புதன், 11 மார்ச், 2020
கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் எதிரொலி: உலக பொருளாதாரத்துக்கு ரூ.148 லட்சம் கோடி இழப்பு - ஐ.நா. கணிப்பு
புதன், 29 ஜனவரி, 2020
விண்வெளித்துறை சாதனையில் உயர... உயர... பறக்கும் இந்தியா
திங்கள், 27 ஜனவரி, 2020
ரஜினி... ஓர் இளைஞர், “யாரு நீங்க?” என்று கேட்கிறார்.
வைரஸ் என்றால் என்ன?
- லைபீரியா, கினியா மற்றும் சியாரா லியோனில் 2013 - 2016 வரை பரவிய இபோலா வைரஸ் தொற்றால் 11,300 பேர் கொல்லப்பட்டனர்.
- 2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் ஏற்பட்ட இபோலா தொற்று, மத்திய ஆப்பிரிக்காவில் 1,800 பேரை கொன்றது.
- 2002ஆம் ஆண்டு தென் சீனாவில் உள்ள குவாங்டாங்க் மாகாணத்தில்தான் முதன்முதலில் இந்த தொற்று கண்டறிப்பட்டது.
- சார்ஸ் வைரஸால் சீனாவில் மட்டும் 774 பேர் உயிரிழந்தனர். இதில் மருத்துவர்களும் அடங்குவர்.
- 2015ல் பிரேசிலில் இந்த வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
- ஜிகா வைரஸிற்கு இதுவரை எந்த சிகிச்சையும் கிடையாது.
- இந்தியாவின் கேரளா மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நிபா வைரஸ் பரவிய போது, 17 பேர் உயிரிழந்தனர். முக்கியமாக கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இது பரவியது.
பாம்புக் கறியில் இருந்து கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற தகவலால் சைவத்துக்கு மாறும் சீனர்கள்!
வியாழன், 19 டிசம்பர், 2019
கடலும் கடல் சார்ந்த உயிரினங்களும் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்
கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் பேராபத்துகள் விலைக்கு வாங்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருட்களால் கடலும் கடல் சார்ந்த உயிரினங்களும் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
2050ம் ஆண்டில் உலக கடற்பரப்பில் மீன்களை விட பிளாஸ்டிக் பொருட்களே அதிகமாக காணப்படும் என்றால் நம்ப முடியுமா..?? ஆம்.. உலகம் அதை நோக்கி தான் சென்று கொண்டிருப்பதாக சர்வதேச பொளாதார மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எண்ணற்ற கடல் வளங்களை தன்னுள் கொண்டு இயற்கையின் அவதாரமாக திகழும் கடல் தான் உலகின் 71 சதவீத பரப்பளவை நிரப்பியுள்ளது. வெறும் 29 சதவீத நிலப்பரப்பில் வாழும் மனிதர்கள் 71 சதவீத கடற்பரப்பை பிளாஸ்டிக்கை கொண்டு நிரப்பினால் உலகம் என்னவாகும்..? தென் ஆப்பிரிக்காவின் டர்பன் கடற்கரையில் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் அலையில் அடித்து வரப்படும் காட்சியே அதற்கு சாட்சி..!
ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது, நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு லாரி பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொட்டுவதற்குச் சமம். அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள் ஆறுகள் ஊடாகவே கடலில் கலக்கின்றன. எந்த வித சிந்தனையுமின்றி நாம் தூக்கி வீசும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களை காவு வாங்குவதோடு, கடல் மீன்களை உட்கொள்ளும் நமக்கே மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பிளாஸ்டிக் கழிவுகள் அப்படியே கடலில் மிதப்பது அல்ல. ஒருசில பிளாஸ்டிக்குகள் நுண் துகள்களாக (MICRO, NANO PLASTICS)மாறிவிடுகின்றன. இதனை உட்கொள்வதால் 800 வகையான கடல் வாழ் உயிரினங்கள் அழிகின்றன. கலிஃபோர்னியா - ஹவாய் இடையேயான கடற்பரப்பில் உள்ள பிளாஸ்டிக் நுண் கழிவுகள் மட்டும் லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி, நியூயார்க் நகரங்களை விட ஏழு மடங்கு அதிகம்.
ஆமைகள், திமிங்கலங்கள் முதல் கடற்பரப்பு மேல் பறக்கும் பறவைகள் வரை பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்ளுவதால் தொண்டைகள் மற்றும் வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக்குகள் சிக்கி உயிரிழக்கின்றன. அண்மையில் ஸ்காட்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்திற்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது அதன் வயிற்றில் இருந்து 100 கிலோ எடைக்கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. திமிங்கலத்தின் உயிரிழப்புக்கு வயிற்றுப் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தின.
உலக வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து வருவது ஒருப்பக்கம் இருந்தாலும் கடலும் கடல் சார்ந்த வளங்களும் பிளாஸ்டிக் எனும் குண்டுகளால் நாள்தோறும் துளைக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கு அரசும் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகின்றன. இருப்பினும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி விட்டு தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கண்ணுக்குத் தெரியாத பல உயிர்கள் ஆபத்தில் மூழ்குகின்றன.
என்ன தான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு முடிந்தளவு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து இயற்கை வளங்களை பாதுகாப்பதே மனிதர்களின் தார்மீக பொறுப்பு!
சனி, 23 நவம்பர், 2019
சிதைந்து கொண்டிருக்கும் ஹாங்காங்!
போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல் ஓயாததால், வன்முறைக் களமாக மாறியிருக்கிறது ஹாங்காங். எனினும், போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், என எச்சரித்துள்ளனர் போலீசார்.
ஹாங்காங்கில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை, சீனாவுக்கு நாடு கடத்தும் வகையில், மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, சர்ச்சைக்குரிய மசோதா திரும்ப பெறப்பட்டது. ஆனாலும் மக்களின் போராட்டம் 6 மாதங்களை கடந்து இன்றளவும் ஓய்ந்தபாடில்லை.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்குக்கு, முழு சுதந்திரம் வழங்க கோரி, போராட்டம் நீடிக்கிறது. ஹாங்காங்கின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு, போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து, அப்புறப்படுத்த முயன்ற போலீசார் மீது, போராட்டக்காரர்களை பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும், போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதால், வன்முறை களமாக மாறியிருக்கிறது ஹாங்காங்.போராட்டத்தை கைவிட மறுத்ததால், பலரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை, விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டம் உலகளவில் எதிரொலித்துள்ள நிலையில், அதை தீவிரமாக கண்காணித்து வருவதாக, ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. வன்முறையில் ஈடுபடாமல் அமைதியான முறையில், மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்றும், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மேரீஸ் பெய்ன் கேட்டுக் கொண்டுள்ளார். ஜனநாயகத்தை வலியுறுத்தி, 6 மாதங்களாக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தை, கட்டுப்படுத்த முடியாமல், ஹாங்காங் அரசு திணறி வருகிறது.
திங்கள், 18 நவம்பர், 2019
அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை: – சுமந்திரன்
எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சியொன்றின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்திருந்தார்.
கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தீர்வு வரும்வரை அரசில் இணைவதில்லையென கூட்டமைப்பு ஒரு கொள்கை முடிவை வைத்துள்ளது. இதனால் மக்களிற்கு சேவையாற்ற முடியாமல் போகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைப்பாட்டை சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தாலும் கடந்த ஒரு மாதமாக தமிழ் அரசு கட்சிக்குள் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



