ஞாயிறு, 22 மே, 2016

லியோனார்டோ டாவின்சியும், மோனலிசா புன்னகை மர்மமும்!!!


எச்சரிக்கை – இதுவொரு வரலாற்றுத்தகவல்பதிவுவிருப்பமில்லாதவர்கள் நேரத்தைவீணாக்கவேண்டாம்!


லியோனார்டோ டாவின்சி... இன்றையஉலகத்துக்கு இந்தப்பெயர் அறிமுகப்பட்டிருப்பதுஉலகின் தலைசிறந்த ஓவியர் மற்றும் மோனலிசாஓவியத்தை வரைந்தவர் என்ற அளவில்மட்டும்தான் இருக்கக்கூடும்.
ஆனால் அதையும் தாண்டி லியோனார்டோடாவின்சியின் வாழ்க்கை உண்மைகளையும்மோனலிசா மர்மப்புன்னகை மற்றும் அதையும்தாண்டி நிறைந்து கிடக்கும் அவரது மற்றதிறமைகளையும் அறிந்து கொள்ளஆர்வமிருப்பவர்கள் இந்தப்பதிவை தொடர்ந்து படிக்கலாம்.
உண்மையிலேயே லியோனார்டோவின் திறமைகள் அவர் வாழ்ந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்டுதனதுவாழ்நாளில் அவர் சோற்றுக்கே கஷ்டப்பட்டு வாழ்ந்து, அவர் இறந்தபிறகுதான் அவரது படைப்புகள்இவ்வுலகத்தினரால் கொண்டாடப்பட்டதா?…

லியோனார்டோ ஒரு ஓரினச்சேர்க்கைவாதியா?…

லியோனார்டோ வரைந்த மோனலிசா ஓவியத்தில் இருப்பது யார்?

ஏன் அந்த ஓவியம் இந்த அளவுக்குஉலகப்புகழ் பெற்றது?

 அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் சிறப்பு?

மோனலிசா ஓவியத்தைத்தவிர லியோனார்டோவின் மற்ற ஓவியங்கள்கண்டுபிடிப்புகள் என்னென்ன?

இப்படி எண்ணற்ற தகவல்களுக்கான பதில்தான் இந்த வரலாற்றுக்கட்டுரை…!!

லியோனார்டோ டாவின்சி – ஃபுளோரன்ஸ் ராஜ்யத்தின்(இன்றைய இத்தாலிவின்ஸி என்ற இடத்தில்கேத்தரினாஎன்ற ஏழை கூலிவேலை செய்யும் பெண்ணுக்கும்செல்வந்தரும் லீகல் நோட்டரியுமான மெஸ்ஸர் பியாரோ டாவின்சி என்பவருக்கும் திருமண உறவுக்கு அப்பாற்பட்டு உருவாகி 1452ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள் பிறந்தகுழந்தைதான் ஓவியர்சிற்பிஇசைமேதைகணிதமேதைஆர்க்கிடெக்ட்பொறியாளர்ஜியாலஜிஸ்ட்,எழுத்தாளர்கண்டுபிடிப்பாளர்பாட்டனிஸ்ட்உடற்கூறு ஆய்வாளர் என்று சகலகலாவல்லவனாக மாறிய இந்தமாபெரும் மேதை.

லியோனார்டோவின் முழு இயற்பெயர் லியோனார்டோ டி சர் பியாரோ டா வின்சி என்பதுதான்அதாவது"Leonardo, (son) of (Mes)ser Piero from Vinci" என்று அர்த்தமாம்அதுதான் இன்றைய காலத்தில் டாவின்சி என்று சுருக்கமாக அழைக்கும் வகையில் மாறியிருக்கிறது

Anchiano-ல் லியோனார்டோ வாழ்ந்த இளமைப்பருவ வீடு...
தனது ஐந்தாவது வயது வரையிலும் தனது தாயுடன் Anchiano என்ற இடத்தில் வசித்து வந்த லியோனார்டோ, 1457ல் இருந்து தனது தந்தைக்கு சொந்தமான வீட்டில்வின்சி என்ற இடத்தில் வசித்திருக்கிறார்அவரதுதந்தை திருமணம் முடித்து கூட்டி வந்த பதினாறு வயது பெண்ணான அல்பியீரா என்பவர் லியோனார்டோ மீதுஅளவு கடந்த பாசம் காட்டியபோதும் அவரும் இளவயதிலேயே இறந்து போயிருக்கிறார்அதன் பின்லியோனார்டோவுக்கு பதினாறு வயதிருக்கும்போது அவரது தந்தை மீண்டும் பிரான்செஸ்கா என்ற இருபது வயதுபெண்ணொருத்தியை திருமணம் செய்திருக்கிறார்இப்படி மூன்றாவதுநான்காவது என்ற எல்லையோடுநிறுத்திவிடாமல் அதற்கு மேலும் வாரிசுகளை உருவாக்கும் பணியை அவரது தந்தை தொடர்ந்ததாய் வரலாறுகூறுகிறது.
லியோனார்டோவின் குழந்தைப்பருவ வாழ்க்கை குறித்து போதிய வரலாற்றுச்சான்றுகள் எதுவும் இல்லையென்றபோதிலும்முறை தவறிய வழியில் பிறந்துதாய்ப்பாசம் இல்லாமலும்முறையான தந்தைப்பாசம் இல்லாமலும்வளர்ந்த அவரது வாழ்க்கைதான் அவரை ஓவியங்களுடனும்புதுப்புது விஞ்ஞான சிந்தைகளுடனும்பேசவைத்திருக்குமோ என்னவோ தெரியவில்லை.

1466ம் ஆண்டுஅதாவது லியோனார்டோவின் பதினான்காவது வயதில் ஃப்ளோரன்ஸ் மாகாணத்தின்முக்கியமானதில் ஒன்றாக விளங்கிய வெராச்சியோ என்ற கலைஞரின் பட்டறையில் அவர் அப்பரண்டீசாகசேர்க்கப்பட்டிருக்கிறார்ஒருவகையில் பார்த்தால் இந்த வெராச்சியோதான் லியோனார்டோவின் குரு என்றும்சொல்லலாம்வெராச்சியோவின் பட்டறையில்தான் லியோனார்டோ கெமிஸ்ட்ரிமெட்டலார்ஜிபிளாஸ்ட்டர்காஸ்டிங்மரவேலைதோல்வேலைகள் மற்றும் மெக்கானிக்ஸ் போன்றவைகளை முறையான தியெரிட்டிகல்மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் கற்றிருக்கக்கூடும் என்பது வரலாற்றில் நிலவும் கருத்துஅத்தோடு வரைதல்,சிற்பம் உருவாக்குதல்மாடலிங் போன்றவற்றின் தொழில்நுட்பமும்கூட லியோனார்டோவுக்குஅந்தப்பட்டறையில்தான் கற்பிக்கப்பட்டிருக்கிறது என்பதுவும் ஒரு முக்கிய கருத்துலியோனார்டோவின்காலத்தில் அங்கு வாழ்ந்த இன்னும் பல முக்கிய கலைஞர்களும் இதேப்பட்டறையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

பார்த்தலோமியோ கலோனி சிற்பம்...

வெராச்சியோவின் பட்டறையில் உருவான பெரும்பாலான ஓவியங்கள் அவரது பட்டறையில் பயின்றவர்களின்பங்களிப்பாகவே இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்றாலும் வெராச்சியோவின் கடைசிப்படைப்பானபார்த்தலோமியோ கலோனியின் சிற்பம் உலகளவில் ஒரு மாஸ்டர் பீசாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.வெராச்சியோவின் மற்றொரு குறிப்பிடத்தக்க படைப்பு டால்பினுடன் இருக்கும் சிறகு முளைத்த பையன் சிற்பம்.

வெராச்சியோ வரைந்த The Baptism of Christ என்ற ஓவியத்தில் அவருக்கு துணையாக பங்காற்றியலியோனார்டோவின் கைவண்ணத்தை கண்டுகுருவையே மிஞ்சும் சிஷ்யனாக அவரது திறமையைக் கண்டு வியந்தவெராச்சியோ அதற்கு பிறகு ஓவியம் வரைவதையே நிறுத்திவிட்டதாகவும் அபூர்வ வரலாற்றுத்தகவல் ஒன்றும்நிலவுகிறது
The Baptism of Christ...
வெராச்சியோவின் கைவண்ணத்தில் உருவான டேவிட் என்பவரின் பித்தளை சிற்பத்துக்கும், Tobias and the Angelஎன்ற ஓவியத்திலிருக்கும் ஆர்க்ஏஞ்சல் ரேபேல் என்ற உருவத்திற்கும் மாடலாக இருந்தது லியோனார்டோதான்என்பதுவும் குறிப்பிடத்தக்க வரலாற்றுக் கணிப்புதான்.
Tobias and the Angel...
1472ம் ஆண்டுஅதாவது லியோனார்டோவின் இருபதாவது வயதில் அவர் மாஸ்டராக தேர்ச்சி பெற்றதும் அவரதுதந்தையால் அவருக்கென சொந்தமாக ஒரு பட்டறை வைத்துக் கொடுக்கப்பட்டபிறகும்கூடவெராச்சியோமற்றும் அவரது பட்டறையுடன் தனக்கிருந்த நெருக்கத்தை குறைக்காமலேயே தொடர்ந்திருக்கிறார்லியோனார்டோலியோனார்டோவின் ஆரம்பகால மற்றும் முதல் படைப்பாக வரலாற்றில் பதியப்பட்டிருப்பதுஆகஸ்ட்-5ம் நாள் 1473ம் ஆண்டு வெறும் பேனாவாலும்மையாலும் அவர் வரைந்த ஆர்னோ பள்ளத்தாக்கு என்றஓவியம்தான்.
Arno Valley by Leonardo...
லியோனார்டோ ஒரு ஓரினச்சேர்க்கைவாதி என்ற ஒரு தகவலும் வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது.ஃப்ளோரண்டைன் கோர்ட் ரெக்கார்டுகளின் பதிவுகள் 1476ம் ஆண்டு லியோனார்டோவும் இன்னும் மூன்றுஇளைஞர்களும் இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவு வைத்திருந்தாக (ஆண் விபச்சாரம்குற்றம் சாட்டப்பட்டுகைது செய்யப்பட்டிருப்பதையும்பின் குற்றத்தில் சிக்கிய ஒரு இளைஞன் பெரிய செல்வந்தர்களில் ஒருவரின்உறவினர் என்பதால் அவர்களது குறுக்கீட்டின் பேரில் வழக்கு பலமிழந்து அனைவரும் விடுதலைசெய்யப்பட்டிருப்பதாய் வரலாறும் கூறுகிறதுபல இருபதாம் நூற்றாண்டு வரலாற்று ஆய்வாளர்களும்கூடலியோனார்டோ நிச்சயம் ஓரினச்சேர்க்கையாளராகத்தான் இருந்திருக்கவேண்டும் என்றும்அதற்கு சிறந்தசாட்சியாக அவரது ஒரு சில ஆண் நிர்வாண ஓவியங்களையும் (குறிப்பாக John the Baptist மற்றும் Bacchus ஓவியங்கள்),  அவரது சொந்த வாழ்க்கையில் அவருக்கு மனைவியோகாதலியோ இல்லாத வரலாற்றையும்தான்சுட்டிக்காட்டுகிறார்கள்
John The Baptist...
Bacchus...

இருந்தாலும் வெறுமனே இந்த ஓவியங்களை வேறு கோணத்தில் கற்பனைப்படுத்தி லியோனார்டோவை குற்றம் சுமத்துவது தவறு என்றும், இந்த ஓவியங்களின் உணர்த்த விரும்பும் சேதி வேறு வகையில்கூட இருக்கலாம் என்றும் பலரும் விவாதிப்பதும் குறிப்பிடத்தக்கது.

லியோனார்டோவின் வாழ்வில் அவருக்கு எந்தவித பெண்களுடனும் தொடர்பில்லை என்ற போதிலும்அவருக்குசிறந்த நண்பர்களாக சிசிலியா என்ற பெண்ணும்எஸ்தே சகோதரிகளான பீட்ரைஸ் மற்றும் இசபெல்லாஆகியோரும் இருந்திருக்கின்றனர்இதில் இசபெல்லா என்பவரின் ஓவியத்தை தனது ஒரு பயணத்தின்போதேவரைந்திருக்கிறார் லியோனார்டோ என்பது குறிப்பிடத்தக்கது. இதே இசபெல்லாதான் மோனலிசா ஓவியத்திலும் இருப்பது என்றும் ஒரு வாதம் இருக்கிறது.

Isabella d'este...
1476ம் ஆண்டின் அந்த நீதிமன்ற நிகழ்வுக்குப்பின் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது 1478ம் ஆண்டுவரையிலும் லியோனார்டோ எங்கு இருந்தார்என்ன செய்து கொண்டிருந்தார் என்று எவ்விதத்தகவலும்இல்லாதது குறிப்பிடத்தக்கது. 1478ம் ஆண்டு வெராச்சியோவின் பட்டறையுடனான தொடர்பிலிருந்தும்தனதுதந்தையின் வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்தும் முற்றிலுமாக விலகியிருக்கிறார்ஜனவரி, 1478ம் ஆண்டுலியோனார்டோ தனது முதல் தனிப்பட்ட வேலையை பெற்றிருக்கிறார். 1481ம் ஆண்டு அவரது இரண்டாவதுபடைப்பான The Adoration of the Magi என்ற ஓவியம் லியோனார்டோவின் மிலனுக்கு சென்ற பயணத்தால்தடைபட்டிருக்கிறது
The Adoration of the Magi...
1482ம் ஆண்டு லியோனார்டோவால் வெள்ளியில் குதிரையின் தலை வடிவில் செய்யப்பட்ட Lyre என்றஇசைக்கருவியை மிலனை ஆண்டு கொண்டிருந்த லுடோவிகோ எஸ்ஃபோர்ஸா என்பவரை சமாதானப்படுத்தும்பரிசுப்பொருளாக வழங்குவதற்காக மெர்சி என்பவரால் மிலனுக்கு அனுப்பப்பட்டார் லியோனார்டோஇந்தநேரத்தில் லியோனார்டோ லுடோவிகோவுக்கு ஏற்கனவே தனது திறமைகள் மற்றும் ஓவியம் வரையும் திறன்குறித்து பல கடிதங்களை எழுதியிருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1482 லிருந்து 1499ம் ஆண்டு வரையிலும்லியோனார்டோவின் வாழ்க்கை மிலனில்தான் கழிந்திருக்கிறதுஇந்தக்காலக்கட்டத்தில்தான் The Virgin of the Rocks மற்றும் The Last Supper ஆகிய இரண்டு தலைசிறந்த ஓவியங்களும் லியோனார்டோவால்வரையப்பட்டிருக்கிறதுஅது மட்டுமில்லாமல் இந்த காலக்கட்டத்தில் லுடோவிகோவின் பலவிதபுராஜெக்ட்டுகளுக்கும் லியோனார்டோ பணியமர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
The Virgin of the Rocks...
Preparation drawing for "The Last Supper"...

The Last Supper...
1499ம் ஆண்டு... இரண்டாம் இத்தாலியப்போரின் ஆரம்பகாலம்... லுடோவிகோ அதிகாரத்திலிருந்துதூக்கியெறியப்பட்டதும்லியோனார்டோ தனது உதவியாளரான சாலை மற்றும் தனது நண்பரும்கணிதமேதையுமான லூகா ஆகியோருடன் மிலனிலிருந்து வெளியேறி வெனீஸ் சென்றிருக்கிறார்அங்குலியோனார்டோவுக்கு கிடைத்த வேலை மிலிட்டரி ஆர்க்கிடெக்ட் மற்றும் இன்ஜினியர்.
1500ம் ஆண்டு லியோனார்டோ மீண்டும் ஃப்ளோரன்ஸ் திரும்பியபோது அங்கு அவரும் அவரது கூட்டாளிகளும்சர்வைட் எனப்படும் மதத்துறவிகளால் விருந்தினராக தங்க வைக்கப்பட்டுஅவருக்கு அங்கேயே ஒரு பட்டறையும்வைத்துத்தரப்பட்டிருக்கிறதுஅந்தக்காலக்கட்டத்தில் லியோனார்டோவால் படைக்கப்பட்ட கார்ட்டூன்தான் The Virgin and Child with St.Anne and St.John the Baptist...
Preparation drawing note by Leonardo...

Drawing by Leonardo...

1502ம் ஆண்டு செஸினா நகரத்தில் 6ம் போப் அலெக்ஸாண்டரின் மகனான சீஸர் பார்ஜியா என்பவரிடம் மிலிட்டரிஆர்க்கிடெக்ட் மற்றும் இன்ஜினியராக வேலைக்குச் சேர்ந்து இத்தாலி முழுவதும் சுற்றி வந்திருக்கிறார்லியோனார்டோஅப்போது அவர் வரைந்த இமோலா நகரின் வரைபடத்தைக்கண்டு வியந்த சீஸர் பார்ஜியாஉடனடியாக லியோனார்டோவை மிலிட்டரி தலைமை ஆர்க்கிடெக்ட்டாக பதவி உயர்த்தியிருக்கிறார்.  வரைபடம்பற்றிய போதிய அறிவில்லாத அந்தக் காலகட்டத்திலேயே இன்றைய கூகுளின் சேட்டிலைட் இமேஜூக்கு சவால்விடும் வகையில் லியோனார்டோ வரைந்த துல்லியமான அந்த இமோலா வரைபடம் ஆச்சர்யமான அறிவியல்ரகசியம்தான்...


மீண்டும் ஃபுளோரன்ஸ்க்கு திரும்பிய லியோனார்டோ 1503ம் ஆண்டு தான் மாஸ்டர் பட்டம் பெற்ற Guild of St.Lukeல் இணைந்திருக்கிறார்அங்கு அவர் உருவாக்கியதுதான் The Battle of Anghiari ஓவியம்... பெரும்பாலும் முதலில் preparation ஓவியத்தை வரைந்தபின் முழு ஓவியத்தையும் வரைவதுதான் லியோனார்டோவின் வழக்கமாய் இருந்திருக்கிறது. இந்த ஓவியத்தில் அவரின் Preparation ஓவியம் மட்டும்தான் அவரது குறிப்பு நோட்டிலிருந்து கிடைத்திருக்கிறது. ஒரிஜினல் ஓவியம் மிஸ்ஸிங் என்று கருதப்படுகிறது.



இருந்தாலும் லியோனார்டோவின் குறிப்புகளின் அடிப்படையில் அந்த ஓவியம் 1603ம் ஆண்டு பீட்டர் பால் ரூபன் என்ற வேறு ஒரு ஓவியரால் முழுமை செய்யப்பட்டிருப்பது இதுதான்...


1506ல் மீண்டும் மிலன் திரும்பியதும், 1507ல் மீண்டும் ஃபுளோரன்ஸ் திரும்பியதும், 1508ல் மீண்டும் மிலன் திரும்பிவசித்ததும்லியோனார்டோவின் நிலையற்ற வாழ்க்கைக்கான சாட்சியங்கள்.

1513 முதல் 1516 வரையிலும் ரோமின் வாடிகனில் பத்தாம் போப் லியோவின் கீழ் பணிபுரிந்து தனது காலத்தைகழித்திருக்கிறார் லியோனார்டோடிசம்பர் 19, 1515ம் ஆண்டு பத்தாம் போப் லியோவுக்கும் பிரான்சின்பிரான்சிஸ்-1 க்கும் நடந்த ஒரு சந்திப்பில் லியோனார்டோவும் கலந்து கொண்டார்அந்தச்சந்திப்பில்பிரான்சிஸ்-1 லியோனார்டோவிடம் தனக்காக ஒரு மெக்கானிக்கல் சிங்கத்தை உருவாக்கித்தரவேண்டும் என்றும்,அந்த சிங்கம் நடந்து வந்து தனது நெஞ்சைத்திறந்து உள்ளிருந்து லில்லி மலர்க்கொத்து ஒன்றைஎடுத்துத்தருவதுபோல வடிவமைக்கப்படவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்அதைத்தொடர்ந்து 1516ம் ஆண்டுபிரான்காயிஸ் பணிக்குச்சென்ற லியோனார்டோவுக்கு பிரான்சிஸ்-1 தனது அரண்மனையின் அருகிலேயே Clos Luce என்றொரு வீட்டைத்தந்து தங்க வைத்திருக்கிறார்.


லியோனார்டோ கடைசி காலத்தில் வாழ்ந்து மறைந்த அரண்மனை போன்ற வீடு...
மே 2ம் நாள், 1519ம் ஆண்டு லியோனார்டோவின் உயிர் அந்த வீட்டிலேயே பிரிந்திருக்கிறதுஇந்த மூன்றுஆண்டுகளில் லியோனார்டோ பிரான்சிஸ்-1க்கு எவ்வளவு நெருக்கமான நண்பராகயிருந்தார் என்பதை அவர்இறந்ததும் அவரது தலையை தனது கைகளில் தாங்கிக்கதறிய பிரான்சிஸ்-1ன் செய்கையின் மூலமே உணரலாம்.லியோனார்டோவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது கடைசி ஆசைப்படியே 60 பிச்சைக்காரர்கள் தொடர்ந்துவர வைக்கப்பட்டிருக்கிறார்கள்பிரான்சில் இருக்கும் செயின்ட்.கூபர்ட் சேப்பலில் புதைக்கப்பட்டிருக்கிறதுலியோனார்டோவின் உடல்.
லியோனார்டோவின் ஓவியங்களில் இதுவரையிலும் கண்டறியப்பட்டிருப்பது பதினைந்துதான் என்றாலும் அவரதுபெரும்பாலான ஆராய்ச்சிகளும்கண்டுபிடிப்புகள் குறித்த படங்களும் தனித்தனி தாள்களில் அவரால்பதியப்பட்டிருந்தவைகள்தான்அவர் தனது எந்த கண்டுபிடிப்புகளையும் அதிகாரப்பூர்வமாக பப்ளிஷ்செய்யவில்லை என்பதால் இன்றைய அறிவியல் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகளின் முன்னோடியாக அவரைஆதாரப்பூர்வமாக தெரிவிக்கமுடியாத நிலைதான் மிஞ்சியிருக்கிறது.
மோனலிசா ஓவியமும்மர்மப்புன்னகையும்...

லியோனார்டோவின் ஓவியங்களிலேயே விலைமதிப்பில்லாததாகஇன்றைய உலகின் தலைசிறந்த ஓவியங்களில்முதலிடம் வகிப்பதாக மாறியிருப்பது அவரது மோனலிசா ஓவியம்தான்...


1503 – 1505/1507 காலகட்டத்தில் வரையப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டிருக்கும் இந்த மோனலிசாஓவியத்தின் மற்றொரு பெயர் லா ஜியோகொண்டாஇந்த ஓவியத்தின் தனிச்சிறப்பாக ஆராய்ச்சியாளர்கள்கருதுவது என்ன ரகம் என்றே கண்டறியமுடியாத இதன் புன்னகைஓவியத்தில் வரைந்திருக்கும் உதடு மற்றும்கண்களின் ஓரத்தில் கருப்பு ஷேடு செய்திருப்பது இந்தப்புன்னகையின் காரணத்தை அறியமுடியாமல் செய்தமுக்கிய விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் லியோனார்டோ ஃபுளோரன்ஸின் வசித்தபோது வரையப்பட்டதுதான் மோனலிசாஓவியம் என்று ஒருசில வரலாற்று ஆய்வாளர்கள் கூறினாலும்வேறு சில ஆய்வாளர்கள் லியோனார்டோ தனதுகாலகட்டத்தில் ஒரே ஒரு ஓவியத்தைக்கூட முழுதாக வரைந்து முடிக்காமல் எல்லாவற்றையுமேஅறைகுறையாகவே விட்டவர்தான் லியோனார்டோ என்றும் வாதிக்கிறார்கள்மோனலிசா ஓவியமும் 1503-1507காலகட்டத்தில் வரையப்பட்டிருந்தாலும்லியோனார்டோ 1516ல் பிரான்சுக்கு சென்றபோது மோனலிசாஓவியத்தையும் தன்னுடனே எடுத்துச்சென்று 1517 காலகட்டத்தில்தான் இறுதி டச்-அப் வேலைகள் செய்துமுடித்திருப்பார் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.
லியோனார்டோவின் இறப்புக்கு பிறகு அவரது உதவியாளரிடமிருந்து பல்வேறு கைமாறிய மோனலிசா ஓவியம்ஆகஸ்ட் 21ம் தேதி 1911ம் ஆண்டு பிரான்சின் மியூசியத்தில் இருந்து திருட்டுபோனதும்தான் அதன் மதிப்புஉலகளவில் எகிறியிருக்கிறதுமீட்டெடுக்கப்பட்ட மோனலிசா ஓவியம் அதன்பிறகும் பார்வையாளர்களால்நிகழ்த்தப்பட்ட சிறுசிறு தாக்குதலின் காரணமாக இன்று அடங்கியிருப்பது குண்டு துளைக்காதகண்ணாடிகளுக்குப்பின்னால் என்பது அதன் மதிப்பை அறியச்செய்யும் சுவாரசியம்.
மோனலிசா ஓவியம்தான் பின்னணியில் உருவகப்படுத்தப்பட்ட செயற்கையான காட்சிகளுடன் வரையப்பட்ட முதல்படம் என்றொரு தகவல் இருக்கிறதுமோனலிசா ஓவியத்தில் இருக்கும் பெண்ணுக்கு கண் முடிகள் மற்றும்இமைகள் இல்லாதது இன்று அந்த ஓவியத்தின் மிகப்பெரிய ரசனையாக மாறியிருந்தாலும்அவைகள்லியோனார்டோவால் வரையப்பட்டு நாளாக நாளாக மறைந்திருக்கிறது என்பதை 2007ம் ஆண்டுபிரான்சைச்சேர்ந்த பாஸ்கல் காட்டே என்றொரு இன்ஜினியர் தனது ஹை ரிசோலுயூசன் ஸ்கேன் ஆய்வின்முடிவில் அறிவித்திருக்கிறார்.
2012ல் மோனலிசா ஓவியத்தின் மதிப்பு 760மில்லியன் யு.எஸ் டாலராக கணக்கிடப்பட்டிருப்பதன் மூலம் உலகின்விலையுயர்ந்த பெயிண்டாக முதலிடத்தைப்பிடித்திருப்பதும் இந்த மோனலிசா ஓவியம்தான்...
ஃபுளோரன்ஸைச் சேர்ந்த பட்டு வியாபாரியான ஃபிரான்சிஸ்கோ டெல் ஜியோகொண்டா என்பவரின்மனைவியைக் குறிக்கும் வகையில் இத்தாலியச் சொல்லான லா ஜியோகொண்டா என்பதுதான் மோனலிசாஓவியத்துக்கு பெயராய் இடப்பட்டது என்றும் வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன.
இதை மறுத்து மோனலிசா ஓவியத்தில் இருப்பது ஒரு சாதாரண ஏழைப்பெண்மணி என்றும்இந்த ஓவியத்துக்குமாடலாய் இருக்கும்போது அந்தப்பெண் கர்ப்பமாய் இருந்திருக்கவேண்டும் என்றும்அதனால்தான் அந்தமுகத்தில் இவ்வளவு தேஜஸ் இருப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன.

இந்த ஓவியத்துக்கு மாடலாக இருந்தது லியோனார்டோவின் உதவியாளரான சாலைதான் (இவர்தான் John the Baptist ஓவியத்துக்கு மாடல்) என்றும்லியோனார்டோவே இதன் மாடல் என்றும்லியோனார்டோவின்நண்பர்களான இசபெல்லா அல்லது சிசிலியாதான் மோனலிசா ஓவியத்தின் மாடல் என்றும்கேதரினா எஸ்ஃபோர்ஸாதான் இதன் மாடல் என்றும் விதவிதமான கதைகள் நிலவினாலும் பெரும்பான்மை வரலாறு நிரூபிப்பதுஇது லேடி ஜியோகொண்டா என்பதைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனலிசாவோடு முடிந்து போவதல்ல லியோனார்டோவின் அற்புதத்திறமை என்பதை கீழிருக்கும் அவரதுஇன்னும் சில படைப்புகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்...
Portrait of a Musician by Leonardo...
Madonna Litta...
Madonna Benois...

Ginevra de'Benci...
La Belle Ferronniere...
Lady with an Ermine...
Annunciation...
இதுவும் லியோனார்டோவின் படைப்புதான் என மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் Salvator Mundi என்றழைக்கப்படும் இந்த இயேசுவின் படம்...
இந்த ஓவியங்கள் மட்டும் இல்லாமல் அறிவியல் மற்றும் மனித உடற்கூறுயியலிலும் லியோனார்டோவின் திறமையைஉலகத்துக்கு நிரூபிக்கும் அவரது குறிப்புகளும்படங்களும் ஏராளம் என்பதை இங்கே பாருங்கள்
Drawing of an Artillery...
Study of Dogs and Cats...
Design & Study of Folding Boat...
Design & Study of Hang Gliders and Flying Machines...
Design & Study of Seige Machine...
Study of Convex & Concave...
Stretching device for a Barrel spring...
Study of Horse and Rider...

லியோனார்டோ எப்படி குதிரைகளின் மீதான ஆராய்ச்சியில் அதீத ஆர்வம் காட்டினாரோ அதைவிட அதிகமாகவேமனித உடற்கூறுகள் பற்றிய ஆய்வுகளிலும் காட்டியிருக்கிறார் என்பதை அவரது பலவிதமான குறிப்பு படங்கள்உணர்த்துகின்றனபதிவின் நீளம் கருதி இதில் எல்லாவற்றுக்கும் விளக்கம் எழுதுவதை தவிர்த்து முக்கியமானஒன்றாக நான் கருதும் The Vitruvius Man என்ற இந்தப்படத்தை மட்டும் அதன் குறிப்போடு பார்க்கலாம்

இத்தாலியின் முக்கிய சின்னங்களில் ஒன்றாக கருதப்பட்டு மதிக்கப்படும் இந்தப்படம் லியோனார்டோவால்Vitruvius என்ற ஆர்க்கிடெக்ட்டின் ஆராய்ச்சி முடிவுகளை அடிப்படையாகக்கொண்ட குறிப்புகளோடுவரையப்பட்டிருக்கிறதுஇதன் குறிப்புகள் சொல்லும் தகவல் இதுதான்...
படத்திலிருக்கும் நிலைபோல ஒரு மனிதன் தனது கால்களை சமபக்க முக்கோணம் போல விரித்துக்கொள்வதும்கைகளை பக்கவாட்டில் படத்திலிருக்கும் ப்ரோபர்சனில் நீட்டும்போதும்...

·         the length of the outspread arms is equal to the height of a man
·         from the hairline to the bottom of the chin is one-tenth of the height of a man
·         from below the chin to the top of the head is one-eighth of the height of a man
·         from above the chest to the top of the head is one-sixth of the height of a man
·         from above the chest to the hairline is one-seventh of the height of a man.
·         the maximum width of the shoulders is a quarter of the height of a man.
·         from the breasts to the top of the head is a quarter of the height of a man.
·         the distance from the elbow to the tip of the hand is a quarter of the height of a man.
·         the distance from the elbow to the armpit is one-eighth of the height of a man.
·         the length of the hand is one-tenth of the height of a man.
·         the root of the penis is at half the height of a man.
·         the foot is one-seventh of the height of a man.
·         from below the foot to below the knee is a quarter of the height of a man.
·         from below the knee to the root of the penis is a quarter of the height of a man.
·         the distances from below the chin to the nose and the eyebrows and the hairline are equal to the ears and to one-third of the face.
படத்தின் வட்டம் மற்றும் சதுரம் சொல்லும் பல அற்புத சேதிகள் போலவேஇந்தப்படத்தில் மனிதனின்16வகையான போஸ்கள் ஒளிந்திருப்பது நான் வியந்த மற்றும் இதுவரையிலும் அறிந்திராத ஒரு அற்புதத்தகவல்... (முடிந்தால் பதினாறு வகையான போஸ்கள் என்னென்ன என்பதை நீங்களும் கண்டறிய முயலுங்கள்...!)
இதுதவிர லியோனார்டோவின் இன்னும் பல அற்புதக்குறிப்பு படங்கள் உங்கள் பார்வைக்காக...
Study of Arms...
Study of a Female...
Study of Womb and Birth...
Study of Parts of the Human Body...
Study of Proportion of Face and Eye...
Study of Proportion of Face...
தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்தக்காலத்திலும் நாம் இன்னமும் முழுமையடாத மூளை ஆராய்ச்சியை, லியோனார்டோ 500 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருப்பது மிக மிக ஆச்சர்யமான விஷயம்தான்...
Study of Brain Physiology...
Study of Brain...
Study of Skull...
Study of a Man...
கிட்டத்தட்ட 500 வருடங்களுக்கு முந்தையதொரு வரலாற்றிலேயே இன்றைய உலகின் பல்வேறு விஷயங்களுக்குமுன்னோடியாக திகழ்ந்திருக்கும் ஒரு மனிதனின் பன்முகத்திறமை, நமக்கும் நமக்குப் பிறகுவரும்தலைமுறைக்கும் நிச்சயம் ஆச்சர்யமானதொரு வரலாறாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லைதான்...!!!

”தேஜாமஹாலயா” - தாஜ்மஹாலின் இருண்ட பக்கங்கள்- வெளிவராத மர்மங்கள்..!




முகலாயமன்னர் ஷாஜகானால் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டபட்ட சமாதிதான் தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்றான ”தாஜ்மஹால்” என்று வரலாறு தெரிவிக்கிறது. ஆனால் தாஜ்மஹால் என்பது ”தேஜாமஹாலயா” என்றழைக்கப்பட்ட பழைய சிவன் கோவில்தான் என்கிற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.



தாஜ்மஹால் குறித்து தகவல்கள் அனைத்தும் உலகை ஏமாற்றியுள்ளது. தாஜ்மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது புராதான சிவன்கோயில் என்று ஆதாரங்களுடன் கூறுகிறார் இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக்.


முன்பு ”தேஜாமஹாலயா” என்கிற பெயரால் தாஜ்மஹால் அழைக்கப்பட்டுவந்தது என்று அவர் தெரிவிக்கிறார், ஜெய்ப்பூர் ராஜா ஜெய்சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கை குறிப்பான ”பாத்ஷாநாமாவில்”,ஆக்ராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்தெடுத்தது குறித்து குறிப்புகள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறியுள்ளார். இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக்.

பாத்ஷாநாமாவில் பழமையான தாஜ்மாஹாலை ஒப்படைக்க கேட்டு மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் மன்னர் ஜெய்சிங்கிற்கு ஆணை பிறப்பித்து உள்ள ஆவணம்.

tmm-page-of-badsha-namah-219x350


ஆதியில் சிவன்கோயிலாக இருந்ததை கையளிக்கச் சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய்சிங் ராஜாவிற்கு அனுப்பட்ட இரு ஆணைகள் இன்னும் பத்திரமாகவே உள்ளன என்றும்,கைப்பற்றி கொள்கின்ற கோயில்கள், மாளிகைகள் போன்றவற்றில் முகலாய மன்னர்கள் மற்றும் ராணிகளின் உடல்களைவழக்கமாக புதைத்து வந்துள்ளனர் . முகலாய மன்னர்கள் ஹிமாயூன், அக்பர், எத்மத்உத்தௌலா, சப்தர்ஜத் ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களை இதற்கு சான்றாக காட்டுகிறார் அந்த பேராசிரியர்.

தாஜ்மஹால் என்ற பெயரை எடுத்துக்கொள்கிற போது ஆப்கானிஸ்தான் முதல் ஆல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் ”மஹால்” என்கிற பெயர் எந்த கட்டிடத்திற்கும் கிடையாது.மும்தாஜின் முழுபெயர் ”மும்தாஜ்உல்ஜமானி” ஆகும். மும்தாஜின் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டியிருந்தார் என்றால் மும்தாஜ் என்ற பெயரில் இருந்து மும் என்பதை நீக்கிவிட்டு தாஜ் என்பதை மட்டும் நினைவுச்சின்னத்திற்கான பெயரில் ஏன் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று பேராசிரியர் பி.என்.ஓக் கேள்வியை எழுப்பியுள்ளார்.


தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை மறைத்திட பிற்காலத்தில் புனையப்பட்ட பெயர்தான் மும்தாஜ்- -ஷாஜகான் காதல் கதை என்கிறார் நியூயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின்மில்லர்.அவர்தான் தாஜ்மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறையில் தாஜ்மஹாலின் ஆயுளை கணித்தவர். மில்லரின் கருத்துப்படி தாஜ்மஹால் வயது 300க்கும் மேல் இருக்கும்,இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கிறார். ஐரோப்பிய நாட்டு முதல் சுற்றுலாப் பயணியான அல்பர்ட் மாண்டேஸ்லா என்பவர் 1638ம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஆக்ரா வந்திருந்தார், இவரது பயண குறிப்புகளில் ஆக்ரா பற்றி விரிவாக ஏழுதப்பட்டுள்ளது. ஆனால் தாஜ்மஹால் கட்டப்படுவது சம்பந்தமாக எந்த குறிப்புகளும் அதில் இடம் பெற்வில்லை.

அதே சமயம் மும்தாஜ் இறந்து ஒருவருடத்திற்குள் ஆங்கிலேய பயணியான பீட்டர்மாண்டி ஆக்ரா வந்திருந்தார்.இவரது பயணக்குறிப்புகளில் தாஜ்மஹாலின் கலை நயம் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்று சொல்லப்படுகிற வரலாற்றில் மும்தாஜ் இறந்து 20 வருடத்திற்கு பிறகல்லவா தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கிறது என இவற்றையும் ஆதாரங்களாக முன்வைக்கிறார் பேராசிரியர் ஓக்.



தாஜ்மஹாலின் பெரும் பகுதி பொதுமக்களுக்காக இன்றளவும் திறந்துவிடப்படவில்லை. இதற்கு காரணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறப்படுகிறது. தாஜ்மஹாலின் உள்ளே தலையில்லாத சிவன் சிலையும்,பூஜைக்கு பயன்படுத்துகிற பொருட்களும் இருக்கின்றன என்று அடித்து கூறும் பேராசிரியர் ஓக், தாஜ்மஹாலின் கட்டிடகலை நுட்பங்களை பார்க்கும் போது அனைத்தும் இது ஒரு இந்துகோயிலுக்கு குறியது என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.



மும்தாஜ்
இத்தனை விபரங்களையும் பேராசிரியர் ஓக் ”தாஜ்மஹால் உண்மையான வரலாறு” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார். இதில் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதாக கூறி அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் அன்றைய பாரதப்பிரதமர் இந்திராகாந்தி அரசால் தடைசெய்யப்பட்டது. தாஜ்மஹால் குறித்த உண்மைகள் வெளிவர வேண்டுமானால் ஐக்கியநாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச தொல்லியியல் நிபுணர்களை கொண்ட குழுவின் மூலமாக ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் பேராசிரியர் ஓக்.


இந்த சர்ச்சையை கிளப்பிய பேராசிரியர் ஓக் எனப்படும் புருசோத்தம் நாகேஷ்ஓக் 1917 ம் ஆண்டு மார்ச் 2 ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர்.தாஜ்மஹாலின் உண்மை வரலாறு உட்பட பல்வேறு ஆராய்ச்சி புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் கடந்த 2007 ம்ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 90.தாஜ்மஹால் குறித்த சர்ச்சையை கிளப்பிய பேராசிரியர் ஓக் மறைந்து விட்டாலும் சர்ச்சைகள் மட்டும் தொடர்ந்து கிளம்பிக்கொண்டுதான் இருக்கின்றன.

அதிரவைக்கும் உலக மர்மங்கள்

உலகத்தில் நமக்கு தெரியாத விடயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அப்படிப்பட்ட விடயங்களை நமக்கு தெரியப்படுத்த/ அறிவியல் ஆய்வு  நடத்தி அதனை விளக்க விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்களா என்றால், இன்னும் இல்லை என்பது உண்மை! அப்படி என்றால் எல்லாம் வல்ல அறிவியலால் கூட புரிந்து கொள்ள முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.  உதாரணமாக பேய்/பிசாசு, ஆவி அப்படி நிறைய சொல்லிகொண்டே போகலாம். 

இப்போது நாம் பார்க்க போவது, அந்த மாதிரி மனிதனால்/அறிவியலால் கூட விளக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுகள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படியெனின் முதலில் மனிதனிலிருந்தே தொடங்குவோம்….

உடல்-மூளை தொடர்பு


நம் மூளை எப்படி நமது உடலைப் பாதிக்கிறது என்னும் விவரத்தை, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்கிறார்கள். உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், சில நோய்களுக்கு மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை, நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே வெகு காலமாக இருந்து வருகின்றது! இதற்கு ஆங்கிலத்தில் “placebo effect”, என்று சொல்கின்றோர்கள். ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே. இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது? அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை.




அமானுஷ்ய சக்தி/ ESP 

உலகத்தில் மனிதனைப் பற்றி மனிதனாலேயே புரிந்துகொள்ள முடியாத விடயங்களிலேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி என்பது. அதாவது, ஐம்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (Extra-sensory perception ESP). ஆங்கிலத்தில் “Intuition” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து சொல்வது எப்படி என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால் நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்! இதில் செய்த ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பற்றிய ஆய்வு எப்போதும் ஒரு தெளிவான முடிவைத் தராது, மனிதனிற்கு அப்பாற்பட்டது என்று சொல்கிறார்கள். அப்ப்டியானால், கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராகவேதான் இருக்குமா? தெரியவில்லை, காலம் தான் பதில் சொல்லவேண்டும்.


இறப்பை ஒத்த அனுபவங்கள்இறப்புக்குப் பின் வாழ்வு

நம்மில் சில பேர், சில சமயத்தில் சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதைப்பற்றி சொல்லும்போது “செத்துப் பிழைத்தவன்” என்று சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, என்று சொல்கிறார்கள். இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவர்கள், அந்த அனுவபம் பற்றி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ளே போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துக்குள் வந்து, சொந்த பந்தங்களோட இணைந்த மாதிரி ஒரு உணர்வு” என்றெல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? அதாவது, கல்லறையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு? இதுமாதிரி கதைகள் பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை. இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவும் இல்லை  என்று சொல்கிறார்கள்.


UFOs


UFOs என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருட்களை பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, சில சமயம் வானத்தில் திடீர் என்று எதாவது ஒன்று பறக்கிற மாதிரி தெரியும், அது விண்கற்களா/ஏவுகணைகளா என்று அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனிதனுடைய வேலையாகக் கூட இருக்கலாம் என்பது இன்னொரு விடயம். என்னதான் கூர்மையா கவனித்து ஆய்வு பண்ணினாலும் இதுவரைக்கும் இது என்ன என்றே தெரியாமல்தான் இருக்கிறோம்.


தேஜா வு (Deja vu)

“தேஜா வு”, என்றால் ப்ரெஞ்சு மொழியில் “மூன்கூட்டியே பார்த்தது” என்று அர்த்தமாம். அதாவது, இதுவரைக்கும் செல்லாத ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்கிறார்கள்! உதாரணத்துக்கு, ஒரு பெண்  ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதலில் சென்று, ஒரு கட்டிடத்திற்குள்ளே அடியெடுத்து வைக்கிறார்கள். ஆனால் அவர்கள், அவர்களது வாழ்க்கையில் முதல்முதலில் பார்க்கின்றவையெல்லாமே முன்பே அவர்கள் பார்த்து, அனுபவித்தது மாதிரி ஒரு உணர்வு வருகின்றது. இதுதான் “தேஜா வு” என்கிறார்கள். சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் என்று சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாகவேதான் இருக்கிறது.


பேய்/பிசாசு/ஆவி

நம் பாரம்பரியத்தில், கலாச்சாரத்தில் ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பாக நாம் எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பாக இருக்கும். மேலே சொன்னது மாதிரி உலகத்தின் எல்லா மூலைகளிலும் இருந்தும் இந்த மாதிரி கதைகள் நிறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” என்ற ஒன்று  இருக்கு என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கவேயில்லை. அது ஒரு அழகிய மர்மமாகவேதான் இருக்கிறது.

மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)

பொதுவாக மனிதர்கள் தொலைந்து போவதும், கொஞ்ச காலம் கழித்து திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்தில் சாதாரணமாக நடக்கும் ஒன்று. ஆனால் இப்போது நாம் பார்க்க போகும் விடயம் அப்படியில்லை. நம்முடன் இருந்துகொண்டிருக்கும் ஒருத்தருக்கு திடீர் என்று மறைந்து போவது எப்படி சாத்தியம்? அது எப்படி என்று தெரியாது, ஆனால் இது மாதிரி நிறைய நடக்கிறது. தொலைந்து போனவர்கள் கிடைத்தால் பறவாயில்லை, ஆதாரம் எதுவுமே இல்லாமல், தொலைந்து போறவர்களை பற்றி விசாரணை பண்ணாலும் அவங்க கிடைப்பதில்லை எனும் போது, அது ஒரு மர்மம்தானே?


ஆறாவது அறிவு(Intuition)

நம் எல்லாருக்குமே “உள்ளுணர்வு” என்ற ஒன்று இருக்குதாம். அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்தில் நாம் எல்லோரும் அதை உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று நாம் நினைத்து முடிக்கிறதுக்குள்ளே ஒரு விபத்து நடந்து விடும். இவை எல்லாவற்றிற்கும் காரணம், நமது ஆழ்மனதில் நம்மை சுற்றி நடக்கும் விடயங்கள் பதிந்துபோய், அதில் இருந்து நமக்கே தெரியாமல் நாம், இப்படி நடக்கப்போகிறது என்று உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரிகிறது, “ஏன்” உணர்கிறோம் என்கிற கேள்விக்கெல்லாம் இன்னும் பதில் தெரியவில்லை.



மனிதன் போன்ற மிருகம் (Bigfoot)


பல வருட காலமாக அமெரிக்காவில், பெரிய, அடர்த்தியான முடியுடன், மனிதன் மாதிரியே இருக்கிற “Bigfoot”, என்கிற மிருகத்தைப் பார்த்ததாக நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செய்தால் குறைந்தது ஒன்றையாவது, இல்லை என்றால் அதனுடன் இதுவரைக்கும் ஒரு பிணத்தையாவது கண்டுபிடித்திருக்கவேண்டுமே? ஆனால் அவ்வாறு ஒன்றையும் இதுவரைக்கும் கண்டுபிடிக்கவில்லை, வேட்டையாடவும் இல்லை என்பதுதான் உண்மை. வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வைத்துக்கொண்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்கிறது என்று சொல்வதில் எந்த யதார்த்தமும் இல்லை என்று சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.


டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum) 

அமெரிக்காவில், நியூ மெக்சிகோவில் இருக்கும் ஒரு சின்ன நகரத்துக்கு பெயர்தான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தைச் சேர்ந்த சில மக்கள் பல வருடமாக, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்தில் ஒரு சத்தம் கேட்டு கொண்டு இருக்கிறதாகச் சொன்னார்கள். ஆனால் சில மக்கள்தான் இதைச் சொல்கிறார்களே தவிர, மற்றவர்கள் இது ஏதோ ஒலி அலைகளினால் ஏற்படும் ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லை என்கிறார்கள். எது எப்படியோ, அது என்ன சத்தம் என்று இதுவரைக்கும் யாராலையும் உறுதியாச் சொல்லமுடியவில்லையாம்.

புதன், 16 மார்ச், 2016

இதுதான் அமுக்குவான் பேய்

இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது,
யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல்
இருக்கும்.
உங்களால் கண்ணைத் திறக்க முடியாது.
கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி,
திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும்
திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம்
கழித்துத்தான் உங்களால் எதுவும்
செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும்
அருகில் இருக்கமாட்டார்கள்.



என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான்
அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமானபேய் இல்லை என்றாலும், இதுவும்
ஒரு முக்கியமான பேயாக புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய்
அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல்
புளியமரத்திலோ வேப்பமரத்தின்
உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின்
இராஜாவான......... என்றெல்லாம்
சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான்
ஆனால் அது உண்மை இல்லையே,



என்ன செய்வது?
நம்மூரில் அமுக்குவான் பேய்
என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க
பக்கவாதம் என்கிற கோளாறு.

சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட
பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும்.
அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக்
கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால்
இது வருகிறது.
துயில் மயக்க நோய், ஒற்றைத்
தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில்
மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும்
இதற்கும் தொடர்புகள் உண்டு.

இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.
இதில் தனிமைத் தூக்க பக்கவாதம்
என்பது ஒரு நபரின் வாழ்க்கையில்
எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த
நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும்
பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க
பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும்.



மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட
இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட
தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம்
(மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும்.
துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம்
பேருக்கு இப்பிரச்னை ஏற்படும்
என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள்
இது ஏதோ பில்லி சூனியத்தின்
வேலை என்று நினைத்துக்
கொண்டு மந்திரவாதிகளைத்
தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த
மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள்
விடுபடும் காலம் என்றுதான் வருமோ?



கும்நாமி பாபாவின் கருவூலத்தில் நேதாஜியின் பெற்றோர் புகைப்படங்கள்: நேதாஜி 1985 வரை உயிருடன் இருந்தாரா?

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர்,  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இவர் பற்றிய மர்மங்களையும் வாழ்க்கையையும் அறிவதற்கு மிகவும் ஈடுபாட்டுடன் தேடலில் உள்ளவன் நான். இன்றைய தினம் மாலைமலர் பத்திரிகையில் வந்த விடயங்களை எனது கருடன் பக்கத்தில் பகிர்கிறேன்.
கும்நாம் பாபா என்ற பெயரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பைசாபாத் நகரில் 1985-ம் ஆண்டுவரை உயிரோடு வாழ்ந்ததாக நம்பத்தகுந்த தகவல்களும், அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

இந்திய தேசிய ராணுவம் என்ற போராளிகள் பட்டாளத்தை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி, வெள்ளையர் அரசுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மனி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார். 

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, இயந்திரக்கோளாறு காரணமாக விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவரது மரணம் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த 1956ம் ஆண்டு ஷா நவாஸ் கமிட்டியும், 1999ம் ஆண்டு முகர்ஜி கமிஷனும் அமைக்கப்பட்டது. 2005ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முகர்ஜி கமிஷன் அறிக்கையில், 1945ம் ஆண்டு நேதாஜியின் விமானம் எரிந்து விழுந்ததாக கூறப்படும் இடத்தில் அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

கடந்த 70 ஆண்டுகளாக நிலவி வரும் நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மமுடிச்சு, இதுவரை அவிழ்க்க முடியாத கல்முடிச்சாகவே இருந்து வருகிறது. 

நேதாஜி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் தலைமையக அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த 64 கோப்புகளை சமீபத்தில் மம்தா பானர்ஜி வெளியிட்டார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றி, பின்னர், காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசிவந்த டெப்நாத் தாஸ் என்பவரைப் பற்றிய போலீசாரின் உளவுத்தகவல்கள் மேற்கண்ட 64 கோப்புகளில் 22-ம் எண் கோப்பில் காணப்படுகிறது.

அவரது கருத்தின்படி,1948-ம் ஆண்டுவரை சீனாவின் மன்சூரியா பகுதியில் நேதாஜி உயிருடன் வாழ்ந்ததாகவும், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மூன்றாம் உலகப்போர் வெடிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா மற்றும் சர்வதேச அரசியலின் போக்கை அவர் உன்னிப்பாக கவனித்து வந்ததாகவும் தெரியவந்தது.

இதற்கிடையில், நேதாஜியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒருவரான சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆசம்கர் மாவட்டத்தின் டக்கோவா கிராமத்தில் தற்போது வசித்து வருகிறார். தனக்கு 115 வயதாவதாக கூறும் நிஜாமுதீன், நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களில் ஒருபகுதி வெளியாகியுள்ள நிலையில் கடந்த ஆண்டில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்திருந்தார்.

‘கடைசியாக நேதாஜியை 1947-ம் ஆண்டு நான் சந்தித்தேன். அவரை ஒரு காரில் அழைத்துவந்து, பர்மாவின் சித்தான் நதியில் தயாராக இருந்த படகில் ஏற்றி வழியனுப்பி வைத்தோம். மிகவும் குறுகலான அந்த நதி, இந்திய எல்லையில் உள்ள கடலில் போய் கலக்கக் கூடியது. அங்கிருந்து அவரை எங்கோ அழைத்துச் செல்வதற்கு கடலில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தயார் நிலையில் காத்திருப்பதாக கூறப்பட்டது. 

அவர் படகில் ஏறிச்சென்ற சில நிமிடங்களில், நேதாஜியை நாங்கள் அழைத்து வந்த கார் மீது அங்கு வந்த ஒரு போர் விமானம் குண்டு வீசித் தகர்த்துவிட்டு சென்றது. நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். என்னுடன் இருந்த சிலர் மரணம் அடைந்தார்கள்’ என்று அந்த பேட்டியின்போது அவர் தெரிவித்திருந்தார்.

1945-ம் ஆண்டு நேதாஜி இறந்து விட்டதாக அவரது வரலாற்றின் சந்தேகத்துக்குரிய பகுதி கூறுகின்றதே..? நீங்கள் 1947-ம் ஆண்டில் அவரை சந்தித்ததாக சொல்கிறீர்களே..? என்ற நிருபரின் கேள்விக்கு ‘இந்தியன்’ தாத்தா பாணியில் ஒரு மர்மப் புன்னகை உதிர்த்தபடி, பதில் அளித்த நிஜாமுதீன், ‘ஆமாம், அவர் மரணம் அடைந்து விட்டதாக வானொலியில் அப்போது வாசிக்கப்பட்ட செய்தியை எங்களுடன் சேர்ந்து அவரும் கேட்டுக்கொண்டிருந்தார்’ என்று தெரிவித்திருந்தார்.

அவரது மரணச் செய்தியை அவரே வானொலியில் கேட்டதாக வந்த திடுக்கிடும் தகவலையடுத்து, 1952-ம் ஆண்டு வரை சர்தானந்தா முனிவராக வாரணாசி குகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்ந்ததாக மற்றொரு தகவலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதவாக்கில் வெளியானது.

மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற ஷியாமாச்சரண் பாண்டே என்பவர், தனது தந்தையான கிருஷ்ணகாந்த் பாண்டேவின் டைரி குறிப்புகளில் கண்ட சில விபரங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

அந்த குறிப்புகளின் அடிப்படையில் நேதாஜி 1945-ம் ஆண்டு இறந்ததாக கூறப்படும் வரலாறு தவறானது என அவர் சுட்டிக் காட்டியிருந்தார். 1952-ம் ஆண்டுவரை நேதாஜி வாரணாசியில் உள்ள ஒரு குகையில் சர்தானந்தா முனிவர் என்ற பெயரில் ரகசியமாக வாழ்ந்து வந்ததாகவும் ஷியாமாச்சரண் பாண்டே மத்திய அரசிடம் ஆதாரத்துடன் தெரிவித்தார்.

இதற்கு ஆதாரமாக நேதாஜிக்கும் தனது தந்தை கிருஷ்ணகாந்த்துக்கும் இடையில் நடைபெற்ற கடித தொடர்புகளையும் அவர் ஆவணப்படுத்தி இருந்தார்.

2-12-1951 அன்று கங்கை-மோமதி ஆற்றங்கரை பகுதியில் நைந்துப்போன உடையில் இருந்த ஒரு முனிவரை எனது தந்தை சந்தித்தார். காசிபூரில் உள்ள பஹுரி பாபா ஆசிரமத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த அந்நபர், எனது தந்தையிடம் இன்றிரவு இந்த பகுதியில் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டுள்ளார்.

உடனடியாக அவருக்கு ஒரு கம்பளியை கொடுத்த எனது தந்தை கிருஷ்ணகாந்த், நீங்கள் விரும்பும்வரை இங்கே தங்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட அந்த முனிவர், நான் யார் கண்களிலும் படாமல் வசிக்கக்கூடிய ஒரு தனிஇடத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, வாரணாசி-காசிபூர் சாலையில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காத்தி என்ற இடத்தின் அருகே மூங்கில்களினால் உருவாக்கப்பட்ட ஒரு குகைக்குள் 14-1-1952 சங்கராந்தி தினத்தன்று அந்த முனிவர் குடியேறினார். அந்த குகையில் அவர் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது, மிக பிரபலமாக விற்பனையாகிவந்த ஒரு ஆங்கில நாளிதழை அவர் அன்றாடம் விரும்பி படித்தார்.

அந்த மூங்கில் குகையில் ஒரு புதிய முனிவர் தங்கியுள்ளதை அறிந்த உள்ளூர் மக்கள் அவரது அருளைப்பெற குகையை நோக்கி வர ஆரம்பித்தனர். ஒரேயொரு நிபந்தனையின் பேரில் அவர்களில் சிலரை நேதாஜி சந்தித்துள்ளார். தேசிய விடுதலைப் படை ராணுவத்தை உருவாக்கிய நேதாஜியின் ஜாடையை ஒத்துள்ள தன்னிடம் நேதாஜி தொடர்பாக யாரும், எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்பதே அந்த நிபந்தனை.

அந்த முனிவரைப் பற்றிய செய்தியை இரு உள்ளூர் பத்திரிகைகள் அப்போது வெளியிட்டிருந்தன. இதையடுத்து, காத்தி குகையில் இருந்து தனது இருப்பிடத்தை காலி செய்த அவர், பிப்ரவரி மாதம் 14-ம் தேதி விந்தியாச்சல மலைப்பகுதியை நோக்கி இடம் பெயர்ந்தார் என கிருஷ்ணகாந்த் பாண்டேவின் டைரி குறிப்புகளில் கண்ட ஆதாரங்களை சுட்டிக்காட்டிய ஷியாமாச்சரண் பாண்டே, பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

நேதாஜி சொந்த நாட்டிலேயே தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய முக்கிய காரணமும் இருந்தது. இந்தியாவுக்கு விடுதலை அளித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சர்வதேச போர்க்குற்ற உடன்படிக்கையின்படி, நேதாஜி உயிருடன் கிடைத்தால் அவரை பிரிட்டைன் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

அந்த நிலையில், அப்போது யார் கண்களிலாவது பட்டால், மேற்கண்ட நிபந்தனையின்படி, அந்நாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நேதாஜியை கைது செய்து பிரிட்டைன் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதை தவிர்க்கவே அவர் முனிவர் வேடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய அவசியம் ஏற்பட்டது, என தெரியவந்தது. 

இதற்கிடையே, உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் இரட்டை நகரமான அயோத்தி மற்றும் பைஸாபாத்தில் சுமார் 15 வருடங்களாக சுற்றிக் கொண்டிருந்தவர் பகவான்ஜி. பார்ப்பதற்கு ஒரு சாதுவை போல் தோற்றமளித்த அவர் கோயில்களுக்கு அடிக்கடி செல்லாதவராக இருந்திருக்கிறார். தோற்றத்தில் நேதாஜியை போல் இருந்தவரது நடவடிக்கைகள் மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. இதனால், அவரை அங்குள்ள மக்கள் 'கும்நாமி (காணாமல் போன) பாபா' என அழைத்தனர்.

18-9-1985 அன்று அவர் இறந்தபின்னர், அயோத்தியின் சரயு நதிக்கரையில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. பிறகு அவர் தங்கியிருந்த அயோத்தியின் ராம்பவனில் இருந்த அவரது உடமைகளை சோதனையிட்டபோது பகவான்ஜி எழுதிய பல கடிதங்கள் கிடைத்தன. இதை தேசிய குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வு மையத்தின் முன்னாள் கூடுதல் இயக்குநரான பி.லால் ஆய்வு செய்தார். அவை நேதாஜியின் கையொப்பத்துடன் ஒத்துப்போவதாக முன்னர் கூறி இருந்தார்.

இந்நிலையில், மாவட்ட கருவூலத்தில் பாதுகாத்து வைக்கப்படிருந்த கும்நாம் பாபாவின் உடமைகளை நேதாஜியின் குடும்பத்தார் தற்போது பெற்றுள்ளனர். அந்த டிரங்க் பெட்டியை நேற்று திறந்துப் பார்த்தபோது, அதில் நேதாஜி தனது மனைவி மகளுடன் காணப்படும் ஒரு புகைப்படமும், இதுவரை யாருமே கண்டறியாத மற்றொரு அபூர்வ புகைப்படமும் கிடைத்துள்ளது. 

அந்த அபூர்வ புகைப்படத்தில் நேதாஜியின் பெற்றோரான ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி போஸ் ஆகியோர் காணப்படுகின்றனர்.

அவர்களுடன் சுதிர் சந்திரபோஸ், சதிஷ் சந்திரபோஸ், சரத் சந்திரபோஸ், சுரேஷ் சந்திரபோஸ், சுனில் சந்திரபோஸ், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நின்றபடி காணப்படுகின்றனர். நடுவரிசையில் நேதாஜியின் பெற்றோரான ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி போஸ் ஆகியோர் தங்களது மூன்று மகள்களுடன் அமர்ந்த நிலையில் உள்ளனர்.

இதுதவிர, இந்திய விடுதலைக்காக நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்துப் போரில் ஈடுபட்ட அவரது உளவுத்துறை மூத்த அதிகாரியான பகிட்ரா மோஹன் மற்றும் சுனில் காந்த் குப்தா ஆகியோர் துர்கா பூஜை மற்றும் நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி மாதம் 23-ம் தேதி ஆகிய நாட்களில் முன்னர் அனுப்பியிருந்த வாழ்த்து தந்திகள் போன்றவையும் அந்த பெட்டியில் காணப்படுகிறது.

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது ‘சர்தானந்தா முனிவர்’ மற்றும் ‘கும்நாம் பாபா’ என்ற புனைப்பெயர்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நமது நாட்டின் பலபகுதிகளில் 1985-ம் ஆண்டுவரை வாழ்ந்திருப்பதாக யூகிக்க முடிகிறது, அல்லவா..?

--நன்றி மாலைமலர்.com--