திங்கள், 22 பிப்ரவரி, 2010

சகலகலா வல்லவன் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா

மறைந்த அண்ணன் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களுக்கு எனது மனப்பூர்வமான கண்ணீர் அஞ்சலிகள்.



நம்மை சிரிக்க வைத்தவரை நினைத்து அழுவதை விட அவரின் சிறந்த நடிப்பை நினைத்து புன்சிரிப்பதுதான் அவருக்கு சரியான மரியாதை.ஒரு இயக்குநராய் நான் உன்னுடன் பழகிய நாட்கள் இறைவன் எனக்கு கொடுத்த வரம் என்று எண்ணுகிறேன்.என்னைக் கவர்ந்த உன்னை என்றும் என்சிரம் தாழ்த்தி நிற்கும்
சகலகலா வல்லவன் எனும் பட்டம் உனக்கானது.இனம், மதம், மொழிகளைக் கடந்து அனைவரையும் கட்டிப்போட்ட கலைஞன். பூதவுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாத கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி.
மென்மையான குழந்தை தனமான இதயம் கொண்டவர் என்பதை அவரோடு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். கலைஞர்கள் உருவாகுவதில்லை. கலைஞர்கள் பிறக்கிறார்கள் என்பதே உண்மை. அந்த இரத்த துடிப்பு அனைவரிடம் இருப்பதில்லை. அது பிறப்போடு சம்பந்தபட்ட விடயம். ஒரு திறமையான கலைஞனின் இழப்பில் துயர் கொண்டு அஞ்சலி செய்வோம்.