செவ்வாய், 1 நவம்பர், 2016

ஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா?

"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை
தூய உரு பளிங்கு போல்வாள் என்உள்ளத்
துள்ளே  இருப்பள் இங்கு வாறாது இடர்".

                                                             கம்பர்


வாத்ஸ்யாயனர் எழுதிய 64 கலைகளுக்கு யசோதரா எழுதிய உரையும் லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஸ்கர ராயர் எழுதிய உரையும் 64 கலைகள் பற்றி நிறைய விஷயங்களைத் தருகின்றன. இதில் உள்ள விஷயங்கள் வியத்தகு விஷயங்கள். ஒவ்வொரு பெண்ணும், இளவரசன் இளவரசியும் இசை, நடனம், ஓவியம், வீட்டு அலங்காரம், சிகை அலங்காரம், பூ வேலைப்பாடுகள், கடிதம் எழுதல், மொழிகள், ரகசியக் குறியீடுகள் கற்றல், பறவை வளர்த்தல், அவைகளைப் பேசப்பழக்குதல், வாசனைத் திரவியங்கள் செய்தல், மூலிகை சிகிச்சை தருதல், மசாஜ் செய்தல், சமைத்தல், சூதாடுதல், இந்திரஜால வித்தைகள் செய்தல் இப்படி எத்தனையோ கலைகளைப் பயின்றனர்.
சிலர் நினைக்கலாம் ஆண்களுக்கு எதற்கு இவ்வளவு கலைகள் என்று. பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்த காலத்தில் ஒவ்வொரு கலையும் அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவியது என்பதைப் படித்திருக்கிறோம்.

64 கலைகள் இருப்பதாக நாம்  அறிவோம். அவைகளை விளக்கமாக காண்போம்

1)  எழுத்திலக்கணம்

    மொழியை வரி வடிவம் செய்தல்-
    அ, இ, உ, எ, ஒ, ஒள இதுவே உயிரின் வரி வடிவம்.

2) இயாப்பு இலக்கணம் 
     
    எழுதும் போது காற்புள்ளி,அரைபுள்ளி, கேள்விக் குறி ,ஆச்சரிய குறி இட்டு எழுதுவது.

3) கணிதம்

    கணித்தல் (கூட்டல் ,கழித்தல், பெருக்கல்....)
    மொழியை அளத்தல்(மாத்திரை)

4) மறை

  ஐந்து வகை மறைகள். உயிர், மெய், உயிர்மெய், ஆயுதம், பிரணவம்(குருவின் மூலம் அறிதல்)

5) புராணம்

    புராணம் - வரலாறு. இது பதினெட்டு வகைப் படும். அவைகள்
    சைவம்,வைணவம் ,பிரம்மம் ,பதுமம், பாகவதம், நாரதீயம்,மார்கண்டேயம் ,ஆக்னேயம் ,பவிடியம், வராகம் ,கூர்மம் ,வாவியம் காருடம், வாமணம் ,இலிங்கம், மச்சம், காந்தம், பிரம்மம் ,வர்த்தம் என்பன.

6) வியாகரணம்

    மொழி இலக்கணம் (பேசுவது)

7) சோதிடம்
    
    சூரியனை மையப்படுத்தி கோள்களை கணித்தல்

8) நீதி சாத்திரம்

    உண்மையை பேசுவது

9) இயோக சாத்திரம்

    இறைவனை சிந்திக்க கூறும் வழிபாடுகள்.

10) தர்ம சாத்திரம்

    சன் மார்க்கம் ,தாச மார்க்கம்,  சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம் என்னும் தர்மங்களை கூறுவது.

11) மந்திர சாத்திரம்

    ஒலிகளை அறிதலும், அறிவித்தலும்

12) சிற்ப சாத்திரம்

    உருவங்களை அமைக்க நீள, அகல, உயர, கணம் இவற்றின் அளவுகளை கூறுதல்.

13) உருவ சாத்திரம்

    ஓர் உருவத்தின் குணங்களை கூறுவது. இவை சாமுத்திரிகா இலட்சணம் என்பர்.

14) சகுண சாத்திரம்

    நன்மை/தீமைகளை அறிதல்

15) காவியம்


    சீவனின் எட்டு குணங்களை கூறுவது.

16) அலங்காரம்


    மொழி, யாப்பு இலக்கணம், உடை, ஆபரணம் இவற்றை அழகு பட கூறுவது.

17) மதுரம்


    இனிமை(மொழி, கவி, குரல் ) இவைப் பற்றிய கலை

18) நாடகம்

    கூத்தாடுதல் (இசைக்கு ஏற்ப ஆடும் கலை)

19) சத்தப் பிரமம்


    பல வகையான ஒலிகளை வாத்திய கருவிகளில் ஏற்படுத்தி  ஒலிக்க செய்வது.( யாழ், குழல், வீணை)

20) வீணை


    யாழிசை, நரம்பு கொண்டு இசைப்பது. யாழ்பாணன் (இலங்கேசுவரன்) ஏற்படுத்தியது.

21) நிருத்தம்

    யாழ் இசைக்கேற்ப நடனம் புறிதல்

22) தாளம்
    
    இசைக்கருவிகளின் ஒலி அளவை முறைப்படுத்துதல்.

23) வேணு

    துளைக்  கருவிகளை வாசித்தல் (புல்லாங்குழல், தாரை, நாதசுரம் போன்றவை)


24) மிருதங்கம்

    மிருகங்களின் தோலில்  செய்யும் கருவிகளை வாசித்தல்

25) இரத பரிட்சை

    தேர் ஓட்டும் கலை. (இக்காலத்தில் வாகனங்களை இயக்கும் கலை)

26) கச பரிட்சை


    யானை யின் குண நலம், அடக்கும் முறை, போருக்கு பயன்படுத்தல் போன்றவற்றை விளக்கும் கலை

27) கனக பரிட்சை


    உலோகங்களை சோதித்து தரம் நிர்ணயிக்கும் கலை.

28) அசுவ பரிட்சை


    குதிரைகளின் குணநலம், பயன்பாடுகள்  கூறும் கலை

29) இரத்தின பரிட்சை


    9 இரத்தினங்களின் தரம், குணம், ஒளித் தன்மை முதலியவற்றை கூறும் கலை

30) அத்திரம் பரிட்சை

    வில் ஏவும் கலை. ( இக்காலத்தில் துப்பாக்கி, பீரங்கி இயக்குதல்)

31) படை இலக்கணம்

    படைகளை (முப்படைகள்) வழி நடத்தும் கலை.

32) இரச வாதம்

    பாதரசத்தைக்  கொண்டு தாழ்ந்த  உலோகங்களை உயர்ந்த உலோகமாக மாற்றும் கலை.

33  பூமி பரிட்சை


    பூமியில் உள்ள வளங்களை கண்டறியும் கலை.

34)  வசீகரம்

    மற்றவர்களை தன் பால் ஈர்க்கும்  கலை.

35) மோகனம்

    ஒருவரை மற்றவர் மீது மோகம் செய்விக்கும் கலை

36) ஆக்ருனம்

     தன் குணத்தை மற்றவர்  ஏற்று கொள்ள செய்யும் கலை

37) உச்சாடனம்


    பிறரை ஓரிடத்திலிருந்து விரட்டும் கலை.

38) மதனம்


    சிற்றின்பம் நுகரும் கலை

39) மல்யுத்தம்


    ஆயுதம் இல்லாமல் யுத்தம் செய்யும் கலை

40) வித்துவேதனம்


    மற்றவர்களுக்கு நன்மை/தீமைகள் செய்தல் (நோயும் பரிகாரமும்).

41) முட்டி

    ஆயுதம் இல்லாமல் தீமைகள் தடுத்துக் கொள்ளும் கலை

42) நட்டம்

    நடனக்கலையின் தன்மைகளை கூறும் கலை.

43) காருடம்


    நஞ்சை(விடம்) முறிக்கும் கலை.

44)  கவுத்துவம்

    பிறரை ஊமையாக்கும் கலை.

45) பைபீலம்

    பறவை, மிருகம், ஊர்வன இவற்றை  மயங்க செய்யும் கலை.

46) காந்தருவம்


    பல வாத்தியக்கருவிகளை சிறப்பாக இயக்கும் கலை.

47) கமனம்


    அந்தரத்தில் நடக்கும் கலை.

48) பிரவேசம்

    வேரோர் உடம்பில் புகும் கலை.

49) ஆகாயப் பிரவேசம்


     ஆகாயத்தில் மறையும் கலை.

50) அதிரிசயம்


    தானும், மற்ற பொருள்களையும்  தோன்றி மறைக்கும் கலை.


51) இந்திர சாலம்

    காணாத பெருளை காட்டும் கலை.

52) மகேந்திர சாலம்

    வானத்தில் அதிசயம் செய்யும் கலை.

53) அக்கனி தம்பம்


    நெருப்பை வசம் செய்யும் கலை.

54) சலதம்பம்

    நீரில் நடக்கும் கலை.

55) வாயு தம்பம்

    காற்றில் மிதக்கும் கலை.

56) நிட்டி தம்பம்

    கண் மூலம் ஆயுதங்களை வலுவிழக்க செய்யும் கலை.

57) வாக்கு தம்பம்


    தன் வாக்குக்கு (சொற்களுக்கு) எதிர் வாதம் இல்லாமல் செய்யும் கலை.

58) சுக்கிலத்  தம்பம்

    விந்துவை நிறுத்தி நீண்ட கலவி செய்யும் கலை.

59) கன்னத்தம்பம்

    மறைந்தவைகளை /நடந்து முடிந்த கடந்த கால நிகழ்வை கூறும் கலை.

60) கட்க தம்பம்

    கூர் ஆயுதத்தை வலுவிழக்கச் செய்யும் கலை.

61) தாது வாதம்

    உலோகங்கள்/ தாதுக்களையும் பயன்படித்தும் கலை.

62) இதிகாசம்

    சிவ ரகசியம்(51) அச்சரத்தை இயக்கும் உன்னத கலை.

63) வைத்தியம்    (சித்த வைத்தியம் / ஆயுள் வேதம்)

    சித்த வைத்தியம் - சித்தர்கள் கூறியது
    ஆயுள் வேதம்    - இலங்கேசுவரன் கூறியது
    ஒளடதங்கள்       - உடலைக் காத்து நாதம் விந்து கலைகளை கூட்டி கல்ப தேகம் பெறிவது.

64) சாகாக்கலை

    மரணமில்லா பெரு வாழ்வு ஆதி என்னும் சோதியில் இந்த உடலைக் கலக்கச் செய்யும் கலை.

64 கலைகளில் சில கலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதில் வரும் வருமானத்தைப் பார்ப்போம். ‘கந்தயுக்தி’– என்னும் கலை உடலில் பூசும் வாசனைத் திரவத்தைத் தயாரிப்பது எப்படி என்று சொல்லுகிறது. இன்று ‘பெர்ப்யூம்’ என்ற பெயரில் பெண்கள் பயன்படுத்துவதை இந்தியாதான் முதலில் ஏறுமதி செய்தது. கடவுளுக்கு செய்யப்படும் 16 உபசாரங்களில் (ஸோடசோபசாரம்) வாசனைப் பொருள் சார்த்துவது ஒரு உபசாரம்! இந்துக்களின் தினசரி வாழ்வே 64 கலைகள்தான்!!
1,74,720 சென்ட் வகைகள்!!!!
இந்தியாவில் ஒரு லட்சத்து எழுபத்து நாலாயிரத்து, எழு நூற்று இருபது வாசனைத் திரவியங்கள் இருந்ததாக வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதா கூறுகிறது. இந்த நூலும் நூலின் மீது எழுந்த உரைகளும் இதுபற்றி மிக விரிவாக எழுதி இருக்கின்றன (காண்க:– பிருஹத் சம்ஹிதா , அத்தியாயம் 77 மற்றும் அதன் பாஷ்யம்). இன்று இந்த வணிகம் கோடி கோடியாகப் பணம் குவிக்கும் தொழிலாக விளங்குகிறது. பிரான்ஸின் தலைநகரான பாரீஸ் இதில் முண்ணனியில் நிற்கிறது.
பூ வியாபாரத்தை எடுத்துக் கொண்டால் தமிழர்கள்தான் இதை ஆதிகாலம் முதல் செய்து வந்ததை சங்க இலக்கியத்தில் இருந்து அறிகிறோம். ஆனால் இன்று உலகில் ஹாலந்து முதலிய நாடுகள்தான் பூ ஏற்றுமதியில் முன்னனியில் நின்று கோடி கோடியாகக் குவிக்கின்றன. முடி அலங்காரம் உலகில் ஒரு பெரிய பிஸினஸ். இதிலும் நாம் முதலிடத்தில் இல்லை. உண்மையில் வாத்ஸ்யாயனர் எழுதிய எல்லாக் கலைகளையும் நாம் முறையாகப் பயின்று, மற்றவர்களையும் பயிற்றுவித்து நிறைய சம்பாதித்து இருக்கலாம். கோட்டை விட்டுவிட்டோம்.
சென்றதை எண்ணி வருந்துவதை விட இன்று சீனா என்ன செய்கிறது என்று பார்த்தால் நம்க்கு உத்வேகம் பிறக்கும். அமெரிக்கா முழுதும் ஒரு டாலர் கடைகளையும், பிரிட்டன் முழுதும் ஒரு பவுண்ட் கடைகளையும் திறந்து வியாபாரத்தில் சக்கைப் போடு போடுகிறது. அந்தக் கடைகளில் எதை எடுத்தாலும் ஒரு டாலர் அல்லது ஒரு பவுண்ட்தான்! ஊசி நூல் முதல் இந்துமத கடவுளர் படங்கள் வரை எல்லாம் சீனாவில் இருந்து வருகிறது!
64 கலைகள் நமக்கு உணர்த்தும் மிகப் பெரிய உண்மை என்னவென்றால் மனித இனத்திற்கு நாகரீகத்தைக் கற்பித்ததே இந்தியர்கள்தான். நாகரீகம் என்பது இந்தியாவில் உதித்து உலகம் எங்கும் பரவியது. இதற்கு ஆதாரம் என்ன? உலகில் உணவு, உறைவிடம், உடை ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால்தான் இசையும் நடனமும் இலக்கியங்களும் மலரும். நமது நாட்டில் 3000 ஆண்டுகளுக்கு முன் இவை மலர்ந்ததோடு இன்றுவரை நீடிக்கவும் செய்கின்றன.வேதத்தில் நாட்டியம் பற்றி உள்ளது, சிந்து சமவெளி சிலைகளில் பரத நாட்டியம் இருக்கிறது. இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
மற்ற எகிப்து, கிரேக்கம், மத்திய கிழக்கு நாட்டு நாகரீகங்கள் வாழ்ந்து முடிந்து கல்லறைக்குப் போய்விட்டன. அவர்கள் எல்லோரும் எழுதிப் படிப்பதற்கு முன்னால் நாம் ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தோம் அத்தனையும் சிந்தனைத் தேன். புத்தரும் ,மஹாவீரரும், ஏசுவும், சொராஸ்ட்ரரும் , கன்பூசியஸும் தோன்றும் முன்னர் நாம் 108 உபநிஷதங்களுக்கு மேல் எழுதிக் குவித்தோம். நாம் எழுதாத பொருள் இல்லை என்னும் அளவுக்கு எல்லாவற்றையும் எழுதினோம். அவைகளில் முதலில் நின்றது ஒன்றே நம் நாகரீக முன்னேற்றத்திற்குச் சான்று.
நம் முன்னோர்களின் அறிவுத்தரத்தை எண்ணி பாருங்கள் !
உலகில் எங்கும் காணாத அற்புத கலை வளர்த்த கலைகள். தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்

திங்கள், 24 அக்டோபர், 2016

ஆன்மா சாந்திகொள்ள தமிழன்னை தயை புரிவாள்...

முழு வெள்ளை உடையணிந்து உடல், முகத்துக்கும் முழுவதுமாக பவுடர் பூசி லிப்டிக்கால் முகம் முழுவதும் வரைந்து கொண்டு "அண்ணா கெட்டப் ஓகேயா" என்று முன்வந்து நின்றான். அவனை பார்த்ததும் படப்பிடிப்புதளத்தில் எனக்கு மட்டுமல்ல! தொழிநுட்பகுழு மற்றும் பங்குபற்றிய யாழ்.பல்கலைகழக மாணவர்களிடையே "குபீர்" என்ற சிரிப்பொலியே எழுந்தது… 

சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்ள் சுலக்‌ஷன் மற்றும் கஜன்
இரு அரக்கவேடம் தரித்த கதாபாத்திரத்தில் ஒருவனாக அவனே தனக்குதானே மேக்கப் போட்டு கொண்டு ஜோக்கர் போல முன்வந்து நின்றான். பார்த்த கெட்டப்பில் பயம் வரவில்லை. சிரிப்பொலியே எழுந்தது. அந்தளவுக்கு நகைச்சுவை உணர்வு மிக்கவன். அந்த சந்தர்ப்பத்தில் பதிந்த முகத்தை மீண்டும் இரைமீட்டிப்பார்க்கும் போது மரண செய்தியாகத்தான் தம்பியின்முகம் தெரிகிறது.

     
பாதித் தூரத்திலே பயணம் முடக்கப்பட்ட 'சுலக்‌ஷன்', 'கஜன்' இரு தம்பிமார்களே..
உங்கள் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாத ஒன்று!!!!
என் இதயம் மிகையாய் துடிக்கிறது வெறுப்பில்...
உன் ஆன்மா சாந்திகொள்ள தமிழன்னை அவள் தயை புரிவாள்…

மனஉலைச்சலுடன்
- அ. எல்றோய் - 

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

உலகின் முதல் பத்து பழமையான மொழிகள் - முதல் இடத்தில் தமிழ் மொழி

கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழினம் என்பதற்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பதற்கான மற்றுமொரு சான்று இது. கல் என்பது கல்வி, மண் என்பது மன்னர் ஆட்சி. கல்வியும், மன்னராட்சியும் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய இனம் தமிழினம். இலக்கணத்தை மொழிக்கு மட்டுமின்றி, வாழ்வியலுக்கும் வகுத்த இனம் தமிழினம், தமிழர்கள்!!! உலகில் பேசப்பட்டு வரும் பழமையான மொழிகளில் முதல் மொழி தமிழென்று சமீபத்திய ஆய்வும் ஊர்ஜிதம் செய்துள்ளது

10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian) இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian) கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew) இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic) அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

5 வது இடத்தில் சீன மொழி (Chinese) சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

4 வது இடத்தில் கிரீக் (Greek) கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian) ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit) இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil) 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

சர்வதேச சினிமா: இயற்கையைப் புரிந்துகொள்ளாத உலகம்!


அல்பிநொய் (ஐஸ்லாந்து)

நாளுக்குநாள் உலகம் மாறிவருகிறது என்பதே, மனிதர்கள் இடையிலான புரிதலை நோக்கி உலகம் நகர்வதின் தேவையை உணர்வதுதான் என்கிறது ‘அல் பி னோய்' எனும் ஐஸ்லாந்துத் திரைப்படம்.

ஐஸ்லாந்து நாட்டின் மேற்கு ஃஜோர்ட்ஸ் பகுதியின் ஒரு சிறிய நகரம். கடலையும் மலையையும் தொட்டுக்கொண்டு இருக்கும் ஊரில் இரவெல்லாம் பனிப் பொழிவு. உறை பனி வீட்டுவாசலை அடைத்துக்கொள்ள, காலையில் எழுந்து அதை அகற்றினால்தான் வீட்டைவிட்டு வெளியே வரமுடியும். நொய் எனும் டீன்ஏஜ் பையனுக்கு ஒவ்வொரு நாளும் இது பெரிய மெனக்கெடல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஒரு நீளக் கம்புப் பிடிகொண்ட மண்வெட்டியை எடுத்துவந்து வாசலை அடைத்து நிற்கும் உறைபனியைச் சிறிதுசிறிதாக வெட்டத் தொடங்குவான். முழுவதும் அகற்றி வழி சமைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். உண்மையில் இதைக்கூட அவன் ஒரு கை பார்த்துவிடுவான். ஆனால் மோசமாக நடந்துகொள்ளும் மனிதர்களை?

பள்ளிக்கு வெளியே...

கணக்குப் பாடமென்றால் கசக்கும் நொய், பள்ளியில் கணிதத் தேர்வுகளில் அடுத்தடுத்து மட்டமான மதிப்பெண் பெறும் அவனது பிரச்சினை தலைமையாசிரியருக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. மாணவர்களுக்கான மனநல ஆலோசகரும் வரவழைக்கப்படுகிறார்.

அவரோ கேவலமான கேள்விகளை இவனிடம் கேட்கிறார். இவனும் பதிலுக்கு அதே கேள்விகளை அவரிடம் ஏடாகூடமாகத் திருப்பிக் கேட்கிறான். வந்தவர் ஒருகணம் தடுமாறிவிட்டுப் பின்னரும் கேள்விகளை தொடர்கிறார். வெவ்வேறு கேள்விகளில் ஒரேயொரு கேள்விக்குத்தான் ஒழுங்காகப் பதில் வருகிறது அவனிடமிருந்து.

பொது அறிவைப் பரிசோதிக்க கேட்கப்படும் கேள்விகளில் எந்தப் பிரச்சினையுமில்லை. பொதுஅறிவு மற்றவர்களைவிட அதிகம் பெற்றவன் அவன். அவனைப் போன்றவர்களை என்ன செய்ய வேண்டும் எப்படி வழிக்குக் கொண்டுவரவேண்டுமென்பதில் உள்ள சிக்கல்களை வித்தியாசமாகவே அணுக வேண்டும். பல நேரங்களில் பாடம் கற்பிக்கும் விதங்களில் சலிப்பையே காணும் அவன், அடிக்கடி செல்லுமிடம் கடற்கரை அருங்காட்சியகம். அதற்கடுத்து பெட்ரோல் பங்க் அருகிலுள்ள கேம் ஷோ கடையொன்றில் போய் உட்கார்ந்துவிடுகிறான். அதில் ஏதாவது பரிசு விழுந்தால் அதிலும் ஒரு அற்ப மகிழ்ச்சி.

உண்மையில் மேல்நிலைப் பள்ளிகளில் ஆர்வக் குறைபாடுள்ள மாணவர்களை வழிக்குக் கொண்டுவர கண்டுபிடிக்க வேண்டிய புதிய வழிகளை விவாதப்படுத்தவே இக்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் நொய் என்பவனின் பள்ளி வாழ்க்கை தவிர, பல்வேறு உலகங்கள் காட்டப்படுகின்றன. அது மட்டுமின்றி அவன் பொருட்டு இயற்கையோடு மனிதனுக்கு இருக்க வேண்டியுள்ள கவனத்தையும் இப்படம் சர்-ரியலிசத் தன்மையோடு முன்வைக்கிறது.



நிலவறை எனும் தாய்மடி

தாயை இழந்த நொய்க்கு பாட்டிதான் எல்லாம். உள்ளூரில் டாக்ஸி ஓட்டும் நேரம் போக எந்நேரமும் மதுவின் மயக்கத்தில் இருக்கும் தந்தையின் அரவணைப்பு எதிர்பார்க்க முடியாதது. நண்பர்களிடமும் முரண்பாடுகள். எல்லோராலும் தனித்துவிடப்படும் நொய், சென்று தஞ்சமடையும் வேறு சில இடங்களும் உண்டு. அதில் ஒன்று உள்ளூர் புத்தகக் கடை. அடுத்தது பாட்டி வீட்டில் தரைக்குக் கீழுள்ள நிலவறை. பாட்டி அவனுக்குப் பரிசாகக் கொடுத்த பூதக்கண்ணாடிதான் அவனது பிறிதொரு உலகம். அதைக்கொண்டு ஊருக்கு வெளியேயுள்ள கடலையும் மலையும் ரசிப்பான்! நிகழப்போகும் மாற்றத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிப்பான்.

மனிதநேசம் குறித்து ஏமாற்றங்களையே சந்திக்கும் ஒருவன் தஞ்சமடையும் இடம் புத்தகங்கள். அடுத்தது பூமிக்குக் கீழுள்ள நிலவறை.அதன் பின் இயற்கைக் காட்சிகள்.

அவனைப் புரிந்துகொள்ளாத உலகம் விரும்புவதோ லாடம் கட்டிக்கொண்ட அட்டவணை வாழ்க்கை. பாடப் புத்தகங்களைத் தாண்டாமல் இருந்தால் பெரிய பெரிய உயரத்துக்குப் போகலாம் என்கிற கணக்கு. அசாதாரண தேடல்கள் எதுவும் தேவையில்லை. இதிலிருந்து முற்றிலும் மாறுபடும் நொய்யின் பாத்திரத்தை வடித்த விதம் இயக்குநரின் சூழல் சார்ந்த வலிமையான நம்பிக்கையை உணர முடிகிறது.

இப்படத்தில் வலி மிகுந்த காட்சிகளும் நகைச்சுவையான காட்சிகளும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளன. ஒருநாள் பள்ளிக்கு விளையாட்டுத்தனமாய் டேப்ரிக்கார்டர் கொண்டுவந்து பையன்களிடம் காட்ட அதைக் கண்டு கணக்கு ஆசிரியர் வெகுண்டெழுந்து தலைமை ஆசிரியரிடம் போய் போட்டுக் கொடுப்பதோடு அவனைப் பள்ளியிலிருந்து தூக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்.

தலைமையாசிரியர் தயங்குகிறார். “ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது அவன் இருக்கவேண்டும்'' என்றுகூறுவதால் ‘நொய்'க்கு பள்ளியிலிருந்து சீட்டு கிழிக்கப்பட வேண்டிய நிலை. மனமுடைந்துபோன நொய், என்ன செய்வது என்று தெரியாமல் பள்ளியைவிட்டு வெளியேறும்போது அதுவரை அவனைப்பற்றிய கவலையில்லாமல் இருந்த அவனது தந்தை, அவனிடம் பிரியமாக நடந்துகொள்ளும் விதம் அருமை. ஒரு மதுவிடுதிக்கு அவனை அழைத்துச்செல்ல அந்த விடுதியாளர் “விடலைப் பையனை இங்கே அழைச்சிட்டுவரியே அறிவில்லை உனக்கு?” என அடித்து உதைத்துத் தூக்கியெறிய, இருவரும் சாலையில் வந்து விழும் காட்சிகள் சிரிப்பையும் சோகத்தையும் ஒரேநேரத்தில் வரவழைக்கக்கூடியன.

வாழ்க்கைக் கணக்கு

அவனை ஒரு வேலையிலும் சேர்த்துவிடுகிறார் அவனது தந்தை. அது பனிமண்டிய நிலத்தில் பிணம் புதைக்க குழிவெட்டும் வேலை.

அந்த நேரம் பார்த்து பாட்டியோ அவனது எதிர்காலம் குறித்து அறிய ஜோதிடரைத் தேடிச் சென்று பார்த்துத் திரும்பியபின். அவனை ஜோதிடரை போய்ப் பார்க்கும்படி கூறுகிறாள். இவனும் உணவு இடைவேளையில் அவரைப் பார்க்கப் போக அவர் உனக்கு விரைவில் மரணம் நிச்சயம் என்று கூறுகிறார். என்னடா இது கொடுமை என அவன் அந்தப் பிணக்குழி தோண்டும் வேலையையும் விட்டுவிடுகிறான்.

ஏற்கனவே இவன் கணக்கு வைத்துள்ள வங்கிக்குத் திருடப்போகிறான். வங்கியில் நுழைந்ததும் துப்பாக்கியைக் காட்டி மிரட்ட, “அவர்களோ நாங்கள் இதற்கெல்லாம் பயப்பட முடியாது. போய் வேறு வேலை இருந்தால் பார்” என்று கூறி துப்பாக்கியை அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு அனுப்பிவிடுகின்றனர். தன் வீரதீரத்தை அவமானப்படுத்திவிட்டதாக நினைக்கும் நொய், வங்கிக்குத் திரும்பி வந்து தனது சேமிப்புக் கணக்கை இத்துடன் முடித்துக்கொள்வதாகக் கூறி தனது கணக்கில் இருந்த பணத்தை வாங்கிக்கொள்கிறான். அந்தப் பணத்தில் ஒரு கோட்சூட் வாங்கி அணிந்துகொண்டு ஒரு காரையும் திருடிக்கொண்டு தன் பழைய தோழியைத் தேடிச் செல்கிறான். அவளோ இவன் மீது நம்பிக்கையின்றி வர மறுக்கிறாள்.

“காரைத் திருடியதற்காக ஜெயிலுக்குப் போனவனை அப்பா மீட்டு வருகிறார் என்று தொடரும் காட்சிகளில் இயக்குநர் டாகூர் காரி முத்தாய்ப்பாக வைத்திருக்கும் காட்சிதான் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவது. ஊரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட, அவனுக்கு மரணம் சம்பவிப்பது நிச்சயம் என்று சொன்ன ஜோதிடர், பள்ளியை விட்டுத் தூக்கிய ஆசிரியர், பிணக்குழி தோண்டும் வேலையில் அவனைக் கடுமையாக வேலை வாங்கிய மதகுரு, பாட்டி, தந்தை, ஊர்மக்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளில் நசுங்கி இறந்துவிடுகிறார்கள். நிலவறைக்குள் மாட்டிக்கொண்ட இவன் மட்டும் சுரங்க வழியாகத் தப்பித்து கடற்கரை செல்கிறான். தனக்குப் பிடித்தமான பூதக்கண்ணாடி வழியே அங்கு அவனோடு உரையாடும் இயற்கையை ரசிக்கத் தொடங்குகிறான்….>

இலுமினாட்டி - என்றால் என்ன? Illuminati

இலுமினாட்டி - என்றால் என்ன?
இலுமினாட்டி பற்றி தெரியாதவர்கள் முதல் முறையாக தெரிந்து கொள்ளும் நாளில் தூக்கத்தைத் தொலைப்பது நிச்சயம். தெரியாதவர்களுக்காக இலுமினாட்டி பற்றி ஒரு சிறு அறிமுகத்துடன் கட்டுரையை தொடங்குகிறேன். உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வதேச நாட்டாமைகள்தான் இலுமினாட்டிகள். உலக அரசியல் அமைப்புகள், மதங்கள், வங்கிகள், ஹாலிவுட், மீடியாக்கள், நுகர்பொருட்கள் எல்லாம் எல்லாம் இவர்களது கையில். எதெல்லாம் இவர்களுடையது என்று ஆராய்வதைவிட எதெல்லாம் இன்னும் இவர்களுக்கு சொந்தமாகவில்லை என்பதை வேண்டுமானால் எளிதாக எண்ணிவிடலாம். இன்றைய உலகைப் பொறுத்தவரை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் அழித்தலும் இவர்கள் கையில்.


எகிப்திய பார்வோனின் இரத்தவழி வம்சங்களாகிய 13 முதல் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் இந்த இலுமினாட்டிகள். சில உலக அரசியல் தலைவர்களும், மிகப்பெரிய பணமுதலைகளும், கலைத்துறையினரும், விஞ்ஞானிகளும் இதில் அடக்கம். இவர்கள் வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்தது. உலகில் இதுவரை நடைபெற்ற அத்தனை புரட்சிகளையும், இரு உலகப்போர்கள் உட்பட அத்தனை யுத்தங்களையும் தங்கள் சொந்த ஆதாயத்துக்காக நடத்தியவர்கள் இவர்கள்தான்.
இதை ஏன் அவர்கள் செய்ய வேண்டும்?

New World Order என்ற பெயரில் உலகம் முழுவதையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து அதை ஆளவேண்டும் என்பதே இவர்கள் நோக்கம், அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

இலுமினாட்டிகளின் சிறப்பியல்புகளில் ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்வது இக்கட்டுரையைப் புரிந்துகொள்ள உதவும். இவர்கள் சொல்லி அடிப்பதில் கில்லாடிகள். பில்லி சூனியம், நரபலிகள், மாந்திரீகம், அஸ்ட்ராலஜி, நியூமராலஜி, occultism போன்றவற்றில் இவர்களை மிஞ்ச உலகத்தில் ஆளில்லை. 3,6,7,9, 11, 22, 33, 333, 66, 666 போன்றவை இவர்களது முக்கிய எண்கள். சைத்தானுக்கு செய்யும் சடங்குகளாக இவர்கள் குறிப்பிட்ட நாளில் சில குறிப்பிட்ட செயல்களை செய்வார்கள். அது முழுக்க முழுக்க எண்களின், வானசாஸ்திரத்தின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இவர்கள் தாங்கள் செய்யப்போவதை ஏதேனும் ஒரு மீடியம் வழியாக ஏற்கனவே வெளியே சொல்லியும் விடுவார்கள், ஆனால் அதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.
பெரும்பாலும் சம்பவங்கள் நடந்த பின்னரே அதை உலகம் புரிந்து கொள்ளும். அப்படி முன்னரே கண்டுபிடித்தாலும் எந்தக் கொம்பனாலும் அதைத் தடுத்து நிறுத்தவும் முடியாது. உதாரணத்துக்கு இரட்டை கோபுர இடிப்பு நடத்தப் போவது பற்றி (அதை செய்ததும் இந்தப் புண்ணியவான்கள்தானாம்) சம்பவம் நடப்பதற்கு சிலமாதங்கள் முன்னர் வெளியிட்ட 20$ அமெரிக்க நோட்டில் மறைமுகமாக சொல்லிவிட்டார்களாம், மட்டுமன்றி சம்பவத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன் வெளியான புகழ்பெற்ற காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைகளிலும் ஆங்காங்கே இந்த இரகசியம் வெளியிடப்பட்டிருக்கிறது, ஆனால் அது அப்போது யாருக்கும் தெரியவில்லை.


யார் இவர்கள்? ஏன் இதைச் செய்கிறார்கள்? இவர்கள் ஏன் வெளிச்சத்துக்கு வருவதில்லை? தாங்கள் செய்யப்போவதை யாருக்கு, ஏன் முன்கூட்டியே சொல்லுகிறார்கள்? அது யார் மூலம், எப்படி வெளிவுலகத்துக்கு கசிகிறது?
இலுமினாட்டிகள் யாரும் தன்னை இலுமினாட்டி என்று அறிவித்துக் கொள்ளமாட்டார்கள். இது ஒரு இரகசியக் குழு, இரகசியம்தான் இவர்கள் பலம். இதை ஏன் வெளியே சொல்லுகிறார்கள் என்றால் மக்களுக்காக அதை சொல்லுவதில்லை. உலகம் முழுவதிலுமுள்ள இலுமினாட்டிகள் தங்களுக்குள் போன் மூலமாகவோ கடிதத்திலோ பேசிக்கொள்ள மாட்டார்கள், இதுபோன்ற சமிஞ்கைகள் மூலமே தங்கள் சக இலுமினாட்டிகளிடம் தகவல்களைப் பரிமாறுகிறார்கள். அவற்றை decode செய்து கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இலுமினாட்டிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து, அவர்கள் தகவல்களை decode செய்து மக்களுக்கு வெளியிடும் conspiracy theorists பலர் இருக்கிறார்கள். அவர்களது கட்டுரைகள் புத்தகங்கள் மூலம் இணையதளங்கள் வழியே பல நூற்றாண்டுகளாக திரைமறைவில் உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருந்த இலுமினாட்டி இயக்கம் பற்றிய இரகசியங்கள் இப்போது ஓரளவுக்குக் கசியத்துவங்கி இருக்கிறது. இணையத்தில் இன்றைய ஹாட் டாபிக் இதுதான். ஆனால் இது கொஞ்சம் ஓவராகவே ஆகிவிட்டது எனவும் சொல்லலாம், கொசு கடித்தால்கூட அதையும் இல்லுமினாட்டி சதி என்று அலறும் பைத்தியங்களும் இன்று பெருகிவிட்டார்கள்.
மலேசிய விமானம் MH370 தொலைந்த அதேநேரத்தில் ரஷ்யா உக்ரேன் பிரச்சனை இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. இரண்டையுமே இலுமினாட்டி சதி என்று பலரும் கூறிவந்தனர். ஆனால் அதற்கான ஆதாரம் அப்போது ஒன்றும் சிக்கவில்லை. இலுமினாட்டிகள்தான் சொல்லி அடிப்பவர்களாயிற்றே இதுபற்றி ஏதாவது முன்கூட்டியே சொல்லி வைத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து சில conspiracy theorist-கள் சில திடுக்கிடும் தகவல்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள். அந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.


இலுமினாட்டிகளின் மதத்தில் Poseidon என்ற ஒரு நெப்ட்டியூன் கடவுளுண்டு, இது கடலுக்குரிய கிரெக்கக் கடவுளாகும். இதன் கையில் ஒரு மும்முனை குத்தீட்டி வைத்திருக்கும். அந்த மும்முனை குத்தீட்டி(Trident) அதிகாரத்தின் அடையாளமாகும். உலகத்தின் அதிகாரம் கடவுளிடமிருந்து சைத்தானுக்கு கைமாறுவதை கொண்டாடும் விதமாக கடல் தெய்வமான நெப்ட்டியூனுக்கு கடலில் நடத்தும் ஒரு சடங்காகவும் 2014-ஆம் ஆண்டில் இந்த மும்முனை குத்தீட்டி சின்னத்தை(Trident) எல்லோருடைய ஆழ்மனதிலும் பதிக்கும் விதமாகவும் அதை உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்துவது இவர்கள் நோக்கம். மக்களது ஆழ்மனதில் இதை ஏன் பதிய வைக்க வேண்டும் என்று conspiracy theorist-களைக் கேட்டால் அவர்கள் இலுமினாட்டிகளை mind manipulators என்று அழைக்கிறார்கள். இவர்கள் இன்று உலகத்தை ஆண்டு கொண்டிருப்பதே மக்களை உளவியல் ரீதியில் மூலம் mind control செய்துதானாம்.

2014-ஆம் ஆண்டில் தங்கள் மும்முனை குத்தீட்டி செய்யப்போகும் காரியத்தை மசெராட்டி என்ற புகழ்பெற்ற இத்தாலிய கார் விளம்பரத்தில் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். We have prepared, now we strike என்று தெளிவாகவே சொல்லுகிறார்கள். உடனே மும்முனை குத்தீட்டி சின்னம் பொறித்த கார் நம்மை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது. அந்த விளம்பரம் இதோ!



அடுத்து MH370-க்கு நேரப்போவதை முன்கூட்டியே 2013 இல் வெளியான Man of Steel என்ற ஹாலிவுட் படத்தில் அறிவித்துவிட்டார்கள். ஒரு எரிந்து கொண்டிருக்கும் மும்முனை குத்தீட்டி போன்ற விண்கலம் இந்தியப் பெருங்கடலில் விழப்போவதை அந்தப் படம் முன்னறிவிக்கிறது. மேலும் எண் 370-ஐத் தூக்கப்போகிறோம் என்பதையும் அதே படத்தில் தெளிவாகக் காட்டிவிட்டார்கள். Man of Steel படத்தை ஆராய்ந்து conspiracy theorists வெளியுட்டுள்ள வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு:





அதற்குப் பின்பு ஒரு ஜுலை 17-அன்று MH-17 இன்னொரு மலேசிய விமானம் உக்ரேனில் சுட்டி வீழ்த்தப்பட்டதை யாவரும் அறிவோம். இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் மசெராட்டி, உக்ரேன், மலேசிய விமானம் அனைத்துக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு அதுதான் மும்முனை ஈட்டி லோகோ.



இன்னொரு கூடுதல் தகவல், உலகத்தின் ஆளுகை இறைவனிடமுருந்து சைத்தானுக்கு கைமாறியதன் அடையாளமாக இரு மும்முனை ஈட்டிகள் இன்னொரு முக்கியமான இடத்திலும் இப்போது வைக்கப்பட்டுள்ளது, அதுதான் நியூயார்க் இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் எழுப்பப்பட்டிருக்கும் நினைவகம்.

மலேசியன் ஏர்லைன்சில் உள்ள இரட்டை மும்முனை குத்தீட்டிக்கும், இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் வைக்கப்பட்டிருக்கும் இரட்டை மும்முனை ஈட்டிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு அது சைத்தானுக்குரிய எண்ணாகிய 33-ஐயும் குறிக்கிறது. 33-இன் முக்கியத்துவம் பற்றி எமது முந்தய கட்டுரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்..

இன்னும் வரும் நாட்களில் நீங்கள் திரும்புமிடமெல்லாம் மும்முனை குத்தீட்டியை உலகம் முழுக்க பார்க்கலாம். மும்முனை குத்தீட்டியை மக்கள் ஆழ்மனதில் பதிக்கும் விதத்தில் இனி திரையுலக  நாயகர்கள்கூட படத்தில்  அதைத் தூக்கிக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்..

வெறும் இந்த ஆதாரங்களை வைத்து இதுதான் நடந்திருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டால், இதில் எழுதியிருப்பது எதுவுமே எனது சொந்தக் கற்பனையோ கருதுக்களோ அல்ல, conspiracy theory என்பது வெவ்வேறு புள்ளிகளை இணைத்து ஒரு புரிந்துகொள்ளுதலுக்கு வருவதாகும். conspiracy theorists இணையத்தில் ஆங்கிலத்தில் சொல்லுவதை தமிழில் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறேன்.அவ்வளவே! அவர்களால்கூட இதற்கு ஒருபோதும் சட்டம் ஏற்றுக்கொள்ளும்படியான ஆதாரங்களைக் காட்ட இயலாது. இது எப்போதும் கோட்பாட்டளவிலேயேதான் நிற்கும். நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.

கட்டுரை எழுதப்பட்டதற்கு ஆதார வீடியோக்கள்:
https://www.youtube.com/watch?v=oI2UcmpcdQA
https://www.youtube.com/watch?v=8kNOdLbPLJY

திங்கள், 10 அக்டோபர், 2016

வேற்றுக்கிரக வாசிகளை தொடர்புகொண்டது எப்படி?


எமது அண்டத்தை படம் பிடித்தது எப்படி? வேற்றுக்கிரக வாசிகளை தொடர்புகொண்டது எப்படி?


நாம் இருக்கும் சூரியகுடும்பம் மற்றும்.. பல நட்சத்திரங்களைக்கொண்ட நமது அண்டத்தை (கலக்சியை) எவ்வாறு நாங்கள் படம் பிடித்தோம்.? அதுவும், நாங்கள் இன்னமும் ஒளியின் வேகத்தை நெருங்க கூட இல்லை… ஒளியின் வேகத்தில் சென்றாலே எமது அண்டத்தை தாண்ட பல ஆண்டுகள் எடுக்கும். என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன்.
——————————————————————————————–
முன்னர் சொன்னது போன்று, ஒளியின் வேகமே இல்லாமல், நாங்கள் இந்த சூரிய குடும்பத்தை தாண்டுவதே கடினமானது. ஆனால், கலிலியோவினால் கண்டறியப்பட்ட தொலை நோக்கி (telescope) இந்த கேள்விக்கு விடையளிக்கும்.
நவீன ரக தொலை நோக்கி மூலமாக, எமது சூரிய குடும்பத்தை தாண்டி வாறு நட்சத்திரங்களையும், பால்வீதிகளையும், அண்டங்களையும் பார்க்க முடிகிறது.
அவ்வாறான… தொலை நோக்கிகளின் உதவியுடனேயே, பல அண்டங்கள் இருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
அவ்வாறு பார்க்கப்பட்ட அண்டங்களில், கிட்டத்தட்ட நாம் இருக்கும் சூழ் நிலைகளை ஒத்துப்போக கூடியதாக சில அண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அப்படி கண்டறியப்பட்ட ஒரு அண்டத்தின் உருவத்தைத்தான்… இப்போது நாங்கள் எமது அண்டத்தின் உருவம் என கூறிக்கொள்கிறோம். மற்றம் படி இன்னமும் எமது அண்டத்தை நாம் படம் பிடிக்கவில்லை.
(இப்போது அமது அண்டம் என நாம் காட்டிக்கொள்ளும் படம் நாங்கள் தேடி கண்டுபிடித்துள்ளது பல ஆண்டுகளுக்கு முட்பட்ட உருவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான விளக்கம் ஏற்கனவே முன்னைய பதிவுகளில் உள்ளது. மேலதிக தகவல்களை பிறகு எழுதுகிறேன். )
——————————————————————————————–
இதுக்கும் வேற்றுக்கிரக வாசிகளுக்கும் இடையிலான தொடர்புகளை பார்க்க முதல்…
அண்டத்தில் நாம் இருக்கும் இடத்தை பார்ப்போம்.
ந‌ம‌து அண்டத்தை ஒரு அப்ப‌த்துட‌ன் ஒப்பிட‌ முடியும். அப்ப‌த்தின் வெளிப்பக்கத்தில் மொறு மொறு ப‌குதியில்தான் நம‌து சூரியகுடும்பமே இருக்கிறது. பூமி சூரியனை சுற்றுவதுபோன்று… இந்த அண்டத்தின் மையத்தை நமது சூரிய குடும்பம் சுத்துகிறது. இப்படி பல அண்டங்கள் வேறு ஒரு பிரபஞ்ச மையத்தை சுற்றுகிறதாம்.
அத்தோடு… இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று.
இப்படிப்பட்ட… இந்த பரந்த பிரபஞ்சத்திலே, நாங்கள்தான் அதீதமான பரிணாம வளர்ச்சியடைந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வது சிறுபிள்ளைத்தனமானது.
இப்போது சும்மா எமது அண்டத்தைப்பற்றி சிந்த்தித்தால்ஜோ… அப்பத்தின் இங்கால் இருக்கும் மொறுமொறு பகுதிபோல், எமக்கு எதிராக உள்ள பக்கத்தில் கூட வேற உயிரினங்கள் இருக்கலாம். இதே போன்ற கால நிலைகள் இருப்பதற்கும் கூட சந்தர்ப்பங்கள் உள்ளன… அதனால், அங்கேயும் மனிதர்களே, ஏன் நாமே இருக்கக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது. ( இது ஒருவகை தேற்றம், அதை அடுத்துவரும் புதிய தேடல்களில் பார்க்கலாம்.)
அதேபோன்று.. எம‌து அண்டத்தின் மையத்தை நோக்கிய‌ திசைக‌ளில் கூட‌ வேற்று உயிரினங்க‌ள் இருக்க‌லாம். ஆனால், அங்கு எம‌து… சூரிய‌குடும்ப‌ம் (முக்கிய‌மாக‌ பூமி) இன் கால‌நிலை இருக்க‌ ச‌ன்த‌ர்ப்ப‌ம் ஒப்பீட்ட‌ள‌வில் குறைவு. எனினும்.. அன்த‌ சூழ் நிலைக்கேற்றவாறு வித்தியாச‌மான‌ உயிரின‌ங்க‌ள் இருக்க‌க்கூடும்.
——————————————————————————————–
wow_signal
அப்ப‌டியானால்… அந்த‌ உயிரின‌ங்க‌ள் எங்க‌ளோடோ அல்ல‌து நாங்க‌ள் அவ‌ர்க‌ளோடோ… தொட‌ர்புகொள்ள‌வில்லையா என்ற‌ கேள்வி எழுகிற‌து.
ம்ம்ம்ம்…
1977 ஆம் ஆண்டு ஒரு விஞ்ஞான ஆய்வுகூடத்தில் “வாவ்…” என்ற ஒரு சமிக்ஞை திடீரென குறிப்பிட்ட நேரத்திற்கு உணரப்பட்டது. அந்த சமிக்ஞையை ஆராய்ந்த போது அது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 120 ஒளியாண்டு தூரத்திற்கு அப்பால் இருந்து வந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. (அது ஒரு நட்சத்திர வெடிப்பின் சத்தமாக இருக்கலாம் என்பதும் ஒரு சாராரின் கருத்து.)
எப்படி இருந்தாலும், பூமியில் மனிதர்களால் அண்டத்தில் இருந்து உணரப்பட்ட ஒரே சமிக்ஞையாக அது கருதப்படுகிறது.
( இதேவகையில் இன்னோர் சமிக்ஞை உணரப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருட தேடலின் பின்னர், அது ஆய்வுகூடத்தின் பக்கத்தில் இருந்த ஒரு உணவு சூடாக்கும் இயந்திரத்தால் ஏற்படுத்தப்பட்ட சமிக்ஞை என முடிவுகிட்டிய சந்தர்ப்பமும் உண்டு.)
அந்த சமிக்ஞை அண்டத்தில் வேற்றுக்கிரகத்தினரைத்தேடி இன்னோர் கிரகத்தினரால் அனுப்பப்பட்ட சமிக்ஞையாக இருந்தால், அவர்களை நாம் மீண்டும் தொடர்புகொள்ள 120 ஒளியாண்டுகள் பயணிக்கவேண்டும்.
பயணித்தால் அவர்கள் இருப்பார்களா? (இது தொடர்பான விரிவான பதிவுகள் புதிய தேடல் தொடரில் இடம்பெறும்.)இருப்ப‌தும் சாத்திய‌மில்லை.
இதிலிருந்து, எங்கேயோ… எம‌து ப‌ரிமான‌த்தை ஒரு ப‌ரிமாண‌மாக‌ கொண்ட‌ உயிரின‌ம் இருக்கிற‌து என்பதை ஓரளவு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

அப்ப‌டியானால்… நாங்க‌ள் ஒன்றுமே அனுப்ப‌வில்லையா? என்ற கேள்வி இப்போது எழும்.
உக்ரைனிலி இருக்கும் பண்பலை தொலை நோக்கி (radio telescope) மூலம்… 1999 இலும் 2003 இலும் பிரபஞ்சத்தில் வேற்று உயிரினங்கள் இருந்தால்… எமது இருப்பை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் செய்தி சமிக்ஞையாக அனுப்பப்பட்டது…
இது தான் அந்த செய்தி…
இந்த செய்தியில்..
கணிதக்குறியீடுகள்…
இதுவரை கண்டறியப்பட்ட மூலக்கூறுகள்… முக்கியமானவற்றின் சேர்க்கை…
கலப்பிரிவு… ( அடிப்படை உயிரினமான அமீபாவின் தோற்றம்.. )
டி.என்.ஏ அமைப்பு…
மனித உடற்கட்டமைப்பு..
புவியியல் அமைப்பு… நில அமைப்பு…
மற்றும் சமிக்ஞை அனுப்பப்பட்ட முறை உள்ளடங்களாக பல தகவல்கள் இருக்கின்றன.
கூர்ந்து அவதானித்தால்… எவருக்கும் விளங்குமாம் இந்த குறியீடுகள்.
1 23456
ஆனால், இதுவரை ஏவப்பட்ட இந்த சமிக்ஞைக்கான பதில்கள் வெளியிலிருந்து கிடைக்கவில்லை.
ஒன்று… இந்த தகவல்கள் இன்னமும் வேற்று உயிரினங்களை சென்றடையவில்லை… அவர்களால் இதை உணரமுடியவில்லை.. அதாவது எமது பரிமாணங்களுடன் அவர்கள் ஒத்துப்போவதில்லை… என்ற முடிவுக்கே வரலாம். மாறாக.. உரினங்கள் இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது.
காரணம், இந்த சமிக்ஞை இன்னமும்… அண்டவெளியில் பயணித்துக்கொண்டுதான் இருக்கிறதாம்… விரிவடைந்துகொண்டே இருக்கும் இந்த பிர பஞ்சத்தில்… எங்கோ ஒரு நாள்.. எமது பரிமாணத்தை ஒத்துப்போக்கக்கூடியர்களிடன்ம்… இந்த தகவல் சென்றடையும் என்ற நம்பிக்கையுடனேயே இந்த நீண்ட காலத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
——————————————————————————————–
இனி வரும் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான பதிவுகளில் பல வியப்பான தகவல்கள் பதிவிடப்படவுள்ளன வரும் வாரங்களில்…
வேற்றுக்கிரகவாசிகளுள் இங்கே வாழ்ந்த ஆதாரம்! வாழும் ஆதாரமும்!!!
எம்மை சோதைக்குள்ளாக்கும் அவர்கள்.
எம்மை நாமே வேற்றுக்கிரகவாசிகள் என்கிறோமா?
வேற்றுக்கிரகவாசிகள் என அடையாளம் காணப்படுபவர்கள், பரிமாணத்தில் விடுபட்டவர்களா?
இணைந்திருங்கள் ஆராய்வோம். :)