வியாழன், 25 பிப்ரவரி, 2016

தமிழனாய் பெருமை கொள் தோழா!

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை
கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த
அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ?
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்.
எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை
துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும்
தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம்
மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் !

வியாழன், 18 பிப்ரவரி, 2016

புலம்பெயர்ந்தவர்கள் Vs புலன்பெயர்ந்தவர்கள்

கைநிறைய சம்பளம். கிடைக்கும் நேரமெல்லாம் போதை ஏற்றிக்கொள்வது. ஜரோப்பிய கலாச்சாரத்தில் அடியொற்றி தோடுகளும், மிடுக்குகளும் பச்சைகளையும் குற்றிக்கொள்ள பாதுகாப்பான பெட்டலத்தில் இருப்பவர்களுக்கு தேவை ஈழம். கிடைத்தால் எத்தனை பேர் வந்து குடியேறுவார்கள் என்பது யாருக்கு தெரியும். தமிழ் கலாச்சாரத்தை அடியெற்றி தன்பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்காதவர்கள் ஈழ மண்ணில் மீள்குடியேற்ற எந்த சந்ததியை விரிவுபடுத்துகிறார்கள். இன்னும் பிள்ளைகளையும் நில புலன்களையும் தொலைத்து விட்டு ஒரு கூட்டம் கதறி அழ.! கிடைக்கும் லாபத் தொகைக்கு அவர்களுடை சொத்துக்ககளையும் பூர்வீக நிலங்களையும் டொலர்களால் சுரண்டவென இன்னொரு கூட்டம். எல்லோரும் பதுங்குவதற்கு தேவை தமிழ் மொழி. தமிழ்ஈழம். சமூகவிடுதலையின் பேரில் வியாபாரநோக்கமும் இன்று போராளிகளின் கல்லறைகள் மேல் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது... தேசியம் இன்று அவரவர் தேவைக்காக விளம்பரமாகி வியாபாரமாகி போய்கொண்டு இருக்கிறது...

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

ரஜனிமுருகன் திரைப்படத்தில் பிடித்த காட்சி வசனங்கள்

வெளிநாட்டில் இருந்து வந்த தன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளை பார்த்த பூரிப்பில் தன் பேரக்குழந்தை அருகில் சென்று…

தாத்தா:- (தன் பேரனிடம்) செல்லப் பேராண்டி இந்த தாத்தாவ உனக்கு தெரியுமா?

மகன்:- (பேரனின் தந்தை-இடைமறித்து)  அப்பா அவனிக்கு டமிழ் தெறியாது.

தாத்தா:- (மனமுடைந்ந நிலையில்)  தாய்தமிழ் மொழியே சொல்லிக்கொடுக்காத நீங்க இந்த தாத்தா பத்தி! நம்ம கலாச்சாரங்கல பத்தி எப்படி சொல்லிக்கொடுக்க போறீங்க…!


மெல்ல தமிழ் இனி சாகும்- அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!
என்றந்தப் பேதை உரைத்தான்! ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
- பாரதியார்

"தமிழ் இனி மெல்ல சாகாது விரைந்து சாகும்." - அமலதாஸ் எல்றோய்

வெள்ளி, 22 ஜனவரி, 2016

“உலகில் எது உயர்ந்த மதம்?”


உலகின் மதங்களால் மக்களுக்கு பல நன்மைகள் நடந்திருந்தாலும், கொஞ்சம் ஆழமாக கவனித்துப் பார்த்தால், உலகில் நடந்த, நடக்கும் போர்கள், கலவரங்கள் போன்றவைக்குக் காரணம் மதங்கள்தான் என்பது புரியும்… இப்படி இருக்கையில், “உலகில் எது உயர்ந்த மதம்?” என்று ஒருவர் சத்குருவிடம் கேட்டபோது…

சத்குரு:

“உலகில் எந்த மதம் உயர்ந்தது?” என்று என்னிடம் கேட்டார்கள்.

உண்மையில், இப்போது மதங்கள் எங்கே இருக்கின்றன? மதங்களின் பெயரால் நடத்தப்படும் கட்சிகள்தானே இருக்கின்றன?

மதம் என்ற பெயரால், ஒரு குறிப்பிட்ட கட்சியோடு உங்களை விலங்கிட்டுக் கொண்டு சுதந்திரத்தை அல்லவா இழக்கிறீர்கள்?

ஒவ்வொரு மதமும் தனி மனிதன் தன்னை உணர, அவன் கவனத்தை உள்நோக்கித் திருப்புவதற்காக உருவானது. ஆனால், மனிதனை மேன்மையுறச் செய்வதைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் செய்வதுதானே இன்று மதக்கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது?

தனித்துவிடப்படக்கூடாது என்று நீங்களும், அப்படியொரு கட்சியைச் சேர்ந்தவராகிவிடுகிறீர்கள். அது பிறப்பால் இருக்கலாம். அல்லது நீங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்ததால் இருக்கலாம்.

எப்படியானாலும், ஒரு பிரிவினரோடு உங்களை அடையாளப்படுத்திக் கொண்டதும், ‘உன் கட்சி பெரிதா, என் கட்சி பெரிதா?’ என்ற தகராறுக்கு நீங்களும் தயாராகிவிடுகிறீர்கள்.

உண்மையில், மதம் என்பது உலகுக்கு எந்தத் தீங்கையும் சொல்லித் தரவில்லை. எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபட்டு, உண்மையான சுதந்திரத்துடன் வாழ்க்கையை வாழ்வதற்கான வழிமுறைகளைத்தான் எல்லா மதங்களும் சொல்ல முற்படுகின்றன.

ஆனால், அதற்கு நேர்மாறாக அல்லவா நடக்கிறது! மதம் என்ற பெயரால், ஒரு குறிப்பிட்ட கட்சியோடு உங்களை விலங்கிட்டுக் கொண்டு சுதந்திரத்தை அல்லவா இழக்கிறீர்கள்?

சங்கரன்பிள்ளை சேர்ந்த மதம்

சங்கரன்பிள்ளைக்கு ஆன்மீகப் பாதையில் போக ஆசை வந்தது. இருப்பதிலேயே எந்த மதம் உயர்ந்தது என்று கண்டுபிடித்து, அந்த குருவிடம் சீடராகச் சேர முடிவு செய்தார். நண்பர்களிடம் விசாரித்தார்.

ஒரு நண்பர், தன் மதகுருவிடம் அனுப்பினார். அங்கே போனதும், முதலில் தலைமுடியை மழித்துவிட்டு வரச் சொன்னார்கள். வலது காதில் வலிக்க வலிக்க ஓர் ஓட்டை போட்டு, பெரிய வளையம் ஒன்றை மாட்டினார்கள். ஆரஞ்சு நிற உடைகளை அணியச் சொன்னார்கள். அங்கே ஒரு மாதம் தங்கியிருந்தும், தனக்குள் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை என்பதை சங்கரன்பிள்ளை உணர்ந்தார்.

இடம் மாற விரும்பி, அடுத்த நண்பரிடம் போனார். அவர் சங்கரன்பிள்ளையைக் காட்டுக்குள் அழைத்துப் போய், அங்கே தன் மதகுருவிடம் விட்டார். “இங்கே பச்சைத் துணிகளை மட்டுமே அணிய வேண்டும். முடியை வெட்டவே கூடாது. எவ்வளவு நீண்ட தாடி வளர்கிறதோ, அவ்வளவு நல்லது. அப்புறம் ஆபரணங்களே கூடாது!” என்றார் அந்த மதகுரு.

காதில் பழைய புண்ணே ஆறவில்லை. அங்கிருந்த வளையம் நீக்கப்பட்டது. அவர்கள் மத வழக்கப்படி, வேறு இடத்தில் சதையைக் கீறி எடுத்தார்கள். அங்கேயும் புண்ணானது. அந்த மதகுருவிடமும் ஒரு மாதத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

மதங்களால் பிரச்சனை இல்லை. மதக்கட்சிகளை நடத்துபவர்களால்தான் அத்தனை பிரச்சனையும்!

“மலை மேலே இருக்கும் ஆசிரமத்துக்குப் போ. அங்கே இருப்பவர்தான் சிறந்த குரு!” என்று அடுத்த நண்பர் சொன்னார். சங்கரன்பிள்ளை அந்தப் புதிய மதகுருவைக் காண, கால் வலிக்க மலை ஏறினார். ஆசிரமத்தை அடைந்தார்.

அங்கே சீடர்கள் மொட்டை அடித்திருந்தார்கள். தாடி மட்டும் வளர்த்து, இரண்டு காதுகளிலும் வளையங்கள் மாட்டி மூக்கிலும் துளையிட்டிருந்தார்கள். சங்கரன்பிள்ளை மயங்கி விழுந்தார்.

மதங்கள் மாறினால், ஒவ்வொரு மதகுருவும் உங்கள் உடம்பில் ஒரு துளையிட்டு விட்டுப் போவதுதான் நிகழும். வேறெந்த உயர்வும் கிடைக்காது. மதங்களால் பிரச்சனை இல்லை. மதக்கட்சிகளை நடத்துபவர்களால்தான் அத்தனை பிரச்சனையும்!

அரசியல் கட்சி நடத்துபவர்களுக்குத்தான் எத்தனை ஆட்கள் தங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியம். மதத்துக்கு எங்கே அந்த அவசியம் வந்தது?

மதம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு, தன் அகங்காரத்தை நிலை நிறுத்திப் பார்க்கும் மனிதர்களுக்குத்தான் எண்ணிக்கைகள் அவசியமாகின்றன.

உள்நோக்கித் தன்னைக் கவனிக்காமல், வெளியே எத்தனை எண்ணிக்கை கிடைத்தது என்று எப்போது கவனம் போகிறதோ, அப்போதே அந்த மதம் செத்துப் போகிறது.

உங்கள் கடவுள் மேன்மையானவர் என்பதை உலகுக்கு நிரூபிக்க, உங்களை நீங்களே ஏன் நியமித்துக் கொள்கிறீர்கள்? உங்கள் கடவுளுக்கு அதிக சக்தி இருக்கிறது என்று நீங்கள் மனதார நம்பவில்லையா?

உங்கள் பலத்தையும், வற்புறுத்தலையும், வன்முறையையும் சார்ந்துதான் அவருடைய புகழ் பரவும் என்றால், அவர் உங்களைவிடப் பலவீனமானவராக, உங்களை விடத் தாழ்ந்தவராக அல்லவா ஆகிவிடுகிறார்?

உங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள, அவரை ஏன் உங்கள் கட்சி வேட்பாளராக முன்னிறுத்தப் பார்க்கிறீர்கள்?

நீங்கள் கடவுள் பெயரில் நடத்தும் ரசிகர் மன்றங்களுக்கு அவர் துணை இருப்பார் என்று எதிர்பார்ப்பது கேவலம் இல்லையா?

ஆன்மீகம் உன்னதமானது. மனிதனை உய்விக்கப் பிறந்தது. தனக்குப் பின்னால் ஒரு கோடி ஆட்கள் இருந்தால் என்ன, ஒரு ஆள்கூட இல்லாவிட்டால் என்ன?

உண்மையான ஆன்மீகத்தை நினைப்பவனுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது.

உண்மையில், உங்கள் மதத்தின் அடிப்படை நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அது, உங்களைத்தான் முதலில் கவனிக்கச் சொல்கிறது.

உங்கள் மாற்றத்துக்கு வழி தேடாமல், மற்றவர்களை உங்கள் பக்கம் மாற்றுவதற்கு முயற்சி செய்வது, உங்கள் மதத்தின் குறிக்கோளையே அவமதிப்பதாகும்!

ஒவ்வொரு தனிமனிதனும் மேன்மையானவனாக மாறினால் மட்டுமே ஒட்டுமொத்த உலகமும் மேன்மையடைய முடியும்.

அதனால், எந்தக் கட்சியிலும் சிக்கிக் கொள்ளாமல், உங்கள் மதம் மூலம் உண்மையை உணருங்கள். உயர்வடையலாம்!

மிருகவதை

உணவுக்கு வெட்டுனா அது மிருகவதை. உணர்ச்சி இல்லாததுக்கு வெட்டுனா அது நேத்திக்கடன். எது என்னமோ இந்த மனித இனத்திடம் சிக்கிக்கொண்டு ஐந்தறிவு மிருகங்கள் அழிந்து போகின்றன.


திங்கள், 9 நவம்பர், 2015

"மாதுலுவாவே சோபித தேரர்"

பேரினவாத நெருக்கடிகளையும் விமர்சனங்களையும் கடந்து தமிழ்மக்களின் சுயமரியாதைக்காக குரல்கொடுத்து நாட்டில் நல்லாட்சி ஏற்படுவதற்கும் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படுவதற்கும் அர்ப்பணிப்பு மிக்க சேவையாற்றி வந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் நல்லாட்சிக்கு அத்திவாரமிட்ட நல்ல மனிதனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

சனி, 31 அக்டோபர், 2015

பனிப்போர் என்றுமே முடிவுக்கு வரப்போவதில்லை

கிரிமியா, சிரியாவுக்குள் மூக்கை நுழைத்தது தற்செயலானது அல்ல. கடந்த கால ரஸ்யாவின் செயற்பாடுகளும் முன்னோக்கிய நகர்வும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இனி பின்வைக்குமளவு என் கால் இல்லை என்று தெளிவான நகர்வுகளுடன் ரஸ்யா…!!!

கோர்க்காசிய பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த ஆயத மோதலைச் சாக்காக வைத்துக் கொண்டு அப்பிராந்தியத்தில் மூக்கை நுழைக்க அமெரிக்கா முயற்சித்துவரும் வேளையில், ~நான் ஒன்றும் சளைத்தவன் அல்ல| என்பதை நிரூபிப்பது போன்று ரஸ்யா அமெரிக்காவின் கொல்லைப் புறத்திலே இராணுவ ஒத்திகையொன்றைச் செய்ய களத்தில் இறங்கியிருக்கிறது.
சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் குடியரசும் தற்போதைய அயல் நாடுமான ஜோர்ஜியாவின் பிரிவினை கேட்டுப் போராடிய மாநிலமான தெற்கு ஒஸ்ஸற்றியாவை தனது கட்டுப் பாட்டின் கீழ் பலவந்தமாக ஒன்றிணைக்க ஜோர்ஜியா எடுத்த முயற்சியில் தெற்கு ஒஸ்ஸற்றியா பகுதியில் சமாதானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ரஸ்யா ஜோர்ஜியாவுடன் யுத்தம் புரிய வேண்டிய நிலை உருவானது.
ஒரு சில நாட்களே நீடித்த இந்த யுத்தத்தின் விளைவாக உருவான அரசியல் சூழலும் மேற்குலகின் ஒரு தலைப்பட்சமான அணுகுமுறையும் தெற்கு ஒஸ்ஸற்றியா மட்டுமன்றி ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற அப்காசியாவினதும் தனிநாட்டுக் கோரிக்கையை ரஸ்யா அங்கீகரிக்கும் நிலையை உருவாக்கியது. இந்த இரு தேசங்களும் 1992 இலேயே தம்மை தனிநாடுகளாக பிரகடனப்படுத்திய போதிலும் எந்தவொரு நாடும் அவற்றை அங்கீகரிக்கவில்லை. எனினும் ஆகஸ்டில் இடம்பெற்ற மோதலை அடுத்து உருவான சூழ்நிலைகளால் ரஸ்யா அவற்றை அங்கீகரித்தது.
இந்நிலையில் செப்டம்பர் 6ஆம் திகதி மத்திய அமெரிக்க நாடான நிக்கரகுவாவும் இந்த இரு தேசங்களையும் தனிநாடாக அங்கீகரித்துள்ளதுடன் விரைவில் அந்நாடுகளில் தனது தூதுவராலயங்கள் திறக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் குடியரசும் தற்போதைய ரஸ்யாவின் அயல் நாடுமான பெலாரஸ் இம்மாத முடிவிற்குள் இந்த இரண்டு தேசங்களையும் தனிநாடுகளாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில் தெற்கு ஒஸ்ஸற்றியாவில் ஜோர்ஜியா இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ரஸ்யா இவ்வளவு தூரம் அதிரடி நடவடிக்கையில் இறங்கும் என எதிர்பார்த்திராத அமெரிக்க நடப்பு விவகாரங்களால் மிகவும் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருக்கின்றது. கடும்போக்காளர் எனக் கருதப்பட்ட விளாடிமிர் புட்டின் ஜனாதிபதி பதவியில் இருந்து அகன்று பிரதமர் பதவியில் அமர்ந்ததும் அவரது நண்பரான மெட்வடேவ் ஜனாதிபதி பதவியில் அமர்ந்ததும் ரஸ்யாவின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என நினைத்திருந்த அமெரிக்காவுக்கு நடப்பு நிகழ்வுகள் ஏமாற்றத்தையே தந்தன.
ஒஸ்ஸற்றிய விவகாரத்தில் மத்தியஸ்தம் வகித்த ஐரோப்பிய ஒன்றியம் ரஸ்யப் படைகள் ஜோர்ஜிய மண்ணில் இருந்து அகல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தபோது தெற்கு ஒஸ்ஸற்றியா மற்றும் அப்காசியா மீது ஜோர்ஜியா மீண்டுமொரு முறை பலாத்காரத்தைப் பிரயோகிக்காது என்ற உறுதிமொழியைப் பெற்றுக் கொண்ட ரஸ்யா ஜோர்ஜியாவிலிருந்து படைகளை வாபஸ் பெறத் தொடங்கியுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின் படி அக்டோபர் முதலாம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 200 வரையிலான கண்காணிப்பாளர்கள் ஜோர்ஜியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவர். இதனையடுத்து 10 நாட்களுக்குள் ரஸ்யப் படைகள் ஜோர்ஜிய மண்ணைவிட்டு முற்றாக அகல வேண்டும்.
இதனை ஏற்றுக் கொண்ட ரஸ்யா தனது பிடியை வலுப்படுத்த புதிய தந்திரமொன்றைக் கையாண்டுள்ளது. 1992 இல் ஜோர்ஜியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி தெற்கு ஒஸ்ஸற்றியா மற்றும் அப்காசியா ஆகிய தேசங்களில் சமாதானப் படைகளை ரஸ்யா நிறுத்தியிருந்தது. புதிய ஒப்பந்தத்தின்படி தனது படைகளை விலக்கிக் கொள்ளும் ரஸ்யா, புதிதாக உருவான நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பிரகாரம் ஒவ்வொரு நாட்டிலும் 3,800 படையினர் வீதம் நிறுத்த முடிவு செய்துள்ளது. சமாதானப் படையினர் போலல்லாது புதிதாக நிலைகொள்ளும் படையினர் முழுச் சுதந்திரமும் பெற்றவர்களாகவும் சர்வதேச சட்டவிதிகளுக்கு அமையச் செயற்படக்கூடிய அதிகாரம் மிக்கவர்களாகவும் விளங்குவர். அதாவது இந்த 2 தேசங்களினதும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் சந்தர்ப்பத்தில் அதற்குக் காரணமான நாட்டின் மீது ரஸ்யா போர் தொடுப்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இதன் மூலம் கிடைத்திருக்கின்றது. இதனை வேறு விதத்தில் சொல்வதானால்
சும்மா இருந்த சங்கை அமெரிக்கா ஊதிக் கெடுத்திருக்கின்றது.
இதேவேளை விடாக்கண்டனான அமெரிக்காவும் ஒரு கை பார்த்துவிடுவது என்ற அடிப்படையில் ஜோர்ஜியாவுக்கு தனது கடற்படைக் கப்பல்களை அனுப்பி வைத்திருக்கின்றது. கருங்கடல் பிராந்தியத்துக்குள் நுழைந்துள்ள அமெரிக்காவின் 6 ஆவது கடற்படைப்பிரிவு அணுவாயுத யுத்தக் கப்பலான மவுண்ட் வைற்னி உட்பட 3 கப்பல்கள் ஜோர்ஜிய துறைமுகமான போற்றி இல் நங்கூரம் இட்டுள்ளன.
இதனால் ரஸ்யா பெரிதும் சீற்றமடைந்துள்ளது. ஜோர்ஜியாவுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காகவே தனது கப்பல்கள் ஜோர்ஜியா சென்றிருப்பதாக அமெரிக்கா கூறினாலும் அதற்கு எதற்காக அணுவாயுத யுத்தக் கப்பல்கள் என்ற கேள்விக்கு அமெரிக்காவிடம் பதிலில்லை.
இதேவேளை நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு யேர்மனி, ஸ்பெயின், போலந்து ஆகியவையும் நமது கப்பல்களை இப்பிராந்தியத்துக்கு அனுப்பி வைத்துள்ளன. 90 களின் முன்னர் ரஸ்யாவைத் தவிர வேறு யாருமே நுழைய முடியாமல் இருந்த
இப்பிராந்தியத்தில் இன்று யார் யாரோவெல்லாம் நுழைவது ரஸ்யாவுக்குப் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தனது கப்பல்கள் மூன்றை அப்காசியத் துறைமுகங்களுக்கு ரஸ்யா அனுப்பி வைத்திருக்கின்றது. இது தவிர ஜோர்ஜியா மீது இராணுவத் தடை விதிக்குமாறும் ரஸ்யா அழைப்பு விடுத்துள்ளது.
நடப்பு நிகழ்வுகள் மூன்றாவது உலக யுத்தம் ஒன்றுக்கு வித்திட்டுவிடுமோ என்ற அச்சமொன்று உருவாகியுள்ள சூழ்நிலையில் தென்னமெரிக்க நாடான வெனிசுவேலாவுடன் இணைந்து கடற்படை ஒத்திகையொன்றைச் செய்யப் போவதாக ரஸ்யா அறிவித்துள்ளது. நவம்பர் 10 முதல் 14 வரை நடைபெறப் போகும் இந்த ஒத்திகையில் உலகிலே சிறந்த அணுவாயுத நாசகாரி கப்பல்களுள் ஒன்று எனக் கருதப்படும் ரஸ்யக் கப்பலான ~பீற்றர் த கிரேட்| கலந்து கொள்ளவுள்ளது. இதனுடன் மேலும் 3 கடற்படைக் கப்பல்களும் கலந்து கொள்ளும் ஆயிரம் கடற்படை வீரர்களும் இந்த ஒத்திகையில் பங்கெடுப்பர்.
ஜோர்ஜியாவில் தரித்து நிற்கும் அமெரிக்க யுத்தக் கப்பல்கள், போலந்தில் அமெரிக்கா செய்து கொண்டுள்ள ஏவுகணைத் தடுப்பு ஏற்பாடு ஒப்பந்தம், உக்ரைனை நேட்டோவில் இணைத்தல் என ரஸ்யாவைச் சூழ்வதற்கு அமெரிக்க முயற்சித்து வரும் நிலையில் அமெரிக்காவின் கொல்லைப் புறத்தில் அத்திலாந்திக் சமுத்திரத்தினூடாக கரீபியன் கடலை ரஸ்யா எட்டுவதென்பது தற்செயல் நிகழ்வாகக் கருதப்பட முடியாதது. 20 வருடங்களின் பின் ரஸ்யா இத்தகையதொரு போர் ஒத்திகையில் அதுவும் மிகவும் பலம்பொருந்திய ஒரு கடற்படைக் கப்பலின் உதவியுடன் ஈடுபடுவது அமெரிக்காவுக்கு பல சேதிகளைச் சொல்லவே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கெடுபிடி யுத்தம் முடிந்து அமெரிக்கா தலைமையிலான ஏக தலைமையின் வழிநடத்தலில் உலகம் பயணிப்பதாக நிலைமைகள் தென்பட்ட போதிலும் அமெரிக்கக் கழுகு ஏகபோக உரிமையை அனுபவிப்பதை ரஸ்யக் கரடி அனுமதிக்கப் போவதில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப் படுகின்றது. உலகின் என்ன தான் மாறினாலும் இந்த இரண்டு வல்லரசுகளுக்கும் இடையிலான பனிப்போர் என்றுமே முடிவுக்கு வரப்போவதில்லை என்பதுவும் இதன் மூலம் உணர முடிகின்றது.
இந்தக் கடற்படை ஒத்திகைக்கு மற்றுமொரு முக்கியத்துவமும் இருக்கிறது. எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி அமெரிக்க அரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற
இருக்கின்றது. இக்காலப்பகுதியிலேயே இந்த ஒத்திகையும் அமெரிக்கக் கண்டத்தில் நடைபெறுகின்றது. இந்நிலையில் தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பதிலும் இது செல்வாக்குச் செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.
கடந்த யூலையில் ரஸ்யாவுக்கு விஜயம் செய்த வெனிசுவேலா அதிபர் ஹியூகோ சாவேஸ், ரஸ்யாவின் அணுவாயுதம் தாங்கிய யுத்த விமானங்களுக்கு தனது நாட்டின் கதவுகள் திறந்திருக்கின்றன என பகிரங்கமாக அறிவிப்புச் செய்திருந்தார்.
சோவியத் ஒன்றியம் உலகில் இருந்த 70 வருடங்கள் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் உந்து சக்தியாக, பக்க பலமாக அமைந்திருந்தது.
இதன்விளைவாக உலகின் போக்கில் பல சாதகமான மாற்றங்களும் ஏற்பட்டன.
கடந்த 2 தசாப்தங்களாக விடுபட்டுப் போயிருந்த அப்பணியை ரஸ்யா தொடர்ந்தும் முன்னெடுக்குமானால் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் உலக அரங்கில் மீண்டும் ஒலிக்கும் வாய்ப்பு உருவாகலாம். அதனை ரஸ்யா செய்யுமா என்பதே இன்று முற்போக்குச் சக்திகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

போகும் போக்கில் புரியவைத்து விட்டாய் வாழ்வு பொய் என்று

புரியவில்லை அன்பே... நீ நடத்தும்
நாடகங்கள்
ஒவ்வொன்றும் !!!
மறந்து விட்டேன் உன்னை.....!! என்று தான்
சொல்ல
நினைக்கிறன் ????
ஆனால் சொல்லி முடிக்கும் மறுகணம்
நினைவில்
நீ..!!!
பிரிந்து விட்ட பின்னும் உன் பெயர்
படித்தால் உள்ளம்
புல்லரிப்பது என்னவோ உண்மை தான்
அன்பே..!!
இந்த முறை உன் பிரிவு என்னை ஸ்தம்பிக்க
செய்யவில்லை.. காரணம் நீ என்னுள்
விட்டு சென்ற ரணங்கள்..!!!..
போகும் போக்கில் புரியவைத்து விட்டாய்
வாழ்வு பொய் என்று!!