ஞாயிறு, 19 மே, 2019

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் முதல் புகைப்படம் ஏலம்

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் முதல் புகைப்படம் இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

பின்லாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கிறிஸ்டியன் ஸ்னொக் ஹர்கிரன்ஜே  என்பவர்  மெக்காவைப் பற்றியும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும் 1884-1885 ஆம் ஆண்டுகளில் தனது அனுபவம் குறித்து  கடந்த 1889ம் ஆண்டில் புத்தகம் எழுதினார்.

அந்தப் புத்தகத்திற்காக மெக்காவை முதன்முதலில்  அப்துல் கபார் என்பவர் புகைப்படம் எடுத்தார். மேலும் அங்கு வாழ்ந்த சில மக்களையும் பாரம்பரியம் மாறாமல் புகைப்படம் எடுத்திருந்தார். 1884-1885 ஆண்டுகளில் மெக்காவில் தனது அனுபவங்களை கபார் பதிவு செய்தார்.

1886 மற்றும் 1889 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மெக்கா மற்றும் அதன் மக்கள் குறித்து  250 புகைப்படங்கள் மற்றும் ஹஜ் வரௌம் இஸ்லாமியர்களின்   புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து உள்ளார். கபாரின்  படைப்பு  கலை திறமையை வெளிக்காட்டியதாக ஹர்கிரன்ஜே தனது புத்தகத்தில் அதனை போட ஒப்புகொண்டார்.

புக்கி படம் எடுப்பது மட்டுமின்றி கபார் ஒரு பல் மருத்துவர், காவலாளர், துப்பாக்கித் தயாரிப்பாளர் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் ஒரு சித்திர வேலைப்பாட்டாளாராகவும் பணிபுரிந்தார். கபார் மேலும் புகைப்பட தொழில்நுட்பம் குறித்து அறிய ஆர்வம்  காட்டினார்.  அவரது சொந்த புகைப்படம்  ஸ்டூடியோவைப் ஹர்கிரன்ஜே பயன்படுத்துவதற்கு  வழங்கினார்.

எனினும், அவரது மிகுந்த  நவீன புகைப்படநுட்ப ஆர்வம்  ஹர்கிரன்ஜேவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மெக்காவின் புகைப்படம் இந்தோனேஷியாவில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அப்போது அந்தப் புகைப்படம் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

கபாரின் எஞ்சியுள்ள வெளியிடப்படாத படைப்புகள் அல்லது குறைந்தபட்சம் அவருக்குக் கூறும் படங்கள், நெதர்லாந்தில் உள்ள லைடென் பல்கலைக்கழக நூலகத்தில்  ஸ்னொக் ஹர்கிரன்ஜே -ன் காப்பகங்களில் பாதுகாக்கப்படுகிறது  டச்சு புகைப்படக்காரரின் பெயரில் படைப்புகள்  பட்டியலிடப்பட்டுள்ளது.

ஹஜ் பருவத்தின் போது யாத்ரீகர்களின் புகைப்படங்களின் முதல் பெரிய தொகுப்பு  1889 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது, ஹர்கிரன்ஜே   கபாரை  "நான் மக்காவில் இருந்த டாக்டர்" என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

இந்த  மொத்த சேகரிப்பு £ 120,000 ($ 160,000) மதிப்புடையது, மேலும் மெக்காவில் கிஸ்வத் அல் கபாவின் முதல் புகைப்படத்தையும் உள்ளடக்கியது, மசூதி மற்றும் புனித கபாவின் படங்கள், அரபாத் மலையில் உள்ள இஸ்லாமியர்களின்  கூடாரங்கள் மற்றும் மதீனாவின் நபி மசூதி ஆகியவையும் இடம் பெற்று உள்ளன.

மிக நீளமான கவிதை...

தனி ஒருவரால் இயற்றப்பட்ட மிக நீளமான கவிதை, கி.பி. 999-ல் பாரசீகக் கவிஞர் அப்துல் காசிம் மன்சூர் படைத்த, ‘ஷா- நாமா’. பிர் தவுசி என்ற புனைபெயர் கொண்ட கவிஞர் மன்சூரின் இந்தக் கவிதை நூலுக்கு ‘ஷா மன்னர்களின் நூல்’ என்று பொருள்.

இந்த நூலை எழுதும்படி பிர்தவுசியிடம் வேண்டுகோள் விடுத்த, கஸ்னியின் சுல்தான் மெக்மூத், பிர்தவுசியின் ஒவ்வொரு இரட்டை வரிக்கும் தலா ஒரு தங்க தினார் நாணயம் பரிசு வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.

ஆனால் பிர்தவுசி இந்தக் கவிதை நூலை முடித்து சுல்தானிடம் வழங்கியபோது, அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒவ்வொரு இரட்டை வரிக்கும் தங்க நாணயத்துக்குப் பதிலாக வெள்ளி நாணயத்தைக் கொடுத்தார், சுல்தான்.

அதனால் வெறுத்துப்போன பிர்தவுசி, அந்த நாணயங்களில் பாதியை ஒரு பான விற்பனையாளருக்கும், மீதியை ஒரு குளியல் தொட்டி உதவியாளருக்கும் வழங்கிவிட்டார். அதேநேரம், இதனால் சுல்தானின் கோபத்துக்கு ஆளாகக்கூடுமோ என்று அஞ்சி, நாட்டை விட்டே வெளியேறிவிட்டார்.

பல ஆண்டுகள் கழித்து, சுல்தான் மெக்மூத்துக்கு மனம் மாறியது. அவர், 60 ஆயிரம் தங்க நாணயங்கள் மதிப்புள்ள கருநீல மையை கவிஞர் பிர்தவுசிக்கு அனுப்பிவைத்தார்.

அந்த விலைமதிப்பு மிக்க மையைச் சுமந்த வண்டி, பிர்தவுசியின் கிராமத்தை அடைந்தபோது, ஒரு சவ ஊர்வலத்தை எதிர்கொண்டது. அந்தோ பரிதாபம், அது கவிஞர் பிர்தவுசியின் இறுதி ஊர்வலம்.

கவிஞரின் வாரிசாய் கிராமத்தில் இருந்த அவரது மகளும் சுல்தானின் பரிசை ஏற்க மறுத்து விட்டார். கடைசியில், அந்த மையின் விற்பனையின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு கிராமத்தில் இருந்த பொதுச் சத்திரம் சீரமைக்கப்பட்டது.

உலகிலேயே மிகப் பெரிய வெண்கலச் சிலை

ஜப்பானின் நாரா பகுதியின் டோடாய்-ஜி கோவிலில் உள்ள வெண்கலப் புத்தர் சிலைதான், உலகிலேயே பெரிய வெண்கலச் சிலை எனக் கருதப்படுகிறது. ஆனால் இச்சிலை, அதே ஜப்பானின் காமக்கூராவில் உள்ள வெண்கலப் புத்தர் சிலையின் அழகுக்கு இணையாகாது என்கிறார்கள், கலை விமர்சகர்கள். காமக்கூரா சிலை, கி.பி. 1252-ல் வடிக்கப்பட்டதாகும். வெள்ளியாலான நெற்றியும், தங்கத்தாலான கண்களும் இச்சிலையின் தனிச்சிறப்பு. காமக்கூரா புத்தர் சிலையின் அடித்தள சுற்றளவு 29 மீட்டர்கள். 15 மீட்டர் உயரம் கொண்ட இச்சிலையின் மொத்த எடை, 450 டன்கள்!

டயானா மரணம்: மவுனம் கலைத்தார் இளவரசர் வில்லியம்

லண்டன்,

இங்கிலாந்து இளவரசி டயானா, தனது 36-வது வயதில் 1997-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒட்டு மொத்த மனித குலத்தின் அன்பை ஒருசேரப் பெற்றிருந்த அவரது மரணம், உலக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது.

இளவரசர் சார்லஸ்சை பிரிந்து வாழ்ந்த நிலையில் அவர் இறந்தது பல்வேறு சர்ச்சைகளை அப்போது கிளப்பியது. சார்லஸ்-டயானா தம்பதியின் மகன்களான இளவரசர்கள் வில்லியமும், ஹாரியும் தங்கள் தாயின் மரணம் குறித்து வெளிப்படையாக பேசியது இல்லை.

இந்த நிலையில் தற்போது பி.பி.சி. டி.வி. தயாரித்துள்ள மனநலம் பற்றிய ஆவணப்படத்தில் இளவரசர் வில்லியம் மனம் திறந்து பேசி உள்ளார்.

அதில் அவர், “என் அம்மா டயானா இறந்தபோது பிற எந்த வலியை விடவும் கொடிய மன வலியை அனுபவித்தேன். கடினமான தருணங்களில் இங்கிலாந்து மரபுப்படி வாய் திறந்து பேசுவதில்லை. சற்று அதில் இருந்து வெளியே வர வேண்டும் அல்லவா? நாம் ஒன்றும் ரோபோக்கள் இல்லை. வாய் திறந்து நமது உணர்வுகளை சொல்லித்தானே ஆகவேண்டியது இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இதுபற்றி நான் நிறைய யோசித்துப் பார்த்து இருக்கிறேன். நான் ஏன் அப்படி உணர்ந்தேன் என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் மிக இளம் வயதில் நாம் இருக்கிறபோது, நமது அன்புக்குரியவர்கள் மரணத்தை தழுவினால் அடைகிற மன வலி பிற வலிகளைப்போல இல்லை.” என்றார்.

மேலும், தான் ஆம்புலன்ஸ் விமானத்தில் விமானியாக இருந்தது பற்றியும் குறிப்பிட்ட அவர், “மரணம் என்பது நமது அருகே இருக்கிறது என்று உணர்ந்துள்ளேன்” என்று சொன்னார்.

இந்த ஆவணப்படம் பி.பி.சி. டி.வி. சேனலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பு ஆகிறது.

சர்வதேச அருங்காட்சியக தினம் May 18

உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. அதில் சில வரலாற்று மாற்றங்களாக மாறுகின்றன. அதற்கு சிறந்த சான்றாக விளங்குவது அருங்காட்சியகம். இன்று சர்வதேச அருங்காட்சியக தினம். 

மனிதர்களின் வரலாறு, கண்டுபிடிப்பு, கலாச்சாரம், மரபுகள், பண்பாடு போன்றவற்றை பாதுக்காத்து எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் அமைப்பதற்கு உதவியாக இருப்பது அருங்காட்சியங்கள் மட்டும் தான்.

 இப்படி பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த அருங்காட்சியங்களை மக்கள் உணர்ந்துகொள்ளவும், அதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காவும், சர்வதேச பன்னாட்டு கூட்டமைப்பு , 1977ஆம் ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக தினத்தை கடைபிடிக்கத்தொடங்கியது. 

இந்த தினத்தில் முக்கியமாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான 4 அருங்காட்சியகங்கள்:

1. பாரிஸில் உள்ள லூவர் (LOUVRE) அருங்காட்சியகம்:

மன்னர்களின் அரண்மனையாக இருந்த இந்த கட்டடம், கடந்த 2 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இங்குதான் புகழ்பெற்ற மோனாலிசா வரைபடம் வைக்கப்பட்டுள்ளது.


2. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்:

1753ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில், புத்தகங்கள், ஆதிகாலத்து பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


3. கியார்கோவில் உள்ள எஜிப்தியன் அருங்காட்சியகம்:

எகிப்தியர்களின் முக்கிய அம்சங்களான மம்மிக்கள், எகிப்து வரலாறு உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கியுள்ள இந்த அருங்காட்சியகம், இன்றும் உலக மக்கள் பலரால் விரும்பப்படும் ஒரு இடமாகவே இருக்கிறது.


4. நியூ யார்க்கில் உள்ள மெட்ரோபாலிடன் அருங்காட்சியகம்:

20 லட்சத்திற்கும் ஆதிகமான ஐரோப்பிய மக்களின் கலைப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆதாம் மற்றும் ஏவாலின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு.


சனி, 18 மே, 2019

‘இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது’ கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சை கருத்து

‘இந்து’ என்ற சொல் மாற்றான் கொடுத்தது என கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின்போது ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. கமல்ஹாசனை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த பரபரப்புக்கு இடையே திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது கமல்ஹாசனை நோக்கி, செருப்பு, கல், முட்டை வீசப்பட்டது. பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று கமல்ஹாசன் சூலூரில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

வீடியோ மூலம் பிரசாரம்

இந்நிலையில் ‘பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்துக்கு நன்றி. இதோ என்னுடைய பரப்புரை காண...’ என்று தலைப்பிட்டு தனது டுவிட்டர் பதிவில், 3 நிமிடம் 26 வினாடிகள் ஓடும் வீடியோ காட்சியை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் ஆக்ரோஷமாக பேசிய கமல்ஹாசன், நிறைவாக ‘மாற்ற வேண்டியவர்களை மாற்றி விட்டால், இந்த நாடே மாறிவிடும்’ என்று கூறுகிறார்.

‘இந்து’

இதனிடையே தன் மீதான சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, கமல்ஹாசன் டுவிட்டரில் நேற்று மாலை மீண்டும் ஒரு பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறது மத்திய-மாநில அரசுகள். மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. ஆழ்வார்களோ, நாயன்மார்களே, ‘இந்து’ என்ற வார்த்தையை சொல்லவில்லை.

முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவர்களால் ‘இந்து’ என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘பெயராக’, ‘மதமாக’ கொள்வது எத்தகைய அறியாமை.

ஆன்மிக ரீதியாக பிழை

நாம் ‘இந்தியர்’ என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக அரசியல் மற்றும் ஆன்மிக ரீதியாக பிழையான தேர்வாகும்.

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கிறோம். ‘கோடி’ன்ன உடனே ‘பணம்’ ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி!! ‘தமிழா’ நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளி, 17 மே, 2019

காஃபி குடிப்பது உடலுக்கு நல்லதா கெட்டதா...? விடை கண்டுபிடித்த மருத்துவர்கள்...!

உலகில் உள்ள மக்களில் பெரும்பாலானோர், மகிழ்ச்சியாகவோ, கோவமாகவோ அல்லது சோர்வாகவோ இருந்தாலோ காஃபி அருந்திவிட்டுதான் அடுத்த வேலைக்கு செல்வர். இன்னும் சிலருக்கோ, காஃபி அருந்தாமல் எந்த வேலையும் ஓடாது. இன்னும் சிலரோ அடிக்கடி காஃபி அருந்துவர்.

இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், காஃபி அருந்துவது உடலுக்கு நல்லதா தீங்கா என்ற பல கேள்விகள் நம்முள் வந்துபோகும். அதற்கான சரியான விடை கொடுக்க முடியாமல் திணறிய மருத்துவர்கள், இறுதியாக அதற்கான விடையை கண்டுபிடித்துவிட்டனர்.

ஒரு நாளில், 6 அல்லது 6-க்கு மேற்பட்ட கப் காஃபி குடிப்பது உடலுக்கு கெடுதியை விளைவிப்பதோடு இருதய கோளாறு ஏற்பட வாய்ப்பிருப்பதாக சமீபத்தில் American Journal of Clinical Nutrition வெளியிட்ட ஆய்வு முடிவுகள் கூறுகிறது. ஒரு நாளைக்கு எவ்வளவு காஃபி அருந்தலாம் என்பதை தெளிவாக கூறுவது இதுவே முதல்முறை.

காஃபியில் இருக்கும் Caffeine என்ற வேதிப்பொருள், குறிப்பிட்ட சில அளவை தாண்டும்போது ரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, ஒரு நாளைக்கு 6-க்கும் குறைவான கப் காஃபி குடிப்பதே சரியானது என காஃபி குறித்து ஆய்வுசெய்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் தீமை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் என்னென்ன என்பதை அறிந்து அதற்கேற்பவாறு உணவு உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 

கடலின் அடிமட்டம் வரை சென்றுள்ள ப்ளாஸ்டிக்...!

உலகில், ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ப்ளாஸ்டிக் குப்பைகள் நிறைந்துள்ளது. 

சில வாரங்களுக்கு முன்னர், எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 3000 கிலோ ப்ளாஸ்டிக் அகற்றப்பட்டது என தகவல் வெளியான நிலையில், கடலின் அடி மட்டத்திலும் ப்ளாஸ்டிக் குப்பைகள் இருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விக்டர் வெஸ்கோவோ என்ற ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி, உலகின் மிக ஆழமான பகுதியான மரியானா ட்ரென்ச் (Mariana Trench) என்ற இடத்திற்கு நீர்மூழ்கி கப்பல் மூலம் சென்றார். அங்கு அவர் எடுத்த புகைப்படத்தின்மூலம், கடலின் ஆழத்திலும் ப்ளாஸ்டிக் குப்பை இருப்பது தெரியவந்துள்ளது. 

அந்த புகைப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான வழி குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது. ப்ளாஸ்டிக் பொருட்களின் தீங்கினை உணர்ந்து அதற்கான தடைகளை பிறப்பித்தபோதிலும், ப்ளாஸ்டிக் பயன்பாடு இன்னும் முற்றிலுமாக ஒழியவில்லை. 

ப்ளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டு கடல்வாழ் உயிரினங்கள் பல அழிந்துவரும் சூழலில் ப்ளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பெருக வேண்டியது அவசியமாகிறது. 

“வாக்களிக்காவிட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து...!”  சோம்பேறி குடிமகன்களுக்கு செக் வைத்த அரசு!

வாக்காளர்கள் தேர்தலில் தங்களது வாக்கை செலுத்தாவிட்டால் அபராதம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யபடும் என்ற ஆஸ்திரேலியா அரசின் சட்டம் அனைத்து நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அஸ்திரேலிய நாட்டில் பொதுமக்கள், தேர்தல்களில் வாக்களிகாமல் இருப்பதை தடுக்கும் வகையில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதன்படி அந்நாட்டு தேர்தல்களில் வாக்களிக்க தவறுபவர்கள் தகுந்த காரணத்தை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அப்படி அளிக்காவிட்டால் அவர்களுக்கு முதற்கட்டமாக 1400 ரூபாயும், தாமதமாக கட்டுபவர்களுக்கு 12000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் இதனை பொருட்படுத்தாமல், ஆஸ்திரேலியாவில் நடக்கும் மாநில அரசுக்கான தேர்தலில், வாக்களிக்க தவறுபவர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் உரிமங்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்  என அந்நாட்டு தேர்தல் அணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை எனக்கூறி டார்வின் பென்சினர் என்பவர் 21 ஆயிரம் ரூபாய் அபராதமாக கட்டியுள்ளார்.

இது மாதிரியான சட்டங்களை இந்தியா போன்ற பிற நாடுகளிலும் விதிக்கப்படவேண்டும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில், நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலில் இந்திய தலைநகர் டெல்லியில் 60% சதவிகித வாக்கு மட்டுமே பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.