பரந்துபட்ட பார்வைகள் | தூரநோக்கு | பதிவுகள் | பகிர்வுகள் | கவிதைகள் | பயணங்கள் | கட்டுரைகள் | தொழிநுட்பம் | மாற்றுஊடகப்பார்வைகள் | அனுபவங்கள் | ஆளுமைகள் | கலை இலக்கியங்கள் | அரசியல் ஆய்வுகள் |
*** www.amalathaselroy.blogspot.com ***
நேரமும் காலமும் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் - அமலதாஸ் எல்றோய்
Hotline Contact 24 X 7
elroyamalathas@gmail.com
https://www.facebook.com/amalathaselroy
அதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:- Popular Posts
இரும்புச்சீமாட்டியின் இறுக்கமானபிடியும் போக்லண்ட் யுத்தமும்.(falklands War) பூமிப்பந்தின் தென் பகுதியின் தென் அட்லாண்டிக் ஆழியில் மிதக்கும் ...
இன்றைய சிந்தனை
சாதிப்பவன் போதிக்க மாட்டான்.போதிப்பவன் சாதிக்கமாட்டான்
------------------------------------
சூழ்நிலையை காரணம் காட்டி பின்வாங்காதே - அது உன் சோம்பேறித்தனம்.
சூழ்நிலையை உனக்கேற்றதாக மாற்று - அதுவே நம்ம சக்தி
-------------------------------------
'முதலில் உன்னை நீ அறிந்தால்தான், உலகம் அறியும்...
உயிருடன் ஒப்பிட முடியவில்லை உன்னை!
ஏன் என்றால்?
உயிரும் ஒரு நாள் பிரிந்துவிடும் என்பதால்..!
நான் கடவுளிடம்
ஒரு வரம்
கேட்கப் போகிறேன்!
என்ன தெரியுமா?
நீ என்னை நினைக்கும்
போதெல்லாம்
ஒரு முறை
கண் சிமிட்ட
வேண்டும் என்று…!
கருப்பாகவே விடிகிறது
நீ இல்லாத இரவுகள்........
கனவில் பேசிய வார்த்தைகள் கூட
காலையில் மறந்து போகிறது..
மவுனமாக இருக்கும் நேரங்களில்
எதிரொளித்துக்கொண்டே இருக்கிறது
நீ பேசிய வார்த்தைகள் ....
எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உன்னையே நாடும் என் மனம்!
உன்னைப்பற்றி எழுதும்போதெல்லாம்
இளமையை கொட்டுகிறது
என் பேனா.......
வீதியில் போகும் பலூன்காரனை
வேடிக்கை பார்க்கும் குழந்தையைப்போல்
வேடிக்கை பார்க்கிறேன்
என்னைக்கடந்து போகும்
காதல் ஜோடிகளை ........
யாரோ உன் பெயர் சொல்லி
அழைக்கையில்
திரும்பிப் பார்க்கிறேன்
நீ அங்கு இல்லையென்று
தெரிந்தும் கூட!
கடை வாசலில் தொங்கும்
உடையை உனக்கு போட்டு
அழகு பார்க்கிறேன்
கற்பனையில்....
வானம் பார்த்து படுத்திருக்கும்
மொட்டைமாடி இரவுகளில்
நிலவு நினைவுபடுத்துகிறது
ஒப்பனையற்ற உன் முகத்தை ....
நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...
உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும்!!!
உன்னால் அனுபவிக்கும்
தனிமையின் வலியை
உனக்கும் தர மனமில்லை
அதனால் அனுப்புகிறேன்
உனக்கு துணையாய்
என் கவிதைகளை.........
நேரில் மட்டும்
வெட்கப்படும் தேவதை நீ!
மறைமுகமாய்
இம்சை செய்யும் ராட்ஷசி நீ
0 comments:
கருத்துரையிடுக