Bluetooth rings that turn your hand into a phone

வருங்காலத்துக்கு ஏற்றவாறு செல்லிட / கையடக்க தொலைபேசிகளும் (cell/handphone) புது புது தொழிநுட்பங்களை கையாள தொடங்கியுள்ளன. அவற்றில் இப்பொழுது வந்துள்ளதுதான் நீலப்பல் மோதிரம் அல்லது வளையம் (Bluetooth ring)
புதிய புத்தாக்க வடிவமைப்புகளை (fashion) உருவாக்கும் புகழ்பெற்ற கலையகமான bck (design studio-http://www.bck-id.com) தரத்தில் 13 வது இடத்தில் இப்புதிய புதிய வடிவமைப்புக்கு தர நிர்ணயம் செய்துள்ளது.
சரி இதை பாவிக்கும் முறை என்னவென்று பார்ப்போமா…
இது இரண்டு புளுத்துட் (Bluetooth) மோதிர வடிவ வளையங்களைக்கொண்டுள்ளது.
ஒன்று உங்கள் கையின் பெருவிரலில் (thumb) அணியக்ககூடிய ஒலிபெருக்கியை கொண்ட கேட்டல் பகுதி/காதுப்பகுதி மற்றையது கட்டைவிரலில் (pinky /little finger) அணியக்ககூடிய ஒலிவாங்கியை(microphone) கொண்ட கதைக்கும் பகுதி. இரண்டும் இடத்துக்கு ஏற்ற உணர்திறனை கொண்டவை.
இது கம்பில்லா தந்தி(wirelessl) மூலம் தொலைபேசியுடன் இடையே இணைக்கப்பட்டு இருக்கும்.
இனி செல்லிட தொலைபேசி அலறும் போது எடுத்து கதைக்கவேண்டியது தொலைபேசி அல்ல.. உங்கள் கையைத்தான்..
வடிவமைப்பாளர்கள் கருத்து தெரிவிக்கும் போது “ இது இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடிக்கும் கவர்ச்சிகரமான கலர் மோதிர வடிவம் மற்றும் அவசர உலகத்திற்கு ஏற்றவடிவம்” என்று கருத்துரைத்தனர்.
இனி நீங்கள் உங்களுடன் மட்டுமல்ல உங்கள் கைவிரல்களுடன் பேச தயாராகுங்கள் எதிர்காலத்தில்… விரைவில் உங்கள் விரல்களுக்கு மோதிரம் போட காத்திருக்கின்றனர் உற்பத்தி செய்வோர்.
கொஞ்சம் பொறுங்க.. கையை மட்டும் தண்ணியில கழுவாதிங்கோ…
0 comments:
கருத்துரையிடுக