வெள்ளி, 12 டிசம்பர், 2014

காவியத்தலைவன் - Kaviyathalaivan

ரசிகர்களுக்கு ஓர் உன்னதமான காவியம் 'காவியத்தலைவன்'
அழியும் நிலையில் உள்ள மேடைநாடகத்தை சினிமாவில் கொண்டுவந்து நாடகத்தையும், அன்றைய காலகட்டத்தையும் நம் கண்களுக்கு விருந்தாக காவியத்தலைவன் படம் மூலம் வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.
காதல், துரோகம், நம்பிக்கை, குருவிசுவாசம், தேசபக்தி, தேசத்துரோகங்கள், சுதேச சிந்தனைகள் என்று பல உணர்வுகளை ஒப்பேற்றி சிறப்பான புதுமையாக கலக்கலாக கமர்ஷியலாக கதை பண்ணி கலர்புல்லாக அதை காட்சியும் படுத்தி இருப்பதுதான் காவியத்தலைவனின் பெரும்பலம்.
கதையின் கதாபாத்திரங்களை பார்க்கும் போது நம்மவர் மத்தியில் வாழும் சில நரிக்கூட்டங்களையும் ஞாபகப்படுத்துவது அதிலும் ஒரு சிறப்பு. முகத்திற்கு நேரே நட்பு பாராட்டி புறமுதுகில் குத்தும் அதிகர் புழங்கும் எம்மவர்களை கண்முன்னே ஞாபகப்படுத்துவதில் காவியத்தலைவன் வெற்றி கண்டிருக்கிறது.
அனைத்து கதாபாத்திரங்களின் சிறப்பு, பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வசனவரிகள், காஸ்டியூம், கலைஇயக்கம் என்று அனைத்தும் பிரமாதம். நீண்ட நாட்களின் பின்பு சிறப்பான ஒரு திரைப்படம் பார்த்த ஒரு உணர்வு. மொத்தத்தில் ‘காவியத்தலைவன்’ காவியத்தில் இடம் பெறுவான்.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

தீபதிருநாளில் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 2014



இன்பம் பொங்கும் இத் தீபாவளித் திருநாளில்
எமது பேரன்பிற்கும், நல் மதிப்பிற்கும், நல் உறவிற்கும் உரிய
வாசகர்கள், பங்காளிகள், நேயர்கள், உறவுகள், ஊர்மக்கள், புலம் பெயர்ந்து வாழும்
அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும்
ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும்
வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி

நிறைவான செல்வத்துடன் , நோய் நோடி இல்லாமல்
நலமுடன் வாழ இத்தீபதிருநாளில் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்"

"அஷ்டலக்ஷ்மிகளின் தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"


வெள்ளி, 5 செப்டம்பர், 2014

இயற்கை வழிபாடு

இயற்கை வழிபாடு

இயற்கை வழிபாடு என்பது, உலகின் பல பாகங்களில், தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு பழக்கமாகும். ஆதியில் மனிதன் இயற்கையையே தெய்வமாக வணங்கினான் என்பதும் உலகில் உள்ள மதங்களுக்கு இயற்கையே முன்னோடியாய் இருந்தது என்பதும் எல்லோராலும் கருதப்படும் ஒரு பொது கருத்தாகும்.
இயற்கை வழிபாடு தோன்ற காரணங்கள்:
மனிதன், இயற்கையின் வளங்களை பயன்படுத்திக்கொண்டாலும், இயற்கையின் சீற்றங்களையும் அதன் வலிமையையும் கண்டு அதை பிரமிப்புடன் பார்க்கத் தொடங்கினான். இந்த பிரமிப்பே நாளடைவில், பயமாய் மாறி, பின், அந்த இயற்கையையே வணங்க தொடங்கினான். பயத்திலும், இயற்கையால் வரும் நன்மைகளை அனுபவித்ததால், அதன் காத்தல், அழித்தல் எனும் இருவேறு தன்மைகளையும் உணர்ந்து, அதை தன்னை விட மேலான ஒரு சக்தியாய் கருத ஆரம்பித்தான். பயமே பக்தி எனும் வழி இன்றும் பல மதங்களில் நிலவி வரும் ஒரு உண்மையாகும்.
இந்த பிரபஞ்சத்தில், எந்த ஒரு உயிரினமும், இயற்கையை ஒத்தே வாழ்கின்றன. உயிர் அல்லாத பொருள்களும், இயற்கை சார்ந்தே அமைகின்றன. அத்தகைய ஒருமித்த இயற்கை அமைப்பில், ஒவ்வொரு உயிர்ப்பொருளும், ஜடப்பொருளும், இயற்கையிலிருந்து தோன்றி சிறிது காலம் இருந்துப்பின் இயற்கையிலேயே மீண்டும் கலந்து அழிகின்றன.
இந்த கருத்தில் தான் இயற்கையின் அமைப்பினை, நிலம், நீர், தீ, காற்று மற்றும் வெளி என ஐந்து வகைகளாக பிரித்துள்ளனர். எல்லா பொருள்களும், இவை ஐந்திலிருந்தே தோன்றிப்பின் இவை ஐந்திலேயே கலந்து அழிகின்றன. இந்த தத்துவத்தை அறிந்த மனிதன், இந்த ஐந்து பூதங்களையும் முதலில் தெய்வமாக வணங்க தொடங்கினான். இயற்கையை வணங்கும் இந்த முறை உலகின் பல்வேறு புராதன வாழ்வியல்களில் இடம் பெற்றுள்ளது. கீழ்கண்ட பகுதிகளில் இது குறித்து நாம் அறிவோம்.
நிலம்:
கிரேக்கத்தின் 'கயா வழிமுறை' அழைக்கப்படும் வழிமுறை, பூமியை வழிபடும் முறையாகும். கிரேக்க மொழியில், கயா என்பது பூமியை குறிக்கும். இவ்வழிமுறையில், இயற்கைச் சமனியாக இந்த புவிக்கடவுளாகிய கயா அமைந்துள்ளதாகவும், இதுவே, பூமியில் ஏற்படும் பல்வேறு உயிர் நிலை மாற்றங்களுக்கும் காரணமாகவுள்ளது என கருதப்படுகிறது.
பண்டை கால எகிப்தியர்கள், பூமியை ஒரு ஆண் கடவுளாக கருதினர். எகிப்திய புராணங்களில் பூமி, செப், கெப் மற்றும் ஜெப் எனும் மூன்று பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமேரிய நாகரீகத்தில், நிலம், நீர், ஆகாயம் எனும் முப்பெரும் கடவுள்களில் ஒன்றாக கருதப்படும் பூமி என்லில் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்தியப் பண்பாட்டிலும், பூமி என்பது பொறுமைக்கு எல்லையாக கருதப்படும் இயற்கை கடவுள் ஆகும்.
நீர்:
நீர் என்பது பொதுவாக, அழுக்கை நீக்கும் ஒரு பொருளாகவே உள்ளது. தூய்மை எனும் பொருளுக்கு நீர் ஒரு அடையாளமாக உள்ளது. இத்தகைய தன்மையினால், நீர் என்றும் எல்லா மதத்திலும், வழிபாட்டு முறையில் இன்றும் இருந்து வருவதை காணலாம். 'மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்' என்ற வகையிலே, மழை மனிதனுக்கு உறவை உணர்த்தும் ஒரு சக்தியாக உள்ளது.
தீ:
தீயைத் தொழுவது ஜொராஸ்ட்ரியர்களின் பழக்கமாகும். தீக்கோயில்களையும் இவர்களது அமைப்பில் காண முடியும். தீ என்பது எப்போதும் மேல் நோக்கி செல்லும் குணங்கொண்டது. மேலும் தீயை அழுக்காக்க இயலாது. தீயின் இவ்விரு முக்கியமான குணங்களே தீ இவர்களது வாழ்முறையில் மேலானதாக எண்ணப்படுவதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
இந்திய வேத முறைப்படி தீ என்பது, மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஒரு பொருளாக கருதப்படுகிறது. இதன் விளைவே, எல்லா வகையான சம்பிரதாயங்களிலும் தீயின் பயன் அமைந்துள்ளது. இறந்த உடலை எரிப்பதும் இந்த நோக்கத்தில் தான் எனவும் எண்ணப்படுகிறது.
இன்றைய நிலை:
காலப்போக்கில் உண்மையான இந்த உருவங்களுக்கு வடிவங்கள் கொடுக்கப்பட்டு, பின் அந்த வடிவங்களையே மக்கள் வணங்கத்தொடங்கினர். இதன் தொடர்ச்சியே இந்த காலத்திலும் மேற்கூறிய இயற்கை தெய்வங்களையும் அதன் தொடர்ச்சியாய், வாழ்வாங்கு வாழ்ந்த மானிடர்களை தெய்வங்களாக தொழும் நிலையும் ஆகும்.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

மதவேறுபாடுகளில் வேட்டையாடும் மனிதவர்த்துக்கு "மதருசி" என்பது அலாதி சுவையானது…!

மனித உணர்வுகளை ஜக்கியப்படுத்துவதற்கும் உணர்வுபூர்வமாக கிளர்த்தெழுவதற்கும், பல்வேறுபட்ட முட்டாள் காரணங்களும் மாயைகளும் இந்த உலகில் மனித வாழிடங்களை சூழ்ந்துள்ளன. இந்த விடயம் உலகின் எந்த மக்களாளும் சரி! அரசாளும் சரி! பகுத்தறிவாளனாக காட்டிக்கொள்ளும் சமூகத்தவன் ஆனாளும் சரி! தவிர்க்க முடியாத ஓமோன்களை சூடேற்றி கிளர்ந்தெழவைக்கும் சமூக அடையாளங்கள், ஜாதிவேறுபாடுகள், வர்க்கவேறுபாடுகள், மதவேறுபாடுகள், நிறவேறுபாடுகள், அந்தஸ்துவேறுபாடுகள் பணவேறுபாடுகள், நிலவேறுபாடுகள், பிரதேசவாதங்கள், அடிப்படைவாதங்கள், நகரகிராமிய ஒதுக்குமுறை என்று தேடி தேடி சங்கங்களையும் சமூகங்களையும் ஆட்சிகளையும் தக்கவைக்க, கிளர்ந்தெழவைக்க இப்படிப்பட்ட அறிவிலியான விடயங்களை மனிதன் தனக்குத்தானே உருவாக்கிக் கொள்கிறான். இதன் விளைவுகள் ஆதிமனிதன் உணவுக்காக வேட்டையாடியதில் கண்ட சுகத்தையும் பெருமைகளையும் தற்கால மனித வேட்டையில் நிவர்த்தி செய்து கொள்கின்றான். இந்த சாதனைகளையும் அடக்குமுறைகளையும் இருபக்க நியாயங்களை பதப்படுத்தி தங்களுக்கான விளம்பரங்களையும் தத்தமது லாப நட்டக்கணக்குகளோடு ஊடகங்களும் துணை போய் கொண்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட வேறுபாடுகளில் வேட்டையாடும் மனிதவர்த்துக்கு "மத ருசி" என்பது அலாதி சுவையானது. இந்த வகையில் பல்வேறுபட்ட வேட்டையுகங்களை கடந்து வந்த மனித சமூகம் தற்காலத்தில் எதிர்நோக்கி இருக்கும் யுத்தங்கள் நலன்சார் பெருவல்லரசுக்கள் அல்லது புலனாய்வு அரசுக்களின் நீண்ட கால காய்நகர்தல்களின் தெளிவாக திட்டமிட்டு ஊடக உழைப்பை வெளிச்சமாக்கி ஆயுத வியாபாரத்தை சூடேற்றி புலனாய்வு காய்நகர்தல்களின் தெளிவாக திட்டமிட்டு ஊடக உழைப்பை வெளிச்சமாக்கி ஆயுத வியாபாரத்தை சூடேற்றி புலனாய்வு காய்நகர்தலை நிழலுட்டமாக நகர்த்தி, பலவருட இடைவெளியில் நகர்த்தப்பட்ட இராஜதந்திர தந்திரோபாய பிளவின் ஊடாக திறமையாக அரசியல் இருப்புக்களை இந்த கட்டுரை வழியாக அலசி ஆராய இருக்கின்றோம்…

1. நல்லிணக்கத்துக்குமான ஆத்ம திருப்திக்குமான சமூக ஒற்றுமைக்காக முன்மொழியப்பட்ட மதம் என்னும் பூதங்களுக்கு நடந்தது என்ன?

2. வன்முறையை தவிர்க்க வேண்டிய மனித மனிதபிமான மதம் எவ்வாறு சீர்குழைக்கிறது?

3. தன் மதம் சார்ந்தவன்தான் மனிதன் என்றால் பிறமதத்தவன் மிருகங்களா? இல்லை வேட்டையாடபடுபவனா? மதம் அபின் போன்றது என்ற வாதம் உண்மைக்குமானதா?

4. உலகமயமாக்கலில் மதம் செய்யும் விளம்பரம் என்ன?

5. அரசியல் இருப்புக்களையும் வியாபார உத்திகளையும் கடைப்பிடிப்பதற்காக மதகுருக்கள் மற்றும் உயர்மட்டத்தோர் எவ்வாறு மதத்தை கையாளுகின்றார்கள்?

6. ஊடகங்களும் மத விளம்பரங்களும். காலனியாதிக்க மதங்களில் பின்னணி. பாரம்பரிய மதவரலாற்றை மாற்றியமைக்கும் முட்டாள் வரலாற்று ஆசிரியர்கள் யார்?

7. நாகரீக உச்சித்தில் இருந்த இயற்கை வழிபாட்டுடன் தொடர்புடைய மனிதர்களை ஊடறுத்து சிதைத்தழித்து மதச்செருகலை கொண்டு வந்தவர்கள் யார்?

8. மதத்தை பயன்படுத்தி மனிதர்களை பிரித்தாண்டு தன்னை உலகபொலீஸ்காரனாக காட்டுபவன் யார்?

9. அன்பை புறக்கணிக்கும் மதம் எது? வன்முறையை போதிக்கும் மதம் எது? பிறந்து இறக்கும் வரை உணவுக்கு பதில் மதத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட மதக்குழந்தையின் சாதனை என்ன? அக்குழந்தையின் தலைவன் யார்?

10. உண்ண வழியில்லாத மனித கூட்டங்கள் இருக்கும் போது மூடநம்பிக்கையில் உணவை விரயமாக்கும் மதக்கோமாளிகள் யார்?

11.  நவீன உலகத்தின் இயங்குநிலையை தீர்க்கதரீசனத்தோடு தீர்மானிக்கும் சக்தி எது?

சர்ச்சைக்குரிய கட்டுரைகளோடு விரைவில்…

"மனம் கொண்ட மனிதனை அணைப்போம் மதம் கொண்ட மனிதனை வெறுப்போம்" - அ. எல்றோய்



திங்கள், 5 மே, 2014

சகுனியின் கூச்சம் - கைக்கூ கிறுக்கல்

அன்று விதைத்ததை இன்று அறுத்தோம்
இன்று இவர்கள் விதைத்ததை நாளை நாம் அறுப்போம்
இனி விதைப்பொறுக்கிகள் இருபக்கங்களாலும் அறுபடும்
அப்போது விதைத்தவனும் அறுத்தவனும் அணைபடுவான்.
நாளைய விளையலுக்காக
சேர்ந்து விதைத்திருந்தால் விதை
பொறுக்கிகளுக்கும் விடியல் இருந்திருக்கும்
இனி இங்கு விளைச்சல் இல்லை அறுவடை மட்டும்தான்
விளைநிலங்களுக்கும் சிந்திக்கின்றன...
வீரம் மட்டுமல்ல ஈரமும் வேண்டும்
விளைச்சலுக்காக…!
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மறுபடியும் தர்மம் வெல்லும் !! ( கிறுக்கல் - அ. எல்றோய் )

ஞாயிறு, 4 மே, 2014

கிரீமியா மீண்டும் கிழக்கோடு ஒட்டிக்கொள்ளும்

( மார்ச் 5. 2014 சமூகவலைதளத்தில் பதிவேற்றியது… )

நடக்கப்போவது இனி...

புதிய தேசம் இனி புழியப்படப்போகிறது
சிரியதேசம் சீரழிக்கப்பட்டு பலநாள் ஆகிவிட்டது
சூடுகண்ட தேசத்தை சுனாமியோடு சேர்த்து சில
பிணாமிகளால் சுடுகாடு ஆக்கப்பட்டுவிட்டது
ஆப்கானில் உள்ள ஆப்பு இன்னும் எடுபடவில்லை
ஈராக்கில் இன்னும் இயல்புநிலையில்லை
கருங்கடலில் கந்தகவாசனை மீண்டும் உணர
கிரீமியா மீண்டும் கிழக்கோடு ஒட்டிக்கொள்ளும்
பனியில் பிரிந்த தேசங்கள் இனி பழங்கதை கூற
வல்லவதேசம் வான்படை நம்பிநிற்கும்
இஸ்ரேலின் இயங்குநிலை ரானியதடத்தை மாற்ற
வல்லாதிதேச இருப்பிடம் பெருஞ்சுவரில் தடம்பதிக்கும்
ஏகாதியபத்தின் நீதி புரட்சியாகவும்
ஏதோச்சதிகார நியதி பயங்கரவாதமாகவும்
ஊடக உழைப்புக்கு உவர்ப்பாய் இருக்கும்
வெளிவிவகார வெகுளி வெந்திய தேசம்
வெட்கப்பட்டு வீட்டோவை வீட்டில் வைக்கும்
பயங்கரவாத கதைபேசி இந்தி பாக்கி கணக்கை முடிக்க நினைக்கும் -
கதை சொல்லி நதியில் கைவைக்க திபெத்து கதை பேசி அருணாவின் மேல் செம்படை கைவைக்கும்
வச்ச கைக்கு பலுஸ்கிஸ் நிழுவையில் தொங்க
தென் சீனக்கடல் மேல் சாம்பல் வாசம் மேலேலும்
ஜனநாயக கதை பேசி டொலர் தேசம் நிகழ்ச்சி நிரலை உருவாக்கும்
உருவாக்கிய கறுப்புக்கொடிப்படையை அமெ.ரஸ் இணைந் இனி அழிக்கும்
இழக்கப்பட்ட பனிபிரிவு நிலங்களை கரடி இனி கைப்பற்ற நினைக்கும்
மேற்குலகுக்கு சில அதிர்ச்சிகளை தன் அசைவுகளில் தெளிக்க
டொலர் தேசம் அமைதியில் உறக்கம் கொள்ளும்
அரபுலகின் பிரிவில் அசைபோடும் கொடி நட்சத்திரம்
ஏமன் ஊடு விசை அசைக்கும் உந்துகணையாக
புனித தேசங்கள் தன் கையை வைத்தே குத்திக்கொள்ளும்
தென்சீன எல்லை கிறிஸ்தவ தேசம் மனித அவலத்தை சுமந்து நிற்கும்
பேதையின் போதையால்- நட்பு தேசமும் கைமாறும் செங்கொடியாய்
இராவண தேசமும் தசாப்சத்தில் மூன்றாம் புனித நிலமாகி விடும்
காட்சிக்கு கூட இனி இங்கு சிலைகள் மிஞ்சாது. பக்ச வம்சம் பக்கவாதத்தில் பீடித்துக்கொள்ளும்
மீள் எழுச்சிக்கு நரபலிகள் ஆயிரம் எடுக்கப்படும்.
குமரியில் மிஞ்சிய முப்பழ தேசங்கூட கடலுள் உறக்கம் கொள்ளும்
ஆந்திரா இன்னும் நரபலி கொடுக்க செம்மரங்கள் செழித்து வளரும் - நதியால் திராவிடம் தீ தெறிக்க சினி தலைகள் வேடிக்கை பார்க்கும். கொரிய வடக்கில் அதிர்ச்சி தெறிக்க உலகம் அதிர சாமுராய் புது அவதாரம் எடுப்பார்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது அணுமாற்றத்தால்
மாயர்காட்டி மறுபடி தட்டப்படும்-மக்களுக்காக
கழுகும் கம்யூனிசமும் நேரடியாக கடிபடபோவதில்லை
கடிபட்டு வலியுணர கருங்காலிக்கும் இஷ்டமில்லை…!!!

© அ. எல்றோய்
(மார்ச் 5. 2014 சமூகவலைதளத்தில் பதிவேற்றியது…)

MH370 காணாமல் போன விடயத்தில் பல ஊகங்கள் வெளிவந்தாலும் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக சில விடயங்களை ஊகிக்க வேண்டி இருக்கிறது.

( மார்ச். 17. 2014 சமூகவலைதளத்தில் எழுதிய எனது பதிவு…)

MH370 காணாமல் போன விடயத்தில் பல ஊகங்கள் வெளிவந்தாலும் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக சில விடயங்களை ஊகிக்க வேண்டி இருக்கிறது. 

கடத்தப்பட்டால் கடத்தலின் பின்னணியில் ஏன் இஸ்ரேல் அரசின் ஆபத்தான மொசாட் அமைப்பு இருக்கக்கூடாது? உலகத்தில் நடக்கும் வில்லங்கமான விடயங்களுக்கு மொசாட் என்ற அமைப்பை புறம் தள்ளிவிட்டு சிந்திக்க முடியாது. கதை, திரைக்கதை, வசனம் இயக்கி இயக்குநரின் பெயரில் இருந்து விநியோகஸ்தர்களின் பெயர் வரை இவர்களுக்கு சம்பந்தம் இல்லாமல் 100வருட நாடகத்தொடரை எழுதிவைப்பதில் இந்த அமைப்புக்கு சலைத்ததாக எதுவும் இல்லை… தன்நாட்டு எல்லை அச்சுறுத்தல் கொண்ட ஈராக், எகிப்து, சிரியா, பலஸ்தீனம், லெபனான், ஜோர்தான் என்று இந்த நாடுகளுக்குள் அரசியல் தளம்பலை உண்டுபண்ணி நிரந்தர இருப்பை தீர்க்கதரிசனத்தோடு தீர்மானிப்பவர்கள் யூதர்கள்.

( வடக்கு கூட்டணிபடை + அமெரிக்கபடை = ஆப்கானிஸ்தான் - தலிபான்)
( குர்தீஸ்படை + அமெரிக்கபடை = ஈராக் - சதாம் அரசு )
( சுன்னிப்போராளிகள் + அமெரிக்கபடை= சிரியா - ஷியா அரசு )
அரசஇராணுவம் + மேற்குலக நிகழ்ச்சிநிரல் = எகிப்து - மோர்சி அரசு )
தன்கையை கொண்டு தன்னை குத்தவைப்பதில் அமெரிக்கவுடன் இணைந்த மிகச்சிறந்த கூட்டாளி இஸ்ரேல்.
ஆனால் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் ஈரானில் இந்த அரசியல் சமநிலையை குழப்புவதற்கு ஏதுவான காரணங்கள் தான் இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சிரிய போராளிகளை கொண்டு ஈரான் மீது எதிர்காலபோரை நிறைவேற்றுவதற்கு அசாட்டுக்கு ஈரான் அளித்துவந்த ஆதரவே போதுமானது. இதைவிட நாசிச கொள்கை கொண்ட உக்ரைனை ரஷ்யா முட்டுவதன் மூலம் யூத அரசு ஒரு கல்லில் 5 மாங்காய்களை அடிக்கமுடியும். ரஸ்ய ஆதரவு ஈரானுக்கு இல்லாமல் போவதற்கும் ரஸ்ய சீன நட்பு அடியோடு தூண்டிக்கப்படுவதற்கும் ரஸ்யாவின் பெயரால் நாமம் போட இந்த அமைப்பால் மிகச்சிறப்பாக செய்ய முடியும். அதற்கான தொழிநுட்பம், இராணுவபலம், பலநாட்டுகுடியுரிமையுடன் பிறப்பிலே மொசாட் அமைப்புக்கு தத்துக்கொடுத்தவர்களின் பல கதைகளை சரித்திரங்களில் பதியப்பட்டிருக்கின்றது.

உதாரணங்களுக்கு நிறைய விடயங்கள் உண்டு. ஆனால் டைப்பண்ணநேரம் இல்லை.... சில விடயங்களை நேரமும் காலமும் தீர்மானிக்கும் வரை காத்திருப்போம். இதை என்தனிப்பட்ட சந்தேகமாக பதிகிறேன். ஏதும் விமர்சனம் இருப்பின் முன்வையுங்கள். 
© அ. எல்றோய் ( மார்ச். 17. 2014 சமூகவலைதளத்தில் எழுதிய எனது பதிவு…)

வியாழன், 1 மே, 2014

தொழிலாளர் தினவாழ்த்துக்கள் 2014 - MAY DAY



உழைப்பவர்களை போற்றும் தினம் இது 
உலகத்தவர்கள் போற்றும் மேதினமிது
வியர்வை சிந்தும் மனிதர்களை 
வியந்து பார்க்கும் நேரமிது

அக்கிரமங்களை கண்டெழுந்து
அழிக்கத்துணிந்தோர் ஆயிரமானோர்
சர்வதேச புரட்சியும் தடைகள் கடந்து
சரித்திரமானது உரிமை வென்று

உழைப்புக்காக குரல்கொடுத்தோரை நினைத்திடுவோம்
உணர்வுக்காக உயிர்கொடுத்தோரை உயர்திடுவோம்
பிழைப்புக்காக ஊர்பிரிந்து உலகை செதுக்கும் - எம்
பிள்ளைகளையும் ஒருதரம் வாழ்த்திடுவோம்

வாழ்வதற்கான பணத்தை பெற்றிடுவோம் - பணத்திற்காக
வாழ்வதை வெறுத்திடுவோம்
விழிதிறந்து உழைத்திடும் விதைகளெல்லாம்
விடியலின்போது விருட்சமாய் விளைந்திருக்கும்

அடிமை அச்சத்தை தவிர்த்திடுவோம்
அஞ்சாத உழைப்புக்கு வழிசமைப்போம்
விடுமுறை நாளுக்கான கொண்டாட்டத்தை தவிர்த்து
வியர்வைக்கான நாளாய் கொண்டாடுவோம். 
------ அன்புடன் அ. எல்றோய் --------

புதன், 23 ஏப்ரல், 2014

பச்சைக்காதலியே


அன்பான பச்சைக்காதலியே...
என்னை அழைத்திடவா! உன்னை அணைத்திடவா! 
பாசமழையில் உன் அன்பில் நான் நனைந்திட,
உன் பசும்போர்வையால் எனை துவட்டிட வா…:)

© அ. எல்றோய்

புலம்பெயர்வு '95'


பிறந்தது ஒர் இடம்
தவழ்ந்தது ஒர் இடம் 
வளர்ந்தது ஒர் இடம் 
பிரிந்தது ஒர் இடம் 
படித்தது பல இடம் 
பாதுகாத்தது ஒர் இடம் 
பகுத்தறிவு தந்தது ஒர் இடம் 
தொழில் செய்தது ஒர் இடம் 
செய்த தொழிலோ பல இடம் 
பூவூரை விட்ட புலம்பெயர்வு '95'
இன்னும் என்னை விரட்டுகிறது.
பொருளாதார யுத்தமாக… 


( கிறுக்கல் - அ.எல்றோய் )

நரிக்கூட்டங்கள்….

யுத்தம் தின்ற பூமியில் எச்சம் தேடும் நரிக்கூட்டங்கள்...
சட்டம் போட்ட கருவறைக்குள் பதுக்கித்தாவும் பரதேசிகள்...
கொட்டம் அடக்க குரல்வளையில்லா குழையோன் - நீங்கள் 
எட்டும் நிழலில் ஏட்டுடன் நிழலாடுவது ஏனோ… 

ஆக்கம் - அ. எல்றோய்

கொமன்வெல்த் - அடிமைகளின் கூட்டமைப்பு

கொமன்வெல்த் அமைப்பு பிரித்தானியாவின் முன்னாள் முடிக்குரிய நாடுகளின் கூட்டமைப்பு. 'வளங்களை சூறையாடியவர்கள், பிரித்தாளும் தந்திரங்களை மேற்கொண்டவர்கள், மரணவியாபாரிகள், மக்களை அடிமைப்படுத்தியவர்களை' உலகமயமாக்கல் என்ற நாகரீக போர்வை போர்த்திக்கொண்டு துதி பாடுகிறோம். "நாங்கள் உங்கள் அடிமையங்க..! இதுவும் ஒரு நவீன காலனியத்துவம்தான்… - அ. எல்றோய்

புதன், 26 பிப்ரவரி, 2014

மீள்குடியேற்றத்துக்காக…. - கவிதைத்தொகுப்பு

மீண்டும் கடிகாரம் பின்னோக்கி ஓட வேண்டும்.
விட்டுச்சென்ற என் காதலை மீளபிடிக்க வேண்டும்.
கற்பனையின் உச்சத்தை எட்டும் போது 
கவிதைகள் மட்டுமே வருகிறது. 
அக்கவிகளில் உன் முகஓவியம் மட்டும் தெரிகிறது.
கண்சிமிட்டும் நேரத்தில் தடுமாறிய தூரிகை கிறுக்கல், 
என்நெஞ்சினில் கரிய நிறபக்கங்களை மட்டுமே விட்டுச்சென்றன. 
வலிசுமக்கும் மனதின் விழி சிரிப்பை மட்டும் அறிவார் பலர்.
கலைந்து செல்லும் கார்மேகம் கூட
கண்ணீர் கொடுப்பதை புரிவார்கள் சிலர். 
உச்சத்தில் இருந்தாலும் உள்ளத்தில் வித்தியாசமான 
கவியை மட்டும் குடியேற்றினேன். மீள்குடியேற்றத்துக்காக....!


© அ. எல்றோய்

கடவுளே வலியாய் கொடுத்துவிட்டார்

சுற்றும் பூமியில்
சுழன்று அடிக்கும் பித்தன் நான்.
விழித்தெழுத்து பார்க்கையில்
வியப்போடு வெளி பார்க்கிறேன்

கலை தாவும் ஆவலை
கடவுளே வலியாய் கொடுத்துவிட்டார்
மலை தாவும் வலிமை பெற
மனதை உடைத்து பெயர்த்துவிட்டார்



உறவுகள் உண்டு இவைக்கு
உள்உணர்வுகள் இல்லை
ஓடித்திரியும் கனவுகளை எனக்குள்
ஒளித்து வைக்க துணிவுமில்லை

அறிமுகமில்லா யார்யாரோ
அன்பாய் அணைக்கிறார்கள் ஒருபுறம்
ஆழமான சொந்தங்கள்
ஆப்பாகின பலபுறம்

தேடலில் உள்ள ருசிதனை
தேக்கி வைக்க இயலவில்லை
காட்டினிலே உள்ள கனிவினைபோல்
கார்பட்டிலே காணமுடிவதில்லை

புழுதியில் கிளப்பிய பயணம்
புலம்பெயர்வாக கற்றுக்கொடுத்தது
எழுதிய விதியை மாற்ற
என் பெருமானுக்கும் பொறுப்புமில்லை

தவிப்போடு யான் வேண்ட
தலை தடவி எனை கூர்ந்து
அடிபடு மகனே என்று
அன்பாய் சொல்லிவிட்டார்



பகலையும் இரவையும்
பண்பாய் அரவணைத்தேன்
பாசத்தையும் நேசத்தையும்
பாயுக்குள் சுருட்டி வைத்தேன்


இடைவிடா தேடலில்
இசை எனக்கோர் இளைப்பாற்றி
புணர்ந்து விட்ட உறவுபோல்
புகைப்படம் எனது பொண்டாட்டி


மூச்சிறைக்க ஓடுகிறேன்
மூடுபனி விலகவில்லை
பேச்செடுக்க மறுக்கிறது
பேசும் பொருள் அருகிலில்லை



சிறகடிக்கும் சிந்தனைகளுக்கு
சிறகே வரமாக வேண்டுகிறேன்
முப்பொழுதும் கற்பனை தொடர
முடிவற்ற பயணத்தை தேடுகிறேன்…


© அ. எல்றோய்