திங்கள், 29 பிப்ரவரி, 2016

முதல் நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்டது என்ன?

நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள், நிலவுக்கு செல்லும் முன் தாங்கள் உயிருடன் திரும்புவது சந்தேகம் என்ற நிலையிலேயே பயணத்தை தொடங்கினர்.இதற்காக தங்கள் உயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய முயன்றபோது எந்த நிறுவனமும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை. கிரேய்க் நீல்சன் என்பவர் விண்வெளி பற்றி'ராக்கெட் மேன்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டு உள்ளார். அந்த புத்தகத்தில் மனிதனின் நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்ட சில விஷயங்களையும்,மறக்க முடியாத சம்பவமாக விண்வெளி வீரர்கள் கூறியதையும் தொகுத்துக் கூறி உள்ளார். 

41 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் முதன் முதலில் நிலவில் கால்பதித்தான்.அமெரிக்காவைச் சேர்ந்த நீல்ஆம்ஸ்ட்டிராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய 3 விண்வெளி வீரர்களும் 1969ம் ஆண்டு ஜுலை மாதம் 21-ந்தேதி நிலவில் இறங்கினார்கள்.பரபரப்பாக பேசப்படும் 'ராக்கெட் மேன்' புத்தகத்தில் சுவாரசியமான விஷயங்கள் இதோ… 

திட்டமிட்டபடி இறங்காத விண்கலம்
1. விண்வெளி வீரர்கள் சென்ற அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சிறிது தூரத்தில் சென்றபோது சிறு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இதனால் திட்டமிட்ட இடத்தில் இறங்க முடியாமல்போனது. 31/2 மைல் தொலைவுக்கு அப்பால் சென்று இறங்கியது.

2. அப்போது விண்கலத்தில் பயன்படுத்திய கம்ப்யூட்டர் தற்போது இருக்கும் செல்போன் அளவு வேகம் கூட இருக்கவில்லை. 

3. குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட வேண்டியதாக இருந்தது. ஏனெனில் எரிபொருளுடன் சம்பந்தப்பட்டு வடிகட்டியே பெறப்பட வேண்டியதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் இந்த ஏமாற்றம் நிகழ்ந்தது. அதேபோல் சிறுநீர் கழிப்பது, மலஜலம் கழிப்பது போன்றவற்றுக்கும் மிகுந்த சிரமப்பட வேண்டியதாக இருந்தது. இதனால் மலஜலத்தை நிறுத்தி வைப்பதற்காக விண்வெளி வீரர்கள் மருந்து சாப்பிடும் நிலைக்கு ஆளாகினர்.  

4. அதேபோல் பெரிய விண்கலத்தில் இருந்து ஈகிள் எனப்படும் குட்டி விமானம் மூலம் நிலவில் தரை இறங்கினார்கள். ஈகிளிலும் பிரச்சினை ஏற்பட்டதால் 4 மைல் தூரத்துக்கு அப்பால்தான் தரை இறங்க முடிந்தது. 

5. நீல் ஆம்ஸ்டிராங் ஈகிள் மூலம் நிலவில் இறங்கும்போது அது ஏறக்குறைய எரிபொருள் தீர்ந்து நிலவின் தரையில் மோதுவதுபோல சென்றது. 


6. நிலவில் காலடி வைத்ததை 'மனிதனின் சிறிய அடி' என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதுசிறிய அடியாக இருக்கவில்லை. அவர் ஈகிளின் ஏணிப்படியிலிருந்து 3.5 அடி தாவித்தான் நிலவில் கால் வைத்தார். 

7. ஆம்ஸ்டிராங்கை தொடர்ந்து ஆல்ட்ரின் இறங்கினார். அப்போது ஈகிள் விண்கலத்தின் கதவை பூட்ட முடியாமல் சிரமப்பட்டார். ஏனெனில் அதை வெளியில் இருந்து பூட்டும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. 

கொடியை நடுவதில் சிரமம்
8. நிலவில் இறங்கும் முன்பு நடந்திருந்த ஆய்வுப்படி நிலவின் மணல் மிருதுவாக இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் நிலவில் இறங்கிய பிறகுதான் கடினமாக இருந்தது தெரியவந்தது.மனிதன் இறங்கிய இடம் முழுவதும் பாறையாக இருந்தது. இதனால் கொடியை நடுவதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள்.  

9. நிலவில் நட்ட அமெரிக்கக் கொடி விறைப்பானதாக இருந்தது. ஆனால் அதை நாசா நிறுவனம் மறுத்துவிட்டது. 


10. விண்வெளி ஆடை, அங்குள்ள சூழலுக்கு ஏற்ற கம்ப்யூட்டர் சிப் அனைத்தும் "லிட்டில் ஓல்டு லேடிஸ்'' என அழைக்கப்படும் குழுவினரால் கையால் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த விஷயங்கள் அனைத்தையும் நாசாவின் கருவூலத்தில் இருந்து சேகரித்து தொகுத்து உள்ளார்.
நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள், நிலவுக்கு செல்லும் முன் தாங்கள் உயிருடன் திரும்புவது சந்தேகம் என்ற நிலையிலேயே பயணத்தை தொடங்கினர். இதற்காக தங்கள் உயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய முயன்றபோது எந்த நிறுவனமும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை.
இதனால் தங்களின் நினைவுச் சின்னங்களாக சில பொருட்கள், ஓவியங்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டே விண்வெளி வீரர்கள் பயணத்தை தொடங்கினர்.இந்த விஷயங்கள் ஏற்கனவே விண்வெளி வீரர்களால் வெளிப்படுத்தப்பட்டு பல நூல்களில் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'ஹெர்ட்ஸ்'' என்றால் என்ன? Hertz

கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் பற்றிப் பேசுகையில் நாம் அடிக்கடி ''மெகா ஹெர்ட்ஸ்'' மற்றும் ''கிகா ஹெர்ட்ஸ்'' என்று பேசுகிறோம், படிக்கிறோம். இந்த ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது? ஏன் இந்த பெயர் வந்தது
                       ஹெர்ட்ஸ் என்பதனை சுருக்கமாக Hz என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். இது ஜெர்மன் பிசிக்ஸ் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது. ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு (ரேடியோ அலைவரிசையில்) கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது.

                      சி.ஆர்.டி. மானிட்டர் (டிவி பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால் அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக 85 Hzஎன்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின் வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படுவதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.

மெஹா ஹெர்ட்ஸ் Mehahertz (MHz) ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாகவோ அல்லது வேறு வழியாகவோ விளக்குவது கஷ்டம். கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். ஒரு கம்ப்யூட்டர் பிராசசர் உள்ளாக அமைந்த ஒரு கடிகார துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப் படுகிறது.

                    முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். தற்போதைய பெண்டியம் 4 கம்ப்யூட்டர் பிராசசர் 3.2 கிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டுள்ளன. (ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ்.) எனவே கணக்குப் போட்டு இந்த அதிவேக துடிப்புகளை உணர்ந்து கொள்க. கிஹா ஹெர்ட்ஸ் Gigahertz (GHz) கம்ப்யூட்டர் உலகில் இது கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். தற்போது வரும் கம்ப்யூட்டர் பிராசசர் வேகம் இந்த அளவிலேயே சொல்லப்படுகிறது

வியாழன், 25 பிப்ரவரி, 2016

பெருந்தலைவர் காமராஜர் ஒரு நாத்திகவாதி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

பெருந்தலைவர் காமராசர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப் பார்த்தார். அக்கோயில் பழம்பெருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்தது.

அது பிரகாரம் திறந்து கிடந்தது. அங்கங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கோயில் கோபுரத்திலெல்லாம் மரம், செடி, கொடிகள் வளர்ந்துகிடந்தன. கோயில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து மணியடிப்பார். சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோயிலுக்குள்ளே போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவு ள் நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும். தலைவர் கோயில் வாசலில் இருந்த கல் வெட்டுகளை யெல்லாம்பார்த்தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களையெல்லாம் துடைத்துவிட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம் , நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார்.


இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயிருந்தது. கோயிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப் போகாமல், எது எதையோ பார்த்துக் கொண் டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனர். ஆனால், எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும், கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிக் கொள்வார். விபூதி பூசிவிட்டால் மறுக்கமாட்டார். பரி வட்டமும் கட்டிக் கொள்வார். தீபாராதனையைத் தொட்டுக்கொள்வார். கோயிலை விட்டு வெளி யில் வந்த மறு நிமிடமே பழம், தேங்காய் மூடி, மாலை களை யார் பக்கத்திலிருக்கிறார்களோ அவர்களிடம் கொடுத்து விடுவார். விபூதி , குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துப் போக மாட்டார். பையில் பத்திரப் படுத்தவும் மாட்டார். அதற்குப்பெரிய முக்கியத்து வமும் கொடுக்கமாட்டார். கேட்டால், கோயில்ல செய்ற மரியா தையை வாங்கிக்க ணும் அதுதான்மனுஷ நாகரிக ம். குரு க்கள், அறங்காவலர், ஊர் ஜனங்க மனசு புண்படக் கூடாதில்லியா…. அதுக்கு மேல அதில ஒண்ணு மில்லே…!” என்பார்.தலைவர் இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையி லேயே அந்தக் கோயிலின் குருக்களும், அறங் காவலரும் வந்துவிட்டனர். பிரகாரத் தைச் சுற்றிவந்த தலைவர், குருக்களைப் பார்த்து, “ இக்கோயிலக் கட்டி எவ்வளவு காலமாச்சு…?” என்றார். குருக்களும், நிருவாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர். “ஏன்ய்யா… குருக்கள்…. நீங்க எவ்வளவு காலமா இந்தக் கோயிலுக்கு மணியடிச்சிகிட்டு இருக்கீங்க…. இந்தக் கோயில பத்தி ன ‘தல வரலாறே’ உங் களுக்குத் தெரியாதா…? எந்த வருஷத்து வண்டி? எத்தனை கிலோ மீட்டருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம, ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டலாமான்னேன்?” என்று காமராசர் ஆரம்பித்ததும் குருக்கள் உள்பட எல்லோரும் ஆடிப் போ னார்கள்.தலைவரே மேலும் தொடர்ந்தார். இக்கோயிலக் கட்டி எண்ணூத்து எழுபது வருஷத்துக்கு மேலாகுது. சோழமாதேவி தானமா கொடுத்த “இறையிலி” நிலங்கள்தான் இந்தக் கோயில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்தத் தாலுக்காவுமே இந்தக் கோயில் சொத்துதான். அதி லேருந்து வர்ற வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புனஸ்காரமெ ல்லாம் பண்ணணும். குத்தகைதாரர்கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித்தான் சாமியாடிகளுக்கும், தேவரடியார்களுக்கும், பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாயம் பண்ணிச் சாப்பிட்டுக் கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒரு பிடி நெல்லைக்கூட கோயிலுக்கு அளக்கலப்போலிருக்கு அதனாலதான் சாமி இருட்டில கிடக்குன்னேன்.. !” என்று காமராசர் பேசப்பேச அத்த னை பேரும் அதிர்ந்து போய் நின்றனர். அந்தக் கோயில் சொத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த ‘பெருச்சாளிகள்’ பலரும் அங்கே நின்றுகொண்டிருந்தனர்.தங்கள் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று அந்தக் குத்தகைதாரர்கள் நடுங்கிப்போயிருக்க க் கூடும். இதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து, ‘பிரசாதம், பொங்கல், வடையெல்லாம் தயாரா இருக்கு!’ என்று ஆரம்பித்தனர். “சாமியை இருட்டில போட்டுட்டு ஆசாமியெல்லாம் சாப்பிட்டு கிட்டிருக்கீ ங்க. பொங்கல், வடையையெல்லாம் ஏழை ஜனங்களுக்கு, சேரிப்பிள் ளை களுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க…!” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தலைவர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழு திகைத்துப் போய் நின்றது.தலைவர் அடுத்த ஊர் நிகழ்ச்சிக்குப் போவதற்காகக் காரில் ஏறினார். நானும் அவரோடு பயணம் செய்தேன்.

“கடவுள்பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்… பூஜை, வழிபாடு, நேம, நைவேத்தியங்கள் பற்றி அவரது கருத்து என்ன?” என்பதையெ ல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இதுதான் சரியான வாய்ப்பு என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன்.

“கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா… ?”

“இருக்கு, இல்லைங்கிறதைப்பத்தி எனக்கு எந்தக்கவலையும் கிடை யாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்த னா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணி கிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப்போச்சா…?” (என்றார்).

நான், “கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கை யும் ஒண்ணாயிருக்கும் போலிருக்கே…” என்று ஆரம்பிக்கவும். அவ ரே, “ஆதிஸ்டு(Athiest)ன்னு” சொல்றீயா …? நேரு ரெண்டப்பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனா… மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரும்ணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார்.. அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில போடணு ம்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச்சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிறதத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்… ஏற்றத் தாழ் வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றா ங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப்படு தான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவதுதான் முன் னேறணும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான்… இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா…?” (என்று கேட்டார்).

நான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதா ன் நீங்களும் நினைக்கிறீங்களா…?

இருந்திருந்தா இந்த அயோக்கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப் பாரே…! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதி ன்னு படைச்சிருக்க மாட்டாரே …?” என்றேன். “மேல் ஜாதி, கீழ் ஜாதி யெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடு ன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன் சூத்திரன்…? ரொம்ப அயோக்கியத்தனம்…!” (என்றார் காமராசர்).

(எனக்குள் பெருமையும், பூரிப்பும் பிடிபடவில்லை. காமராசரைக் கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்ய வேண்டும் போலிருந்தது. இவரு க்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா…..? இத்தனை கம்பீரமா? அடங் காத சீற்றமா? ஆத்திர நெருப்பா? அவர் பேசப்பேச நான் வானுக்கும், பூமிக்குமாய்க் குதித்தேன்.)

“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ள வில்லை…?” (என்று கேட்டேன்).

“நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி – ஆத்திகவாதி எல் லாருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷ ன்” னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே. அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடி யாது. நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக்கொள்கை. அரசியல் வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொ டுக்க வேண்டியது, அரசியல்வாதியோட கடமை. அந்தக்கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்ன் (Govern)” பண்றவனோட வேலை. “நான் நாத் திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடி யாது. கம்யூனிச சமுதாயத்திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே …! தனிப்பட்ட முறையில நான் கோவில், பூஜை, புனஸ்காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமை கள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்”(என்று மிகத் தெளிவாகப் பேசினார்).

“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லை யா…?”(எனக்கேட்டேன்).

“அதெல்லாம் வேலை, வெட்டியில்லாதவன் பண்றதுன்னேன். அடு த்த வேளை சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத் ராடனம்’ போறான்… எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலைன்னு இவன்கிட்டே கோவிச்சுகிட்டான்….?’ அபிஷேகம் பண் றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன்…. அந்தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா…? “பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனு க்குப் பி.ஹெச்.டியா கொடுக்கிறாங்க…? பதினெட்டு வருஷமா கடன் காரனா இருக்கான்னு அர்த்தம். பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் ஸ்டேடஸ்(Social Status)’க்காக. நாலு பேர் தன் னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக.ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோ ர் இல்லத்துக்கோ கொடுக்கலா மில்லியா….” ஊருக்கு நூறு சாமி… வேளைக்கு நூறு பூஜைன்னா…. மனுஷன் என்னிக்கு உருப்படறது…? நாட்டுல வேலையில்லாத் திண் டாட்டம். வறுமை – சுகாதாரக்கேடு. ஏற்றத்தாழ்வு இத்தனையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு…. பூஜைன்னேன்…..? ஆயி ரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக் குன்னேன்…?” (தலைவர் போடு, போடு என்று போட்டுக் கொண்டு வந்தார். அவருக்குள் ஆயிரம் இங்கர்சாலை, பெரியாரை நான் கண் டெடுத்தேன்).

“அப்படியானா. நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா… இல் லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?” என்று கேட்டேன்.

அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல், “லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர் கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம் மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திரு ப்பான். அவன் செத்தும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கி றவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டு தான் இருப்பாரா …? “அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடா தேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவ ராயன், கழு வடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்….? அவனவனும் அவனவன் இஷ்டத் துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டா க்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்… காங்கிரஸ் – கம்யூ னிஸ்ட் – தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்… மதம் மனி தனுக்குச் சோறு போடுமா…? அவன் கஷ்டங்களப் போக்குமா…? இந் தக் குறைந்தபட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு…? உலகத் துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா… நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே…! நாட்டு க்கு நாடு யுத்தமே வருதே….! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொ ன்னான்…?” (தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார், ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடி வை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.)

“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளா க்கிட்டானே! அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?” (என்று வினாத் தொடுத்தேன்).

(தலைவர் குலுங்கக் குலுங்கச்சிரித்தார்.) “டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்….? ராமன், கிருஷ்ணன் கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்….! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதா நாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா… அது மாதிரி அக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிரு ஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல் லப்பட்டிருக்கிற விஷயங்கள எடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுட ணும்.”….காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக்கணக்கான மக்க ள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்ச தும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப்பாக்குறானுங்க களவாணிப்பசங்க…. புரா ணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதை யை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவராத்திரி கதையைச் சொல் லி சரஸ்வதி பூஜை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாய கருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபா வளி கொண்டாடுனதுமில்ல… எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல … புதுசு கட்டுனதுமில்ல… பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன் னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம கலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்…” (என்று விளக்கினார்).

“மதம் என்பதே மனிதனுக்கு அபின்…!” அப்படிங்கிற கருத்து உங்களு க்கும் உடன்பாடுதான் போலத்தோணுதே…?” என்று ஒரு கேள்வியை ப் போட்டேன்.

தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனித னைச்சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல… பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனா ட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா…? ஏழை வீட்டுப் பெண் ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக்க ணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடு ப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க்கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுக் கலாமில்லையா? அதையெல்லாம் செய்யமாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தி யே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்ச வனே அப்படித்தான் இருக்கான்னேன்….” (என்றார்).

“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா…? அதிலேருந்து எப்போ விலகுனீங் க…?”

இது நான். “சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளி யம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்து கிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக் கச்சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போ யும், போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு… எல்லாம் ‘பார்பர் ஷாப்(Barber Shop)’காரன் ‘செட்-அப்’ அப்புடீன்னு சிந்திச் சேன். விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப் பானா…?” (என்று கேட்டுவிட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்.)

“அப்படியானா… மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம் னு சொல்றாங்களே… அதப்பத்தி….?” என்று கேட்டேன்.

“அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளு க்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா… தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்மள வாழ்த்தும்னேன்…!”

காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிட மே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லா மல் நடந்துபோன சிறுவர்களைப் பார்த்து, “ஏன் பள்ளிக்கூடம் போக லியா?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.

-நன்றி:

திரு. சீர்காழி பெ. எத்திராஜ் – முன்னாள் மேலவை உறுப்பினர்) தமிழ் ஓவியாவின் பக்கத்திலிருந்து . . .

தமிழனாய் பெருமை கொள் தோழா!

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை
கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த
அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ?
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்.
எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை
துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும்
தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம்
மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் !

வியாழன், 18 பிப்ரவரி, 2016

புலம்பெயர்ந்தவர்கள் Vs புலன்பெயர்ந்தவர்கள்

கைநிறைய சம்பளம். கிடைக்கும் நேரமெல்லாம் போதை ஏற்றிக்கொள்வது. ஜரோப்பிய கலாச்சாரத்தில் அடியொற்றி தோடுகளும், மிடுக்குகளும் பச்சைகளையும் குற்றிக்கொள்ள பாதுகாப்பான பெட்டலத்தில் இருப்பவர்களுக்கு தேவை ஈழம். கிடைத்தால் எத்தனை பேர் வந்து குடியேறுவார்கள் என்பது யாருக்கு தெரியும். தமிழ் கலாச்சாரத்தை அடியெற்றி தன்பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்காதவர்கள் ஈழ மண்ணில் மீள்குடியேற்ற எந்த சந்ததியை விரிவுபடுத்துகிறார்கள். இன்னும் பிள்ளைகளையும் நில புலன்களையும் தொலைத்து விட்டு ஒரு கூட்டம் கதறி அழ.! கிடைக்கும் லாபத் தொகைக்கு அவர்களுடை சொத்துக்ககளையும் பூர்வீக நிலங்களையும் டொலர்களால் சுரண்டவென இன்னொரு கூட்டம். எல்லோரும் பதுங்குவதற்கு தேவை தமிழ் மொழி. தமிழ்ஈழம். சமூகவிடுதலையின் பேரில் வியாபாரநோக்கமும் இன்று போராளிகளின் கல்லறைகள் மேல் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது... தேசியம் இன்று அவரவர் தேவைக்காக விளம்பரமாகி வியாபாரமாகி போய்கொண்டு இருக்கிறது...

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

ரஜனிமுருகன் திரைப்படத்தில் பிடித்த காட்சி வசனங்கள்

வெளிநாட்டில் இருந்து வந்த தன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளை பார்த்த பூரிப்பில் தன் பேரக்குழந்தை அருகில் சென்று…

தாத்தா:- (தன் பேரனிடம்) செல்லப் பேராண்டி இந்த தாத்தாவ உனக்கு தெரியுமா?

மகன்:- (பேரனின் தந்தை-இடைமறித்து)  அப்பா அவனிக்கு டமிழ் தெறியாது.

தாத்தா:- (மனமுடைந்ந நிலையில்)  தாய்தமிழ் மொழியே சொல்லிக்கொடுக்காத நீங்க இந்த தாத்தா பத்தி! நம்ம கலாச்சாரங்கல பத்தி எப்படி சொல்லிக்கொடுக்க போறீங்க…!


மெல்ல தமிழ் இனி சாகும்- அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!
என்றந்தப் பேதை உரைத்தான்! ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
- பாரதியார்

"தமிழ் இனி மெல்ல சாகாது விரைந்து சாகும்." - அமலதாஸ் எல்றோய்

வெள்ளி, 22 ஜனவரி, 2016

“உலகில் எது உயர்ந்த மதம்?”


உலகின் மதங்களால் மக்களுக்கு பல நன்மைகள் நடந்திருந்தாலும், கொஞ்சம் ஆழமாக கவனித்துப் பார்த்தால், உலகில் நடந்த, நடக்கும் போர்கள், கலவரங்கள் போன்றவைக்குக் காரணம் மதங்கள்தான் என்பது புரியும்… இப்படி இருக்கையில், “உலகில் எது உயர்ந்த மதம்?” என்று ஒருவர் சத்குருவிடம் கேட்டபோது…

சத்குரு:

“உலகில் எந்த மதம் உயர்ந்தது?” என்று என்னிடம் கேட்டார்கள்.

உண்மையில், இப்போது மதங்கள் எங்கே இருக்கின்றன? மதங்களின் பெயரால் நடத்தப்படும் கட்சிகள்தானே இருக்கின்றன?

மதம் என்ற பெயரால், ஒரு குறிப்பிட்ட கட்சியோடு உங்களை விலங்கிட்டுக் கொண்டு சுதந்திரத்தை அல்லவா இழக்கிறீர்கள்?

ஒவ்வொரு மதமும் தனி மனிதன் தன்னை உணர, அவன் கவனத்தை உள்நோக்கித் திருப்புவதற்காக உருவானது. ஆனால், மனிதனை மேன்மையுறச் செய்வதைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் செய்வதுதானே இன்று மதக்கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது?

தனித்துவிடப்படக்கூடாது என்று நீங்களும், அப்படியொரு கட்சியைச் சேர்ந்தவராகிவிடுகிறீர்கள். அது பிறப்பால் இருக்கலாம். அல்லது நீங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்ததால் இருக்கலாம்.

எப்படியானாலும், ஒரு பிரிவினரோடு உங்களை அடையாளப்படுத்திக் கொண்டதும், ‘உன் கட்சி பெரிதா, என் கட்சி பெரிதா?’ என்ற தகராறுக்கு நீங்களும் தயாராகிவிடுகிறீர்கள்.

உண்மையில், மதம் என்பது உலகுக்கு எந்தத் தீங்கையும் சொல்லித் தரவில்லை. எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபட்டு, உண்மையான சுதந்திரத்துடன் வாழ்க்கையை வாழ்வதற்கான வழிமுறைகளைத்தான் எல்லா மதங்களும் சொல்ல முற்படுகின்றன.

ஆனால், அதற்கு நேர்மாறாக அல்லவா நடக்கிறது! மதம் என்ற பெயரால், ஒரு குறிப்பிட்ட கட்சியோடு உங்களை விலங்கிட்டுக் கொண்டு சுதந்திரத்தை அல்லவா இழக்கிறீர்கள்?

சங்கரன்பிள்ளை சேர்ந்த மதம்

சங்கரன்பிள்ளைக்கு ஆன்மீகப் பாதையில் போக ஆசை வந்தது. இருப்பதிலேயே எந்த மதம் உயர்ந்தது என்று கண்டுபிடித்து, அந்த குருவிடம் சீடராகச் சேர முடிவு செய்தார். நண்பர்களிடம் விசாரித்தார்.

ஒரு நண்பர், தன் மதகுருவிடம் அனுப்பினார். அங்கே போனதும், முதலில் தலைமுடியை மழித்துவிட்டு வரச் சொன்னார்கள். வலது காதில் வலிக்க வலிக்க ஓர் ஓட்டை போட்டு, பெரிய வளையம் ஒன்றை மாட்டினார்கள். ஆரஞ்சு நிற உடைகளை அணியச் சொன்னார்கள். அங்கே ஒரு மாதம் தங்கியிருந்தும், தனக்குள் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை என்பதை சங்கரன்பிள்ளை உணர்ந்தார்.

இடம் மாற விரும்பி, அடுத்த நண்பரிடம் போனார். அவர் சங்கரன்பிள்ளையைக் காட்டுக்குள் அழைத்துப் போய், அங்கே தன் மதகுருவிடம் விட்டார். “இங்கே பச்சைத் துணிகளை மட்டுமே அணிய வேண்டும். முடியை வெட்டவே கூடாது. எவ்வளவு நீண்ட தாடி வளர்கிறதோ, அவ்வளவு நல்லது. அப்புறம் ஆபரணங்களே கூடாது!” என்றார் அந்த மதகுரு.

காதில் பழைய புண்ணே ஆறவில்லை. அங்கிருந்த வளையம் நீக்கப்பட்டது. அவர்கள் மத வழக்கப்படி, வேறு இடத்தில் சதையைக் கீறி எடுத்தார்கள். அங்கேயும் புண்ணானது. அந்த மதகுருவிடமும் ஒரு மாதத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

மதங்களால் பிரச்சனை இல்லை. மதக்கட்சிகளை நடத்துபவர்களால்தான் அத்தனை பிரச்சனையும்!

“மலை மேலே இருக்கும் ஆசிரமத்துக்குப் போ. அங்கே இருப்பவர்தான் சிறந்த குரு!” என்று அடுத்த நண்பர் சொன்னார். சங்கரன்பிள்ளை அந்தப் புதிய மதகுருவைக் காண, கால் வலிக்க மலை ஏறினார். ஆசிரமத்தை அடைந்தார்.

அங்கே சீடர்கள் மொட்டை அடித்திருந்தார்கள். தாடி மட்டும் வளர்த்து, இரண்டு காதுகளிலும் வளையங்கள் மாட்டி மூக்கிலும் துளையிட்டிருந்தார்கள். சங்கரன்பிள்ளை மயங்கி விழுந்தார்.

மதங்கள் மாறினால், ஒவ்வொரு மதகுருவும் உங்கள் உடம்பில் ஒரு துளையிட்டு விட்டுப் போவதுதான் நிகழும். வேறெந்த உயர்வும் கிடைக்காது. மதங்களால் பிரச்சனை இல்லை. மதக்கட்சிகளை நடத்துபவர்களால்தான் அத்தனை பிரச்சனையும்!

அரசியல் கட்சி நடத்துபவர்களுக்குத்தான் எத்தனை ஆட்கள் தங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியம். மதத்துக்கு எங்கே அந்த அவசியம் வந்தது?

மதம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு, தன் அகங்காரத்தை நிலை நிறுத்திப் பார்க்கும் மனிதர்களுக்குத்தான் எண்ணிக்கைகள் அவசியமாகின்றன.

உள்நோக்கித் தன்னைக் கவனிக்காமல், வெளியே எத்தனை எண்ணிக்கை கிடைத்தது என்று எப்போது கவனம் போகிறதோ, அப்போதே அந்த மதம் செத்துப் போகிறது.

உங்கள் கடவுள் மேன்மையானவர் என்பதை உலகுக்கு நிரூபிக்க, உங்களை நீங்களே ஏன் நியமித்துக் கொள்கிறீர்கள்? உங்கள் கடவுளுக்கு அதிக சக்தி இருக்கிறது என்று நீங்கள் மனதார நம்பவில்லையா?

உங்கள் பலத்தையும், வற்புறுத்தலையும், வன்முறையையும் சார்ந்துதான் அவருடைய புகழ் பரவும் என்றால், அவர் உங்களைவிடப் பலவீனமானவராக, உங்களை விடத் தாழ்ந்தவராக அல்லவா ஆகிவிடுகிறார்?

உங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள, அவரை ஏன் உங்கள் கட்சி வேட்பாளராக முன்னிறுத்தப் பார்க்கிறீர்கள்?

நீங்கள் கடவுள் பெயரில் நடத்தும் ரசிகர் மன்றங்களுக்கு அவர் துணை இருப்பார் என்று எதிர்பார்ப்பது கேவலம் இல்லையா?

ஆன்மீகம் உன்னதமானது. மனிதனை உய்விக்கப் பிறந்தது. தனக்குப் பின்னால் ஒரு கோடி ஆட்கள் இருந்தால் என்ன, ஒரு ஆள்கூட இல்லாவிட்டால் என்ன?

உண்மையான ஆன்மீகத்தை நினைப்பவனுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது.

உண்மையில், உங்கள் மதத்தின் அடிப்படை நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அது, உங்களைத்தான் முதலில் கவனிக்கச் சொல்கிறது.

உங்கள் மாற்றத்துக்கு வழி தேடாமல், மற்றவர்களை உங்கள் பக்கம் மாற்றுவதற்கு முயற்சி செய்வது, உங்கள் மதத்தின் குறிக்கோளையே அவமதிப்பதாகும்!

ஒவ்வொரு தனிமனிதனும் மேன்மையானவனாக மாறினால் மட்டுமே ஒட்டுமொத்த உலகமும் மேன்மையடைய முடியும்.

அதனால், எந்தக் கட்சியிலும் சிக்கிக் கொள்ளாமல், உங்கள் மதம் மூலம் உண்மையை உணருங்கள். உயர்வடையலாம்!

மிருகவதை

உணவுக்கு வெட்டுனா அது மிருகவதை. உணர்ச்சி இல்லாததுக்கு வெட்டுனா அது நேத்திக்கடன். எது என்னமோ இந்த மனித இனத்திடம் சிக்கிக்கொண்டு ஐந்தறிவு மிருகங்கள் அழிந்து போகின்றன.