சனி, 27 மார்ச், 2010

முட்டாள்கள் தினம் - April Gawk

“ஏப்ரல் முட்டாள்கள்” (April Fool)

பிரான்சு தேசத்தில் 1500 களில் ஆண்டுத் துவக்க நாளாக ஏப்ரல் 1ம் தேதியையே கொண்டிருந்தனர். 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைபடுத்தும்படி அறிவித்தார்.அதன்படி, ஆண்டுத் துவக்க நாளாக சனவரி 1ம்தேதியை அறிமுகம் செய்து வைத்தார். இனி மேல் பிரான்சு தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்படது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.

ஏப்ரல் 1ம்தேதியைக் கொண்டாடியவர்களை கேலியும் கிண்டலும் செய்ததோடு அவர்களை நூதனமாக ஏமாற்றி “ஏப்ரல் முட்டாள்கள்” (April Fool) என்றழைக்கவும் செய்தனர். நள்ளிரவு தாண்டியும் நாட்டிய நடனங்களில் ஈடுபட்டு மிகுந்த மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கின்றனர்.
சனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக் கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர். இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர்.இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம்

இன்று ஏப்ரல் முதலாம் திகதி. இதை உலகின் பல நாடுகளில் “முட்டாள்கள் தினம்” என்று கொண்டாடுகின்றார்கள். அன்றைக்கு ஒருவரை ஒருவர் விளையாட்டாக ஏமாற்றி மகிழ்வார்கள். இந்த “முட்டாள்கள் தினம்” ஐரோப்பாவில் இருந்து மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதியான ஒரு தினம் ஆகும்.
தமிழர்களுக்கு என்றும் ஒரு “முட்டாள்கள் தினம்” உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதை இதில் சொல்ல வேண்டும். ஐரோப்பியர்களிடம் என்ன காரணத்திற்காக “முட்டாள்கள் தினம்” என்பது உருவானதோ, அதே காரணம் தமிழர்களிடமும் இருக்கின்றது.
“முட்டாள்கள் தினம்” எவ்வாறு உருவானது என்பது பற்றி பல ஆய்வுகள் உண்டு. அதில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வைப் பார்ப்போம்.

ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்ரல் முதலாம் நாள்தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் 16ஆம் நூற்றாண்டில் புதிய ஆண்டு முறை கொண்டு வரப்பட்டு ஜனவரி முதலாம் நாள் புத்தாண்டு தினமாக மாற்றப்பட்டது. ஆனால் உடனடியாக இந்தப் புத்தாண்டு அனைவராலும் ஏற்றக் கொள்ளப்படவில்லை.

ஸ்கொட்லாந்து 1660இலும், ஜேர்மனி, நோர்வே, டென்மார்க் போன்றவை 1700இலும், இங்கிலாந்து 1752இலும், பிரான்ஸ் 1852இலுமே இந்த புதிய ஆண்டு முறையை ஏற்று அங்கீகரித்தன. நாடுகள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டாலும், மக்கள் அனைவரும் அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஏப்ரல் முதலாம் நாளை தொடர்ந்தும் புத்தாண்டு நாளாக கொண்டாடிக் கொண்டிருப்பவர்களை “முட்டாள்கள்” எனும் கருத்துப்பட அன்றைய நாள் “முட்டாள்கள் தினம்” என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டது. புத்தாண்டின் முதல் நாளாக இருந்த ஏப்ரல் முதலாம் நாள் இவ்வாறு முட்டாள்களுக்கு உரிய நாளாக மாறியது.

இன்று ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம். பலரும் உங்களை பொய் கதைகளை கூறி முட்டாளாக்க முயற்சிப்பார்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

அன்றைய ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி பொழுது புலர்ந்து பூபாளம் பாடுகிற வேளை தான் வசந்தம் துவங்குகிற பொன்னாள்.இது கி.பி.154க்கு முன்பிருந்து பொதுமக்களால் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை. புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
இந் நாளில் கடவுளுக்கு பலி செலுத்தும் பழக்கமும் காணிக்கைகளைச் செலுத்தும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர். ஆடல், பாடல், நடனம் என்று கலை நிகழ்ச்சிகளில் மூழ்கி தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டனர். இது எதிர் வரும் புத்தாண்டைச் சிறப்பாக வரவேற்கும் வகையான நிகழ்வின் வெளிப்பாடாகக் கருதப்பட்டது. மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கை நிலவிட வழிபாடுகளை மேற்கொண்டனர்.


ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், "பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம்தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார்.

திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின் போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார். இந்த ஒரு வாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
16ம் நூற்றாண்டில் பிரான்சு தேசத்தில் துவங்கியது இந்தப் பழக்கம். 1500களில் ஆண்டுத் துவக்க நாளாக ஏப்ரல் 1ம் தேதியையே கொண்டிருந்தனர். 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப் படுத்தும்படி அறிவித்தார்.

ஆண்டுத் துவக்க நாளாக சனவரி 1ம்தேதியை அறிமுகம் செய்து வைத்தார். இனி மேல் பிரான்சு தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்படது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம்தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.


ரோமாபுரி... ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர். இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர். இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம்.

சனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக் கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர். இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர்.
ஏப்ரல் முதல் நாளை, "Poission d'avril " என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக் கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் ·பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இல்லிநாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் ·பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார். கிரகோரியன் காலண்டரை ஏற்றுக் கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்."

நெப்போலியன் I , ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810-ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.


ஸ்காட்லாந்தில்

"April Fool's Day"யை, "April Gawk" என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.

அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார். ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், "இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்," இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.

"ஏப்ரல் மீன்" பிரெஞ்சுக் குழந்தைகள் கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் "ஏப்ரல் மீன்" என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.


அமெரிக்காவில்...

அமெரிக்காவில் "April Fool's Day" அல்லது "All Fool's Day" என்று அழைக்கிறார்கள். சாதாரணமாக ஒரு நண்பர் இன்னொரு நண்பரை திடீர் என்று, "ஒன்னோட ஷ்லேஸ் அவிழ்ந்து தொங்குது பார்" என்றோ முதுகுப் பக்கம் கோட்டுல ஏதோ ஒரு கறை அசிங்கமா இருக்கு, மொதல்ல அதைக் கழட்டு என்று சொல்லி ஏமாற்றுவார்கள். 19ம் நூற்றாண்டில் ஆசிரியர்களே மாணவர்களிடம் அங்க மேல பாருங்க பொம்மை கூஸ் பறக்குதுன்னு சொல்வாங்களாம். (நம்ம ஊர்ல வெள்ளைக் காக்கா பறக்குதுன்னு சொல்வோமே..!) மாணவர்கள் சக மாணவர்களைப் பார்த்து இன்னைக்கு ஸ்கூல் லீவு தெரியுமா? அப்படின்னு சொல்லுவார்கள். எது எப்படியோ அவர்கள் ஏமாந்தவுடன் ஹை..... எப்ரல் ·பூல் என்று சொல்லி குதூகலித்துக் கொள்வது என்ற அளவில் தான்.

ஏமாற்றலுக்கு ஏமாற்றல் என்றும் நடப்பதுண்டு. சர்க்கரைச்(சீனி) சாடியில் உப்பைப் போட்டு ஏமாற்றுதல், மணிப் பர்ஸில் ஒரே ஒரு பென்னியை வைத்து ஏமாந்தாயா முட்டாள் என்று எழுதி நண்பர்களை ஏமாற்றுதல் சகஜமான ஒன்று. கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதிகளில் ஒரு மணி நேரத்தை பின்னோக்கி வைத்து குறிப்பிட்ட வகுப்புகளுக்குப் போக விடாமல் செய்வது; அல்லது வரலாறுக்குப் பதிலாக உயிரியல் வகுப்புக்குச் செல்ல வைப்பது; ஆனால் யாருக்கும் தீங்கிழைப்பது இல்லை; ஏமாற்றலுக்குப் பழி வாங்குதல் என்று இன்று வரை நடந்தது கிடையாது என்றே சொல்ல வேண்டும். ஆங்காங்கே முட்டாள்தனமான ஜோக்குகளைச் சொல்லி விலா எலும்பு நோகச் சிரிக்க வைத்தல் போன்றெல்லாம் நடக்கும்."

மெக்சிக்கோ...
மெக்சிக்கோவில் பாரம்பரியமான முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடினாலும் இங்கு அது வேறு நாளில் வேறு காரணங்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. "El Dia los Inocents " என்று டிசம்பர் 28ம் தேதி பச்சிளம் பாலகர்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. அதிர்ஷ்டமற்ற நாட்கள் என்று முட்டாள்களாக்கப் பட்டவர்கள் கருதுகிற சூழலை பத்திரிக்கைகள், வானொலி, தொலைக் காட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு செய்திகளை வழங்குகிறது.

திரைப்படம்...

1986-ல் ·ப்ரெட் வால்டன் இயக்கிய, "ஏப்ரல் பூல்ஸ் டே" திரைப்படம் மிகப் பிரபல்யம் ஆனது. டெபோரா ·போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.

சர்வதேச ஆண்கள் தினமும் ஏப்ரல் 1 தான் என்று அறிஞ்சன். இது உண்மையா? He he he he he..........

உலக தினங்கள்!

உலக தினங்கள்!
ஜனவரி
26 - உலக சுங்க தினம்
30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

பிப்ரவரி

14 - உலக காதலர் தினம்

மார்ச்

08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்

ஏப்ரல்

01 - முட்டாள்கள் தினம்
05 - உலக கடல் தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே

01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்

ஜீன்
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

ஜீலை

01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட்

01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

செப்டம்பர்

08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்

அக்டோபர்

01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

நவம்பர்

18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்

டிசம்பர்

01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்

வியாழன், 11 மார்ச், 2010

82வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா

82வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா :

ஆஸ்கார் வரலாற்றில் முதன் முறையாக சிறந்த இயக்குநருக்கான விருது இந்த முறை கேத்ரின் பிகாலோவ் என்ற பெண் இயக்குநர் "தி ஹர்ட் லாக்கர்" என்ற திரைப்படத்திற்காக பெற்றுள்ளார்.



82வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா : 'அவதார்'க்கு 3 விருதுகள் மட்டுமே

உலகளவில் மிக பிரபலமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்ல்ஸில் பிரமாண்ட கலை கூத்து கொண்டாட்டங்களுடன் நடந்தது. இது 82வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவதார் படம் 3 விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷ்வல் எஃபக்ட்ஸ், மற்றும் சிறந்த கலை இயக்குனர் விருதுகளை அவதார் படம் வென்றது.

‘தி ஹர்ட் லாக்கர்’ படம் 6 விருதுகளை வென்று பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கிரேஸி ஹார்ட், அவதார் ஆகிய படங்கள் அதிக விருதுகளை வென்றுள்ளன.உலகளவில் அதிக வசூலை அள்ளிக் குவித்து புதிய சாதனை படைத்த ‘அவதார்’ திரைப்படத்திற்கு, சிறந்த கேமரா, சிறந்த கலை இயக்கம், விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 3 பிரிவுகளிள் மட்டுமே ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.


ஈராக்கில் தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டுகளை அகற்றும் பணியில் உயிரைப் பணயம் வைத்து ஈடுபடும் அமெரிக்க வீரர்கள் குழுவை மையமாக வைத்து மார்க் போல் (Mark Boal) எழுதிய திரைக்கதையைக், ‘தி ஹர்ட் லாக்கர்’ என்ற பெயரில் கேத்ரின் பிகிலோ திரைப்படமாக இயக்கினார்.



ஆஸ்கர் பந்தயத்தில் உலகளவில் மிக அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ திரைப்படத்திற்கு முன், உணர்வுப்பூர்வமாக படமாக்கப்பட்ட ‘தி ஹர்ட் லாக்கர்’ ஆஸ்கார் பெறுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது, அனால் 6 விருதுகளை ‘தி ஹர்ட் லாக்கர்’ அள்ளிச் சென்றுள்ளது.



சிறந்த இயக்குனருக்கான விருதை வென்று வரலாறு படைத்துள்ள கேத்ரின் பிகிலோவின் முன்னாள் கணவர்தான் ‘அவதார்’ படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் என்பது குறிப்பிடத்தக்கது.


நான் அதிகமாக 5 தடவைகள் தியேட்டரில் சென்று பார்த்து ரசித்த திரைப்படம் அவத்தார். அனைத்து விருதுகளையும் தட்டிச்செல்லும் என்று எதிர்பார்த்தேன்.ஆனால் பொய்ப்பித்துவிட்டது. என்னை பொருத்தவரையில்  ‘தி ஹர்ட் லாக்கர்’  ஜ  விட பன்மடங்கு சிறப்பானது (“Avatar”).உலக சினிமாவிலும் நலன்சார் அரசியல் நுழைந்தமையால் 2008ல்  benjamin button திரைப்படத்துக்கு பல எதிர்பார்ப்புக்களில் இருந்தும் Slamdog Millionaire க்கு வாய்ப்புக்கிடைத்தது. இவ்வருடம் ‘தி ஹர்ட் லாக்கர்’ க்கு.இதில் பொதுவான அம்சம் என்னவென்றால் 2008 இந்தியாவை மையப்படுத்திய Slamdog Millionaire /   2009 மத்திய கிழக்கை மையப்படுத்திய  (“The Hurt Locker”)  /  2010 ஆனது சீன திரைப்படத்துக்கு வாய்ப்புக்கிடைப்பதற்கான் சூழல் அதிகம்.உலக பொருளாதார அரசியல் நகர்வுப் போக்குக்கு எதுவும் சிக்கலாம்  என்பது எதிர்கால நாளைய உலகநியதியாகும்.


 


விருது பட்டியல்



சிறந்த நடிகர் - ஜெஃப் ப்ரிட்ஜஸ் (“Crazy Heart”)

சிறந்த நடிகை - சான்டரா ஃபுல் லாக் (“The Blind Side”)

சிறந்த துணை நடிகர்: கிறிஸ்டோப் வாட்ஸ் (“Inglorious Basterds”)

சிறந்த துணை நடிகை: மோனிக் (“Precious”)

சிறந்த இயக்குனர் - கேத்ரின் பைக்லோ (“The Hurt Locker”)

சிறந்த படம் - தி ஹர்ட் லாக்கர்! “The Hurt Locker”

சிறந்த அவையயூட்ட திரைப்படம் : Up

சிறந்த பிற மொழி படம்: The Secret in Their Eyes (El Secreto de Sus Ojos, Argentina)
சிறந்த இசை - மைக்கேல் ஜியான்ஜேர் (“Up”)

சிறந்த பாடல்: “The Weary Kind,” Music and Lyrics by Ryan Bingham and T Bone Burnett (Crazy Heart)

சிறந்த கலை இயக்குநர் - ரிக் கார்டர் - ரோபர்ட் ஸ்ட்ராம்பெர்க் (Avatar)

சிறந்த ஒளிப்பதிவு - மரோ பியோர் (“Avatar”)

சிறந்த உடையலங்காரம்: Sandy Powell (“The Young Victoria”)

சிறந்த ஒப்பனை: Star Trek

சிறந்த எடிட்டர் - பாப் முராஸ்கி & க்ரிஸ் இனிஸ்(“The Hurt Locker”)

சிறந்த குறும்படம் - தி கவ் (The Cove)

வியாழன், 4 மார்ச், 2010

பகல் நேரத்தில் தூங்குவது மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கிறது

பகல் நேரத்தில் தூங்குவது மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கிறது


பகல் நேரத்தில் தூங்குவது உடல் நலத்திற்கு தீங்கானது என்ற கருத்து பரவலாக உள்ளது. தற்போது பகலில் சிறிய தூக்கம் போட்டால் மூளையின் செயல்பாடு அதிகரித்து அறிவு திறன் வளரும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதற்கான ஆய்வை பெர்கலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைகழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். தொடக்கத்தில் இவர்கள் 39 பேரிடம் ஆய்வை மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில் அவர்களை நன்றாக தூங்கவைத்து விட்டு காலையில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர். அதே வேளையில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிட நேரம் மட்டும் சிறிய அளவில் தூங்க வைத்தனர்.
இவர்கள் இருதரப் பினரின் செயல்திறன் பரிசோதிக்கப்பட்டது. இதில், பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளைசெயல்பாட்டு திறன் அதிக அளவில் இருந்தது.
இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் இதே முடிவுதான் கிடைத்தது. இந்த ஆய்வறிக்கை கலிபோர்னியாவில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில் சமர்பிக்கப்பட்டது.

ம்ம்ம்......எனக்கும் காலையில் தூங்குவது பிடித்துப்போன விடயம்.

உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழி

உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழி

இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி
இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி
உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி
உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி
காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி
கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி
எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி
எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி
பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி
புதுமைக்கு புதமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி
இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி
இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி
முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி
மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி
உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி
உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி
மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி
மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி
பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி
புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி
அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி
விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி
மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி
இயல்,இசை,நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி
எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி
அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி
அற்புத உறவுகளுக்கு தனித்தனி சொல்லழகு தமிழ்மொழி
முல்லை,மருதம்,குறிஞ்சி,நெய்தல்,பாலை பாடிய தமிழ்மொழி
மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி
மனதை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி
மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி
தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி
தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி
ஒரு எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி
ஒரு எழுந்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி
காந்தியடிகள் மனதார புகழ்ந்திட்ட தமிழ்மொழி
தமிழனாக பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி
கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி
கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி
உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி
உலகில் ஈடு இணையற்ற உன்னதமொழி தமிழ்மொழி