வெள்ளி, 25 ஜூன், 2010

உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் மற்றும் சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்

ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் மற்றும் சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம் ஆகியவை கடைபிடிக்கப்படுகின்றன.
உலகளாவியரீதியில் போதைப் பொருள் பயன்படுத்தல், போதைப் பொருள் கடத்தல் [^], போதைப் பொருள் விற்பனை செய்தல் என்பன ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைப் பொருள் கடத்தலுக்காக சில அரசுகள் மரண தண்டனையைக்கூட சட்டமாகப் பிரயோகித்து வருகின்றது. எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும்கூட, போதைப்பொருளை முற்றாக ஒழித்துவிட முடியவில்லை. போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முகமாக ஏற்படுத்தப்பட்ட தினமாகவே உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் (World Anti - Drugs Day) காணப்படுகிறது.


போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் பல்வேறு கஷ்டங்களுக்கு உட்படுவதோடு பிறருக்கும் தீங்குகளை விளைவிப்பவர்களாகவும் மாறுகின்றனர். இன்று வர்த்தக ரீதியில் உலகெங்கும் போதைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அநேகமாக சட்டவிரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ்வர்த்தகம் நடைபெறுகின்றது. சில நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளின் போது ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் போதைப் பொருட்கடத்தல் மேற்கொள்ளப்படுகின்றன.

மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இத்தகைய கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவதனாலும், இதற்கு உடந்தையாக வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிலர் இருப்பதினாலும் இதனை இல்லாதொழிப்பது ஒரு கடினமான செயற்பாடாகவே மாறிவருகின்றது. போதைப் பொருட்பாவனையால் ஏற்படும் தீங்குகளும், பாதிப்புகளும், அழிவுகளும் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜுன் 26ம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக நோக்குமிடத்து போதைப் பொருட்பாவனை பண்டையகாலம் தொட்டே இருந்து வந்துள்ளதை அறியமுடிகின்றது. அபின், கஞ்சா, கள்ளு, சாராயம், கசிப்பு, பீடி, சிகரட், சுருட்டு என்பன மக்களால் பாவிக்கப்பட்டு வந்ததை நாம் தெரிந்து வைத்துள்ளோம். சில சந்தர்ப்பங்களில் போதைப் பொருட்கள் ஒளடதமாகவும் பாவிக்கப்பட்டது. பொதுவாக களியாட்ட காலங்களில் மக்கள் போதை தரும் பானவகைகளையும், புகையிலை வஸ்துக்களையும் பயன்படுத்தினர்.




ஆனால், விஞ்ஞான வளர்ச்சி காரணமாக அவை நவீன உருவிலும், எளிமையான முறையிலும் தயாரிக்கப்பட்டன. மிகச் சிறிய அளவு பாவிப்பதன் மூலம் அதிகளவு போதை தரக்கூடியதாக அவை தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், இவை இலகுவாகக் கடத்தவும் பரிவர்த்தனை செய்யவும் வாய்ப்பாக அமைந்தன. மேலைநாடுகளில தயாரிக்கப்பட்ட ஹெரோயின், கொகேய்ன், மர்ஜுவானா, ஹஸீஸ் போன்ற நவீன போதைப்பொருட்களும் மற்றும் குளிசை வடிவத்தில் தயாரிக்கப்பட்ட எல்.எஸ்.டி. தூக்க மாத்திரை போன்ற வஸ்துக்களும் அதிமிகு போதையைத் தரும் மதுபானங்களும், சர்வதேச ரீதியில் பல நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன.

இதற்கான சர்வதேச கடத்தல் பாதைகளும் உள்ளன. சில நாடுகளின் பொருளாதாரம் [^] போதைப்பொருள் வியாபாரத்திலேயே தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஊசி மூலம் போதைப் பொருளை உடலிற் செலுத்திக் கொள்ளும் பழக்கம், தீவிர பாவனையாளரிடையே உள்ளது. இதனால் இப்படிப்பட்டவர்களிடத்தில் எய்ட்ஸ் வைரசும் தொற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.

இவைகள் பற்றி விளக்கம் வழங்கத்தக்க வகையில் 1988இல் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருளுக்கெதிரான உலக மகாநாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, உல்லாசப் பயணிகளின் வருகை போன்ற காரணிகள் நவீன போதைப் பொருட்கள் நாட்டினுள் பிரவேசிக்க வழிவகுத்தன. இலங்கையில் போதை பொருட்கள் 1980களில் பரவ ஆரம்பித்தது. இலங்கையில் ஹெரோயின் விற்பனையாளர் முதன் முதலில் 1981 மே 26 இல் 70கிராம் ஹெரோயினுடன் பேருவளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் 2015ஆம் ஆண்டை போதைப்பொருள்கள் அற்ற ஆண்டாக மாற்றியமைக்க வேண்டும் என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கை சுங்கத் திணைக்களம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபை, குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு உட்பட பல அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேற்படி வேலைத் திட்டம் தொடர்பாக அண்மையில் விளக்கமளிக்கப்பட்டது.

போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு போதைக்கு முற்றுப்புள்ளி திட்டம் மட்டுமே போதுமானதல்ல, சகலரும் பூரண ஒத்துழைப்பின் மூலமே போதைப் பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் .போதைக்கு அடிமையானோரை அதிலிருந்து மீட்டெடுப்பது, புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சந்ததியினரைப் பாதுகாப்பது என்ற இலக்கிலேயே அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதே நேரம் இன்று இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இந்நடவடிக்கைக்கு அவை போதியதாக இல்லை. உதாரணமாக ஒரு ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் 10 ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் அதற்கான தண்டனை ஒரே விதமாகவே தற்போதுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஹெரோயின் ஒரு கிலோ மூன்று மில்லியன் ரூபா பெறுமதியானது. ஹெரோயினைப் பொறுத்தவரை 2 கிராமை சுமார் 500 பேர் பாவித்து போதை ஏற்றிக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் வருடாந்தம் இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

2009 மே மாதத்தில் மாத்திரம் இலங்கையில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 555 சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது 1, 202 கிலோ கஞ்சாவை குற்றத் தடுப்புப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1984இல் தாபிக்கப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபை போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அக்கறையுடன் செயல்படுகிறது. நாட்டைக் குட்டிச் சுவராக்கி, குடும்ப வாழ்வைச் சீரழித்து நாட்டுக்குழைக்கக்கூடிய நல்லவர்களை நடைப்பிணமாக்கியுள்ள போதைப்பொருட்பாவனையை வேரோடு களைய வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பும் விழிப்புணர்வுமே இப்பாவனையை இல்லாதொழிக்கும்.

போதைப் பொருளுக்குப் பதிலாக போதைக் குறைந்த சில பொருட்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளும் சிலநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கை பலத்த விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளன. போதைப்பொருள் பயன்பாட்டை போதைப்பொருளை வைத்தே தடுக்க முயற்சிப்பது இயலாதது என்று திருப்பீடம் சர்வதேச சமுதாயத்தை எச்சரித்துள்ளது..

வியன்னாவில் கடந்த (2009) மார்ச் மாதம் நிறைவு பெற்ற போதைப் பொருள் தடுப்புக்கான ஐ.நா.அவையில் உரையாற்றிய மேய்ப்புப்பணி உதவிகளுக்கான திருப்பீட அவையின் செயலர் ஆயர் ஹோசே லூயிஸ் ரெத்ராதோ மர்க்கித்தே, இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் உலகளாவிய கத்தோலிக்க நலப்பணி நிறுவனங்களின் அனுபவங்களின் அடிப்படையில் பேசும் போது இதனைத் தெரிவித்தார் . வீரியம் குறைந்த போதைப்பொருள்களை விநியோகிப்பதை அடிப்படையாகக் கொண்டு மிகவும் வீரியமான போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்குப் பல நாடுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆயர் மர்க்கித்தே தெரிவித்தார் .

போதைப் பொருள் பாவனையானது பொதுவாக சிறுவர் பராயத்தில் ஏற்பட்டுவிடுவதாக சில அறிக்கைகள் கூறுகின்றன. பொதுவாக பாடசாலைப் பருவத்தில் தீய நண்பர்களின் சகவாசம் காரணமாக இது ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் புகைப்பிடித்தலுடன் ஆரம்பமாகும் இப்பழக்கம் படிப்படியாக போதைப் பொருட் பாவனை வரை வளர்வதாக கூறப்படுகின்றது.

பெற்றோர்களுக்கு பொதுவாக தங்கள் பிள்ளைகள் மது அருந்துதல்இ புகை பிடித்தல் அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிடப்போகிறார்களோ என்ற ஐயம் இக்காலத்தில் தோன்றுவதற்கு இதுவே மூலகாரணமாகின்றது. இப்பழக்கத்துக்கு மேலைத்தியம், கீழைத்தேயம் என்று வித்தியாசமிருப்பதில்லை.


2005ல் அமெரிக்காவில் போதைப் பொருட்கள் உபயோகிப்பதைப் பற்றிக் கண்காணிக்கும் கல்விக்கழகம் (National institute of drug abuse monitoring future), மாணவர்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் மூலம் 1990 இல் மிகவும் அதிகமான மாணவர்கள் [^] போதைப்பழக்கத்தில் இருந்ததாகவும் அரசாங்கமும் பாடசாலைகளும், சமூகநல அமைப்புகளும் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கையினால் புகைபிடிக்கும் பழக்கம், மற்றும் மது அருந்தும் பழக்கமும் கணிசமான அளவில் குறைந்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவொரு நேர்மறை விளைவைக் காட்டிநின்றாலும்கூட, போதைப்பொருட் பாவனை இன்று புதிய வடிவத்தில் மாணவர்கள் மத்தியில் பரவிவருவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது, சில மருந்துவகைகளை மாணவர்கள் போதைக்காகப் பயன்படுத்தி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களால் பரிந்திரை செய்யப்படும் ஆக்சிகோடின் (OxyContin), விகோடின் (Vicodin) போன்ற மருந்துகளின் உபயோகம் கணிசமான அளவில் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. 2005 வருட முடிவில் விகோடின் என்ற மருந்தை உபயோகிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 12.5% சதவிகிதம் அதிகரித்திருந்ததாகவும் சில வகை தூக்கமருந்துகளின் உபயோகம் 25 % மாணவர்களிடையே அதிகரித்திருந்ததாகவும் ஆஸ்த்மாவிற்காகப் பரிந்துரைக்கப்படும் அட்வேர் போன்ற மருந்து பாவனை (இவை மூச்சிழுக்கப்படும்) அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்து.

போதைப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதைவிட மருந்துவகைகளைப் பெற்றுக் கொள்வது எளிதானதே. தங்கள் பிள்ளைகள் மருந்துவகைகள் அதிகமாகப் பயன்படுத்துகின்றார்களா என்பதையும் பெற்றோர்கள் அவதானிக்க வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களுக்குப் பதிலாக மருந்துப்பாவனை மேற்கத்திய நாடுகளில் அதிகரித்துக் காணப்பட்டபோதிலும்கூட, கீழைத்தேய நாடுகளிலும் இப்பாவனை உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில அறிக்கைகளின்படி தமது பிள்ளைகளிடத்தில் தன்னம்பிக்கை குறைதல், படிப்பு மற்றும் விளையாட்டுக்களில் ஆர்வம் குறைதல், சோம்பல் மற்றும் சற்றே ஆர்வம் குறைந்த தோற்றம், பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் அதிக வாக்குவாதங்கள் செய்வது போன்றவை தன்மைகள் காணப்படின் கூடிய விழிப்புணர்வுடன் பெற்றோர்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட நிலையில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளேயாயினும் அளவுக்கு மீறி எடுத்துக்கொள்வது ஆபத்தில் முடியும் என்பதை பிள்ளைகளுக்கு விளக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் மருந்துப் பொருட்களை அதிகமாகப் பயன் படுத்துவது தெரிந்தால் உடனே மருத்துவமனை [^], போதைப்பொருட்கள் அடிமைத்தனத்தைப் போக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிப்பதற்கு மறக்காதீர்கள்.

பொன் மாலை பொழுது
மௌனமான கடற்கரை
பக்கத்தில் நீ ......
பேசிகொண்ட விழிகள்
ஊமையான உதடுகள்
நெருங்க நினைத்த என்னை
உதறிவிட்ட நீ ....

முழித்து கொண்டேன் உறக்கத்தில் இருந்து..
அய்யோ இன்றாவது சொல்வேனா என் காதலை. 

காதலியின் கல்யாணம்


வாழ்த்த
வார்த்தையின்றி
கலங்கி
நின்றபோது
ஏன் என்று
நீ கேட்க
துசு
விழுந்தது என்று
பொய் வார்த்தை
சொன்னேன்
கண்களில்
ஊதி விட்டாய்
என் காதலையும்
சேர்த்து............

நான் கடவுளிடம் ஒரு வரம் கேட்கப் போகிறேன்!

உயிருடன் ஒப்பிட முடியவில்லை 

உயிருடன் ஒப்பிட முடியவில்லை உன்னை!
ஏன் என்றால்?
உயிரும் ஒரு நாள் பிரிந்துவிடும் என்பதால்..!

நான் கடவுளிடம்
ஒரு வரம்
கேட்கப் போகிறேன்!

என்ன தெரியுமா?

நீ என்னை நினைக்கும்
போதெல்லாம்
ஒரு முறை
கண் சிமிட்ட
வேண்டும் என்று…!

கருப்பாகவே விடிகிறது
நீ இல்லாத இரவுகள்........

கனவில் பேசிய வார்த்தைகள் கூட
காலையில் மறந்து போகிறது..

மவுனமாக இருக்கும் நேரங்களில்
எதிரொளித்துக்கொண்டே இருக்கிறது
நீ பேசிய வார்த்தைகள் ....

எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உன்னையே நாடும் என் மனம்!

உன்னைப்பற்றி எழுதும்போதெல்லாம்
இளமையை கொட்டுகிறது
என் பேனா.......

வீதியில் போகும் பலூன்காரனை
வேடிக்கை பார்க்கும் குழந்தையைப்போல்
வேடிக்கை பார்க்கிறேன்
என்னைக்கடந்து போகும்
காதல் ஜோடிகளை ........
யாரோ உன் பெயர் சொல்லி
அழைக்கையில்
திரும்பிப் பார்க்கிறேன்
நீ அங்கு இல்லையென்று
தெரிந்தும் கூட!

கடை வாசலில் தொங்கும்
உடையை உனக்கு போட்டு
அழகு பார்க்கிறேன்
கற்பனையில்....

வானம் பார்த்து படுத்திருக்கும்
மொட்டைமாடி இரவுகளில்
நிலவு நினைவுபடுத்துகிறது
ஒப்பனையற்ற உன் முகத்தை ....
நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...

உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும்!!!
உன்னால் அனுபவிக்கும்
தனிமையின் வலியை
உனக்கும் தர மனமில்லை
அதனால் அனுப்புகிறேன்
உனக்கு துணையாய்
என் கவிதைகளை.........
நேரில் மட்டும்
வெட்கப்படும் தேவதை நீ!
மறைமுகமாய்
இம்சை செய்யும் ராட்ஷசி நீ

வெள்ளி, 28 மே, 2010

உலக புகையிலை மறுப்பு தினம்



 உலகளவில் இறப்பிற்கு இரண்டாம் மிகப்பெரிய காரணமாக புகையிலை பயன்படுத்துவது அமைந்துள்ளது. புகைபிடிப்போரில் பாதிக்கும் மேலானவர்கள் புகையிலை சம்பந்தப்பட்ட நோய்களினாலேயே இறக்கின்றனர். தவிர இளஞ்சிறார்கள் தங்கள் வீடுகளிலேயே புகைப்பவர்களினால் மாசுபட்ட காற்றை சுவாசித்து பாதிக்கப் படுகின்றனர்.உலக தொழிலாளர் நிறுவனமும் (ILO) 200,00க்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றவர்கள் விடும் புகையினால் இறப்பதாக கூறுகிறது.

இதனால் இந்த வருட புகையிலை மறுப்பு தினத்தில் 100% புகையில்லா சூழல் அமைப்பதே பெண்டிர், சிறார் மற்றும் வேலையிடத்தில் பிறரை இந்தத் தீமையிலிருந்து காப்பதாக அமையும் என்று கவனம் செலுத்துகிறார்கள். பொது இடங்களில் நல்ல காற்றோட்டம் ஏற்படுத்துவதோ இல்லை வடிகட்டுவதோ மட்டும் விரும்பத்தக்க அளவிற்கு புகையை கொண்டுவரமுடியாது என்கின்றனர் உடல்நல நிபுணர்கள்.

1987இல் உலக சுகாதார மன்றம் ஏப்ரல்7, 1988ஐ உலக புகைக்காத நாளாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றீயது. பின்னர் 88இல் மீண்டும் மே31 தேதியை புகையிலை மறுப்பு தினமாக ஒவ்வொரு வருடமும் பாவிக்க தீர்மானித்தது. இன்றைய தினம் பொதுமக்களின் கவனத்திற்கு புகையிலை உபயோகிப்பதன் ஆபத்துக்களையும் அதைத்தவிர்ப்பதால் மீளும் நோய்களைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறோம். மாசில்லா காற்றை சுவாசிப்பது மனிதருக்கான பிறப்புரிமை, அது புகைபிடிக்கும் சிறு பான்மையினரால் பறிக்கப்படுவது வருந்தத்தக்கது.

புகை பிடிப்பது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கெடுதல். இன்றே விலக்குவீர்,வாழ்வீர் பல்லாண்டு !!

2012-ல் உலகம் அழியுமா?

                    2012-ல் உலகம் அழியுமா?
டுத்த 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்கிறார் இந்திய விஞ்ஞானி அய்யம்பெருமாள்.
2012-ல் உலகம் அழிவது சர்வ நிச்சயம் என்று அடித்துக் கூறி வருகிறார்கள் சில மேற்கத்திய விஞ்ஞானிகளும் ஜோதிடர்களும்.
இதற்கு ஆதாரமாக ஏழு காரணங்களை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.

1. மாயன் காலண்டர்:
மாயன் நாகரிகத்தின் கருதுகோள்படி, உலகம் 2012-ல் அழிந்தாக வேண்டும். மாயன் காலண்டரில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாம். இன்று நாம் பின்பற்றும் தேதி முறை உள்ளிட்ட பல விஷயங்களை கிட்டத்தட்ட துல்லியமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர்கள் இவர்கள்தானாம். சூரியன் காலாவதியாகும் தேதியையும இவர்கள் கணித்து வைத்துள்ளார்களாம். அதுதான் இந்த 2012 என்று கூறுகிறார்கள்.

2. சூரியப் புயல்கள்
சூரியனுக்குள் ஏற்படவிருக்கும் பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர்.

3. அணு சிதைவு
ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் உலகின் பெரிய மூலக்கூறு உந்து எந்திரத்தைக் கண்டறிந்துள்ளனர். 27 கிலோ மீட்டர் ஆழமுள்ள சுரங்கத்தில் வைத்து அணுக்களை ஒன்றிணைத்து வெடிக்க வைப்பது திட்டம். எதற்காக இது? உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள இந்த சோதனையாம். 2012-ல் இந்த சோதனை நடக்கிறதாம். அப்படி நடந்தால் இந்த பூமியே நொறுங்கிவிடுமாம்.

இன்றைய பிக்பேர்ன் சோதனையினால் உலகம் அழியுமா?

 

 
4. பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது…
விஞ்ஞானிகள் கூற்று ஒரு பக்கமிருந்தாலும், திரு விவிலிய நூலில் உலகம் (2012-ல் என்று குறிப்பிடப்படவில்லை) அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளதாம்.   கடவுளுக்கும் சாத்தானுக்கும் கடைசி யுத்தம் (Armageddon) நடக்கும் போது இந்த அழிவு நடக்கும் என்கிறது பைபிள்.  யுத்த முடிவில் கடவுள் தன் இறுதித் தீர்ப்பை  பெருவெள்ளம், ஆழிப் பேரலை, பூகம்பம், கடல்கொள்ளுதல் என எந்த இயற்கை நிகழ்வு மூலமாகவும் வெளிப்படுத்தலாம் என்கிறது விவிலியம். அந்த இறுதித் தீர்ப்பு  2012-ல் வரக்கூடும் என்பது சிலரது கருத்து.
இதே கருத்தை சீனத்து நூல் ஒன்றும், சில இந்து புராண நூல்களும் கூட சொல்கின்றனவாம்.
  
5. சூப்பர் வல்கனோ
இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றில் வாயில் இருப்பதாகவும், அது வெடித்துச் சிதறினால் உலகம் தூள்தூளாகிவிடும் என்றும் அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 650000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த எரிமலை வெடிக்குமாம். அப்படிப் பார்த்தால் இந்த 2012-ல் அந்த எரிமலை வெடிக்கப் போகும் வருடமாம்!

6. கணிதவியல் அடிப்படையில்…
அமெரிக்காவின் பெர்க்கர்லி பல்கலைக் கழக அறிஞர்கள் சிம்பிளாக ஒரு கணக்கு சொல்கிறார்கள். இந்த பூமியின் ஆயுள் எப்போதோ முடிந்துவிட்டதாம். இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகவும், 2012-ல் அழிவின் உச்சகட்டம் தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.

7. புவியின் காந்தப் புலம்
வடக்கு, தெற்கு என பூமியில் காந்தப் புலம் இருப்பது தெரிந்திருக்கும். இந்த காந்தப் புலம்தான் உலகை நிலைப்படுத்தி இயங்க வைக்கிறது. ஆனால் ஒவ்வொரு 750000 வருடங்களுக்கும் ஒருமுறை பூமியின் காந்தப் புலம் தலைகீழாக மாறுமாம். அப்படி மாறும்போது அடுத்த 100 ஆண்டுகளுக்கு காந்தப் புலம் என்பதே இல்லாமல் போகுமாம். அப்படி இல்லாமல் போகும் தருணத்தில் புற ஊதாக் கதிர்கள் வெளிப்பட்டு மனிதன், விலங்கினம், தாவரங்கள் என அனைத்தையும் நொடியில் பொசுக்கிவிடுமாம்.
-இவையெல்லாம் 2012 அழிவுக்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.

 விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?
இதோ ஒரு பாஸிடிவ் பதில்:
சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் டாக்டர் பி.எம்.அய்யம்பெருமாள், மேலே கூறப்பட்ட 7 காரணங்களையுமே உடான்ஸ் என்கிறார்.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “வருகிற 2012-ம் வருடத்தில் உலகம் அழியும் என்று, சமீபகாலமாக உலகம் எங்கும் தகவல் பரவி வருகிறது. இது வதந்தியா? அல்லது உண்மையா? என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள 4 டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது.
விஞ்ஞானிகளின் அதிநுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவதுபோல் 2012-ல் கண்டிப்பாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது.
உலக மக்களின் தேவைக்காக சூரிய சக்தி மூலமாக மின்சாரம் தயாரிக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. கடல்நீரை குடிநீராக மாற்றும் முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே மின்சாரத்திற்காகவோ, குடிநீருக்காகவோ எதிர்காலத்தில் பயப்படவேண்டிய அவசியம் இருக்காது.
ஒரு மனித உடலின் செல்லில் இருந்து அல்லது மிருகத்தின் ஒரு செல் அணுவில் இருந்து குளோனிங் முறை செய்யப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வுகள் சோதனையாக மட்டுமே உள்ளது. இதை பெரும்பாலானோர் எதிர்த்து வருகின்றனர். ஆகவே இது ஆய்வுடன் நின்று விட்டது.
பூமி வெப்பமாவதை தடுக்க அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக மாசு கட்டுப்பாடு செய்து அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம்…” என்றார்.
நாமும்.. சாதகமானதையே நம்புவோமே!

திங்கள், 17 மே, 2010

பேஸ்புக்கில் பரவும் புதிய ஸ்பாம் வைரஸ்

பேஸ்புக்கில் பரவும் புதிய ஸ்பாம் வைரஸ்
பேஸ்புக் பயனாளர்கள் தங்களது முகப்பு பக்கத்தை திறந்தவுடன் அவர்களது நண்பர்கள் ஒரு வீடியோ லிங்கை இணைத்திருப்பதாகவும் இதுதான் உலகத்திலேயே மிகவும் கவர்ச்சியான வீடியோ என்றும் அவர்களது சுவரில் (wall) எழுதப்பட்டிருக்கும். அதாவது “this is without doubt the sexiest video ever! ” என்று இருக்கும்.
இது உண்மையில் ஒரு வீடியோ கிடையாது.பேஸ்புக்கில் தரவேற்ற பட்டிருக்கும் வீடியோ போல் காட்சியளிக்கும் ஒரு இமேஜ் ஆகும். அந்த இமேஜை கிளிக் செய்தால் இன்னொரு தள முகவரிக்கு எடுத்துசெல்லப் படுவீர்கள் . பின்னர் அந்த தளத்தில் உள்ள பிளே பட்டனை அழுத்தினால் , அந்த லிங்க் உங்களுக்கு தெரியாமலேயே உங்களுடைய பேஸ்புக் கணக்கில் ஒரு அப்பிளிகேஷனை நிறுவும்.


பின்னர் உங்கள் நண்பர்களின் பெயரில் உங்களுக்கும் உங்களின் பெயரில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த வீடியோ லிங்கை இணைக்கும்.இது தானியங்கியாகவே சுவர்ப்பதிவுகளை ஏற்படுத்தும். இந்த வீடியோவை தவறுதலாகவோ அல்லது ஆர்வக்கோளாறிலோ கிளிக் செய்திருந்தால் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இடது பக்கத்தில் "Application" என்ற பிரிவு இருக்கும் . அங்கே சென்றால் நீங்கள் பயன்படுத்தும் அப்பிளிகேஷன்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் "Winamp" என்ற பெயரில் உள்ள அப்பிளிகேஷனை நீக்கி விடுங்கள்.

நான் எனது நண்பர்களின் பக்கங்களை பார்த்தபோது எனது பெயரில் பலரின் பக்கங்களில் அப்டேட் செய்யப்பட்டிருந்த்தது. எனவே இத வீடியோ இணைப்பு உங்கள் முகப்பு பக்கத்தில் தோன்றினால் கிளிக் செய்யாதீர்கள் உடனடியாகவே நீக்கி விடுங்கள்!!!

சனி, 1 மே, 2010

ஐஸ்லாந்தில் எரிமலை குமுறல் - ஒரு சிந்தனைக்கு உறவுகளே!!!

ஐஸ்லாந்தில் எரிமலை குமுறல் - ஒரு சிந்தனைக்கு உறவுகளே!!! 
எப்போது உலகில் அன்பு குறைகிறதோ அப்போது இந்தப்பூமியுடன் நாங்களும் அழிந்து விடுவோம். நாம் காணும் கடவுள் அன்பு. அதற்கு உருவம் இல்லை.உணர்வு இருக்கிறது.



எனக்கு பைபிளில் கூறப்பட்ட விடயங்களும் பகவத்கீதையில் கிருஸ்ண உபதேசங்களுமே ஞாபகத்துக்கு வருகின்றன...இறுதிக்காலத்தில் மொத்தபூமியே அழிந்துவிடும்.  ஒரு கணம் சிந்தித்தால்...!!!!