்த்தின் கதை, கூடவே ஹீரோயின் தீபா சன்னதியுடன் ஒரு அழகான காதல்.

டாப் சினிமா ஸ்டார் சித்தார்த்தின் கதை..கூடவே மாடல்(தீபா சன்னதி) மேல் காதல் கொள்ளும் கதை.

மூன்று கதையையும் கலந்து கட்டி அடிக்கிறார்கள். மூன்று கதையும் ஒன்று சேரும்புள்ளியில் ‘அட’ என்று நம்மை அசர வைக்கிறார்கள். தமிழில் பொதுவாக மறுபடியும்

மறுபடியும் பார்த்துப் புரிந்துகொள்ள வைக்கும் ஸ்டைலில் திரைக்கதைகள் வருவதில்லை. அந்தவகையில், இதுவொரு முக்கியமான படம்.

ஒரு கதையில் நரேனுக்கு விசுவாசமாக சித்தார்த் இருக்க, இன்னொரு கதையில் சித்தார்த்துக்கு விசுவாசமாக வருகிறார். இப்படி இரண்டு கதையிலும் பல தலைகீழ்

மாற்றங்கள், நுணுக்கமான சித்தரிப்புகளுடன் தரமான படமாக வந்திருக்கிறது.

இதில் ஒரே ஒரு சிக்கல் தான்..நம் மக்கள் பொழுதுபோக்கிற்குத் தான் படம் பார்க்க வருகிறார்களே ஒழிய, உட்கார்ந்து யோசிக்க அல்ல. நெட்டில் டவுன்லோடு செய்து

நோலனின் படத்தை சிலாகிக்கும் கும்பல்கூட ‘அனேகன்’ போன்ற முயற்சிகளை ரசிப்பதில்லை என்பதே யதார்த்தம்.

ஸ்லோவாக நகரும் படம், மூன்று கதைகள், கிளைமாக்ஸ் ட்விஸ்ட்வரை ‘அப்புறம் என்ன..?’ என சற்று அசுவாரஸ்யமாகவே உட்கார வைக்கின்றன. எனவே கமர்சியலாக ஏ

செண்டர் தாண்டி படம் தேறுவது கஷ்டம் தான்.

கதையைப் பற்றி இதற்கு மேல் என்ன சொன்னாலும் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால்....உரிச்சது போதும்!

சித்தார்த்:

ஒரிஜினல் கன்னட ஹீரோவைவிட, இரண்டு கேரக்டருக்கு இடையே அதிக வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். உடல்மொழி, பேசும் விதம் என எல்லாவற்றிலும் நல்ல 
உழைப்பு. ஏழை அப்பாவியாக காதலில் தயக்கம் காட்டுவதும், சினிமா ஸ்டாராக அதிகாரம் காட்டுவதுமாக கலக்கல் நடிப்பு. சித்தார்த்தின் கரியரில் இதுவொரு முக்கியமான படமாக இருக்கும். சினிமா ஸ்டாராக வரும் காதல் போர்சன் தற்செயலாக சமந்தாவை ஞாபகப்படுத்துகிறது.

தீபா சன்னதி:

சமந்தா-சித்தார்த் காதல் பிரிவிற்குக் காரணமே இந்த கன்னி பாம் தான் என்றார்கள். ஸ்டில் அளவிற்கு படத்தில் அம்மணி அழகாக இல்லை. முகத்தில் முதிர்ச்சி தெரிகிறது. இவரை விட ’மேகா நாயகி’ சிருஷ்டி அழகாக இருக்கிறார். ஆனால் அவரை டம்மியாக யூஸ் செய்திருக்கிறார்கள். வெரி பேட். அந்த கன்னக்குழி அழகியை ஹீரோயின் ஆக்கியிருக்கலாம்.

நரேன்:
ரொம்ப நாளைக்கு அப்புறம் மனுசருக்கு நல்ல கேரக்டர். நொடித்துப்போன தியேட்டர் அதிபராகவும், ஹீரோவின் மேனேஜராகவும் பின்னி எடுக்கிறார்.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- லூசியா மாத்திரை..கனவில் வேறொரு வாழ்க்கை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்கள். அதில் இருந்து இண்டர்வெல்வரை வேறு பெரிய ட்விஸ்ட்டே இல்லை.
- மெதுவாக நகரும் படம்
- விசாரணை அதிகாரி கேரக்டருக்கு வேறு ஃபேமஸான நடிகரைப் போட்டிருக்க வேண்டும். அந்த போர்சன்மேல் பெரிய ஆர்வம் வருவதில்லை. ஆனால் படத்தில் அது தான் த்ரில்லர் போர்சன்
- ஹீரோயின்
- பெண் தன்மையுள்ளவராக அறிமுகமாகும் ஜான் விஜய், அதற்கு அடுத்த காட்சிகளில் நார்மல் ஆணாக இருப்பது!
- நல்ல படம்!

பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- திரைக்கதை..கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டும் தொடரும் காட்சிகளும் தான் படத்தின் பெரும் பலம்.
- சித்தார்த்
- வழக்கம்போல் சந்தோஷ் நாராயணின் கலக்கல் பாடல்களும் இசையும்.
- திரைக்கதைக்கு தோள் கொடுக்கும் பக்கா எடிட்டிங்.
- ரொம்ப நாளைக்கு அப்புறம், திரையில் பாதிப்படத்தை ப்ளாக் & ஒயிட்டில் பார்ப்பது. குறிப்பாக, ஓப்பனிங் ஷாங்கில் ஒளிப்பதிவும் ஆர்ட்டும் அட்டகாசம்.
- நல்ல படம்!! 

நிஜத்தை கருப்பு வெள்ளையாகவும், கனவுகளை வண்ணங்களாகவும் காணும் விக்னேஷ் பாத்திரம் சரியாக செதுக்கப்பட்டிருக்கிறது. சிறு வயதில் பெற்றோரை இழந்து அதோடு வண்ணங்களை உணரும் பார்வைக் குறைபாட்டையும் பெறும் விக்னேஷ், படம் முழுக்க கருப்பு வெள்ளை, வண்ணம் என்று மாறி மாறி வருவது நல்ல உத்தி. கடைசி காட்சியில் கனவு முடிந்து, போக நிஜ வாழ்வில் அவை பார்வையாளனுக்கு வண்ணமாக மாறுவது ரசிக்க வைக்கிறது.

பார்க்கலாமா?

நல்ல தரமான படம் பார்க்க விரும்புபவர்கள்….பார்க்கலாம் - கனவால், நிஜ வாழ்வு விபரீதமாகும் ஒருவனின் விசித்திரக் கதை!