திங்கள், 29 பிப்ரவரி, 2016

பேர்முடா முக்கோண வலயம் – தீர்க்கப்படாத மர்மம்!

துரித கதியில் நகர்ந்துகொண்டிருக்கும் உலகில், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்திய வண்ணம் அனைத்து உயிரினங்களுக்கும் மேலான உண்ணதமான உரினினம் என்ற இறுமாப்புடன் நாம் அனைவரும் நகர்ந்துகொண்டிருக்கின்றோம்.
எவ்வளவு தான் அறிவு மேம்பட்டாலும்; இன்னமும் பல மர்மங்கள் எமது அறிவியலுக்கு ” நீ ஒரு முட்டாள்” என்ற ரீதியில் சவால் விட்டபடிதான் உள்ளது. ஏலியன்ஸ், கருந்துளைகள், பேய்கள், பேர்முடா முக்கோணவலையம் உள்ளடங்களாக ஒரு மர்ம பட்டியலே நீண்டு செல்கிறது…
பேர்முடா முக்கோண வலையம் பற்றி பெரிதாக அறிமுகம் செய்யவேண்டியதில்லை. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பேர்முடா பற்றி தெரிந்துவைத்திருக்கின்றோம். (தெரிந்தவர்கள் தான் இந்த பதிவை தேடி வந்தும் இருப்பீர்கள்!) எனினும், புதியவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகத்தைப்பார்க்கலாம்.
பேர்முடா முக்கோணம்…
அமெரிக்காவின் ஃப்லோரிடா மாணிலத்திற்கு அருகில் பசுபிக் சமுத்திரத்தில்; ஃப்லோரிடா, சன்யுவான் பியூட்ரோறிகா மற்றும் பேர்முடா பகுதிகளை இணைக்கும் போது வரும் முக்கோணப்பகுதியே பேர்முடா முக்கோணம் எனப்படுகிறது.
அதிகமான மர்ம நிகழ்வுகள் பேர்முடா தீவை ஒட்டி நகர்வதால் பேர்முடா முக்கோணம் என இவ் வலையம் அறியப்படுகிறது.
( பேர்முடா தீவு, 1505 ஆண்டில் Juan de Bermúdez எனும் ஸ்பானிய தலைமை கப்பலோட்டியால் கண்டறியப்பட்டது. 1707 இல் பிரித்தானிய நாடு கடந்த ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.)
இனி…
பேர்முடா முக்கோண வலைய பகுதியின் மர்மத்திற்கான பின்னனியை பார்க்க முதல், பேர்முடா பகுதியில் இடம்பெற்ற பிரபல மர்ம சம்பவங்களை பார்க்கலாம்…
1945 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி…
ஃப்லோரிடாவில் உள்ள LAUDERDALE எனும் இராணுவ விமான தளத்தில் இருந்து சாள்ஸ் கரொல் ரெய்லர் எனும் அனுபவ விமானியுடன் புதிதாக இணைந்துகொண்ட 14 விமானிகளும் பயிற்சிக்காக ஃப்லைட் 19 எனும் விமானத்தில் புறப்பட்டார்கள். விமான பயிற்சியின் போது விமானி எப்போதுமே தரை கட்டுப்பாட்டகத்துடன் தொடர்பில் இருப்பது வழமை. அன்றும் அது போலவே நடந்தது, ஆனால்…
பிற்பகல் 3.15 மணியளவில் கரொல் ரெய்லர் விமான கட்டுப்பாட்டகத்தை பதட்டத்துடன் தொடர்புகொண்டார்…
ரெய்லர் : எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை, எமது கருவிகல் வழமைக்கு மாறாக செயற்படுகின்றன…
கட்டுப்பாட்டகம் : நீங்கள் இப்போது எங்கே உள்ளீர்கள்?
ரெய்லர் : என்னால் இடத்தை கூறமுடியாதுள்ளது. நாம் எங்கிருக்கிறோம் என எமக்குதெரியவில்லை.
கட்டுப்பாட்டகம் விமானத்தின் இருப்பிடத்தை ஊகித்துக்கொண்டு மேற்குத்திசையில் திருப்புமாறு பணித்தது.
ரெய்லர் : எம்மால் மேற்குத்திசையை இனங்காண முடியவில்லை. இங்கு எல்லாமே விசித்திரமாக உள்ளது. கடலின் நிறம் வெண்மைப்படுகிறது!
தொடர்பு துண்டிக்கப்பட்டது…
பிற்பகல் 3.30….
“நாம் எங்கிருக்கிறோம் என தெரியவில்லை… எமது கருவிகல் அனைத்தும் செயல் இழந்துவிட்டன. திசையை அறியமுடியவில்லை. இப்போது வெள்ளை நீரினுள் சென்றுகொண்டிருகிறோம்…” ரெய்லரிடம் இருந்து வந்த இறுதி செய்தி!
ஃப்லைட் 19 திசை மாறுவதாக அறிந்த கட்டுப்பாட்டகம், அவர்களை மீட்க மார்டின் மரினர் எனும் விமானத்தை அனுப்பிவைத்தது. அவ் விமானி “சுமார் 6000 அடி உயரத்தில் பலத்த காற்று வீசுகிறது” என அறிவித்தார். சற்று நேரத்தில் அவ் விமானமும் ரேடர் கருவிகளை விட்டு அகன்றது.
இரவு 7 மணி…
கட்டுப்பாட்டகத்திற்கு FT… FT… எனும் தெளிவற்ற சமிக்ஞை கிடைத்தது… அது காணாமல் போன ஃப்லைட் 19 இன் இரகசிய குறியீடாகும்….
அவ் விமானத்திற்கு என்ன நடந்தது?
என்ன நடந்திருக்கலாம்?
இன்றுவரை அவ் விமானம் பற்றி தகவல்கள் இல்லையா?
இந்த நேர வித்தியாசத்தை ஆராயும் போது சில முடிவுகளை தர்க்க ரீதியாக எடுக்க முடிகிறது.
அதாவது,
வேற்றுக்கிரக வாசிகள் அந்த விமானத்தை “கடத்தி சென்றிருப்பார்கள்” என நாம் கூறமுடியாது. காரணம், இதுவரை பறக்கும் தட்டுக்கள் பற்றி அறியப்பட்டவரை அவை மிக அதிவேகமாக பயணிக்க கூடியவை. அவர்களின் கடத்தலாக இருந்தால் சில நிமிடங்களிலேயே புவியின் ஈர்ப்பு எல்லையை தாண்டி இருப்பார்கள். தாண்டி மூன்றரை மணி நேரத்திற்கு பின்னர் இந்த இருந்தால் சமிக்ஞை கேட்க வாய்ப்பில்லை.
ஒரு வேளை, அவர்கள் பூமியிலேயே அந்த விமானத்தை சிறைப்பிடித்திருந்தால் சாத்தியம். பூமியில் எங்கே சிறைப்பிடிப்பது? அந்த சமிக்ஞைகள் சமுத்திரத்தில் இருந்து தான் வந்தது. அப்படியானால் கடலின் அடியில் ஏதாவது ஏலியன்ஸின் ஆராய்வு கூடம் இருக்கலாமா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
அப்படி இருக்குமாயின், அதற்கு வந்து போகும் ஏலியன்ஸ்கள் பறக்கும் தட்டு மூலம் வரும் போது எமது செய்மதிகளின் உணர் எல்லைக்குள் அகப்படாதது எப்படி? போன்ற தர்க்கவியல் கேள்விகள் நிற்கின்றன. அதற்கும் ஒரு விடை சொல்ல முடியும். ஆனால் இங்கு அதைப்போட்டு குழப்பிக்கொள்ள விரும்பவில்லை.
மேலும், கடலின் அடிமட்டத்தில் தளம் இருக்குமாயின் மனிதர்களை/புவி உயிரினங்களை அந்தளவு ஆழத்திற்கு கொண்டு செல்வதால் அமுக்கம் காரணமாக உயிரிழப்பு நேர்ந்துவிடும்! பின்னர், என்ன ஆராய்ச்சி செய்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அதேவேளை அவர்களின் தொழில் நுட்பத்தில் அமுக்கத்தை தவிர்க்கக்கூடிய திட்டங்களும் இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.
வழமைபோல் விடை தெரியவில்லை என்றதும் ஏலியன்ஸ்-வேற்றுக்கிரகவாசிகளை சாட்டும் காரணத்தை மேலே பார்த்தோம். வேறு விதமாக சிந்தித்தால்…
பசுபிக் சமுத்திரத்தில் அடிக்கடி கடல் சூறாவளி வருவதுண்டு. (இதற்கு வேறு தனிப்பெயர் இருப்பதாக நினைவு. தெரிந்தவர்கள் கூறவும்.) தன் போது கடல் மட்டத்தில் இருந்து வானுயர வெள்ளை நிறத்தில் கடல் நீர் மேல்னோக்கி செல்லும். (மீன் மழைக்கு இது தான் காரணமாக சொல்லப்படுகிறது.)
//“நாம் எங்கிருக்கிறோம் என தெரியவில்லை… எமது கருவிகல் அனைத்தும் செயல் இழந்துவிட்டன. திசையை அறியமுடியவில்லை. இப்போது வெள்ளை நீரினுள் சென்றுகொண்டிருகிறோம்…” ரெய்லரிடம் இருந்து வந்த செய்தி!//
இவரின் கூற்றையும் கடல்சூறாவளியின் தன்மையையும் பார்க்கும் போது, டெய்லர் கடல் சூறாவளியில் மாட்டுப்பட்டிருக்கலாம்!
எனினும், ஒரு அனுபவ விமானிக்கு கடல் சூறாவளி பற்றி தெரிந்திருக்காதா? என எண்ணத்தோன்றுகிறது.
மற்றும், அவரைத்தேடிச் சென்ற விமானத்திற்கும் என்னாச்சு என்று இதுவரை தெரியவில்லை.
இந்த விமான மறைவு தொடர்பாக எனக்கு தோன்றியவற்றை மேலே பார்த்தோம்.
இது தொடர்பாக இறுதியாக ஆராச்சியாளர்கள் என்ன முடிவு சொன்னார்கள் என்பதை பார்ப்போம்…
1991-2 ஆம் ஆண்டுவரை இந்த விமானங்களின் தேடல் நடைபெற்றது…
அவர்களின் அனுமான கூற்றுக்களில்…
  • டெய்லர் விமானத்தை தவறாக வேறு இடத்திற்கு செலுத்திவிட்டார் என ஒரு சாரார் கூறுகின்றனர். (அப்படியே இருந்தாலும் அனுபவ விமானியால் மீண்டுவர முடியாதா? அப்போ அந்த வெள்ளை நீர்?)
  • விமானத்தின் பாகங்கள் எதேச்சையாக செயல் இழந்துவிட்டன. அதனால்விமானம் கடலினுள் வீழ்ந்திருக்கலாம்.(அப்படியானால், வீழ்ந்த விமானம் எங்கே? விமானம் தொழைந்து அடுத்த நாள் சுமார் 18 கப்பல்களும் 2 நீர்மூழ்கி கப்பல்களும் தேடுதல் வேட்டை நடத்தின எதுவும் சிக்கவில்லை. இதுவரை சிக்கவில்லை!)
மொத்தத்தில், அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட தேடல்கள், ஆராய்வுகளின் பின்னரும் இதுவரை அந்த விமானத்திற்கான பதில் கூறப்படவில்லை. எதிர் காலம் கூறலாம்…
ஃப்லைட் 19 பற்றி போதுமான அளவு பார்த்துவிட்டோம்… இனி மேலும் சில…
29/01/1948 :
AIR MARSHAL AUTHOR CUNNINGHAM விமாணி 6 சிற்பந்திகள் மற்றும் 25 பயணிகளுடன் பேர்முடா தீவில் இருந்து கிழம்பிய விமானம் STAR TIGER இதுவரை தரை இறங்கவில்லை!
28/12/1948 :
”நாங்கள் தெற்கில் 50 மைல் தொலைவில் வந்துகொண்டிருக்கிறோம். மியாமியினுடைய விளக்குகள் எனக்கு மங்கலாகத் தெரிகின்றன. இறங்குவதற்கான விபரங்களுக்காக காத்திருக்கிறேன்.” என கூறிய DOUGLUS DC3 விமானத்தின் விமானி இதுவரை 36 பயணிகளுடன் காத்திருக்கிறார்!
17/01/1949 :
இங்கிலாந்தில் இருந்து 15 பயணிகள் மற்றும் 7 சிப்பந்திகளுடன் புறப்பட்ட STAR ARIEL எனும் சிறிய விமானம். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னராகவே தரை இறங்கிவிடுவோம் என உறுதியாக கூறிய விமானி; இதுவரை விமானத்தை தரை இறக்கவில்லை!
22/09/1963 :
C-132 விமாண விமாணி “விமானத்தின் பயணம் சுமூகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என அறிவித்தார் இதுவரை பயணிக்கிறார்!
28/09/1963 :
KC 135 Jet விமானம் பல நூறு பயணிகளுடன் காணாமல் போனது.
05/06/1965 :
FLYING BOX CAR விமாணம் 10 பயணிகளுடன் காணாமல் போனது.
01/11/1967 :
YC 122 விமானம் நால்வருடன் காணாமல் போனது.
இவை சாதாரணமாக லிஸ்ட் போடும் சம்பவங்கள் இல்லை. இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பை கண்டுக்காமல் விட்டது போன்று இவை விடப்படவில்லை. பல மில்லியன்கள் செலவில் நீண்ட காலமாக பல விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்க்கிக்கப்பல்களின் உதவிகளுடன் தேடல் நடைபெற்றது. ஆனால், எந்த தடையங்களும் சிக்கவில்லை!
எப்படி?
அனைத்துவிமானங்களுமே எங்கே போயின?
இதன் பின்னனி என்ன?
காந்தப்புலமா?
ஏலியன்ஸா?
சூறாவளியா?
அல்லது….

விமானங்களில் திடீர் விபத்துக்கள் நடைபெறும் போது, உயிராபத்துக்கள் அதிகம் இடம்பெறும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. (விமானத்தின் பயணத்தில் திடீர் விபத்து ஏற்படுமாயின்; உதாரணமாக, விமானம் திடீரென நிலைக்குத்தாக பயணிக்க வேண்டி ஏற்படின் அல்லது விமான பாகங்கள் திடீரென இயங்காதுவிடின் பயணிளிக்கு எச்சரிக்கை செய்து அவர்களை பரசூட்* மூலம் காப்பாற்றும் நிலை சாத்தியமற்றதாகிறது.)
இதனால் அப் பகுதியில் விமான விபத்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து தப்பி பிளைத்தவர்களை எதிர்பார்ப்பது கடினம். ஆனால்… கப்பல்களில் அப்படி இல்லை… விமானத்தை காட்டிலும் தப்பிப்பதற்கான விழுக்காடுகள் அதிகம்.
விமானிகள் யாராவது தப்பினார்களா? அவர்கள் சொன்னது என்ன? இவற்றை பின்னர் பார்க்கலாம்.
பேர்முடா முக்கோண வலையத்தில் மர்மமாய்ப்போன கப்பல்கள் தொடர்பாக  ஆராய்வோம்… ஆரம்பத்தில், காணாமல்போன கப்பல்களின் தகவல்களை சிறு ஆய்வுடன் பார்ப்போம்…
பேர்முடா முக்கோண வலையப்பகுதியில் கப்பல்கள் காணாமல் போவது தொடர்பான சம்பவங்கள் 1800 ஆம் ஆண்டில் இருந்தே இடம்பெறத்தொடங்கிவிட்டன…
1800 ஓகஸ்ட்(ஆவணி) மாதம் 340 பயணிகளுடன் கப்பல்(INSURGENT) ஒன்று காணமல் போனது, இந்த சம்பவம் தான் அந்த முக்கோண வலையம் தொடர்பாக மக்களிடையேயும் அரசுகளிடையேயும் பார்வையை செலுத்த தூண்டியது.
ஆரம்பத்தில் அந்த 340 பேரும் கடற்கொள்ளையர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. எனினும், அந்த கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடல்களின் இறந்தவர்களின் உடலோ காணாமல் போன கப்பலோ கண்டுபிடிக்கப்படவில்லை! – எனவே அறிவியல் மட்டத்தை அடையாமல் பேய் முக்கோணம் என்ற நோக்கில் மக்களால் பேசப்பட்ட தொடங்கியது!
1814 / 10 / 09 ஆம் நாளில் மறைந்துபோன 140 பயணிகளுக்கும் கப்பலுக்குமான(WASP) விளக்கம் இல்லை.
1880 / 01 இல் காணாமல் போன 290 பயணிகளுடனான கப்பல்(ATLANTA) தொடர்பான இங்கிலாந்து அரசின் தேடல் எந்த தடையங்களும் இல்லாமல் தோல்வியில் முடிந்தது.
1918 / 03 /04 இல் 309 பயணிகளுடன் பேர்முடா பகுதியில் பயணித்த கப்பல்(USS CYCLOPS) பயணத்தை முடித்தமைக்கான அடையாளம் இல்லை.
இனி புருவத்தை உயற்ற வைக்கும் சற்று வித்தியாசமான மறைவுகளை பார்க்கலாம்…
1951 / 10 / 04, தரை தட்டும் துறைமுகத்தில் இருந்து படகுகளின் உதவியுடன் கடலிற்கு அனுப்ப பட்ட இராணுவ கப்பல் தனது பேமுடாவூடான பயணத்தை தொடங்கியது. பயணம் ஆரம்பிக்கும் போது, கப்பலை கடலில் செலுத்த உதவும் படகு ஒன்றின் இணப்பு துண்டிக்கப்பட்டதால், சிறிது நேரத்தில் இணைப்பை ஏற்படுத்துவதற்காக கப்பலும் மற்ற இணைப்புபடகும் சென்ற் திசையில் சென்றது. ஆனால், சிறிது நேரத்திற்கு முன்னர் சென்ற அந்த கப்பலும் இல்லை படகும் இல்லை!
இன்றுவரை இச்சம்பவம் தொடர்பான எந்த தடையங்களும் கிடைக்கவில்லை. மர்ம்மம் நீடிக்கிறது.
1925 / 04 ஆம் மாதம்… ஜப்பானிய சரக்கு கப்பல் 38 பணியாளர்களுடன் பேர்முடாவலையத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. இறுதியாக துறைமுக கட்டுப்பாட்டகத்திற்கு “உதவி!!! உதவி !!! ஆபத்து ஈட்டி போல வந்து கொண்டிருக்கின்றது. சீக்கிரம் வாருங்கள். எங்களால் தப்பிக்கமுடியாது. காப்பாற்றுங்கள்.” என்ற அலறல் தகவல்கிடைத்தது. அதன் பின்னர் என்னவாயிற்கு என்பதற்கான சான்றுகள் கிடையாது. இது இடம்பெற்றது பஹாமசிற்கும் கியூபாவிற்கும் இடைப்பட்ட பகுதியில்.
1968 / 10 / 31, அன்று பிரபல வர்த்தகரும் அதிவேக கப்பல்கள் ஓட்டுவதில் நிபுணருமான டொனால்ட் குறோஹர்ட்ஸ் விசேட பாதுகாப்புகளுடன் வடிவமைக்கப்பட்ட படகு மூலம் இங்கிலாந்தின் லண்டனில் இருந்து அமெரிக்கா நோக்கிய தனது பயணத்தை பேர்முடா முக்கோண வலையத்தினூடாக திட்டமிட்டு ஆரம்பித்தார். அமெரிக்கா வந்தடைந்த அவர், பேர்முடாவை கடக்கும் போது, தனது படகு பல தொழில் நுட்ப சிக்கல்களை சந்தித்ததாகவும் அவற்றை தான் முறியடித்து பயணத்தை சாதித்ததாகவும் அறிவித்தார். அது, அவரது விளம்பர யுக்தி என பலரும் கூறினார்கள். அடுத்து அங்கிருந்து மீண்டும் லண்டன் செல்வதற்காக புறப்பட்டார்.
லண்டனில் அவரது வருகைக்காக காத்திருந்தவர்கள் தொடர்ந்து காத்திருந்தார்கள். அவர் வரவில்லை.
யூலை 1969 ல் பேர்முடா பகுதியில் தனித்து நின்றிருந்த அவரது படகு கண்டுபிடிக்கப்பட்டது. தான் இனி மீண்டும் வீடு செல்ல முடியாது என்ற வாசகத்துடன் 29,யூன் எழுதிய குறிப்பும் அதில் இருந்தது!

ஏற்கனவே தேவையான அளவிற்கு அங்கு இடம்பெற்ற முக்கியமான மர்ம சம்பவங்களை பார்த்திருந்தோம். இனி, அங்கு என்ன நடக்கிறது? என்ன நடக்கலாம்? என்ற ரீதியில் அறிவியல் கூறுவதையும், ஆய்வாளர்கள் கூறுவதையும், எனக்கு தோன்றுவதையும் பார்க்கலாம். உங்களுக்கு தோன்றுபவற்றை கருத்தில் கூறுங்கள்.
இறுதியாக டொனால்ட் குறோஹர்ட்ஸ் என்பவரின் சம்பவத்தை பார்த்தோம். படகு மட்டும் நிற்க அதில் இருந்த மனிதர் மட்டும் காணாமல் போய் இருந்தார்.
இதே போல், இன்னொரு சம்பவத்தில்…
இராணுவ கப்பல்கள் பேர்முடா முக்கோண வலையப்பகுதியினூடாக சென்ற போது. சுமார் நூறு பேருடன் மூழ்கிப்போனதாக பதியப்பட்ட கப்பல் ஒன்று தனியே நின்றது. சோதனையின் போது மெலிந்த நிலையில் ஒரு நாயும், பயணிகளின் நகைகளும் மீட்கப்பட்டன! ( அந்த நாய்க்குத்தான் தெரிந்திருக்கும் மர்மம்.)
மனித தவறுகள்.
குறித்த பகுதியில் இயற்கையாக ஏற்பட்ட சில விபத்துக்களை தொடர்ந்து, குறித்த பகுதி தொடர்பாக விமான,கப்பல் ஓட்டிகளுக்கு ஆழ்மனதில் ஏற்படுத்தப்பட்டு விட்ட பயம்/பதட்டம் காரணமாகவே விபத்துக்கள் ஏற்பட்டு மாயமாகும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மற்றம்படி அங்கு எந்த மர்மமும் இல்லை என ஒரு சாரார் கூறுகின்றனர்.
மேலும் பேர்முடாவை அண்டிய கடல் நீர் மிகவும் தெளிவானதாகவும் அதே நேரம் அடிக்கடி கால நிலை மாற்றத்திற்கு உட்படும் இடமாகவும் இருப்பதுடன், பேர்முடா முக்கோண வலையத்தை அண்டிய பகுதிகளில் பல கடல் குன்றுகள் காணப்படுவதனால், இலகுவாக தொழைந்து போவதற்கான் சந்தர்பங்கள் அதிகம். எனவே, அடையவேண்டிய இடம் என நினைத்து குன்றுகளை நோக்கி பயணித்து அதன் அருகில் இருக்கும் கூர் பாறைகளின் விளைவாக விபத்துக்குள்ளாகி கப்பல்கள் மூழ்கி இருக்கும். எனவே மனித தவறுதான் என வாதிடப்பட்டது.
எனினும், அக் குன்றுகளை அண்டிய பகுதியில் நடந்த தேடுதலில் எந்த தடையங்களும் கைப்பற்றப்படவில்லை. மற்றும் இக்காரணங்கள் விமானங்களின் விபத்துக்களுக்கும் பொருந்தும் இயல்புகுறைவானதாகையால் இக் கூற்று பலரால் நிராகரிக்கப்பட்டது.
காந்த மையம்.
பேர்முடா முக்கோண வலையத்தில் அதீத காந்த ஈர்ப்பு மையம்(காந்த பாறைகள் என்றும் கூறப்பட்டது.) இருப்பதனால்தான் அதை அண்டி செல்லும் எந்த பொருளும் ஈர்க்கப்படுகிறது… (+ பல சம்பவங்களில் விமானிகளினதும், கப்பலோட்டிகளினதும் திசை அறி கருவியில் வட திசை முற்கள் தாறுமாறாக மாறியதாக, கட்டுப்பாட்டகத்திற்கு இறுதியாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.) என்று ஒரு சாரார் ஆய்வறிக்கை விட்டனர். எனினும், காந்த பாறைக்கான பெளதீக ஆதாரங்கள் இல்லாததால்; ஆய்வாளர்களின் முயற்சியின் படி, எந்த வித உலோகமும் பயன்படுத்தப்படாத நிலையான சிறிய வகை கப்பல்கள் பேர்முடா பகுதியில் உலாவ விடப்பட்டன.
அவற்றிலும் பலது மாயமாய் போனது! எனவே காந்த பாறைகள் என்ற கோட்பாடு அடிபட்டுப்போனது.
கடற்கொள்ளையர்கள்.
கரிபியன் தீவுகளை அண்டிய பகுதியில் நீண்ட காலமாக கடற்கொள்ளையர்களின் வேட்டை நடைபெற்று வந்ததால், காணாமல் போன கப்பல்களின் மாயத்திற்கு காரணம், கடற்கொள்ளையர்கள் தான் என ஒரு சாரார் கூறினர். எனினும், காணாமல் போன கப்பல்களில் இராணுவ கப்பல்களும் அடங்கும். அவற்றை கடற்கொள்ளையர்கள் வீழ்த்தி இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும்; விமானங்களுக்கு…
(மேலே குறிப்பிட்ட சம்பவத்திலேயே, நகைகள் அப்படியே மீட்கப்பட்டன. மனிதர்கள் வேட்டையாடப்படடதற்கான எந்த அடையாளங்களும் கைப்பற்றப்படவில்லை.)
திடீர் புயல்கள்.
திடீரென ஏற்படும் பாரிய கடல் சூறாவளிகள் காரணமாக கப்பல்கள், விமானங்கள் கடலால் விழுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் திடீர் திடீரென புயல்கள் எழுந்ததற்கான் எந்த சாத்தியமும் விண் ஆய்வுமையங்களில் பதியப்படவில்லை. அதே நேரம் நாம் ஏற்கனவே பார்த்த சில சம்பவங்களில் மனிதர்கள் மட்டுமே காணாமல் போய் உள்ளார்கள். சூறாவளி மனிதர்களை மட்டும்???..
அட்லான்டிஸ் நகரின் விளைவு.
பல காலமாக அமெரிக்க செவ்விந்திய மக்களிடையே இருந்து அன்லான்ட்ஸ் எனும் கடலில் மூழ்கிப்போன மாபெரும் நகரம் பற்றிய கதைகள் உலாவுகின்றன. ஒரு சாரார், இந்த நகரத்தின் கட்டிட வேலைப்பாடுகளினூடாக பாய்ந்து செல்லும் நீரினால் ஏற்படும் சுழற்சியின் காரணமாகவே சில காலங்களில் மட்டும் கப்பல்களும், விமானங்களும் உள் இழுக்கப்படுகின்றன என கூறுகின்றனர்.
பல சுழியோடிகளும் சில ஆய்வாளர்களும் குறித்த பகுதியில் கடலின் அடியில் பிரமிட்டுக்களைப்போன்ற அமைப்புக்கள் இன்றும் அழியாது உள்ளது என கூறுகின்றன. ஆனால், அன்லான்டிஸ் என்ற நகரம் ஆழ்கடலில் இருப்பதற்கான எந்த வித உத்தியோக பூர்வ புகைப்பட ஆதாரங்களும் சிக்கவில்லை.