சனி, 31 டிசம்பர், 2016

சார்லஸ் டார்வின் - படிமலர்ச்சி கோட்பாடு

பழைய சிந்தனைகளிலிருந்து விடுபட மறுத்த உலகத்தை தங்களின் அரிய கண்டு பிடிப்புகளால் மாற்றம் பெறச் செய்தவர் களில் நால்வருக்கு முதன்மை பங்கு உண்டு. நாம் வாழும் புவி உருண்டையானது என்ற க—யோ, இயக்கவியல் கோட்பாட்டை நிறுவிய ஐன்ஸ்டீன், புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன், மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த உண்மைகளை வெளியிட்ட சார்லஸ் டார்வின் ஆகியோரே அந்த நான்கு முதன்மை அறிவியலாளர்கள். இவர்களின் கண்டுபிடிப்புகளே நவீன உலகின் அறிவியல் முன்னேற்றத்திற்கு அடித்தளம்.

இங்கிலாந்து நாட்டின் ஷிரூஸ்பரி நகரில் 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் பிறந்த சார்லஸ் டார்வின் பிறந்து 200 ஆண்டுகள் கழித்தும் தன்னை இந்த மனித சமுதாயம் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு மனித குலம் குறித்த மிக முக்கியமான ஆய்வுப்புரட்சியை நடத்தியவர் டார்வின். அப்படியென்ன புரட்சி?

உலகில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றையும் கடவுள் படைத்தார்.
அதுபோல, மனிதனையும் கடவுள் படைத்தார் என்பதே மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கையாக காலங்காலமாக இருந்து வந்தது. டார்வினின் ஆராய்ச்சி முடிவுகள் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து உண்மையை உலகுக்கு உணர்த்தின. எச்.எம்.எஸ் பீகிள் கப்பலில் இயற்கையியலாளராக பதவியமர்த்தப்பட்ட சார்லஸ் டார்வின் ஏறத்தாழ 5 ஆண்டுகள் அந்தக் கப்பலில் பயணித்து தென் அமெரிக்காவின் பசிபிக் கரையோரத்திலும் பசிபிக் கடலில் உள்ள சில தீவுகளிலும் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து 600 குறிப்பேடுகளில் தரவுகளைப் பதிவு செய்தார். மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி (படிமலர்ச்சி) பற்றிய டார்வினின் அரிய ஆய்வுகளுக்கு அந்தக் குறிப்பேடுகளே அடித்தளம்.

உயிரினங்கள் தங்களின் இயற்கையான தேர்ந்தெடுத்தலில் காரணமாகவே படிமலர்ச்சியை அடைகின்றன என்பதே டார்வினின் கோட் பாடாகும். பறவை, விலங்கு என ஒவ்வொரு உயிரினத்திற்கும் பொதுவான குணங்கள் இருந்தா லும் தனிப்பட்ட ஒவ்வொரு பறவைக்கும் விலங்குக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை டார்வின் தெளிவுபடுத்தினார். ஒரே தட்பவெப்பம் நிலவும் பகுதியில் வாழும் பறவை களில் சிலவற்றுக்கு வலிமையான அலகு இருக்கிறது. சிலவற்றுக்கு மென்மையான அலகு இருக்கிறது. சிலவற்றுக்கு நுண்மையான அலகு இருக்கிறது. வலிமையான அலகுகள் கொண்ட பறவைகள் பெரிய விதைகளை சாப்பிடக்கூடியனவாகவும், மென்மையான அலகுகளைக் கொண்ட பறவைகள் சிறிய விதைகளைச் சாப்பிடுபவையாகவும் நுண்ணிய அலகுகளைக் கொண்ட பறவைகள் புழு- புச்சிகளை சாப்பிடக்கூடியனவாகவும் இருப்பதை அவர் தன் ஆய்வில் உறுதி செய்தார்.

ஒரே இனத்தில் இத்தகைய மாறுபாடுகள் கொண்ட உயிரினங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் படிமலர்ச்சியை அடைந்து புதிய உயிரினங் களாக மாற்றம் பெறுகின்றன என்பதே டார்வினின் ஆராய்ச்சி. அதாவது, ஆதாம்-ஏவாள் மூலமாக மனித இனத்தைக் கடவுள் படைத்தார் என ஒரு மதமும், படைப்புக் கடவுளான பிரம்மாவி னால் மனிதர்கள் படைக்கப்பட்டார்கள் என இன்னொரு மதமும் பல நூற்றாண்டுகளாக மக்களின் மனங்களில் கருத்துகளைப் பதிவு செய்திருந்த நிலையில், அதற்கு முற்றிலும் மாறுபட்டிருந்தது டார்வினின் ஆராய்ச்சி. மனித இனம் என்பது தனித்துவமாகப் படைக்கப்பட்டதில்லை. ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என்ற படிமலர்ச்சியின் தொடர்ச்சி யாக ஒவ்வொரு உயிரினமாக உலகில் தோன்றின. அப்படி தோன்றிய உயிரினங்களின் வழியே, இயற்கையான தேர்வு முறையில் படிமலர்ச்சி பெற்ற இனம்தான் மனித இனம். சுருக்கமாகச் சொல்வதென்றால், குரங்கு இனத் தில் இயற்கைச் சூழலால் தனித்த குணங்களுடன் செயல்பட்ட ஒரு குழுவிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் படிமலர்ச்சி பெற்றவனே மனிதன்.

டார்வினின் இந்த ஆய்வு, அவர் காலத்திற்கு முன்பு வரை இருந்து வந்த மதம் சார்ந்த- மூடநம்பிக்கைகளுடனான அறிவியலை மதத்திற்கு அப்பாற்பட்ட பகுத்தறிவு சார்ந்த அறிவியலாக மாற்றியது என்கிறார் இருபதாம் நூற்றாண்டின் இயற்கைவியலாளரும் படிமலர்ச்சி ஆராய்ச்சியாளருமான எர்னஸ்ட் மேயர். இத்தகைய அறிவியல் புரட்சியை மதம் சார்ந்த உலகம் உடனடியாக ஏற்றுக் கொள்ளுமா?

படிமலர்ச்சி குறித்த டார்வினின் ஆய்வு களுக்கு எதிராக இங்கிலாந்து நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது கடவுளை மறுக்கும் கருத்து, நாத்திக கருத்து என மதரீதி யான எதிர்ப்புகள், அரசியல் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவை நடைபெற்றன. இது டார்வினை கலங்கச் செய்தது. அவ ருடைய ஆய்வுகள் புரட்சிகரமாக இருந்தனவே தவிர, டார்வின் புரட்சியாளர் அல்ல என்கிறார் அறிஞர் ஜான் பெலாமி ஃபாஸ்டர். படிமலர்ச்சி பற்றிய டார்வினின் புகழ்பெற்ற புத்தகமான உயிரினங்களின் தோற்றம் 1859ல் வெளியானது. தன் இறுதிக்காலத்தில் லண்டன் நகரிலிருந்து 15 கல் தொலைவில் உள்ள ஓர் ஊரில் வசித்தார் டார்வின். அவர் தனது ஆய்வுக் கோட்பாடுகளை, தானே தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை. உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகளை புதிய சிந்தனைகளோடு முடுக்கிவிடும் தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடரும் பணியை தாமஸ் ஹக்சிலி போன்றவர்களிடம் விட்டுவிட்டார்.

டார்வின் முன்வைத்த படிமலர்ச்சி கோட்பாடு இன்றளவிலும் பலவித மான ஆய்வுகளைக் கண்டு வருகிறது. மேற்குலக நாடுகளில் நிறத்தின் பெயரா லும் இனத்தின் பெயராலும் அடிமைத்தனம் நிலவி வந்த கால கட்டத்தில், உயிரினங்களின் தோற்றம் பற்றிய டார்வினின் ஆராய்ச்சி உண்மையிலேயே பெரும் புரட்சிதான். ஏனெனில், வெள்ளை இனம் எஜமானம் செய்யவும் கறுப்பினம் அடிமைத்தொழில் புரியவும் படைக்கப்பட்டவர் கள் என்ற ஒடுக்குமுறை சிந்தனையை உடைத்தெறியும் விதத்தில், மனிதர்கள் படைக்கப்படவில்லை. அவர்கள் இயற்கையான தேர்வு முறையில் உயிரினங்களின் படிமலர்ச்சி யின் விளைவாக உருவானவர்கள் என்ற டார் வினின் தத்துவம், ஆண்டான்-அடிமை கோட் பாட்டை உடைத்து நொறுக்குவதாக அமைந் தது. இந்தியாவிலும் பிறப்பினால் உருவாக் கப்பட்டுள்ள நால் வருணக் கோட்பாட்டுக்கு சம்மட்டி அடி தருவதாகவே இருக்கிறது டார்வினின் ஆராய்ச்சி முடிவு.

உலகில் உள்ள மனிதர்கள் ஏற்றத்தாழ்வற்ற சமஉரிமைகளுடன் வாழவேண்டும் என்ற பெருங்கனவுடன் பொதுவுடைமை எனும் அர சியல் விஞ்ஞானக் கோட்பாட்டை வகுத்தவர் களான காரல்மார்க்சும், ஃப்ரெடெரிக் எங்கெல் சும் டார்வினின் ஆய்வுகளை கவனத்துடன் அல சினர். உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தின் முதல் பதிப்பை வாங்கிப்படித்த எங்கெல்ஸ், இது முற்றிலும் சிறப்பானது என மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். டார்வினின் செயலை “அறிவியல் கண்ணோட்டத்தில் பெருங் காப்பியம்’ என வர்ணித்தார் காரல் மார்க்ஸ்.

ஆள்வதற்கும் ஒரு பிரிவும் அடிமையாக இருப்பதற்கு ஒரு பிரிவுமாக மனிதகுலம் படைக்கப்படவில்லை. மனித இனம் என்பது படைப்பால் வந்ததன்று. இயற்கையான தேர்வு முறையினால் வந்ததன்று என்கிற புரட்சிகரமான உண்மையை வெளிக்கொண்டு வந்தவர் அறி வியல் அறிஞர் சார்லஸ் டார்வின். அதனால் தான் மாபெரும் அறிஞர்கள் போற்றும் மகத் தான அறிஞராக இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னும் அவர் நினைக்கப்படுகிறார். டார்வினின் ஆய்வுகள் புதிய புதிய கோணங்களில் இன்றளவும் ஆராய்ச்சி செய்யப்படுவது அவரது பேராற்றலுக்கு கிடைத்துள்ள பெருமை.

தாவரங்களுடன் பேசுங்க

தாவரங்கள் நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்? 'தண்ணீர் பாய்ச்ச வேண்டும். முறையாக உரமிட வேண்டும்' என்கிறீர்களா? இதெல்லாம் பொதுவான முறைகள். தாவரங்களுடன் மனம்விட்டுப் பேசினால் அவை நன்றாக வளரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தாவரங்களுடன் பேசுவதா? அவற்றுக்கென்ன நாம் பேசுவது புரியுமா என்ன என்று கேள்வி எழுப்புகிறீர்களா? 'தாவரங்களுக்கு மொழி புரியாதுதான். ஆனால் அவை உங்களின் உச்சரிப்பைப் புரிந்து கொள்ளும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இது தொடர்பான புதுமையான ஆய்வை இங்கிலாந்து விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அதன் முடிவில்தான், தாவரங்கள் மனிதர்கள் தம்மிடம் பேசுவதை விரும்புகின்றன என்று அறிவித்துள்ளனர்.

அதிலும் இங்கிலாந்தின் நியுகேசில் பகுதியில் புழங்கும் உச்சரிப்பு முறையைத் தாவரங்கள் அதிகம் ரசிக்கின்றனவாம். எசக்ஸ், வேல்ஸ் பகுதி உச்சரிப்பு முறைகளும் பலன் கொடுக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

எசக்ஸ் பகுதி செடி, கொடிகள் விற்பனை மையம் ஒன்றில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏனோ தெரியவில்லை, மேல்தட்டு மக்களின் உச்சரிப்பு முறையை தாவரங்கள் ரசிக்கவில்லையாம்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 1986-ம் ஆண்டில் தனது தோட்டத்துத் தாவரங்களுடன் பேசுவது பிடிக்கும் என்றபோது பலரும் அவரைக் கிண்டலடித்தார்கள். அவர்கள் தற்போது என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை!

கோஹினூர் ('மலையளவு ஒளிவீச்சு')

இந்தியாவை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் சேனாதிபதி மாலிக் கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் பொது கைப்பற்றப்பட்டது ஒரு வைரம். பின்னர் குவாலியர் மன்னர் குடும்ப வசமானது அந்த வைரம். ஹுமாயுன் தலைமையில் பாபர் படைகள் குவாலியரை தாக்கியபோது, குவாலியர் மன்னர் குடும்பத்தினர் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வைரத்தை விலையாகக் கொடுத்தனர். ஹுமாயுன் தனது தந்தை பாபரிடம் அத வெற்றி பரிசாக அளித்தார். பாபர் அந்த வைரத்தை ஹுமயுனிடமே திருப்பித் தந்துவிட்டார்.

பின்னர், பாரசீக மன்னர் ஷா தாமாஸ்ப் கைக்கு போன அவ்வைரம், தட்சிணப் பீடபூமியை ஆண்ட நிஜாம் ஷாவை வந்தடைந்தது. 17-ம் நூற்றாண்டில் ஷாஜஹான் வசம் வந்தது அந்த வைரம். பின்னர் மொகலாய மன்னர்களிடம் பாதுகாப்பாக இருந்தது. 1739-ல் டெல்லியை சூரையாடிஅய பாரசீக மன்னர் நாதிர் ஷா, மொகலாய மன்னர் முகமது ஷாவிடம் இருந்து அந்த வைரத்தைக் கைபற்றிகொண்டார்.

பிரசித்தி பெற்ற "கோஹினூர்" வைரத்தின் கதை இது. அதற்கு கோஹினூர் ('மலையளவு ஒளிவீச்சு') என்று பெயரிட்டவரும் நாதிர்ஷாதான். தாதிர் ஷாவுக்குப் பின்னர் அவரது வழித்தோன்றல்களிடம் இருந்தது இந்த வைரம். தொடர்ந்து, "பஞ்சாப் சிங்கம்" என்றழைக்கப்பட்ட ரஞ்சித் சிங் கைவசம் மாறியது.

பஞ்சாப் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள் வந்தபிறகு, சர் ஜான் லாரன்ஸ் என்ற திகாரி அதை பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவுக்குப் பரிசாக அளித்தார். இன்றுவரை பிரிட்டீஷ் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது, கோஹினூர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகில் வெட்டி எடுக்கப்பட்டது இந்த புகழ்பெற்ற வைரம்.

காடுகள் இரவு நேரத்தில் எப்படி இருக்கும்?

பூமியின் மொத்த நிலப்பரப்பில் வெறும் 6 சதவீத நாடுகளில் தான் உலகில் வாழும் பெரும்பான்மையான ஜீவராசிகள் உயிர் வாழ்கின்றன. இந்த காடுகள் இரவு நேரத்தில் எப்படி இருக்கும் என்பன பற்றிய சிறு பார்வை.
     இரவு நேரத்தில் காடுகள் அமைதியாக இருக்கும் என்று நினைத்தால் அது தவறு தான். காரணம் நள்ளிரவில்தான் பூச்சிகள், மிருகங்கள், பறவைகள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். பேசுவது என்றால் படுக்கையில் கணவனும், மனைவியும் பேசும் ரகசியமான பேச்சில்லை. இந்த உயிரினங்களுக்கு இரவு நேரத்தில் தனக்கான துணை எங்கே இருக்கிறது என்றே தெரியாது. அதனால் தனது இணையை “எங்கேடா செல்லம் இருக்க?” என்று விடிய விடிய குரல் எழுப்பி கேட்டு கொண்டே இருக்கும்.
தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை குரங்குகள் எழுப்பும் காதல் ஒழி 5 கி.மீ. தூரத்துக்கு கேட்கும் என்று ஒரு வகையான ஆராய்ச்சி கூறுகிறது. காங்கோ காடுகளில் காணப்படும் ஒரு வகை வவ்வால்களின் தொண்டை கத்தி கத்தியே மார்பு வரை நீண்டு விட்டது. அதன் பரிணாம வளர்ச்சியே மாறி விட்டது. அந்த அளவுக்கு சவுண்ட் கில்லாடியாக இந்த வவ்வால்கள் இருக்கின்றன.
   சிங்கம், புலி, சிறுத்தை போன்றவைகளின் இணைகள் வெகு தொலைவில் எங்கேயோ இருக்கும் இணையை அழைக்க இவை காடே அதிரும்படி கர்ஜிக்கும். ஆண் சிங்கம் கூப்பிட அதற்கு பெண் சிங்கம் பதில் சொல்ல டிடிஸ் எபக்டில் காடே அதிரும். இதற்கு நடுவில் யாரவது மாட்டி கொண்டால் மாட்டியவர் கண்டிப்பாக அச்சத்தின் உச்சத்தை தொடுவார்.
ஆப்ரிக்க யானைகள் எழுப்பும் ஒழி, அடர்ந்த காடுகளை கிழித்துக் கொண்டு பல கி.மீ. தூரம் தாண்டியும் கேட்கும். தன் இணை நடந்து வரும் அதிர்வை வைத்தே எவ்வளவு தூரத்தில் தனக்கான இணை உள்ளது என்று கண்டுபிடித்துவிடும் அளவுக்கு யானைகள் கில்லாடிகள். சிம்பன்சி குரங்குகள் கால்களால் பூமியை தட்டி தன் காதலிக்கு தகவல் தெரிவிக்குமாம்.
    இப்படி கத்தல் பார்ட்டிகள் ஒரே நேரத்தில் ஓராயிரம் தகவல்கள் அனுப்ப அமைதியான உரியினங்கள் எப்படி தங்கள் காதல் மொழியை பகிர்ந்து கொள்ள முடியும்? இறைவன் அதற்கொரு வழி இல்லாமலா விட்டிருப்பான். ஒரு சில அமைதியான விலங்குகள் தங்களின் உடல் வாசனையை தூது அனுப்பும். புனுகுப்பூனை, கஸ்தூரி மான், பட்டாம்பூச்சிகள் வரை சில உயிரினங்கள் வாசனையை வைத்து தான் வம்சத்தை வளர்கின்றனர்.
   அமைதியான இரவுகளை இரைச்சல் ஆக்குவதில் முக்கிய பங்கு தவளைக்கு உண்டு. தவளையின் குரலை வைத்தே அந்த தவளையின் வயது, அளவு பருமன் எல்லாவற்றையும் இணை தவளை அறிந்து கொள்ளும். விருப்பம் இருந்தால் பதில் குரல் தந்து விரும்பிப் போகும். இல்லையென்றல் விலகிப் போகும்.

மரணத்தின் மறுபக்கம்

மறுஜென்மம் உள்ளதா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மரணத்தின் மறுபக்கம் எப்படி இருக்கும் என்பதை பலரிடம் ஆராய்ந்து அது இப்படித்தான் இருக்கும் என்று தகவல் தருகிறார்கள் ஆய்வாளர்கள்.

    அதன்படி நான் இறந்துவிட்டேன் என்று உணர்வதுதான் முதல்நிலை. அதன்பின் பூமியில் இருந்து வெளியேறி வின் வெளியில் சுற்றிச்சுலழ்வது போல் உணர்தல் இரண்டாம் நிலை. உடலைவிட்டு விலகி வெளியே சென்று பார்ப்பது போன்று உணர்தல், உடலைச்சுற்றி டாக்டர்கள், உறவினர்கள் நிற்பதை பார்ப்பது மூன்றாம் நிலை.

  மிக அமைதியான, வெளிச்சம் குறைவான சுரங்கத்திற்குள் போய்க்கொண்டே இருப்பது போல உணர்தல் – இது நான்காம் நிலை. கண்ணை கூசவைக்கும் அதீதமான வெளிச்சத்தை நோக்கி மெதுவாக பறப்பது போன்று உணர்தல் 5-ம் நிலை. வெண்மையான அல்லது வெள்ளை நிற உடை அணிந்த ஆணா, பெண்ணா என்று அடையலாம் கண்டுபிகிக்க முடியாத உருவங்களை பார்ப்பது 6-ம் நிலை. ஒருவர் வாழ்வில் நடந்த எல்லா சம்பவங்களும் அவர் கண்முன்னால் வந்து செல்வது 7-வது நிலை.

     கீழே கிடக்கும் தன உடலுக்குள் நிலைய வேண்டும் என்ற ஆசையும், வேண்டாம் என்ற வெறுப்பும் மாறி, மாறி தோன்றுவதுதான் கடைசி ஆசை இந்த நிலையில் ஒரு சிலரால் மீண்டும் உடலுக்குள் நுழைந்துவிட முடியுமாம். இறந்ததாக நினைத்து சுடுகாடுவரை எடுத்துச் சென்று, பின்னர் நினைவு திரும்பிய சம்பவங்கள் எல்லாம் இதனுடைய தாக்கம் தான்.

    இந்த உணர்வுகள் பெற்ற எல்லோருமே மறுபடி உயிர் திரும்பும்போது எதோ மறுபிறவி அடைந்தது போன்று உணருவார்கள். செய்த தவறுகளுக்கு சம்மந்தப்பட்ட நபர்களிடம் மன்னிப்பும் கேட்டு கொள்கின்றனர். இதற்கு மேல் தவறுகள் எதுவும் செய்வதில்லை என்று உறுதியும் எடுத்துகொள்கின்றனர். ஆனால் மரணத்தின் மறுபக்கமாக உள்ள மீண்டும் உயிர்ப்பு என்பது, மரணத்தை விட மனித வாழ்வை உணர வைக்கிறது.

பழமையான புதிய மனித இனம்


     இதுவரை அறியப்படாத ஒரு புதிய மனித இனம் மண்ணில் உலவித் திரிந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சீனாவில் சில குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிரான புதைபடிவங்கள், அந்த அறியப்படாத மனித இனத்துக்குச் சிந்தமானதாக தொல்லுயிரியல் நிபுணர்களால் கருதப்படுகிறது.

   அந்த எலும்புகள், மிகப் பழங்கால மற்றும் நவீன மனிதனின் அம்சங்களைக் கொண்டிருப்பதும் விஞ்ஞானிகளைக்குழப்புகிறது.
இன்னொரு ஆச்சரியமூட்டும் அம்சம், இந்த எலும்புகள் 11 ஆயிரத்து 500 ஆண்டுகள் பலமையானவைதான். அதாவது நவீன மனிதன் பூமியில் காணப்பட்ட அதே காலகட்டத்தில் இந்தப் புதிரான மனிதன் இருந்திருக்கிறான். இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால் சீனாவின் ஆரம்பகால விவசாயிகள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் வசித்திருக்கிறார்கள்.

   இந்த புதிய புதைபடிவங்கள், இதுவரை அறியப்படாத மனித இனத்துக்குச் சொந்தமான இருக்காலம். அதாவது, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியுகம் முடிவதற்கு முன்புவரை வாழ்ந்த ஓர் இனம். என்பது, முன்னணி தொல்லுயிரியல் ஆய்வாளரான ஆஸ்திரேலியாவின் நியு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேரன் கர்நோவின் கருத்து.

    அவரே, “அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த, முன்பு அறியப்படாத, ஆரம்பகால நவீன மனிதர்களாக இருக்கலாம். அவர்கள் மரபனுரீதியகத் தொடராமல் போயிருக்கலாம்” என்கிறார் கர்னோ.

     தென்மேற்குச் சீனாவில் மேங்சி நகருக்கு அருகில் உள்ள மலுடோங் எனப்படும் சிவப்பு மான் குகைப் பகுதியில் உள்ள குவாரியில் இந்தப் புதைப் படிவங்களை சுரங்கத் தொழிலாளர்கள் கண்டு பிடித்தனர். 1989-ம் ஆண்டிலேயே அந்த மூன்று புதைபடிவங்களையும் அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். அனால் 2008-ம் ஆண்டில்தான் அவை தொடர்பான ஆய்வுகள் தொடங்கின.

     குறிப்பிட்ட புதைபடிவங்களுக்கு உரிய மனிதர்கள், மறைந்து போன சிவப்பு மானை உணவாக உட்கொண்டிருப்பதா, அவர்களை ‘சிவப்பு மானை உணவாக உட்கொண்டிருப்பதால், அவர்களை சிவப்பு மான் குகை மனிதர்கள் என்று ஆய்வரளர்கள் குறிப்பிடுகின்றனர்’

புதன், 30 நவம்பர், 2016

மீண்டும் உதயமாகப்போகும் சோவியத் ரஷ்யா

சோவியத் யூனியன் (USSR) என்ற பெயர் புதிய தலைமுறையினருக்கு சற்று அறிமுகமல்லாமல் போயிருக்கும் . கம்யூனிசத்தின் சித்தாந்தக் கடவுள் கார்ல் மார்க்ஸ் வடித்த' டாஸ் கபிடல் ' எனும் நூலின் 'தியரிக்கு' பிராக்டிகல் கொடுக்க 'லெனின் கிராட் ' எனும் இன்னொரு கடவுளால் உருவாக்கப் பட்ட தேசமே சோவியத் யூனியனாகும் .
1989 சோவியத்வரைபடம்
மிக்கைல் கொர்பசோவ் (Mikhail Gorbachev).

இருபதாம் நூற்றாண்டில் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய ஒன்று அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய 'Clod War' எனப்படும் பனிப்போர். அந்த பனிப்போர் உருவானதற்கு அடிப்படை காரணம் ரஷ்யாவில் லெனினுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஸ்டாலினும், அவருக்கு அடுத்து வரிசையாக வந்த சர்வாதிகாரிகளும் தங்கள் படை பலத்தை அசுர வேகத்தில் பெருக்கிக்கொண்டதொடு தாங்கள் நம்பிய கம்யூனிசத்தை உலக நாடுகளில் திணிக்க முற்பட்டதுதான். ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு மற்ற நாடுகள் வேண்டுமானால் அடிபணியலாம். ஆனால் கம்யூனிசத்தை வெறுத்த அமெரிக்காவோ ரஷ்யாவின் ஆயுத குவிப்பை எதிர்கொள்ள நேரடி ஆயுத போட்டா போட்டியில் இறங்கியது. அதன் விளைவுதான் 'Clod War' எனப்படும் பனிப்போர்.

பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அணு ஆயுத போர் நீளுமோ? மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ? என்று உலகம் அஞ்சிய நாட்கள் ஏராளம். ஆனால் 1917-ஆம் ஆண்டு உலகுக்கு முன்னுதாரணமான ஆட்சி வழங்கும் உறுதியோடு லெனின் மூலம் ரஷ்யாவில் வேருன்றிய கம்யூனிசம் 74 ஆண்டுகளுக்குப் பிறகு 1991-ஆம் ஆண்டில் அடியோடு வேருறந்து போகும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆம் அந்த ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்டது. கம்யூனிசம் சிதைந்து போனது பனிப்போரும் ஆவியாகி காற்றில் கரைந்து போனது. ஆயுத போட்டா போட்டியிலிருந்து விடுபட்ட உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. அதையெல்லாம் சாத்தியமாக்கியது தனி ஒரு மனிதனின் தெளிந்த பார்வையும், உள்நாட்டு பிரச்சினைகளுக்கு அடக்குமுறை மட்டுமே பதிலாகாது என்ற நம்பிக்கையும், உலகத்திற்கு தேவை பொருளாதார வளர்ச்சியே அன்றி ஆயுத வளர்ச்சி அல்ல என்ற தொலைநோக்கும்தான்.

1990-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள் சோவியத் யூனியனிலிருந்து தான் சுதந்திரம் பெற்று விட்டதாக தையரியமாக அறிவித்தது  Lithuania. கொர்பசோவ் அதை விரும்பாவிட்டாலும் படைபலத்தை பயன்படுத்தவில்லை. அந்த ஆண்டு இறுதிக்குள் சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த 15 குடியரசுகளும் சுதந்திர பிரகடனம் செய்தன. சோவியத் யூனியனின் சிதைவை வைத்த கண் வாங்காமல் உலகம் பார்த்துக் கொண்டிருக்க கொதிப்படைந்த சில பழமைவாத கம்யூனிஸ்டுகளும், இராணுவத் தளபதிகளும் 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு கொர்பசோவை கைது செய்தனர். ஆனால் சில தலைவர்களும் சோவியத் மக்களும் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த முயற்சி பிசுபிசுத்து போனது. அதன் பிறகு ரஷ்யாவில் அசுர வேகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. கம்யூனிஸ்டு ஆட்சி தடை செய்யப்பட்டது அதன் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஆண்டு இறுதிக்குள் அத்தனை சோவியத் குடியரசுகளும் தனித்தனியாக பிரிந்தன.
சோவியத் ரஷ்யா மீண்டும் உதயமாக மக்கள் ஆதரவு
பெரும்பாலான ரஷிய குடிமக்கள், சோவியத் ஒன்றியத்தின் சரிவு ஒரு கெட்ட விஷயம் என்றும் அதனைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் நம்புகின்றனர்,  இன்னும் பல மக்கள் சோசியலிச அமைப்பையும் சோவியத் அரசையும் மீட்டெடுப்பதை வரவேற்கத் தயாராக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

தனியார் ஆய்வு நிறுவனமான லெவாடா மையம் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி பற்றி எதிர்மறை உணர்வுகளை 56 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டுள்ளனர், 28 சதவீதம் பேர் தங்கள் உணர்வுகள் முற்றிலும் நேர்மறையாக உள்ளதெனவும், 16 சதவிகிதம் பேர் தெளிவான பதில் கொடுக்க இந்த கேள்வி மிகவும் சிக்கலாக இருப்பதாகவும் கூறினர்.

பதிலளித்தவர்களில் 51 சதவீத மக்கள் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத்  தவிர்த்திருக்க முடியும் எனவும்  33 சதவீதம் பேர் அதை தவிர்க்க முடியாதது எனவும் ஆராய்ச்சியாளர்களிடம் கூறினர். 17 சதவீதம் மக்கள் சிலர் பதில் சொல்ல முடியவில்லை என்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் பொது மக்களிடம் சோவியத் ஒன்றியத்தை மீட்டெடுப்பதை விரும்புவார்களா என்று கேட்டபோது, 58 சதவீதம் பேர் ஆமாம் என்றார்கள், 14 சதவீதம் மக்கள் அத்தகைய திட்டம் இந்நேரத்தில் மிகவும் யதார்த்தமானதாக கருதப்படுகிறது என்று கூறினர். 44 சதவீதம் மக்கள் சோவியத் ஒன்றியத்தின் மீட்டெடுப்பு விரும்பத்தக்கதாக இருந்தாலும் இயலாதது என்றனர். 31 சதவீத மக்கள் அந்த மாதிரி நிகழ்வுகள் நடந்தால் சந்தோஷமாக இருக்காது என்று கூறினர். 10 சதவீதம் மக்கள் கேள்விக்கு ஒரு எளிய பதிலை கொடுக்க முடியவில்லை.

ஏப்ரல் 2005 இல், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ரஷிய பாராளுமன்றத்தில் ஒரு பொது அறிவிப்பில், சோவியத் ரஷியாவின் சரிவைப் பற்றி கூறுகையில்,    “[கடந்த] நூற்றாண்டின் மிகப்பெரிய பூகோள அரசியல் பேரழிவு” என்றார். இந்த மேற்கோள் சர்வதேச செய்தி ஊடகங்களால் விநியோகிக்கப்பட்டு, சோசலிசத்திற்கு திரும்ப எண்ணும் கிரெம்ளினின் திட்டங்களை அது வெளிப்படுத்துகிறது என்று கூறினர். எனினும், ரஷிய தலைவர் மீண்டும் மீண்டும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவர் மக்களின் தினசரி வாழ்வில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைப் பற்றி  கூறியதாக விளக்கம் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டில், புட்டின் ஒரு ஆவணப்படத்திற்காக பேட்டி எடுக்கப்பட்ட போது சோவியத் ஒன்றியத்தை மீண்டும் கொண்டு வரும் திட்டம் ரஷ்யாவிற்கு இல்லை என்று நேரடியாக கூறி, ஆனால் இதை யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை என்றும் புகார் கூறினார்.

அனைவரும் விரும்பும் சோவியத்யூனியன் வரலாறு கீழே சுருக்கமாக தொகுத்து கொடுக்கப் பட்டுள்ளது… சற்றுப் பொறுமையுடன் படியுங்கள்..

சோவியத் புரட்சி என்றால் என்ன ?

உலகியல் வரலாற்றிலே ஜரோப்பிய நாகரிகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப் படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு நாடுகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் புரட்சிகள் இடம் பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையானது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மையாகும். அவற்றுள் வரலாற்றில் தடம்  பதித்த முக்கியமான புரட்சிகளுள் ஒன்றாக ரஷ்யாவில் ஏற்பட்ட ‘சோசலிசப் புரட்சி’ விளங்குகிறது.

லெனின்
ஜரோப்பிய வரலாற்றில் மிகவும் விசாலமான பரந்த நிலப்பரப்பினைக் கொண்ட தேசமாக விளங்குவது  ரஷ்யாவாகும்.  ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டு, நவம்பர் 07 ஆம் தேதி, ‘போர் நிறுத்தம், உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம்’ போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட புரட்சிதான் ‘சோசலிசப் புரட்சி’ என அழைக்கப் படுகிறது.

ரஷ்யாவில் பல ஆண்டுகளாக ஜார் மன்னர்கள் சர்வாதிகார ஆட்சியினை மேற்கொண்டு வந்தார்கள். வளங்களைச் சூறையாடி ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். மக்களையோ வறுமையில் தள்ளினார்கள். அவர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தார்கள்.

ஸ்டாலின்
அவர்கள் மக்களின் நாடித்துடிப்பை அறியாமல் தான்தோன்றித் தனமாக ஆட்சி நடத்தினார்கள். அதனால் மக்கள் மத்தியில் பஞ்சம், பசி, பட்டினி என்பன தலை விரித்தாடின. இந் நிலைமை மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தினை உண்டு பண்ணியது. அதனால் ஜார் மன்னர்களின் வரம்பு மீறிய அதிகாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடனும்,  பாட்டாளி வர்க்கத்தினர் தமது சுய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் 1917 ஆம் ஆண்டு, நவம்பர், 07 ஆம் தேதி லெனினுடைய தலைமையில் ரஷ்யாவில் வெடித்த புரட்சிதான் சோசலிசப் புரட்சியாகும். ரஷ்ய வரலாற்றில் முதன் முறையாக தொழிலாளி வர்க்கத்தினரின் அடக்கு முறைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்ததும், உலகியல் வரலாற்றில் தொழிலாளர்களின் முக்கியத்துவத்தினைப் படம் பிடித்துக் காட்டியதும் சோசலிசப் புரட்சிதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.


சோசலிஸ்டு நாடு:

உலக வல்லரசுகளில் ஒன்று ரஷியா. சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்டு கட்சியின் தந்தையான லெனின், ரஷியாவை உருவாக்கினார். கம்ïனிஸ்டு கொள்கைகளை அடிப்படையாக கொண்ட சோசலிஸ்டு நாடு (யு.எஸ்.எஸ்.ஆர்) என்று அழைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அண்டை நாடுகளைச்சேர்ந்த பல பகுதிகளையும், சில குட்டி நாடுகளையும் இணைத்துக் கொண்டது. இதனால் ரஷியா உலகின் மிகப் பெரிய நாடாக விளங்கியது. இதன் நிலப்பரப்பு ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் பரவி இருந்தது.

இந்த சோவியத் யூனியனில் கம்யூனிஸ்டு ஆட்சி நடைபெற்றது. இந்த நாட்டுக்குள் என்ன நடைபெறுகிறது என்பது வெளி உலகுக்கு தெரியவராது. இதனால் “இரும்பு திரை” நாடு என்று வர்ணிக்கப்பட்டது.

ரஷியக் கூட்டமைப்பில், ரஷியா, பைலோருஷியா, அர்மீனியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்தான், துர்க் மேனிஸ்தான், தஜிக்ஸ்தான், கஜகஸ்தான், கீர்க்கிஸ்தான், ஜார்ஜியா, உக்ரைன், மால் டோவியா, எஸ்டோனியா, லட்வியா, லிதுவேனியா ஆகிய 15 மாநிலங்கள் இருந்தன.

இதில் இடம் பெற்ற லிது வேனியா, லட்வியா, எஸ் டோனியா ஆகிய மாநிலங்கள் (இதற்கு பால்டிக் நாடுகள் என்று பெயர்) ஸ்டாலின் ஆட்சி காலத்தில் ரஷியாவுடன் இணைந்தன.


கார்பசேவின் அமைதியை நோக்கிய பயணமும் , சோவியத் ரஷியாவின் வீழ்ச்சியும்:



கார்பசேவ் ரஷியாவில் உள்ள பிரிவோல்னயா என்ற கிராமத்தில் 1931_ம் ஆண்டு மார்ச் 2_ந்தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். மாணவ பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்ட அவர் 21_ம் வயதில் கம்ïனிஸ்டு கட்சியில் உறுப்பினரானார். பிறகு கட்சியின் முக்கிய பொறுப்புகளை ஏற்றார்.

ரஷிய அதிபராக 1984_ம் ஆண்டு கார்பசேவ் பதவி ஏற்றார். அவர் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கம்யூனிஸ்டு ஆட்சியின் அதிகாரப்பிடியை தளர்த்தியதோடு, உலக அமைதி முயற்சியிலும் இறங்கினார். அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தார். இதனால் சமாதானத்துக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்தது. உலக நாடுகளில் அவர் புகழ் ஓங்கியது. 6 ஆண்டுகள் சுமுகமாக நகர்ந்தன.

ஆனால் எதிர்பாராத சூழ்நிலையால் ரஷியாவில் உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டது. உள்நாட்டில் அவருக்கு எதிர்ப்பு கிளம்ப தொடங்கியது. 1991ம் ஆண்டு மத்தியில் அது உச்சக் கட்டத்தை அடைந்தது.

கார்பசேவ் ஜனாதிபதி ஆகும் வரை இருந்த பல்வேறு அதிபர்களிடமும் அதிகாரம் குவிந்து இருந்ததாலும், உலகின் மிகப் பெரிய வல்லரசாக ரஷியா திகழ்ந்ததாலும், இணைந்து இருந்த குட்டி நாடுகள் பிரிந்து போக ஆசைப்படாமல் இருந்தன.

கார்பசேவ் அதிபரானது முதல் அவரது அமைதிக் கொள்கையும், உணவுத்தட்டுப்பாடும் பல மாநிலங்களுக்கு பிரிந்து போகும் எண்ணத்தையும், தைரியத்தையும் கொடுத்தன. பால்டிக் நாடுகள் எனப்படும் லிதுவேனியா, லட்வியா, எஸ்டோனியா ஆகிய மாநிலங்கள் முதல் சுதந்திர குரலை எழுப்பின. அதன் பிறகு ஜார்ஜியாவும் சுதந்திரம் கோரியது.

சுதந்திரம் கோரி போர்க்கொடி உயர்த்திய மாநிலங்கள் இந்த 4 மாநிலங்களும் சுதந்திரப் பிரகடனம் செய்தன. இவற்றுக்கு தூதரக அங்கீகாரம் வழங்க ஜப்பான், பிரான்சு, இங்கிலாந்து, போலந்து, நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் முன்வந்தன.

பால்டிக் நாடுகளுக்கு விரைவில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று ரஷியாவை அமெரிக்கா வலியுறுத்தியது. சில மாநிலங்கள் சுதந்திர பிரகடனம் செய்தது கார்ப சேவுக்கு தலைவலியைக் கொடுத்தது. எனவே, அதி காரங்களை பரவலாக்கி மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

கம்யூனிஸ்டு கொள்கையில் தீவிரம் கொண்ட முன்னணி தலைவர்கள் சிலருக்கு இது பிடிக்கவில்லை. கார்பசேவினால் பதவியில் அமர்த்தப்பட்டவர்களே அவருக்கு எதிராக ஆட்சியை கவிழ்க்க முயன்றனர். திடீரென்று கார்பசேவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி செய்தனர்.

கம்யூனிஸ்டு தீவிரவாதிகள்:

கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் முயற்சியை ரஷிய மாநில ஜனாதிபதியாக இருந்த எல்ட்சின் எதிர்த்து நின்றார். கம்யூனிஸ்டு ஆட்சி முறையால் ஏமாற்றம் அடைந்து இருந்த மக்கள் கம்யூனிஸ்டு தீவிரவாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்க ராணுவம் மறுத்து விட்டது. இதனால் கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் முயற்சி தோற்றுப்போனது. கார்பசேவ் விடுவிக்கப்பட்டார்.

புரட்சியை நடத்திய 8 முன்னணி தலைவர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. 6 பேர் கைது செய்யப்பட்டார்கள். புரட்சி தோல்வி அடைந்ததால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். புதிய பிரதமர் மற்றும் மந்திரிகளை கார்பசேவ் நியமித்தார். அவருக்கு கம்யூனிஸ்டு உயர்மட்ட குழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் கார்பசேவ்வின் தலைமை பலவீனம் அடைந்தது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆர் மீனியா, மால்டோவியா, பைலோருஷியா, உஸ்பெக்கிஸ் தான், உக்ரைன் ஆகிய 5 மாநிலங்களும் சுதந்திர பிரகடனம் வெளியிட்டன. சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்ட மாநிலத் தலைவர்களின் மாநாடு, கஜகஸ்தான் மாநில தலைநகரான “அல்மா அடா”வில் நடந்தது.

மொத்தம் உள்ள 15 மாநிலங்களில் பால்டிக் பகுதியைச்சேர்ந்த லிதுவேனியா, எஸ்டோனியா, லட்வியா ஆகியவை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ரஷியா, உக்ரைன், கஜகஸ் தான், அஜர்பைஜான், அர் மினியா உள்பட 11 மாநிலங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த 11 மாநிலத் தலைவர்களும் கூடி, தங்கள் மாநிலங்கள் சுதந்திர நாடுகள் என்றும், சோவியத் யூனியன் மறைத்து விட்டது என்றும் பிரகடனப்படுத்தினர். “காமன்வெல்த்” என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்திக்கொள்வது என்றும் தீர்மானித்தனர். இந்த 11 மாநில தலைவர்கள் சார்பில் எல்ட்சின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“புதிய கூட்டமைப்பில் கார்பசேவுக்கு இடம் கிடையாது. அவர் பதவி விலக வேண்டியதுதான். சாகும் வரை பதவியில் இருப்பது என்ற மரபு 1920ல் தொடங்கியது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்புகிறோம்.

சோவியத் யூனியனுக்கு சொந்தமான அணு ஆயுதங்களும், அணு உலைகளும் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை 11 நாட்டுத் தலைவர்களும் கூட்டாக கட்டுப்படுத்துவார்கள். காமன்வெல்த் கூட்ட மைப்பின் உயர் தலைமை பீடமாக 11 நாட்டு ஜனாதிபதிகளின் குழு இருக்கும். சம வாய்ப்பு, சம அந்தஸ்து அளிக்கப்படும். ஐ.நா. பாதுகாப்பு சபையில் சோவியத் ïனியனுக்குப் பதிலாக ரஷியா இடம் பெறும்.”

இவ்வாறு எல்ட்சின் கூறினார்.

இதனால் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது. அதன் அதிபரான கார்பசேவும் தனது பதவியை டிசம்பர் 25_ந்தேதி இரவு ராஜினாமா செய்தார். டெலிவிஷன் மூலம் கார்பசேவ் தனது ராஜினாமாவை அறிவித்தார். “நான் ராஜினாமா செய்வது என்ற தீர்மானத்துக்கு வந்தது தவிர்க்க முடியாதது” என்று கூறினார். புதிய கூட்டமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

சோவியத் யூனியனில் இருக்கும் 30 ஆயிரம் அணு ஆயுதங்களின் “கட்டுப்பாடு” அதுவரை கார்பசேவிடம் இருந்தது. அவர் பதவி விலகியதும் “சகட்டுப்பாட்டை ரஷிய ஜனாதிபதி எல்ட்சினிடம் ஒப்படைத்தார்.

ராஜினாமா செய்த கார்பசேவுக்கு மாதா மாதம் ரூ.1 லட்சம் பென்ஷனாக வழங்கப்படும் என்றும், அவர் வசிப்பதற்கு அரசாங்க வீடும், கோடை காலத்தில் ஓய்வு எடுப்பதற்கு குளிர்பிரதேசத்தில் ஒரு வீடும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.







தற்போதைய ரஷ்யாவும் அதிபர் விளாடிமிர் புட்டின்…⤥

தன்னுடைய எல்லையைப் பல்வேறு திசைகளில் அதிகரித்துக் கொள்ள ரஷ்யா முயற்சி செய்கிறது. முதலில் ஜார்ஜியா, அடுத்ததாக கிரிமியா இப்போது கிழக்கு உக்ரைன். உக்ரைனிலேயே ரஷ்ய ஆதரவாளர்கள் கணிசமாக இருப்பதால் பிரச்சினை இப்போ தைக்குத் தீரப் போவதில்லை. இப்போது சிரியாவிலும் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் ரஷ்ய டாங்கிகளை போல...!!!

தொடரும்...

திங்கள், 28 நவம்பர், 2016

அங்கோர் வாட் கோயில் - தமிழர்களின் பொக்கிஷம்

இதை கட்டியது ஒரு தமிழ்  மன்னன்
இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்.
அங்கோர் வாட் கோயில்  உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ளது. உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ்  மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார்.

இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றாது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்.

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் துவங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்களில் நிறைவு பெற்றது. கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார்.
பின்பு ஆறாம் “ஜெயவர்மன்” ஆட்சிக்கு வந்த பிறகு “புத்த” கோயிலாக மாறிய இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கிவருகிறது.

அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது.

எந்த ஒரு காமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது. மேலே உள்ள புகைப்படமானது பூமியில் இருந்து 1000 அடி மேலே வானத்தில் இருந்து எடுக்கப்பட்டது. 


ந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய
தேசியக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐ பொறித்துள்ளது. 
அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது. இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேசியக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐ பொறித்துள்ளது. எந்த ஒரு காமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது. இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!


இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது
போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 27 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவுடன் கம்போடியாவுக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. காம்புஜராஜா என்ற இந்திய அரசன் கம்போடியா சென்று, மேரோ என்ற பெண்னை மணந்து, இருவரும் இணைந்து அரசாட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. காம்புஜராஜா என்ற பெயரிலிருந்து 'கம்பூசியா' (kampuchea) என்றாகி தற்போது கம்போடியா ஆகி இருக்கிறது. இவர்களின் வழிவந்தவர்களே "கெமிர்" என்ற அரச குடும்பத்தினர் என்று கூறப்படுகிறது.

கோயிலைச் சுற்றி 5 கிமீ சுற்றளவுள்ள அகழி உள்ளது. இதன் ஆழம் 13 அடி. பெரிய கோயிலின் அடித்தளத்தைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர் மிகவும் உயரமாகவோ, குறைந்தோ போகாமல் பாதுகாக்கவும் இது உதவுகிறது. 53 மில்லியன் கன அடி மணலைத் தோண்டி எடுத்து, பல ஆயிரம் மக்கள் உழைப்பினால் இது தோண்டப்பட்டிருக்கிறது. இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.   

கவுண்டின்யா என்ற அரசன், தான் கண்ட கனவின் படி கம்போடியா சென்று, சோமா என்ற பெண்ணை மணந்து, அரசாட்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.அது எப்படியோ தெரியவில்லை. ஆனால் இந்தியாவிலிருந்து இந்து மதம், இந்துக்கடவுளர்கள், இந்தியக் கலைகள், புத்த மதம் எல்லாம் கம்போடியா சென்றிருக்கின்றன. இந்தியா சீனாவை இணைத்த சில்க் ரூட்டில் கம்போடியா இருந்ததால் நம் நாட்டுடன் வாணிகம் இருந்திருக்கிறது. வணிகர்கள் மூலமும் இந்து மதம், புத்த மதம், இந்தியக்கலைகள் அங்கு சென்றிருக்கின்றன.
கி பி 802ல் இரண்டாம் ஜெயவர்மன் என்ற அரசன் தாய்லாந்து, பர்மா, மற்ற நாடுகளின் பல பகுதிகளை வென்று, வங்கக் கடல் வரை "கெமிர்" என்ற பலமிக்க அரசை நிறுவியிருக்கிறான். இந்தக் கெமிர் அரசு ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை சிறப்புடன் இருந்திருக்கிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

ஜெயவர்மன், சூரிய வர்மன், ராஜேந்திர வர்மன், உதயாதித்ய வர்மன் போன்ற அரசர்களின் பெயர்கள், நம் தமிழகத்து அரசர்கள் பெயர் போலவே இருக்கின்றன. சில இடங்களில் உள்ள கல்வெட்டுக்களின் எழுத்துக்கள் பல்லவர்களின் எழுத்துக்கள் போன்று இருக்கின்றன என்று கூறப்படுகிறது. நம் மன்னர்கள் குறிப்பாக ராஜேந்திர சோழன் படையெடுத்து வென்றபோது கட்டினாரா என்று தெரியவில்லை. இவையெல்லாம் அங்கோர் வாட் பற்றி வலைத்தளத்தில் கண்டறிந்த செய்திகள். இந்தச் செய்திகள் எல்லாம் மனதில் உந்த, உலகின் மிகப்பெரிய இந்துக் கோயிலைக் காண மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன்.

சுமார் 500 ஏக்கர் பரப்பளவுள்ள மிகப் பெரிய கோயில். 1113_1160க்குள் இரண்டாம் சூரியவர்மன் என்ற கெமிர் மன்னரால் அங்கோர் வாட் நகரமும், விஷ்ணுவுக்காக மிகப் பெரிய இந்தக் கோயிலும் கட்டப்பட்ட பொழுது அந்தப் பகுதி மிகச் செழிப்புடன் இருந்திருக்க வேண்டும். மதச்சார்புடன் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களுள் உலகில் இதுவே மிகப் பெரியது. அந்நகரத்தில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வாழ்ந்தனர். தொழிற் புரட்சிக்கு முன் இருந்த நகரங்களில் இதுவே மிகப் பெரியது.
அங்கோர் வாட் என்ற பெயர் "nagara vata" என்ற சமஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்திருக்கிறது. இதன் பொருள் கோயில் நகரம் என்பதாகும்.

முற்றிலும் கற்களால் கட்டப்பட்டு, நம் சோழர் காலக் கோயிலைப் போல இருந்த அக்கோயில் மேற்கு பார்த்த வண்ணம் இருக்கிறது. சூரிய உதயத்தின் போது சூரியன் கோயிலின் பின் எழுவது பார்க்கப் பரவசமாயிருக்கும் காட்சி என்று கூறப்பட்டதால் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஆனால் அன்று மேகமூட்டமாய் இருந்ததால் சூரிய உதயம் காண முடியவில்லை. சற்று மேலே சென்றபின் தான் எட்டிப் பார்த்தான். 

அகழிக்கு முன்னால் பாதுகாப்பிற்காக சிங்கங்களின் சிலைகள் உள்ளன. ஐந்து தலைநாகமும் அதன் நீளமான உடலும் கைப்பிடிச் சுவராக அமைக்கப்பட்டுள்ளன. அகழியைத் தாண்டி, உள்ளே சற்று தூரம் சென்றபின் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.
தூரத்தில் இருந்து பார்த்தால் தஞ்சைக் கோயில் சுற்று மண்டபம் போல் தூண்களுடன் தெரிகிறது. உயரமான பீடத்தின் மேல் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் உள்ள கோயில் சுற்றுச்சுவர் முழுவதும் நீளமாக, பெரியளவில் இராமாயண, மகாபாரத இதிகாசக் காட்சிகள், பாற்கடல் கடைவது போன்றவை ஓவியம் போன்று, சிறிதளவு புடைத்த சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. போர்களத்தில விபீஷணன், லட்சுமணனுடன் இரரமன், இராவணனுடன் போருக்கு நிற்பது, அனுமன் சஞ்சீவி மலையுடன் வருவது எல்லாம் தெளிவாகத் தெரிந்தது. ஒவ்வொன்றையும் நின்று நிதானமாகப் பார்க்க நேரம் தான் இல்லை.


மாபெரும் கோயில் அது. அடுத்த தளத்தில் நூலகம் என்று சில கல்கட்டடங்கள் காட்டப்படுகினறன. ஆங்காங்கே அப்சரா சிற்பங்கள், அலங்காரக் கற்பலகணிகள் இருக்கின்றன. சுமார் 1800 அப்சரா சிற்பங்களும், அவற்றில் சுமார் 300விதமான தலை அலங்காரங்கள் இருக்கின்றனவாம். சில இடங்களில புத்தர் சிற்பங்கள் வைக்கப்பட்டு தற்பொழுதும் வழிபாடு நடந்து வருகிறது. இரண்டாம் தளத்தைக் கடந்து நடுப்பகுதிக்கு வந்தால் அங்கு தான் 200 அடிக்கு மேல் உயரம் உள்ள நடுக் கோபுரமும், அதைச் சுற்றி 4 சிறிய கோபுரங்களும் உள்ளன. தஞ்சைக் கோயில் விமானம் "தட்சிண மேரு" என்று கூறப்படுவதைப் போல் இதுவும் "மேரு மலை" - கடவுளின் இருப்பிடம் என்று கூறப்படுகிறது. இங்கிருந்து கடவுளும், அவரது பிரதிநிதியாக அரசர், தேவராஜாவாக இருந்து ஆட்சி நடத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்த மேல் தளத்திற்கு செங்குத்தான படிகள் ஏறிச் செல்ல வேண்டும். அங்கு ஏறிச் சென்று சுற்றிப் பார்த்தால் கோவிலும் அதைச் சுற்றிலுமுள்ள மரங்களும் மிக அழகாக இருக்கிறது. இங்கு பெரிய கற் கோபுரத்தின் அடியில் மூலவராக விஷ்ணு எட்டு கரங்களுடன் இருக்கிறார். காஞ்சிக் கோயில்களிலும் விஷ்ணுவுக்கு எட்டு கரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவின் திசை மேற்கு என்பதால் மேற்கு நோக்கிக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கோயில் மேற்கு நோக்கி இருப்பதை வைத்து இக்கோயில் மன்னன் இறந்த பின், அவனது அஸ்தியை வைக்கும் இடமாகவும் கட்டப்பட்டிருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

கோயில் முழுவதும் கற்களைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருக்கிறது. உட்பகுதி "லேட்டரைட் "(laterite) எனப்படும் எரிமலைக் கற்களாலும், மேற்பகுதி செதுக்குவதற்கு வசதியாக மணற்கற்களாலும்(sandstones) கட்டப்பட்டிருக்கிறது. அங்கிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள குலன் (kulen hills) மலையிலிருந்து நதி வழியாகக் கற்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.
பெரும்பாலான கற்களில் துளைகள் காணப்படுகின்றன. அவற்றில் மரக் கொம்புகள் செருகி தூக்கியோ இழுத்தோ உபயோகித்திருக்கிறார்கள். கற்களைச் சேர்க்க சாந்தோ, மண்ணோ பூசவில்லை. ஒன்றை ஒன்று தேய்த்தே நேர்த்தியாக இடைவெளி இல்லாமல் சேர்த்திருக்கிறார்கள். நவீன கருவிகள் இல்லாமல் உடல் உழைப்பை மட்டுமே பயன்படுத்தி இவ்வாறெல்லாம் செய்தது விந்தை தான்.

கோயிலின் கூரைப்பகுதி, கோபுரப்பகுதியில் கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, உட்கூடு இருப்பது போல் அமைத்திருக்கிறார்கள். தஞ்சை மற்றும் சோழர் கால விமானங்கள், கோபுரங்கள்
கற்களால் உட்கூடு உள்ளபடி தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது கோபுரத்தின் கீழே இருந்து அண்ணாந்து பார்த்தால் மேற்பகுதி வரை தெரியும்.
முதலில் விஷ்ணு கோயிலாகக் கட்டப்பட்டது, மன்னர்கள் புத்த மதத்திற்கு மாறிய போது கோயிலும் மஹாயான புத்தக் கோயிலாக மாற்றப் பட்டது. சைவத்திற்குரிய லிங்கம், ஆவுடையாரும் சில இடங்களில் காணப் படுகின்றன. பின் 14ம் நூற்றாண்டில் இலஙகையிலிருந்து வந்த தேரவாத புத்த மதத்தைச் (theravada buddhism)சார்ந்த கோயிலாகத் தற்போது இருக்கிறது.

9ம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை சிறப்புடன் இந்தப் பகுதி இருந்து வந்திருக்கிறது. அதன் பின் தாய்லாந்துடன் போர் மற்றும் பல காரணங்களால் தலைநகர் நாம்பென்னிற்கு மாற்றப் பட்டிருக்கிறது. அதன்பின் அங்கோர்வாட் நகரின் முக்கியத்துவம் குறைந்து உள்ளூர் மக்கள் மட்டுமே அறிந்த இடமாகக் கோயில் மாறியிருக்கிறது. 1900களில் பிரெஞ்சுக்காரர்கள் இக் கலைப் பொக்கிஷத்தைக் கண்டறிந்து, உலகிற்கு அறிவிக்கும் வரையில் மரங்கள் வளர்ந்து, சிதைவுற்ற நிலையில் இருந்திருக்கிறது. 

பிரெஞ்சுக்காரர்கள் கோயிலை பழைய பாணி மாறாமல் சீரமைத்து இருக்கிறார்கள். வியட்நாம் போரையும் உள்நாட்டுப் போரையும் தாங்கி கோயில் நிமிர்ந்து நிற்கிறது. இப்பொழுதும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2016 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!
          

சீனா - வியட்நாம் - யுத்த திட்டங்கள்

இணையத்தில் வெளியாகும் "யுத்த திட்டங்கள்" பற்றிய வாக்குவாதம் சீனா-வியட்நாம் பதட்டங்களை விளக்கமாக கூறுகிறது. (Row over Internet "war plans" highlights China-Vietnam tensions)

வியட்நாமுடனான ஒரு யுத்தம் குறித்து சீனாவில் நடக்கும் இணைய கலந்துரையாடல்களுக்கு ஹனாய் (வியட்நாமின் தலைநகர்) உத்தியோகபூர்வமாக கண்டனம் தெரிவித்த பின்னர், கடந்த இரண்டு வாரங்களில் வியட்நாம் மற்றும் சீனா இடையிலான உறவுகள் மோசமடைந்தன. சீன தேசியவாத வெறியர்களின் ஒரு சிறு அடுக்குகளால் மட்டுமே இந்த கலந்துரையாடல்கள் வலைத் தளத்தில் பதிக்கப்பட்டிருந்த போதினும், தெற்கு சீன கடல் பிராந்தியம் உட்பட, மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களில் முரண்பாடு கொண்டுள்ள இந்த இரு நாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களை இந்நிகழ்ச்சி அடிக்கோடிடுகிறது.


வியட்நாம் சீனா சிக்கலுக்குரிய எல்லை பகுதிகள்
செப்டம்பர் 5ல், South China Morning Post-TM வெளியான தகவலின்படி, ஆகஸ்டிலிருந்து சீன வலைத் தளங்களில் வரும் "யுத்த திட்டங்கள்" குறித்து விவரங்கள் அளிக்க மூத்த சீன இராஜாங்க பிரதிநிதிகளுக்கு ஹனாய் இருமுறை அழைப்பு ஆணை விடுத்தது. ஐந்து நாட்களுக்கான ஏவுகணை தாக்குதல்களுடன் தொடங்கி ஒரு முழு வீச்சிலான வியட்நாம்மீதான தாக்குதலின் சாத்தியக்கூறுகளை இந்த யுத்த திட்டங்கள் வரையறுத்திருந்தன. கடற்படை முற்றுகை மற்றும் வியட்நாமின் தொலைதொடர்பு சேவை முடக்கம் ஆகியவற்றை தொடர்ந்து, சீனாவின் யூன்னான் மற்றும் கியாங்சி மாகாணங்களிலிருந்தும் மற்றும் தெற்கு சீன கடலில் இருந்தும் 310,000 சீன துருப்புகள் வடக்கு வியட்நாமிற்குள் நுழையலாம் என்று இந்த திட்டங்கள் குறிப்பிட்டன.

சீனாவின் ஒரு முக்கிய செய்தி வலைத்தளமான Sina.com மற்றும் பல பிற தளங்களிலும் இந்த பதிவுகள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று பின்வருமாறு குறிப்பிட்டது: "சீன மாகாணங்களின் பாதுகாப்பிற்கு வியட்நாம் ஒரு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் சீனாவின் அமைதியான முன்னேற்றத்திற்கும் வியட்நாம் ஒரு தடையாக உள்ளது... தென்கிழக்கு ஆசியா முழுமைக்கும் வியட்நாம் ஒரு மூலோபாய மையமாக உள்ளதால், தென்கிழக்கு ஆசியா முழுமையும் மீண்டும் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டுமானால், முதலில் வியட்நாம் கைப்பற்றப்பட வேண்டும்."

இந்த தீவிர தேசியவாதிகள் பெய்ஜிங்கின் கொள்கை வடிவாக்கத்தில் நேரடியாக எவ்வித செல்வாக்கையும் பெற்றிருக்கவில்லை என்ற போதினும், உண்மையில், சீனாவின் கடுமையான இணைய போலீஸின் எவ்வித தலையீடும் இல்லாமல் இதுபோன்ற பொது விவாதங்கள் பதிப்பிக்கப்பட்டது, உத்தியோகப்பூர்வ அனுமதியின் ஒரு கோணத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது. சீனா ஒரு முக்கிய சக்தியாக வளர்வதில் தான், தங்களின் எதிர்காலம் உள்ளடங்கி இருப்பதாக காணும் சீனாவின் நடுத்தர வர்க்கங்களிடையே ஆதரவை பெறுவதற்கான ஒரு புதிய அடித்தளத்திற்காக, பெய்ஜிங் நினைவுப்பூர்வமாக தேசியவாதத்தை ஊக்குவித்து வருகிறது.

பெய்ஜிங் மற்றும் ஹனாய் இரண்டுமே உடனடியாக அந்த பிரச்சனையைத் தணிவிக்க முயற்சித்தன. வியட்நாமின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லீ டங் கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பாதிக்கும் எதிர்மறை கட்டுரைகளைத் தடுக்க சீனா உறுதியளித்திருப்பதாக அறிவித்தார். அதே சமயம், சீனாவின் ஒரு அரசாங்க செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த பதிவுகள், மக்களில் தொல்லை தரும் ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள், "இது எந்த வகையிலும் சீனாவின் நிலைப்பாட்டை குறிப்பவையல்ல"என்றார்.

South China Morning Post இதழிடம் சீனாவின் ஓர் இராணுவ நிபுணர் Song Xiaojunபேசும் போது, "யுத்த திட்டங்களை" ஒரு "பகடியாக" கூறி நிராகரித்தார். எவ்வாறிருப்பினும், தீங்கு விளைவிக்க கூடிய சதித்திட்ட கோட்பாடுகளைத் தவிர்ப்பதற்காக பொதுக்கருத்துக்களை நெறிப்படுத்த சீன அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த போதினும், வியட்நாமுடன் பதட்டங்கள் நிலவுவதாக Song குறிப்பிட்டார்."சீனா மற்றும் வியட்நாம் இரண்டும் ஒரே மாதிரியான அரசியல் முறைகளை கொண்டுள்ளன. எனவே இரண்டு நாடுகளுக்கும் பொது எதிரியான அமெரிக்காவை எதிர்க்க இவை ஒன்றுபட வேண்டும். வளர்ந்து வரும் சீனாவிற்கு எதிராக வியட்நாமைத் திருப்ப தெளிவாக இதில் அமெரிக்கா விளையாடி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

சீனா மீதான அமெரிக்காவின் மூலோபாய சுற்றிவளைப்புகளின் ஒரு பகுதியாக, அது வியட்நாமுடன் உறவுகளை வலுப்படுத்தி வருகிறது என்ற அரசாங்க வட்டாரங்களின் பரந்த கவலைகளை தான் Songன் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. தெற்கு சீன கடலிலுள்ள ஸ்ப்ராட்லி மற்றும் பாராசெல் தீவுகள் மீது பதட்டங்கள் அதிகரித்து வருக்கின்றன. ஜூலையில், தெற்கு சீன கடலின் பிரச்சனைக்குரிய கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை அபிவிருத்தி செய்வதற்கு அமெரிக்க எண்ணெய் நிறுவனமான Exxon Mobil உடன் ஹனோய் செய்து கொண்ட ஓர் உடன்படிக்கைக்கு பெய்ஜிங் கண்டனம் தெரிவித்தது. எண்ணெய் வயல் மற்றும் குழாய் அமைப்பு திட்டங்களுக்கு ஒப்பந்த புள்ளிகளை அளிக்குமாறு மேற்கத்திய மற்றும் ஆசிய எண்ணெய் பெருநிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, ஸ்ப்ராட்லி தீவுகள் மீதான இறையாண்மையை வியாட்நாமின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவித்தது.

பெய்ஜிங்கைப் போலவே, ஹனோயும் நாட்டுப்பற்றை ஊக்குவித்து வருகிறது. ஸ்பார்ட்லி மற்றும் பாராசெல் தீவுகளை சீனாவின் ஹைனன் மாகாணத்துடன் பெய்ஜிங் உத்தியோகப்பூர்வமாக இணைத்த பின்னர், கடந்த டிசம்பரில் நூற்றுக்கணக்கான வியட்நாம் மாணவர்கள் சீன எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினார்கள். ஹனாய்,"சீன ஆக்கிரமிப்புக்கு" எதிராய் நிற்க வேண்டும் என்று போராட்டகாரர்கள் வற்புறுத்தினார்கள்.

கசப்பான வரலாறு

இந்த இரண்டு ஸ்ராலினிச ஆட்சிகளுக்கு இடையிலான உறவுகளின் வரலாறானது குறிப்பிடத்தக்க வேதனைகளின் ஒன்றாக விளங்குகிறது.
1960களின் தொடக்கம் வரை, சீன மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்டு கட்சிகள் உத்தியோகப்பூர்வமாக சோவியத் அணிக்குள் இருந்தன. எவ்வாறிருப்பினும், 1953ல் பிரெஞ்சு முன்மொழிந்த வியட்நாமிய பிரிவினையை ஏற்க ஹோ சி- மின்- ஐ வற்புறுத்தி, ஏகாதிபத்திய சக்திகளுடனான தங்கள் பேரங்களுக்கு, மாஸ்கோவை போலவே, பெய்ஜிங்கும் வியட்நாமுக்குள் காலனித்துவ எதிர்ப்பு போராட்டத்தை பகடைக்காயாக நடத்திக் கொண்டது. இந்த உடன்படிக்கை, ஓர் ஊழல்மிக்க தெற்கு வியட்நாம் சர்வாதிகாரத்திற்கு ஆதரவளிப்பதில் பிரான்ஸிற்கு பதிலாக அமெரிக்காவிற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது; இறுதியில், இது 1965ல் நேரடியாக அமெரிக்க இராணுவத்தின் தலையீட்டிற்கும், மில்லியன் கணக்கான வியட்நாமியர்களின் மரணத்திற்கும் இட்டு சென்றது.
1960களில் ஏற்பட்ட சீன-சோவியத் பிளவில், மாஸ்கோ பெய்ஜிங்கிற்கு எதிராக வடக்கு வியட்நாம் பக்கம் நின்றது. சோவியத் ஒன்றியத்துடனான தீவிரமடைந்த பதட்டங்களும், சொந்த நாட்டில் இருந்த பொருளாதார பிரச்சனைகளும், 1972ல் மீண்டும் அமெரிக்காவுடனான உறவை ஏற்படுத்த மாவோ சே துங்கை இட்டு சென்றது. நிக்சன் நிர்வாகத்தை பொறுத்தவரை, வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தின் தோல்வியினால் ஆசியாவிலிருந்து வெளியேறுவதில் சீனாவின் ஆதரவைத் தக்கவைப்பது தான் இந்த உடன்படிக்கை ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக இருந்தது.
1979 பெப்ரவரியில், கம்போடியாவில் பெய்ஜிங் ஆதரவான பொல்-போட் ஆட்சியை வீழ்த்தியதற்கு பிரதிபலிப்பாக சீனா வியட்நாம் மீது யுத்தம் தொடுத்தது. 200,000த்திற்கும் மேலான சீன துருப்புகள் வடக்கு வியட்நாம் மீது தாக்குதல் நடத்தின. கடுமையான யுத்தத்திற்கு இட்டு சென்ற இந்நடவடிக்கையில், ஆயிரக்கணக்கான வீரர்களும், பல வியட்நாம் குடிமக்களும் கூட உயிரிழந்தனர். Deng Xiaoping தமது வாஷிங்டன் விஜயத்திற்கு சில வாரங்களுக்கு பின்னர், அவர் அறிவித்த "சந்தை சீர்திருத்தத்தை" தொடங்கிய வெறும் இரண்டு மாதங்களில் பெய்ஜிங் இந்த யுத்தத்தை தொடங்கியது.
சீன துருப்புகளைத் திரும்ப பெறுவதையும் உள்ளடக்கிய பொசுக்கிய புவி கொள்கையானது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஆத்திரத்தை தான் அதிகப்படுத்தியது. உலகின் மிகப்பெரிய போர் இல்லாத காலத்து நிரந்தர சேனைகளில் ஒன்றை வியட்நாம் தொடர்ந்து பராமரித்து வருவதற்கு, சீனா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் தான் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. 1980களில் தொடர்ந்து வந்த பரவலான சிறுசிறு மோதல்கள், ஹனாயின் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் சிதைவிற்கு பின்னர் படிப்படியாக குறைந்து போயின.

வியட்நாமின் தொழிலாளர்களும், மாணவர்களும் கூட இந்த உதாரணத்தை பின்பற்றலாம் என்ற அச்சம் சிறிதுமின்றி, 1989ல், தியனன்மென் (Tiananmen)சதுக்கத்தில் போராட்டக்காரர்களை கொன்று குவித்த பெய்ஜிங்கின் படுகொலைக்கு உலகளவில் வெளிப்படையாக ஆதரவளித்த சில அரசாங்கங்களில் ஹனோயும் ஒன்றாக இருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் அதிகரித்து வரும் போதினும், பதட்டங்கள் தொடர்ந்து நிலவுகின்றன. தற்போது சீனா ஒரு புதிய பொருளாதார சக்தியாக பரிணமித்துள்ளதால், ஸ்பாட்லி தீவுகள் மீது தொடர்ந்து வரும் வியட்நாமின் கட்டுப்பாடுகளை ஒரு மூலோபாய தடையாக பெய்ஜிங்கில் ஆளும் மேற்தட்டின் பிரிவுகள் காணுகின்றன. இராணுவத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் சீனாவின் முன்னணி பாதுகாப்புத்துறை இதழான, Ordnance Knowledge, ஜனவரியில், தெற்கு சீன கடலில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளுக்காக சீனாவின் "ஆழ்கடல்" கப்பற்படையின் திறனை குற்றஞ்சாட்டியது.
ஸ்பார்ட்லி குழுவிலுள்ள 7 தீவுகளை சீனா கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது, அதிகபட்சமாக 29 தீவுகளை கொண்டுள்ள வியட்நாம், அவற்றை பாதுகாக்க சுமார் 2,000 துருப்புகளை நிறுத்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் 8 தீவுகளையும், மலேசியா 5 தீவுகளையும் மற்றும் தாய்வான் 1 தீவையும் அவற்றின் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன. புரூனே மற்றும் இந்தோனேஷியா இரண்டும் கூட அந்த பகுதிகளில் கடல் சார்கோரிக்கைகளை கொண்டுள்ளன.

தெற்கு சீன கடலில் ஏற்படும் போட்டிகள் பல தசாப்தங்களாக நடந்து வருகின்றன. 1974ல், பாராசெல் தீவுகளை ஆக்கிரமிக்க தெற்கு வியட்நாமிய ஆட்சியின் உடனடி சிதைவை சீனா ஆதாயமாக்கி கொண்டது. 1988ல், ஸ்பராட்லி வளைவிலுள்ள ஜோன்சன் கடல் கற்பாறையை சீனா கைப்பற்றிய போது, சீன மற்றும் வியட்நாம் கப்பற்படைகள் மோதி கொண்டன. வியட்நாம் அதன் தென் கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பில் (ASEAN) உள்ள அதன் உறுப்பினர் பதவி மூலம் சீனாவை எதிர் கொண்டுள்ளது. அதில் 1995ல், தெற்கு சீன கடல் பிரச்சனைகள் மீது பெய்ஜிங்கிற்கு ஓர் ஒட்டுமொத்த பிரதிபலிப்பை அளிக்க இருதரப்பு பேச்சுவார்த்தைகளைப் புறக்கணித்தது.
கட்டுப்பாடற்ற வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் கூட்டு பொருளாதார மண்டலங்கள் மூலம் ASEAN நாடுகளுடன் சீனா நெருக்கமான உறவுகளை விரும்புவதால், சமீபத்திய ஆண்டுகளில் பெய்ஜிங் மற்றும் ஹனாய் இடையிலான உறவுகள் மேம்பட்டுள்ளன. 2002ல், தெற்கு சீன கடல் உட்பட இப்பிராந்தியத்தில் உள்ள பிரச்சனையை மேலும் சிக்கலாக்காமல் இருக்க, ASEAN நாடுகளுடன் பெய்ஜிங் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.
எவ்வாறிருப்பினும், ஆழ்ந்த அவநம்பிக்கை நிலவுகிறது. வியட்நாம், மலேசியா மற்றும் பிற நாடுகள் இராணுவ பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும், தீவுகளில் தங்களின் பிடியை வலுப்படுத்த யுத்த கப்பல்கள், யுத்த விமானங்கள் மற்றும் ரோந்து படகுகள் போன்ற புதிய சாதனங்கள் வாங்குவதாகவும் Ordnance Knowledge குற்றஞ்சாட்டியது. 1995ல் வியட்நாம் உடனான உறவுகளை அமெரிக்க சீர்படுத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் செல்வாக்கு குறித்தும் சீனா கவலை கொண்டுள்ளது. 2003ல் இருந்து வியட்நாமை பார்வையிட வாஷிங்டன் யுத்த கப்பல்களை அனுப்பி வருவதால், சீனாவை சுற்றி வளைப்பதற்கான அதன் பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாக அமெரிக்கா நெருக்கமான இராணுவ உறவுகளை விரும்புவதாக சீனாவில் அச்சம் அதிகரித்துள்ளது.

கணிசமான பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் தெற்கு சீன கடலில் நிலை கொண்டுள்ளன. வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா ம்றறும் புரூனே ஆகிய நாடுகளால் ஸ்ப்ராட்லிஸைச் சுற்றி 500க்கும் மேற்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சீனாவால் கோரப்படும் கடலுக்கடியிலுள்ள சுமார் 100 கிணறுகளும் இதில் உள்ளடங்கும். மொத்த ஆண்டு வெளியீடு 50 மில்லியன் டன்களை எட்டியுள்ளது என்பதுடன் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் இரண்டிற்கும் எண்ணெய் ஏற்றுமதி வருவாய் ஈடுவதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக இது மாறியுள்ளது. தெற்கு சீன கடலில் சுமார் 35 பில்லியன் டன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதில் 22.5 பில்லியன் டன் வளங்கள் சீனா கோரும் பகுதிகளில் உள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், உலகின் மிக முக்கிய கடல்வழிகளில் சில (குறிப்பாக, மத்திய கிழக்கிலிருந்து வடகிழக்கு ஆசியா வரை) தெற்கு சீனா கடல் வழியாக செல்கின்றன. சீனாவின் வெளியுறவு வர்த்தகம் மற்றும் எண்ணெய் "வாழ்வாதாரத்திற்கு"ஸ்ப்ராட்லி தீவுகள் இதயம் போன்றிருப்பதாக Ordnance Knowledge குறிப்பிட்டது. சீனாவின் 39 கடல்வழிகளில் 21 வழித்தடங்கள் ஸ்ப்ராட்லிஸ் தீவுகள் வழியாக கடந்து செல்கின்றன. இது சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 60 சதவீத இடத்தைப் பிடிக்கிறது. மலாக்கா ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களில் சுமார் 60 சதவீதம் சீனாவினுடையது, இது மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவிலிருந்து சீனாவின் எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதம் இடம் பிடிக்கிறது.

அந்த இதழ் குறிப்பிட்டதாவது: "வெளியுறவு வர்த்தகம் மற்றும் கடல்-தள பொருளாதாரம் அபிவிருத்தி அடையும் போது, நமது தேசிய நலன்கள் படிப்படியாக அன்னிய நாடுகளை நோக்கி விரிவடைகின்றன. கடல்எல்லை மற்றும் வெளிநாட்டு நலன்களிடமிருந்து பாதுகாப்பதற்கான முக்கிய பொறுப்பேற்றுள்ள கடற்படை, சுமூகமான மற்றும் துல்லியமான பாதைகளை ஏற்படுத்தி அளிக்க வேண்டும்... கிழக்கிலிருந்து பசிபிக்கிற்கும் மற்றும் மேற்கிலிருந்து இந்திய பெருங்கடலுக்கும் இடையிலான சுமூக போக்குவரத்திற்கு, தீவுத்தொடரின் கட்டுப்பாடுகளை நீக்க ஸ்ப்ராட்லிஸை துல்லியமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது நமது கடற்படையின் ஒரு முக்கிய தேவையாகும்."
ஜப்பான் போன்ற முக்கிய போட்டியாளர்களுக்கும் இந்த தீவுகள் ஒரு முக்கிய ஆயுதமாகலாம் என்பதையும் Ordnance Knowledge குறிப்பிட்டது. "ஸ்ப்ராட்லிஸ் தீவுகளையும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் துல்லியமாக கட்டுப்படுத்துவது என்பது சீனாவின் தடுக்கும் சக்தியை ஊக்குவிக்கும், மேலும் நேரடியாக கட்டுப்படுத்துவதாலும் மற்றும் சர்வதேச எண்ணெய் வாழ்வாதாரங்கள் மீது செல்வாக்கை அதிகரிப்பதன் மூலமும் மூலோபாய முனைவுகளை சீனா எடுக்கலாம். விரோத சக்திகளை நேரடியாக அச்சுறுத்துவது என்பது ஒரு கூர்மையாக நடவடிக்கையாக அமையும், அது தெற்கு சீனா கடலைச் சுற்றியுள்ள மேற்கத்திய சக்திகளுக்கு மேலும் அச்சமூட்டும்." என்று அந்த இதழ் குறிப்பிட்டது.
தெற்கு சீனா கடலின் அருகில், ஹைனனின் தெற்கு தீவில் சீனா ஒரு பெரிய கடற்தளத்தை கட்டமைத்து கொண்டிருந்ததாக ஏப்ரலில் பல மேற்கத்திய ஆய்வாளர்கள் குறிப்பிட்டார்கள். அது எதிர்காலத்தில் 20 நீர்மூழ்கி கப்பல்கள் உட்பட, ஒரு யுத்த விமான தடம் அல்லது நீரிலும், நிலத்திலும் செயல்படும் யுத்த குழுக்களை கொண்டிருக்கும் ஒரு பெரிய கடற்படையை அனுமதிக்க கூடும். அதன் சொந்த வர்த்தக கடற்வழிகள் மற்றும் எண்ணெய் வினியோகத்தைப் பாதுகாப்பதில், சீனா அதன் போட்டியாளர்களை வெளிப்படையாகவே அச்சுறுத்தி வருகிறது.

வியட்நாம் மீது தாக்குதல் நடத்துவதற்கான "திட்டங்கள்" சீன வலை பதிவர்களுக்கு ஒரு முக்கிய விடயமாக அல்லது செல்வாக்கு மிக்கதாக இருக்காது என்ற போதினும், தென் சீன கடல் மீதான கட்டுப்பாடு பிரச்சனைகள் மற்றும் பிற பதட்டங்கள், அண்டை நாடுகள் மற்றும் முக்கிய சக்திகளுக்கு இடையே உடனடியாக மோதலை தூண்டி விடும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அமெரிக்காவின் அடுத்த போர்க்களமா? - கொரிய தீபகற்பம்

கொரிய வரைபடம்
கடந்த மார்ச் முதலாக கொரிய தீபகற்பத்தில் எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றம் நிலவுகிறது. தென்கொரியாவும் அதற்கு ஆதரவாக அமெரிக்காவும் பெரும்படைகளையும் ஆயுதங்களையும் குவித்துப் போர் ஒத்திகைகளை நடத்தி வருவதால், தென்கொரியா மீது போர்ப்பிரகடனம் செய்து வடகொரியாவும் போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவிடமும் அமெரிக்காவிடமும் அணு ஆயுதங்கள் உள்ளதால், ஒருக்கால் போர் தொடங்கிவிட்டால் அதன் விளைவுகள் மிகக் கோரமாக இருக்கும் என்பதால் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகள் அனைத்தும் பெரும் பீதியில் உள்ளன.


கொரிய தீபகற்பம்வடகொரியா 2006 மற்றும் 2009-இல் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியுள்ளதோடு, கடந்த 2012 செப்டம்பரிலும் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. கடந்த பிப்ரவரியில் நிலத்தடி அணுகுண்டு சோதனையையும், ஏவுகணைச் சோதனையையும் நடத்தியுள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலை முறியடிப்பதாகவும், அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென்கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் பாதுகாப்புக்காகவும் என்று கூறிக் கொண்டு அணுகுண்டு வீசும் பி-52 ரக போர் விமானங்களைக் கொண்டு கடந்த மார்ச் முதலாக தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா நடத்தி வருகிறது. இக்குண்டுகள் 1945-இல் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளை விட 75 மடங்கு அதிக ஆற்றல் கொண்டவையாகும். இரண்டு குண்டுகள் வடகொரியா நாட்டின் மீது போடப்பட்டால், அவை அந்நாட்டை மயான பூமியாக்கிவிடும்.

ஏன் இந்தப் பதற்ற நிலை ?

ஜப்பானின் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட கொரிய மக்கள், கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் தேசிய விடுதலைப் படையைக் கட்டியமைத்து அன்றைய சோசலிச சோவியத் படைகளின் உதவியுடன் கொரியாவின் வடபகுதியை 1945-இல் விடுதலை செய்து சுதந்திர அரசைப் பிரகடனம் செய்தனர். தென்பகுதியில் அனைத்து கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் இணைந்து ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர் லியூ-வூன்- கியூங் தலைமையிலான கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர். ஆனால், ஜப்பானின் காலனிகளைக் கைப்பற்றிய அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், தென்கொரியாவை ஆக்கிரமித்துக் கொண்டு தேசிய விடுதலை இயக்கத்தை ஒடுக்கி, லியூ-வூன்-கியூங்கைப் படுகொலை செய்து சைங்மான் ரீ என்ற கம்யூனிச எதிர்ப்புச் சர்வாதிகாரி தலைமையிலான அமெரிக்க விசுவாச பொம்மையாட்சியை நிறுவினர்.

இதனால் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான வடகொரியாவில் சுதந்திர தேசிய அரசும், தென்கொரியாவில் அமெரிக்காவின் பொம்மையாட்சியுமாக 38-வது அட்சரேகைக்கு தெற்காகவும் வடக்காகவும் 1948-இல் தென் கொரியாவும் வடகொரியாவும் பிளவுபட்டன. அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட பொம்மையாட்சி நிலவும் நாடாக உள்ளதால், அதனை ஒரு சுதந்திர நாடாகவே அங்கீகரிக்க முடியாது என்பதால், 1950-இல் “நம் தேசத்தை ஒன்றிணைப்போம்!” என்ற முழக்கத்துடன் தென்கொரிய பொம்மையாட்சியாளர்களை எதிர்த்து வடகொரியா படையெடுத்துப் பல பகுதிகளைக் கைப்பற்றியது. இதற்கெதிராக அமெரிக்கா தலைமையில் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் கம்யூனிச அபாயத்தை முறியடிப்பது என்ற பெயரில் போரில் குதித்தன. பல்லாயிரக்கணக்கானோரைப் பலிகொண்ட இப்போரைத் தொடர்ந்து, போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டு, ஒரே தேசிய இனத்தவரான கொரிய மக்கள் வடகொரியா மற்றும் தென்கொரியா எனத் தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டனர்.

கொரியா போர் விமானம்தென் கொரியா மற்றும் ஆசிய,பசிபிக் பிராந்திய நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கானது என்ற பெயரில், தென் கொரியாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் அதி நவீன பி-52 ரக அணுகுண்டு தாக்குதல் போர் விமானம்
தென்கொரிய சுதந்திர அரசைப் பாதுகாப்பது, அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது, ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்டுவது என்று பசப்பிக் கொண்டே, இப்பிராந்தியத்தில் தனது போர்க்கப்பல்களையும் போர்விமானங்களையும் கொண்டு அடுத்தடுத்து போர் ஒத்திகைகளை நடத்தி வடகொரியாவையும் சீனாவையும் அமெரிக்கா ஆத்திரமூட்டி வருகிறது. அமெரிக்காவை எதிர்த்து சீனாவும் வடகொரியாவும் நவீன ஆயுதங்களுடன் அணு ஆயுதச் சோதனை நடத்தி எச்சரிப்பதைக் காரணங்காட்டி, தென்கொரியா, தைவான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிக் கொண்டு அந்நாடுகளில் இராணுவத் தளங்களை நிறுவி, அமெரிக்கா தனது ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தி வருகிறது. மறுபுறம், வடகொரியாவைப் பயங்கரவாத நாடு, சர்வதேசச் சட்டங்களை மதிக்காத போக்கிரி நாடு என்று குற்றம் சாட்டி, பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து அந்நாட்டைத் தனிமைப்படுத்திப் பலவீனப்படுத்தி வருகிறது.

ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம்

இப்பிராந்தியம் முழுவதும் சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதையும் அமெரிக்க நட்பு நாடுகளை இணைத்துக் கொண்டு கூட்டுத் தாக்குதல் தொடுப்பதையுமே அமெரிக்க வல்லரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயைக் கப்பல் மூலம் மியான்மர் (பர்மா) வரை கொண்டுவந்து, பின்னர் மியான்மரிலிருந்து நிலத்தடிக் குழாய் வழியாக சீனாவுக்குக் கொண்டுசெல்லும் திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இதனைத் தடுப்பதற்காகவே, மியான்மரில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்ற பெயரில், அமெரிக்கா தலையிட்டு அந்நாட்டை சீனாவின் செல்வாக்கிலிருந்து மீட்டுத் தன்பக்கம் வளைத்துக் கொண்டது. இதனால் சீனா தனது நாட்டுக்கான எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டு செல்வதற்கான ஒரே வழியாக மலாக்கா நீரிணை மட்டுமே இருப்பதால், இப்பகுதியிலுள்ள நாடுகளைத் தனது கூட்டாளிகளாக மாற்றிக் கொண்டு இராணுவத் தளங்களை அமைத்து சீனாவை அமெரிக்கா எச்சரிக்கிறது.

போலி சோசலிச நாடான வடகொரியா, ஏறத்தாழ இரண்டரைக் கோடி மக்களைக் கொண்ட சிறிய, வறிய நாடு. மறைந்த வடகொரியாவின் தேசியத் தலைவரான அதிபர் கிம்-இல்-சுங் குடும்பத்தின் இளம் வாரிசு அதிபரான கிம்-ஜாங்-உன் தலைமையில், ஒருகட்சி இராணுவ சர்வாதிகாரத்துடன் அதிகாரவர்க்க முதலாளித்துவ ஆட்சியை அந்நாடு பின்பற்றி வருகிறது. அந்நாட்டின் இராணுவ ஆட்சியாளர்கள், அமெரிக்காவின் அச்சுறுத்தலைக் காட்டி நாட்டின் பொருளாதாரத்தையே இராணுவ மயமாக்கியுள்ளனர். போர் அச்சுறுத்தல்கள் மூலம் வடகொரியாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதை அமெரிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளதால், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளைப் பின்வாங்கச் செய்வதற்காக அணுகுண்டுத் தாக்குதலை நடத்தப் போவதாக எச்சரிக்க வேண்டிய இக்கட்டான நிலைமையில் வடகொரியா உள்ளது.

தனது வணிகத்துக்கும் எரிபொருளுக்கும் சீனாவையே வடகொரியா பெரிதும் சார்ந்துள்ளது. எனவே சீனா, வடகொரியாவுக்கு நிர்ப்பந்தங்களைக் கொடுக்க வேண்டும், ஒரு பொறுப்பான உலக சக்தியாக சீனா நடந்து கொள்ள வேண்டும், வடகொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட சீனா ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்திக்கிறது. மறுபுறம், சீனப் பொருளாதாரம் அமெரிக்காவுக்குப் பெருமளவு ஏற்றுமதி செய்வதைச் சார்ந்துள்ளது. அமெரிக்காவின் பொதுக் கடன் பத்திரங்களை 1.6 டிரில்லியன் டாலர் அளவுக்கு சீனா வாங்கி வைத்துள்ளதால், இன்றைய நிலையில் அமெரிக்காவை சீனா பகைத்துக் கொண்டால், சீனாவின் பொருளாதாரம் பெருத்த பேரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், கொரிய விவகாரத்தை நெளிவுசுழிவாகக் கையாள சீனா முயற்சிக்கிறது. மேலும், போர் மூண்டால் அண்டை நாடான வடகொரியாவிலிருந்து ஏராளமான அகதிகள் சீனாவுக்குள் பெருகுவார்கள் என்பதால், சீனா இந்த நெருக்கடியைத் தவிர்க்கவே விரும்புகிறது. வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்துக்கு ஆதரவாக சீனா வாக்களித்துள்ள போதிலும், வடகொரியாவில் தற்போது நிலவும் அமெரிக்க எதிர்ப்பைக் கொண்ட ஆட்சி கவிழ்ந்தால், அது சீனாவுக்குப் பாதகமாக அமையும் என்பதால், வடகொரியாவை அவ்வளவு எளிதில் கைவிடவும் சீனா தயாரில்லை.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்
தென் கொரியாவின் ஜின்ஹே கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள “யு எஸ் சான்பிரான்சிஸ்கோ” எனும் அதிநவீன அணுகுண்டு வீசும் திறனுடைய அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்.

ஒரே தேசிய இனத்தவரைக் கொண்ட இரண்டு கொரியாக்களும் ஒரே நாடாக ஐக்கியப்படவும், கொரிய தீபகற்பத்தில் அமைதியும் சமாதானமும் நீடிக்கச் செயவும் இரண்டு கொரிய அரசுகளோடு அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று சீனா முன்வைத்த ஆலோசனையின்படி 2003-ஆம் ஆண்டில் ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைகள் நடந்தன. வடகொரியா தனது அணுஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதெனவும், இதற்கு ஈடாக பொருளாதாரத் தடைகளை நீக்கி வடகொரியாவுக்கு எரிபொருள் உதவியளிப்பது எனவும் முடிவாகி, அனைத்துலக அணுசக்தி முகமையின் மூலம் வடகொரியாவின் அணுசக்தித் திட்டங்களைச் சோதனையிட்டு கண்காணிப்பதும் நடந்தது. இருப்பினும், அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் வெளியுறவுச் செயலரான கண்டலீசா ரைஸ் ஆகியோரின் அடாவடிகளால் இப்பேச்சுவார்த்தைகளை வடகொரியா முறித்துக் கொண்டது. அதன் பிறகு அமைதி,சமாதானம் என்ற பசப்பல்களுடன் அதிபர் ஓபாமா ஆட்சிக்கு வந்தபோதிலும், ஆறுநாடுகளின் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, ஏவுகணைத் தாக்குதல், கூட்டுப் போர் பயிற்சிகளை நடத்திக் கொண்டு வடகொரியாவை மேலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில்தான் ஈடுபட்டு வருகிறார்.

பனிப்போருக்குப் பின்னர் கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் இணைந்ததைப் போல, வட-தென் கொரியாக்கள் இணைய வேண்டுமென்று ஏகாதிபத்தியவாதிகள் பசப்பினாலும், உண்மையில் அது அவர்களின் ஆதிக்க நலன்களுக்கு எதிரானது. இரு நாடுகளும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவினால், அமெரிக்க இராணுவம் இப்பிராந்தியத்திலிருந்து வெளியேற வேண்டியதாகிவிடும். தனது மேலாதிக்க நோக்கங்களுக்காக பசிபிக் கடற் பகுதியிலும், குறிப்பாக சீனாவை ஒட்டியுள்ள பகுதிகளிலும் ஜப்பானின் ஒக்கினவா தீவிலும் நிரந்தரமாகத் தனது படைகளைக் குவித்து வைப்பது அமெரிக்க மேலாதிக்கவாதிகளுக்கு அவசியமாக உள்ளது. மேலும், கொரிய பிரச்சினையை வைத்து தென்கொரியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் ஆயுத வியாபாரம் செய்வதற்கும், ஆசிய பசிபிக் கடல் பிராந்தியத்தில் மேலாதிக்கம் செய்வதற்கும் அமெரிக்காவுக்கு கொரிய பிரச்சினை அவசியத் தேவையாக உள்ளது. இவற்றாலேயே இன்னமும் கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்பவில்லை. அமெரிக்கப் படைகள் தென்கொரியாவிலிருந்து 2012-இல் வெளியேறும் என்ற ஒப்பந்தமும் நிறைவேறவில்லை.

தென் சீனக் கடலில் அமெரிக்காவின் நாட்டாமை

கிம் ஜாங்-உன்
அமெரிக்காவின் மேலாதிக்கப் போர் அச்சுறுத்தலை முறியடிக்க, இராணுவத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தும் வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங்-உன்.

உலகின் கடற் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு தென் சீனக் கடலின் ஊடாக நடப்பதாலும், தொலைத்தொடர்பு கேபிள்கள் நிறைந்த முக்கிய கடற்பகுதியாக இருப்பதாலும், இப்பகுதியானது போர்த்தந்திர முக்கியத்துவம் வாந்த குவிமையமாக உள்ளது. மேலும், தென்சீனக் கடல் பிராந்தியத்தில் ஆளில்லாத் தீவுகளாக 200-க்கும் மேற்பட்ட சிறிய தீவுக் கூட்டங்கள் உள்ளன. எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் கடலுணவு வளமும் நிறைந்துள்ளதால் இத்தீவுகளுக்கு உரிமை கோரி வடக்கே சீனா மற்றும் தைவான், கிழக்கே பிலிப்பைன்ஸ், மேற்கே வியட்நாம், மலேசியா மற்றும் புருணை, தென் கிழக்கே இந்தோனேசியா என இவ்வட்டாரத்திலுள்ள நாடுகள் உரிமை கோருகின்றன.

தென் சீனக்கடலில் உள்ள இத்தீவுகள் யாருக்குச் சோந்தம் என்பதை அந்த வட்டார நாடுகள்தான் தங்களுக்குள் பேசித் தீர்வு காண வேண்டுமே தவிர, இதில் தலையிட்டு நாட்டாமை செய்வதற்கு அமெரிக்காவுக்கோ அல்லது பிற ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கோ எவ்வித உரிமையும் கிடையாது. ஆனால், அவ்வாறு தலையிடுவதற்கான முகாந்திரத்தைத் தேடுவதற்காகவே, தனது நட்பு நாடுகளின் பெயரால் அமெரிக்கா மூக்கை நுழைக்கிறது. பொருளாதார நெருக்கடிகள் முற்றி வருவதால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மீது குறி வைத்து, சீனாவின் செல்வாக்கைத் தடுத்து இப்பிராந்தியத்தில் மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கின்றன.

கிழக்கு சீனக் கடலில் உள்ள எரிவாயு வளமிக்க சென்காகூ தீவுகளுக்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கோரி வருகின்றன. எண்ணெய் எரிவாயு வளமிக்க ஸ்பெரட்லி தீவுகள் தமது பாரம்பரிய உரிமை என்று சீனாவும் தைவானும் ஜப்பானை எதிர்க்கின்றன. பாரசெல்ஸ் தீவுகளில் சிலவற்றை வியட்நாமும் தைவானும் உரிமை கோருகின்றன. இந்தோனேசியாவும் பிலிப்பைன்சும் புருணையும் இன்னும் சில தீவுகளுக்கு உரிமை கோருகின்றன.

இந்நிலையில், ரஷ்ய வல்லரசானது, கடந்த 2010-இல் வோஸ்டாக் எனும் பெயரில் ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் மிகப் பெரிய போர் ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இப்பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விசுவாச நாடுகளுக்குத் தனது இராணுவ வல்லமையை வெளிக்காட்டி எச்சரிக்கும் நடவடிக்கையே ஆகும். இதை ஜப்பான் எதிர்த்த போதிலும், அடுத்தடுத்து இது போன்ற போர் ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும், புதிதாக நவீன அணுசக்தி நீர்முழ்கிக் கப்பல்களை இப்பகுதியில் இயக்கப் போவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

தென் கொரியா மக்கள்“பயங்கரவாத அமெரிக்காவே, கொரியத் தீபகற்பத்திலிருந்து வெளியேறு!” : தென் கொரிய ஆட்சியாளர்களையும் அமெரிக்க வல்லரசையும் எதிர்த்து தென் கொரிய மக்கள் நடத்தும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தென்சீனக்கடல் பகுதியில் பாரம்பரிய உரிமையுள்ள தனது நாட்டின் சில தீவுகளுக்கு வியட்நாம் உரிமை கோருவதால், வியட்நாமுடன் இணைந்து எண்ணெய் துரப்பணப் பணிகளில் இந்தியா ஈடுபடக் கூடாது என்கிறது சீனா. இருப்பினும், கடந்த 2011-ஆம் ஆண்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா வியட்நாமுக்குச் சென்று திரும்பியதோடு, இந்தியாவின் எண்ணெய் எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.) எண்ணெய் அகழ்வாய்வு மற்றும் துரப்பணப் பணிகளில் வியட்நாமுடன் இணைந்து செயல்படும் என்று அறிவித்துள்ளார். இவற்றை சீனா தடுக்க முற்பட்டால் பதிலடி கொடுப்போம் என்கிறார், இந்தியக் கடற்படைத் தளபதி. ஏற்கெனவே ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் கூலிப்படையாக இந்திய இராணுவத்தை அனுப்பியுள்ள இந்திய அரசு, இப்போது அமெரிக்க விசுவாச நாடான வியட்நாமுக்கு ஆதரவாக தனது கடற்படையை அனுப்பி தாக்குதல் தொடுக்கத் துடிக்கிறது.

கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் பதற்றமும் போர்ச்சூழலும் வடக்கே ஜப்பானிலிருந்து தெற்கே ஆஸ்திரேலியா வரையிலான பசிபிக் கடற்பகுதியில் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டா போட்டியின் ஒரு வெளிப்பாடுதான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய வல்லரசுகள், ரஷ்யா, சீனா, இந்தியா, மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளுடன் சம்பந்தப்பட்டதாக கொரிய விவகாரம் உள்ளதால், இதனை வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பிரச்சினையாகக் குறுக்கிப் பார்க்க முடியாது.

தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவிலிருந்து அமெரிக்க மேலாதிக்க வல்லரசு வெளியேறாதவரை கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவாது என்பதையும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இயற்கை மூலவளங்களைக் கொள்ளையிடுவதிலும் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதிலும் ஏகாதிபத்திய வல்லரசுகளிடையே போட்டாபோட்டி நிலவும்வரை போர்களும் பதற்றநிலையும் குறையாது என்பதையும், ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களின் எடுபிடி ஆட்சியாளர்களுக்கும் எதிராக அனைத்து நாட்டு மக்களும் போராட வேண்டிய அவசியத்தையும் படிப்பினையாக உணர்த்திவிட்டு கொரிய தீபகற்பம் தீராத போர்ப் பதற்றத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

வனங்கள் மறைந்தால் மனிதனும் மறைவான்


வானத்தை மரங்களன்றோ தாங்கிப் பிடிக்கின்றன.  வனங்கள் மறைந்தால்
உலகத்தின் கூரை, வானம் இடிந்து வீழும் அப்போது
இயற்கையும் மனிதனும் இணைந்தே வீழ்வர்.     
ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் வனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. வனங்கள் மனிதனின் சீரான முன்னேற்றத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. இத்தகைய வனங்கள் மனிதனுக்கு உணவு, நீர், எரிபொருள் மற்றும் மருத்துவ குணங்கள் மூலம் நேரடியாகவும் சுற்றுச் சூழலை பாதுகாத்து மறைமுகமாகவும் உதவுகின்றன. 
முந்தைய காலங்களில் மக்கள் தங்களுடைய தேவைகளையும் இருப்பிடங்களையும் காடுகள் மூலமாக நிறைவேற்றிக் கொண்டனர். இதனால் காடுகளை பாதுகாக்க மரங்களை தெய்வங்களாக வழிபடவும் செய்தனர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் பல்லுயிர் பெருக்கமும் அதிகளவில் இருந்தது. ஆனால் நாகரீகம் வளர வளர, காடுகளின் பரப்பளவு குறைந்து கொண்டே வந்தது. இதனால் இயற்கை சமன்பாடு சரியத் துவங்கியது. 
அதுமட்டுமின்றி இரு உலகப் போர்களும் காடுகளில் மிக அதிகளவு சேதாரத்தை ஏற்படுத்தியது. இதனால் காடுகள் அழிக்கப்பட்டு அதனை நம்பி இருந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்க துவங்கினர். உலக வனக் கொள்கையின் படி ஒரு நாடு 33 சதவீதம் வனங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.
காடுகள் அழிப்பால் அதனை நம்பி வாழும் வன உயிரினங்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன. அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப காடுகளின் பரப்பும் இல்லை. இருப்பதில் போதிய உணவும் இல்லை. உதாரணமாக ஒரு காட்டு யானை உயிர் வாழ 200 கிலோ உணவாவது ஒரு நாளைக்கு உண்டாக வேண்டும். 450 லிட்டர் தண்ணீரும் பருகியாக வேண்டும். இதற்கு காட்டுக்குள் தட்டுப்பாடு ஏற்படும் போது அவை கூட்டம் கூட்டமாக காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுவதை தடுக்க இயலாது.
அழிக்கப்பட்ட காடுகளின் பரப்பை மீண்டும் உருவாக்குவது என்பது மிக மிக கடினமான செயல். இருக்கும் வனச் செல்வத்தையாவது பாதுகாக்க தவறினால் நகரின் முக்கிய வீதிகளில் கூட யானைகள், சிறுத்தைகள், புலி, கரடி என வன விலங்குகள் ஊருக்குள் உலா வருவது தவிர்க்க இயலாதது. இந்நிலை தொடர்ந்தால் சுத்தமான காற்றைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உருவாகும் என்பதே வனத்துறை ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கை.
மக்களில் பெரும்பாலோரிடத்தில் வனங்களைப் பற்றி மேற்கண்ட அடிப்படையில்லாத கற்பனைகளும் நம்பிக்கைகளும் ஏற்பட்டதிற்கு வனங்களின் அறிமுகம் அவர்களுக்கு கிடைக்காமையே முதன்மைக் காரணமாகும். வனங்கள் என்றில்லாமல் இயற்கையைப் பற்றிய சரியான அறிமுகத்தை பள்ளிப் பாடங்களும் வழங்கவில்லை. இந்த நிலையில் மக்கள் தாமாகவே கற்பித்துக்கொண்ட நம்பிக்கைகளை மனத்தில் பதிவு செய்துகொள்கிறார்கள். அதனால் இயற்கையை அவர்கள் மதிப்பதில்லை. இயற்கையினின்றும் ஒதுங்கி, முடிந்தால் கூடியமட்டும் மாறுபட்டு வாழும் வாழ்க்கையைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்தப் போக்கு மனித குலத்திற்கே மிகவும் ஆபத்தானது என்ற உண்மையை மக்களுக்கு எவரும் உணர்த்தவும் இல்லை, உணர்த்தும் காரியத்தைச் செய்ய நல்ல நிறுவனங்களும் இல்லை..
நமது முன்னோர்கள் வனத்தினுடைய இன்றியமையாமையை அறிந்திருந்தனர். அதனால்தான் வனங்களுக்கு ஓர் உயரிய ஆன்மீக மதிப்பைக் கொடுத்திருந்தனர். உண்மையில், ஒவ்வொருவரும் தனது வாழ்நாளின் பிற்பகுதியை வனத்தில் செலவிடவேண்டும் என்றும் அப்போதுதான் இயற்கையுடன் நெருங்கவும் அவற்றின் படைப்புகளான பூவினங்களையும் மாவினங்களையும் கண்டு போற்றவும், வியக்கவும் இயலும் என்று அவர்கள் ஆலோசனை வழங்கினர். 
இலங்கை எனும் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட நம்நாட்டில் வளங்களை நாம் காப்போம். வன உயிரினங்களை வசிப்பிடங்களை ஆக்கிரமிக்காமல் இருப்போம். வியாபாரத்துக்காகவும் சுயநலத்துக்காகவும் வருடக்கணக்கில் வளர்ந்து செழிக்கும் மரங்களை அழியாமல் பாதுகாப்போம். இயற்கையின் சமநிலையை நாம் சிறுசிறுக மாற்றம் செய்வோம் எனில் பெரும் இயற்கை அழிவை நாம் சந்திப்பதில் இருந்து தப்ப முடியாது…!!
“The clearest way into the Universe is through a forest wilderness.” 
― John Muir