யுத்தம் ஒரு கொடுமையான வன்முறை என்பதை அவர் உணர்ந்து இருக்கக்கூடாது.
அவர் மனம் மாறி மாறி பௌத்த மதத்தை தழுவி இருக்கக்கூடாது.
அயல்நாட்டுக்கு மஹிந்த, சங்கமித்தை போன்ற தர்ம மஹா மாத்ராக்கள் எனும் தூதுவர்களை அனுப்பி பௌத்த மதத்தைப் பரப்பி இருக்கக்கூடாது.
அதை சைவ மன்னனாகிய தீசன் வரவேற்று இருக்கக்கூடாது.
>>> இதெல்லாம் நடந்து விட்டால் இவ்வாறான பிதற்றல்களை எங்கள் காதுகளில் கேட்கின்ற நிலை எங்களுக்கு ஏற்பட்டிருக்காது. பண்டைய மதத்தவர்கள் அனைவர்களுக்கும் மன உளைச்சலையும் இது ஏற்படுத்தி இருக்காது.
வடுக்களை விதைப்பவர்கள் புத்தர் கண்ட நான்கு உண்மைகளையும், எட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைபிடித்தாலே போதும். நாடு வளம் பெறும்..
( தேவநம்பிய தீசனின் ஆட்சிக்காலம் வரை இலங்கையில் இந்துமத வழிபாடுகளும், நம்பிக்கைகளும் வலுவாக நிலைகொண்டிருந்தன. மக்களிடையே லிங்கவழிபாடு பிரதானமாக இருந்ததுடன், நாகதீபம் உள்ளிட்ட பகுதிகளில் சமணம் மற்றும் பழந்தமிழ் வழிபாடான ஆசிர்வகமும் வழக்கத்தில் இருந்தன. பூர்வீக்குடிகளான நாகர்கள் நாகவழிப்பட்டையும், இயக்கர்கள் ஆவி வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தனர்..)
“கோ எவ்வழியோ, குடிகளும் அவ்வழியே” என்பதற்கு பொருந்தி தீசனின் தனிப்பட்ட முடிவினால் இலங்கையின் முழுவரலாறும் மாற்றி அமைக்கப்பட்டது. வலிகளும், உயிர் பலிகளும் வரலாறுகளின் மேல் கட்டி அமைக்கப்பட்டது..
நவீனத்துவத்தில் பிரபஞ்சத்தில் மனிதப் வரலாறுகளை ஆய்வு செய்வதை விடுத்து, நிகழ்ச்சி நிரல்கள் அடங்கிய மத வரலாறுகளை ஆய்வுக்கு உட்படுத்துவதால் எந்த காலத்திலும் இந்த தேசம் மீட்சி பெறாது."
அ. எல்றோய்