புதன், 23 ஏப்ரல், 2014

பச்சைக்காதலியே


அன்பான பச்சைக்காதலியே...
என்னை அழைத்திடவா! உன்னை அணைத்திடவா! 
பாசமழையில் உன் அன்பில் நான் நனைந்திட,
உன் பசும்போர்வையால் எனை துவட்டிட வா…:)

© அ. எல்றோய்

புலம்பெயர்வு '95'


பிறந்தது ஒர் இடம்
தவழ்ந்தது ஒர் இடம் 
வளர்ந்தது ஒர் இடம் 
பிரிந்தது ஒர் இடம் 
படித்தது பல இடம் 
பாதுகாத்தது ஒர் இடம் 
பகுத்தறிவு தந்தது ஒர் இடம் 
தொழில் செய்தது ஒர் இடம் 
செய்த தொழிலோ பல இடம் 
பூவூரை விட்ட புலம்பெயர்வு '95'
இன்னும் என்னை விரட்டுகிறது.
பொருளாதார யுத்தமாக… 


( கிறுக்கல் - அ.எல்றோய் )

நரிக்கூட்டங்கள்….

யுத்தம் தின்ற பூமியில் எச்சம் தேடும் நரிக்கூட்டங்கள்...
சட்டம் போட்ட கருவறைக்குள் பதுக்கித்தாவும் பரதேசிகள்...
கொட்டம் அடக்க குரல்வளையில்லா குழையோன் - நீங்கள் 
எட்டும் நிழலில் ஏட்டுடன் நிழலாடுவது ஏனோ… 

ஆக்கம் - அ. எல்றோய்

கொமன்வெல்த் - அடிமைகளின் கூட்டமைப்பு

கொமன்வெல்த் அமைப்பு பிரித்தானியாவின் முன்னாள் முடிக்குரிய நாடுகளின் கூட்டமைப்பு. 'வளங்களை சூறையாடியவர்கள், பிரித்தாளும் தந்திரங்களை மேற்கொண்டவர்கள், மரணவியாபாரிகள், மக்களை அடிமைப்படுத்தியவர்களை' உலகமயமாக்கல் என்ற நாகரீக போர்வை போர்த்திக்கொண்டு துதி பாடுகிறோம். "நாங்கள் உங்கள் அடிமையங்க..! இதுவும் ஒரு நவீன காலனியத்துவம்தான்… - அ. எல்றோய்