புதன், 5 ஏப்ரல், 2017

உயிரியல் வளத்தை பாதுகாத்து சூழல் சமநிலையைப் பேணுவோம்.

வெறுமனே இனம்சார், மதசார், மொழிசார் அரசியலுக்குள் மூழ்கிக்கிடந்து தங்களது உரிமைகளை பாதுகாக்க தெரிந்த சமூகத்துக்கு விலங்குகளின் உரிமைகளையும் அவற்றின் வாழ்விட எல்லைகளையும் பாதுகாக்க தெரியவில்லை..!
இலங்கையின் அனைத்து சரணாலயங்கள், காடுகளின் எல்லைகள், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வேட்டையாடுபவர்கள் போன்றோரின் மீது பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு ஒப்பான சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யத்தவறினால் ஆசியாவின் அறிய உயிரினச்செழுமையும் இயற்கை வளமும் கொண்ட இலங்கையின் தனித்துவம் இழக்கப்படும்.
முடிந்தால் மாகாண சபைகள் இந்தியாவின் அநேக மாநிலங்களில் விதிக்கப்பட்ட#பசுவதை_தடுப்புச்சட்டம்.
காடுகள் மற்றும் இயற்கை சூழல்கள் பாதுகாப்புச்சட்டம்
#பிராணிகள்_வதைத்_தடுப்புச்சட்டம் பல்லுயிர் பெருக்க ஒப்பந்தம். காடுகள் மற்றும் இயற்கை சூழல்கள் பாதுகாப்புச்சட்டம், இது போன்ற சட்டங்களை இயற்றினால் காட்டிலேயாவது விலங்குகள் நிம்மதியாவது உறக்கம் கொள்ளும். பௌத்த விழுமிய நாடாக காட்டிக்கொள்பவர்கள் முதலில் இதை செய்யட்டும்.
மனித குடியேற்றம் என்ற பெயரில் காடுகளை அழித்து விலங்குகளின் இடப்பெயர்வுக்கும் இனஅழிப்புக்கும் நீங்கள் வழிசெய்யாதீர்கள் என்பதே என் தாழ்மையான கருத்து.
இந்த பதிவை பகிர்வதற்கு காரணம்..!
(
மான், மரை இறைச்சி இருக்கண்ணே வேணுமா? வன்னி தேக்கு முதிரை மரக்குத்திகள் இருக்கு வேணுமா? இன்னும் வனவிலங்குகள் பறவைகள் இறைச்சிகளும் விற்பனைக்கு இருக்கு வேணுமா? கட்டக்காலி மாட்டு இறைச்சி வேணுமா? சிறுத்தைத்தோல்,யானைத்தந்தம் வேணுமா?? கடத்தல் ஆட்டிறைச்சி வேணுமா? ஆமை இறைச்சி வேணுமா? வேணுமா? வேணுமா????
சரணாலயங்களின் எல்லை ஒட்டி நடந்து கொண்டிருந்த இந்த சட்ட விரோத செய்திகள் நகர் புறம் வரை எட்டியதால் தான்...)
இந்த பூமியும் வாழ்க்கையும் வெறும் மனிதர்களுக்குதான் என நினைத்து இயற்கையை சிதைத்து மிருங்களை கொன்று புசித்தால் மாத்திரம் உங்கள் வாழ்க்கையும் மத நம்பிக்கைகளும் நிறைவு பெறுவதில்லை. படைப்பில் கடைசியாக படைக்கப்பட்ட மனிதனாக மத நூலில் குறிப்பிட்டிருந்தால் படைப்பை நீ பாதுகாத்து கொள் என்ற வார்த்தைகளையும் கடவுள் உரைத்துள்ளான் என்பதையும் நான் அறிந்துள்ளேன். அழிவின் இறுதியில் உள்ளவற்றை பாதுகாக்க அவைக்கென்ற ஒரு அரசியல்கட்சிகள் வரப்போவதில்லை. பாகுபாடு அற்று அனைவரும் குரல் கொடுப்போம்.

ஆசியாவின் அரிய உயிரியல் பொக்கிஷம் இலங்கை .
இலங்கையின் உயிரியல் வளங்களை பாதுகாப்போம் .
உயிரியல் வளத்தை பாதுகாத்து சூழல் சமநிலையைப் பேணுவோம் .
உயிரியல் வளங்களுக்கு நன்மை செய்யாவிடினும் தீமை செய்ய வேண்டாம் .
சகல உயிரிகளும் மண்ணில் வாழும் உரிமை பெற்றவை .

உலகிலேயே அதிகூடிய இனச்செளுமை கொண்ட நாடு இலங்கையாகும். இது தென்னிந்தியாவில் காணப்படும் தாவர,விலங்கினங்களுடன் தொடர்புபட்ட பற்பல வன சூழல்பிராந்தியங்களுக்கு தாயகமாகும். ஈரத்தன்மை பொருந்தியபருவப்பெயற்சிக்காற்றுகளால் வருடப்படும் இலங்கையின் தென் - மேற்கு பகுதியில் இலங்கை தாழ்நிலப் மழைக்காடுகள்அமைந்துள்ளன. நாட்டின் மத்திய மலைப்பகுதியை நோக்கிச்செல்லும் போது அவை இலங்கை மலைசார்ந்த மழைக்காடுகளாகமாற்றம் பெருகின்றன. இவ்விரு அயணமண்டல ஈரலிப்பு காட்டுப்பிராந்தியங்களும் இந்தியாவின் மேற்கு மலைத்தொடருடன்நெருங்கிய தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன.

இலங்கையின் வனப்பகுதிகள் விவசாயம், மரதொழில், கால்நடை போசனம் போன்றவற்றுகாக பெறுமளவில் அழிக்கப்பட்டுள்ளது. பல காப்பரன்கள் எஞ்சியுள்ள வனப்பிராந்தியங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் முன்றுஉயிரிணமண்டல ஒதுக்கங்கள் உள்ளன.

இலங்கையில் ஆயிரக்கணக்கான விலங்கினங்கள் வாழ்வதுடன், அவற்றில் பல இலங்கை உட்பிரதேசத்துக்குரியவை.
இலங்கையானது பறவை உட்பிரதேச உரிமையின் மையமாக காணப்படுகின்றது. 

இலங்கை தீவின் பரப்பளவுடன் ஒப்பிடுகையில் இங்கு பறவையினங்கள் மிக அதியளவில் காணப்படுகின்றன. 443 பறவையினங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இங்கேயே தங்கி வாழும் பறவைகள் தவிர குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான இடம்பெயர் பறவையினங்கள், தங்கள் வடகோளத்து வாழ்விடங்களின் குளிர் காலத்தைத் தவிர்ப்பதற்காக இலங்கைக்கு வருபவை.

பறவையினங்களில் 233 இலங்கையிலேயே வசிப்பவை, இவற்றுள் 26 உட்பிரதேசத்துக்குரியவை. ஏனையவை இந்திய தலைநிலத்தில் வாழ்பவை, எனினும் அவற்றில் 80க்கு யல்புகளைப் பொறுத்தவரை தொடர்புடைய இந்திய இனங்களிலிருந்து மிகுந்த வேறுபாடுள்ளவையாக உள்ளன.

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்
மண் அரிப்பு  - தற்பொழுது காடுகளின் அழிவின் காரணமாக மண்அரிப்பு தவிர்க்க இயலாத பிரச்சினையாக மாறிவருகிறது. மண் அரிப்பு ஏற்படுவதால் விவசாயம் பெரிதும் பாதிப்பு அடையும். வருடந்தோறும் சுமார் பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் மண்அரிமானத்தின் காரணமாக எதுவும் விளையாத வறட்டு நிலமாக மாறிவருகிறது.
பாலைவனங்கள் உருவாதல் - காடுகளின் அழிப்பினால் நிலத்தில் எந்;த உயிரினமும், நுண்ணுயிர்களும் வாழ முடிவதில்லை. மண்ணின் உயிரியல் வளம் அழிவதால் அந்த நிலம் எதற்கும் பயன்படாமலும், எதுவும் விளையாமலும் பாலைவனமாக மாறுகிறது.
மழைபொழிவு பாதிப்பு - மரங்களின் அழிவால் காற்று மண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடின் அளவு  அதிகமாகிவிடுகிறது இதனால் மழை குறைந்து வறட்சி ஏற்படுகிறது.
குறைந்து வரும் மரத்தின் அளவு - தொழில்களுக்குத் தேவைப்படும் மரத்தின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வீட்டு உபயோகப் பொருட்களான நாற்காலி, மேசை, கட்டில், பீரோ போன்றவை செய்யும் தொழில்கள் நலிந்து விட்டன.
வறட்சி -  மழை பொழியும் பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதால் ஓடைகள் வறண்டு விடுகின்றன. ஆறுகளில் வறட்சிக் காலங்களில் மிகக்குறைந்த அளவே தண்ணீர் இருக்கிறது. இந்தக் காரணங்களினால் வறட்சிக்கு வழி ஏற்பட்டு விடுகிறது.
வண்டல் - மலைகளில் இருந்து அரித்துக்கொண்டு வரப்படும் மண் நீர்த்தேக்கங்களிலும், ஆற்றுப்படுககைகளிலும் குவிக்கப்படுகிறது. மலையில் இருந்து வரும் மழைநீரைத் தடுப்பதற்கு காடுகள் இல்லாத காரணத்தினால் இந்த அவலநிலை ஏற்படுகிறது. ஆகவே வண்டல் மண் தேவையில்லா இடங்களில் சேமிக்கப்பட்டு வீணாகிறது. அதுமட்டும் இல்லாமல்  மின்சக்தியின் தயாரிப்பும் குறைகிறது.
மண்ணின் தன்மையை அழிக்கிறது - காடுகள் மண்ணின் தன்மை கெடாமல் பாதுகாத்து வருகின்றன. காடுகளும் மரங்களும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள மண்ணின் தன்மையை மண்அரிமானம் ஏற்படாமல் காப்பதன் மூலமாக பாதுகாத்து வருகின்றன. காடுகளை அழிப்பதால் மண்அரிமானம் ஏற்படுகிறது இதனால் மண் அதன் தன்மையை இழந்தும் விடுகிறது.
பல்லுயிரின மாறுபாட்டின் இழப்பு- ஒரு தாவரம் அழிக்கப்பட்டால் அதை நம்பி வாழும், அண்டி வாழும் நாலுவகை உயிரினங்களின் அழிவுக்கு காரணமாக அமைந்து விடும். சீனக் காடுகளில் மூங்கில் குருத்துக்களை மட்டுமே சாப்பிட்டு வாழும் பாண்டா கரடிகள் தற்போது அரிதாகிவிட்டன  இதன் காரணம் என்ன ? மூங்கில் காடுகள் அழிக்கப்பட்டு விட்டது தான்.
வேலையில்லாத் திண்டாட்டம் - காடுகளின் அழிப்பினால் காடுகளை நம்பிவாழும் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதனால் இவர்களும் வேலைதேடி நகரத்திற்கு வருகின்றனர். இது வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கிறது.
இந்த உயிர்க்கோளமான பூமிக்குத் தேவையான பிராணவாயுவை உற்பத்தி செய்வது உலகின் 13 நடுகளில் உள்ள காடுகள் தான். அவற்றில் இந்தியாவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத்தொடர்ச்சிமலை, மற்றும் இமயமலைக்காடுகள் ஆகியவை உலகின் உயிர்க்காற்றை உற்பத்தி செய்வதல் பெரும்;பங்கு வகிக்கின்றன. இந்தக் காடுகளை காப்பாற்றுவதன் மூலமாகத்தான் நாம் வெப்பத்தைக் குறைத்து, வெப்ப உயர்வினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து உயிர்களையும், பயிர்களையும் காப்பாற்ற முடியும்.

தொடரும்.........!

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

வரலாற்றின் மர்மங்கள் - 1

பொதுவாக மர்மங்கள் என்றாலே வெளிநாட்டு விசயங்கள்தான் நம் நாட்டில் வெளியிடப்படும் நூல்களிலும் பக்கங்களை நிரப்புகின்றன. இவற்றில் சில படு-சில்லறைத்தனமானது
என்றாலும் கூட நம் 'ப்ரெஞ்சு பியர்ட்' கிறுக்கல் ஆசாமிகள் அதனை வைத்து ஜல்லியடிக்க தயங்குவதில்லை. ஆனால் நம் பழம் இலக்கியங்கள் கூறும் சில விசயங்களை நாம்
ஆராய்ந்து பார்த்தால் அவை தரும் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகளையும் நடத்தினால் எத்தனையோ மர்மங்கள் நம் ஊர்ப்புறங்களில் நமக்காக காத்திருப்பது தெரியும். உலக அளவில் புகழ் பெற்ற மர்மங்களுடன் அவற்றைப்போல (ஒருவேளை அவற்றினை விட முக்கியத்துவம் வாய்ந்த) நம்மூர் மர்மங்களும் கீழே.

அட்லாண்டிஸ்:

கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது 'திமேயஸ்' மற்றும் 'கிரேட்டஸ்' எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த 'லிபியாவும் ஆசியா மைனரும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக' அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார். அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் ஆளுகையில் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச்செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத்தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார். அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால்
(கி.மு.384-322) கற்பனையானவை எனக்கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர்.



அட்லாண்டிஸ் தீவு : நம்பப்பட்ட ஒரு கற்பனை ஊகம்

பிளேட்டோ வின் 'திமேயஸ்' பல மறைஞானக் குழுக்களுக்கு முக்கிய நூல். எனவே அக்குழுக்கள் தம் கோட்பாடுகளை அட்லாண்டிஸில் உருவானவை எனக் கூறுவதுண்டு. எட்கார் கைஸி எனும் அமெரிக்க 'தீர்க்கதரிசி' தம் 'ஞானதிருஷ்டியில்' அட்லாண்டிஸ் அமெரிக்க கடற்கரைகளில் அமிழ்ந்துள்ளதாகக் கூறினார். ஜான்.எம்.ஆலன் எனும் ஆய்வாளர்
தென்-அமெரிக்க ஏரியில் மறைந்த ஒரு தீவும் நாகரிகமும் உள்ளதாகவும் அதுவே அட்லாண்டிஸ் எனவும் கூறுகிறார்.


அட்லாண்டிஸ் தென்னமெரிக்காவில்? : ஒரு நூல்

பொதுவாக வரலாற்று ஆய்வாளர்கள் அட்லாண்டிஸை பிளேட்டோ வின் கற்பனையில் உருவான உருவகக்கதை என்றே கருதுகின்றனர். ஏனெனில் பிளேட்டோ இத்தகைய உருவகக் கதைகள் மூலம் தத்துவக் கோட்பாடுகளை விளக்குவது வழக்கம். ஆனால் அட்லாண்டிஸுக்கு வரலாற்றடிப்படையில் வித்திட்ட நிகழ்ச்சியாக ஆய்வாளர்கள் கி.மு.1620களில் திரா எனும் சிறு தீவு -நிச்சயமாக கண்டம் கிடையாது- எரிமலைச் சீற்றத்தால் அழிந்ததைக் குறிப்பிடுகின்றனர்.


திரா தீவில் கிரேக்க நாகரிகம் செழித்திருந்தது. அங்குள்ள ஓர் வீட்டுச்சுவரில் தீட்டப்பட்ட
ஒவியம்

திரா தீவின் படம்: தீவுக்கூட்டத்திலேயே பெரியதீவுதான்
திரா

இந்த எரிமலைச்சீற்றத்தின் விளைவான சாம்பல் துகள்கள் எகிப்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளக்கமும் கூட அனைத்து
ஆராய்ச்சியாளர்களாலும் ஏற்கப்படவில்லை. அட்லாண்டிஸ் உண்மையா? கற்பனையா? உண்மையெனில் அது எங்கு உள்ளது? என்பவை இன்னமும் மர்மமாகவே உள்ளன.


குமரிக்கண்டம்:


குமரி நிலநீட்சி குறித்த முதல் அறிவியல்பூர்வ விளக்க நூல்

பழந்தமிழ் காவியமான சிலப்பதிகாரம் 'குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' எனக் கூறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் குமரிமலை குறித்தும், அதிலிருந்து தோன்றிய பஃறுளியாறு குறித்தும், குமரி ஆறு குறித்தும் செய்திகள் உள்ளன. இச்செய்திகள் எத்தனை உண்மையானவை? பல தமிழ் அறிஞர்கள் 'குமரிக்கண்டம்' என்று ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததாகவும் அங்கு தமிழ் நாகரிகம் ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மஞான சபையினர் 'லெமூரியா' எனகடலில் ஆழ்ந்து போன ஒரு நிலப்பரப்பு குறித்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் மூலம், இந்தியாவில் பரவிய லெமூரியாக் கோட்பாடும் குமரிக்கண்டமும் இணைந்த ஒரு சித்தாந்தமாகிற்று. புலவர் குழந்தை, அப்பாதுரை, இரா.மதிவாணன் போன்றவர்கள் குமரிக்கண்ட வரைபடங்களை உருவாக்கினர். மார்க்சிசத்தையும் அதீத கற்பனைகளையும் போலி அறிவியல் தரவுகளையும் இணைத்து குமரிகண்டத்தை ஒரு அரசியல் சித்தாந்தத்தின் பகுதியாக மாற்றிக் கொண்டிருப்பவர் குமரிமைந்தன் என்கிற 'ஆராய்ச்சியாளர்'. ஜெயமோகனின் கற்பனை நாவலான 'கொற்றவை' இந்த குமரிகண்டத்தின் அடிப்படையில் அமைந்தது. குமரி கண்ட இயக்கத்தினர் இந்த கற்பனை புனைவை ஏறத்தாழ மதரீதியிலான இறுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வரலாற்று ஆவணமாகவே எடுத்துக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. புகழ்பெற்ற நிலவியல் ஆய்வாளரான சு.கி.ஜெயகரன் அண்மையில் வெளியான தமது 'குமரி நிலநீட்சி' எனும் நூலில் இத்தகைய
கற்பனைகள் 'கவித்துவ சுதந்திரத்துடன்' அதீத தமிழ் பற்றினால் உருவாக்கப்பட்டவையென்பதுடன் இவற்றிற்கு அறிவியல் அடிப்படை எதுவும் இல்லையெனக் காட்டுகிறார். எனில் கடல் கொண்ட குமரிக் கோடு என்பது வெறும் கற்பனைதானா? நிலவியல், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி, இலக்கிய ஆதாரங்கள் மற்றும் தொல்மானுடவியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு யதார்த்த நிலைப்பாட்டினைத் தன் முடிவாக தருகிறார் ஜெயகரன். வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் தமிழகம்-இலங்கை கடற்கரைகளை ஒட்டியிருந்து பின்னர் கடலில் மூழ்கிய நிலப்பரப்புகளே குமரி எனும் நிலநீட்சி குறித்த மரபின் வித்தாகும் எனக்கருதும் ஜெயகரன் அவ்வாறு கடல் நீர்மட்ட உயர்வில் உயிர்தப்பியவர்களிடமிருந்து குமரி நிலநீட்சி குறித்த நினைவு இன்றும் நம்மிடம் நிலவுவதாகக் கூறுகிறார். குமரி மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களான முட்டம் போன்ற இடங்களில் அண்மைக்கால நினைவுகளில் கூட கடல் கொண்ட நிலப்பரப்பு குறித்த விவரணைகள் நிலவுகின்றன. நிச்சயமாக எனில் தொல்பழம் மானுடக்குடியேற்ற எச்சங்கள் இன்றும் தென்னக ஆழ்கடலில் - நாம் கண்டடையக் காத்தபடி - துயில் கொண்டிருக்கக் கூடுமா? இனிவரும் நாட்களில் தென்னகக் கடல்களில் ஆழ்கடல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் அது இம்மர்மங்களுக்கு விடை பகரக் கூடும்.

துவாரகை:
அகழ்வாய்வின் வரலாற்றில் ஹோமரின் எலியட் காவியத்தில் கூறப்பட்ட டிராய் நகரினை ஜெர்மானிய அகழ்வாய்வாளர் ஹென்ரிச் ஷிலைமான் கண்டுபிடித்தது மிக முக்கிய
மைல்கல்லாகக் கூறப்படுகிறது.


துவாரகை இப்படி இருந்திருக்குமா? இதிகாச விவரணங்கள் அடிப்படையில் ஒரு கற்பனை

ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ராவ்
ஆனால் அதனையொத்த மற்றொரு கண்டுபிடிப்பு டாக்டர்.எஸ்.ஆர் ராவ் எனும் இந்திய அகழ்வாராய்ச்சியாளர் ஆழ்கடலில் துயில் கொண்ட ஒரு நகரத்தைக் கண்டுபிடித்ததாகும். 3700 ஆண்டுகள் இன்றைக்கு முந்திய (இ.மு) காலத்தினைச் சார்ந்த இந்த ஆழ்கடல் நகரத்தை டாக்டர்.எஸ்.ஆர்.ராவ் கண்டுபிடித்தது பழம் காவியமான மகாபாரதத்தில் கூறப்பட்ட விவரணங்களின் அடிப்படையில் என்பதுதான் அதிசயமான விஷயம். இதனையொட்டி பல கேள்விகள் எழுந்துள்ளன.சில வரலாற்றறிஞர்கள் இதுதான் மகாபாரதம் கூறும் துவாரகை என்பதை மறுக்கின்றனர். ஆனால் ராவ் தாம் கண்டெடுத்த முத்திரைகள் மற்றும் சுவர்கள் ஆகியவை மகாபாரத விவரணத்தை பெருமளவு ஒத்திருப்பதைக் காட்டுகிறார்.

துவாரகையில் மூழ்கி நிற்கும் பழம் சுவர்
இந்திய வரலாற்றுப் பாடநூல்களில் இந்திய இதிகாசங்களுக்கு வரலாற்று அடிப்படையில்லையெனக் கற்றுத்தரப்படுகிறது. இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றாசிரியர்களின் நிலைப்பாட்டினைத் 'துவாரகை' கண்டுபிடிப்பு சங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது. ராவ் தம் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மகாபாரத நிகழ்ச்சிகளை இ.மு. 3500க்கு கொண்டு செல்கிறார்.

ஆழ்கடலில் அகழ்வாராய்ச்சி : துவாரகை
இது துவாபார யுகத்தில் மகாபாரதம் நடந்ததாகக் கூறும் மரபாளர்களைச் சங்கடப்படுத்துகிறது. இந்த ஆழ்கடலுக்குள் இருக்கும் பழமையான நகரம்தான் துவாரகையா?
இல்லையெனில் இந்த நகரம் எவ்வாறு மகாபாரத துவாரகை விவரணத்தை வெகுவாக ஒத்திருக்கிறது? ஆமெனில் துவாரகாதிபதி ஸ்ரீ கிருஷ்ணன் ஒரு வரலாற்று நாயகனா?
(அகழ்வாராய்ச்சி மூலம் பல்லாயிரமாண்டுகள் முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் தனிமனிதர்களுக்கானச் சான்றுகளை கண்டெடுப்பது இயலாத விஷயம்.) இம்மர்மங்களுக்கான விடைகளைத் தன்னுள் கொண்டு ஆர்ப்பரிக்கும் அலைகளுடன், ஆராய்ச்சியாளர்களை அழைக்கிறது இந்தியாவின் வடமேற்கு கடற்கரை.


பூம்புகார்/காவிரிப்பூம்பட்டினம்:


காவிரிப்பூம்பட்டினத்தில் அகழ்வாராய்ச்சியில் காணப்பட்ட அமைப்புகளை ஓவியர் கற்பனையில் முழுமையாக வரைந்துள்ளார்

தமிழ் காவியமான மணிமேகலை காவிரிபூம்பட்டினத்தின் அழிவினைக் குறித்து பேசுகிறது. மகனை இழந்த சோகத்தில் சோழமன்னன் இந்திர விழா நடத்த மறந்தமையால் ஏற்பட்ட கடல் சீற்ற அழிவாக அது கூறப்படுகிறது. பட்டினப்பாலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் இந்நகரம் பெரும் துறைமுக நகரமாக பேசப்படுகிறது. சுங்க அலுவலகம், மரக்கலங்கள் கொணரும் கொண்டு செல்லும் பொருட்களில் புலி முத்திரை பதித்தல் ஆகிய செயல்கள் அந்நகரில் நடைபெற்றமையையும், பல்வேறு தேசத்திலிருந்தும் நல்ல பண்பாடு கொண்ட மக்கள் அங்கு ஒருவரோடொருவர் பழகியதையும், கள் சாலைகள் முதல் கருத்துகளை விவாதிக்கும் மண்டபங்கள் வரை மனிதரின் அத்தனை தேவைகளும் பூர்த்தி செய்யும் அமைப்புகளைக் கொண்ட பெரும்நகராக அது விளங்கியதையும் அறிகிறோம்.

பூம்புகார்: பழமையான செங்கல் அமைப்பு : நன்றி NIOT
1960களிலும் 1980களிலும் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆய்வுகள் இந்த பெரும் துறைமுக நகரினைக் கடல் அழித்தது உண்மையாக இருக்கும் என்பதனைக் காட்டியுள்ளன. தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி மையம் (NIOT) நடத்திய அகழ்வாய்வுகள் சங்க காலம் சார்ந்த பல அமைப்புகளை, (செங்கல் அமைப்புகள், சுற்றுசுவர் போன்றவற்றினை) வெளிக்கொணர்ந்துள்ளன. எஸ்.ஆர்.ராவ் போன்ற அகில இந்திய முன்னணி ஆராய்ச்சியாளர்கள் இங்கு அகழ்வாராய்ச்சியின் மூலம் இப்பழமையான நகரம் இருந்ததையும் அது அழிந்ததையும் கூறியுள்ளனர். 1960களிலும் 1980களிலும் நடத்தப்பட்ட முயற்சிகளுக்கு பிறகு 2006 இல் தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி மையம் (NIOT) ஸோனார் ஸ்கேனை நடத்தியுள்ளது. இந்த தொடக்க கட்ட ஆய்வு இன்றைய கரைக்கு இரண்டு கிமீ தூரத்தில் 14-20 மீட்டர் ஆழத்தில் சில அமைப்புகளை காட்டியுள்ளது. ஒரு இயற்கை பேரிடர் நிகழ்ச்சி மணிமேகலையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது திண்ணம். இன்று அதன் எச்சங்களை நாம் அகழ்வாராய்ச்சியின் மூலம் அறிகிறோம். இனிவரும் காலங்களில் மணிமேகலை, சிலப்பதிகார நிகழ்வுகளின் காலத்தையும் அது தொடர்பான இதர வரலாற்று உண்மைகளையும் பாரத அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் நமக்கு மீட்டுத்தருவர் என நம்பலாம்.


ஆழ்கடல் அகழ்வாராய்ச்ச்஢யில் கண்ட வட்டவடிவ அமைப்புகள்: பூம்புகார் அகழ்வாராய்ச்சி நன்றி: NIOT



சிந்து சமவெளி நாகரிகம்:


1920களில் இந்திய அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சர் ஜான் மார்ஷலால் பிரபலப்படுத்தப்பட்ட இந்நாகரிகம் இன்றைக்கும் தன் மர்மங்களை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ஒவ்வொரு அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பும் நம் அறிதலை ஆழமாக்கியுள்ளது என்ற போதிலும். இ.மு. 5000 வருடங்களையும் விடப் பழமையான இந்நாகரிகக்தை உருவாக்கியவர்கள் யார்? இந்நாகரிகத்தவர்கள் எங்கு சென்றார்கள்? இந்த நாகரிகம் எவ்வாறு அழிந்தது? உண்மையில் அழிந்ததா அல்லது இன்னமும் வாழ்கிறதா? எனும் கேள்விகள் இன்றைக்கும் உயிர் வாழ்கின்றன. இது ஆரியர் வருகைக்கு முந்தைய இப்பூர்விக நாகரிகம், ஆரியப் படையெடுப்பால் அழிந்ததாக, அகழ்வாய்வாளரான மார்ட்டிமோர் வீலர் கூறினார். பின்னாட்களில் டேல்ஸ், ஜிம் ஷாஃபர், ஜோனதன் கென்னோயர் போன்ற புகழ்பெற்ற அகழ்வாய்வாளர்கள் ஆரியப் படையெடுப்புச் சித்தாந்ததை மறுத்துவிட்டனர். மாறாக இயற்கை அழிவுகளை இந்த நாகரிகத்தின் நகரங்கள் அழிவதற்குக் காரணமாகக் கூறுகின்றனர்.

படையெடுப்பு படுகொலை பொய் என நிரூபித்த டேல்ஸ்

செயற்கைக்கோள்கள் பாலைவனத்தில் புதைந்த ஒரு பழம் நதியைக் காட்டியுள்ளன. அறிவியலாளர் யஷ்பால் இது இந்திய வேதங்களில் கூறப்படும் சரஸ்வதியாக இருக்கலாம் எனக்கருதுகிறார். பல சிந்து சமவெளி நாகரிக மையங்கள் இந்நதியருகே உருவாகியுள்ளன. எனவே இந்நதி வறண்டது காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இம்மக்களின் பண்பாடு வேதங்களில் கூறப்பட்ட பண்பாட்டினை ஒத்திருப்பதை அகழ்வாராய்ச்சியாளர் பிஷ்ட் சுட்டிக்காட்டுகிறார்.

தோலவிரா அகழ்வாராய்ச்சியை ஏற்று நடத்திய பிஷ்ட்
தோலவிரா எனும் ஹரப்பா பண்பாட்டு நகரினை அகழ்வாராய்ச்சி செய்த பிஷ்ட் நகர அமைப்புகள் 'ரிக்வேத பண்பாட்டின் virtual reality' ஆக அவை அமைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்த மையத்தின் நீர் சேகரிப்பு அமைப்புகள் சிறப்பானவை என்பதுடன் இங்கே மிகப்பெரிய ஹரப்பா சின்னங்களுடனான 'பெயர் பலகை' ஒன்றும் கிடைத்துள்ளது. சரஸ்வதி நதி குறித்து வரலாற்றாசிரியர்கள் அனைவரும் இதை ஏற்பதில்லை. வானவியலாளர் ராஜேஷ் கோச்சர் வறண்ட நதியினை சரஸ்வதியுடன் ஒப்பிடுவதை மறுக்கிறார்.

இந்நாகரிகத்தின் சித்திர எழுத்துகள் இன்னமும் விடுவிக்கப்படாத புதிராகவே உள்ளன. இதில் இருபது வருடங்களுக்கும் மேலாக ஆழ்ந்து ஆராய்ந்துள்ள ஐராவதம் மகாதேவன் இவை தொல்-திராவிட பொதுமொழிக்கூறுகள் கொண்டவை என்கிறார். எஸ்.ர்.ராவோ இவை தொல்-இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தைச் சார்ந்தவையாக இருக்கலாம் என கருதுகிறார். சிந்து-சமவெளிச் சமுதாயம் வேத-நாகரிகமும் திராவிடத்தன்மை வாய்ந்த மொழியும் கொண்டதாக இருந்திருக்கலாம் எனக் கருதும் மகாதேவன் புகழ் பெற்ற ஒற்றைக்காளை முத்திரையை ரிக்வேதத்தில் கூறப்படும் சோம பானச் சடங்குடன் தொடர்புபடுத்துகிறார். எதுவானாலும் சிந்துசமவெளி நாகரிகத்தின் மர்மங்களை முடிச்சவிழ்க்க மிக அடிப்படையான தேவை இன்னமும் மர்மமாகவே இருக்கும் சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படும் சித்திர எழுத்துக்களின் பொருளை அறிவதுதான். மைக்கேல் விட்ஸல் என்கிற இந்தியவியலாளரும், ஸ்டீவ் ஃபார்மர் என்கிற அமெச்சூர் மொழியியலாளரும் அண்மையில் இவை எழுத்துக்களே இல்லை என கூறினர். இதனை சிந்து சமவெளி நாகரிக ஆராய்ச்சியிலேயே தோய்ந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களும் மொழியியலாளர்களும் கடுமையாக மறுக்கின்றனர். பேராசிரியர் சுபாஷ் காக் ஹரப்பா பண்பாட்டு சித்திர எழுத்துக்களின் சில முக்கியக் குறியீடுகளை அவற்றினை ஒத்த வடிவங்கள் கொண்ட பிராமி எழுத்துக்களுடன் அவற்றின் அடுக்கு-நிகழ்வினை (frequency) ஆராய்ந்து அவை ஒத்துப்போவதை சுட்டிக்காட்டியுள்ளார். ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மர்மங்களை தன்னுள் அடக்கியபடி அகழ்வாராய்ச்சிகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறது சிந்து சமவெளி நாகரிகம்.


தோலவிரா: அகழ்வாராய்ச்சியாளர் பிஷ்ட் மேற்பார்வையில் செய்யப்பட்ட கணினி மீள் உருவாக்கம்



தோலவிரா 'பெயர் பலகை' இப்படித்தான் இருந்திருக்குமா சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்?


நாஸ்கா கோடுகள்: 


நாஸ்கா கோடுகள் : நன்றி: நேசனல் ஜியாகிராபிக்

தென்-அமெரிக்காவின் பெரு நாட்டு பாலை பிரதேசங்களில் வரையப்பட்டிருக்கும் பெரும் வரி வடிவங்களே நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படுகின்றன. 2000 வருடங்களுக்கு நாஸ்கா கலாச்சாரத்தினரால் உருவாக்கப்பட்ட 70 வரிச்சித்திரங்கள் இவை. 360 அடி (110 மீட்டர்கள்) நீளமுடைய குரங்கு வடிவம், திமிங்கிலம் (65 மீட்டர்கள்), காண்டார் பறவை (135 மீட்டர்கள்), ஹம்மிங் பறவை (50 metres), பெலிக்கன் (285 மீட்டர்கள்), சிலந்தி (46 மீட்டர்கள்) ஆகியவை உலகப் பிரசித்தி பெற்றவை. 1920 களில் இவை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இவை பாலைப்பகுதிகளில் இத்தனை சிரமமெடுத்து இவ்வடிவங்கள் வரையப்பட்டிருப்பதன் காரணங்கள் விவாதிக்கபடுகின்றன. எரிக் வான் டானிக்கன் போன்ற போலி-ஆராய்ச்சியாளர்கள் இவை வெளிக்கிரகவாசிகளின் விண்கலங்கள் இறங்க உருவாக்கப்பட்டவை என கருதுகின்றனர். பரபரப்பூட்டும் இத்தகைய விவரணங்கள் அளிக்கும் வர்த்தக வெற்றியால் இந்த அடிமுட்டாள்தனமான 'விளக்கங்கள்' புத்தகங்களாக வெளிவருகின்றன. இத்தகைய அதீத கற்பனைக் காரணங்களை பொதுவாக கறாரான அறிவியல் பார்வை கொண்ட ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர். விமானங்களிலிருந்தே முழு வடிவமும் புலப்படும் படியாக உருவாக்கப்பட்ட இந்த வடிவங்கள் ஏன் உருவாக்கப்பட்டன? மாரியா ரெய்ச்சே (Maria Reiche) பல்லாண்டுகள் இத்தரை வரைவுச் சித்திரங்களை ஆராய்ந்த ஜெர்மானிய ஆய்வாளர்.


நாஸ்கா நில வரைபடங்களை ஆராய வாழ்வினை செலவிட்டமாரியா ரெய்ச்சே

ஒருவேளை வானியல் நிகழ்வுகளான விண்மீன்கள் மற்றும் கிரகங்களின் இயக்கப்பாதைகளைப் பல்லாண்டுகளாக கண்காணித்து அதனடிப்படையில் ஒரு பெரும் வானியல் நாள்காட்டியாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என அவர் கருதுகிறார். 1967, இல் இவ்வடிப்படையில் ஆய்வினை மேற்கொண்ட ஜெரால்ட் ஹாவ்கின்ஸ் எனும் வானியல் ஆய்வாளர் இதற்கு எந்த சான்றுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜிம் வுட்மேன் எனும் அமெரிக்கர் இன்னமும் விசித்திரமான ஒரு கருத்தை தெரிவித்தார். ஒருவேளை நாஸ்கா புதிரை உருவாக்கிய பழம் அமெரிக்க நாகரிகம் பறப்பதைக் கண்டுபிடித்திருக்கலாம் எனக் கருதும் இவர் பூர்விக நாஸ்காவாசிகளுக்கு கிடைத்திருந்த பருத்தியால் உருவாக்கிய பலூனில் புகையை அடைத்து 300 அடிகளுக்கும் மேல் பறந்து தம் கருத்து சாத்தியமானது என்றும் காட்டினார். இவருடன் இணைந்து இதனை நிகழ்த்திக்காட்டியவர் பலூன்களில் பறப்பதில் பல சாதனைகளைப் படைத்த ஜூலியன் நாட் என்பவர். ஆனால் நடக்கமுடிந்தவை எல்லாம் நடந்திருக்க வேண்டியதில்லை. குறிப்பாக இத்தகைய பலூன்களைக் குறித்து வேறு புறச்சான்றுகள் ஏதுமில்லை. என்ற போதிலும் ஒரு கருதுகோளின் சாத்தியதையை ஆராய வெகு துணிச்சலான முயற்சிதான் இது.

இந்த ஓடம் மிதக்குறதே கஷ்டம் பறக்குமாக்கும்?

இது பறக்குமான்னா கேக்கிறே? பறந்துடுச்சே!

நன்றி: www.nott.com

மசசூட்ஸ் மனிதவியல் பேராசிரியர் டொனால்ட். ப்ரோலக்ஸ் (Donald Proulx) டேவிட் ஜான்ஸன் எனும் பள்ளி ஆசிரியருடன் இணைந்து இதற்கு வேறு ஒரு விளக்கம் கொடுக்கிறார். இத்தரைவரைப்படங்கள் நிலத்தடி நீருடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அவர் கருதுகிறார். நேஷனல் ஜியாக்ராபிக் உதவியுடன் ஜான்சனால் உருவாக்கப்பட்ட இந்த கருதுகோள் நிலவியலாளர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள் என பல்துறை நிபுணர் குழுவால் 1998 இல் ஆராயப்பட்டது. சில நாஸ்கா வரைப்படங்களாவது நிலத்தடி நீரோட்டங்களின் பாதைகளை ஒட்டி அமைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நாஸ்கா வரிகள் - வானில் மிதக்கும் ஆற்றலை அடைந்த ஒரு பூர்விக நாகரிகம் உருவாக்கியவையா? கற்பனையாற்றல் கொண்ட ஒரு தரைவாழ் சமுதாயத்தின் விசித்திரச் சடங்கின் விளைவா? நிலத்தடி நீரோட்ட பாதையை அறிந்து அதை திறம்பட பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட கருவியா? இரவு வானை தரையில் பிரதிபலிக்கும் விசித்திர நாட்காட்டியா? நாஸ்கா கோடுகளின் மர்மங்கள் இன்னமும் தெளிவுபடாத வரலாற்றுப்புதிராகவே உள்ளது.

படங்களும் ஆதாரங்களும் தொடரும்...

இயேசுவின் இரண்டாம் வருகை (Second Advent), இரகசிய வருகை (Secret advent)

வரலாறுகளும் நடந்து கொண்டிருப்பவைகளும்...

[1] இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகை:
இது ஏற்கனவே நிறைவேறிவிட்டது. இயேசு முதன் முதலாக பூமியில் சுமார் 2009 ஆண்டுகளுக்கு முன்பு மனிதசாயலாக வந்து, சிலுவையில் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து 40 நாள் பூமியில் இருந்து பின்பு பரலோகத்துக்கு சென்றுவிட்டார். இதுவே முதலாம் வருகை.

அவர் உயிர்த்தெழுந்தபோது "மத்தேயு 27:52 கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது" என்று வாசிக்கிறோம். எல்லாரும் அல்ல, அநேக (பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்) என்னும் வார்த்தைகளை கவனியுங்கள். இது ஒரு உயிர்த்தெழுதலாயிருக்க சாத்தியம்தான். இங்கே அநேகர் உயிர்த்து எழுந்து போயிருக்கலாம்!

[2] இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை:
சுருக்கமாகச் சொன்னால், நாம் தற்போது கிருபையின் காலத்தில் (Period of grace) வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது இயேசுவின் இரகசிய வருகையுடன் முடிவடையும். அதன் பின்பு உபத்திரவகாலம் இருக்கும். அதற்குப்பின்பு ஆயிரவருட இயேசுவின் ஆளுகை அல்லது அரசாட்சி இந்தப் பூமியில் நடைபெறும். இயேசு சொன்னார்: "பரலோகத்தில் அநேக வாசஸ்தலங்கள் (mansions) உண்டு. அப்படி இல்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்"; மேலும்:யோவான் 14:3
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை (a place) ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
எபிரெயர் 9:28 தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
இயேசுவின் இரண்டாம் வருகையை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
இவை எல்லாமே இரண்டாம் வருகைதான்.
. எப்படியெனில் இரகசிய வருகையில் செல்பவர்களுக்கு அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. அவருடைய வருகையில் போகாதவர்கள் இன்னும் அவரை சந்திக்கவில்லை.
. உபத்திரவகாலத்தில் மரிப்பவர்களுக்கும் அது இரண்டாம் வருகை ஏனெனில் அப்போதுதான் அவர்களுக்கு அது கிறிஸ்துவை இரண்டாம் வருகை.
. எஞ்சி இருப்பவர்களுக்கு வெளிப்படையான வருகைதான் இரண்டாம் வருகை.
[2-A] இரகசிய வருகை: (Secret Advent) 
திருடன் வருகிற விதமாக யாரும் எதிர்பார்க்காத ஒரு நேரமாகஇருக்கும்.
திருடன் வந்து விட்டு போனபின்பு எப்படி எல்லாரும் திருட்டை அறிந்துகொள்கிறார்களோ அப்படியே இரசியவருகை நடந்து முடிந்தபின் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை முடிந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுவார்கள். இந்த வருகையில் முதலாவதாக கிறிஸ்துவுக்குள் மரித்த பரிசுத்தவான்கள் உயிரடைவார்கள், இரண்டாவதாக உயிரோடிருக்கும் நாமும் அவருடனேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளபப்படுவோம். இந்த இரண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் (twinkling of an eye) நடைபெறும். எனவே இரகசிய வருகையையும், வெளிப்படையான வருகையையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். வெளிப்படையான வருகையை எல்லாரும் காண்பார்கள். இரகசிய வருகை ஒரு கண்ணிமைக்கும் நேரம் மட்டும் இருப்பதால் எல்லாருக்கும் தெரியாது.

I தெசலோனிக்கேயர் 4:14-18
இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.I தெசலோனிக்கேயர் 5:2
இரவிலே திருடன்வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
1கொரிந்தியர் 15:50-54
சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது [1] மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; [2] நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
[2-B] உபத்திரவ காலத்தின் வருகை (Tribulation Martyr's Harvest)
கர்த்தருடைய வருகைக்குப்பின் உபத்திரவகாலம் இருக்கும். இது சுமார் ஏழு வருடங்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.[3.5 years+3.5 years]. உபத்திரவம் ஏழு வருடங்கள் என்று வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.

[ வருடங்களும், ஸ்திரீ, ஆண்பிள்ளையின் அர்த்தமும்:
ஸ்திரீ பெற்ற ஆண்பிள்ளை சிங்காசனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.வெளி 12:6 ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது. (1260 days/360 = 3.5 years)வெளி 11:3 என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். (1260 days/360 = 3.5 years)
(Jewish calendar: see http://www.webexhibits.org/calendars/calendar-jewish.html)
ஸ்திரீயானவள் - கைவிடப்பட்ட கூட்டத்தார் (பிள்ளை எடுத்துக்கொள்ளப்பட்டபின்) என்றும்,
ஆண்பிள்ளை - இரகசிய வருகையில் சென்ற கூட்டத்தார் என்றும் ஞானார்த்தமாக எடுத்துக்கொள்ளலாம். ஸ்திரீக்கும் ஆண்பிள்ளைக்கும் உள்ள எடையின் விகிதம் 1:20 என்று வைத்துக்கொண்டால்கூட உலகில் உள்ள சபையாரில் 20 ல் ஒரு பங்கு மட்டும் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று சிலர் சொல்கின்றனர். நிச்சயமாக இது இயேசுவும் மரியாளும் அல்ல, ஏனெனில் யோவான் பத்மு தீவில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஆவிக்குள்ளாகி காண்கிறார். இதற்கு முன்பே இயேசு மரித்து உயிர்த்தெழுந்தாயிற்று.]
இந்த உபத்திரவகாலத்தில் அந்திக்கிறிஸ்து பூமியில் வலுசர்ப்பமாகிய பிசாசின் சக்தியுடன் ஆளுவான். இந்த உபத்திரவகாலத்தில் கைவிடப்பட்ட கூட்டத்தாரை அந்திக்கிறிஸ்து உபத்திரவப்படுத்துவான் (வெளி 12:17). இங்கு அநேகர் இரத்தசாட்சியாக மரிப்பார்கள். இவர்களை அழைத்துக்கொண்டு போகும்படி இயேசு மீண்டும் தம்முடைய தூதர்களை அனுப்புவார். பின்பு யூதர்களுடன் ஒப்பந்தம் செய்து தேவாலயம் கட்ட உதவியாயிருப்பான். [இப்போது அங்கே தேவாலயம் இல்லை, ஏனெனில் தேவாலயம் கி.பி. 70ம் வருடம் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு இயேசு சொன்னது போல் இடிக்கப்பட்டது. அங்கே தற்போது ஒரு மசூதி இருக்கின்றது. see paragraph 3 on http://en.wikipedia.org/wiki/Temple_in_Jerusalem] அதன்பின் தன்னை வணங்கவேண்டும் என்று சொல்லுவான் II தெசலோனிக்கேயர் 2:4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். அப்பொழுது யூதர்கள் அவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்துபோட்டுவிடுவார்கள். அவன் யூதர்களை துன்புறுத்துவான். இந்த யூதர்களில் 144000 பேர் முத்திரையாக பாதுகாக்கப்படுவார்கள் (வெளி 7).

வெளி 7:9-14. இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
வெளி 14: 14-20 அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான். அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.

[2-C] வெளிப்படையான வருகை (Public Advent)
உபத்திரவ காலம் முடிந்த பின்பு, இயேசு ஒலிவமலையில் வந்து இறங்குவார். அவரை இதுவரை விசுவாசிக்காத யூதர்கள் தங்கள் ஒரே பேறான குமாரனுக்காக அழுது புலம்புவது போல் அழுவார்கள். அவரைக் குத்தினவர்களின் (யூதர்கள்) கண்கள் அவரைக்காணும். இயேசுவே மேசியா என்று அப்பொழுது அறிந்துகொள்ளுவார்கள். சகரியா 12:10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். அந்திக்கிறிஸ்து மற்றும் அவன் சேனைகளை அவர் தமது வாயிலிருந்து புறப்படும் பட்டயத்தால் ஜெயிப்பார் (வெளி 19:13-21)

மத்தேயு 24:29,30. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.சகரியா 14:3-5
கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.

[3] ஆயிரவருட ஆளுகை, நியாயத்தீர்ப்பு, நித்தியம்:
அந்திக்கிறிஸ்துவின் சேனையை வென்றபின்பு பழைய பாம்பாகிய பிசாசென்னும் வலுசர்ப்பம் பிடிக்கப்பட்டு பாதாளத்தில் ஆயிரவருடம் அடைக்கப்படுவான்.

வெளி 20:2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

1000 வருட ஆளுகை இந்த பூமியில் இதன்பின்பு துவங்கும். அப்பொழுது ஏதேனில் இருந்த நிலமையை மீண்டும் பூமியில் இயேசு கொண்டுவருவார். ஏசாயா 11:6-9 6. அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும், என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

ஆயிரவருட ஆளுகைக்குப்பின்பு பிசாசானவன் பாதாளத்திலிருந்து திறந்துவிடப்படுவான். இவன் தன் சேனைகளோடு (கோகு, மாகோகு) கர்த்தருக்கு விரோதமாக யுத்தம்பண்ணவருவான். (அர்மகெதோன் யுத்தம். Battle of Armageddon வெளி 16:16 ). இதற்குப் பின்பு பிசாசும் அவன் சேனையும் ஆதிமுதலாக அவர்களுக்கென்று உண்டாக்கிவைக்கபட்டிருந்த அக்கினிக்கடலில் தள்ளப்படுவார்கள். இதன் பின்பு "வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு" இருக்கும். பூமி மரித்தோரை ஒப்புவிக்கும். தாங்கள் செய்த கிரியைக்கான பலனை அடையும்படி பரலோகத்துக்கும் நரகத்தும் ஜனங்கள் வேறுபிரிக்கப்படுவார்கள். அநேகர் நித்திய நித்தியமாய் தேவனோடிருப்பார்கள். அநேகர் நித்திய நித்தியமாய் நரகம் என்னும் அக்கினிக்கடலில் வாதிக்கப்பட்டு இருப்பார்கள்.

இன்று நீ இறந்துபோனால்(மரித்தால்) எங்கே போகுவாய்? என்ற கேள்விக்கு நீங்கள் உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள். பரலோகம் போகமுடியும் என்று உறுதியாய் உங்களால் சொல்லமுடியாவிட்டால், இயேசுவிடம் முழங்கால் படியிட்டு நீங்கள் செய்த பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்டு மனந்திரும்புங்கள். தேவன் அன்பாகவே இருக்கிறார். யோவான் 3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

இப்போது நீங்கள் இருக்கும் இடத்திலேயே முழங்கால்படியிட்டு கண்ணீரோடு அவரிடம், "இயேசுவே, நீர் மெய்யான குமாரனாகிய தேவன் என்றும், நீர் சிலுவையிலே என்னுடைய பாவங்களுக்காக இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தீர் என்றும் விசுவாசிக்கிறேன். நான் பாவியாகிய மனுஷன், என் பாவங்களை மன்னியும். இந்த பாவம் என்ற பாரச்சுமையை என்னிலிருந்து நீக்கும். உம்முடைய இரத்தத்தினாலே என்னைக் கழுவும். என் இருதயத்தில் வாரும். நான் இனி உம்முடைய பிள்ளையாக பாவம் செய்யாமல் ஜீவிப்பேன். இனி இந்த உலகத்தார் போல ஜீவிக்கமாட்டேன். என்னை உம்முடைய மகனாக/மகளாக ஏற்றுக்கொள்ளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் ஜீவனுள்ள பிதாவே. ஆமென்". என்று ஜெபியுங்கள், அவர் ஜெபத்தைக் கேட்கிற தேவன்.

மேலே கூறப்பட்டவை ஒரு சுருக்கமாகும்.

நிகழ்தகவாய் நடப்பவை இருப்பின் நிகழ்வுகள் நடந்தே தீரும்.

வெள்ளி, 24 மார்ச், 2017

அகழ்வாராய்ச்சியில் நாய்களைப் பற்றிய தகவல் - Happy international puppy's day ❤


நாங்க மட்டுமல்ல..! மஹேந்திர பல்லவன் கால எடுத்தனூர் நடுகல்லில் கோவிவன் என்ற நாயின் பெயர் வருகிறது. தமிழர்களும் 1400 ஆண்டுகளுக்கு முன் நாய்களை வளர்த்து அவைகளுக்கு அன்பான பெயர் சூட்டுவதும் அதை யுத்த களம் வரை அழைத்துச் சென்றதும் இதனால் தெரிகிறது. யுத்த வீரனுடன் அந்த நாயும் இறக்கவே அது கல்வெட்டில் அழியா இடம் பெற்று அமரத்துவம் பெற்று விட்டது. அன்பானது, பண்பானது நமது உணர்வின் ஆழத்தை புரிந்து வைத்தது. நாங்கள் வெறுத்தாலும் ஒதுக்கினாலும் ஒரு நேர அரவணைப்பின் பாசத்துக்கு செஞ்சோற்று கடனை வாழ்நாள் முழுதும் செய்யும் கடவுளின் படைப்பின் அரிய உயிரினம்...

நாய்கள், மனிதர்களின் சிறந்த நண்பர்கள் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட  உண்மை. அதற்கு மேலும் நாய்களுக்கு சிறப்பு உண்டு. உயிரின வளர்ச்சி வரலாறு, அகழ்வாய்வு மூலம் கண்டறியப்பட்டவை நாய்களைப் பற்றி பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது. இன்று நாம் நேசிக்கும் நாய் 20000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததில்லை.

எப்பொழுது, எங்கே, முதல் முதலாக நாய் என்ற மிருகம் பற்றி அறிய வந்தது? அவை முதலில் உணவுக்காக பயன்படுத்தப்பட்டதா? வளர்ப்பு நண்பனாக வைத்திருந்தார்களா? வேட்டையாடும் திறமை கண்டு வளர்த்தார்களா? இந்த கேள்விகள் விலங்கியல் துறையிடையே முக்கியத்துவம் பெற்றன.

நாய் இனம் வேட்டையாடும் முரட்டு நாய் ஜேக்கால் (Jackal) சீனவழி வந்தவை என்ற கருத்து சரியல்ல என்பதாயிற்று. சாம்பல் நிற ஓநாய் (Wolf) இனத்தின் வழி வந்தவை என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. அடுத்து, நாய்கள் முதலில், சீன நாட்டிலா, தூரகிழக்கு நாட்டிலா, ஆப்பிரிக்காவிலா செல்லப் பிராணி யாக வளர்க்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. புதிய கற்காலத்தில்  நாய்கள் முக்கிய பங்கு வகித்தன. 10000 ஆண்டு களுக்கு முன்னதாக, மனித வாழ்க் கையில் நாய்கள் சிறந்த காவலாளியாக, மதச்சடங்குகளில் பலியிடுவதற்காக, உடலுக்குத் தேவையான புரதசத்தை பெறுவதற்கான மிருகம் என்ற பங்கை வகித்து வந்தன. இந்த செய்தி சீனா, ஆப்பிரிக்கா நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட எலும் புக் கூடுகளின் வாயிலாக அறியப்படுகிறது.


பல நூற்றாண்டுகளுக்கு முன் ஓநாய் (Wolf)   இன வழியாக இவை உற்பத்தி அடைந்தன என்றும், பயிர் தொழில், வேட்டையாடுதல் தொழிலில் ஈடுபட்டவரி டையே நாய்கள் வளர்ச்சி யடைந்திருக்க முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. லாஸ்ஏன்ஜல்ஸ் கலி போர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட்வயன், வளர்ப்பு நாயின் டி.என்.ஏ. கிழக்கு நாடுகளின் ஓநாயினுடைய டி.என்.ஏ வுடன் ஒத்து உள்ளதாகக் கூறுகிறார். விக்டோரியா பல்கலைக்கழக அகழா ராய்ச்சிப் பேராசிரியர் கிராக்போர்ட் (Crockford) கூறுவது; நாய்களை புதைக்கும் பழக்கம், ஆன்மீக சிந்தனையுடன் நாய் தொடர்புள்ளதை காட்டுகிறது. அடுத்து காவலுக்கு பயன்படுத்தும் பழக்கம் வந்துள்ளது. வேட்டைக்கு அன்று துவக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

மக்கள் கலாச்சாரத்தோடு நாய் எப்படி தொடர்புடையதாக இருந்தது என்பதைப் பற்றிய செய்தி வருமாறு:

தென் அமெரிக்காவின் பெருநகரத் தின் கல்லறைகளில், 80 நன்கு பதப் படுத்தப்பட்ட நாய்கள் அவற்றின் சொந் தக்காரருடன் புதைக்கப்பட்டிருந்தது. அழகான கம்பிளி துணியால் மூடப்பட்டு அவற்றின் மூக்கின் அருகில் மீன் வைத்துள்ளனர். அதன் எலும்பு காணப்படுகிறது. அவை குட்டியிலிருந்து பெரிய நாய்களாக உள்ளன. பண்டய எகிப்தியர் நாயை கடவுளாக மதித்தனர். இந்த உலகத்திற்கும், இறந்த பின் மறு உலகத்துக்கும் துணைவனாக கருதப் பட்டது. சில புதைக்கப்பட்ட நாய்களுடன் ஒரு கிண்ணமும் உள்ளது. ரோம கலாச்சாரத்தில் நாயை மனிதருக்குக் கொடுக்கும் மதிப்போடு மதிக்கும் பழக்கம் இருந்தது.

தேவதைகளை திருப்திபடுத்த நாயை பலியிடும் பழக்கம், மதத்தின் அடிப்படையில் நடைபெற்றது. கிரேக்க நாட்டில் ஸ்பார்டன் பகுதி மக்கள் போரில் வெற்றிபெற நாயை பலியிட் டனர். குழந்தை பிறந்த பிறகு, ஒருவர் இறந்த பிறகு தூய்மை ஏற்பட நாயை பலியிடும் பழக்கம் கிரேக்கரிடம் இருந்தது. இதைப்போலவே ஹங்கேரி நாட்டில் நாய்குட்டிகளை சிறு பானைகளில் வைத்து புதைத்துள்ளனர். தீய சக்திக்களை நீக்குவதற்கு இந்த பழக்கம்   இருந்தது. இங்கிலாந்தில் உள்ள ரோம நாட்டு கட்டடங்களில் சுடுமண் ஓடுகளில் நாய்களின் பாதங்களை பதிய வைக்கும் பழக்கம் இருந்துள்ளது.

உணவுக்காக நாய்

பழக்கத்தின் காரணமாக, விருப்பத் தின் காரணமாக அல்லது தேவையின் காரணமாக நாயை உணவுக்காக பயன் படுத்தும் கலாச்சாரம் இருந்து வந்துள் ளது. உலோக காலத்தில் (450 - 100 BC)உணவுக்காக நாயை வளர்த்து வந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எளிதில் புரத உணவுப்பொருளை பெறு வதற்கு நாய் உணவு பயன் பட்டது. சில நேரங்களில் விழாக்காலங்களிலும் நாய் உணவு சாப்பிட்டு வந்தனர்.

ஆத்மாவுக்கு பாதுகாவலன்

பழங்கால மக்கள், இறந்த பின் மறு உலகத்தில் நாய் களை சந்திக்க முடியும் என்று நம்பினர். ரிக்வேதத் திலும் , கிரேக்க, ரோம நாட்டு கதைகளிலும் இது பற்றி கூறப்பட்டுள்ளது. பல கலாச்சாரங்களில் ஆத்மா வுக்கு வழிகாட்டியாக நாய் உள்ளதாகக் கருதப்பட்டது.

(‘ARCHAEOLOGY’ (அகழ் ஆராய்ச்சி) அக்டோபர் 2010 இதழிலிருந்து வழங்கப்படும் செய்தி)

இந்தியாவிலும் நவீன கற்கால மனிதர்கள் இறந்தவர்களை குழியில் புதைக்கும் வழக்கத்தில் இருந்தனர். சில சமயங்களில் இறந்தவர்களை புதைக்கும் போது அவருடைய நாயுடன் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. காஷ்மீர், கர்நாடகம், தமிழகம் போன்ற பகுதிகளில் இந்த முறை இருந்துள்ளது. (வி.வி.கிருஷ்ணசாஸ்திரி, பழங்கால வரலாற்று நாகரீகங்கள்) நாய் பற்றிய பழமொழிகளுக்கும் பஞ்சமில்லை. நாயின் குணங்களைப் பற்றியும், இன்று அவை எந்தெந்த வகையில் மனிதர் களுக்குப் பயன்படுகிறதென்றும் நாம் அறிவோம்.

நாய் கண்காட்சிகள் நடப்பதும், அவற்றிற்கு பரிசளிப்பதும் உலகெங்கும் நடைபெறுவதுண்டு. அக்கண்காட்சிகளில் பலவகைத் தோற்றத்துடைய நாய்களைக் காண் கிறோம். நாய்களை வீட்டில் வளர்ப்பதற்கு சில விதிமுறைகளை அரசு விதிப்பதால், தெரு நாய்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதில்லை. இந்த முறையை சிறப்பான வகையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் கடைபிடிப்பதைக் காண முடிந்தது. நாய்கடிக்கு பல நாட்கள் ஊசி போடும் முறைக்குப் பதிலாக ஒரு ஊசி போதும் என்பதாக அறிவியல் உதவியுள்ளது.

ரிக் வேதத்தில் நாய் வளர்ப்பு
இதற்கு என்ன ஆதாரம்?

1. இந்த நாய் வளர்க்கும் வழக்கமும், அதற்குப் பெயர் வைக்கும் வழக்கமும் ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது. இப்பொழுது அமெரிக்கர்கள் ரிக் வேதத்துக்குக் கொடுக்கும் கி.மு.1700 என்று கொண்டாலும் இற்றைக்கு 3700 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திரன் வளர்த்த சரமா என்ற பெண் நாய் மற்றும் அதன் இரண்டு குட்டிகள் சரமேயஸ் பற்றி ரிக் வேதப்பாடல்கள் மூலம் அறிகிறோம் (R. V. 7-55-2 and 10-108). இதை வழக்கம் போல கிரேக்கர்கள் ‘’திருடி’’ பெயரை ஹரமஸ் என்று மாற்றி கதை எழுதிவிட்டனர். அவர்கள் மூலம் வேறு பல கலாசாரங்களிலும் இது நுழைந்துவிட்டது. கிரேக்கர்களுக்கு ‘’எஸ்’’ வராது என்பதால் சிந்து என்பதை ஹிந்து என்பது போல சரமாவும் ஹரமஸ்—ஹெர்மஸ் ஆகிவிட்டது. ஆக முதலில் நாய் வளர்த்தவர்களும் நாமே. அதற்குப் பெயர் சூட்டு விழா நடத்தியதும் நாமே!

2.தர்மபுத்திரன் தனது ஆட்சியை முடித்துக் கொண்டு, சகோதரர்களுடன் வடதிசைப் பயணத்தை மேற்கொண்டான். அதாவது சாகும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும். தமிழ் மன்னர்களும் இதைச் செய்ததை கோப்பெருஞ்சோழன் — -பிசிராந்தையார் – பொத்தியார் கதைகளில் விரிவாகச் சொல்லிவிட்டேன். ஒவ்வொரு சகோதரராக ‘’தொப்பு தொப்பு’’ என்று கீழே விழுந்து இறந்தனர். ஆனால் தர்மபுத்திரன் மட்டும் வடதிசையை நோக்கி தொடர்ந்து நடந்தார். அவருடன் ஒரு நாய் மட்டும் தொடர்ந்து சென்றது. சொர்க்கத்தின் வாசலுக்குச் சென்ற போது, ‘’வெரி ஸாரி, சொர்க்கத்தில் நாய்களுக்கு அனுமதி கிடையாது. அதை வெளியில் அம்போ என்று விட்டுவிட்டு உள்ளே வாருங்கள்’’ — என்றனர் வாயிற் காப்போர். தருமனோ அதற்கு மறுத்து விட்டான். பின்னர் யம தர்மராஜனே இவ்வாறு தர்மன் இறுதிவரை தர்மத்துடன் இருக்கிறானா என்பதைக் காணவந்ததாக மஹாபாரதம் கதையை முடிக்கிறது.
ரிக் வேத நாயும், மஹாபாரத நாயும் யமனுடன் தொடர்புடைய கதைகள்.

தமிழ் கல்வெட்டில் நாய்
3.மஹேந்திர பல்லவன் கால எடுத்தனூர் நடுகல்லில் கோவிவன் என்ற நாயின் பெயர் வருகிறது. தமிழர்களும் 1400 ஆண்டுகளுக்கு முன் நாய்களை வளர்த்து அவைகளுக்கு அன்பான பெயர் சூட்டுவதும் அதை யுத்த களம் வரை அழைத்துச் சென்றதும் இதனால் தெரிகிறது. யுத்த வீரனுடன் அந்த நாயும் இறக்கவே அது கல்வெட்டில் அழியா இடம் பெற்று அமரத்துவம் பெற்று விட்டது. ஆக பாரதம் முழுதும் ஒரே கலாசாரம் இருந்தமைக்கு நாயும் சான்று பகரும்!

4.பசுமாடுகளுக்கு அன்பான பெயர் சூட்டுவதால் காமதேனு சுரபி போன்ற பெயர்களை நாம் அறிகிறோம். பாற்கடலைக் கடைந்த போது வெளியே வந்த குதிரை உச்சைஸ்ரஸ், யானை ஐராவதம் ஆகியவற்றின் கதைகளை நாம் அறிவோம். பகவத்கீதையில் உச்சைஸ்ரவஸ் பெயர் வருவதால் அதுவும் அழியா இடம் பெற்றுவிட்டது.

நாய் வளர்ப்போர் கவனிக்க…!

சமூக அந்தஸ்துக்காக, குழந்தைகளுக்காக என்பது போன்ற காரணங்களுக்காக நாய் வளர்க்காமல், உண்மையில் செல்லப்பிராணி வளர்ப்பில் பிரியமும், ஆர்வமும் இருப்பவர்கள் மட்டுமே நாய் வளர்ப்பது நன்று!’’

* ஸ்டேட்டஸை வெளிப்படுத்தும் விதமாக, வெளிநாட்டு நாய் மோகத்தில், வாயில்லா ஒரு ஜீவனை தான் வாழும் சூழ்நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலுக்குக் கொண்டு வந்து வளர்ப்பதைவிட, கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை போன்ற அழியும் நிலையில் உள்ள நம் நாட்டு நாய் இனங்களை வளர்க்கலாம்.

* சில பிரீடர்ஸ், இங்கேயே வெளிநாட்டு நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்கிறார்கள். இவர்களில் சிலர் ஒரு நாய் 6 குட்டிகளை ஈன்றால், 4 குட்டிகளை விற்றுவிட்டு, 2 குட்டிகளை அடுத்த இனப்பெருக்கத்துக்காக வைத்துக் கொள்கிறார்கள். இதனால் குறையுள்ள நாய்கள் பிறக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் அவர்கள் அதையும் சாமர்த்தியமாக விற்று விடுவார்கள். வாங்குவோர்தான் கவனமாக இருக்க வேண்டும்.

* வீட்டுச் சூழலுக்கு ஏற்ப நாய் வாங்க வேண்டும். பெரிய வீடு அல்லது தனி வீடுகளில் பாக்ஸர், டாபர்மேன், ஜெர்மென் ஷப்பர்டு, லேப்ரடார் போன்ற நாய்களை வளர்க்கலாம். இவை அதிகமான உணவை உட்கொள்ளக் கூடியவை. அதனால் செரிமானத்துக்கு அவற்றுக்கு ஓடுவது, நடப்பது, விளையாடுவது என்று பயிற்சிகளும் அதிகம் தேவைப்படும் என்பதால், பெரிய சுற்றுப்புறம் அவசியம். மேலும் தோல் நோய்கள் வராமல் இருக்க சூரிய ஒளி அவசியம் என்பதால், அவற்றை இரு வேளை வாக்கிங் அழைத்துச் செல்ல வேண்டும்.

* அப்பார்ட்மென்ட்களில் பெரிய நாய்களைத் தவிர்த்து, ‘ஸ்மால் ப்ரீட்ஸ்’ என்ற அழைக்கப்படும் பக், பொமரேனியன் போன்றவற்றை வளர்க்கலாம். இவை வளர குறைந்த அளவிலான இடம் போதுமானது. அதிக சூரிய ஒளி தேவைப்படாத இவற்றை, ஒருமுறை வாக்கிங் அழைத்துச் சென்றால் போதுமானது.

* நம்மைப் போலவே நாய்களுக்கும் ஊட்டச்சத்து உணவு அவசியம். மினரல்கள், வைட்டமின்கள், புரதம், கார்போஹைட்ரேட் போன்றவற்றை சரிவிகித அளவில் அவற்றுக்கு வழங்க வேண்டும். தொடர்ந்து ஒரே வகை உணவை கொடுத்தால், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் தொற்றுநோய்களில் ஆரம்பித்து, தோல் நோய்கள், அனீமியா, அனீமியாவால் உள்ளுருப்புகளின் செயல்பாடுகள் குறைவது என்று நாயின் ஆயுள் பாதியிலேயே முடிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.

* நாய்களுக்கென்றே பிரத்யேக பாக்கெட்களில் விற்கப்படும் உணவுகள் மட்டுமே அவற்றுக்குப் போதாது. காரணம், மேலைநாடுகளில் குளிர்பிரதேச தட்பவெட்ப சூழலில் வளரும் நாய்களுக்காக தயாரிக்கப்படுபவை, டிரை ஃபுட். அங்கு நாய்களை வாக்கிங்கூட அழைத்துச் செல்ல முடியாது என்பதால், உடலுக்குச் சூடு தரும் வகையில் ட்ரை ஃபுட் தயாரிக்கப்படுகிறது. அதே ரக உணவு, நம் நாட்டில் வாழும் நாய்களுக்கு எப்படி செட் ஆகும்? எனவே, தண்ணீர்ப்பதம் சேர்ந்த உணவே நம் நாய்களுக்குத் தரப்பட வேண்டும். அந்த ‘டிரை ஃபுட்’ வகைகளை ஸ்நாக்ஸ் ஆக வழங்கலாம், உணவாக வேண்டாம்.

* நாய்களின் சுபாவமே எதைப் பார்த்தாலும் முகர்ந்து பார்ப்பதுதான். இதனால் நாசி வழி கிருமிகள் உள் சென்று தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், மாதத்துக்கு ஒரு முறை பூச்சி மருந்து கொடுப்பதுடன், தவறாமல் தடுப்பூசிகளைப் போட வேண்டும்.

* நாம் சாப்பிடும் உணவில் வெங்காயம் அதிகம் சேர்க்கப்பட்டிருந்தால், அதை நாய்க்கு வழங்கக் கூடாது. காரணம், நாய்க்கு வெங்காயம் செரித்து வெளியேறாது உள்ளேயே தங்கிவிடும். பல நாட்களாக இப்படி சேரும்போது, அது விஷமாக மாறிவிடும். இதனால் தோல் பிரச்னை முதல் உள்ளுறுப்புகள் பாதிப்பு வரை ஏற்படலாம்.

தெருநாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு

“நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும். பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன..” என்கிறார், நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர். இவருக்கு 29 வயது. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுவிட்டு ஈரோடு வந்திருக்கும் இவர், இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் விவசாயம், நாட்டு இன நாய்கள் போன்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன. நாட்டு இன நாய்கள் பற்றி அவர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு: “எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டால் பதிலுக்கு முதல் குரல் அந்த நாயிடம் இருந்துதான் எழும். தமிழகத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவோம். அந்த பட்டியை பாதுகாக்கும் நாய்கள்தான் அந்த காலத்தில் பட்டிநாய்கள் என்று அழைக்கப்பட்டன. மலையாள மொழியில் நாய்களை பட்டி என்று அழைப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம்.

எனக்கு தெரிந்தவரை பட்டி நாய்களில் கருவாய் செவலை, கருநாய், பச்ச நாய் ஆகிய மூன்று இனங்கள் இருந்திருக்கின்றன. உடல் முழுக்க செவலையும் வாய் பகுதி கருப்பாகவும் இருக்கும் கருவாய் செவலை அதிக மவுசாக இருந்திருக்கிறது. இது காவலுக்காகவும், செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டிருக்கிறது.  கருநாய் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் இருக்கும். பட்டிகளில் காவல் காக்க இந்த நாய்கள்தான் மிகச்சிறந்தவை. இருளோடு இருளாக இந்த நாய்கள் படுத்து இருந்தால் பிற மிருகங்களுக்கு காவல் நாய் இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக்கொள்ளும். பச்ச நாய் என்றால் துரத்தித்துரத்தி கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நாய்கள் இருக்கும் சுற்று வட்டார பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. பாய்ந்து வந்து கடித்து விடும். இதுபோன்று வேறு சில நாட்டு இன நாய்களும் இருந்துள்ளன. ஆனால் இன்று வெளிநாட்டு இன நாய்களின் மோகத்தால் நம் நாட்டு நாய்களை தெருவுக்கு துரத்தி, தெருநாய்களாக்கிவிட்டோம். நமது விவசாய நிலங்களில் நச்சுப்பாம்புகளும், தேள்களும், வேறு பல விஷ ஜந்துகளும் உள்ளன. இவற்றில் இருந்து விவசாயிகளை பெரிதளவும் காத்து வந்திருப்பவை பட்டி நாய்கள்தான். முன்பு விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு செல்லும்போது பட்டி நாய்கள் அவர்களுக்கு முன்னால் நடந்து செல்லும். பாம்புகள் வந்தால் அவற்றின் குரைப்பு சத்தம் வித்தியாசமாக இருக்கும். அதை விவசாயிகள் உணர்ந்து, தங்களை காத்துக்கொள்வார்கள்.  எல்லா விதமான விஷ ஜந்துக்களையும் நாய்களுக்கு அடையாளம் தெரியும். அவைகளை தங்கள் எஜமானர் அருகே அணுக விடாமல் பார்த்துக்கொள்ளும். அதுபோலவே மாட்டுப்பட்டிகளை காவல் காக்கும் இந்த நாய்கள், மாடுகளை எந்த ஜந்துவும் அணுகாமல் பார்த்துக்கொள்ளும்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இருந்தார். அவருடைய மனைவிக்கு வெளிநாட்டு நாய்கள் மீது கொள்ளை பிரியம். வீட்டில் 14 நாய்கள் வளர்த்து வந்தார். அந்த நாய்களுடன் ஒரே ஒரு நாட்டு நாயை, அந்த அதிகாரி விரும்பி வளர்த்து வந்தார். ஆனால் அந்த நாயை அவருடைய மனைவிக்கு கொஞ்சமும் பிடிக்காது. ஒருநாள் இரவில் அவரது வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து விட்டனர். நாட்டு நாயுடன் சேர்த்து 15 நாய்களும் சுற்றிக்கொண்டன. திருடர்கள் சாமர்த்தியமாக மயக்க பிஸ்கெட்டை தூக்கி வீசினார்கள். அனைத்து நாய்களும் ஓடிச்சென்று பிஸ்கெட்டுகளை தின்று விட்டு சாப்பிட சிறிது நேரத்திலேயே மயங்கி  விட, திருடர்கள் போட்ட பிஸ்கெட்டை சாப்பிடாத நாட்டுநாய் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் நிலை தடுமாறிய திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். நாயின் குரைப்பு சத்தம்கேட்டு அந்த அதிகாரி வெளியே வந்து பார்த்தபோது வெளிநாட்டு நாய்கள் மயக்கத்தில் கிடந்தன. நாட்டு நாய் மட்டுமே கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. காரணம், நாட்டு நாய்கள், முன்பின் தெரியாதவர்கள் போடும் உணவுகளை உண்பதில்லை. வீட்டை மட்டுமல்ல, ஒரு கிராமத்தையே கட்டிக்காக்கும் திறன் பட்டி நாய்களிடம் உண்டு.

இப்போது தெருநாய்களாக்கப்பட்ட பின்பு கூட, அந்த வீதியில் தினமும் வந்து செல்பவர்களை தவிர இரவு நேரத்தில் புதிய நபர் ஒருவர் வந்தால் அதை பார்த்ததும் நாட்டு நாய் உடனடியாக குரைக்கும்.  அதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிற்கும் நாய்களும் குரைக்கும். இப்படி தகவலை பரப்பி, ஒருசேர உஷாராக்கி தகவலை பரப்பும் ஆற்றல் நாட்டு நாய்களுக்கு மட்டுமே உண்டு. வேட்டிக்கட்டிக்கொண்டு செல்லும் நபர்களை பார்த்து பெரும்பாலும் நமது பட்டி நாய்கள் குரைப்பதில்லை. காரணம், வேட்டி கட்டியவன் தன்னை தாக்க மாட்டான் என்பது பட்டி நாய்களின் ஜீனில் பதிவாகி இருக்க வேண்டும். இன்று நாம் கொண்டாடும் வெளிநாட்டு நாய்களின் மூலம் ஆஸ்துமா, சைனஸ் நோய்கள் உருவாகும். தொற்று நோய்கள் பரவும். குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மை கொண்ட அவைகளை, அதற்கேற்றபடி பராமரிக்கவும் வேண்டும். ஆனால், வெப்ப நாடுகளின் காலநிலைக்கு தகுந்தாற்போல நம்மோடு வாழும் பட்டி நாய்களால் எந்த நோயும் பரவாது. அவை நோயால் பாதிக்கப்பட்டால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தானாகவே சென்று செத்துவிடும் அறிவாற்றல் கொண்டது.   கிராமங்களில் நாய் வளர்த்தவரின் வீட்டில் ஒருவர் உடல்நலமில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்தால், அவருக்கு பதிலாக நாய் தனது உயிரைக்கொடுத்து காப்பாற்றும் என்பார்கள்.  எனவேதான் காலபைரவரின் வாகனமாக பட்டி நாய் அமைக்கப்பட்டு உள்ளது.  பட்டி நாய்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். அது ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக குரல் எழுப்பும். சிறு குழந்தைகளை கடிக்காது. பாதுகாப்பற்ற சூழலில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் குழந்தைகளை பார்த்தால் குரைத்து மிரட்டி மீண்டும் வீட்டுக்குள் வரும்படி செய்துவிடும். இதற்கு காரணம், முன்பு பட்டியில் இருந்து தொலைந்து போகும் கன்றுகளை, பட்டி நாய்கள்தான் தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். கால்நடைகளுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் நாட்டு நாய்கள் காவல் அரணாகும்.  நமது கலாசாரத்தோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும் பின்னிப் பிணைந்த பட்டி நாய்களை பாதுகாப்பது நம் சமூக கடமை” என்கிறார், ஆய்வாளர் பொன் தீபங்கர்.

தேள் மற்றும் விஷ பூச்சிகளை பட்டி நாய்கள் எந்த பயமுமின்றி கடித்து தின்றுவிடும். பாம்புகளையும் எதிர்த்து நின்று கடித்து விரட்டும். நாட்டு நாய்கள் விஷப்பாம்புகளையும் கடித்து கொல்லும் ஆற்றல் கொண்டவை மட்டுமல்ல, பாம்புகள் கடித்தாலும் அவற்றுக்கு எளிதில் மரணம் ஏற்படாது.  ஏன் என்றால் உடனே அதற்குரிய பச்சிலையை தேடிச் சென்று கடித்து தின்றுவிட்டு, தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளும். யோகாசனத்தில் சவாசனம் என்பார்களே அதுபோல எந்த அசைவும் இல்லாமல் சில மணி நேரம் கிடக்கும். நாம் பார்த்தால் கூட அது செத்து விட்டதோ என்று தான் தோன்றும். அருகில் சென்று பார்த்தால்தான் அதன் உடல் அசைவு தெரியும். ஏன் அது அப்படி கிடக்கிறது என்றால், பாம்பின் விஷம் தலைக்கு ஏறி மூளையில் கலந்து விட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.  எனவேதான் அறிவுள்ள அந்த நாய்கள் சவாசனம்போல படுத்துக்கொள்கின்றன. அப்படி படுத்துக்கொள்ளும்போது, ரத்தம் இயற்கையாகவே சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விஷம் சிறுநீராக வெளியேறும். சிறுநீர் வெளியேறியதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அது தொடர்ந்து தனது காவல் பணியை செய்யும்...

காடுகளும் நாமும்

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
–  வள்ளுவர்
காட்டின் உருவாக்கத்திலும் அதன் உயிர்ப்பிலும் விலங்குகளின் பங்கு மகத்தானது, அவை உருவாக்கும் காட்டை மனிதர்களால் உருவாக்க முடியாது; ஆனால் காப்பாற்ற முடியும்.
காடுகள் இல்லையேல் மனித குலம் இல்லை. காட்டுயிர்களைக் காத்தால் தான் காடுகளை காப்பாற்ற வேண்டும். அதன் மூலம் தான் நமது வாழ்க்கையும் காப்பாற்றப்படும்.
பொதுவாக, காட்டுயிர்கள் மனித தலையீடு இன்றியே வாழ்ந்து பழகியவை. காட்டுயிர்களின் வாழ்வியலை மனிதர்களின் தலையீடு மற்றும் வாகனங்களின் ஓய்வற்ற ஹாரன் சத்தங்கள் கடினமாக பாதிக்கின்றன. கட்டுபாடற்ற வாகனப் போக்குவரத்துகளால் வெளியேறும் புகையும் அதீதக்காற்று மாசுப்பாட்டையும் ஏற்படுத்துகிறது.
காடுகளில் வாழும் விலங்குகள் உணவிற்காகவும் தண்ணீருக்காகவும் நாள்தோறும் வெகுதூரம் அலைகின்றன. பல லட்சம் ஆண்டுகளாக அவைகளுக்கு சொந்தமாக இருந்த காடுகளில் அண்மைக்காலமாக மனிதர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. நமது செயற்பாடுகள் அனைத்தையும் வளர்ச்சிப்பணிகளும்  காட்டுயிர்களை பாதிக்கின்றன. அதிலும் குறிப்பாக சாலைகளும், ரயில்பாதைகளும் ஏற்படுத்தும் பாதிப்பு வன்மம் நிறைந்தது. சாலைகள் கானகத்தை ரெண்டாக பிரித்துவிடுகின்றன. இடைவிடாத வாகன ஓட்டத்தில் துண்டிக்கப்படுகிறது. உணவிற்கும் தண்ணீருக்கும் சாலையைக் கடக்கும் விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு பரிதாபமாக செத்துபோகும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சாலையை கடக்க யானைகள் படும் அலைகழிப்பை நாள்தோறும் பார்க்கலாம். அவைகளை துன்பப்படுத்துகிறோம் என்கிற உணர்வு இல்லாமல் அவற்றைப்பார்த்து குதூகலமடைகின்றனர் சுற்றுலா செல்வோர். வாகனங்களை நிறுத்தி கூச்சலிடுவது, மதுபாட்டில்களை வீசுவது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களை எவ்வித குற்ற உணர்வில்லாமல் செய்கிறோம். ஏதாவது ஒரு யானை எரிச்சலடைந்து தாக்கிவிட்டால் யானைகள் அட்டகாசம் செய்வதாய் செய்தியை பரப்பிவிடுகிறோம்.
கோடைக்காலம் இன்னும் கொடுமையானது. தாகமுற்ற விலங்குகள் காட்டின் ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்குமா தண்ணீரைத் தேடிப் போகும். நீர்நிலைகளுக்கு செல்லும் பாதையில் குறுக்கிடும் சாலைகளில் தொடரும் இடைவிடாத வாகன ஓட்டம் அந்த விலங்குகளைத் தவிக்கவைக்கிறது. தாக மிகுதியாள் ஓடும் விலங்குகள் தண்ணீர் குடிக்க முடியாமல் பரிதாபமாய் திரும்பிவிடுகின்றன.
இப்புவியில் படைக்கப்பட்ட அனைத்தும் சங்கிலி போன்ற ஒன்றை ஒன்று சார்ந்தே படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள காடுகள் வெவ்வேறு தகவமைப்பில் உள்ளது. புலி வாழக்கூடிய காடுகளில் யானை இருக்கும். யானைக்கு அதிக உணவு தேவை. ஒரு நாளைக்கு 250 கிலோ தாவரங்களும், நல்ல குடிநீர் வசதியும் தேவை. அப்படி என்றால் அந்த காட்டில் எவ்வளவு தாவரங்கள், நீர்நிலைகள் இருக்க வேண்டும். குறிப்பாக, மூங்கில், முட்செடிகளில் வளரும் காய்கள், புற்கள் என்பவை மிக முக்கியம் யானைகளுக்கு. மேலும் இத்தகைய தாவர வளம் உள்ள காடுகளில் தான் மான் வாழும். காரணம் புல் என்ற மிக முக்கிய உணவும் தண்ணீரும் தான். யானைகள் இவ்வகை காடுகளில் உட்புகுந்து உண்ணும் போது காட்டில் சிறு சிறு இடைவெளி உருவாகும். அந்த இடைவெளிகள் மானுக்கு மேயும் இடமாகவும் இறை தேட வசதியாகவும் இருக்கும். இக்காடுகளில் புலியும் வசிக்கும். காரணம், இரை. இவ்வகையில் புலி, யானை, மான், தாவரங்கள், நீர்நிலைகள் நெருங்கிய சங்கிலியால் பினைக்கப்படுள்ளன.
எனவே, காடுகளையும், காட்டுயிர்களையும் காக்க வேண்டியது நம் கடமை. ஏனெனில், காடுகள் என்பது மரங்கள் மட்டுமல்ல. நுண்ணுயிரிலிருந்து யானை வரையிலான பல்வேறு தாவர, விலங்குகளால் பின்னி பிணைந்த உயிர்ச்சூழல் தொகுப்பு.
விலங்குகள் மீது இரக்கப்பட்டு ஜீவகாருண்யம் கருதி இக்கோரிக்கை எழவில்லை. இந்தியாவின் இயற்கை வரலாற்று ஆய்வின் முன்னோடியும் பறவையியல் நிபுணருமான டாக்டர் சலீம் அலி கூறியவாறு “நாம் இல்லாத உலகத்தில் பறவைகளும் விலங்குகளும் உயிர் வாழும். ஆனால், பறவைகளும் விலங்குகளும் இல்லாத உலகத்தில் நாம் ஒருபோதும் வாழ இயலாது” என்ற பேருண்மையை உணர்ந்தால்தான் இப்பிரச்சனையை புரிந்து கொள்ள முடியும்.
மரங்களை நம்மால் வளர்த்தெடுக்க முடியும். ஆனால் காடுகளை உருவாக்க முடியாது; காப்பாற்ற மட்டுமே முடியும். பொழுதுபோக்கிற்காக உயிரினங்களை கொன்று மகிழும் கொடியப்பழக்கம் இன்று இல்லை. ஆனால், இன்று நம் வாழ்வில் இயந்திரங்களும் வணிக நோக்கங்களும் வந்தபிறகு, பாரம்பரியம் தரும் பாடங்களை மறந்துவிட்டோம். நம் வாழ்க்கை முறை மூலம் சுற்றுசூழலை சீரழிப்பதில் போட்டியிடுகிறோம். இந்நிலை மாற இயற்கைச் சூழலைப் போற்றும் வாழ்க்கை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்

விசித்திர விலங்குகள்

வில‌ங்குக‌ள் ப‌ற்‌றி பல ‌விஷய‌ங்களை‌ப் படி‌த்‌திரு‌ப்போ‌ம், கே‌ள்‌வி‌ப்ப‌‌ட்டிரு‌ப்போ‌ம். இ‌ங்கே ‌வில‌ங்குக‌ள் ப‌ற்‌றிய ‌சில ‌வி‌சி‌த்‌திர‌ தகவ‌ல்களை பா‌ர்‌ப்போ‌ம். 

சிறு‌த்தையா‌ல் ‌சி‌ங்க‌த்தை‌ப் போ‌ல் க‌ர்‌ஜி‌க்க முடியாது. பூனையை‌ப் போல ‌மியா‌வ் எ‌ன்ற ஓசையை‌த்தா‌ன் எழு‌ப்பு‌ம்.

ஓ‌ர் ஒ‌ட்டக‌த்தை ‌விடவு‌ம் அ‌திக நா‌ட்களு‌க்கு‌த் த‌ண்‌ணீ‌ரி‌ன்‌றி எ‌லியா‌ல் தா‌க்கு‌ப் ‌பிடி‌க்க முடியு‌ம்.

ஒ‌ட்டக‌ப் பறவை எ‌ன்று நெரு‌ப்பு‌க் கோ‌ழி அழை‌க்க‌ப்படு‌கிறது. இது ஒ‌ட்டக‌த்தை‌ப் போல பல நா‌ட்க‌ள் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்காமலேயே வாழ‌க் கூடியது எ‌ன்பதா‌‌ல் அத‌ற்கு இ‌ந்த பெய‌ர்.

ர‌ங்கொ‌த்‌தியா‌ல் ஒரு நொடி‌க்கு 20 முறை மர‌த்தை‌க் கொ‌த்‌தி‌த் த‌ள்ள முடியு‌ம்.

காக‌ம் ஒரு ம‌ணி‌க்கு 45 மை‌ல்க‌ள் வேக‌த்‌தி‌ல் பற‌க்கு‌ம்.

ஒரு சாதாரண பசு அத‌ன் வா‌ழ்நா‌ளி‌ல் 2 ல‌ட்ச‌ம் குவளை பா‌ல் கொடு‌க்கு‌ம்.

உல‌கிலேயே ‌மிக‌ச் ‌சி‌றிய பாலூ‌ட்டி, தா‌ய்லா‌ந்‌தி‌ல் காண‌ப்படு‌ம் ப‌ப்‌ளி‌யீ எ‌ன்ற வ‌வ்வா‌ல் இனமாகு‌ம்.

டா‌ல்‌பி‌ன்க‌ள் ஒரு க‌ண்ணை‌ ம‌ட்டு‌ம் மூடி‌க் கொ‌ண்டு தூ‌ங்கு‌ம்.

நீல‌த் ‌தி‌மி‌ங்கல‌ம் எழு‌ப்பு‌ம் ஒரு ‌வித ‌வி‌சி‌ல் ஒ‌லி, ‌வில‌ங்குக‌ள் எ‌ழு‌ப்பு‌ம் ஒ‌லிக‌ளிலேயே ‌மிகவு‌ம் பலமானதாகு‌ம். அத‌ன் அளவு 188 டெ‌சிப‌ல்க‌ள்.

வே‌ட்டையாடுவது உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌கியமான ப‌ணிகளை பெ‌ண் ‌சி‌ங்கமே செ‌ய்‌கிறது. ஆ‌ண் ‌சி‌ங்‌க‌ம் பெரு‌ம்பாலு‌ம் ஓ‌ய்வெடு‌ப்பது‌ம், குழ‌ந்தைகளை கவ‌னி‌ப்பது‌ போ‌ன்ற ப‌ணிகளை ம‌ட்டுமே செ‌ய்யு‌ம். 

ஜெ‌ல்‌லி ‌மீ‌னி‌ல் 95 சத‌வீத‌ம் த‌ண்‌ணீ‌ர்தா‌ன் உ‌ள்ளது. 

பெ‌ன்கு‌யி‌ன்க‌‌ளி‌ல் ப‌ண் இன‌ம் மு‌ட்டை இடு‌ம் ப‌‌ணியை செ‌ய்‌கிறது. ஆ‌ண் இன‌ம்தா‌ன் அடை கா‌த்து கு‌ஞ்சு பொ‌ரி‌க்கு‌ம் ப‌ணியை மே‌ற்கொ‌ள்‌கிறது.

ம‌னிதனு‌க்கு அடு‌த்தபடியாக ‌சி‌ந்‌தி‌க்கு‌ம் ‌திற‌ன் உ‌ள்ள ‌பிரா‌ணி ‌சி‌ம்ப‌ன்‌ஸி குர‌ங்குதா‌ன்.

பிற‌ந்த யானை‌க் கு‌ட்டி 6 மாத‌ங்க‌ள் வரை வெறு‌ம் தா‌ய்‌ப்பாலை ம‌ட்டுமே குடி‌க்‌கிறது. யானை‌க்கு 4 ப‌ற்க‌ள் உ‌ள்ளன. இவை சுமா‌ர் நூறு தடவை ‌விழு‌ந்து முளை‌க்‌கி‌ன்றன. ‌‌

சனி, 18 மார்ச், 2017

Area 51 - மறைக்கப்பட்ட உண்மைகள்

"வாழுவோம்" என்ற சராசரி வரம்புக்குள் வாழ்ந்து பழக்கப்பட்ட எமக்கு நாட்களின் தலைப்புச்செய்திகளும் அன்றாட சம்பவங்களுமே விவாதப்பொருளாகின்றது. ஆனால் பரந்து விரிந்த இந்த பூமியில் அகண்ட வெளியில் மூழ்கிக்கிடக்கும் விசித்திரமான விநோதமான விடயங்கள் ஆச்சரியத்துக்குரியவை. கடவுள் என்ற வரையறையுள் மதநூல்களை மாத்திரம் கற்று சிற்றின்ப, பொருளின்ப அற்ப ஆயுளை  நிறைவு செய்யும் மனித மூளைகள் வரையறை கடந்த தேடல்களுக்கு மறுக்கின்றன. உண்மைகளையும் ஆச்சரியங்களையும் மெய்ஞானம், விஞ்ஞானம் கலந்து மெய்ப்பொருளை ஆராய நினைக்கும்போது எல்லாம் நிச்சயம் எம் சரீர ஆன்மாக்கள் ஒரு வித நடுக்கம் கொள்ளும்..!  வாருங்கள் பார்வைக்கோணங்களை மாற்ற உயரப்பறக்கலாம். கருடன் உங்கள் தேடலின் தோழன்.

அ. எல்றோய்

ஏரியா 51
அமெரிக்கவில் எந்த ஒரு சாதாரண மனிதனும் ஏன் ஓபாமாவுக்கோ, ட்ரம்புக்கோ போவதற்கு தகுதியற்ற இடம் என்று கூற முடியும் உட்போக  முடியாத ஒரு இடம் எனில் அது முக்கிய இடத்தை வகிக்கும் இடம் ஏரியா 51 தான்.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் ஆர்வம் உடையவர்கள் எவரும் நிச்சயமாக Area 51 பற்றி அறிந்திருக்காமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு, பறக்கும் தட்டுக்களுடனும் வேற்றுக்கிரகவாசிகளுடனும் நெருங்கிய தொடர்புடைய ஒன்றாக Area 51 காணப்படுகின்றது.

ஏரியா 51 என்பது வேற்றுகிரகவாசிகளை பரிசோதிக்கும் இடமாக உள்ளது. இது எப்போது ஒரு ரகசியமாகவே இருக்கிறது. "Independence Day" என்ற ஆங்கில படத்தில் கூட அந்த இடம் தெளிவாக காட்டி இருப்பார்கள். மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நெவேடாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இராணுவத்தளம் தான் இந்த ஏரியா 51. நெவேடாவின் மத்தியிலும் குரூம் ஏரியின்(Groom Lake) தென் கரைப் பகுதியிலும் அமைந்துள்ள இவ்விடம் பெரிய இரகசிய இராணுவ விமானத்தளம். இந்த இராணுவ தளத்தின் முதன்மை வேலையானது பரிசோதனை ரீதியிலான விமானங்களுக்கும் ஆயுத அமைப்புகளின் மேம்பாட்டிற்கும் சோதனைக்கும் உதவி புரிவதுதான்.


அமெரிக்க விமானப் படையின் பரந்த நெவேடா சோதனை மற்றும் பயிற்சி பரப்பெல்லைக்குள்ளேயே இத்தளம் இருக்கிறது. பரப்பெல்லையின் தளங்களை நெல்லிஸ் விமானத் தளத்தின் 99வது விமானத் தளப் பிரிவு நிர்வகித்து வருகிறது. எனினும் குரூம் தளமானது, அதன் அருகிலுள்ள 186 மைல் (300 km) மொஜாவெ பாலைவனத்தின்(Mojave desert) எட்வர்ட்ஸ் விமானத் தளப் பிரிவின் விமானப் படையின் பறக்கும் சோதனை மையத்தின் சேர்ப்பாகவே நிர்வகிக்கப்படுவதாகத் தெரிகிறது. அது விமானப் படை பறக்கும் சோதனை மையம் என்றே சொல்கிறார்கள்.

இவ்விடத்திலேயே அமெரிக்க எரிசக்தி துறை தனது 928 சோதனைகளில் 739 சோதனைகளை அங்கேயே நிகழ்த்தியது. யூக்கா மலை அணு கழிவு சேமிப்புக் கிடங்கு ஏறக்குறைய 40 miles (64 km) குரூம் ஏரியின் தென்மேற்கேயுள்ளது.

குரூம் லேக் மரபு ரீதியிலான விமானப் படைத்தளம் அல்ல, முன்னனி படை விமானங்கள் பொதுவாக அங்கு நிறுத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக புதிய விமானங்களைப் பயிற்றுவிக்க, சோதிக்க, மேம்படுத்தக் கூடிய காலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்க விமானப் படையாலோ அல்லது CIA போன்ற வேறு முகமையாலோ அங்கீகரிக்கப்பட்ட பின்பு அவை பொதுவாக சாதாரணமான விமானப் படைத்தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
குரூம் லேக் இரண்டாம் உலகப் போரில் குண்டுவீசவும் சுடும் பயிற்சிக்கும் பயன்படுத்தப்பட்டது, ஆனால் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை கைவிடப்பட்டுக் கிடந்தது.லாக்ஹீட் நிறுவனம், அவசரத் தேவைக்கான தளத்தை அவ்விடத்தில் ஏற்படுத்தியது, அப்போது அது சைட் இரண்டு அல்லது "த ராஞ்ச்" என அழைக்கப்பட்டது. அதில் சிறிய அளவிலான குடில்களும், பணிமனைகளும், இழுத்துச் செல்லக்கூடிய வீடுகளில் வசித்துவந்த சிறு குழுக்களும் இருந்தன. மூன்றே மாதங்களில் 5000 அடி நீள ஓடுதளம் அமைக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு ஜூலையில் பயன்பாட்டிற்கும் வந்தது தான் ஆச்சர்யம்.
இந்த தளத்தில் மொத்தம் ஏழு ஓடுபாதைகள் இருக்கின்றன.நிலத்துக் கீழே மிகப்பெரிய இரயில்சாலை அமைப்பு இருப்பதை அவர்கள் மறுத்தாலும் ஏரியா 51 இன் பல நடவடிக்கைகள் (இன்னும் நடந்துகொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது) நிலத்திற்குக் கீழேயே நடைபெறுவது வழக்கம்.

ஏரியா 51 சதிக் கோட்பாடுகளைப் பற்றிய நிகழ்வுகளைப் பற்றித் தெரியும் என்று பலர் குறிப்பிடுகிறார்கள். அமெரிக்க அரசாங்கம் வைத்திருந்த வேற்றுலக விண்கலத்திற்காக பணிபுரிய அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஏரியா 51 இன் S-4 இல் (பாப்பூஸ் ஏரியில் இருக்கும் ஒரு தளம்) அவர் பணிபுரிந்திருப்பதாக 1989 ஆம் ஆண்டில் பாப் லாசர் குறிப்பிட்டுள்ளார். அதே போல, 1996 ஆம் ஆண்டு புரூஸ் பர்கஸால் இயக்கப்பட்ட டிரீம்லாண்ட் என்ற ஆவணப்படத்தில், 71 வயதான இயந்திரப் பொறியாளர் ஒருவர் 1950-களில் ஏரியா 51 இல் பணியாளராக பணியாற்றினார் என்று குறிப்பிடும்படியான ஒரு நேர்காணல் இடம்பெற்றிருந்தது. விழுந்து நொறுங்கிய புவிக்கப்பாலான கலத்திலிருந்த ஒரு தட்டை அடிப்படையாகக் கொண்டு "செயற்கையாக பறக்கும் தட்டு உருவாக்குதலில்" அவர் வேலை செய்தார் மற்றும் அமெரிக்க வானூர்தி ஓட்டுநர்களைப் பயிற்றுவிப்பதற்காக அது பயன்படுத்தப்பட்டது என்பதும் அவர் குறிப்பிட்டவைகளில் அடங்கியது.

ஏரியா 51 இல் வேற்றுலக நோய்க்கிருமிகளை குளோனிங் செய்வதில் பணிபுரிந்ததாகவும் "J-ராட்" என்று வேற்றுலக ஜந்துவிற்கு பெயரிடப்பட்டது என்றும் 2004 ஆம் ஆண்டு டான் புருஸ்ச் (டான் கிரெய்னின் மறுபெயர்) குறிப்பிட்டுள்ளார். புருஸ்சின் கல்வியியல் சான்றாவணங்கள் மிகவும் விவாதத்திற்கு உட்பட்டதாயிற்று. ஏனெனில் அவர் 1989 ஆம் ஆண்டு லாஸ் வேகாஸில் பேரல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார், அதே நேரத்தில் அவர் Ph.D பட்டத்தையும் வாங்கினார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.


ஏரியா 51 பகுதியை புவிக்கப்பாலானவைகளுக்கான ஒரு புகலிடமாகத் தான் பிரபலமான கலாச்சாரங்கள் பெரும்பாலும் சித்தரிக்கின்றன. ஏரியா 51ஐ குறித்த ஏராளமான சதிக் கோட்பாடுகளின் காரணமாக பிரபலமான கலாச்சாரத்தில் குறிப்பாக அறிவியல் புதினம் போன்றவற்றில் அது அதிமுக்கியத்துவம் பெற்றது. பலவகையான படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அந்த இடத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் கற்பனை நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. பின்வருபவை அது போன்ற ஊடகத்தின் பட்டியலாகும்:

* 1947 ஆம் ஆண்டின் ரோஸ்வெல் UFO சம்பவத்திலிருந்து விழுந்து நொறுங்கிய தேடுதல் பணியில் இருக்கும் வாகனத்தை ஆய்வு செய்வதை 1996 ஆண்டு வெளிவந்த இண்டிபெண்டன்ஸ் டே என்ற ஆக்ஷன் திரைப்படம் காண்பிக்கிறது. திரைப்படத்தின் கதாநாயகர்கள் தளத்தின் விமானத்தளங்களில் இருந்துகொண்டு அவர்களுடைய இறுதித் தாக்குதலை நடத்தும்போது ராண்டி குவேய்டின் கதாப்பாத்திரமான ரசல் கேசி ஒரு சமயத்தில் நெவிடாவின் மாநில வரைபடத்தில் தளம் காண்பிக்கப்படவில்லை என்று கூறுவது, உண்மையை மறைமுகமாக வெளிக்காட்டும்.

* 1947 ஆம் ஆண்டு ரோஸ்வெல் சம்பவத்திலிருந்து மீட்கப்பட்ட வேற்றுலகத் தொழில்நுட்பத்தைக் கொண்டு காலப் பயணக் கருவியைப் பயன்படுத்தி, ஒரு மறைவான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் (NSA) நடவடிக்கை மூலம் அந்தத் தளம் நடத்தப்படுகிறது என்பது போல காண்பித்த, செவன் டேஸ் என்ற தொலைக்காட்சித் தொடர் பெரும்பாலும் ஏரியா 51 வளாகத்திலேயே படம்பிடிக்கப்பட்டிருந்தது.

* டாம் ரைடர் 3 என்ற படத்தில் வரும் லாரா கிராஃப்ட் எனும் பாத்திரம் ஏரியா 51 பற்றி வெளிப்படுத்தும். அந்தப் படத்தில் "தனிமம் 115 என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த கல்லை அவள் கண்டு பிடிக்கவேண்டும்."
* வீடியோ கேமான பெர்ஃபெக்ட் டார்கில் ஜோனா டார்க் ஏரியா 51 வழியாகச் செல்வார். அதில் இரகசிய ஏஜெண்டுகளைச் சந்தித்து, இறந்துவிட்டது என்று கருதப்படுகிற வேற்றுலக உயிரான "எல்விஸ்" என்பதின் பிரேதப்பரிசோதனைக் கூடத்தைக் கண்டுபிடித்து அதிலிருந்து வெற்றிகரமாக வெளிவருவதே அவளுடைய இலக்கு.

* இந்தியானா ஜோன்ஸ் அண்ட் த கிங்டம் ஆஃப் த கிரிஸ்டல் ஸ்கல் என்ற படத்தின் ஆரம்பத்தில், "ஹாங்கர் 51" என்பது அரசாங்க கிடங்காக காட்டப்படுகிறது, அதே நேரம் ரெய்டர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க் படத்தின் கடைசிப் பகுதியில் புனிதப் பேழை பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. அங்கு ரோஸ்வெல் வேற்றுலகவாசியை மீட்பதற்காக KGB ஏஜெண்டுகள் போகிறார்கள். கடைசியாக, படிகநிலை எலும்புக்கூட்டுடன் பலபரிமாண உருவங்களை வெளிக்காட்டுகிறார்கள். ரோஸ்வெல் மற்றும் ஏரியா 51க்கு இடையே இருக்கும் தொடர்புகளைக் குறித்த பிரபலமான நம்பிக்கைகளுக்கு ஒரு ஆதாரமாக 51 என்ற எண்ணை எழுத்தாளரான டேவிட் கூப் ஒப்புக்கொள்கிறார்.

* ஸ்டார்கேட் SG-1 என்ற தொலைக்காட்சித் தொடர்களில், பிற கிரகங்களிலிருந்து பூமிக்குக் கொண்டுவரப்பட்ட புவிக்கப்பாலான தொழில்நுட்பத்தைப் பத்திரப்படுத்தி வைக்கும் மற்றும் ஆராய்ச்சி செய்யும் தளமாக ஏரியா 51 பயன்படுத்தப்பட்டுள்ளது.

* NBC இல் ஒளிபரப்பான நைட் ரைடர்ஸ் என்ற தொடரின் மறுவுருவாக்கம் செய்யப்பட்ட தொடரின் நைட் டூ கிங்ஸ் பான் என்ற பகுதியில் மைக்கேல் நைட் KITTஐ மீட்பதற்காக ஏரியா 51 இல் இருக்கும் சேகரிப்புத் தளத்தின் வழியாகச் செல்வார். அதற்குப் பிறகு அது NSA ஏஜெண்டுகளால் எடுத்துச் செல்லப்பட்டுவிடும்.
* திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு உலகத்தில் உள்ள எல்லா அம்சங்களையும் சூழ்ச்சியுடன் கட்டுப்படுத்திக் கையாளும் த பாட்ரியட்ஸ் என்று அழைக்கப்படும் குழுவின் தலைமை இடங்களில் ஒன்றாக ஏரியா 51 மாறியிருப்பதைப் போல் மெட்டல் கியர் என்ற தொடர்களில் காண்பிக்கப்பட்டிருக்கும்.

* சூப்பர்மேன்: ரெட் சன் என்ற நகைச்சுவைப் படத்தில், J. எட்கர் ஹூவரின் ஆணையின் படி அபின் சரின் உடல் ஏரியா 51 இல் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். சோவியத் யூனியனைத் தோற்கடிப்பதற்கு ஆயுதங்களை உருவாக்குவதற்காக, தளத்திற்கு லெக்ஸ் லூதர் வருவதற்கு ஜான் F. கென்னடி அனுமதி கொடுப்பார்.

* ஆவணப்படத் தொடரான UFO ஹண்டர்ஸ், சீசன் டூ என்ற தொலைக்காட்சித் தொடர்களின் நிறைவுப் பகுதிக்காக 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏரியா 51 படம்பிடிக்கப்பட்டது. உயர் தெளிவுத்திறன் கொண்ட அந்நிகழ்ச்சி ஹிஸ்டரி சேனலில் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதியன்று ஒளிபரப்பப்பட்டது.
* ஏரியா 51 என்று அழைக்கப்பட்ட வீடியோ கேம், மிட்வே கேம்ஸினால் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

* இதனையடுத்து Area 51 என்பது வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டுக்கள்தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கென அமெரிக்க அரசினால்அமைக்கப்பட்ட அதியுயர் பாதுகாப்பும், இரகசியமும் மிகுந்த பிரதேசம் என பலதரப்பினரும் கருதத்தொடங்கியிருந்தனர். இவையெல்லாவற்றிற்கும் அப்பால்,வானிலைக் கட்டுப்பாடு, இரகசிய ஆயுதங்களின் உற்பத்தி, மற்றும் முன்னையகாலத்தினை நோக்கிப் பயணிப்பதற்கான தொழிநுட்பம் (Time Travel Technology)என்பவை தொடர்பிலான ஆய்வுகளும் Area 51 பகுதியில்மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பல்வேறு சர்ச்சைகள்தோற்றுவிக்கப்பட்டிருந்தன.
மேலும் இந்த லிங்கில் சென்று வேற்றுகிரகவாசிகளின் படங்கள் மற்றும் இந்த பூமியில் அவர்கள் வந்து போன தடயத்தை விட்டு சென்றுள்ளதையும் காணலாம்.

http://www.spicx.com/2011/04/aliens-photo-collection-250-images.html 



டிஸ்கி 1:  மேலே  லைசென்ஸ் மட்டுமே போலியான படம். மற்றது உண்மையானது.

டிஸ்கி 2:   மேற்கொண்டு யாரிடாவது மேலதிக தகவல் இருந்தால் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

இவ்வாறான பல சர்ச்சைகளின் முடிச்சுக்களைத் தன்னகத்தே வைத்திருந்த Area 51தொடர்பிலும், அதன் இரகசியத் தன்மை தொடர்பிலும் தற்போது முதல்முறையாக CIA யினர் உத்தியோகபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.இவ்விடயம் தொடர்பிலான தகவல்கள் வொஷிங்டனின் George Washingtonபல்கலைக்கழகத்திலுள்ள தேசிய பாதுகாப்பு ஆவணக்காப்பகத்திலிருந்து தற்போதுவெளியிடப்பட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டளவில் குறித்த விடயம் தொடர்பில் சிலஆவணங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அவற்றில் பல முக்கியமானவிடயங்கள் மறைக்கப்பட்டே குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டிருந்தன.இந்நிலையில் தற்போது Area 51 குறித்த முழுமையான ஆவணம்வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆவணங்கள் மூலம் தெரியவருவதாவது;

தொடர்ந்து படிக்க…..
ஏரியா 51- ஏலியன்ஸ்-மாயன்-மர்மங்கள்...!
மாயன்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்த்ததில், மொத்தமாக பதின்மூன்று கிறிஸ்டல் மண்டையோடுகள் இருக்க வேண்டும் என்ற குறிப்புகள் கிடைத்தன. பதின்மூன்று மண்டைகள் ஏன் என்பதற்கான விளக்கத்தையும் ஆராய்ந்தவர்கள் ஓரளவுக்குப் புரிந்துகொண்டனர். அந்தக் காரணம் என்ன என்று சொல்வதற்கு முன்னர், உங்களை வேறு ஒரு தளத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு நடந்த சம்பவங்களை விளக்கிவிட்டு, மீண்டும் மண்டையோட்டுக்கு வருகிறேன்.
எமது அறிவியலின் ஆராய்ச்சித் தன்மைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? ஒரு குறித்த அளவுக்கு மேல், பலவற்றை அதனால் ஆராய முடியாமல் போய் விடுகிறது. அவற்றிற்கான விளக்கத்தை அறிவியல் கொடுக்காத பட்சத்தில், மக்களே அதற்கான பல விளக்கங்களை, கட்டுக் கதைகளாகக் கட்டிவிடத் தொடங்கிவிடுவார்கள். இதனால் மிஞ்சுவது குழப்பம் மட்டும்தான். எனவே, பல விந்தைக்குரிய விசயங்கள் மக்களைச் சென்று அடைவதற்கு முன்னரே, அரசுகளால் மறைத்து வைக்கப்படுகின்றது.
இப்படி மறைத்து வைத்து, அவற்றைத் தொடர்ச்சியாக ஆராய்வதற்கென்றே, அமெரிக்காவில் ‘ஏரியா 51' (Area 51) என்ற ஒரு இடத்தை மிகப் பாதுகாப்பாக அமைத்து வைத்திருக்கிறார்கள்.
கீழே இருப்பது சாட்டிலைட் மூலமாக 'ஏரியா 51' இன் காட்சிப் படம். இந்த 'ஏரியா 51’ அமெரிக்காவில் உள்ள நிவாடாவில் (Nevada) அமைந்திருக்கிறது. குறிப்பாக ஏரியா 51 இல் பறக்கும் தட்டுகள் (Flying saucer), வேற்றுக் கிரகவாசிகள் (Alien) ஆகியவற்றை ஆராய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக, விண்வெளியில் இருந்து வந்த ஒரு பறக்கும் தட்டையும், விண்வெளி உயிரினம் ஒன்றையும் ஏரியா 51இல் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்னும் வதந்தி பலமாகவே இருக்கிறது. ஆனால் அங்கிருந்து இரகசியமாக கசிந்து வெளிவரும் தகவல்களும், படங்களும் அவை வதந்திதானா என்றே எம்மைச் சந்தேகப்பட வைக்கிறது.
ஏரியா 51 இல் எடுத்த இந்தப் படத்தில் வட்டமாக இருப்பது ஏதோ கட்டடம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள். அதை நன்றாகப் பாருங்கள். அது பறக்கும் தட்டு போல இருக்கிறதா? இந்தப் படம் மட்டுமில்லை, 'அலன் லூயிஸ்' (Alen Lewis) என்பரால் வெளிக்கொண்டு வரப்பட்ட இன்னுமொரு படமும், எம்மை அதிர வைக்கும் தன்மையை உடையது.
தன்னுடைய அப்பா ஏரியா 51இல் வேலை செய்ததை அறியாத ஒரு மகன் அவர் இறந்ததும் கண்டெடுத்த படத்துடன் அவர் கொடுத்த குறிப்பு இது.
"Recently, my father passed away and while i always thought that he worked in the BLACK OPS ARENA i never thought that he had anything to do with aliens certainly, he never mentioned it. While cleaning out his house, i ran across the attached photo, if you look in the bottom right hand corned of the container there is an AREA 51 badge..."
இந்தப் படத்தை எப்படி எடுப்பது? இது பற்றி என்ன சொல்வது?
இவற்றையெல்லாம் நம்புவதோ அல்லது வதந்தி என ஒதுக்குவதோ எங்கள் பிரச்சினை என்றாலும், இது உண்மையாக இருந்தால் என்னும் கேள்வி, காட்டமான விளைவையே உருவாக்கக் கூடியது. இந்த ஏரியா 51 ஐ, 'இன்டிபென்டன்ஸ் டே' (Independence Day) என்னும் 'வில் ஸ்மித்' (Will Smith) நடித்த படத்தில் விபரமாகவே காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் அடிப்படைக் கருவே நான் மேலே சொன்னதுதான்.
இங்கு நான் ஏலியன்கள் எம்முடைய பூமிக்கு வந்திருக்கிறார்களா என்று ஏன் ஆராய வேண்டும்? ஏரியா 51 போன்றவற்றையெல்லாம் ஏன் மாயாவை ஆராயும் இடத்தில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். சரியாக யோசித்தால், மாயன்களின் அனைத்து நடவடிக்கைகளும், ஏதோ ஒரு விதத்தில் விண்ணையும், விண்வெளியின் வேற்றுக் கிரகவாசிகளையும் நோக்கியதாகவே அமைகின்றன. அவற்றிற்கெல்லாம் உச்சக்கட்டமாய் அமைந்த கிறிஸ்டல் மண்டையோடு கூட, மாயன்களுக்கு ஏலியன்கள் மூலம்தான் கிடைக்கப்பெற்றிருக்கின்றன என்ற முடிவுக்குத்தான் கொண்டு செல்கிறது. விண்ணிலிருந்து ஏலியன்கள் வந்ததற்கு சாட்சியாக 'ஏரியா 51' உள்ள படம் இருக்கலாம் என்றாலும், அது மட்டுமே சாட்சியாக இருந்துவிட முடியாது. ஆகவே இதை மேலும் ஆராய்ந்து பார்க்கலாம்.
இப்பொழுது நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும், மாயாவுக்கும் எந்தவிதமான சம்பந்தம் இல்லை என்று நினைத்தாலும், சம்பந்தம் உண்டு என இப்போது பல ஆராய்ச்சியாளர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சந்திரனை ஆராயச் சென்ற அப்போலோ விண்கலத்தின் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த இந்தப் படத்தை முதலில் பாருங்கள்.
இதில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா.....….?
கொஞ்சம் பெரிதாக்கிய இந்தப் படத்தைப் பாருங்கள். இப்போது ஏதாவது தெரிகிறதா….?
மண்டையொடு தெரிகிறதல்லவா? ஆம், அது மண்டையோடேதான். மனிதனே வாழ முடியாத சூழ்நிலை இருக்கும் சந்திரனில். இதில் ஆசரியம் என்னவென்றால் அது ஒரு கிறிஸ்டல் மண்டையோடு. இது எப்படிச் சாத்தியம்? யாரால் இதற்குப் பதில் சொல்ல முடியும்?
அந்த மண்டை ஓட்டை அப்போலோ விண்கலத்தில் சென்றவர்கள், கூடவே எடுத்தும் வந்திருக்கிறார்கள். அது இப்போ ஏரியா 51 இல் இருக்கிறது. இப்படி ஒரு மண்டையோடு சந்திரனில் எடுக்கப்பட்டதாக மக்களுக்குச் சொல்லப்படவேயில்லை. காரணம், பதிலே சொல்ல முடியாத மர்மமாக அது இருப்பதால். இப்படி ஒரு மண்டையோடு ஒன்று சந்திரனில் இருந்தது என்று உலக மக்கள் தெரிந்து கொண்டால், இதுவரை மக்கள் நம்பிய அனைத்து நம்பிக்கைகளும், மதக் கோட்பாடுகளும் அடிபட்டுப் போய்விடும். அதனால் உலகின் சமநிலையே குலைந்து விடும் சூழ்நிலை உருவாகும். இது போன்ற காரனங்களினால், அதை மறைத்து விட்டனர். அப்படி மறைக்கப்பட்டவை உலகில் பல உண்டு.
உலகின் சமநிலை குலைந்து விடக் கூடாது என்பது மட்டுமில்லை மறைக்கப் பட்டதற்குக் காரணம். விஞ்ஞான வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்படும் எதையும், இதுவரை மதங்களின் உச்சக் கட்டமைப்புகள் எதிர்த்தே வந்திருக்கின்றன. காரணம், மதங்களின் வேதப் புத்தகங்களில் சொல்லப்பட்டவைக்கு மாற்றாக அவை அமைந்திருப்பதுதான்.
உலகில் உள்ள பல அரசுகள் மதங்களின் கட்டுப்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்றும் இருக்கின்றன.
சந்திரனில் மண்டை ஓடு இருப்பதற்கான சாத்தியங்கள் என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் வந்து சேர்ந்தது அடுத்த ஒரு படம். செவ்வாய்க் கிரகத்தைச் (Mars) சுற்றி அமெரிக்கா அனுப்பிய விண்கலம் எடுத்த படங்களில், வித்தியாசமான உருவங்கள் காணப்பட்டன. அந்தப் படங்களில் மனிதத் தலை போன்ற பெரிதாக அமைப்புகள் காணப்படுகின்றன.
அது மட்டுமல்ல, மண்டை ஓடுகள் போன்றவைகளும் நிலத்தில் காணப்படுகின்றன. செவ்வாய் கிரகத்தின் மனிதத் தலை வடிவில் இருக்கும் இது என்ன?
இந்தப் படம் அந்தச் சமயத்திலேயே வெளி வந்திருந்தது. ஆனால் பலர் அதை ஒரு தற்செயல் நிகழ்வெனப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது இணைய வலையமைப்பின் மூலம் உலகமே ஒன்றாக இணைந்துவிட்ட நிலையில், பல இரகசியங்களை சம்பந்தப்பட்டவர்கள் கசிய விடத் தொடங்கிவிட்டனர். அதனால் கிடைக்கும் தகவல்கள் மூலம் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இப்போது நம்மால் பார்க்க முடிகிறது.
செவ்வாயில் மனித முகம், சந்திரனில் மனித மண்டை ஓடு, மாயாவில் கிறிஸ்டல் மண்டை ஓடுகள். இவற்றை இப்போது இணைத்துப் பார்க்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதனால் அவர்கள் சில முடிவுகளுக்கு வந்தனர். அவர்கள் வந்த முடிவுகள்தான் இவை.......!
'பால் வெளி மண்டலம்' எனச் சொல்லப்படும் 'மில்க்கி வேயில்' (Milky Way) அதியுயர் தொழில் நுட்ப அறிவுடன், மனித வடிவில் வேற்றுக் கிரகவாசிகள் வாழ்கின்றனர். அவர்கள் செவ்வாயில் தங்கள் தளங்களை அமைத்து பூமியை ஆராய்ந்து வந்திருக்கின்றனர். செவ்வாயில் ஏற்பட்ட விண்கல் தாக்குதலினால் அங்கிருந்து கிளம்பி தற்காலிகமாக சந்திரனில் தங்கியிருந்திருக்கின்றனர். இதனால்தான் செவ்வாயிலும், சந்திரனிலும் மண்டை ஓட்டு வடிவங்கள் கிடைக்கச் சாத்தியங்கள் இருந்தன. இந்தச் சமயங்களிலேயே விண்வெளி மனிதர்கள் பூமிக்கு வந்து வந்து போயிருக்கிறார்கள். அவர்கள் வந்து போன இடங்களில் ஒன்றுதான் மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த இடம். இவர்களே மாயன்களுக்கு கணிதம், வாணியல், கட்டடக் கலை, விவசாயம், வரைகலை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் நான் கடந்த பதிவில் சொல்லியிருந்த 'இண்டியானா ஜோன்ஸ்' படம் எடுத்திருக்கிறார்கள்.
‘இண்டியானா ஜோன்ஸ்’ திரைப் படத்திற்கு ஜனரஞ்சகம் தேவை என, திரைப்பட உத்திக்காக மிகைப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும், அதன் அடிப்படைக் கரு என்பது தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் பலரது முடிவுகளாகவே இருக்கின்றது. இப்படி முடிவுகளை மற்றவர்கள் போல ஆராய்ச்சியாளர்கள் எழுந்தமானமாக எடுத்துவிட முடியாது. அப்படி எடுத்தால், ஏன் எடுத்தார்கள் என்பதற்கான காரணங்களையும் அவர்கள் சொல்ல வேண்டும்.
இந்த முடிவை அவர்கள் எடுத்ததற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போனார்கள். அதில் முதன்மையாக அவர்கள் வைத்த ஆதாரம்தான் 'நாஸ்கா லைன்ஸ்' (Nazca Lines).
நாஸ்கா கோடுகள் என்பவை பற்றி நீங்கள் அறிந்தால், இப்படியும் உலகத்தில் இருக்கிறதா? என்று ஆச்சரியப்படுவீர்கள். தமிழர்கள் பலர் அறியாத ஒன்று அது.
அது என்ன நாஸ்கா லைன்ஸ்? அதை அடுத்த பதிவில் பார்ப்போமா.....!
Note:
வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுடன் (UFO) பூமிக்கு வந்து சென்றதுபற்றியும், பலர் அவற்றை நேரில் கண்டது பற்றியுமான கதைகள் உலகம்முழுவதும் இலட்சக்கணக்கில் இருக்கின்றன். ஏலியன்களைக் கண்டதுமட்டுமல்லாமல் ஏலியன்கள், அவர்களது பறக்கும் தட்டுக்கு தங்களைஅழைத்துச் சென்று பல பரிசோதனைகள் செய்ததாகவும், தங்கள் உடம்பில்எதையோ செலுத்திவிட்டு அனுப்பியதாகவும் பலர் கதை கதையாகச்சொல்லியிருக்கிறார்கள். இவற்றுகெல்லாம் ஆதாரங்களாகப்புகைப்படங்களும், காணொளிகளும் நிறைந்து போய் இருக்கின்றன.இணையத்தளத்தில் இது பற்றி நீங்கள் தேடினீர்களேயானால் தகவல்கள்நீர்வீழ்ச்சி போலக் கொட்டும். ஆனால் இவையனைத்தையும் ஏதோ ஒருவிதத்தில் போலி என்றே நாஸா போன்றவை மறுத்து வந்தன. படங்களும்,காணொளிகளும் கணினிகளாலும், புகைப்பட உத்திகளாலும் உருமாற்றப்பட்டுநம்மை ஏமாற்றுவதற்கு உருவாக்கப்படுகின்றன என்றே அவர்கள்சொல்கிறார்கள். இதில் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சொன்னதுபோல போலியான படங்களும், காணொளிகளும் இருப்பது என்னவோஉண்மைதான். போலிகளை ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து, அவற்றைப்போலிகள் என்று வரிசையாக நிரூபித்து வந்தபோது, உண்மையாகவும்இருக்கலாம் என்று சொல்லக் கூடியவையும் அந்த அமளியினுள் அமுங்கிப்போய்விடுகின்றன. மொத்தத்தில், 'ஆவிகளுடன் பேசுகிறோம்' என்றுசொல்பவர்களை, அதை நம்பாதவர்கள் எப்படிப் பார்க்கிறார்களோ, அந்தநிலையில் இந்த ஏலியன், பறக்கும் தட்டு விசயங்களும் பார்க்கப்படுகின்றன.ஏலியன்கள் பற்றியோ, பறக்கும் தட்டுகள் பற்றியோ பேச ஆரம்பித்தாலே, "இதோ கதை விடுகிறான் பாருங்கள்" என்னும் ஏளனப் பார்வைவந்துவிடுகிறது. ஆனாலும் எல்லாவற்றையும் அப்படித் தட்டிக் கழித்துவிட்டுப்போக முடியாது. நம்பியே தீர வேண்டிய சம்பவங்களுடனும், அவற்றுக்கானஆதாரங்களுடனும் ஏலியன்கள் வந்தது உண்மைதான் என அடித்துச்சொல்லும் நிலையும் இருக்கத்தான் செய்கிறது. இவற்றை விளக்கிப் பலபுத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் இங்குநான் சொல்ல ஆரம்பித்தால், இந்தத் தொடர் நீண்டுகொண்டே போய்விடும்.அத்துடன் இந்த விசயத்தில் பொறுப்புணர்வுடன் தகவல்களை நான்உங்களுக்குத் தரவேண்டும்.இந்த ஒரேயொரு காரணத்தினாலேயே மிகுந்த கவனத்துடன் நான்ஆதாரங்களைத் தேடி உங்களுக்குத் தரவிரும்புகிறேன். மிகவும்நம்பிக்கையான, திட்டவட்டமான அறிவியல் காரணங்கள் இருந்தால் மட்டுமேஅவற்றை உங்களுக்கு தரவிரும்புகிறேன். நான் தரும் தகவல்களில் கூடதரவுகள் முழுமையாக இருந்தாலும், அவற்றையும் எதிர்க்கும் எதிர்ப்புக்குரல்கள் இல்லாமலும் இல்லை. அதனால் நான் தரும் சம்பவங்களையும்,தகவல்களையும் கூட நீங்கள் முழுமையாக நம்பிவிடாமல், சந்தேகப்பட்டியலில் வைத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.