வெள்ளி, 13 மார்ச், 2015

பில்லியர்களின் செல்வவள வளர்ச்சி

திங்களன்று Forbes இதழால் பிரசுரிக்கப்பட்ட சமீபத்திய தொகுப்புரையின்படிஉலக பில்லியனர்களின் மொத்த ஒருங்கிணைந்த மதிப்பு ஒரு புதிய மட்டத்திற்கு 2015 இல் 7.05 ட்ரில்லியன் டாலரை எட்டியுள்ளது.
அங்கே சாதனையளவிற்கு 1,826 பில்லியனர்கள்ஒவ்வொருவரும் சராசரியாக 3.8 பில்லியன் செல்வ வளத்துடன் உள்ளனர்கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்உலக பில்லியனர்கள் அவர்களின் மொத்த செல்வ வளத்தை 2014 இல் 6.4 ட்ரில்லியனில் இருந்து 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து கொண்டுள்ளனர்.அதேவேளையில் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை 11 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது.
அதன் அறிக்கையின் அறிமுகத்தில்Forbes இதழ் உலகின் மிகப் பணக்காரர்களின் செல்வ வளம் தொடர்ந்து உயர்ந்து வருவதற்கும் உலக பொருளாதார நிலைக்கும் இடையிலான மலைப்பூட்டும் இடைவெளியை குறிப்பிட்டுக் காட்டியது. “வீழ்ச்சி அடைந்துவரும் எண்ணெய் விலைகள் மற்றும் பலவீனமடைந்து வரும் யூரோ ஆகியவற்றிற்கு இடையேஉலக செல்வந்தர்களின் எண்ணிக்கை உலக பொருளாதார கொந்தளிப்புடன் போட்டிபோட்டு மீண்டுமொருமுறை விரிவடைந்தது,” என்று எழுதியது.
பில்லியர்களின் இந்த செல்வவள வளர்ச்சி தொடர்ந்து உலகளாவிய பங்குவிலை நிர்ணய சந்தைகளின் உயர்வுடன் பிணைந்துள்ளனஅகில உலக FTSE குறியீடு கடந்த மாதம் சாதனை அளவிற்கு உயர்ந்ததுமற்றும் அமெரிக்க சந்தைகள் சாதனைகளை முறிப்பதை தொடர்ந்து கொண்டிருக்கிறதுபங்குடைமையோ (share ownership) "பணத்தை அச்சடித்தல்" (quantitative easing), சாதனையளவிலான குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் ஏனைய அரசாங்க கொள்கைகளின் பிரதான ஆதாயதாரர்களாக உள்ள செல்வந்தர்களின் கரங்களில் அதிகளவில் குவிந்துள்ளது.

உலக பில்லியனர்களின் செல்வ வளம்
வோல் ஸ்ட்ரீட் தாயகமாக மற்றும் உலகளாவிய நிதியியல் மூலதனத்தின் மையமாக விளங்கும் அமெரிக்கா,இதுவரையில் இல்லாத வகையில் மீண்டும் பில்லியனர்களின் மிக அதிக எண்ணிக்கையுடன் —536—உள்ளது. 2009 இல் “பொருளாதார மீட்சிஎன்றழைக்கப்பட்டது தொடங்கியதில் இருந்துஅமெரிக்காவில் மொத்த இலாப வருவாய்களில் சுமார் 95 சதவீதம் மேல்மட்ட சதவீதத்தினருக்கு சென்றுள்ளது.இதற்கிடையேதான்அந்நாட்டில் அண்மித்தளவில் நான்கில் ஒரு குழந்தை வறுமையில் வாழ்கிறது.
அமெரிக்காவில் உள்ள பில்லியனர்களின் பட்டியலில் பரிசயமானவர்களின் பெயர்களே மேலே இடம்பெற்றுள்ளனமைக்ரோசாப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ் பெயரும் அதில் உள்ளடங்கும்இவரது தனிப்பட்ட செல்வ வளம் மட்டுமே 3.2 பில்லியனில் இருந்து 79.2 பில்லியன் டாலருக்கு உயர்ந்ததுஅமெரிக்கர்களின் மத்தியில்கேட்ஸூக்கு அடுத்து இருப்பவர் முதலீட்டாளர் வாரென் பஃபெட் (Warren Buffett) ஆவார்இவர் இவ்வாண்டின் மிகப்பெரிய இலாபமீட்டியவராக அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கடந்த ஆண்டு 14.5பில்லியன் டாலரில் இருந்த இவரது சொத்தின் நிகர மதிப்புஇப்போது 72.7 பில்லியன் டாலராகும்.
அப்பட்டியலில் அதற்கு கீழே இருப்பவர்களில்தனியார் முதலீட்டு நிர்வாகி ஸ்டீவன் கோஹென் (Steven Cohen) போன்றவர்களை ஒருவரால் பார்க்க முடியும்இவர் அமெரிக்க முதலாளித்துவத்தின் குற்றகர குணாம்சத்தின் இன்றியமையாத உருவடிவமாவார்ஓராண்டிற்கு முன்னர்கோஹெனின் முன்னாள் தனியார் முதலீட்டு நிதியம், SAC Capital Advisors, உள்-வர்த்தக கட்டண குற்றங்களுக்காக வழக்கில் இழுக்கப்பட்டதுகோஹென் (Cohen) மீதே கூட ஒருபோதும் குற்றஞ்சாட்டப்படவில்லை என்பதோடுஅவர் எளிமையாக அவரது செல்வங்களை Point72 Asset Management என்ற புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொண்டார்கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர் ஈட்டிய கோஹென்அவரது மொத்த நிகர மதிப்பை 11.4பில்லியன் டாலருக்குக் கொண்டு வந்தார்.
தனி உள்ளாட்சியாக வகைப்படுத்தினால்Forbes பட்டியலில்கலிபோர்னியாவெறுமனே ஒட்டுமொத்தமாக அமெரிக்காவை மற்றும் சீனாவை அடுத்து, 131 பில்லியனர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும்.நிச்சயமற்ற மற்றும் ஒழுங்குமுறையற்ற வேலை நேரங்களுடன்குறைந்த ஊதியம் பெறும் ஓட்டுனர்களை ஒருங்கிணைப்பதில் சிறப்புதன்மை கொண்ட கார்-பகிர்வு சேவையான Uber நிறுவனத்தின் இணை-ஸ்தாபகர்கள் Travis Kalanick மற்றும் Garett Camp ஆகியோர் கலிபோர்னியாவின் புதிய பில்லியனர்களில் உள்ளனர்அதுபோன்ற உழைப்பு சுரண்டும் முறை ஒட்டுமொத்தமாக அமெரிக்க பொருளாதாரத்திற்கான ஒரு முன்மாதிரியாக பெருமளவில் பார்க்கப்பட்டு வருகிறது.
மெக்சிகன் தொலைதொடர்புத்துறை அதிபர் கார்லோஸ் ஸ்லிம் (Carlos Slim), அந்த உலகளாவிய பட்டியலில்77.1 பில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்தில் இருந்தார்மெக்சிகோவின் 122 மில்லியன் மக்கள்தொகையில் பாதி மக்கள் வறுமையில்நாளொன்றுக்கு சுமார் டாலருக்கும் குறைந்த வருவாயில்(மாதத்திற்கு 2,329 பெசொஸூடன் -pesos) வாழ்வதாக வரையறுக்கப்படுகிறதுஸ்லிமின் தனிப்பட்ட செல்வமேவறிய 60 மில்லியன் மெக்சிகோ தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த ஆண்டு வருவாய் உடன் தோராயமாக ஒப்பிடக்கூடியதாக உள்ளது.
இலத்தீன் அமெரிக்காவில் மிகப்பெரிய தனிநபராக ஸ்லிம் விளங்குகிறார் என்ற நிலையில்அப்பிராந்தியத்தில் அதிக எண்ணிக்கையிலான 54 பில்லியனர்களை கொண்ட நாடாக பிரேசில் உள்ளதுபிரேசிலின் 60மில்லியன் குழந்தைகளில் பாதி வறுமையில் வாழ்கின்றன.
ஒட்டுமொத்தமாகமிக அதிகமாக 213 என்ற எண்ணிக்கையில் பில்லியனர்களை கொண்ட இரண்டாவது நாடு சீனாவாகும்அதைத் தொடர்ந்து ஜேர்மனிஇந்தியா மற்றும் ரஷ்யா உள்ளன.
உலக முதலாளித்துவத்திற்கு ஒரு மலிவு உழைப்பு தளமாக விளங்கும் சீனாஇந்த ஆண்டு Forbes பட்டியலில்290 பில்லியனர்களில் 71 புதியவர்களுக்குஅல்லது மொத்த நபர்களில் சுமார் ஒரு கால் பங்கினருக்கு புகலிடமாக உள்ளதுசீனாவில் உள்ள மிகப் பெரிய செல்வந்தர் ஒரு நில/கட்டிடத்துறை அதிபரான வாங் ஜியான்லின் (Wang Jianlin) (24.2 பில்லியன் டாலர்ஆவார்இவருக்கு அடுத்து நில சொத்து (real estate)வர்த்தக நிறுவனமான அலிபாபா குழுமத்தின் (Alibaba Group) அதிபர் ஜேக் மா (22.7 பில்லியன் டாலர்)ஆவார்.
கடந்த ஆண்டு சீனாவின் பங்கு-நிர்ணய சந்தைகளில் இருந்த உயர்வு சீன பில்லியனர்களுக்கு மட்டும் ஆதாயமளிக்கவில்லைForbes குறிப்பிடுகையில், “சீன பில்லியனர்கள் பட்டியலில் மேல்மட்ட 20பில்லியனர்களால் நடத்தப்படும் நிறுவனங்களில் நீங்கள் முதலீடு செய்திருந்தால்நீங்கள் அவர்களின் செல்வ வளத்திலிருந்து சரியாக உங்களின் பங்கு கணக்கைப் பெற்று வந்திருப்பீர்கள்,” என்றதுகடந்த ஆண்டு அலிபாபாவின் ஆரம்ப பொது பங்கு வெளியீடானது ஊக வணிகம் மற்றும் பேராசையின் ஒரு சர்வதேச காட்சியாக மாறி இருந்ததுடன்உலகளாவிய முதலீட்டாளர்களிடம் இருந்து பில்லியன் பில்லியன் கணக்கில் இலாபங்களைக் குவித்தன.
இந்தியாவில்அந்நாட்டின் 90 பில்லியனர்கள் "பெரிதும் பிரதம மந்திரி நரேந்திர மோடியின் 'நல்ல காலத்திற்கானவாக்குறுதியின் மீது சவாரி செய்து வருவதாகForbes கருத்துரைத்ததுகடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த வலதுசாரி இந்து அடிப்படைவாத அரசியல்வாதிஅந்நாட்டை உலகின் கொத்தடிமை கூடமாக ஆக்கிக் கொண்டேவணிகம்-சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு தொகுப்பை வேகமாக முன்னெடுத்துள்ளார்.
Reliance Industries Limited இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, 21 பில்லியன் டாலர் நிகர சொத்துக்களுடன்இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்இந்தியாவில் சுமார் 60சதவீத மக்கள்அல்லது 750 மில்லியன் மக்கள்நாளொன்றுக்கு டாலருக்கும் குறைந்த வருவாயில் வாழ்கின்றனர்.
ரஷ்யாவின் பில்லியனர்கள் எண்ணிக்கை கணிசமான அளவில் 111இல் இருந்து 88க்கு வீழ்ச்சி அடைந்து,ஒட்டுமொத்த நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு இறங்கியது.கூர்மையான எண்ணெய் விலை வீழ்ச்சியாலும்அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவினால் திணிக்கப்பட்ட முடமாக்கும் பொருளாதார தடைகளாலும்அந்நாட்டை சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடியில் இதுவும் ஒரு விளைவாகும்இத்தகைய தடைகளின் பிரதான நோக்கங்களில் ஒன்றுதங்களின் செல்வ வளத்தின் மீதான தாக்கங்களைக் குறித்து பீதியுற்றுள்ள ரஷ்ய செல்வந்த தட்டுக்களின் ஒரு பிரிவை விளாடிமீர் புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக திருப்பி விட ஊக்குவிப்பதாகும்.
நம்பகமான பரந்தளவில் இதற்கு இணையானவையும் வெளிப்பட்டு வருகின்றனசான்றாக ஐரோப்பிய வங்கிகளில் கிரீஸ் கொண்டிருக்கும் கடன் சுமார் 90 பில்லியன் டாலர் ஆகும்உலக பில்லியனர்களின் செல்வவளம் இந்த தொகையை விட 77 மடங்கு அதிகமாகும்.
அமெரிக்காவில்டெட்ராய்ட் நகரத்தின் கடன் 6.9 பில்லியன் டாலராகும்அல்லது உலக பில்லியனர்களின் மொத்த செல்வ வளத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காகும்.
கிரீஸூம் சரி டெட்ராய்டும் சரி இரண்டுமே வங்கிகளால் கட்டளையிடப்பட்டஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தால் ஆமோதிக்கப்பட்ட ஒரு பேரழிவுகரமான மறுசீரமைப்பிற்குள் இழுக்கப்பட்டுள்ளதோடு,அதனால் பாரிய வறுமையும் வாழ்க்கை தரங்களின் சீரழிவும் விளைந்துள்ளன.
ஒட்டுமொத்தமாக Forbes பட்டியல் உலக முதலாளித்துவத்தின் ஒட்டுண்ணித்தனமான குணாம்சத்திற்கு வெளிப்பாட்டை வழங்குகிறதுஅவர்களின் செல்வ வளமானது—நிதிஉற்பத்திதொலைதொடர்பு என—பொருளாதாரத்தின் எந்தவொரு குறிப்பிட்ட துறையுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரிபெரும் பணக்காரர்களின் சொத்துக்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பங்கு சந்தைகளின் உயர்வுடன் பிணைந்துள்ளன.
அதுபோன்ற பெரும் தொகைகள் மிக சிலரின் கரங்களில் திரண்டிருப்பது வெறுமனே வார்த்தையளவில் பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் விளைவுபொருள் அல்லமாறாக அது 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் தீவிரமாக்கப்பட்ட திட்டமிட்ட அரசாங்க கொள்கைகளின் விளைபொருளாகும்அந்த சமயத்திலேயேஉலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டதைப் போலஇந்த நெருக்கடியின் "வடிவில் அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதாரத்திலும்மற்றும் அதை அடித்தளமாக கொண்டுள்ள சமூக மற்றும் வர்க்க உறவுகளிலும் ஓர் அடிப்படை மறுகட்டமைப்பு நடந்து கொண்டிருக்கிறது.”
2009இல் இருந்துவங்கி பிணையெடுப்புகள்பூஜ்ஜியத்திற்கு அண்மித்த வட்டிவிகிதங்கள் மற்றும் "பணம் அச்சடித்தல்ஆகிய கொள்கைகள் முழுமையாக நடைமுறைபடுத்தப்பட்ட போதுஉலக பில்லியனர்களின் செல்வ வளம் சுமார் மூன்று மடங்கு உயர்ந்துள்ளனஅமெரிக்காவில் ஒபாமா நிர்வாகத்தின் தலைமையில்,ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது ஓர் இரக்கமற்ற தாக்குதலை நடத்திக் கொண்டேநிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை பாய்ச்சி உள்ளது.
இத்தகைய நிகழ்ச்சிப்போக்கின் உலகந்தழுவிய குணாம்சம்நிலவும் பொருளாதார ஒழுங்கமைப்பின் இயல்பு தான் பிரச்சினையே என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறதுசமூக சமத்துவமின்மையின் அசாதாரண வளர்ச்சி மற்றும் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு செல்வ வளத்தை பாரியளவில் கைமாற்றுவது ஆகியவை ஒரு திவாலான மற்றும் நோய்பீடித்த அமைப்புமுறையான முதலாளித்துவத்தின் வெளிப்பாடுகளாகும்இந்த அமைப்புமுறையின் சீரழிவும் நெருக்கடியும் அதை அழிப்பதற்கான வழிவகைகளை அதுவே உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன —அதாவது சமூக மோதல் மற்றும் உலகந்தழுவிய வர்க்க போராட்டத்தின் மேலெழுச்சியை உருவாக்கி வருகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியமும், சிரியா மற்றும் ஈராக்கில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் எழுச்சியும்

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மக்கள் எதிர்ப்பின் முன்னால் சிரியா மீது குண்டுவீசும் அதன் திட்டங்களிலிருந்து ஒபாமா நிர்வாகம் பின்வாங்கி வெறும் ஓராண்டுக்குப் பின்னர்மத்திய கிழக்கில் ஒரு பகிரங்கமான ஏகாதிபத்திய தாக்குதலை தொடங்க ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS)சௌகரியமான புதிய போலிக்காரணமாக எழுந்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ISISஐ இலக்கில் வைப்பதற்காக என்று கூறப்படும் ஒரு முடிவில்லா யுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா புதனன்றுதேசியளவிலான-தொலைக்காட்சி உரையில்அறிவிக்க இருக்கிறார்அந்நிர்வாகம் அந்நாட்டிற்குள் துருப்புகளின் மறுஅறிமுகம் உள்ளடங்கலாக ஈராக்கின் மீது வான் தாக்குதல்களை ஏற்கனவே தொடங்கிவிட்டதுஇது பாரியளவில் விரிவாக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு சிரியாவிற்கு எதிராக போர் அறிவிப்பதற்கு காரணமாககூத்தா நகர் மீது இரசாயன ஆயுதங்களின் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டதுஇத்தகைய தாக்குதல்களுக்கு அசாத் அரசாங்கம் தான் பொறுப்பு என்ற ஏகாதிபத்திய சக்திகளின் வாதங்கள்பின்னர் ஒரு திட்டமிட்ட மோசடியாகஅம்பலப்படுத்தப்பட்டனஅதில் இதழாளர் செமோர் ஹெர்ஸின் ஓர் அறிக்கையும் உள்ளடங்கும்,அதைத்தொடர்ந்து வந்த காலங்களில் இந்த அறிக்கை அமெரிக்க ஊடகங்களால் புதைக்கப்பட்டுவிட்டது.
மத்திய கிழக்கில் விரிவாக்கப்பட்ட யுத்த உந்துதலின் இலக்காக இப்போதைக்கு வெளிவேஷத்திற்கு ISISஇருக்கின்ற போதினும்திரைக்குப் பின்னால் அமெரிக்க ஆளும் வர்க்கம் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்குபுத்துயிரூட்டவும் மற்றும் அசாத் அரசாங்கத்திற்கு எதிரான— அது எதை தொடங்கியதோ அதை முடித்து வைக்கும்— நடவடிக்கைகளைத் தயாரிக்கவும் அந்த நெருக்கடியைப் பயன்படுத்த முனைந்து வருகிறதுஅசாத் அரசாங்கம் காலங்காலமாக ஈரான் மற்றும் ரஷ்யா இரண்டினதும் நெருங்கிய பங்காளியாக இருந்து வருகிறதுபிந்தையது (அதாவது ரஷ்யாஉக்ரேனில் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் ஆதரிக்கப்பட்ட வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியால் தொடங்கிய தீவிரமடைந்துவரும் யுத்த உந்துதலில் ஓர் இலக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா இன்னமும் அசாத்திற்கு எதிராக சதி செய்து வருவதைச் சிந்தனை கூடங்கள் மற்றும் வெளியுறவு கொள்கை இதழ்களில் வெளியாகும் பல்வேறு கட்டுரைகளிலும் காண முடியும்முன்னாள் சிஐஏ பகுப்பாய்வாளரும்ஜனநாயக கட்சியின் முன்னணி மூலோபாயவாதியும்புரூக்கிங்ஸ் பயிலகத்தின் ஒரு மூத்த ஆய்வாளருமான கென்னெத் எம்பொல்லாக் எழுதிய ஒரு கட்டுரை (அசாத்தைத் தோற்கடிப்பதற்கு ஓர் இராணுவம்Foreign Affairsஇன் மிக சமீபத்திய பதிப்பில் வெளியானதுபொல்லாக், ISISஐ தோற்கடிக்கக்கூடிய மற்றும் அசாத் ஆட்சியைக் கவிழ்க்கக்கூடிய ஓர் இராணுவத்தை உருவாக்கி சிரியாவில் உள்ள தற்போதைய எதிர்ப்பு சக்திகளுக்குப் பயிற்சியளிக்கவும் மற்றும் பாரியளவில் ஆயுதயுதவிகள் வழங்கவும்,மற்றும் ஓர் அமெரிக்க-ஆதரவிலான இராணுவ சர்வாதிகாரத்தை அங்கே ஸ்தாபிக்கவும் அமெரிக்காவிற்கு அழைப்புவிடுக்கிறார்.
இந்த தருவாயில், ISISஆல் அமெரிக்க இதழாளர்கள் ஜேம்ஸ் ஃபோலே மற்றும் ஸ்டீவன் சோட்லோஃப் காட்டுமிராண்டித்தனமாக கழுத்தறுத்து கொல்லப்பட்டமைகுறைந்தபட்சம்அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சரியான நேரத்தில் கிடைத்த போலிக்காரணமாக இருக்கின்றன.

ISISயும்சிரியாவிற்கு எதிரான நடவடிக்கையும்
அமெரிக்க அரசாங்கமும் பிரதான ஊடகங்களும் வலியுறுத்துவதைப் போல, ISIS ஒரு விளங்கமுடியாத "தீய"சக்தியோ அல்லது ஒரு "புற்றுநோயோஅல்லசிரியாவிலும் ஈராக்கிலும் ISIS மற்றும் ஏனைய இஸ்லாமிய தீவிரவாத குழுக்களின் வெற்றி என்பது முற்றிலும் மத்திய கிழக்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கையின் ஒரு விளைபொருளே ஆகும்.
அல் கொய்தா மற்றும் ஒசாமா பின்லேடன் உடனான அதன் தொடர்புகள் உட்பட, ISIS உடனான அமெரிக்க அரசாங்கத்தின் தொடர்புகளும் ஒரு பாரம்பரிய வடிவத்தைப் பின்தொடர்கிறதுஅல் கொய்தாவைப் போலவே, ISISயும் அமெரிக்க தலையீட்டின் ஒரு விளைபொருளாகும்முந்தையது 1980களில் சோவியத் ஒன்றியத்துடனான பினாமி யுத்தத்தின் பாகமாக முதலில் ஆப்கானிஸ்தானிலும்பிந்தையது சிரியா மற்றும் ஈராக்கிலும் உருவாக்கப்பட்டதுமத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா மீது கட்டுப்பாட்டை பெறும் அதன் முயற்சியில்அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிகவும் பிற்போக்குத்தனமான,பின்தங்கிய உட்கூறுகளின் மீது தங்கியிருந்துள்ளது. (பார்க்கவும்ISIS atrocities and US imperialism)
அமெரிக்காபிரதான ஐரோப்பிய சக்திகள்சவூதி அரேபியா மற்றும் கட்டார் போன்ற அவற்றின் பிராந்திய பங்காளிகள் அனைத்துமே, ISIS மற்றும் ஏனைய தீவிரவாத அமைப்புகள் பெரிதும் ஆதாயமடையும் வகையில்,சிரியாவில் அசாத்-விரோத குழுக்களுக்குக் கணிசமான இராணுவஅரசியல் மற்றும் நிதி உதவிகளை வழங்கியுள்ளன.
ஜோர்ஜ் டபிள்யுபுஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் இரண்டினது கீழும்அமெரிக்க அரசாங்கம் அசாத் ஆட்சியைத் தூக்கியெறிய நோக்கம் கொண்ட ஒரு பொதுவான கொள்கையின் பாகமாகசிரிய எதிர்ப்பு படைகளுக்குப் பணத்தைப் பாய்ச்சி இருந்தனஇவ்விதத்தில் சிரியாவை நிலைகுலைக்கும் மூலோபாயத்தின் ஒரு முக்கிய விளைவாக, ISIS போன்ற சுன்னி தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜாங்கத்துறை கசிவுகள்அமெரிக்க அரசுத்துறை இலண்டனில் நாடுகடந்து வாழும் சிரியர்களால் அமைக்கப்பட்ட நீதி மற்றும் வளர்ச்சிக்கான இயக்கம் (MJD)எனும் ஒரு இஸ்லாமிய குழுவிற்கு, 2006க்கும் மற்றும் 2010க்கும் இடையே, 6 மில்லியன் டாலர் வழங்கியதை அம்பலப்படுத்தியதுஅந்த பணம், MJDஇன் செயற்கைக்கோள் செய்தி ஒளிபரப்பானபராடா தொலைக்காட்சிக்கு (Barada TV) நிதியளிக்கவும்அத்துடன் சிரியாவிற்குள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் MJDஆல் பயன்படுத்தப்பட்டது.
டிசம்பர் 2006இல் வெளியான ஒரு இராஜாங்க கசிவுஅசாத் ஆட்சியை ஆத்திரமூட்டும் மற்றும் சிரியாவை நிலைகுலைக்கும் அரசுத்துறையின் திட்டங்களை அம்பலப்படுத்தியதுஅதில் முன்னாள் சிரிய துணை ஜனாதிபதி அப்துல் ஹலீம் கஹாத்தம் மற்றும் அவரது தேசிய மீட்சிப்படையை (National Salvation Front)ஊக்குவிப்பதும் உள்ளடங்கி இருந்தது.
2011இல் சிரியாவில் விரோத நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்துசுதந்திர சிரிய இராணுவத்தில்(Free Syrian Army - FSA) இருந்த மிதவாதிகள் என்றழைக்கப்பட்டவர்களுக்கு உயிருக்கு சேதம் விளைவிக்காத உதவி வழங்குகிறோம் என்ற போர்வையில் சிஐஏ ஒரு முக்கிய துப்பாக்கி சுடும் பயிற்சியை மற்றும் இராணுவ பயிற்சி நடவடிக்கையைத் தொடங்கியது.
அந்த இரகசிய சிஐஏ நடவடிக்கையில் சவூதி அரேபியாகட்டார்மற்றும் துருக்கி ஆகியவையும் சம்பந்தப்பட்டிருந்தனஅவை விலைக்கு வாங்கிய ஆயுதங்களை வடக்கு சிரியாவிற்குள் துருக்கி எல்லை வழியாக கொண்டு சென்றதுடன்சிரிய முஸ்லீம் சகோதரத்துவம் உட்பட இடைத்தரகர்கள் மூலமாக வினியோகித்தனலிபியாகுரேஷியா மற்றும் சூடானிலிருந்து சிரியாவிற்குள் ஆயுத தொகுப்புகள் கடத்தப்பட்டு வந்தன என்பது அறியப்பட்ட ஒன்றேயாகும்.
CIAஇன் இந்த தலையீடு சிரியாவிற்குள் தானியங்கி துப்பாக்கிகள்ராக்கெட் மூலமாக ஏவப்படும் வெடிகுண்டுகள் மற்றும் மில்லியன் கணக்கில் துப்பாக்கி தோட்டாக்கள்அத்துடன் டாங்கி தகர்ப்பு மற்றும் விமான தகர்ப்பு ஏவுகணைகள் ஆகியவற்றை வெள்ளமென கொண்டு சென்றது.
நியூ யோர்க் டைம்ஸிற்கு எழுதிய சி.ஜேசீவெர்ஸின் கருத்துப்படிசவூதி அரேபியா மற்றும் கட்டாரிலிருந்து ஜோர்டான் மற்றும் துருக்கி வரையில் நூற்றுக் கணக்கான இராணுவ ஆயுத விமானங்கள் நவம்பர் 2012மற்றும் மார்ச் 2013க்கு இடையே சிரியாவிற்குள் குறைந்தபட்சம் 3,500 டன் இராணுவ உபகரணங்களைக் கொண்டு சென்றிருந்தனஇவை CIAஆல் அமைக்கப்பட்ட வலையமைப்புகள் மூலமாக வினியோகிக்கப்பட்டன மற்றும் மேற்பார்வை செய்யப்பட்டன.
செமோர் ஹெர்ஸ்ஏப்ரல் 2014இல் புத்தகங்களின் இலண்டன் மீளாய்வு கட்டுரையில்லிபியாவிலிருந்து சிரியாவிற்குள் போராளிகள் மற்றும் ஆயுதங்களை அனுப்புவதற்கு CIAஆல் நடத்தப்பட்ட "எலிப்பாதை" (rat line) என்ற நடவடிக்கையை விவரித்திருந்தார்.
ஹெர்ஸின் கருத்துப்படிஅந்த நடவடிக்கை சிஐஏ இயக்குனர் டேவிட் பெட்ரீயஸ்மற்றும் பெங்காசி தூதரகத்தால் மேற்பார்வையிடப்பட்டதுசெப்டம்பர் 11, 2012இல் அத்தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆயுத பரிவர்த்தனைக்கு மூடிமறைப்பை வழங்க பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஹெர்ஸின் கருத்துப்படிசிஐஏ நடவடிக்கைக்கு நிதி கிடைப்பதற்கு, MI6இன் பிரிட்டிஷ் உளவுத்துறை முகவர்களால் உத்தியோகபூர்வமாக மேற்பார்வையிடப்பட்டதுஆயுதங்கள் வாங்குவதற்காக மற்றும் சிரியாவிற்குள் ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்காக முன்னணி நிறுவனங்களால் ஓய்வுபெற்ற அமெரிக்க சிப்பாய்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்பெங்காசி தூதரக தாக்குதலுக்குப் பின்னர் சிஐஏ அந்த நடவடிக்கையை நிறுத்திவிட்டதுஆனால் ஆயுதங்களும் போராளிகளும் சிரியாவிற்குள் செல்வது தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
FSAஇன் போராளிகளுக்காக என்று கூறப்பட்ட போதினும்அத்தகைய ஆயுதங்களில் ஒரு கணிசமான எண்ணிக்கை ISISஇன் மற்றும் அல் நுஸ்ரா முன்னணிசிரியாவில் உள்ள அல் கொய்தாவின் கிளை அமைப்பு உட்பட இதர இஸ்லாமிக் அடிப்படைவாத குழுக்களின் கைகளுக்குப் போய் சேர்ந்தன.
நியூ யோர்க் டைம்ஸில் எழுதிய டேவிட் சாங்கெரின் கருத்துப்படி, 2012 முழுவதும் சிரியாவிற்குள் கடத்தப்பட்டு வந்த பெரும்பாலான ஆயுதங்கள் "கடுமையான போக்கெடுக்கும் இஸ்லாமிய ஜிஹாதிஸ்டுகளின்கரங்களுக்கு போயிருப்பதை அமெரிக்க அதிகாரிகளும் மற்றும் மத்திய கிழக்கு இராஜாங்க அதிகாரிகளும் அறிவார்கள்இருந்தபோதினும்சிரியாவிற்குள் ஆயுதங்களை வெள்ளமென பாய்ச்சும் மற்றும் எதிர்ப்பு போராளிகளுக்கு பயிற்சியளிக்கும் திட்டம் தொடர்ந்தது.
பெப்ரவரி 2013இல் குரேஷியாவிலிருந்து ஜோர்டான் வழியாக சிரியாவிற்குள் கடத்தப்பட்ட ஆயுதங்களில் பெருந்தொகுதி இறுதியாக ISIS போராளிகள் மற்றும் அஹ்ரார் அல்-ஷாம் (Ahrar al-Sham) உட்பட இதர குழுக்களின் கைகளில் போய் சேர்ந்தது. ISIS போராளிகள் அன்பார் மாகாணத்தில் நடத்திய அவர்களின் தாக்குதலின் போது ஈராக்கிய இராணுவத்திற்கு எதிராக ஒரு குரேஷிய M79 ஒசா (M79 Osa) டாங்கி-தகர்ப்பு ஆயுதத்தைப் பயன்படுத்தி இருந்தார்கள். ISIS போராளிகள் ஈராக்கில் ஒரு குரேஷிய RBG-6குண்டுவீசியைக் கொண்டு சண்டையிட்டதும் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஜோர்டான் மற்றும் துருக்கியை ஒட்டிய சிரிய எல்லையோரத்தில்சிஐஏ மற்றும் அமெரிக்க இராணுவம் நூற்றுக் கணக்கான சிரிய எதிர்ப்பாளர்களுக்கு இராணுவ பயிற்சியளிப்பதிலும் ஈடுபட்டுள்ளதுகடந்த ஆண்டுவெளியிட்ட ஒரு கட்டுரையில்நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகையில்ஜோர்டானில் CIAஆல் பயிற்சியளிக்கப்பட்ட 50-நபர் குழு செப்டம் பர் 2013இல் சிரியாவிற்கு அனுப்பப்பட்டதாக அறிவித்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் எதை வெளிப்படையாக ஆதரித்ததோ அந்த FSAக்கும்மற்றும் ISIS போன்ற குழுக்களுக்கும் இடையே ஒரு கடினப் போக்கை எடுப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சி,முற்றிலும் ஓர் அரசியல் மோசடியாகும்.
சிரிய மோதல் போக்கின் போதுஅக்-கொய்தா கிளைஅமைப்புடன் அவர்களின் பற்றுறுதியைச் சூளுரைத்து ஒட்டுமொத்த படையணிகளுடன்ஆயிரக் கணக்கான போராளிகள் FSAஇல் இருந்து அல்-நுஸ்ராவிற்குள் மாறினார்கள்அல்-நுஸ்ரா பிரிவுகளும் மற்றும் FSA படையணிகளும் அசாத்தின் படைகளுக்கு எதிராக வழக்கமாக கூட்டு தாக்குதல்கள் நடத்தியுள்ளன.
கடந்த ஆண்டின் இறுதியில் சுதந்திர சிரிய இராணுவத்தின் கிழக்குப் படைப்பிரிவின் உயர் இராணுவ கவுன்சிலின் ஒரு தளபதிசதாம் அல்-ஜமால், ISIS உடனான அவரது பற்றுறுதியைச் சூளுரைத்தார்இந்த ஆண்டின் தொடக்கத்தில்அல்-நுஸ்ராவும் ISISஉம் சிரிய இராணுவத்தின் ஒரு தாக்குதலில் இருந்து யாப்ரௌத் நகரத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒன்றாக சண்டையிட்டனஆனால் அது தோல்வியடைந்தது.

பாக்தாதி மற்றும் சிஷானியின் அமெரிக்க தொடர்புகள்
அல் கொய்தாவைப் போலவேஅந்த அமைப்பில் இணைந்திருந்தவர்களில் பலர் ஓர் இரகசிய கடந்தகாலத்தைக் கொண்டிருந்தார்கள்அமெரிக்கா மற்றும் அதன் பிரதான பங்காளிகளுடனான தொடர்புகளும் அதில் உள்ளடங்கும்.
2010இல் தலைமை ஏற்ற தற்போதைய ISISஇன் தலைவர் அபு பக்ர் அல் பாக்தாதி குறித்த பல ஊடக செய்திகள்அவர் முன்னர் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதை அம்பலப்படுத்தி உள்ளன.
பாக்தாதி வரலாறின் இந்த அத்தியாயம் பிரதான ஊடகங்களில் பெரிதும் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது,அவை பாக்தாதியை ஒரு குறிப்பிடத்தக்க கடந்தகாலம் இல்லாத ஒரு வஞ்சக நபராக காட்ட விரும்புகின்றன.ஆனால் அநேகமாக பாக்தாதியின் சிறைக்காலம்அந்த அமைப்பின் தலைவராக அவர் வேகமாக உயர்வதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருக்கக்கூடும்.
பாதுகாப்புத்துறையை பொறுத்த வரையில்பெப்ரவரி 2004இல் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பாக்தாதி டிசம்பர் 2004இல் ஒரு நிபந்தனையற்ற விடுதலை அளிக்கப்படும் வரையில் இழிபெயர்பெற்ற புக்கா முகாமில் ஒரு சாமானிய கைதியாக வைக்கப்பட்டிருந்தார்எவ்வாறிருப்பினும்,புக்கா முகாமின் முன்னாள் தளபதி கேர்னல் கென்னத் கிங் The Daily Beastக்கு கூறுகையில் பாக்தாதி 2009வரையில் அமெரிக்க சிறைக்காவலில் இருந்து விடுவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
ISISஇன் முன்னோடி அமைப்பான ஈராக்கிய இஸ்லாமிக் அரசின் தலைவராகபாக்தாதி மே 2010இல் பெயரிடப்பட்டார்இதுஅவ்வமைப்பின் முந்தைய தலைவர்கள் அபு ஒமர் அல்-பாக்தாதி மற்றும் அபு அயூப் அல்-மஸ்ரி இருவரும் திக்ரிட்டிற்கு அருகில் அமெரிக்க மற்றும் ஈராக்கிய படைகளால் ஒரு கூட்டு இராணுவ வேட்டையில் கொல்லப்பட்டு நீண்டகாலத்திற்குப் பின்னர் நடந்ததல்ல.
அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளுடன் முன்னர் தொடர்பு கொண்டிருந்த மற்றொரு முக்கிய பிரமுகர்,ஜோர்ஜியாவிலிருந்து வந்த இனரீதியில் செச்செனியரான தார்கான் பாட்ராஷ்விலி (Tarkhan Batirashvili)அல்லது அபு ஒமர் அல்-சிஷானி என்று அறியப்படுபவர் ஆவார்இவர் 2013இன் கோடையில் சிரியாவின் வடக்கு பகுதியில் ISISஇன் தளபதி ஆனார்.
வெள்ளியன்று NPR உடனான ஒரு நேர்காணலில்மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் கோர்டன் ஹானின் கருத்துப்படி, “கிளர்ச்சி ஒடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயங்களில் ஜோர்ஜிய இராணுவத்தைத் தயாரிப்பு செய்ய அமெரிக்க பயிற்சி மற்றும் ஆயுதமேந்த செய்யும் திட்டத்தின் கீழ்சிஷானி "ஜோர்ஜிய இராணுவத்தில் சேர்ந்துபல்வேறு ஆயுதங்களைக் கையாளும் வல்லுனராக பயிற்சியளிக்கப்பட்டார்."
ஜோர்ஜிய இராணுவத்திலிருந்து வெளியேறிய பின்னர்சிஷானி சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்ததற்காக கைது செய்யப்பட்டுமூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தார்பின்னர் சிரியாவில் சண்டையிட்டு வந்த ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவில் இணைய துருக்கிக்குப் பயணித்தார்.
செச்சென் தேசியவாத மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் சம்பந்தப்பட்டிருக்கும் விவகாரம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. “காகசஸ் எமிரேட்டின் ஜிஹாதி[இஸ்லாமிய அடிப்படைவாதஇயல்பை...வாஷிங்டனில் உள்ள பலர்...குறைத்துக் காட்டுகிறார்கள் அல்லது மறுக்க முயல்கிறார்கள்," காகசஸ் எமிரேட் செசென்யாவில் இருக்கும் ஒரு பிரிவினைவாத அமைப்பாகும். “செச்சென் விளைவை மற்றும் காகசஸ் எமிரேட்டைஎன்றாவதுஒருவேளைரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா அவர்களை ஆதரிக்கக்கூடுமென்ற நம்பிக்கையில்அது யதார்த்தத்தில் இருப்பதைக் காட்டிலும் மிகவும் மிதமானதாக காட்ட முயலும் ஒரு குறிப்பிட்ட உட்கூறும் வாஷிங்டனுக்குள் இருக்கிறது."


2013இல் பாஸ்டன் மாரதான் குண்டுவெடிப்பில் சந்தேகத்திற்குரியவர்களில் ஒருவரான தாமர்லன் ஜார்னெவ் இனரீதியில் செச்சென் ஆவார் என்பதும்அவரும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளோடு தொடர்பு வைத்திருந்தார் என்பதை நினைவுகூர்வதும் மதிப்புடையதாக இருக்கிறதுஜார்னெவ்வின் தாயாரும்அவர் தரப்பு வழக்கறிஞர்களும்செச்சென்யாவில் இஸ்லாமிய படைகளின் தலைமையில் ரஷ்ய-விரோத நடவடிக்கைகளின் பாகமாக அவரைப் பயன்படுத்துவதற்காக ஜார்னெவ்வை நியமிக்க FBI முனைந்தது என்று கூறுகிறார்கள்.

அமெரிக்காவுக்கும் ISISஇன் தலைவர்களுக்கும் இடையே என்னமாதிரியான குறிப்பிட்ட தொடர்புகள் இருந்தாலும்அந்த அமைப்பும் மற்றும் அதன் தொடர்ச்சியான குற்றங்களும் உயர்வதற்கான பொறுப்பு,அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் காலடியில் தான் சுருண்டுவந்து விழுகிறதுஅசாத்தை பதவியிலிருந்து இறக்கும் அவர்களின் உந்துதலில்ஏகாதிபத்திய சக்திகள் சுன்னி அடிப்படைவாத உட்கூறுகள் ஆதாயமடையும் வகையில் ஆயுதங்கள்பணம்மற்றும் பயிற்சிகளை வழங்கி சிரியாவை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்க செயலூக்கத்துடன் வேலை செய்துள்ளனஅந்த நிகழ்வுபோக்கினூடாக அப்பிராந்தியத்தில் இராணுவ தலையீடுகளை இன்னும் மேற்கொண்டும் தீவிரப்படுத்த ஒரு சௌகரியமான போலிக்காரணத்தை உருவாக்கி வருகின்றன.

இந்தியாவின் மகள் ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை விதித்தது சரியல்ல…!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு தொடர்பாக 'இந்தியாவின் மகள்' என்ற பெயரில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் பேட்டியுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்துக்கு இந்தியா தடை விதித்தது சரியல்ல என இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியும், கடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் முதல்வர் பதவி வேட்பாளருமான கிரண் பேடி கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் கிரண் பேடி, இது தொடர்பாக ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'இந்தியாவில் முன்னேற்றம் அடைந்த முற்போக்கு சிந்தனை கொண்ட ஆண்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வந்தாலும், பெண்களை அடக்கி வைக்க நினைக்கும் ஆணாதிக்கவாதிகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.

இந்தியாவில் நிலவி வரும் இந்த ஆணாதிக்க மனப்போக்கு தொடர்பான நிலைப்பாட்டையும், குற்றவியல் சட்டங்களில் உள்ள குறைபாடுகளையும் இந்த (இந்தியாவின் மகள்) ஆவணப்படம் மிக துல்லியமாக தோலுரித்து காட்டியுள்ளது.

இந்தப் படம் இந்தியாவில் நிலவும் சமூக வேறுபாடுகள், நீதித்துறையில் உள்ள பலவீனம், அரசு இயந்திரத்தின் கையாலாகாத்தனம், பழமைவாத மனநிலை ஆகியவற்றுக்கு சாட்சியமாக உள்ளது.

எனது பார்வையில், நாட்டுக்கு தேவையான சமூக புரட்சிக்கும், ஆட்சி முறை எப்படி இருக்க வேண்டும்? என்பதை கற்றுக் கொள்ளவும், இன்னும் எத்தனை காலத்துக்கு நீங்கள் இப்படியே இருக்கப் போகிறீர்கள்? என மக்களை கேட்கவும் இந்த படத்தை ஒரு பாடமாக திரையிட அனுமதித்திருக்க வேண்டும்.

மாறாக, இந்தப் படத்தை தடை செய்வது இவற்றுக்கு எல்லாம் பதிலாகி விடாது. யதார்த்தத்தை எதிர்கொள்வதே சரியான பதிலாகும்' என தெரிவித்தார்.

அப்படியானால், இந்திய அரசு இந்த ஆவணப்படத்துக்கு தடை விதித்தது தவறு என்று நீங்கள் கருதுகின்றீர்களா? என்ற கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த கிரண் பேடி, 'ஆம்' என்று கூறினார்.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

முடிவில்லாத பயணங்கள் முடிந்தவரை தொடருவோம்.....

பூமியில் உயிர்களின் தோன்றலின் போதே பயணங்கள் தொடங்கியது. முதன்முதலில் ஆதிமனிதனின் இடம்பெயர்தலே பயணத்தை தொடங்கியது..
நடைபயணமாகவே இடம் பெயர்தல் இருந்த காலக்கட்டத்தை சக்கரத்தின் கண்டுபிடிப்பு அடுத்த கட்ட பயணத்திற்கு மனித வாழ்க்கை வந்தது..

பல பயணங்கள் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வாஸ்கோடகாமாவின் கடற்பயணம் இந்தியாவை அடிமை படுத்த வழி வகுத்தது.
சீனாவின் குடியரசை உருவாக்கிய மா சே துங் மற்றும் அவரை சார்ந்த மக்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள 8000 கிலோமீட்டர் தூரத்தை தொடர்ந்து 370 நாட்கள் ஓடிய பயணமே நீண்ட நெடிய பயணமாக காலம் பதிந்துள்ளது..
சுற்றுலா பயணம் எப்போதும் மகிழ்ச்சியயை மனதில் தேக்கி வைக்கிறது.. போக்குவரத்து, பயணத்தை எளிதாக்கி விடுகிறது.. ஆனாலும் மனதிற்கு பிடித்தவர்களின் கை கோர்த்து நடந்து செல்லும் பயணம்... இனிமையான தருணமாகவே இருந்து விடுகிறது.

ரயில் பயணங்கள் சுகமான தாலாட்டுடன், காலத்தை பின்னோக்கி செல்வது போல் காட்சிகளையும் கடந்து சென்றுக் கொண்டே இருக்கிறோம்.
தேடல்களே பயணங்களை தொடங்குகிறது. சிலர் வேலை தேடி பயணம், சிலர் நண்பரை தேடி பயணம், சிலர் காதலை தேடி பயணம் இன்னும் சிலர் வாழ்வை தேடி பயணம்.. ஒவ்வொரு பயணத்திலும் ஒரு கதை கிடைக்கிறது. சிலருக்கு சிறுகதையாய் முடிகிறது. சிலருக்கு தொடர்கதையாய் தொடர்கிறது..
சிலரது பயணங்கள் புத்தகங்களுடனே பயணிக்கிறது... இன்னும் சிலரின் பயணங்கள் புத்தகத்தின் உள்ளே கதாபாத்திரங்களுடனும், குதிரைகளுடனும், போர்களத்திலும் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
எஸ். ராமகிருஷ்ணனின் "தேசாத்திரி" பயணம் பற்றிய புத்தகம் நம் பயணங்களின் எண்ணத்தை மாற்றிவிடும். பயணத்தின் போது மழை, வெயில், மேகம், கடல் எல்லாம் நம் நண்பர்களாக மாறிவிடும்.
பயணங்கள் பல ஆச்சர்யங்களையும்,அதிசயங்களையும் தன்னுளே புதைத்துக் கொண்டு உள்ளது. இந்த ஆச்சர்ய உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து நாமும் பயணத்தை ரசனையுடன் பயணிப்போம்..

ஜனனம்....
என்பதே ஒரு
வெற்றிப் பயணம்தான்
நம் அணைவருக்கும்...
அன்று
தொடங்குகிறோம்
வாழ்க்கை எனும்
பயணத்தை!!!
மழலை பருவத்தில்
அன்னையின் விரல்பிடித்து
தொடரும் பாச பயணம்...
பள்ளிப்பருவத்தில்
தோழமைகளின்
கரம் பிடித்து சில
விளையாட்டு பயணம்...
கல்லூரிப்பருவத்தில்
நல்ல நட்புகளும்
இனிமையான காதலுடனும்
கை கோர்க்கும் பயணம்....
இளமை பருவத்தில்
திருமண பந்தத்துடன்
தொடரும் உண்மை பயணம்...
நம் மழலை கை பிடித்து
தொடரும் அன்பு பயணம்...
எதையும் பொருட்படுத்தாது
பொருள் தேடும் பொறுப்பான
பயணம்....
முதுமை பருவத்தில்
மன அமைதியும்
இறை அருளும் தேடும்
இன்ப பயணம்....
முடிவில்லாத பயணங்கள்தான்
இப்படி....
முடிந்தவரை தொடருவோம்.......

வியாழன், 29 ஜனவரி, 2015

கல்லறை

ஓடுவது ஆயிரம் பாதையில் என்றாலும்...
அங்கே ஒதுங்குவது உன் அறையில் மட்டும்தான்... 

வெள்ளி, 12 டிசம்பர், 2014

காவியத்தலைவன் - Kaviyathalaivan

ரசிகர்களுக்கு ஓர் உன்னதமான காவியம் 'காவியத்தலைவன்'
அழியும் நிலையில் உள்ள மேடைநாடகத்தை சினிமாவில் கொண்டுவந்து நாடகத்தையும், அன்றைய காலகட்டத்தையும் நம் கண்களுக்கு விருந்தாக காவியத்தலைவன் படம் மூலம் வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.
காதல், துரோகம், நம்பிக்கை, குருவிசுவாசம், தேசபக்தி, தேசத்துரோகங்கள், சுதேச சிந்தனைகள் என்று பல உணர்வுகளை ஒப்பேற்றி சிறப்பான புதுமையாக கலக்கலாக கமர்ஷியலாக கதை பண்ணி கலர்புல்லாக அதை காட்சியும் படுத்தி இருப்பதுதான் காவியத்தலைவனின் பெரும்பலம்.
கதையின் கதாபாத்திரங்களை பார்க்கும் போது நம்மவர் மத்தியில் வாழும் சில நரிக்கூட்டங்களையும் ஞாபகப்படுத்துவது அதிலும் ஒரு சிறப்பு. முகத்திற்கு நேரே நட்பு பாராட்டி புறமுதுகில் குத்தும் அதிகர் புழங்கும் எம்மவர்களை கண்முன்னே ஞாபகப்படுத்துவதில் காவியத்தலைவன் வெற்றி கண்டிருக்கிறது.
அனைத்து கதாபாத்திரங்களின் சிறப்பு, பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வசனவரிகள், காஸ்டியூம், கலைஇயக்கம் என்று அனைத்தும் பிரமாதம். நீண்ட நாட்களின் பின்பு சிறப்பான ஒரு திரைப்படம் பார்த்த ஒரு உணர்வு. மொத்தத்தில் ‘காவியத்தலைவன்’ காவியத்தில் இடம் பெறுவான்.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

தீபதிருநாளில் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 2014



இன்பம் பொங்கும் இத் தீபாவளித் திருநாளில்
எமது பேரன்பிற்கும், நல் மதிப்பிற்கும், நல் உறவிற்கும் உரிய
வாசகர்கள், பங்காளிகள், நேயர்கள், உறவுகள், ஊர்மக்கள், புலம் பெயர்ந்து வாழும்
அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும்
ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும்
வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி

நிறைவான செல்வத்துடன் , நோய் நோடி இல்லாமல்
நலமுடன் வாழ இத்தீபதிருநாளில் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்"

"அஷ்டலக்ஷ்மிகளின் தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"


வெள்ளி, 5 செப்டம்பர், 2014

இயற்கை வழிபாடு

இயற்கை வழிபாடு

இயற்கை வழிபாடு என்பது, உலகின் பல பாகங்களில், தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு பழக்கமாகும். ஆதியில் மனிதன் இயற்கையையே தெய்வமாக வணங்கினான் என்பதும் உலகில் உள்ள மதங்களுக்கு இயற்கையே முன்னோடியாய் இருந்தது என்பதும் எல்லோராலும் கருதப்படும் ஒரு பொது கருத்தாகும்.
இயற்கை வழிபாடு தோன்ற காரணங்கள்:
மனிதன், இயற்கையின் வளங்களை பயன்படுத்திக்கொண்டாலும், இயற்கையின் சீற்றங்களையும் அதன் வலிமையையும் கண்டு அதை பிரமிப்புடன் பார்க்கத் தொடங்கினான். இந்த பிரமிப்பே நாளடைவில், பயமாய் மாறி, பின், அந்த இயற்கையையே வணங்க தொடங்கினான். பயத்திலும், இயற்கையால் வரும் நன்மைகளை அனுபவித்ததால், அதன் காத்தல், அழித்தல் எனும் இருவேறு தன்மைகளையும் உணர்ந்து, அதை தன்னை விட மேலான ஒரு சக்தியாய் கருத ஆரம்பித்தான். பயமே பக்தி எனும் வழி இன்றும் பல மதங்களில் நிலவி வரும் ஒரு உண்மையாகும்.
இந்த பிரபஞ்சத்தில், எந்த ஒரு உயிரினமும், இயற்கையை ஒத்தே வாழ்கின்றன. உயிர் அல்லாத பொருள்களும், இயற்கை சார்ந்தே அமைகின்றன. அத்தகைய ஒருமித்த இயற்கை அமைப்பில், ஒவ்வொரு உயிர்ப்பொருளும், ஜடப்பொருளும், இயற்கையிலிருந்து தோன்றி சிறிது காலம் இருந்துப்பின் இயற்கையிலேயே மீண்டும் கலந்து அழிகின்றன.
இந்த கருத்தில் தான் இயற்கையின் அமைப்பினை, நிலம், நீர், தீ, காற்று மற்றும் வெளி என ஐந்து வகைகளாக பிரித்துள்ளனர். எல்லா பொருள்களும், இவை ஐந்திலிருந்தே தோன்றிப்பின் இவை ஐந்திலேயே கலந்து அழிகின்றன. இந்த தத்துவத்தை அறிந்த மனிதன், இந்த ஐந்து பூதங்களையும் முதலில் தெய்வமாக வணங்க தொடங்கினான். இயற்கையை வணங்கும் இந்த முறை உலகின் பல்வேறு புராதன வாழ்வியல்களில் இடம் பெற்றுள்ளது. கீழ்கண்ட பகுதிகளில் இது குறித்து நாம் அறிவோம்.
நிலம்:
கிரேக்கத்தின் 'கயா வழிமுறை' அழைக்கப்படும் வழிமுறை, பூமியை வழிபடும் முறையாகும். கிரேக்க மொழியில், கயா என்பது பூமியை குறிக்கும். இவ்வழிமுறையில், இயற்கைச் சமனியாக இந்த புவிக்கடவுளாகிய கயா அமைந்துள்ளதாகவும், இதுவே, பூமியில் ஏற்படும் பல்வேறு உயிர் நிலை மாற்றங்களுக்கும் காரணமாகவுள்ளது என கருதப்படுகிறது.
பண்டை கால எகிப்தியர்கள், பூமியை ஒரு ஆண் கடவுளாக கருதினர். எகிப்திய புராணங்களில் பூமி, செப், கெப் மற்றும் ஜெப் எனும் மூன்று பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமேரிய நாகரீகத்தில், நிலம், நீர், ஆகாயம் எனும் முப்பெரும் கடவுள்களில் ஒன்றாக கருதப்படும் பூமி என்லில் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்தியப் பண்பாட்டிலும், பூமி என்பது பொறுமைக்கு எல்லையாக கருதப்படும் இயற்கை கடவுள் ஆகும்.
நீர்:
நீர் என்பது பொதுவாக, அழுக்கை நீக்கும் ஒரு பொருளாகவே உள்ளது. தூய்மை எனும் பொருளுக்கு நீர் ஒரு அடையாளமாக உள்ளது. இத்தகைய தன்மையினால், நீர் என்றும் எல்லா மதத்திலும், வழிபாட்டு முறையில் இன்றும் இருந்து வருவதை காணலாம். 'மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்' என்ற வகையிலே, மழை மனிதனுக்கு உறவை உணர்த்தும் ஒரு சக்தியாக உள்ளது.
தீ:
தீயைத் தொழுவது ஜொராஸ்ட்ரியர்களின் பழக்கமாகும். தீக்கோயில்களையும் இவர்களது அமைப்பில் காண முடியும். தீ என்பது எப்போதும் மேல் நோக்கி செல்லும் குணங்கொண்டது. மேலும் தீயை அழுக்காக்க இயலாது. தீயின் இவ்விரு முக்கியமான குணங்களே தீ இவர்களது வாழ்முறையில் மேலானதாக எண்ணப்படுவதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
இந்திய வேத முறைப்படி தீ என்பது, மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஒரு பொருளாக கருதப்படுகிறது. இதன் விளைவே, எல்லா வகையான சம்பிரதாயங்களிலும் தீயின் பயன் அமைந்துள்ளது. இறந்த உடலை எரிப்பதும் இந்த நோக்கத்தில் தான் எனவும் எண்ணப்படுகிறது.
இன்றைய நிலை:
காலப்போக்கில் உண்மையான இந்த உருவங்களுக்கு வடிவங்கள் கொடுக்கப்பட்டு, பின் அந்த வடிவங்களையே மக்கள் வணங்கத்தொடங்கினர். இதன் தொடர்ச்சியே இந்த காலத்திலும் மேற்கூறிய இயற்கை தெய்வங்களையும் அதன் தொடர்ச்சியாய், வாழ்வாங்கு வாழ்ந்த மானிடர்களை தெய்வங்களாக தொழும் நிலையும் ஆகும்.