ரசிகர்களுக்கு ஓர் உன்னதமான காவியம் 'காவியத்தலைவன்'
அழியும் நிலையில் உள்ள மேடைநாடகத்தை சினிமாவில் கொண்டுவந்து நாடகத்தையும், அன்றைய காலகட்டத்தையும் நம் கண்களுக்கு விருந்தாக காவியத்தலைவன் படம் மூலம் வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.
காதல், துரோகம், நம்பிக்கை, குருவிசுவாசம், தேசபக்தி, தேசத்துரோகங்கள், சுதேச சிந்தனைகள் என்று பல உணர்வுகளை ஒப்பேற்றி சிறப்பான புதுமையாக கலக்கலாக கமர்ஷியலாக கதை பண்ணி கலர்புல்லாக அதை காட்சியும் படுத்தி இருப்பதுதான் காவியத்தலைவனின் பெரும்பலம்.
கதையின் கதாபாத்திரங்களை பார்க்கும் போது நம்மவர் மத்தியில் வாழும் சில நரிக்கூட்டங்களையும் ஞாபகப்படுத்துவது அதிலும் ஒரு சிறப்பு. முகத்திற்கு நேரே நட்பு பாராட்டி புறமுதுகில் குத்தும் அதிகர் புழங்கும் எம்மவர்களை கண்முன்னே ஞாபகப்படுத்துவதில் காவியத்தலைவன் வெற்றி கண்டிருக்கிறது.
அனைத்து கதாபாத்திரங்களின் சிறப்பு, பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வசனவரிகள், காஸ்டியூம், கலைஇயக்கம் என்று அனைத்தும் பிரமாதம். நீண்ட நாட்களின் பின்பு சிறப்பான ஒரு திரைப்படம் பார்த்த ஒரு உணர்வு. மொத்தத்தில் ‘காவியத்தலைவன்’ காவியத்தில் இடம் பெறுவான்.