புதன், 9 அக்டோபர், 2019

பட்டறிவு - பதுங்குழியை விட பாதுகாப்பானது

"வரலாறு எப்போதும் புதியதல்ல, தெரிந்து தெளிவடைய வேண்டிய பாடம்.!"
"வண்டு காலங்களில் தேடிப் படித்தறிந்த சிறு தெரிவுகளை ஆவணக்காட்சியாய் பார்த்தறியும் போது சிறு பகுத்தறிவு. யாதெனின்! வயதறிந்த ஞானமும், நிலமளந்த ஞாலமும் கையளவு எனின்..
தாவும் நாழிகையோடு
நகரும் வண்டிகளில் காலவிரயமற்றதாய் மணிகளை நகர்த்தும் 'நெட்விலிக்ஸ்'ன் ஆவணப்படங்கள் முற்றும் அந்த விடியல்..
பின்னோக்கிய கடிகாரசுழற்சி கற்றுத்தரும் பாடங்கள். கந்தக நுகர்ச்சி உறவுகளுக்கு பொதுப்படையானது. - பட்டறிவு'
பதுங்குழியை விட பாதுகாப்பானது..
'1941' யுத்தம் பின்னணியில் நகரும் சம்பவங்கள். கண்முன்னே நிஜம் கண்டவர்களுக்கு நிழற்காட்சியல்ல...!
எனவே தலைப்பை மறுபடியும் படிக்கலாம்.."
The War is a seven-part American television documentary miniseries about World War II from the perspective of the United States. #TheWar A Film by Ken Burns and Lynn Novick

அமலதாஸ் எல்றோய்

செவ்வாய், 8 அக்டோபர், 2019

அசுரன்... ஒருத்தன் இல்ல, ரெண்டு பேர்! அசுரன் - விமர்சனம்


"உனக்கு அவன் செய்யுறதெல்லாம், நீ அவனுக்குக் கீழ இருக்கனு அவன் நம்புற வரைக்கும்தான்..." என்ற இடத்தில் தொடங்கி "நம்ம கிட்ட காசிருந்தா புடுங்கிக்குவானுவ, நிலமிருந்தா எடுத்துக்குவானுவ, படிப்ப மட்டும் ஒன்னும் செய்ய முடியாது, படிச்சு அதிகாரத்துக்கு வா, அதிகாரத்துக்கு வந்து அவன் உனக்கு செஞ்சத நீ யாருக்கும் நடக்கவிடாம பாத்துக்க" என்னும் இடத்துக்கு வருகிற ஒரு மனிதனின் கதை. இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான சிவசாமியின் வாழ்க்கை 'அசுரன்'.
திருநெல்வேலி அருகே உள்ள கிராமங்களில் 80களில் நடக்கும் கதை. எந்த இடத்திலும் ஊர் பெயரையோ காலகட்டத்தையோ வெளிப்படையாக சொல்லாமல் காட்சிகளால் அதை உணரவைத்தது படத்தின் ஒரு சோறு. 

சிவசாமியின் பதினாறு வயது மகன் சிதம்பரம் ஒரு கொலையை செய்துவிட, குடும்பத்துடன் ஊரை விட்டு தப்பிக்கிறார்கள். மனைவி, மகள் ஒரு பக்கம் போக கொலை செய்த மகனுக்கு ஆபத்தில்லாமல் எப்படியாவது சரணடைய வேண்டுமென்று இன்னொரு பக்கம் செல்கிறார் சிவசாமி. அந்தக் கொலைக்குக் காரணம் என்ன, 'சண்டை வேண்டாம் வேண்டாம்' என தவிர்க்கும் சிவசாமியின் பின்னணி என்ன என்பதை உண்மையாகவே ரத்தமும் சதையும் வெக்கையும் புழுதியுமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலை படமாக்கத் தேர்ந்தெடுத்த முதல் அடியிலிருந்து வன்மத்தைத் தூண்டாத தீர்வை பாடமாகச் சொன்ன க்ளைமாக்ஸ் வரை ஒவ்வொரு அடிக்கும் வெற்றிமாறனை பாராட்டலாம். பனிரெண்டு ஆண்டுகளில் ஐந்து படங்கள் இயக்கியிருப்பது எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் பெருமிதம் கொள்ளக்கூடிய படங்கள். அதில் நான்கு படங்களில் வெற்றிமாறனுடன் தனுஷ் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரின் கலை புரிதலும் நட்பும் படங்களாக வெளிவருகின்றன என்று சொல்லலாம். அந்த வரிசையில் 'அசுரன்', தனுஷ் - வெற்றிமாறன் இருவரின் அடுத்த பெரிய உயரமாக இருக்கிறது. நாற்பது வயதுக்கு மேலான, வெளியே பொறுப்பும் உள்ளே நெருப்பும் கொண்ட பக்குவமான தந்தையாகவும் வீரம், வேகம் நிறைந்த இளைஞனாகவும் இரண்டு பருவங்களிலும் சிவசாமியாக நம் மனதில் அழுத்தமாகப் பதிகிறார் நடிப்பு அசுரன் தனுஷ். நாவலின் சாரம் குறையாமல் அதே நேரம் சுவாரசியத்துக்காகக் காரம் சேர்த்து கதை நடக்கும் நிலத்தின் தன்மை, வெப்பம், புழுதி, வாழ்க்கை ஆகியவற்றை நாம் உணரும்படி உண்மைக்கு நெருக்கமாகப் படமாக்கி ஒரு தரமான திரைப்படத்தைத் தந்திருக்கும் வெற்றிமாறன் இன்னொரு அசுரன். சரியான வட்டார மொழி, பன்றி வேட்டை, ஒளிந்து கொள்ளச் செல்லும் காடு என கதை நடக்கும் களத்தை உண்மைக்கு நெருக்கமாக்க வெற்றிமாறன் எடுக்கும் முயற்சிகள் படத்தை நமக்கு இன்னும் நெருக்கமாக்குகின்றன. கலைப்புலி தாணுவின் தயாரிப்பு வரிசையில் இன்னொரு பெருமையாக இணைந்திருக்கிறது 'அசுரன்'.
வர்க்கம், சாதி இரண்டின் அடிப்படையிலான ஏற்ற தாழ்வு, நில அரசியல், பஞ்சமி நிலங்கள் அபகரிக்கப்பட்ட சூழல் என மிக தீவிரமான ஒரு பிரச்சனையை தீவிரம் குறையாத சுவாரசியமான ரிவென்ஜ் கதையில் சினிமாவாக்கி இருக்கிறார்கள். படத்தின் நடிகர்கள் ஒவ்வொருவரும் மிகப்பெரும் பலம். வெற்றிமாறனின் 'காஸ்டிங்' லிஸ்ட்டில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் பலரும் இந்தப் படத்தில் இருக்கிறார்கள். ஆனால், எந்தப் பழைய படத்தையும் நினைவுபடுத்தாமல் இருப்பது அவர்களது சிறப்பு. லிஸ்ட்டில் இல்லாத புதியவர்களான கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம் இருவரும் புதிது என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் புகுந்து விளையாடுகிறார்கள் (சிறு டப்பிங் குறைபாடுகள் தவிர்த்து). பிரகாஷ் ராஜ், பசுபதி, 'ஆடுகளம்' நரேன், பவன், சுப்ரமணியம் சிவா, அம்மு அபிராமி, ஏ.வெங்கடேஷ், நிதிஷ் வீரா என ஒவ்வொருவரும் பெரிதோ சிறிதோ, தங்கள் பாத்திரங்களை சரியாகப் பதியச் செய்திருக்கிறார்கள். அதிலும் பசுபதி, ஒரு கால இடைவெளிக்குப் பிறகு நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இயக்குனர் பாலாஜி சக்திவேல், இங்கிலிஷ் பேசும் இடம், சர்ப்ரைஸ் நகைச்சுவை. சிவசாமியின் மனைவி பச்சையம்மாளாக நடிகை மஞ்சு வாரியர். இந்தக் கூட்டத்தில் இவர் மட்டும் சற்றே நெருடலாகத் தெரிந்தாலும் தனது சிறப்பான நடிப்பால் அதை மறக்கடிக்கிறார்.
எல்லா வார்த்தையிலும் 'லே' சேர்த்துக்கொள்ளும் வழக்கமான தமிழ் சினிமாவின் திருநெல்வேலி வட்டார வழக்காக இல்லாமல் உண்மையான மொழியை நமக்குக் கொண்டு வந்த சுகா - வெற்றிமாறன் வசனங்களும் சுகா அளித்துள்ள வசனப்பயிற்சியும் படத்தின் நேர்மையை இன்னும் வலுப்படுத்தியுள்ளன. உடை, கலை இரண்டும் கதையின் காலகட்டத்தை மிக சிறப்பாக வடித்திருக்கின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவில் கதையின் களம் நம் முன் நிஜமாக விரிகிறது, சண்டைக் காட்சிகள் நம்மையும் பதற வைக்கின்றன. படம் நெடுக படர்ந்திருக்கும் அந்த இருட்டு நமக்கும் மெல்லிய பதற்றத்தை உண்டாக்குகிறது. கதையை சுவாரசியமாக சொல்ல ஒளிப்பதிவு மிக சிறப்பாகப் பயன்பட்டிருக்கிறது. இசை, ஜி.வி.பிரகாஷ். இடைவேளை சண்டைக் காட்சியில் ஒலிக்கும் இசை, வணிகப் படங்களுக்கேற்ற ஒரு சிறந்த ஹீரோயிச இசை. ரசிகர்களை குதூகலிக்கச் செய்கிறது. காட்சிகளின் விறுவிறுப்பிலும் பரபரப்பிலும் இசைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. பாடல்கள் புதிதாக இல்லையென்றாலும் ரசிக்கவைக்கும் ரகம். ராமரின் படத்தொகுப்பில் சண்டைக் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. பீட்டர் ஹேனின் 'ரா'வான சண்டை அமைப்பு தாக்குதலையும் தாக்கத்தையும்  அதிகப்படுத்தியிருக்கிறது.
படம் நெடுக தெறிக்கும் ரத்தத்துடன் நிகழும் வன்முறை காட்சிகளுக்கு கூடுதல் மனப்பக்குவம் தேவை. இரண்டாம் பாதியில் ஃபிளாஷ்பேக் பகுதி சற்றே நீளம். கொலை... மறுபக்கம் கொலை... பதில் கொலை... என செல்வது அதிர்ச்சி, சற்றே அயர்ச்சி. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி 'அசுரன்' பெரிய முயற்சி. வெற்றியும் பெற்றுவிட்டது. வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியிடம் இன்னும் பெரிதாக எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

உலகத்தரம் வாய்ந்த Fully Automatic தங்கும் விடுதி...!

எதிர்காலத்தில் ஹோட்டல்கள் எவ்வாறு இருக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சீனாவில் உள்ள FlyZoo ஹோட்டல் இருக்கிறது.

ஆன்லைன் உலகில் இருப்பவர்களுக்கு அலிபாபா இணையதளத்தை தெரியாமல் இருக்காது. ஆன்லைன் ஷாப்பிங்-ல் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த அலிபாபா நிறுவனம் தற்போது அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துள்ளது. சீனாவில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பல்வேறு புதிய வசதிகளுடன் கூடிய FlyZoo ஹோட்டலை அலிபாபா நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கையில் பணம், அடையாள அட்டை உள்ளிட்டவை இல்லை என்றால் கவலைப்படத்தேவையில்லை எனவும் அங்கு அனைத்து செயல்முறைகளுமே Smart Phone-களின் வழியாக மட்டுமே செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, ஹோட்டல் அறை பதிவு செய்வது முதல், ஹோட்டலில் சென்று உணவு சாப்பிடுவது என அனைத்திற்குமே புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர் FlyZoo ஹோட்டல் நிர்வாகத்தினர்.

அங்கு செல்லும் வாடிக்கையாளர்கள் தங்கள் Smart Phone மூலமாகவே அறையை தேர்வு செய்து book செய்துகொள்ளலாம். பின்னர் ஹோட்டலுக்கு சென்றால், அங்கிருக்கும் உதவியாளர் ஒருவர் அவர்களுக்கான பிரத்யேக கருவியில் வாடிக்கையாளரை புகைப்படம் எடுத்துக்கொள்வர். பின்னர், அதிலிருந்தே வாடிக்கையாளரின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றையும் பதிவேற்றம் செய்துகொள்வர்.

வாடிக்கையாளர் தங்கும் அறை உறுதிசெய்யப்பட்டவுடன் அவரது அறைக்கு அவர் அனுப்பிவைக்கப்படுவார். ஆனால், அவரது கையில் சாவி, card என எந்தவிதமான உபகரணங்களையும் கொடுத்துவிடமாட்டார்கள். Face Recognition மூலமாகவே வாடிக்கையாளர் பதிவு செய்த அறை திறக்கப்படும்.

இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், அறையில் Google Assistant அல்லது Alexa வைக்கப்பட்டிருக்கும். அதில் வாடிக்கையாளர் கட்டளையிட்டாலே அறைக்கதவு, Light, Fan, TV உள்ளிட்டவைகளை ஆன் மற்றும் ஆஃப் செய்துகொள்ள முடியும். இதுமட்டுமல்லாமல், ரூம் சர்வீசிற்கு ஹோட்டல் நிறுவனம் பணியமர்த்தி இருப்பது ஒரு ரோபோ. அந்த ரோபோ, அறையை சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்யும்.

FlyZoo ஹோட்டலில் உணவு பரிமாறும் பணியை செய்வது ரோபோ. நமக்கு தேவையான உணவுப் பொருளை ஆர்டர் செய்து அலிபாபாவின் App-ஆன Alipay மூலம் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். இப்படி முழுக்க முழுக்க ரோபோக்கள் மற்றும் ஆன்லைன் மூலமாகவே வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் FlyZoo ஹோட்டல், சீன மக்கள் மட்டுமல்லாமல் உலகில் உள்ள பல்வேறு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

FlyZoo ஹோட்டல் மூலம், ஹோட்டல் உலகில் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தி எந்தவித போட்டியாளரும் இல்லாமல் கொடிகட்டி பறந்துவருகிறது அலிபாபா குழுமம். 
 

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

ஸ்டாக் ஹோம்( சுவீடன்)

சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் கிரகங்கள் குறித்த ஆராய்ச்சிக்கான இயற்பியல் நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் சுவிட்சர்லாந்து மற்றும் கனடாவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானிகள் ஆவார்கள். 

அண்டம் பற்றிய ஆய்வுக்காக ஜேம்ஸ் பீபிளிஸ்க்கு  நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

சூரிய குடும்பத்தை போன்று மற்றொரு  எக்ஸோபிளேனட்டைக் கண்டுபிடித்ததற்காக  மைக்கேல் மேயர் மற்றும் திதியர் கியோலோஸ் ஆகியோருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிக நிலவுள்ள கிரகம் சனி ; மேலும் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு

கேப் கேனவெரல்,

சனி கிரகத்தை  சுற்றி  இருபது  புதிய நிலவுகள் (துணை கோள்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இதன் மூலம்  வளைய கிரகமான சனி கிரகத்திற்கு மொத்தம் 82  நிலவுகள் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.  சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகள் வைத்து  இருந்த  கிரகம் வியாழன் ( 79 நிலவுகள்) என்ற பெருமையை தற்போது  சனிக்கிரகம்  பெற்று உள்ளது. 

கார்னகி இன்ஸ்டிடியூஷன் பார் சயின்ஸ்  நிறுவனத்தின் வானியலாளர்  ஷெப்பர்டும் அவரது குழுவும்  ஹவாய் தீவில்  ஒரு  நவீன தொலைநோக்கியைப் பயன்படுத்தி சனியின் 20 புதிய நிலவுகளைக் கண்டுபிடித்து உள்ளனர். 

நமது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகமான வியாழன்  மட்டுமே  மிகப்பெரிய சந்திரனைக் கொண்டுள்ளது. வியாழனின்  மிகப்பெரிய நிலவின் அளவு பூமியின் கிட்டத்தட்ட பாதி அளவு ஆகும். இதற்கு நேர்மாறாக, சனியின் 20 புதிய நிலவுகள் மிக சிறியவையாகும்  ஒவ்வொன்றும் 5 கிலோ மீட்டர் விட்டம் கொண்டவை தான்.

ஷெப்பர்ட்டின் கூற்றுப்படி, சனியைச் சுற்றி 5 கிலோமீட்டர் மற்றும் வியாழனைச் சுற்றி 1.6 கிலோ மீட்டர்  விட்டம் உடைய சிறியதாக இருக்கும் நிலவின் பட்டியலை வானியலாளர்கள் வைத்து உள்ளனர். இந்த  சிறிய நிலவுகளை ஆராய எதிர்காலத்தில்  பெரிய தொலைநோக்கிகள் தேவைப்படும்.

வானியலாளர் ஸ்காட் ஷெப்பர்ட்  கூறும் போது  "சனிக்கிரகம்  உண்மையான நிலவுகளின்  ராஜா என்பதைக் கண்டுபிடித்தது வேடிக்கையாக இருந்தது.  சுமார் 100 டைனியர் நிலவுகள் கூட சனியைச் சுற்றி வருகின்றன, அவை இன்னும் கண்டுபிடிக்க காத்திருக்கின்றன.

வியாழனை விட சனியைச் சுற்றி உள்ள  நிலவுகளைக் கண்டுபிடிப்பது மிக கடினம் ஏன் என்றால்  சனிகிரகம்  அவ்வளவு தூரம்   உள்ளது. இந்த நிலவுகள் கிரகங்களை உருவாக்க உதவிய பொருட்களின் எச்சங்கள் ஆகும்.  எனவே அவற்றைப் ஆய்வு செய்வதன்  மூலம், கிரகங்கள் எதில் இருந்து உருவாகின  என்பதைப் பற்றி அறிந்துகொள்ளலாம்  என கூறினார்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

உலகில் அழியும் நிலையில் உள்ள விலங்குகளை வளர்த்து, கொன்று, விற்று பணம் குவிக்கும் கும்பல்

லண்டன்,

உலகில் வசித்து வரும் உயிரினங்களில் பல அழிவின் விளிம்பு நிலையில் உள்ளன.  அவற்றை பாதுகாக்க நல அமைப்புகள் பல செயல்பட்டு வருகின்றன.

எனினும், அவற்றை சிலர் செல்ல பிராணிகள் என்ற போர்வையில் வளர்த்து பின் அவற்றை உயிருடனோ அல்லது கொன்றோ விற்பனை செய்து பணம் குவிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிர்ச்சி அளிக்கும் தகவலை புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

விலங்குகளில் தோலுக்காக நைல் முதலை, ரோமங்கள் கொண்ட சீல் விலங்கு, மலை வரிக்குதிரை, ஆப்பிரிக்க யானை, நீர் யானை ஆகிய 5 விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன.  அதனை விட செல்ல பிராணிகளாக அவற்றை வளர்த்து விற்பனை செய்யும் தொழிலிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் அந்த இனங்கள் வேகமுடன் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

கடந்த 2011-2015 ஆண்டுகளில் 1 லட்சத்து 89 ஆயிரம் நைல் முதலைகளின் தோல்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன.

நமீபியாவில் சீல் விலங்குகளின் குட்டிகள் ரோமங்களுக்காக ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் உறவுகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு, பின் அடித்து அல்லது மூச்சு திணற செய்து கொல்லப்படும் கொடூரங்கள் நடைபெறுகின்றன.

பின் அந்த ரோமங்கள் அலங்கார கைப்பைகள் மற்றும் கையுறைகள் தயாரிக்க கொண்டு செல்லப்படும்.


இவற்றில் யானைகள் ஒரு புறம் தந்தங்களுக்காகவும், மறுபுறம் அவற்றின் தோல்களுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன.  ஜாக்கெட்டுகள் மற்றும் காரின் உட்புற சொகுசு விரிப்புகளுக்கு யானை தோல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

வரிக்குதிரைகளும் அவற்றின் தனித்தன்மை வாய்ந்த கருப்பு, வெள்ளை நிற தோலுக்காக வேட்டையாடப்படுகின்றன.  அவை பின்னர், வீடுகள் மற்றும் வணிக நிறுவன கட்டிடங்களை அலங்கரிக்கும் தரை விரிப்புகளாக பயன்படுகின்றன.

ஆப்பிரிக்காவில் இருந்து சமீபத்தில் 5 லட்சம் பால் வகை பைத்தான் பாம்புகள் உயிருடன் ஏற்றுமதி செய்யப்பட்டன.  இவற்றை பெருமளவில் அமெரிக்கா வாங்கி கொள்கிறது.

ஆப்பிரிக்காவின் கிரே வண்ண கிளிகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி ஆகின்றன.  அவை பிடிபட்டு, கடத்தப்படும்பொழுது அதிகளவில் அழிவை சந்திக்கின்றன.

எறும்பு தின்னிகள் உலகில் அதிகம் கடத்தலுக்கு இலக்கான பாலூட்டி இனம் ஆகும்.  இவற்றில் சில உயிருடன் நீரில் வைத்து கொதிக்க வைக்கப்படுவதும், உயிருடன் தோலுரிக்கப்படும் அவலமும் நடந்து வருகிறது.  இவை கிழக்கத்திய நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்தில் அதிக மதிப்புடையவையாக உள்ளன.

தென்ஆப்பிரிக்காவில் கடந்த 2017ம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காண்டாமிருகங்கள் அவற்றின் கொம்புகளுக்காக வேட்டையாடப்பட்டு உள்ளன.

நைல் முதலைகளின் தோல்கள் 1,89,000

சீல் குட்டிகள் (1,000 ஒரு வருடத்திற்கு)

பால் பைத்தான் பாம்புகள் (4 ஆண்டுகளில் 5 லட்சம்)

கிரே வண்ண கிளிகள் (2,89,006)

தென்ஆப்பிரிக்க காண்டாமிருகங்கள் (1,000 ஒரு வருடத்தில்)

இவை தவிர, எம்பரர் வகை தேள், ஆமை, சவன்னா காடுகளில் வசிக்கும் பெரிய வகை பல்லிகள் உள்ளிட்டவையும் வேட்டைக்கு இலக்காகின்றன.  ஆப்பிரிக்காவில் கடந்த 4 வருடங்களில் 27 லட்சம் விலங்குகள் இந்த வகையில் கொல்லப்பட்டு உள்ளன என அந்த அறிக்கையில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஒருபுறம் அமேசான் காடுகள் தீக்கிரையாகி வருகிறது என கூக்குரல் எழும் நேரத்தில் மற்றொரு புறம் இதுபோன்ற விலங்கு வதை செயல்களால் ஆப்பிரிக்காவின் உயிர்ச்சூழல் கட்டமைப்பு சேதமடைவதுடன், நீண்ட கால பொருளாதார மற்றும் வாழ்வியல் பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றன.

இதுபற்றி உலக விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் ஆலோசகரான டாக்டர் நீல் டி குரூஸ், சட்டப்பூர்வ முறையில் விலங்குகள் விற்பனை மேற்கொண்டாலும், இது சரியானது அல்ல.  அவை வன விலங்குகள்.  தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்ல என கூறியுள்ளார்.

மனிதர்களின் தனிப்பட்ட இன்பத்திற்காக வேட்டையாடப்படும் இவற்றுக்கும் வாழ்க்கை உண்டு என நினைப்பதில்லையா? என நீல் டி குரூஸ் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ளி, 4 அக்டோபர், 2019

இந்தியா-பாகிஸ்தான் அணு ஆயுத போர் ஏற்பட்டால் உயிர்ப்பலி - பாதிப்பு யாருக்கு அதிகம்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்,

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக  சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அணுஆயுத போர் ஏற்படும் என எச்சரித்தார். சமீப காலமாக துணைக் கண்டத்தில் அணுசக்தி சொல்லாட்சி அதிக அளவில் கையாளப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே அணு ஆயுத  போர் ஏற்பட்டால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும், யாருக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும்  என ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு அணு ஆயுத போர் ஏற்பட்டால் குறைந்தது 5 கோடி முதல்  12.5 கோடி மக்கள் மரணமடைவதோடு  மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுசக்தி பரிமாற்றம், அடுத்தடுத்த காலநிலை பாதிப்புகளால் உலகெங்கிலும் பெரும் பட்டினியைக் கட்டவிழ்த்து விடும். 


இந்த ஆய்வு அறிக்கை  இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான  அணுஆயுத போர்  ஒரு பிராந்திய மற்றும் உலகளாவிய பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கான சான்றுகளை முன்வைக்கிறது.

உலகளாவிய வளிமண்டல பேரழிவால் உலகம்  பாதிக்கப்படும் என்று  ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது, இருப்பினும் இந்திய நிபுணர்கள்  அத்தகைய மோதலுக்கான வாய்ப்புகள் மிகக்குறைவே என்று தெரிவித்து உள்ளனர்.

சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

 2025 ஆம் ஆண்டில் இரு  நாடுகளுக்கும் இடையிலான அணு ஆயுத போர் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில், அதிநவீன உலகளாவிய காலநிலை மாதிரிகளைப் பயன்படுத்தி உருவகப்படுத்தப்பட்ட இந்தியாவும், பாகிஸ்தானும் முறையே 100 மற்றும் 150  அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இதை பயன்படுத்தினால் 16-36 மில்லியன் டன் சூட் (கருப்பு கார்பன்) புகையை வெளியிடுவதால் அவை மேல் வளிமண்டலத்தில் உயர்ந்து சூரிய கதிர்வீச்சைத் தடுக்கும்.

இது பூமிக்கு வரும் சூரிய ஒளியை   20 முதல் 35 சதவீதம்  வரை குறைத்து, மேற்பரப்பை இரண்டு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை குளிரை கொடுக்கும். கூடுதலாக, கடந்த பனி யுகத்தின் நடுப்பகுதியில் இருந்து பூமியில் காணப்படாத வகையில் வெப்பநிலை குறைந்து வருவதால், கடுமையான குறுகிய கால காலநிலை இடையூறுகள், எரியும் நகரங்களிலிருந்து வரும் புகைகளால் தூண்டப்படும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும்  மக்கள்தொகை அதிகம் கொண்டவை என்பதால், இரு நாடுகளின் நகர்ப்புற மக்கள் தொகையின் அடிப்படையை கொண்டு உயிர் இழப்பு இருக்கும்.  நகர்ப்புற மக்களில் ஒரு சதவீதத்தின் அடிப்படையில்  இருக்கும் பாகிஸ்தானின் இழப்புகள், இந்தியாவிற்கு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.


பாகிஸ்தானை விட இந்தியா இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக உயிரிழப்புகளை சந்திக்கும். ஏனென்றால்  பாகிஸ்தான் இந்தியாவை விட அதிகமான ஆயுதங்களைப் பயன்படுத்தும். ஏனெனில் இந்தியாவில் மிகப் பெரிய மக்கள் தொகை மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் உள்ளன.

பாகிஸ்தானில் அணுசக்தி திறன் கொண்ட விமானங்கள் (எஃப் -16 ஏ / பி மற்றும் மிராஜ் III / வி) 2100 கி.மீ வரை உள்ளன. எட்டு வகையான நில அடிப்படையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் 2750 கி.மீ வரை சாத்தியமான வரம்புகளைக் கொண்டுள்ளன. மேலும் இரண்டு வகையான கப்பல் ஏவுகணைகள் உள்ளன.  இந்தியா முழுவதையும் மிக நீண்ட தூர விநியோக முறைகளால் அடைய முடியும். 100,000 க்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்தியாவில் சுமார் 400 நகரங்கள் (7) இருப்பதால், இந்தியாவில் உள்ள அனைத்து மிதமான மற்றும் பெரிய அளவிலான நகரங்களில் மூன்றில் ஒரு பங்கை விட பாகிஸ்தான் அதன் தற்போதைய ஆயுதக் களஞ்சியத்தையும், 2025 ஆம் ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேலான தாக்குதல்களை நடத்தக்கூடும்.

இந்தியாவின் 2018 ஆயுதக் களஞ்சியத்தில் 130 முதல் 140 அணு ஆயுதங்கள் இருப்பதாக கருதப்படுகிறது, இது 2025 க்குள் 200 ஆக விரிவடையும்  என  கிறிஸ்டென்சன் மற்றும் நோரிஸ் என்ற நிபுணர்கள் கூறுகின்றனர்.  இந்தியாவில் அணு ஆயுதங்கள் சேமிக்கப்படக்கூடிய ஐந்து இடங்களை அவர்கள் பட்டியலிடுகின்றனர், ஆனால் அவற்றின் இருப்பிடங்கள் அடையாளம் காணப்படாத இடங்களிலும் இருப்பதாக அவர்கள் மதிப்பிடுகின்றனர்.

இந்தியாவில் மிராஜ் 2000 எச் மற்றும் ஜாகுவார் ஐஎஸ் / ஐபி உள்ளிட்ட அணுசக்தி திறன் கொண்ட விமானங்கள் உள்ளன. இவை 1850 கி.மீ வரை சென்று தாக்கும்.  இது நான்கு வகையான நில அடிப்படையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டுள்ளது. அவை 3200 கி.மீ வரை  பயன்படுத்தப்படும். 

இந்தியாவில் கப்பல் அடிப்படையிலான பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும்  இரண்டு நீர்மூழ்கிக் கப்பல் சார்ந்த ஏவுகணைகள் உள்ளன . 100,000க்கும் அதிகமான மக்களை கொண்ட பாகிஸ்தானில் சுமார் 60 நகரங்கள் இருப்பதால், பாக்கிஸ்தானில் உள்ள ஒவ்வொரு மிதமான அல்லது பெரிய அளவிலான நகரத்தையும் இந்தியா இரண்டு அணு ஆயுதங்களை கொண்டு அதன் தற்போதைய ஆயுதங்களையும், நான்கு போர்க்கப்பல்களையும் பயன்படுத்தி 2025 க்குள் அதன் ஆயுதங்கள் 250 ஆயுதங்களாக வளர்ந்தால் தாக்கக்கூடும்.

கற்பனை செய்யப்பட்ட சூழ்நிலையில், ஆராய்ச்சியாளர்கள் 400 முதல் 500 அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டனர். இது சுமார் ஆறு ஆண்டுகளில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும்  இருக்கும் அணு ஆயுதமாகும். 

பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்கள் ஹிரோஷிமா அளவிலான குண்டுகள் (15 கிலோடோன் டி.என்.டி) முதல் சில நூறு கிலோடோன் வெடிக்கும் சக்தியை கட்டவிழ்த்து விடக்கூடிய நவீன ஆயுதங்கள் வரை உள்ளன.  இந்த சூழ்நிலையில் இந்தியா 100 அணு ஆயுதங்களை வைத்துள்ளது. பாகிஸ்தான் 150  ஆயுதங்களை வைத்துள்ளது.

அமெரிக்க  மற்றும் ரஷ்யா தற்போது உலகின் மதிப்பிடப்பட்ட 13,900 அணு ஆயுதங்களில் 93 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

அணு ஆயுதம் 2019*

 நாடு

முகாமில்

முகாமில் இல்லாதது

ராணுவ
கையிருப்பு

மொத்தம்

 ரஷ்யா

 1,600c

0d

 2,730e

4,330

6,500f

 அமெரிக்கா

 1,600g

150h

 2,050i

3,800j

6,185k

பிரான்ஸ்

 280l

n.a.

20l

300

300

சீனா

 0m

?

290

290

290m

இங்கிலாந்து

120n

n.a.

95

215

215n

இஸ்ரேல்

 0

n.a.

80

80

80o

பாகிஸ்தான்

 0

n.a.

140-150

140-150

140-150p

இந்தியான

 0

n.a.

130-140

130-140

130-140q

 வடகொரியா

 0

n.a.

?

20-30

20-30r

அமெரிக்கா:

 ~3,600

~150

~5,555

~9,330

 ~13,890

ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில்  ஆசிரியர்களில் ஒருவருமான ஆலன் ரோபோக் கூறியதாவது;-

அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் மழைப்பொழிவை 3 சதவீத  வரை குறைக்கலாம் மற்றும் தாவரங்கள் ஆற்றலை உயிர்ப்பொருளாக சேமித்து வைக்கும் வீதத்தை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கலாம்.

ஓசோன் குறைவு காரணமாக குளிர்ந்த வெப்பநிலை, குறைந்த மழைப்பொழிவு, குறைந்த சூரிய ஒளி மற்றும் அதிக புற ஊதா கதிர்வீச்சு ஆகியவற்றால் பயிர்கள் பாதிக்கப்படும்.

இதே போன்று ஒரு கால நிலை  இந்தோனேசியாவின் இன்றைய சுமத்ராவில் சுமார் 74,000 ஆண்டுகளுக்கு முன்பு டோபா வெடிப்பு போன்ற சூப்பர் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டு  உடனடி காலநிலை மாற்றம் ஏற்பட்டது. இது பூமியின் மிகப்பெரிய வெடிப்புகளில் ஒன்றாகும்.

கொலராடோ பல்கலைக்கழகத்தின் முதன்மை எழுத்தாளரும் பேராசிரியருமான ஓவன் பி டூன் கூறியதாவது;-

எரியும் நகரங்களிலிருந்து வரும் புகை வான் மண்டலத்தில் உயர்ந்து ஒரு வாரங்களுக்குள் உலக அளவில் பரவும். இதனால் பரவலான விவசாய தோல்விகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறினார்.

இது குறித்து டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் பாரத் கர்நாட் கூறியதாவது:-

பகிர்வு கலாச்சாரம் மற்றும் சமூகங்கள் காரணமாக இது  கிட்டத்தட்ட சாத்தியம் இல்லை. இரு நாடுகளும் ஒருபோதும் நிர்மூலமாக்கும் போர்களை நடத்தாது. எனவே போர் ஏற்படும் சூழ்நிலை மிகவும் குறைவாகவே உள்ளன என கூறினார்.

வியாழன், 3 அக்டோபர், 2019

சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம்..!

மொழிப்பெயர்ப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. 

பைபிள் மொழிப்பெயர்பாளரான செய்ண்ட் ஜெரோம் என்பவரின் நினைவாக சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.  கடந்த 1953ம் ஆண்டு சர்வதேச மொழிப்பெயர்ப்பாளர்கள் சம்மேளனம் சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினத்தை கொண்டாட ஆரம்பித்தது. 

இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், கடந்த 2017ம் ஆண்டு முதல் செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என அறிவித்தது.

மொழிப்பெயர்ப்பாளர்களது வேலை உன்னதமாகவும் பல நாடுகளை இணைக்கும் விதமாகவும் உள்ளதால் அவர்களுக்கான சரியான அங்கீகாரம் வழங்கவேண்டும் என்பது மொழிப்பெயர்ப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஒரு நாட்டின் மொழி, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவைகளை மற்ற நாடுகளுக்கு எடுத்துச்செல்வதற்கு மொழிப்பெயர்ப்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. பைபிள், குரானிற்கு அடுத்ததாக தமிழ் மொழியில் இயற்றப்பட்ட திருக்குறள் அதிக அளவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட நூல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது என்றால், அது மொழிப்பெயர்ப்பாளர்களால் மட்டுமே என்று கூறலாம்.