புதன், 14 நவம்பர், 2018

அரசு, அரசியல், அரசாங்கம், நீதிமன்றம், உரிமைகளற்ற மக்கள்!

தோழர்களே, நண்பர்களே


நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல! 

The country is run by the people; Not by a man!


ஆனால் தற்போதைய உலக ஒழுங்குமுறையின் நலன்சார் அரசியலும், மாற்றங்களையும் கொஞ்சம் உய்த்தறிய வேண்டும். பத்து வருடங்களாக என் வலைதளத்தில் பதியப்பட்ட கட்டுரைகளும், பகிர்வுகளும் மாற்றுச்சிந்தனைகான பார்வைகளையும், பாதைகளையுமே வலியுறுத்துகின்றது! 






தொடர்ச்சி.... மறுகாலனியாக்கத்தின் விளைவாக அரசுக் கட்டமைப்பு, அரசாங்கம், அவற்றின் அதிகாரங்கள், நீதிமன்றம், தேர்தல், அரசியல் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்தும், அரசியலிலிருந்து மக்கள் மென்மேலும் விலக்கி வைக்கப்பட்டு அரசியலற்றவர்கள் ஆக்கப்படுவது குறித்தும் அதிகமாக சிந்திப்பீர்கள். ஓரளவு அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் பகுத்தறிவார்கள் என்று நம்புகிறேன். இந்த ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை இனிவரப்போகும் கட்டுரை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவுகிறது. 

இங்கே நிறங்களுக்காக கட்சி மோதல்களில் ஈடுபடும் தலைமைகள் சிறிதேனும் மக்களை சிந்திப்பதே இல்லை. சிறுபான்மை மக்கள் தக்க வைக்கும் அரசியல் கதிரைகளுக்கான கறிவேப்பிலைகள். இங்கே அக்கறைகளும், அன்புகளும் அதிகம் இருப்பின் இன்னும் அரசியல் கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். பேரம் பேசுவதற்கும் பேரினவாத முன்மொழிவுகளுக்கும் தனிநிரல் கொள்கைகள் உண்டு. 

முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறும் நிலையில், கார்ப்பரேட் கொள்ளையர்களே அரசு, அரசாங்கம் இரண்டையும் தீர்மானிக்கும் நிலையிலும், இலங்கையின் விதி ஏகாதிபத்தியங்களால் எழுதப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக இன்று நாடு இருக்கும் நிலையில் அதை மாற்றும் கடமையும் நமக்கிருக்கிறது. இதன் பொருட்டு அரசியல் ரீதியில் நாம் செயல்படவேண்டிய கடமையையும் இந்த கட்டுரை வேண்டுகிறது. வாருங்கள், இணைந்து செயல்படுவோம்!

சாராம்சமாக சொன்னால், தனது ஆதிக்கத்திற்கும் பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள ‘தேசிய’ அரசு, தேசங்களின் ‘இறையாண்மை’, அவற்றின் சட்டங்கள் ஆகியவற்றைத் தகர்ப்பதுடன், இத்தகைய தேசிய அரசுகளுடன் சேர்த்து கட்டியெழுப்பப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தகர்த்து நொறுக்கி வருகின்றது சர்வதேசியமயமாகிவிட்ட ஏகாதிபத்திய நிதிமூலதனம்.  மேல்நிலை வல்லரசுகளின் வெளிப்படையான தலையீடுகள்  ஆக்கிரமிப்புகள் ஆகியவை ஒருபுறமிருக்க, உலகப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான சர்வதேச நிறுவனங்கள் என்றழைக்கப்படும் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளின் ஆணைகளுக்கு ஆடும் அரசாகவே, இலங்கை அரசும் அதன் சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களும் மாற்றப்பட்டுள்ளன.

மேல்நிலை வல்லரசுகள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் அதிகார வர்க்கங்களாலும் தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழிற்கழங்களின் நிர்வாகிகளிலும் சர்வதேச நிதிமூலதன கும்பல்களாலும் முதலாளித்துவ வல்லுனர்களாலும் நிரப்பப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள்தான் (எந்த மக்களாலும் இவை தேர்ந்தெடுக்கப்படுவதில்லை) உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெரிதும் பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகத்தை, அதன் அரசை, கட்டுப்படுத்துகின்றன, ஆட்டுவிக்கின்றன.

மறுகாலனிய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதாரம் எப்படி பன்னாட்டு தொழிற்கழகங்கள் மற்றும் சர்வதேச நிதிமூலதனத்தின் நலனுக்கேற்ப தனியார்மயம் தாராளமயம், உலகமயத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளதோ, அதேபோல்தான் நம் நாட்டிலும். இவைகளின் நலன்களுக்காகவும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்கத்திற்காகவும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் அரசுக் கட்டமைப்புக்குள்ளும் புகுத்தப்படுகின்றன. அதன் கட்டுமானம், சட்டங்கள், விதிமுறைகள், பணிகள், செயல்பாடுகள் எல்லாம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ‘ஜனநாயக’ அரசமைப்பின் கட்டுமானங்களிலும் அதன் நடைமுறைகளிலும் முதலாளித்துவ சந்தையின் விதிகள் புகுத்தப்பட்டு அவை மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் முதலாளித்துவ சந்தையின் விதிகளே ஜனநாயகத்தின் விதிகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

அரைகுறை இறையாண்மையையும் இழந்து வருகின்ற இலங்கையில் நிலவுகின்ற  அல்லது மாற்றி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற  போலி ஜனநாயகம் கூட அதன் உள்ளடக்கத்தை முற்றிலுமாக இழந்து வருகின்றது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, மக்களைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பது ஓட்டளிப்பதாக மட்டும் வெட்டி குறுக்கப்பட்டு விட்டது. அதுவும் கூட, ‘தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் நாட்டு நலன், மக்கள் நலன் கருதி, விருப்பப்பட்டு, எந்தவித நெருக்குதலுமின்றி சுதந்திரமாக சுயேச்சையாக தனியார்மய  தாராளமய கொள்கைகளை மேற்கொண்டு வருகின்றன’ என்று காட்டி மறுகாலனியாதிக்கத்திற்கு நியாய உரிமை பெறுவது என்ற காரணத்திற்குத்தான் மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

பிராந்திய தேச வரலாற்றை பின்னோக்கினால் இந்தியா ஆங்கிலேயர்களின் நேரடி காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த காலகட்டத்தில், விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கும், எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும் பதவிகளில் ஒட்டிக் கொண்டு சலுகைகளை அனுபவிக்கவும் பொறுக்கித் தின்பதற்கும் விழைந்த நாட்டுப்பற்று அற்ற பிழைப்புவாத கும்பல்களை ஊக்குவிக்கவும் மேலிருந்து திணிக்கப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகம். காலனியாதிக்கத்தை கட்டிக் காக்க ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளின் கிரிமினல் மூளையில் உதித்த இந்த சாணக்கிய திட்டம் வெற்றிகரமாகவே நிறைவேறிற்று என்று சொல்ல வேண்டும். காலனிய காலம் தொடங்கி 1950களின் தொடக்கத்தில் திணிக்கப்பட்ட நவீன காலனிய ஆதிக்க காலகட்டத்தில் செழித்து வளர்ந்த அரசியல் பிழைப்புவாதமும் சீரழிவும் 1980, 1990களில் அதன் உச்சத்தை எட்டியது. தனிக்கட்சி ஆட்சி போய் கூட்டணி ஆட்சிகள், கட்சித் தாவல்கள், கூட்டணிகள் உடைவது, அரசாங்கங்கள் கவிழ்வது, புதுக்கூட்டணி, புது அரசு, சில மாதங்கள் வருடங்களுக்குள் மீண்டும் கட்சி தாவல்கள், அரசுகள் கவிழ்வது என்று நாடாளுமன்ற அராஜகம் தலைவிரித்தாடியது.

மேல்நிலை வல்லரசுகளின் தோற்றம், நிதிமூலதனம் சர்வதேசியமயமானது, தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழில் கழகங்கள், அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி, ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி ஆகியவைகளின் விளைவாக நவீன காலனியாதிக்கம் அகற்றப்பட்டு மறுகாலனியாதிக்கம் இந்த காலகட்டத்தில்தான் புகுத்தப்பட்டது. சர்வதேச வலைப்பின்னல்களால், ஒரே சங்கிலியால் கட்டப்படிருந்த நிதி மூலதனத்தின் செயல்பாடுகளுக்கும் தேசங்கடந்த தொழில்கழகங்களுக்கும் நாடாளுமன்ற அராஜகமும் நிலையற்ற ஆட்சிகளும் எதிரானவை; எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தடைபோடுபவை; எனவே, அவற்றை ஒழிக்க வேண்டியது அவர்களுக்கு அவசியமும் கட்டாயமும் ஆகியது. இதற்கேற்பவே மறுகாலனியாதிக்க நலன்களுக்காகவே நிலையான ஆட்சி, சிறந்த அரசாளுமை என்ற முழக்கங்களை முன்வைத்துள்ளனர். நிதிமூலதனம், பன்னாட்டு முதலாளிகளின் தனியார்மய சுரண்டலும் ஆதிக்கமும் தங்கு தடையின்றி நடப்பதற்கு ஏற்ற நிலையான ஆட்சி, சிறந்த ஆளுமை, வலுவான ஆட்சி (failed state ஆக இல்லாமல்) ஆகியவையே தேர்தல் மற்றும் ஜனநாயகத்தின் ஒரே இலக்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேர்தல் என்பது, ஏகாதிபத்தியத்தின் பிள்ளைப்பருவத்தில் அதாவது 20-ம் நூற்றாண்டின் துவக்க பத்தாண்டுகளில், நேரடி காலனியாட்சி பிரதான வடிவமாக இருந்த காலகட்டத்தில், கம்யூனிச, தேசிய இயக்கங்கள் ஏற்றம் பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், நேரடிக் காலனிய ஆட்சியைப் பாதுகாக்க ஏகாதிபத்தியவாதிகளால் புகுத்தப்பட்டது. அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டங்களை நீர்த்துப் போக செய்வதற்கும் எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும், பதவிகளில் ஒட்டிக் கொண்டு அரசு சன்மானங்களை பொறுக்கித் தின்னவும் சலுகைகள் கௌரவங்களை அனுபவிக்கவும் நாட்டுப்பற்று அற்றுப் போகும்படியான பிழைப்புவாத கும்பல்களை உருவாக்கவும் ‘ஜனநாயக தேர்தல் அரசியலைப்’ புகுத்துவது ஏகாதிபத்தியங்களின் நலனுக்கு உகந்ததாக இருந்தது. இன்று ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான அரசியல், பொருளாதார வளர்ச்சிப் போக்கின் விளைவாக மேல்நிலை வல்லரசுகள்  அவற்றின் மேலாதிக்கம், ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் சீரழிவு காரணமாக கம்யூனிச தேசிய இயக்கங்கள் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள உலக நிலைமை ஆகியவற்றின் காரணமாக, மறுகாலனியாதிக்க முறையிலான காலனிய ஆட்சி வடிவத்தை மேலாதிக்க வல்லரசுகள் பிரதானமாக கையாண்டு வரும் நிலைமையில் ஜனநாயகமும் தேர்தலும் வெட்டி சுருக்கப்பட்டு பரந்துபட்ட மக்கள் அரசியலில்  இருந்தே விலக்கி வைக்கப்பட்டு வருகின்றனர்.

‘தேர்தல் அரசியல்’ சீரழிவின் விளைவாக பல்கிப் பெருகி பேயாட்டம் போடுகின்ற பிழைப்புவாதக் கும்பல்கள் நாடாளுமன்ற அராகஜம் ஆகியவற்றினால் பாதிக்கப்படாமல், சட்டமன்றங்கள்  நாடாளுமன்றங்களுக்கு இதுவரையிலிருந்த வரம்புக்குட்பட்ட சட்டமியற்றும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களையும் பறித்துக் கொண்டு அவற்றை வெறும் ‘நீயா, நானா’ விவாத மன்றங்களாக்கி விட்டு, அந்த மன்றங்களுக்கு வெளியே எல்லா அதிகாரங்களையும், கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களின் கூலி வல்லுனர்கள், அதிகார வர்க்கத்தினர் நம்பகமான அரசியல் அடிவருடிகள் ஆகியோரைக் கொண்ட குழுக்களிடம் ஒப்படைக்கும் வகையில் அரசின் கட்டமைப்பும் அதன் செயல்பாடுகளும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் இன்னொரு பக்கமாகத்தான், எப்படியும் பணம் சம்பாதித்து உல்லாசமாக வாழவேண்டும் என்கின்ற நெறியின்மையிலும், நுகர்வு வெறியிலும், போதையிலும் சீரழிவிலும் மக்களை ஆழ்த்துவதும்,  கிரிக்கெட் திரைப்படம்செல்போன் போன்ற மோகங்களால் மட்டுமே ஆட்டுவிக்கப்படுகின்ற, தேசப்பற்றோ, கொள்கை  இலட்சியங்களோ அற்ற நடமாடும் பிண்டங்களாக மக்களை மாற்றுவதும் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றது. காலனிய கட்டத்தில் தேர்தல் அரசியலைப் பகுத்தி மக்களைச் சீரழித்த ஏகாதிபத்தியம், மறுகாலனிய கட்டத்தில் மக்களை அரசியல் அற்றவர்களாகவும், அரசியலின்மீதே அருவெறுப்பு கொண்டவர்களாகவும் மாற்றி வருகின்றது. அரசியல் பச்சோந்தித்தனம், பச்சையான அம்மணமான, வெட்கம் மானம் ஏதுமற்ற பிழைப்புவாத அரசியல் தகிடுதத்தங்களால் வெறுப்பின் எல்லைக்கே சென்று, யாராவது நல்லவன் வந்து ஏதாவது நல்லது செய்ய மாட்டானா என எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து, மக்களது மனம் இறுகி விட்டது. ஓட்டை ஒரு சரக்காக கருதும் மனநிலைக்கு கருத்து ரீதியாகவே அவர்கள் வந்து விட்டார்கள். அல்லது யார் அதிக பொருட்களும் இலவசங்களும் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டை விற்கத் தயாராக இருக்கிறார்கள். “நீ எனக்கு பதவி தா; நான் உனக்கு மிக்சி, கிரைண்டர், மடிக்கணினி தருகிறேன்” என்று பகிரங்கமாக ஓட்டை விலைபேசுவதாக தேர்தலே மாறியிருக்கிறது.

“நல்லவன் ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும்; ஆனால் அது எங்கே நடக்கப் போகிறது?” என்று நொந்து கொள்வது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைத்தால் நாமும் பணக்காரனாகி விட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் மீதான மாயையும் இல்லை; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அது அரசியல் ரீதியில் காலாவதியாகிவிட்டதா என்ற கேள்விக்கும் இடமில்லை. ஏனென்றால், அந்த வேலையை மறுகாலனியாதிக்கவாதிகள் செய்து விட்டனர்.


நிறைவேற்றப் போகும் புதிய ஜனநாயகப் புரட்சி மட்டும்தான் இந்த சின்னஞ்சிறு தேச மக்களின் எதிர்காலம். அந்த எதிர்காலத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்! 

செவ்வாய், 13 நவம்பர், 2018

யார் அந்த ஏழு பேர் ? நடிகர்களின் சமூக அறிவையும் பொது அறிவையும் நினைத்தால் குலை நடுங்குகிறது.

ஜாதிப் பின்புலத்தால் கிடைக்கப் பெறும் அதிகார அனுகூலங்களோடு பிறந்தவள் அல்ல எனது தங்கை…பொருளாதார பின்புலத்தால் வாய்க்கப் பெற்ற வசதிகளோடு பிறந்தவளும் அல்ல….ஆனால் அவள் தமிழினத்தின் தியாகியாய் வரலாற்றில் நிலைபெற்றிருக்கிறாள்…அது 300 கோடியில் எடுக்கப்படும் மிக பிரம்மாண்ட படத்தால் உருவாகும் வரலாறு அல்ல.. இவளிடம் கேள் யார் அவர்கள் என்று சொல்வாள்...!

மனிதத்தின் எல்லையை
ஒடுக்கப்பட்டோரின் அரசியல் வலிமையை
எளியவர்களின் அரசியல் புரிதலை
“தீ மூட்டிக் கொண்டு சொன்ன வரலாறு”

அடுத்தவர்க்காய் கண்ணீர் சிந்துதல் அறம்
அடுத்தவர்க்காய் உயிர் மாய்த்தல் ..பேரறம்…

அவள் வாழ்ந்திருக்க வேண்டும்…
ஆனால் தேதி குறிக்கப்பட்ட ஏழு தமிழரின் சாவு தடுக்க வழியறியாதவளாய்…
அப்பாவி தமிழர்களின் தாயாக மாறி
அவர்களுக்காய் தீ மூட்டிக் கொண்டாள்..

இருபது வயதில் செங்கொடி அம்பேத்கரைப் படித்திருந்தாள்
பெரியாரைப் படித்திருந்தாள்
மார்க்ஸை படித்திருந்தாள்
சே வை படித்திருந்தாள்
பிரபாகரனை படித்திருந்தாள்

அவள் அரசியல் படுத்தப்பட்டிருந்தாள்…எந்த ஏழு பேர் என்று கேட்ட உனது கேள்வி..
அவளின் தியாகத்தை கொச்சைப்படுத்தவில்லை.. உனது அரசியல் போதாமையை
அரைவேக்காட்டுத் தனத்தை அம்பலப்படுத்தி விட்டது… நேரமிருந்தால் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்திற்கு வந்து விட்டு போ ரஜினி..உன்னை விட பல மடங்கு அரசியல் தெளிவும் முதிர்ச்சியும் பெற்ற எனது தங்கை அங்கே உறங்கிக் கொண்டிருக்கிறாள்..

வா அவளின் நினைவிடம் வந்து நின்று விட்டு போ…தெளிவு பெறுவாய்…..


தமிழர்களின் வாழ்வும், உணர்வும், விடுதலையும் தெரியாத உங்களை தமிழர்கள் நாங்கள்; “யார் நீ” என்றே மீண்டும் மீண்டும் கேட்போம்.

தமிழகத்தை ரட்சிக்க வந்த நடிகர்களின் சமூக அறிவையும் பொது அறிவையும் நினைத்தால் குலை நடுங்குகிறது.

ஏழு பேரின் விடுதலை பற்றிக்கேட்டால் ”எந்த ஏழு பேர்?’’ என்று கேட்கிறார் ரஜினி காந்த். அதில் இருக்கும் அலட்சியமும் அறியாமையும் மலிவானது. பரிதாபத்திற்குரியது. இந்த அறியாமைமிக்க அகம்பாவம்தான் தூத்துக்குடி துப்பாகிச் சூடு பற்றிய பேச்சிலும் இருந்தது இப்படிக் கேட்பதில் ரஜினிக்கு எந்தக் கூச்சமும் இல்லை. 25 வருடங்களாக இடையறாது ஒட்டு மொத்த தமிழகமும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையை என்ன பிரச்சினை என வேற்றுக்கிரக வாசிபோல ரஜினி கேட்கிறார்.

ரஜினியின் முதலமைச்சர் போட்டியாளரான கமல் போன வருடம் நீட் பிரச்சினையில் தமிழகம் பற்றி எரிந்தபோது “ பள்ளிப் படிப்பை முடிக்காத தனக்கு நீட்”டின் கொடுமை புரியவில்லை’’ என்று கூலாக கூறினார்.

இவர்களுக்கெல்லாம் முன்னோடி விஜய காந்த். 2014-ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜய காந்த் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பியபோது “தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பீர்களா… என்னமாதிரியான பிரச்சினைகளை பேசுவீர்கள்?’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் சொன்ன விஜயகாந்த், ’’நான் இப்போதுதான் சென்னைக்கு வந்து இறங்கியிருக்கிறேன்… இங்கே என்ன பிரச்சினை நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. கடந்த ஒருமாத காலமாக நான் தமிழ் பேப்பர் படிக்கவில்லை. தமிழ் டிவி சேனல்களும் பார்க்கவில்லை. வீட்டிற்கு போய் டிவி பார்த்துவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன் ’’ என்றார்.

இவர்களுக்கெல்லாம் மூத்த நடிகரான அரசியல் தலைவர் ஒருவர் இருந்தார். எம்.ஜி.ஆர். அவரது அரசியல் உரைகளை யாராவது தேடி எடுத்து படித்துப்பாருங்கள். தலை சுற்றும். அவரது அண்ணாயிஸத்தை கட்டுடைக்க முடியாமல் தமிழ்கூறும் நல்லுலகே திகைத்து நின்றது. நல்லவேளை அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லை.. இருந்தால் முதன்மையான மீம்ஸ் கதாநாயகனாக எம்.ஜி.ஆரே இருந்திருப்பார்

இந்த அலைவரிசையில்தான் விஜய்யின் சர்காரில் வெளிப்பட்ட இலவசங்களுக்கு எதிரான பேத்தல்கள். நடிகர்கள் நாடாள வந்தால், வர விரும்பினால் என்ன நடக்கும் என்பதற்கு இதெல்லாம் ரத்தம் கக்கவைக்கும் உதாரணங்கள்.

தூக்குமர நிழலில் நின்றவர்களை மீட்டு சிறையில் நிழலில் நிற்க வைத்தது வரை ஒரு சமூகத்தின் பயணம் இதில் இருக்கிறது.

அற்புதம்மாள் என்ற பெண்ணின் உழைப்பும் அலைச்சலுமே, இந்தியாவில் மரண தண்டனை தொடர்பான விவாதத்தை கூர்மையாக்கியது. சதா நேரமும் தண்டனைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் ஒரு தண்டனையின் தீவரத்தை, வன்மத்தை, அதன் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக குலைத்துப் போட்டவர் அற்புதம்மாள்.

அது இந்தியாவில் பல நூறு மரணதண்டனை கைதிகளின் விடுதலைக்கு வழி வகுத்தது. எங்கள் சூப்பர் ஸ்டார் அற்புதம்மாள்தான். காரணம் கோடிகளில் பணம் பெறாமல் தனியொரு மனுஷியாக தமிழ் சமூகத்தில் நின்று சாதித்துக் காட்டியவர் அவர்.

உங்களுக்கு தெரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை ரஜினி. இதே குணத்தோடு இப்போதேனும் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் அவ்வளவே!
————-

காந்தியைச் சுட்ட நாலாவது குண்டு யாருடையது?

நாலாவது குண்டு யாருடையது?

அவரைக் கண்டுபிடித்தபோது அவரிடம் அதே பெரட்டா ரக துப்பாக்கி இருந்தது. அதன் பதிவு எண் 719791. ஆனால், அதே பதிவு எண்ணில் குவாலியரைச் சேர்ந்த உதய் சந்த் என்பவரிடமும் ஒரு துப்பாக்கி இருந்துள்ளது. காந்தியின் உயிரைப் பறிக்க காரணமாக இருந்த அந்த நான்காவது குண்டு, பதிவு எண் 606824 மற்றும் 719791 ஆகிய இரண்டு துப்பாக்கிகளில் இருந்தும் வந்தது அல்ல என்று 48-ம் ஆண்டு வெளிவந்த போலீஸ் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


மும்பாய் ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு;

மகாத்மா காந்தியை கோட்சேவைத் தவிர வேறு யாரும் சுடவில்லை என்று நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அம்ரேந்தர் ஷரன் விளக்கம் அளித்துள்ளார்.
தேசப்பிதா காந்திஜி கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கோட்சே, நாராயணன் ஆப்தே ஆகியோருக்குக் கடந்த 1949 நவ.15ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றச்சாட்டு நிரூபணமாகாததால் சந்தேகத்தின் அடிப்படையில் சாவர்கர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் , காந்தியின் மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறி ‘அபினவ் பாரத்’ அமைப்பின் அறங்காவலர் பங்கஜ் குமுத்சந்த் பத்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், காந்தி மீது 4 குண்டுகள் பாய்ந்ததாகவும், அதில் 3 குண்டுகள் கோட்சோவால் சுடப்பட்டது என்றும், 4வது குண்டு யாருடையது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த நான்காவது குண்டுதான் காந்தி உயிரிழக்கக் காரணமாக அமைந்தது. இதில் வெளிநாட்டுச் சதி அடங்கியுள்ளது. இது குறித்து மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகாத்மா காந்தி கொலை வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் படித்து இந்த மனு மீதான விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் அம்ரேந்தர் ஷரனை நியமித்தது.
அவர் ஆவணங்கள் முழுவதையும் படித்து, இன்று (ஜனவரி 8) உச்ச நீதிமன்றத்தில் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

அதில், மர்ம நபர் சுட்ட 4வது குண்டுதான் காந்தியின் உயிரைப் பறிக்கக் காரணம் என்று வீர் சாவர்கரின் தொண்டர் என்று தன்னைத் தானேக் கூறிக் கொள்பவரும், அபினவ் பாரத் நிறுவனருமான பங்கஜ் பட்னிஸ் கூறுவது போல, காந்தி மீது 4 குண்டுகள் பாய்ந்தது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.
1948ம் ஆண்டு காந்தி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட சுமார் நான்கு ஆயிரம் பக்கங்களையும் ஆய்வு செய்த அம்ரேந்தர் ஷரன் தலைமையிலான குழுவினர், இந்தக் கொலையில் வெளிநாட்டுத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்றும் அக்குழு உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.

பேரழிவை உண்டாக்க காத்திருக்கும் Disease X


Disease X இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தான் இதை பற்றி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இவை இதுவரை கண்டுபிடிக்க படாத ஒன்று ஆனால் தாக்குவதற்கான அபாயம் அதிகம் உள்ள ஒரு பரவும் நோயாகும். இதுவரை உலகில் பல உயிர் சேதங்களை உண்டாக்கிய நோய்கள் அனைத்தும் விலங்குகளிடம் இருந்து தான் மனிதனுக்கு பரவியது. முன்பெல்லாம் இவை இயற்கையாக உருவாகின என்று தான் அனைவரும் நம்பினோம். ஆனால் வியாபாரமாகிப்போன மருத்துவமே இதற்கு காரணமாக இருக்குமோ என்று நம்மை நினைக்க வைக்கிறது. இன்னும் சொல்ல போனால் மருந்து நிறுவனங்கள் நோய்களை குணப்படுத்துவதை காட்டிலும் தங்களின் பொருட்களை விற்க நோயாளிகளை உருவாக்குகின்றனர். இது மறுக்க முடியாத உண்மை. அனைத்தும் வியாபாரமாகிப்போன இந்த காலகட்டத்தில் நோய்களையும் நோயாளிகளையும் உருவாக்குவதன் மூலம் மேலும் சம்பாரிக்க இயலும். இது தான் கசப்பான உண்மை. இங்கு நோய்கள் தானாக உருவாகவில்லை. அவை உருவாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. சரி வாருங்கள் இந்த Disease X பற்றி என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம். இந்த Disease X பெரிய அளவில் பரவும் நோய் மேலும் அதிக அளவு உயிர்சேதத்தை உண்டு பண்ணும் திறன் கொண்டது. Spanish flu போன்று எளிதில் பரவும் தன்மை கொண்டது. மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இதை பற்றிய ஆராய்ச்சிகள் தீவிரமாக உள்ளன. இந்த ஆராய்ச்சிகளில் புதிய வைரஸ் Myanmarese  வௌவ்வால்களில் கண்டுபிக்கப்பட்டுள்ளது. இவை corona வைரஸ் குடும்பத்தை சார்ந்தவை. இந்த குடும்பத்தை சேர்ந்த வைரஸ்கள் தான் ஏற்கனவே பெரும் உயிர்சேதத்தை உண்டு செய்தது. ஒன்று சார்ஸ் வைரஸ் இது எளிதில் பரவும் தன்மை கொண்டது. இன்னொன்று மெர்ஸ் வைரஸ். 35% உயிர் சேதத்தை உண்டு பண்ணும் திறன் கொண்டது.


 "எங்களுடைய நோக்கம் எளிதில் பரவும் மற்றும் அதிக அளவு உயிர் சேதத்தை உண்டு பண்ணும் வைரஸ்களை விலங்குகளிடமிருந்து கண்டுபிடிக்க வேண்டும். இது ஆசியா அல்லது ஆப்பிரிக்காவில் உருவாக்கலாம் ஏனென்றால் அங்கெல்லாம் மனிதர்கள் அசுர வேகத்தில் சுற்றுசூழலை அளித்துக்கொண்டுள்ளனர். மனிதர்களுக்கு நெருக்கமாக அமைந்துள்ள காடுகளில் இதுபற்றிய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. காடுகளை அழித்து சாலைகளை அமைப்பது போன்ற காரணங்களால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன்காரணமாக விலங்குகள் காடுகளை விட்டு வெளிவருகின்றன. இதன் காரணமாக காட்டு விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு அதிகரிக்கிறது என வன விலங்கு கால்நடை மருத்துவர் Marc Valitutto தெரிவித்துள்ளார். நவம்பர் 16 ம் தேதி லண்டனில் நடைபெறும் கண்காட்சியில் Disease X பற்றிய தகவல்கள் இடம் பெறுகின்றன. இதை பற்றி அவர்கள் குறிப்பிடுள்ளதாவது    "அடுத்த உயிர்கொல்லி நோய் மனிதர்களை தாக்கி பெரிய அளவில் உயிர்சேதத்தை உண்டுபண்ணும். இதற்கு முன் உலகில் பரவிய மற்ற நோய்களை போன்று இதுவும் எளிதாய் பரவும் தன்மை கொண்டது. இந்த நோய் எதன் மூலம் பரவும் என்று யாருக்கும் தெரியாது. இதற்காக லண்டன் தயாராக உள்ளது. இதற்கு முன்னர் பல நோய்களை இது போன்று பரவியுள்ளன. 18ம் நூற்றாண்டில் பரவிய சின்னம்மை  20% உயிர்சேதத்தை உண்டு பண்ணியது. பின்னர் தடுப்புசிகளின் உதவியோடு முழுவதும் அளிக்கப்பட்டது. இதே போல தான் காலரா நோய்க்கும் குணப்படுத்தப்பட்டது. இதில் நாம் தான் வெற்றி அடைந்தோம் இது போல  இந்த நோயையும் சமாளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disease X - மனித குலத்தின் மாபெரும் அச்சுறுத்தல்

28,000 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட சிலை ( கல்ப விக்ரஹம் )

கல்ப விக்ரஹமும் மர்மங்களும்
விக்ரகத்துடன் கூடிய கையெழுத்து பிரதியினை, அதில் இருந்த வாசகத்தை அதன் அர்த்தத்தை அறிய CIAவிற்கு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆனது. இந்த பணியில் இந்தியாவை மற்றும் நேபாளத்தை சேர்ந்த ஊழியர்களும் இணைந்து பணியாற்றினார். வரலாற்றுக்கு அப்பாற்பட்ட அந்த மொழி சமஸ்க்ரிதம் தொடர்பு உடையது வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியர்களின் மொழியாக இருக்கலாம் என கணித்த வரலாற்று அறிஞர்களும் சரித்திர அறிஞர்களும் முடிவு செய்தபின் இறுதியாக அந்த கையெழுத்து பிரதியில் உள்ள வாசகத்தினை அறிந்து கொண்டனர், அது அந்த விக்ரஹத்தின் பெயரை சுட்டுவதாக இருந்தது.
கல்ப மகா ஆயுஷ்யம் ரசாயன விக்ரஹா
CIAதனது கோப்பில் கல்ப விக்ராஹமாக சுருக்கி குறிப்பிட்டது,
இனி அந்த கல்ப விக்ரஹத்தின் அமைப்பு பற்றி சற்று பார்ப்போம். பித்தளை போன்ற ஒரு வித உலோகத்தில் செய்யப்பட்ட இந்த சிலையின் எடை வெறும் 47.10 கிராம் மட்டுமே, சிவனை போல தோற்றமுடைய ஒற்றை காலை மடக்கி உள்ள தோற்றத்தில் காணப்படும் அந்த சிலையின் தலை பகுதியில் பாம்பினை கொண்டதாகவும், கழுத்தினால் ருத்ராக்ஷத்தினை போன்ற மாலை அணிந்தவராகவும், தனது வலக்கரத்தில் வட்ட வடிவ ஒன்று அநேகமாக சுதர்ஷன சக்ரம் போன்ற ஆயுதம் தாங்கியும் உள்ளார். மற்றும் ஒரு கையில் சங்கும் கனமான வட்டு போன்ற ஒன்றை கொண்ட நிலையில் அந்த சிலை உள்ளது .5.3 சென்டிமீட்டர் உயரமும் ,4.7 சென்டிமீட்டர் உயரமும் அதன் அடிப்பகுதி 2.5 சென்டிமீட்டர் நீளமும், 1.7 சென்டிமீட்டர் அகலமும் மட்டுமே உடைய கொண்ட இவ்வளவு சிறிய சிலை மிக பாதுகாப்பாக இந்த பேழையினுள் வைக்க பட்டு இருக்கிறது எனில், அது உண்மையில் மகத்துவம் மிகுந்ததாக இருக்க வேண்டும். அதன் மகத்துவம் என்ன CIA ஆர்வம் கொண்டது
இது குறித்த அனைத்து ஆவணங்களையும் தன்வசம் எடுத்து கொண்டது .CIA அங்கே கல்ப விகரகம் குறித்த அனைத்து ஆவங்களும் ஸ்டோர் ரூமில் இருந்ததற்கான மற்றுமாய்வு குறித்த அனைத்து ஆவணங்களும் மறைக்கப்பட்டது.
மற்றுமொரு ஓய்வு பெற்ற CIA அதிகாரியின் ரகசிய வாக்குமூலத்தின் படி CIAவின் ரகசிய சோதனைகள் நடைபெறும் இடமான langley virginiya வில் இது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டதாக கூறுகிறார் .அந்த ஆய்வு கூடங்களில் பல அசாத்திய ஆய்வுகள் நடை பெறுவதாகவும் கூறுகிறார் அந்த அதிகாரி.
மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் மிக முக்கியமானது நீர் ஆய்வு. ஒரு நாளைக்கு ஒரு டம்பளர் வீதம் மூன்று நாட்கள் கல்ப விக்ரகம் இருந்த நீரினை அருந்த வேண்டும். CIA வின் ஆய்வுகளில் இது மிக முக்கியமானதாக கருத்தப்பட்டது .அவ்வாறு அருந்துவது மூலம் ரசாயன கல்ப விக்ரகம் எந்த மாற்றத்தை ஏற்படுத்த போகிறேதென அதிகாரிகள் ஆர்வம் கொண்டிருந்தனர். அதே போல கல்ப விக்ரகம் இருந்த நீரினை ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி அத்தனை சோதனை செய்து மாற்றங்கள் குறித்து அறிந்து ஆர்வம் கொண்டிருந்தார் CIA இயக்குனரான ஜான் மேக்கோன்.
ஒன்பது பேர் அடங்கிய நீர் குழுவானது இந்த நீரை சந்தேகத்திற்கு இடமேர்ப்படாத வகையில் ,பொதுமக்களுக்கு வயது வித்தியாசமின்றி அருந்த சொல்லி சோதனையை மேற்கொண்டனர். பெரும்பாலும் கவனக்குறைவாக பலர் இந்த நீரை அருந்த வில்லை சிலர் சரியாக கடைபிடித்தனர்.
நீர் சோதனைகளை ஒருவழியாக சியா முடித்து கொண்டது இருந்தாலும் இது குறித்த முடிவுகள் பற்றி ஏதும் சரியாக அறியாத நிலையில், சில பல காலங்களுக்கு பிறகு டிசெம்பர் 2008 ஆம் ஆண்டு ஒரு தொலைபேசி உரையாடல் அனைத்தையும் வெளிக்கொணர்ந்தது. நீர் சோதனையில் ஈடுபட்ட ஒரு அதிகாரி இன்னொரு அதிகாரிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் அவர்கள் சிறு உரையாடல் இங்கே தரப்பட்டுள்ளது பெயர் மாற்றங்களுடன்,
மேக் என்னை நினைவு இருக்கிறதா, கல்ப விக்ரகம் என அழைக்கப்பட்ட ஹிந்து சிலை நீர் குறித்த ஆய்வில் சில விஷயங்களை சொல்ல அழைத்ததாக கூறுகிறார்.
கென் நீ தான் என்னை அழைத்ததா ,ஓய்வு பெற்று 32 வருடங்களுக்கு பிறகு அந்த சிலை பற்றி சொல்ல என்ன இருக்கிறது ?நான் அதை மறந்து போய்விட்டேன் அது தொலைந்து விட்டதா அது குறித்து என்ன இருக்கிறது பேச,

கென் மைக்ரோபயாலஜிஸ்ட் நிபுணத்துவம் வாய்ந்தவர் .இவர் CIA வில் 1946 இல் இணைந்த வயது 38 தற்பொழுது கென்னின் வயது 100, மேக் வயதோ 98 இப்பொழுது கென் நீர் சோதனையை பற்றி நினைவு கூறுகிறார். மேக் தான் ஆய்வில் நீரினை கொடுத்தவர்களை பற்றிய விவரங்களை தனது பழைய நாட்குறிப்பு மற்றும் இன்னும் சில வற்றின் மூலம் கூறுகிறார் . பிறகு நேரில் சந்தித்து கொள்ளும் இருவரும் இது குறித்த அனைத்து விவரங்களையும் குழு நண்பர்களையும் விவாதிக்கிறார்கள் பிறகு அனைத்தையும் சரி பார்க்கும் போது அவர்கள் கண்ட மிக முக்கிய விஷயம் இந்த கல்ப விக்ரக நீரினை அருந்தியவர்கள் மிக நீண்ட காலம் ஏறத்தாழ நூறு வயதுக்கு மேல் வாழ்ந்து உள்ளனர். அதாவது கல்ப ரசாயன விக்ரகம் மனிதர்களை மிக நீண்ட காலம் வாழவைக்கும் சக்தி கொண்டது எனபது மேலும் அந்த விக்ரகம் CIA பிடியில் இருந்து கடத்தப்பட்டு இந்தியாவில் இருப்பதாக கூறப்படுகிறது ,அதன் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது... 


மேலும் அறிய...
Google Search : ST Circus Mustang - 0183

புதன், 31 அக்டோபர், 2018

கப்பல் படையும் தமிழர்களும்




கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவன் தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.
கடலில் பயணம் செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?

காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. உலகின் முதல் கப்பலையும், கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும், அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.
கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்கு வருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசா வரும்.
ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும். ஆனால் இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம் கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.
இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்த போது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன. ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும், மக்களின் பண்பாடும், மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழின் தாகத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.
உதாரணம்:
தமிழா் - மியான்மர்.
சபா சந்தகன் - மலேசியா
ஊழன்,சோழவன்,வான்கர ை,ஒட்டன்கரை, ஊரு - ஆஸ்திரேலியா
கடாலன் - ஸ்பெயின்
நான்மாடல் குமரி - பசிபிக் கடல்
சோழா,தமிழி - மெக்ஸிகோ
திங்வெளிர் - ஐஸ்லாந்து
கோமுட்டி - ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடல், ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்துபார்த்தால் அது 2500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.
நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் உலகில் உள்ள கப்பல் மற்றும், கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன.

வெள்ளி, 26 அக்டோபர், 2018

போரா, சமாதானமா—உங்களை எப்படி பாதிக்கிறது

போர் என்பது என்ன?
“போர், கடவுளால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் உலக ஒழுங்கில் உள்ளடங்கிய ஒரு பகுதியாக இருக்கிறது. போரில்லாவிடில் உலகமானது சுறுசுறுப்பில்லாமல் பொருளாசையிலேயே ழூழ்கிவிட்டிருக்கும்.”—ஜெர்மன் தேசத்து படைத்துறை உயர்தரப் பணியாளர், ஹெல்முத் வான் மோல்ட்கி
“போரை அடக்குங்கள். இது இயற்கையின் வளர்ச்சியை அடக்க முயற்சிப்பது போலிருக்கும்.”—ஜோசப் P. கோபெல்ஸ், கருத்துப் பரப்பு மற்றும் தேசீய அறிவொளியின் நாசி அமைச்சர்.
“அரசியலின் ஒரு பாகம்”—ரஷ்ய தேசத் தலைவர், லெனின்.
“ஒரு ஆட்சியாளரின் ஒரே ஆராய்ச்சி. இராணுவ முன்னேற்பாடுகளை திட்டமிட வாய்ப்பை அளித்து அதை நிறைவேற்ற திறமையை அளிக்கும் ஒரு ஓய்வு நேரமாக மட்டுமே அவன் சமாதானத்தைக் கருத வேண்டும்.”—இத்தாலிய அரசியல் தத்துவஞானி, நிக்கல்லோ மக்காவல்வி.
சமாதானம் என்பது என்ன?
“இரண்டு யுத்த காலப்பகுதிகளுக்கிடையே வரும் ஏமாற்றத்தை அளிக்கும் ஒரு காலப்பகுதி.”—அம்ரோஸ் பியர்ஸ், அமெரிக்க தேசத்து பத்திரிக்கை எழுத்தாளர்.
“படைத்துறையை சார்ந்திராத ஆட்கள் எண்ணிக்கையில் அதிகமாயிருப்பதால் ஏற்படும், உயிர் வீரியத்தை இழந்த நிலைக்கு யுத்தம் பரிகாரமளிக்க முயலுகிறது.”—சிரில் கன்னாலி, இங்கிலாந்து நாட்டு விமர்சகரும் எழுத்தாளரும்.
“ஒரு கனவு, அழகான ஒன்று இல்லை.”—ஹெல்முக் வான் மோல்க்.
மேலே மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் கருத்துக்கள் உங்களுக்கு எவ்விதமாக தோன்றுகின்றன? போரினிடமாகவும் சமாதானத்தினிடமாகவும் ஒரு கவலையீனமான அணுகுமுறையை உங்களால் காணமுடிகிறதா? அநேக ஆட்களுக்கு விசேஷமாக ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும்—ஆபத்திலிருப்பது தங்களுடைய உயிராக இல்லாத வரையில்—உயிர் மலிவான ஒன்றாக இருக்கிறது என்ற எண்ணத்தை அவை தருகின்றனவா? என்றபோதிலும் நீங்கள் எந்த தேசத்தாராக இருந்தாலும், சமாதானமும் ஒத்திசைவுமுள்ள ஒரு உலகிலேயே வாழ விரும்புவீர்கள் என்பதைக் குறித்து நாங்கள் நிச்சயமாயிருக்கிறோம்.
6000 வருட மனித சரித்திரத்தில், போரானது பல நூறு லட்சக்கணக்கில் மரித்தோரை அறுவடை செய்திருக்கிறது. இரண்டு உலகப் போர்களின் அனுபவத்துக்குப் பின்னும்கூட, சமாதானமும் ஒத்திசைவும் வெறும் ஒரு கனவாகவே தோன்றுகிறது. போர் என்ற சமீப கால புத்தகத்தில் குவென் டையர் எழுதிய விதமாகவே: “இரண்டாம் உலகப் போரின் கடந்த இரண்டு மாதங்களின்போது, ஒவ்வொரு மாதமும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மறுபடியுமாக ஒரே ஒரு தடவை, வல்லரசுகள் இப்பொழுது அவர்களிடமுள்ள எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தி ஒருவரோடொருவர் போர் செய்வார்களேயானால், ஒவ்வொரு நிமிடமும் பத்து லட்சம் ஆட்கள் கொல்லப்படுவார்கள்.” அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வல்லரசுகள் போருக்குச் செல்லுமேயானால், அவை முதலாவது ஜனங்களுடைய கருத்தை அறிந்துகொள்ள அவர்களை கலந்தாலோசிக்குமா? சரித்திரம் வேறு விதமாக பதிலளிக்கிறது.
கடந்த கால போர்களும் தற்போது படுகொலை செய்யப்படுவதற்கான வாய்ப்பும் பின்வருமாறு நம்மைக் கேட்டுக்கொள்ள வழிநடத்துகிறது: “போருக்கு காரணங்கள் யாவை? போர்களுக்கிடையே வெறும் ஓய்வு நேரமாக இல்லாமல், நம்முடைய காலத்தில் மெய்யான நிரந்தரமான சமாதானத்துக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? நிலையான சமாதானம் வெறும் ஒரு மாயமான கனவாக மட்டுமே இருக்கிறதா? 

சனி, 22 செப்டம்பர், 2018

ஆஸ்கார் போட்டிக்கு “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்” சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு

வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் என்ற அசாம் திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்காரில் போட்டியிடும் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தரமான படங்களை தயாரிப்பதில் இந்திய சினிமா எப்போதும் தவறியதில்லை. அப்படி ரிமா தாஸ் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ். அசாமில் உள்ள கிராமத்தில் இருக்கும் சிறுமி தனது ஏழ்மையிலும் எலக்ட்ரிக் கிட்டார் வாங்க வேண்டும் என்ற கனவினை எட்டிய கதையை மிகவும் எளிமையாக கூறியிருப்பார். இந்த படம் அனைவரையும் கவர்ந்திருந்ததோடு கடந்த ஆண்டுக்கான சிறந்த படம் என்ற தேசிய விருதையும் பெற்றிருந்தது.

2019 ஆஸ்காரில் “சிறந்த வெளிநாட்டு படம்” பிரிவில் போட்டியிட ஒரு இந்திய படத்தினை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களான ஆலியா பட் நடித்த ரசி, தீபிகா படுகோன் நடிப்பில் சக்கைப்போடு போட்ட பத்மாவதி, கீர்த்தி சுரேஷ்  நடிப்பில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட மகாநதி போன்ற படங்கள் இந்த ஒரு இடத்திற்காக போட்டி போட்டன. 

இந்நிலையில் இன்று காலை பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா ரிமா தாஸின் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை இந்தியாவின் சார்பாக ஆஸ்காருக்கு அனுப்பப்படும் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த மகிழ்ச்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள படத்தின் இயக்குனர் ரிமா தாஸ், இந்த திரைப்படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வானது தன்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. அளவுகடந்த ஆனந்தத்தோடும் . பெருமையோடும் இந்த செய்தியை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வானதை தொடர்ந்து திரைப்பட பிரபலங்களும் , இந்திய சினிமா ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர். இது ஆஸ்கார் போட்டிக்கு தேர்வாகியுள்ள முதல் அஸ்ஸாமீஸ் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் நிச்சயம் ஆஸ்காரில் விருதை கைப்பற்றும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ரிமா தாஸ் உருவாக்கிய திரைப்படம் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைத்துமே இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியத் திரைப்படங்கள் எதுவும் இதுவரை ஆஸ்கார் விருதைப் பெறவில்லை என்பது நினைவுக்கூறத்தக்கது.