திங்கள், 5 மே, 2014

சகுனியின் கூச்சம் - கைக்கூ கிறுக்கல்

அன்று விதைத்ததை இன்று அறுத்தோம்
இன்று இவர்கள் விதைத்ததை நாளை நாம் அறுப்போம்
இனி விதைப்பொறுக்கிகள் இருபக்கங்களாலும் அறுபடும்
அப்போது விதைத்தவனும் அறுத்தவனும் அணைபடுவான்.
நாளைய விளையலுக்காக
சேர்ந்து விதைத்திருந்தால் விதை
பொறுக்கிகளுக்கும் விடியல் இருந்திருக்கும்
இனி இங்கு விளைச்சல் இல்லை அறுவடை மட்டும்தான்
விளைநிலங்களுக்கும் சிந்திக்கின்றன...
வீரம் மட்டுமல்ல ஈரமும் வேண்டும்
விளைச்சலுக்காக…!
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மறுபடியும் தர்மம் வெல்லும் !! ( கிறுக்கல் - அ. எல்றோய் )

ஞாயிறு, 4 மே, 2014

கிரீமியா மீண்டும் கிழக்கோடு ஒட்டிக்கொள்ளும்

( மார்ச் 5. 2014 சமூகவலைதளத்தில் பதிவேற்றியது… )

நடக்கப்போவது இனி...

புதிய தேசம் இனி புழியப்படப்போகிறது
சிரியதேசம் சீரழிக்கப்பட்டு பலநாள் ஆகிவிட்டது
சூடுகண்ட தேசத்தை சுனாமியோடு சேர்த்து சில
பிணாமிகளால் சுடுகாடு ஆக்கப்பட்டுவிட்டது
ஆப்கானில் உள்ள ஆப்பு இன்னும் எடுபடவில்லை
ஈராக்கில் இன்னும் இயல்புநிலையில்லை
கருங்கடலில் கந்தகவாசனை மீண்டும் உணர
கிரீமியா மீண்டும் கிழக்கோடு ஒட்டிக்கொள்ளும்
பனியில் பிரிந்த தேசங்கள் இனி பழங்கதை கூற
வல்லவதேசம் வான்படை நம்பிநிற்கும்
இஸ்ரேலின் இயங்குநிலை ரானியதடத்தை மாற்ற
வல்லாதிதேச இருப்பிடம் பெருஞ்சுவரில் தடம்பதிக்கும்
ஏகாதியபத்தின் நீதி புரட்சியாகவும்
ஏதோச்சதிகார நியதி பயங்கரவாதமாகவும்
ஊடக உழைப்புக்கு உவர்ப்பாய் இருக்கும்
வெளிவிவகார வெகுளி வெந்திய தேசம்
வெட்கப்பட்டு வீட்டோவை வீட்டில் வைக்கும்
பயங்கரவாத கதைபேசி இந்தி பாக்கி கணக்கை முடிக்க நினைக்கும் -
கதை சொல்லி நதியில் கைவைக்க திபெத்து கதை பேசி அருணாவின் மேல் செம்படை கைவைக்கும்
வச்ச கைக்கு பலுஸ்கிஸ் நிழுவையில் தொங்க
தென் சீனக்கடல் மேல் சாம்பல் வாசம் மேலேலும்
ஜனநாயக கதை பேசி டொலர் தேசம் நிகழ்ச்சி நிரலை உருவாக்கும்
உருவாக்கிய கறுப்புக்கொடிப்படையை அமெ.ரஸ் இணைந் இனி அழிக்கும்
இழக்கப்பட்ட பனிபிரிவு நிலங்களை கரடி இனி கைப்பற்ற நினைக்கும்
மேற்குலகுக்கு சில அதிர்ச்சிகளை தன் அசைவுகளில் தெளிக்க
டொலர் தேசம் அமைதியில் உறக்கம் கொள்ளும்
அரபுலகின் பிரிவில் அசைபோடும் கொடி நட்சத்திரம்
ஏமன் ஊடு விசை அசைக்கும் உந்துகணையாக
புனித தேசங்கள் தன் கையை வைத்தே குத்திக்கொள்ளும்
தென்சீன எல்லை கிறிஸ்தவ தேசம் மனித அவலத்தை சுமந்து நிற்கும்
பேதையின் போதையால்- நட்பு தேசமும் கைமாறும் செங்கொடியாய்
இராவண தேசமும் தசாப்சத்தில் மூன்றாம் புனித நிலமாகி விடும்
காட்சிக்கு கூட இனி இங்கு சிலைகள் மிஞ்சாது. பக்ச வம்சம் பக்கவாதத்தில் பீடித்துக்கொள்ளும்
மீள் எழுச்சிக்கு நரபலிகள் ஆயிரம் எடுக்கப்படும்.
குமரியில் மிஞ்சிய முப்பழ தேசங்கூட கடலுள் உறக்கம் கொள்ளும்
ஆந்திரா இன்னும் நரபலி கொடுக்க செம்மரங்கள் செழித்து வளரும் - நதியால் திராவிடம் தீ தெறிக்க சினி தலைகள் வேடிக்கை பார்க்கும். கொரிய வடக்கில் அதிர்ச்சி தெறிக்க உலகம் அதிர சாமுராய் புது அவதாரம் எடுப்பார்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது அணுமாற்றத்தால்
மாயர்காட்டி மறுபடி தட்டப்படும்-மக்களுக்காக
கழுகும் கம்யூனிசமும் நேரடியாக கடிபடபோவதில்லை
கடிபட்டு வலியுணர கருங்காலிக்கும் இஷ்டமில்லை…!!!

© அ. எல்றோய்
(மார்ச் 5. 2014 சமூகவலைதளத்தில் பதிவேற்றியது…)

MH370 காணாமல் போன விடயத்தில் பல ஊகங்கள் வெளிவந்தாலும் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக சில விடயங்களை ஊகிக்க வேண்டி இருக்கிறது.

( மார்ச். 17. 2014 சமூகவலைதளத்தில் எழுதிய எனது பதிவு…)

MH370 காணாமல் போன விடயத்தில் பல ஊகங்கள் வெளிவந்தாலும் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக சில விடயங்களை ஊகிக்க வேண்டி இருக்கிறது. 

கடத்தப்பட்டால் கடத்தலின் பின்னணியில் ஏன் இஸ்ரேல் அரசின் ஆபத்தான மொசாட் அமைப்பு இருக்கக்கூடாது? உலகத்தில் நடக்கும் வில்லங்கமான விடயங்களுக்கு மொசாட் என்ற அமைப்பை புறம் தள்ளிவிட்டு சிந்திக்க முடியாது. கதை, திரைக்கதை, வசனம் இயக்கி இயக்குநரின் பெயரில் இருந்து விநியோகஸ்தர்களின் பெயர் வரை இவர்களுக்கு சம்பந்தம் இல்லாமல் 100வருட நாடகத்தொடரை எழுதிவைப்பதில் இந்த அமைப்புக்கு சலைத்ததாக எதுவும் இல்லை… தன்நாட்டு எல்லை அச்சுறுத்தல் கொண்ட ஈராக், எகிப்து, சிரியா, பலஸ்தீனம், லெபனான், ஜோர்தான் என்று இந்த நாடுகளுக்குள் அரசியல் தளம்பலை உண்டுபண்ணி நிரந்தர இருப்பை தீர்க்கதரிசனத்தோடு தீர்மானிப்பவர்கள் யூதர்கள்.

( வடக்கு கூட்டணிபடை + அமெரிக்கபடை = ஆப்கானிஸ்தான் - தலிபான்)
( குர்தீஸ்படை + அமெரிக்கபடை = ஈராக் - சதாம் அரசு )
( சுன்னிப்போராளிகள் + அமெரிக்கபடை= சிரியா - ஷியா அரசு )
அரசஇராணுவம் + மேற்குலக நிகழ்ச்சிநிரல் = எகிப்து - மோர்சி அரசு )
தன்கையை கொண்டு தன்னை குத்தவைப்பதில் அமெரிக்கவுடன் இணைந்த மிகச்சிறந்த கூட்டாளி இஸ்ரேல்.
ஆனால் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் ஈரானில் இந்த அரசியல் சமநிலையை குழப்புவதற்கு ஏதுவான காரணங்கள் தான் இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சிரிய போராளிகளை கொண்டு ஈரான் மீது எதிர்காலபோரை நிறைவேற்றுவதற்கு அசாட்டுக்கு ஈரான் அளித்துவந்த ஆதரவே போதுமானது. இதைவிட நாசிச கொள்கை கொண்ட உக்ரைனை ரஷ்யா முட்டுவதன் மூலம் யூத அரசு ஒரு கல்லில் 5 மாங்காய்களை அடிக்கமுடியும். ரஸ்ய ஆதரவு ஈரானுக்கு இல்லாமல் போவதற்கும் ரஸ்ய சீன நட்பு அடியோடு தூண்டிக்கப்படுவதற்கும் ரஸ்யாவின் பெயரால் நாமம் போட இந்த அமைப்பால் மிகச்சிறப்பாக செய்ய முடியும். அதற்கான தொழிநுட்பம், இராணுவபலம், பலநாட்டுகுடியுரிமையுடன் பிறப்பிலே மொசாட் அமைப்புக்கு தத்துக்கொடுத்தவர்களின் பல கதைகளை சரித்திரங்களில் பதியப்பட்டிருக்கின்றது.

உதாரணங்களுக்கு நிறைய விடயங்கள் உண்டு. ஆனால் டைப்பண்ணநேரம் இல்லை.... சில விடயங்களை நேரமும் காலமும் தீர்மானிக்கும் வரை காத்திருப்போம். இதை என்தனிப்பட்ட சந்தேகமாக பதிகிறேன். ஏதும் விமர்சனம் இருப்பின் முன்வையுங்கள். 
© அ. எல்றோய் ( மார்ச். 17. 2014 சமூகவலைதளத்தில் எழுதிய எனது பதிவு…)

வியாழன், 1 மே, 2014

தொழிலாளர் தினவாழ்த்துக்கள் 2014 - MAY DAY



உழைப்பவர்களை போற்றும் தினம் இது 
உலகத்தவர்கள் போற்றும் மேதினமிது
வியர்வை சிந்தும் மனிதர்களை 
வியந்து பார்க்கும் நேரமிது

அக்கிரமங்களை கண்டெழுந்து
அழிக்கத்துணிந்தோர் ஆயிரமானோர்
சர்வதேச புரட்சியும் தடைகள் கடந்து
சரித்திரமானது உரிமை வென்று

உழைப்புக்காக குரல்கொடுத்தோரை நினைத்திடுவோம்
உணர்வுக்காக உயிர்கொடுத்தோரை உயர்திடுவோம்
பிழைப்புக்காக ஊர்பிரிந்து உலகை செதுக்கும் - எம்
பிள்ளைகளையும் ஒருதரம் வாழ்த்திடுவோம்

வாழ்வதற்கான பணத்தை பெற்றிடுவோம் - பணத்திற்காக
வாழ்வதை வெறுத்திடுவோம்
விழிதிறந்து உழைத்திடும் விதைகளெல்லாம்
விடியலின்போது விருட்சமாய் விளைந்திருக்கும்

அடிமை அச்சத்தை தவிர்த்திடுவோம்
அஞ்சாத உழைப்புக்கு வழிசமைப்போம்
விடுமுறை நாளுக்கான கொண்டாட்டத்தை தவிர்த்து
வியர்வைக்கான நாளாய் கொண்டாடுவோம். 
------ அன்புடன் அ. எல்றோய் --------