திங்கள், 22 ஜூலை, 2013

மியான்மர் - உலகை உலுக்காத இன்னொரு இனச் சுத்திகரிப்பு


மியான்மர் தேசவங்காளி மொழி பேசும் ரோஹிங்கியா இன மக்கள்இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் செய்தி,சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருந்தது. "20000 க்கும் அதிகமான ரோஹிங்கியா வங்காளிகள் இனப்படுகொலை செய்யப் பட்டதாகவும்சர்வதேச ஊடகங்கள் மௌனம் சாதிப்பதாகவும்" அந்தத் தகவல்கள் தெரிவித்தன


பொதுவாகவே சர்வதேச ஊடகங்கள்மேற்கத்திய நலன்களுக்கு எதிரான நாடொன்றின் பிரச்சினை என்றால் மட்டுமே கவனம் செலுத்துவதுண்டு. நோபல் பரிசு வென்ற ஆயுங் சங் சுகியின் பர்மாவில் என்ன நடக்கின்றது என்று அவர்கள் விசாரிக்கப் போவதில்லை. அதற்குப் பதிலாகசிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் அவர்களுக்கு முக்கியமாகத் தெரிகின்றது. மியான்மரின்பங்களாதேச எல்லையோர மாநிலமான அரகானில் வாழும் வங்காளி மொழி பேசும் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவது இதுவே முதல் தடவை அல்ல. அங்கே ஏற்கனவே பல தடவைகள் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. சுமார் ஒரு மில்லியன் சனத்தொகையை மட்டுமே கொண்டமிகச் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா வங்காளிகள் கடந்த பத்தாண்டுகளாகவே பெருமளவில் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அந்த மக்கள் தாமாகவே விரும்பி வெளியேறினாலும்,பலவந்தமாக வெளியேற்றப் பட்டாலும்இனச் சுத்திகரிப்பாகவே கருதப்பட வேண்டும். இதனை நிரூபிக்கும் காரணிகளை பின்னர் பார்ப்போம்.


இந்தியா மட்டுமல்லபர்மாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாகவிருந்தது. அதனால்நவீன தெற்காசிய தேசங்களின் எல்லைகள்  பிரிக்கப்பட்ட காலத்தில்வங்காள இனத்தவர்கள் பர்மா (இன்று:மியான்மர்) என்ற புதிய தேசத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவே பலரும் கருதுகின்றனர். வங்காளிகள் தொழில் தேடிஅல்லது வணிகம் செய்வதற்காக பர்மா வந்து தங்கி விட்டதாகவும்அதனால் அவர்கள் பர்மிய குடிமக்களாக கருதப்பட முடியாதென்றும் ஒரு வாதம் முன்வைக்கப் படுகின்றது. 

"தேசிய அரசுகளின் உருவாக்கம்இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றம்," என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம். அதற்கு முன்னர்ஒருவர் எந்த தேசிய இனத்தை சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், "தேசியம்"என்ற வார்த்தையே அன்றைய மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ரோஹிங்கிய வங்காளிகள்அரேபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள்மொகலாய சாம்ராஜ்யத்தின் எஞ்சிய பகுதியை சேர்ந்தவர்கள் என்றெல்லாம் உரிமை கோரப்படுகின்றது. இந்த உரிமை கோரல்கள் பெரும்பாலும், "ரோஹிங்கிய தேசியவாதிகள்" மத்தியில் இருந்து தான் எழுகின்றது. "பூர்வீக தாயக பூமி" க்கு உரிமை கோரும்தேசியவாத கதையாடலுக்கு அப்பால்உண்மையை அலசுவது அவசியம். மொகலாயர்களின் ஆட்சிக் காலத்தில்பர்மிய மன்னனுடன் நடந்த போரில்சிட்டகாங் மலைப்பகுதி கைப்பற்றப் பட்டது. (அது இன்றைக்கும்வங்காளதேசத்தின் ஒரு பகுதியாக உள்ளது.) அதற்கப்பால்,மொகலாய சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப் படவில்லை. 

ரோஹிங்கியா வங்காளிகள்பங்களாதேஷ் வங்காளிகளிடம் இருந்து மாறுபட்ட வட்டார மொழியை பேசுகின்றனர். அனேகமாகமொகலாய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக புலம்பெயர்ந்த ஒரு பகுதியினர் பர்மாவில் தங்கியிருக்க வாய்ப்புண்டு. அதே நேரம்அரேபிய வணிகர்களின் வழித்தோன்றல்களும் பர்மிய பெண்களை மணந்துஅங்கேயே தங்கியிருக்கலாம். ஐரோப்பிய காலனிய காலகட்டத்திற்கு முன்னர்,தெற்காசியதென் கிழக்காசிய நாடுகளுடனான அரேபியரின் வர்த்தகத் தொடர்பு நன்கு அறியப்பட்டது தான். ஆகவேமேற்குறிப்பிட்ட பிரிவினர் எல்லாம் கலந்து ரோஹிங்கியா வங்காளிகளாக மாறியிருக்கலாம். 

மேலும்பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், "தேசிய எல்லைகளை சரி சமமாக பிரிப்பதில் கெட்டிக்காரர்கள்". தமது முன்னாள் காலனிகளில்தேசிய இனப்பிரச்சினைகள் என்றைக்கும் தீரக் கூடாது என்ற தீர்க்க தரிசனத்துடன்ஒரே தேசிய இனத்தை பிரித்து எல்லைக்கோடு வரைவதில் கெட்டிக்காரர்கள். ஆகவேபிற்காலத்தில் பிரிக்கப்பட்ட சர்வதேச எல்லைகளின் காரணமாகவங்காள மொழி பேசும் இனத்தவர்கள் பர்மா என்ற புதிய தேசத்திற்குள் அடங்கி இருப்பார்கள். ஒரு தேசிய இனம்தனது பூர்வீக தாயக பூமிக்கு உரிமை கோருவதை விடஅந்த இனத்தின் இருப்பை பாதுகாப்பதே முக்கியமானது. ஆகையினால்காலனிய ஆட்சியில் இருந்து சுதந்திரமடைந்த பர்மாவின் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா வங்காளிகள்ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப் பட வேண்டியவர்கள்.

உலகில் சில இனங்கள், "நாடற்றவர்கள்" என்ற வகைக்குள் அடங்குவார்கள். அதாவதுஅவர்களுக்கு எந்த நாட்டின் பிரஜாவுரிமையும் கிடையாது. ஏற்கனவே நமது தமிழ்த் தேசியவாதிகள், "நாடற்றவர்கள்" என்ற சொல்லுக்கு, "தேசிய அரசு அற்றவர்கள்" என்றொரு அர்த்தத்தை பரப்பி வைத்திருக்கின்றனர். ஆனால்,சர்வதேச சட்டங்கள் புரிந்து கொள்ளும்,  நாடற்றவர் என்ற சொல்லின் அர்த்தம் வேறு. உதாரணத்திற்கு,பாலஸ்தீன மக்களுக்குஇஸ்ரேலோஅல்லது ஜோர்டானோ குடியுரிமை வழங்கவில்லை. எந்த நாட்டினதும் பிரஜாவுரிமை இல்லாதபடியால்பாஸ்போர்ட் எடுக்க முடியாது. அதனால்அவர்கள் வாழும் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாது.

ஐ.நா.பாலஸ்தீனர்களை நாடற்றவர்களாக அங்கீகரித்துள்ளதால்ஒரு சில தீர்வுகள் காணப்பட்டன. வெளிநாடு செல்ல வேண்டிய தேவையுள்ளவர்கள்இராஜதந்திர கடவுச்சீட்டுடன் பிரயாணம் செய்ய முடிகின்றது. ஆனால்ரோஹிங்கியா வங்காளிகளின் நிலைமை வேறு. ஐ.நா.அல்லது சர்வதேச நாடுகள் எதுவும்அவர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. பர்மிய அரசின் நிலைப்பாட்டை சொல்லத் தேவையில்லை. மேற்கத்திய நாடுகளினால் "கணவாட்டி" என்று மதிக்கப்படும் அவுங் சங் சுகி கூட,ரோஹிங்கிய வங்காளிகளை வெளிநாட்டு குடியேறிகளாக தான் கருதுகின்றார். இனவெறிக் காடையரினால்,அப்பாவி வங்காளிகள் கொல்லப்பட்டதை கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை. ரோஹிங்கியா வங்காளிகளும்சமமான மனிதர்களாக மதிக்கப் பட வேண்டும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவில்லை.

பர்மாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜெனரல் நீ வின், 1982 ம் ஆண்டுரோஹிங்கிய வங்காளிகளின் குடியுரிமையை பறித்த பின்னர் தான் அவர்களது அவலம் ஆரம்பமாகியது. இன்றைக்கு,ஜனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அவுங் சங் சுகி கூடபறிக்கப்பட்ட குடியுரிமையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. பர்மிய இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய,ஜனநாயகப் போராளிகள் கூட, "வங்காளிகள் பங்களாதேஷுக்கு  திரும்பிச் செல்ல வேண்டும்" என்று பேசி வருகின்றனர். இவர்களே இப்படிப் பேசினால்தீவிர வலதுசாரி தேசியவாதிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. "மியான்மரின் அரசியல் பிரச்சினைகள் எல்லாம் ஒரு நாளைக்கு தீர்ந்து விடும். அதன் பிறகு நாம் ஒன்று பட்டு, (ரோஹிங்கியா) வங்காளிகளை வெளியேற்றுவோம்." என்று இணையத் தளங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். சில வருடங்களுக்கு முன்னர்மியான்மரின் அனைத்துப் பிரஜைகளும் இராணுவ சர்வாதிகார அடக்குமுறையினால் துன்பப் பட்டார்கள். இப்பொழுதுஜனநாயக ஆட்சியாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுஇராணுவ ஆட்சியாளர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர். ஆசிய நாடுகளில்,ஜனநாயகம் என்றால்மக்களுக்கு பேரினவாத வெறியை ஊட்டித் தான் ஆட்சி நடத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும்.

ஜூன் மாதம், 27 வயது ஒரு ராகின் பௌத்த பெண் ஒருவர் ,  பாலியல் வன்புணர்ச்சிக்கு பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்தக் குற்றச் செயல் ஒரு பெரும் பிரளயத்தையே உருவாக்கி விட்டுள்ளது. குற்றவாளிகளான மூன்று வங்காள முஸ்லிம்கள் பின்னர் கண்டுபிடிக்கப் பட்டு தண்டிக்கப்பட்டாலும்,ராகின் மக்கள் மத்தியில்,வங்காளி முஸ்லிம்களுக்கு எதிராக இனவெறியூட்டும் பிரச்சாரம் நடந்தது. ஒரு குற்றச் செயலுக்காகஅனைத்து வங்காளிகளையும் பழிவாங்க வேண்டும் என்று கோரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன. வங்காளிகளை குறிக்கும் வசைச் சொல்லான "காலர்கள்" (Kaler - கருப்பர்கள்) என்று குறிப்பிட்டு, "மியான்மரை விட்டு காலர்கள் வெளியேற்றப்பட வேண்டும்" என்று ராகின் மக்களை உசுப்பி விட்டன.ராகின் இன மக்கள்பர்மிய மொழி போன்றஆனால் வித்தியாசமான மொழி ஒன்றைப் பேசுகின்றனர். முன்னொரு காலத்தில் இந்து மதத்தையும்பின்னர் பௌத்த மதத்தையும் பின்பற்றிய திபெத்தோ-இந்திய இன மக்கள். பண்டைய இந்து புராணங்களில் "ராட்சதர்கள்" என்று குறிப்பிடப்பட்டனர். அதிலிருந்து இன்றைய ராகின்அரகான் என்ற சொற்கள் தோன்றின.

ரோஹிங்கியா மக்கள் மத்தியில் வேலை செய்து கொண்டிருந்த,தொண்டு நிறுவனமான Altsean அனுப்பி வைத்த செய்திநிலைமை எவ்வளவு மோசமானது என்று தெரிவிக்கின்றது.
"இது போன்ற மோசமான நிலைமையைநாம் இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் சர்வதேச சட்டத்தினால் வரையறுக்கப் படக் கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரோஹிங்கியா வங்காளிகள் என்ற இனம்மியான்மரில் அழிந்து கொண்டிருக்கிறது."  - Debbie Stothard , Alternative ASEAN-netwerk for Birma (Altsean)

ஆரம்பத்தில்இரண்டு இனங்களுக்கு இடையிலான இனக்கலவரமாகவே தோன்றியது. கலவரம் ஆரம்பித்த முதலாவது வாரம்இரண்டு பகுதியிலும் 29 பேர் மாண்டனர். 2500 வீடுகள் எரிக்கப்பட்டன. ஒன்பது விகாரைகளும்ஏழு மசூதிகளும் சேதமாக்கப் பட்டன. ஆனால்மிக விரைவிலேயே பௌத்த ராகின்களின் கை ஓங்கியது. மியான்மர் அரசும்இராணுவமும் அவர்களுக்கு பக்கபலமாக நின்றன. நிலைமையை கட்டுப்படுத்துவதாக கூறிக்கொண்டுஇராணுவம் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தது. ஆனால்அது வங்காளிகளை வீட்டுக்குள் முடங்க வைக்கும் சதித் திட்டம் என்பது பின்னர் தெளிவானது. வங்காளிகளை வேட்டையாடியராகின் இனவெறிக் காடையர்களை ஊரடங்குச் சட்டம் ஒன்றும் செய்யவில்லை. பல வீடுகளில்,வங்காளிகளின் பிணங்கள் மட்டுமே கிடந்தன. அங்கே ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தது. பொலிசும்இராணுவமும் அதற்கு ஒத்துழைத்தன.

"பௌத்த பிக்குகள் கை காட்டிய திசையில்வங்காளிகள் கொன்று குவிக்கப்பட்டதாக" வந்த செய்தியை ஊர்ஜிதப் படுத்த முடியவில்லை. பௌத்த பிக்குகளும் நேரடியாக வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  மொத்தம் எத்தனை வங்காளிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது. சுயாதீனமான ஊடகங்கள், 500 க்கும் 1000 க்கும் இடையில் கணக்குச் சொல்கின்றன. புலம்பெயர்ந்த ரோஹிங்கியா தேசியவாத ஆர்வலர்கள் 20000 பேர் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். அது ஒரு மிகைப்படுத்தப் பட்ட எண்ணிக்கையாகவும் இருக்கலாம். உலகில் ஒவ்வொரு தேசிய இனமும்தமது இனத்தவர்கள் பாதிக்கப் படும் பொழுது மிகைப் படுத்திக் கூறுவது வழக்கம். அதனாலும்சர்வதேச ஊடகங்கள் அங்கு நடக்கும் இனப்படுகொலையை புறக்கணித்திருக்கலாம். இரண்டொரு வருடங்களுக்குப் பின்னர்ஐ.நா. விசாரணைக் குழு ஒன்றை நியமித்த பின்னர் தான் அதை எல்லாம் ஒத்துக் கொள்வார்கள் போலும். ஈழத்தில்முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பொழுதும் இதே போன்ற நிலைமை காணப்பட்டது.

வங்காள இன மக்கள் வாழும் அரகான் மாநிலப் பிரதேசம்இராணுவத்தால் உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. வங்காளிகளின் பூர்வீக பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டுஅங்கே பௌத்த-பர்மியர்கள் குடியேற்றப் படுகின்றனர். ரோஹிங்கியா வங்காளிகள்இராணுவத்தினரால் கட்டாய வேலை வாங்கப் படுகின்றனர். பாதைகள் செப்பனிடவும்பாலங்கள் போடவும்வேறு பல கட்டுமானப் பணிகளிலும்,வங்காளி அடிமை உழைப்பாளிகள் ஈடுபடுத்தப் படுகின்றனர். இராணுவத்தினரால்  வங்காளிப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் அடிக்கடி நடக்கிறது. 

ரோஹிங்கியா வங்காளிகளுக்கு குடியுரிமை இல்லாத படியால்அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் எதுவும் கிடையாது. உயர்கல்வி கற்க முடியாது. ஒரு நிறுவனத்தில் பதவி வகிக்க முடியாது. வர்த்தகம் செய்ய முடியாது. இவை எல்லாவற்றையும் விடதிருமணம் செய்வதற்கு கூட இராணுவ உயர் அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்பது கொடுமையிலும் கொடுமை. திருமணம் செய்ய விரும்பும் வங்காளிகள் எல்லைக்காவல் படை அலுவலகம் உட்படநான்கு இடங்களில் அனுமதிப் பத்திரம் பெற வேண்டும். அது கிடைப்பது இலகுவானதல்ல. திருமணம் செய்யாமல்ஒரு ஆணும்பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமாகும். ஒரு இளம்பெண் அவ்வாறு சேர்ந்து வாழ்ந்து கர்ப்பமடைந்த பின்னர் தெரிய வந்ததால்அவர்கள் வீட்டில் இருந்த கால்நடைகளையும்பிற சொத்துகளையும் இராணுவத்தினர் அபகரித்து சென்று விட்டனர்.

கடந்த பத்தாண்டுகளாகவேரோஹிங்கியா வங்காளிகள்மியான்மரை விட்டு வெளியேறி வருகின்றனர். குறைந்தது மூன்று இலட்சம் பேராவது புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். பெருந்தொகை அகதிகள்,அயல்நாடான ஒரே மொழி பேசும் பங்களாதேஷுக்கு சென்றுள்ளனர். மியான்மர்-பங்களாதேஷ் எல்லை மூடப்பட்டுள்ளது. எல்லையை ஒரு ஆறு பிரிக்கின்றது. அகதிகள்சிறு எண்ணிக்கையில் வள்ளங்களில் எல்லை தாண்டுகின்றனர். பங்களாதேஷிலும் அவர்களுக்கு வரவேற்பில்லை. 

1996 ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சம் ரோஹிங்கியா பங்களாதேஷில் தங்கி இருந்தனர். சில வருடங்களுக்குப் பின்னர்பங்களாதேஷ் அரசு அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பியது. இப்பொழுதும் தஞ்சம் கோரி வரும் ரோஹிங்கியா அகதிகளை,பங்களாதேஷ் எல்லைக் காவல் படை தடுத்து திருப்பி அனுப்புகிறது. அவர்களுக்கு தஞ்சமளிக்க வேண்டாம் என்று எல்லையோர கிராம மக்கள் அறிவுறுத்தப் படுகின்றனர். பங்களாதேஷ் மக்களில் ஒரு பகுதியினர் கூட,ரோஹிங்கியா அகதிகளை வெறுக்கின்றனர். மியான்மரில் வங்காளி சிறுபான்மையினர் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றிபங்களாதேஷ் மக்கள் அதிகமாக கேள்விப் பட்டிருப்பார்கள். ஈழப் பிரச்சினையை,தமிழக இனவாதக் குழுக்கள் எப்படிக் கையாளுகின்றனவோஅதே போன்று தான் பங்களாதேஷை சேர்ந்த இஸ்லாமிய மதவாதக் குழுக்கள் நடந்து கொள்கின்றன.

வதந்திகள்திரிபுபடுத்தல்இவற்றை தவிர்த்து விட்டுஉண்மையை கண்டறிவது கடினமான பணியாகும். பல சமயங்களில்பலருக்கு உண்மை அறிவதில் ஆர்வம் இருப்பதில்லை. படுகொலை செய்யப்பட்ட ரோஹிங்கிய வங்காளிகளின் எண்ணிக்கை 20000 க்கும் குறைவாக இருக்கலாம். பங்களாதேஷுக்கு அகதியாக சென்றவர்களின் எண்ணிக்கையையும்  சேர்த்து,  படுகொலையானவர்கள் என்று கூறி இருக்கலாம். ஆனால்,எது சரிஅதை எப்படி உறுதிப்படுத்துவதுரோஹிங்கியா மக்களின் இனப்படுகொலை பற்றிபாகிஸ்தானை மையமாகக் கொண்டியங்கும் அமைப்புகள் மிகப் படுத்தப்பட்ட பிரச்சாரம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.பாகிஸ்தான் மட்டுமல்லவளைகுடா அரபு நாடுகள்பிரிட்டனில் இருந்து இந்த பிரச்சார வலைப்பின்னல் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

புலம்பெயர்ந்த ரோஹிங்கியா வங்காளிகள்பங்களாதேஷ் இஸ்லாமியவாதிகள்மற்றும் பன்னாட்டு இஸ்லாமிய -சர்வதேசியவாதிகள்இதனை ஒரு "முஸ்லிம் இனப்படுகொலையாக" சித்தரித்துசர்வதேச அளவில் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது அணுகுமுறைதமிழக மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் உணர்வாளர்களின் போராட்ட  முறையை பெரிதும் ஒத்திருக்கின்றது. இனவாதம்மதவாதம் முக்கியமாக கருதப்படும் இன்றைய உலகில்ஒரு பிரச்சினை பல மாறுபட்ட பரிணாமங்களை அடைகின்றது. ரோஹிங்கியா வங்காளிகளும்மியான்மார்பங்களாதேஷுக்கு இடையிலான சர்வதேச முரண்பாடாக மாற்றமடைகின்றது. ஆயிரம் வருடங்களுக்கு முந்திய மதப்போர் வரலாற்றின் தொடர்ச்சியாக இதனை மாற்ற எத்தனிக்கின்றனர். பர்மாவுக்கும்பங்களாதேஷுக்கும் இடையிலான மத முரண்பாடு பற்றிவேறொரு கட்டுரையில் பார்ப்போம்.

நன்றி - கலையகம்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

ராஜீவ் காந்தியை போட்டு தள்ளிய மொசாட் -இப்படி ஒரு திகில் செய்தி


இஸ்ரேல் உளவு அமைப்பான “மொசாத்” மூலம் ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் கூறியிருந்தார். ராஜீவ் படுகொலை சம்பவத்திற்கு முன்பாகவே மொசாத் பற்றி எச்சரித்திருந்தார் அராபத். இந்நிலையில் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் எழுதியுள்ள புத்தகத்தில் ராஜீவ் கொலைக்கும் மொசாத் அமைப்புக்கும் சம்மந்தம் உள்ளது என்று பல ஆதாரங்களுடன் எழுதியது பழைய கதை ஆனால் வேலுச்சாமி எழுதிய புத்தகம் வெளிவந்தவுடன் சேஷன் புத்தகத்தையும் பலர் புரட்ட துவங்கியிருக்கிறார்கள்.

பாலஸ்தீன விவகாரத்தில் எத்தனையோ நாடுகள் எதிர்த்தும் எதற்கும் அசராமல் இஸ்ரல் திமிராக இருப்பதற்கு காரணமே இஸ்ரேலிய உளவுப்படை. இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர். அத்தனை பெரும் உளவாளிகள். ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள் மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடி கொண்டிருக்கிறார்கள் நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை உலகத்தில் இருக்கும் உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிட பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம்.

உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை கொண்டிருப்பது மொசாத் மட்டுமே இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொசாத் ஏஜெண்ட், நமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு மொசாத் அமைப்பிற்கு அனுமதி இருக்கிறது. இந்த உளவு அமைப்பில் உலகத்தில் உள்ள எவரும் சேரலாம் யூதர்களுக்கு முன்னுரிமை உண்டு. ஆனால், அவர்கள் அளிக்கும் பயிற்ச்சிகள் பரம ரகசியமாக வைக்கப்படும்.

ராஜீவ் கொலையில் அந்நிய சதி பற்றி விசாரணை நடத்திய நீதிபதி ஜெயின், தமது அறிக்கையிலும் விடுதலைபுலிகள், மொசாத் மற்றும் அமெரிக்க உளவு நிறுவனமான சி,ஐ,ஏ இடையிலான தொடர்புகளை புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி ஒரு முடிவுக்கு நீதிபதி ஜெயின் வருவதற்கு காரநாமே ஒரு புத்தகம்தான் மோசத்தில் அதிகாரியாகப் பணியாற்றி, அதிலிருந்து வெளியேறிய விக்டர் ஓஸ்ட்ரோஸ்கி (Victor Ostrovsky) மொசாத் ரகசிய செயல்பாடுகளைப் பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். நூலின் பெயர் “By way of deception”.

By Way of Deception; The Making and Unmaking of a Mossad Officer by Victor Ostrovsky

http://www.whale.to/c/OSTROVbywayofdecep.pdf

இதில் “மொசாத் நிறுவனம், ஒரே நேரத்தில் சிங்கள ராணுவத்திற்கும் தமிழ் கொரில்லா குழுவிக்கும் பயிற்சிகளை அளித்தது” என்று குறிப்பட்டுள்ளார். அப்படி பயிற்சி பெற்றது விடுதலைப்புலிகள் தான் என்று கூறப்பட்டது.

ஆனால், 1984-ம் ஆண்டில் ஈழ விடுதலைக்காக அங்குள்ள தமிழர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து போராடினர். குறிப்பாக, “எல்.டி.டி.ஈ”, “டெலோ”, “ஈ.பி.ஆர்.எல்.எப்”, “ஈரோஸ்”, “ப்ளாட்” என்ற எல்லா அமைப்புகளுமே “தமிழ் புலிகள்” என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தன. இதில் எந்த பிரிவுக்கு மொசாத் பயிற்சி அளித்தது என்று இன்னமும் புரியாத புதிராக உள்ளது. மொத்தத்தில் மொசாத் எதையும் செய்யும். அதைக் கண்டு பிடிப்பது குதிரைக் கொம்பு.

செவ்வாய், 15 மே, 2012

மாயன் நாட்காட்டி - பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது.


நாம் வாழும் இப்பூமி திடீரென 2012 டிசம்பர் 21ல் முடிவுக்கு வரப்போகின்றதா? ஆம் என்கின்றது ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விழிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. மாயன், இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம். அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது.
ஆதி எகிப்திய மக்களால் கூட 2012 ஓர் பாரிய மாற்றத்திற்கான ஆண்டாக எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது. புவியின் துருவப்பகுதிகள் இடம்மாறுவதனால் புவியில் உலகளாவிய பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டும், வெளிக்கிழம்பும் எரிமலை புகை மற்றும் புழுதிகளால் ஏறக்குறைய 40 வருடங்களுக்கு சூரியனை பார்ப்பதே இயலாது போகும் என்கின்றனர் மாயன் நாட்காட்டியை நம் புகின்ற இன்னோர் குழுவினர். இவ ற்றை எல்லாம் மறுக்கும் இன் னொரு பகுதியினர் புவியின் முடிவு என்பது சாத்தியமற்ற ஓர் விடையம். சில வேளைகளில் புதிய யுகம் ஒன்று தோன்றக்கூடும் என்கின்றனர். எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கங்கள், சுனாமி, சூறாவளி என ஏற்படும் அனர்த்தங்களினால் மனித சமூகத்தின் பேரழிவு ஒன்று ஏற்படும் என கூறுகின்றது மாயன் நாட்காட்டி. மாயன் நாட்காட்டியின் எதிர்பார்ப்பின் படி 2012 டிசம்பர் 21 (21-12-2011 GMT 11:11 P:M) எமது சூரியன் அதன் விண்மீன் மண்டலத்தின் (Galaxy) நேரடி பார்வையில் வருகின்றது. இந்த நேரத்தில் விண்மீன் மண்டலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள சூப்பர்நோவா கருங்குழி (Supernova black hole) மற்றும் எமது சூரியன், பூமி என்பன ஒரே நேர்கோட்டில் நேராக சந்திக்கவுள்ளன.
இந்தவேளையில் சூப்பர்நோவா கருங்குளியில் அதாவது, எமது விண்மீன் மண்டலத்தின் மையத்தில் இருந்து வரும் காந்த அலைகளால் எமது பூமியும் சூரியனும் வெகுவாக பாதிக்கப்படவுள்ளது. இந்நேரத்தில் சூரியனின் அதிகமான மாற்றங்கள் இதனை சூரிய நிலநடுக்கம் (sun earth quack)  என்கிறது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனப்படுகின்றது. இச்செயற்பாடு ஒவ்வொரு 26,000 வருடங்களுக்கு ஒருமுறை நடை பெறுவது என்கிறது மாயன் நாட்காட்டி. இவ் விடையத்தின் உண்மைத்தன்மை குறித்து விஞ்ஞானிகள் மத்தியில் குழப்பமான பதில்கள் தோன்றி யிருக்கின்றன.
இன்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மாயன் சமூகம் மூவாயிரம் வருடங் களாக உலகின் பிரசித்திபெற்ற ஆதி சமூகமாகும். மாயன் கணிப்புகளில் நடந்தேறியவை அதிகம். மாயன் சமூகம் மத்திய அமெரிக்காவின் மெக்சிக்கோவில் தென் மாகாணங்கள் மற்றும் வடக்கு, மத்திய அமெரிக்கா வின் இன்றைய குவாதமாலா, எல்சல்வாடோர், கொண்டூரஸ் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கி கி.மு. 2000 தொடக்கம் கி.பி. 250 வரையான புராதன காலத்தின் ஆரம்பகாலங்களில் வளர்ச்சியடைந்த ஒரு சமூகமாகும். கி.பி. 250 தொடக்கம் கி.பி. 900 வரையிலான புராதன காலங்களில் மாயன் நகரங்கள் அதிகளவான வளர்ச்சி கண்டிருந்தன. மாயன் சமூகம் கணிதவியல் மற்றும் வானியல் என்பனவற்றில் வளர்ச்சியடைந்த எழுத்தறிவு கொண்ட ஓர் சமூகமாக இன்று இனங்காணப்பட்டிருக்கின்றது.
 
 மாயன் நாட்காட்டி
2012 புவியின் இறுதி எவ்வாறு தீர்மானிக்கப்பட போகின்றது என்பது குறித்து பல கருத்துகள் தோன்றியிருந்தாலும், அதிகமாக பேசப்படுகின்றதும் அதிகளவில் சாத்தியமானதும் என பலராலும் விவாதிக்கப்படுகின்ற ஒரு விடையம் குறித்து இங்கு குறிப்பிடலாம். 2012 இன் பின்னர் எமது விண்மீன் மண்டலத்தின் நேர்கோட்டிற்கு வரும் பூமி அதை பூமியினுடைய காந்தப்புலங்கள் திசைமாறும் எனப்படுகின்றது. இதனால் துருவங்கள் இடமாறுவது டன், அதுவே புவியின் பாரிய அழிவுக்கு வழிகோலும் எனப்படுகின் றது. பாரிய எரிமலை வெடிப்புகள், சுனாமிகள் மற்றும் நிலநடுக்கங்கள் என்பனவற்றுடன் நவீன மனித சமூகத்தின் அழிவு ஒன்று அரங்கேறவுள் ளது என்கிறது மாயன். இப்படியான துருவங்களின் இடமாற்றத்தினால் நிகழும் இச்செயற்பாடுகள் புவியில் உள்ளவர்களின் கண்ணுக்கு ஏறக்குறைய 40 வருடங்கள் சூரியனின் பிரசன்னத்தை மறைக்கும் அளவிற்கு புவியை புகைமண்டலங்கள் மூடிக்கொள்ளும் எனப்படுகின்றது.
துருவங்களின் இடப்பெயர்ச்சிஎன்ற விடையம் விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். எனினும், அது 2012ல் நிகழுமா என்பது குறித்து விஞ்ஞானிகளால் எதுவும் கூறப்படவில்லை. விண்மீன் மண்டலத்தின் ஒருநாள் என்பது புவியின் 25,625 வருடங்களைக் கொண்டது. இதனை மாயன் நாட்காட்டி 5,125 வருடங்களைக் கொண்ட ஐந்து காலகட்டங்களாக பிரிக்கின்றது. அதன்படி எமது பூமி இப்போது ஐந்தாவது காலகட்டத்தின் இறுதியில் இருக்கின்றது. என்கின்றது 2012 டிசம்பர் 21 இக்கட்டத்தின் முடிவுடன் அடுத்த புதிய யுகத்தினுள் மனித சமூகம் நுழையவிருக்கின்றது என்கிறது மாயன். எமது சூரியன் அடிக்கடி அதன் மத்திய விண்மீன் மண்டலத்தினால் புத்துயிர் பெறச் செய்யப்படுகின்றது என்பதனை மாயன் சமூகம் ஒவ்வொரு 5, 125 வருடங்களுக்கும் ஒருமுறை இச்செயற்பாடு நடைபெறுவதாக தெரிந்திருந்தார்கள்.

2012ல் நடைபெறவிருக்கின்ற அவ்வாறான ஒரு செற்பாட்டினால் எமது சூரியனின் ஒளிரும் தன்மை அதிகரிப்பதுடன் சூரியனில் இருந்து அதிகமான தீச்சுவாலைகள் தோன்றும் என மாயன் குறிப்பிடுகின்றது. அந்தவேளையில் புவியின் காந்தப்புலங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என இன்று மாயன் நாட்காட்டியினை மேற்கோள் காட்டும் சிலர் குறிப்பிடுகின்றனர். மாயன் கணிப்பின்படி இறுதியாக நான்காவதாக வாழ்ந்த மனித சமூகம் கி.மு. 3113 வருடங்களுக்கு முன்பு பாரிய வெள்ளப்பெருக்கினால் மிகவும் அரிதானவை தவிர ஏனையவை அழிந்திருக்கின்றன.

The Mayan Calendar 
அதனால் தமது சமூகத்தின் அடுத்த அழிவு தொடர்பாக அறிந்து கொண்டால் அதிலிருந்து தமது சமூகத்தை பாதுகாக்க முடியும் என மாயன் சமூகம் இது தொடர்பான விடையங்களில் அதிக ஆர்வம் கொண்டதாக இருந்திருகின்றது. எமது சூரியத் தொகுதியின் அசைவு பற்றி மாயன் சமூகத்தினர் அன்றைய காலத்திலேயே அறிந்து வைத்திருந்தனர். மேலும் அவர்கள் எமது பூமி சூரியனை சுற்றுவது போன்று எமது ஞாயிற்றுத் தொகுதி அதன் விண்மீன் மண்டலத்தினை வலம்வருவதாக நம்பினர். இதன்போது ஏற்படுகின்ற மாற்றங்களை காட்டுகின்ற சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி ஒன்றை அமைத்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே இன்று இக் குழப்பத்துக்கான ஆரம்பங்கள் தோன்றியிருக்கின்றன.
நவீன மனித சமூகத்தைப் பற்றி வரலாற்றில் அதிகமாக பேசப்பட்ட ஒரு ஆண்டு என்ற வகையில் 2012 தொடர்பான இக்குழப்பங்கள் தொடர்பில் இன்று விஞ்ஞானிகளின் கருத்துகளை ஏற்பதற்கு உலகின் ஒரு பகுதி மக்கள் தயாரில்லை. பெருமளவான மக்களிடையே வேகமாக பரவிக் கொண்டிருந்த இந்த விடையம் தொடர்பில் விண்வெளி அறிஞர்கள் விழிப்படைந்திருக்கின்றனர். உண்மையில் மாயன் குறிப்பிடும் இந்த கணிப்பீடு தவறானது. எமது விண்மீன் மண்டலத்தில் 2012 இல் எந்தவித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை என்பது தற்போதைக்கு விஞ்ஞானிகளின் உறுதியான பதிலாக இருக்கின்றது.
உண்மையில் 2012ல் ஒரு மாற்றம் ஏற்படலாம் என்பது பலர் ஏற்றுக் கொள்கின்ற ஒரு கருத்தாக இருந்தாலும், அம்மாற்றங்கள் எவ்வளவு தூரம் மனித சமூகத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் எவரிடமும் தெளிவான ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கங்கள் இல்லை. எமது ஞாயிற்றுத் தொகுதியானது 2008- 2015 க்கு இடைப்பட்ட இக்காலப்பகுதியில் அதன் விண்மீன் மண்டலத்தின் நேர் கோட்டிற்கு வரலாம் என பலரும் நம்புகின்றனர். உண்மையில் மாயன் சமூகத்தின் சுழற்சி நிழ்வுகளின் நாட்காட்டி 2012 டிசம்பர் 21 அன்று முடிவடைகின்றது. இது அந்த சமூகத்தின் புதிய யுகத்திற்கான வரவேற்பாகவும் ஒரு பாரிய வைபவமாகவும் இருக்கலாம் என்கின்றனர் பல ஆய்வாளர்கள். ஆனால் மாயன் குறிப்பிடும் இந்த யுகத்தின் முடிவும் 2012இன் பின்னரான புதிய யுகத்தின் ஆரம்பத்துக்கும் இடையில் எத்தகைய மாற்றங்களை புவி சந்திக்கவுள்ளது என்பது அனைவரும் காத்திருந்து பார்க்க வேண்டிய விடையமாகும்.
இந்திய நாளிதலில் வெளியான செய்தி ஒன்று அதன் முக்கியத்துவம் கருதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012ல் பூமியை அடையும் அபாயம்: அறிவியலாளர்கள் எச்சரிக்கை.
கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது. வெரசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8ம் நாளான்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழில்நுட்ப உபரகணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள். நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்என நாசாவின் ஈலியோ இயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் பிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார். சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தொழில்நுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும். இருந்தாலும்பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்” (Coranal mass ejection, CMES) மனித இனத்தைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இது 2012ம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற் படுகின்றன.
பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும். அதிதொழில் நுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச் சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார் கள்.
புவி, ஞாயிற்றுத் தொகுதி அதன் விண்மீன் மண்டலம் தொடர்பான செயற்பாடுகள் சார்ந்து ஒரு தாக்கம் இடம்பெறுமானால், நிச்சயமாக அது சில வினாடிகளுக்கு மட்டுமோ அல்லது சில நிமிடங்களுக்கோ நடைபெறுவதல்ல. எத்தகைய மாற்றங்களாயினும் அவை குறிப்பிட்ட காலங்களுக்கு முன்னிருந்தே சிறிது சிறிதாக தென்பட ஆரம்பித்து, பின்னர் குறித்த காலத்தில் இருந்து சிறிது சிறிதாகவே முடிவடைய வேண்டும். எனவே இவ்விடையத்தின் உண்மைத்தன்மை தொடர்பாக நாம் உய்த்தறிவதற்கு தற்போதைய நடைமுறை உலகம் சிறந்த புத்தகம்.