வெள்ளி, 25 அக்டோபர், 2019
டென்மார்க்கில் ஆச்சரியம்: நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்
அமெரிக்கா வேற்றுகிரகவாசிகளை மறைத்து எந்த ஆராய்ச்சியையும் நடத்தவில்லை-எட்வர்டு ஸ்னோடன்
கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு: நினைத்து பார்க்க முடியாதது -பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிர்ச்சி
All 39 people found dead in shipping container in Essex were Chinese nationals, officials confirm.
புதன், 23 அக்டோபர், 2019
கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் புதிய உச்சம்.. செயற்கை தோல் கண்டுபிடிப்பு
அதேபோல், கிள்ளுதல், தொடுதல், கூச்சம் போன்ற உணர்வுகளை மனித மூளை தோல் மூலமே கண்டறியும். இந்நிலையில், மனித உணர்வுகளை கண்டறியும் செயற்கை தோலை, பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் பிரான்ஸ் சோபோர்ன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்காம் பாரிஸ்டெக் நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த செயற்கை தோல், சிலிக்கான் (silicone membrane) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மனித தோல் மாற்று அறுவை சிகிச்சைதான் எங்கள் இலக்கு என்று செயற்கை தோலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகள்மருத்துவம்உலகம்பரம்பரை நோய்களை திருத்தியமைக்கும் பொறிமுறை கண்டுபிடிப்பு
விக்கிப்பீடியாவை விரைவில் இழந்து விடுவோமா? - புதிய தகவல்
செய்திகளுக்கு என்று பிரத்யேக பிரிவை அறிமுகம் செய்ய உள்ள பேஸ்புக்..!
செய்திகளுக்கு என்று பிரத்யேக பிரிவை பேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வானொலியைத் தவிர, 1990கள் வரை நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள அடுத்தநாள் காலையில் வரும் நாளேடுகளுக்காக மக்கள் காத்திருந்தனர். பின்னர் செய்தி தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் என்று பரிணமித்து வந்த செய்தித்துறை இன்று முழுக்க முழுக்க இணைய மயமாகிவிட்டது. ஒரு செய்தி ஒரே நொடியில் மில்லியன் கணக்கான மக்களின் கைகளில் உடனடியாக சென்று விழுந்துவிடுகிறது. இதற்கு முழு முதற்காரணம் சமூக வலைதளங்களின் பயன்பாடுதான்.
சமூக வலைத்தளங்களின் இந்த அபரிமிதமான வளர்ச்சி, தொலைக்காட்சியில் செய்தி நேரத்திற்காக காந்திருந்தவர்களை செல்போனை நோக்கி வரவைத்திருக்கிறது. அதிலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் எளிதில் மக்களை அடைந்துவிடுகிறது. இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது பேஸ்புக் நிறுவனம்.
நம்பகமான செய்திகளைப் பெறவும், உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் முக்கியமான செய்திகளை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாக கொண்டு புதிய செய்தி பிரிவை அறிமுகம் செய்வது தான் அந்த புது முயற்சி. செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களான Wall Street Journal, News Corp, Dow Jones, New York Post, the Washington Post போன்ற செய்தி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
செய்தியை வெளியிட விரும்பும் நிறுவனங்கள் மக்களுடன் நேரடி உறவை ஏற்படுத்த இந்த புது வசதிகள் உதவும்.மேலும் அதன் உண்மைத்தன்மை உயர்தரமாக இருப்பதையும் இந்த புது வசதி உறுதி செய்கிறது. பயனர்களுக்கு எந்த வகையிலான செய்திகள் தேவைப்படுகின்றன என்பதை செயற்கை நுண்ணறிவு மற்றும் இதற்கென சிறப்பாக நியமிக்கப்பட உள்ள செய்தி ஆசிரியர்கள் தீர்மானிப்பார்கள். செய்தி சேனல்களில் வரும் தலைப்புச் செய்திகளைப் போலவே, 10 முக்கிய தலைப்புச் செய்திகளைக் கொண்ட ஓர் பகுதி இங்கு பிரதானமாக இருக்கும்.
இனி மக்கள், செய்திகளை தெரிந்துகொள்ள தொலைக்காட்சிகள், யூடியூப், செய்தி நிறுவனங்களின் பேஸ்புக் பக்கங்களை தேடவேண்டியதில்லை. பேஸ்புக் செய்தி சேவையின் மூலமாக பேஸ்புக்கே இனிமேல் நமக்கு செய்தி வாசிக்கப்போகிறது. இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த சேவைக்காக சுமார் 30 லட்சம் டாலர் பணத்தை முதலீடு செய்யவுள்ளது பேஸ்புக். செய்திகளை வழங்கும் செய்தி நிறுவனங்களுக்கு பேஸ்புக் ஓர் குறிப்பிட்ட கட்டணத்தையும் வழங்கும்.
செய்தி சேனல்களில் ப்ரேக்கிங்கை பார்த்து தங்களை அப்டேட் செய்துகொண்ட சமூகம் இனிமேல் பேஸ்புக்கிலேயே செய்திகளை பார்த்து, கேட்டு தெரிந்துகொள்ளப்போகின்றனர். இனி அடுத்து வரும் சந்ததிகளும் செய்திகளுக்காகவும் பேஸ்புக்கை உபயோகப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மார்க் ஜீகர்பெர்க்.
செவ்வாய், 22 அக்டோபர், 2019
கருப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் வெளியான ஆஸ்திரேலிய பத்திரிகைகள்- பின்னணி இதுதான்
சிட்னி:
போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிக்கை நிறுவனமான ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் போலீசார் சோதனை நடத்தினர்.
அரசின் இரு முக்கிய விவகாரங்களை வெளியிட்டதால் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக பத்திரிக்கை நிறுவனங்கள் குற்றம் சாட்டின. பத்திரிக்கைகளுக்கு அரசு ஆதரவு அளிக்கிறது, ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றே என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ‘இரகசிய கலாச்சாரம்’ உருவாகி வருவதாகவும் ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் விளைவாக ஆஸ்திரேலியாவில் இன்று முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும் தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து வெளியிட்டுள்ளன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன.
நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா பத்திரிக்கை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மைக்கேல் மில்லர், அவரது பத்திரிக்கை, தி ஆஸ்திரேலியன் மற்றும் தி டெய்லி டெலிகிராப் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் அச்சிடப்பட்ட கறுப்பு நிற முதல் பக்கத்தின் படத்தை (போட்டோவை) ட்விட்டரில் பதிவு செய்தார்.
மேலும், ‘என்னிடமிருந்து எதை மறைக்க முயற்சிக்கிறார்கள்?’ என அரசாங்கத்திடம் கேள்வி கேட்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
ஏபிசி நிர்வாக இயக்குனர் டேவிட் ஆண்டர்சன் கூறுகையில், ‘ஆஸ்திரேலியா உலகின் மிக ரகசியமான ஜனநாயகமாக மாறும் அபாயம் உள்ளது’ என தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்
இந்த சம்பவத்தை குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், “ஊடக அமைப்புகளுக்கு என்ன வேண்டும்? கடந்த இரண்டு தசாப்தங்களாக இயற்றப்பட்ட கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் புலனாய்வு பத்திரிகை துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. இது பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கிறது என்கின்றனர்.
பத்திரிகை சுதந்திர விசாரணையின் முடிவுகள் அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
பத்திரிகை சுதந்திரம் ஆஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்கு உட்பட்டது. அதில் நான், பத்திரிகையாளர், வேறு யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்,” என்றார்.
'இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் எமர்ஜன்சி கால ஊடக வெளியீடுகளை நினைவுபடுத்திய ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள். இதே போல் அன்றும் இந்திய பத்திரிக்கைகள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டன'
In India, "the Emergency" refers to a 21-month period from 1975 to 1977 when Prime Minister Indira Gandhi had a state of emergency declared across the country.
Related Tags :
Australia | Australian newspapers | black out | ஆஸ்திரேலியா | ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் | கருமைநிற பக்கம்
