நாம் வாழும் இப்பூமி திடீரென 2012 டிசம்பர் 21ல் முடிவுக்கு வரப்போகின்றதா? ஆம் என்கின்றது ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விழிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. மாயன், இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம். அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது.
ஆதி எகிப்திய மக்களால் கூட 2012 ஓர் பாரிய மாற்றத்திற்கான ஆண்டாக எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது. புவியின் துருவப்பகுதிகள் இடம்மாறுவதனால் புவியில் உலகளாவிய பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டும், வெளிக்கிழம்பும் எரிமலை புகை மற்றும் புழுதிகளால் ஏறக்குறைய 40 வருடங்களுக்கு சூரியனை பார்ப்பதே இயலாது போகும் என்கின்றனர் மாயன் நாட்காட்டியை நம் புகின்ற இன்னோர் குழுவினர். இவ ற்றை எல்லாம் மறுக்கும் இன் னொரு பகுதியினர் புவியின் முடிவு என்பது சாத்தியமற்ற ஓர் விடையம். சில வேளைகளில் புதிய யுகம் ஒன்று தோன்றக்கூடும் என்கின்றனர். எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கங்கள், சுனாமி, சூறாவளி என ஏற்படும் அனர்த்தங்களினால் மனித சமூகத்தின் பேரழிவு ஒன்று ஏற்படும் என கூறுகின்றது மாயன் நாட்காட்டி. மாயன் நாட்காட்டியின் எதிர்பார்ப்பின் படி 2012 டிசம்பர் 21 (21-12-2011 GMT 11:11 P:M) எமது சூரியன் அதன் விண்மீன் மண்டலத்தின் (Galaxy) நேரடி பார்வையில் வருகின்றது. இந்த நேரத்தில் விண்மீன் மண்டலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள சூப்பர்நோவா கருங்குழி (Supernova black hole) மற்றும் எமது சூரியன், பூமி என்பன ஒரே நேர்கோட்டில் நேராக சந்திக்கவுள்ளன.
இந்தவேளையில் சூப்பர்நோவா கருங்குளியில் அதாவது, எமது விண்மீன் மண்டலத்தின் மையத்தில் இருந்து வரும் காந்த அலைகளால் எமது பூமியும் சூரியனும் வெகுவாக பாதிக்கப்படவுள்ளது. இந்நேரத்தில் சூரியனின் அதிகமான மாற்றங்கள் இதனை சூரிய நிலநடுக்கம் (sun earth quack) என்கிறது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனப்படுகின்றது. இச்செயற்பாடு ஒவ்வொரு 26,000 வருடங்களுக்கு ஒருமுறை நடை பெறுவது என்கிறது மாயன் நாட்காட்டி. இவ் விடையத்தின் உண்மைத்தன்மை குறித்து விஞ்ஞானிகள் மத்தியில் குழப்பமான பதில்கள் தோன்றி யிருக்கின்றன.
இன்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மாயன் சமூகம் மூவாயிரம் வருடங் களாக உலகின் பிரசித்திபெற்ற ஆதி சமூகமாகும். மாயன் கணிப்புகளில் நடந்தேறியவை அதிகம். மாயன் சமூகம் மத்திய அமெரிக்காவின் மெக்சிக்கோவில் தென் மாகாணங்கள் மற்றும் வடக்கு, மத்திய அமெரிக்கா வின் இன்றைய குவாதமாலா, எல்சல்வாடோர், கொண்டூரஸ் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கி கி.மு. 2000 தொடக்கம் கி.பி. 250 வரையான புராதன காலத்தின் ஆரம்பகாலங்களில் வளர்ச்சியடைந்த ஒரு சமூகமாகும். கி.பி. 250 தொடக்கம் கி.பி. 900 வரையிலான புராதன காலங்களில் மாயன் நகரங்கள் அதிகளவான வளர்ச்சி கண்டிருந்தன. மாயன் சமூகம் கணிதவியல் மற்றும் வானியல் என்பனவற்றில் வளர்ச்சியடைந்த எழுத்தறிவு கொண்ட ஓர் சமூகமாக இன்று இனங்காணப்பட்டிருக்கின்றது.
மாயன் நாட்காட்டி
2012 புவியின் இறுதி எவ்வாறு தீர்மானிக்கப்பட போகின்றது என்பது குறித்து பல கருத்துகள் தோன்றியிருந்தாலும், அதிகமாக பேசப்படுகின்றதும் அதிகளவில் சாத்தியமானதும் என பலராலும் விவாதிக்கப்படுகின்ற ஒரு விடையம் குறித்து இங்கு குறிப்பிடலாம். 2012 இன் பின்னர் எமது விண்மீன் மண்டலத்தின் நேர்கோட்டிற்கு வரும் பூமி அதை பூமியினுடைய காந்தப்புலங்கள் திசைமாறும் எனப்படுகின்றது. இதனால் துருவங்கள் இடமாறுவது டன், அதுவே புவியின் பாரிய அழிவுக்கு வழிகோலும் எனப்படுகின் றது. பாரிய எரிமலை வெடிப்புகள், சுனாமிகள் மற்றும் நிலநடுக்கங்கள் என்பனவற்றுடன் நவீன மனித சமூகத்தின் அழிவு ஒன்று அரங்கேறவுள் ளது என்கிறது மாயன். இப்படியான துருவங்களின் இடமாற்றத்தினால் நிகழும் இச்செயற்பாடுகள் புவியில் உள்ளவர்களின் கண்ணுக்கு ஏறக்குறைய 40 வருடங்கள் சூரியனின் பிரசன்னத்தை மறைக்கும் அளவிற்கு புவியை புகைமண்டலங்கள் மூடிக்கொள்ளும் எனப்படுகின்றது.
“துருவங்களின் இடப்பெயர்ச்சி” என்ற விடையம் விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். எனினும், அது 2012ல் நிகழுமா என்பது குறித்து விஞ்ஞானிகளால் எதுவும் கூறப்படவில்லை. விண்மீன் மண்டலத்தின் ஒருநாள் என்பது புவியின் 25,625 வருடங்களைக் கொண்டது. இதனை மாயன் நாட்காட்டி 5,125 வருடங்களைக் கொண்ட ஐந்து காலகட்டங்களாக பிரிக்கின்றது. அதன்படி எமது பூமி இப்போது ஐந்தாவது காலகட்டத்தின் இறுதியில் இருக்கின்றது. என்கின்றது 2012 டிசம்பர் 21 இக்கட்டத்தின் முடிவுடன் அடுத்த புதிய யுகத்தினுள் மனித சமூகம் நுழையவிருக்கின்றது என்கிறது மாயன். எமது சூரியன் அடிக்கடி அதன் மத்திய விண்மீன் மண்டலத்தினால் புத்துயிர் பெறச் செய்யப்படுகின்றது என்பதனை மாயன் சமூகம் ஒவ்வொரு 5, 125 வருடங்களுக்கும் ஒருமுறை இச்செயற்பாடு நடைபெறுவதாக தெரிந்திருந்தார்கள்.
2012ல் நடைபெறவிருக்கின்ற அவ்வாறான ஒரு செற்பாட்டினால் எமது சூரியனின் ஒளிரும் தன்மை அதிகரிப்பதுடன் சூரியனில் இருந்து அதிகமான தீச்சுவாலைகள் தோன்றும் என மாயன் குறிப்பிடுகின்றது. அந்தவேளையில் புவியின் காந்தப்புலங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என இன்று மாயன் நாட்காட்டியினை மேற்கோள் காட்டும் சிலர் குறிப்பிடுகின்றனர். மாயன் கணிப்பின்படி இறுதியாக நான்காவதாக வாழ்ந்த மனித சமூகம் கி.மு. 3113 வருடங்களுக்கு முன்பு பாரிய வெள்ளப்பெருக்கினால் மிகவும் அரிதானவை தவிர ஏனையவை அழிந்திருக்கின்றன.
The Mayan Calendar
அதனால் தமது சமூகத்தின் அடுத்த அழிவு தொடர்பாக அறிந்து கொண்டால் அதிலிருந்து தமது சமூகத்தை பாதுகாக்க முடியும் என மாயன் சமூகம் இது தொடர்பான விடையங்களில் அதிக ஆர்வம் கொண்டதாக இருந்திருகின்றது. எமது சூரியத் தொகுதியின் அசைவு பற்றி மாயன் சமூகத்தினர் அன்றைய காலத்திலேயே அறிந்து வைத்திருந்தனர். மேலும் அவர்கள் எமது பூமி சூரியனை சுற்றுவது போன்று எமது ஞாயிற்றுத் தொகுதி அதன் விண்மீன் மண்டலத்தினை வலம்வருவதாக நம்பினர். இதன்போது ஏற்படுகின்ற மாற்றங்களை காட்டுகின்ற சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி ஒன்றை அமைத்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே இன்று இக் குழப்பத்துக்கான ஆரம்பங்கள் தோன்றியிருக்கின்றன.
நவீன மனித சமூகத்தைப் பற்றி வரலாற்றில் அதிகமாக பேசப்பட்ட ஒரு ஆண்டு என்ற வகையில் 2012 தொடர்பான இக்குழப்பங்கள் தொடர்பில் இன்று விஞ்ஞானிகளின் கருத்துகளை ஏற்பதற்கு உலகின் ஒரு பகுதி மக்கள் தயாரில்லை. பெருமளவான மக்களிடையே வேகமாக பரவிக் கொண்டிருந்த இந்த விடையம் தொடர்பில் விண்வெளி அறிஞர்கள் விழிப்படைந்திருக்கின்றனர். உண்மையில் மாயன் குறிப்பிடும் இந்த கணிப்பீடு தவறானது. எமது விண்மீன் மண்டலத்தில் 2012 இல் எந்தவித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை என்பது தற்போதைக்கு விஞ்ஞானிகளின் உறுதியான பதிலாக இருக்கின்றது.
உண்மையில் 2012ல் ஒரு மாற்றம் ஏற்படலாம் என்பது பலர் ஏற்றுக் கொள்கின்ற ஒரு கருத்தாக இருந்தாலும், அம்மாற்றங்கள் எவ்வளவு தூரம் மனித சமூகத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் எவரிடமும் தெளிவான ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கங்கள் இல்லை. எமது ஞாயிற்றுத் தொகுதியானது 2008- 2015 க்கு இடைப்பட்ட இக்காலப்பகுதியில் அதன் விண்மீன் மண்டலத்தின் நேர் கோட்டிற்கு வரலாம் என பலரும் நம்புகின்றனர். உண்மையில் மாயன் சமூகத்தின் சுழற்சி நிழ்வுகளின் நாட்காட்டி 2012 டிசம்பர் 21 அன்று முடிவடைகின்றது. இது அந்த சமூகத்தின் புதிய யுகத்திற்கான வரவேற்பாகவும் ஒரு பாரிய வைபவமாகவும் இருக்கலாம் என்கின்றனர் பல ஆய்வாளர்கள். ஆனால் மாயன் குறிப்பிடும் இந்த யுகத்தின் முடிவும் 2012இன் பின்னரான புதிய யுகத்தின் ஆரம்பத்துக்கும் இடையில் எத்தகைய மாற்றங்களை புவி சந்திக்கவுள்ளது என்பது அனைவரும் காத்திருந்து பார்க்க வேண்டிய விடையமாகும்.
இந்திய நாளிதலில் வெளியான செய்தி ஒன்று அதன் முக்கியத்துவம் கருதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012ல் பூமியை அடையும் அபாயம்: அறிவியலாளர்கள் எச்சரிக்கை.
கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது. வெரசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8ம் நாளான்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழில்நுட்ப உபரகணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள். “நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்” என நாசாவின் ஈலியோ இயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் பிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார். சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தொழில்நுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும். இருந்தாலும் “பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்” (Coranal mass ejection, CMES) மனித இனத்தைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இது 2012ம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற் படுகின்றன.
பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும். அதிதொழில் நுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச் சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார் கள்.
புவி, ஞாயிற்றுத் தொகுதி அதன் விண்மீன் மண்டலம் தொடர்பான செயற்பாடுகள் சார்ந்து ஒரு தாக்கம் இடம்பெறுமானால், நிச்சயமாக அது சில வினாடிகளுக்கு மட்டுமோ அல்லது சில நிமிடங்களுக்கோ நடைபெறுவதல்ல. எத்தகைய மாற்றங்களாயினும் அவை குறிப்பிட்ட காலங்களுக்கு முன்னிருந்தே சிறிது சிறிதாக தென்பட ஆரம்பித்து, பின்னர் குறித்த காலத்தில் இருந்து சிறிது சிறிதாகவே முடிவடைய வேண்டும். எனவே இவ்விடையத்தின் உண்மைத்தன்மை தொடர்பாக நாம் உய்த்தறிவதற்கு தற்போதைய நடைமுறை உலகம் சிறந்த புத்தகம்.