செவ்வாய், 15 மே, 2012

மாயன் நாட்காட்டி - பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது.


நாம் வாழும் இப்பூமி திடீரென 2012 டிசம்பர் 21ல் முடிவுக்கு வரப்போகின்றதா? ஆம் என்கின்றது ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விழிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. மாயன், இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம். அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது.
ஆதி எகிப்திய மக்களால் கூட 2012 ஓர் பாரிய மாற்றத்திற்கான ஆண்டாக எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது. புவியின் துருவப்பகுதிகள் இடம்மாறுவதனால் புவியில் உலகளாவிய பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டும், வெளிக்கிழம்பும் எரிமலை புகை மற்றும் புழுதிகளால் ஏறக்குறைய 40 வருடங்களுக்கு சூரியனை பார்ப்பதே இயலாது போகும் என்கின்றனர் மாயன் நாட்காட்டியை நம் புகின்ற இன்னோர் குழுவினர். இவ ற்றை எல்லாம் மறுக்கும் இன் னொரு பகுதியினர் புவியின் முடிவு என்பது சாத்தியமற்ற ஓர் விடையம். சில வேளைகளில் புதிய யுகம் ஒன்று தோன்றக்கூடும் என்கின்றனர். எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கங்கள், சுனாமி, சூறாவளி என ஏற்படும் அனர்த்தங்களினால் மனித சமூகத்தின் பேரழிவு ஒன்று ஏற்படும் என கூறுகின்றது மாயன் நாட்காட்டி. மாயன் நாட்காட்டியின் எதிர்பார்ப்பின் படி 2012 டிசம்பர் 21 (21-12-2011 GMT 11:11 P:M) எமது சூரியன் அதன் விண்மீன் மண்டலத்தின் (Galaxy) நேரடி பார்வையில் வருகின்றது. இந்த நேரத்தில் விண்மீன் மண்டலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள சூப்பர்நோவா கருங்குழி (Supernova black hole) மற்றும் எமது சூரியன், பூமி என்பன ஒரே நேர்கோட்டில் நேராக சந்திக்கவுள்ளன.
இந்தவேளையில் சூப்பர்நோவா கருங்குளியில் அதாவது, எமது விண்மீன் மண்டலத்தின் மையத்தில் இருந்து வரும் காந்த அலைகளால் எமது பூமியும் சூரியனும் வெகுவாக பாதிக்கப்படவுள்ளது. இந்நேரத்தில் சூரியனின் அதிகமான மாற்றங்கள் இதனை சூரிய நிலநடுக்கம் (sun earth quack)  என்கிறது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனப்படுகின்றது. இச்செயற்பாடு ஒவ்வொரு 26,000 வருடங்களுக்கு ஒருமுறை நடை பெறுவது என்கிறது மாயன் நாட்காட்டி. இவ் விடையத்தின் உண்மைத்தன்மை குறித்து விஞ்ஞானிகள் மத்தியில் குழப்பமான பதில்கள் தோன்றி யிருக்கின்றன.
இன்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மாயன் சமூகம் மூவாயிரம் வருடங் களாக உலகின் பிரசித்திபெற்ற ஆதி சமூகமாகும். மாயன் கணிப்புகளில் நடந்தேறியவை அதிகம். மாயன் சமூகம் மத்திய அமெரிக்காவின் மெக்சிக்கோவில் தென் மாகாணங்கள் மற்றும் வடக்கு, மத்திய அமெரிக்கா வின் இன்றைய குவாதமாலா, எல்சல்வாடோர், கொண்டூரஸ் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கி கி.மு. 2000 தொடக்கம் கி.பி. 250 வரையான புராதன காலத்தின் ஆரம்பகாலங்களில் வளர்ச்சியடைந்த ஒரு சமூகமாகும். கி.பி. 250 தொடக்கம் கி.பி. 900 வரையிலான புராதன காலங்களில் மாயன் நகரங்கள் அதிகளவான வளர்ச்சி கண்டிருந்தன. மாயன் சமூகம் கணிதவியல் மற்றும் வானியல் என்பனவற்றில் வளர்ச்சியடைந்த எழுத்தறிவு கொண்ட ஓர் சமூகமாக இன்று இனங்காணப்பட்டிருக்கின்றது.
 
 மாயன் நாட்காட்டி
2012 புவியின் இறுதி எவ்வாறு தீர்மானிக்கப்பட போகின்றது என்பது குறித்து பல கருத்துகள் தோன்றியிருந்தாலும், அதிகமாக பேசப்படுகின்றதும் அதிகளவில் சாத்தியமானதும் என பலராலும் விவாதிக்கப்படுகின்ற ஒரு விடையம் குறித்து இங்கு குறிப்பிடலாம். 2012 இன் பின்னர் எமது விண்மீன் மண்டலத்தின் நேர்கோட்டிற்கு வரும் பூமி அதை பூமியினுடைய காந்தப்புலங்கள் திசைமாறும் எனப்படுகின்றது. இதனால் துருவங்கள் இடமாறுவது டன், அதுவே புவியின் பாரிய அழிவுக்கு வழிகோலும் எனப்படுகின் றது. பாரிய எரிமலை வெடிப்புகள், சுனாமிகள் மற்றும் நிலநடுக்கங்கள் என்பனவற்றுடன் நவீன மனித சமூகத்தின் அழிவு ஒன்று அரங்கேறவுள் ளது என்கிறது மாயன். இப்படியான துருவங்களின் இடமாற்றத்தினால் நிகழும் இச்செயற்பாடுகள் புவியில் உள்ளவர்களின் கண்ணுக்கு ஏறக்குறைய 40 வருடங்கள் சூரியனின் பிரசன்னத்தை மறைக்கும் அளவிற்கு புவியை புகைமண்டலங்கள் மூடிக்கொள்ளும் எனப்படுகின்றது.
துருவங்களின் இடப்பெயர்ச்சிஎன்ற விடையம் விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். எனினும், அது 2012ல் நிகழுமா என்பது குறித்து விஞ்ஞானிகளால் எதுவும் கூறப்படவில்லை. விண்மீன் மண்டலத்தின் ஒருநாள் என்பது புவியின் 25,625 வருடங்களைக் கொண்டது. இதனை மாயன் நாட்காட்டி 5,125 வருடங்களைக் கொண்ட ஐந்து காலகட்டங்களாக பிரிக்கின்றது. அதன்படி எமது பூமி இப்போது ஐந்தாவது காலகட்டத்தின் இறுதியில் இருக்கின்றது. என்கின்றது 2012 டிசம்பர் 21 இக்கட்டத்தின் முடிவுடன் அடுத்த புதிய யுகத்தினுள் மனித சமூகம் நுழையவிருக்கின்றது என்கிறது மாயன். எமது சூரியன் அடிக்கடி அதன் மத்திய விண்மீன் மண்டலத்தினால் புத்துயிர் பெறச் செய்யப்படுகின்றது என்பதனை மாயன் சமூகம் ஒவ்வொரு 5, 125 வருடங்களுக்கும் ஒருமுறை இச்செயற்பாடு நடைபெறுவதாக தெரிந்திருந்தார்கள்.

2012ல் நடைபெறவிருக்கின்ற அவ்வாறான ஒரு செற்பாட்டினால் எமது சூரியனின் ஒளிரும் தன்மை அதிகரிப்பதுடன் சூரியனில் இருந்து அதிகமான தீச்சுவாலைகள் தோன்றும் என மாயன் குறிப்பிடுகின்றது. அந்தவேளையில் புவியின் காந்தப்புலங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என இன்று மாயன் நாட்காட்டியினை மேற்கோள் காட்டும் சிலர் குறிப்பிடுகின்றனர். மாயன் கணிப்பின்படி இறுதியாக நான்காவதாக வாழ்ந்த மனித சமூகம் கி.மு. 3113 வருடங்களுக்கு முன்பு பாரிய வெள்ளப்பெருக்கினால் மிகவும் அரிதானவை தவிர ஏனையவை அழிந்திருக்கின்றன.

The Mayan Calendar 
அதனால் தமது சமூகத்தின் அடுத்த அழிவு தொடர்பாக அறிந்து கொண்டால் அதிலிருந்து தமது சமூகத்தை பாதுகாக்க முடியும் என மாயன் சமூகம் இது தொடர்பான விடையங்களில் அதிக ஆர்வம் கொண்டதாக இருந்திருகின்றது. எமது சூரியத் தொகுதியின் அசைவு பற்றி மாயன் சமூகத்தினர் அன்றைய காலத்திலேயே அறிந்து வைத்திருந்தனர். மேலும் அவர்கள் எமது பூமி சூரியனை சுற்றுவது போன்று எமது ஞாயிற்றுத் தொகுதி அதன் விண்மீன் மண்டலத்தினை வலம்வருவதாக நம்பினர். இதன்போது ஏற்படுகின்ற மாற்றங்களை காட்டுகின்ற சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி ஒன்றை அமைத்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே இன்று இக் குழப்பத்துக்கான ஆரம்பங்கள் தோன்றியிருக்கின்றன.
நவீன மனித சமூகத்தைப் பற்றி வரலாற்றில் அதிகமாக பேசப்பட்ட ஒரு ஆண்டு என்ற வகையில் 2012 தொடர்பான இக்குழப்பங்கள் தொடர்பில் இன்று விஞ்ஞானிகளின் கருத்துகளை ஏற்பதற்கு உலகின் ஒரு பகுதி மக்கள் தயாரில்லை. பெருமளவான மக்களிடையே வேகமாக பரவிக் கொண்டிருந்த இந்த விடையம் தொடர்பில் விண்வெளி அறிஞர்கள் விழிப்படைந்திருக்கின்றனர். உண்மையில் மாயன் குறிப்பிடும் இந்த கணிப்பீடு தவறானது. எமது விண்மீன் மண்டலத்தில் 2012 இல் எந்தவித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை என்பது தற்போதைக்கு விஞ்ஞானிகளின் உறுதியான பதிலாக இருக்கின்றது.
உண்மையில் 2012ல் ஒரு மாற்றம் ஏற்படலாம் என்பது பலர் ஏற்றுக் கொள்கின்ற ஒரு கருத்தாக இருந்தாலும், அம்மாற்றங்கள் எவ்வளவு தூரம் மனித சமூகத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் எவரிடமும் தெளிவான ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கங்கள் இல்லை. எமது ஞாயிற்றுத் தொகுதியானது 2008- 2015 க்கு இடைப்பட்ட இக்காலப்பகுதியில் அதன் விண்மீன் மண்டலத்தின் நேர் கோட்டிற்கு வரலாம் என பலரும் நம்புகின்றனர். உண்மையில் மாயன் சமூகத்தின் சுழற்சி நிழ்வுகளின் நாட்காட்டி 2012 டிசம்பர் 21 அன்று முடிவடைகின்றது. இது அந்த சமூகத்தின் புதிய யுகத்திற்கான வரவேற்பாகவும் ஒரு பாரிய வைபவமாகவும் இருக்கலாம் என்கின்றனர் பல ஆய்வாளர்கள். ஆனால் மாயன் குறிப்பிடும் இந்த யுகத்தின் முடிவும் 2012இன் பின்னரான புதிய யுகத்தின் ஆரம்பத்துக்கும் இடையில் எத்தகைய மாற்றங்களை புவி சந்திக்கவுள்ளது என்பது அனைவரும் காத்திருந்து பார்க்க வேண்டிய விடையமாகும்.
இந்திய நாளிதலில் வெளியான செய்தி ஒன்று அதன் முக்கியத்துவம் கருதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012ல் பூமியை அடையும் அபாயம்: அறிவியலாளர்கள் எச்சரிக்கை.
கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது. வெரசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8ம் நாளான்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழில்நுட்ப உபரகணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள். நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்என நாசாவின் ஈலியோ இயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் பிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார். சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தொழில்நுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும். இருந்தாலும்பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்” (Coranal mass ejection, CMES) மனித இனத்தைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இது 2012ம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற் படுகின்றன.
பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும். அதிதொழில் நுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச் சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார் கள்.
புவி, ஞாயிற்றுத் தொகுதி அதன் விண்மீன் மண்டலம் தொடர்பான செயற்பாடுகள் சார்ந்து ஒரு தாக்கம் இடம்பெறுமானால், நிச்சயமாக அது சில வினாடிகளுக்கு மட்டுமோ அல்லது சில நிமிடங்களுக்கோ நடைபெறுவதல்ல. எத்தகைய மாற்றங்களாயினும் அவை குறிப்பிட்ட காலங்களுக்கு முன்னிருந்தே சிறிது சிறிதாக தென்பட ஆரம்பித்து, பின்னர் குறித்த காலத்தில் இருந்து சிறிது சிறிதாகவே முடிவடைய வேண்டும். எனவே இவ்விடையத்தின் உண்மைத்தன்மை தொடர்பாக நாம் உய்த்தறிவதற்கு தற்போதைய நடைமுறை உலகம் சிறந்த புத்தகம்.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

ஈரானுக்கு எதிராக சில மாதங்களுக்குள் போர் தொடுக்கப்படும் என்று இஸ்ரேல் அச்சுறுத்துகிறது

ஈரானுக்கு எதிரான தண்டனையாக பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், வரவிருக்கும் மாதங்களில் ஈரானிய அணுச்சக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலின் இராணுவ அச்சுறுத்தல்கள் இருக்கும் என்பதற்கான அடையாளங்கள் பெருகியுள்ளன. இந்தக் கட்டத்தில், ஒபாமாவின் நிர்வாகம் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்துள்ளது என்றாலும், அத்தகைய தாக்குதலை முற்றிலும் வாஷிங்டன் தடுத்துவிட்டது என்பதற்கான குறிப்புக்கள் இல்லை. வாஷிங்டன் போஸ்ட்டின்  கட்டுரையாளர் டேவிட் இக்நேஷியஸ் நேற்று அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா, ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதம் இஸ்ரேல் ஈரானைத் தாக்கக் கூடும் என்பதை நம்புகிறார் அதுவும் பாதிக்கப்படாத பகுதி” என்று இஸ்ரேலியர்கள் விவரிக்கும் ஈரான் அணுகுண்டுத் தயாரிப்பைத்தொடங்குமுன்” கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
இக்நேஷியஸிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஐயத்திற்கு இடமின்றி இதைத் தெரிவித்துள்ள பானெட்டா கட்டுரை பற்றிக் கருத்துக் கூற மறுத்துவிட்டார். ஆனால் அறிக்கையின் பொருளுரையை அவர் மறுக்கவில்லை. மேலும் கேள்விகள் கேட்கப்பட்டதற்கு, பானெட்டா, ஒரு தாக்குதலைப் பரிசீலிப்பதாக இஸ்ரேல் குறிப்புக்காட்டியுள்ளது, நாங்கள் எங்கள் கவலைகளைக் கூறியுள்ளோம்” என்று உறுதிபடுத்தினார்.
அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே வேறுபாடுகள் ஏதேனும் இருந்தால், அவைகள் முற்றிலும் தந்திரோபாயத்தை ஒட்டியவைதான். அமெரிக்கா தாக்குவதற்கு முன் நேரம் எடுத்துக் கொள்ளவும் என்று பகிரங்கமாகவேனும் கூறுகையில், இஸ்ரேல் உடனடி நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கிறது; இதற்குப் போலிக்காரணமாக ஈரானின் போர்டா யுரேனிய அடர்த்தி ஆலை முற்றுப்பெறும் தறுவாயில் உள்ளது, அதன் பின் அது தாக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பைப்” பெற்றுவிடும். இரு நாடுகளுமே பலமுறை அனைத்து விருப்புரிமைகளும் மேசையில் உள்ளன, அதாவது ஈரானிய ஆட்சி இவர்களின் கோரிக்கைகளுக்கு தாழ்ந்து நடந்தால் ஒழிய போர் உட்பட அனைத்தும்” என்று பலமுறை கூறியுள்ளன.



இஸ்ரேலியர்கள் தாக்கினால் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி வெள்ளை மாளிகை இன்னும் துல்லியமாக முடிவெடுக்கவில்லை. ஒரு வலுவான அமெரிக்க பிரதிபலிப்பை தூண்டிவிடக்கூடிய வகையில் ஈரான் அமெரிக்க சொத்துக்களை தாக்கினால் ஒழிய, மோதலில் இருந்து ஒதுங்கி இருப்பது சாதகம் என்று நிர்வாகம் கருதுகிறது.” என்றும் இக்நேஷியஸ் கூறியுள்ளார்.நிர்வாகத்தின் அதிகாரிகள் இஸ்ரேலின் மக்கள் உள்ள மையங்கள் தாக்கப்பட்டால் [ஈரானின் பதிலடியால்], அமெரிக்காவானது இஸ்ரேலின் பாதுகாப்பிற்குச் செல்லும் கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குவதை வாஷிங்டன் தன் செல்வாக்கினால் தடுத்துவிட முடியும்; இஸ்ரேலோ பெரிதும் அமெரிக்காவை ராஜதந்திர, பொருளாதார, இராணுவ வகைகளில் நம்பியுள்ளது. இக்கட்டுரை இத்தகைய நிலை பற்றி எதையும் குறிப்பிடவில்லை. இதன் பொருள் ஒபாமா நிர்வாகம் உட்குறிப்பாக ஒரு சட்டவிரோத, தூண்டுதலற்ற தாக்குதலை ஈரான் மீது நடத்துவதற்கு ஒப்புதல் கொடுத்து ஈரான் பதிலடி கொடுத்தால் தன்னுடைய இராணுவத்தை கொண்டு வருவோம் என்று அச்சுறுத்துவது போல் தோன்றுகிறது.
இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக் வியாழனன்று மீண்டும் இராணுவ நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். ஈரானிய இராணுவ அணுச்சக்தித் திட்டம் மெதுவாக, ஆனால் உறுதியாக இறுதிக் கட்டங்களை அடைந்து கொண்டிருக்கிறது” என்று கூறிய அவர் ஒரு பாதுகாப்புக் கட்டத்திற்கு” இத்திட்டம் வந்துவிட்டால், திறமையான தலையீடு இல்லாவிடில்” அது முடிக்கப்பட்டுவிடும் என்றும் அறிவித்தார். உடனடிச்செயற்பாட்டை வலியுறுத்திய பாரக், “ ‘பின்னர்’ என்று கூறுபவர்கள் பின்னர் என்பது மிகத் தாமதம் என்று அறிவர்” என்றும் எச்சரித்தார்.
அணுவாயுதத் திட்டம் முடிக்கப்படும் கட்டத்தில் இருக்கிறது என்று கூறுவது ஒருபுறம் இருக்க, ஈரானிடம் ஒரு  இராணுவ அணுவாயுதத் திட்டம் உள்ளது என்பதற்கு பாரக் சான்று ஏதும் கொடுக்கவில்லை. தெஹ்ரான் பலமுறை அணுவாயுதம் தயாரிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மறுத்துள்ளது. சமீபத்தில் ஈரானிய அரசு அணுகுண்டு தயாரிப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதைப் பானெட்டாவோ ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஈராக்கை தாக்குவதற்கான இஸ்ரேலின் நடவடிக்கைகள் வேறு காரணங்களினால் உந்துதல் பெற்றிருந்தன; இதில் மத்திய கிழக்கில் இஸ்ரேலின் இராணுவ மேலாட்சிக்கு எச்சவாலும் அற்ற தன்மையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானதாகும். இஸ்ரேலிடம் சொந்தத்தில் கணிசமான அணுவாயுதங்கள் ஏராளமாக உள்ளன; ஆனால் அது ஈரானோ வேறு ஏதேனும் நாடு ஒரு அணுவாயுதத்தைக் கட்டமைத்துவிடும் திறனைத் தடுப்பதில் உறுதியாக உள்ளது.
மேலும் இஸ்ரேலியத் தலைவர்கள் தனியே செயல்பட்டு தங்கள் பாதுகாப்பு அரபு வசந்தத்தினால் குறைமதிப்பிற்கு உட்படும்போதும் உறுதிபட இருக்கும் என்பதை நிரூபிக்க முற்படுகின்றனர்” என்று இக்நேஷியஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் இப்பிராந்தியத்தை மோதலில் ஆழ்த்தி, அதையொட்டி இஸ்ரேலிய இராணுவ வலிமையை நிரூபிக்கவும், பெருகிய தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள், சமூகச் சமத்துவத்திற்கான இயக்கத்தை, இஸ்ரேல் உட்பட, எல்லா இடங்களிலும் தகர்த்துவிடவும் விரும்புகின்றன.
ஒபாமா நிர்வாகம் எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் தன் மேலாதிக்கத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற பரந்த நோக்கத்தைக் கொண்டுள்ளது; அமெரிக்க விழைவுகளுக்கு ஈரானிய ஆட்சி முக்கிய தடை என்றும் கருதுகிறது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்தே, அமெரிக்கா ஈரான் மீதான அழுத்தத்தை முறையாக அதிகரித்து வருகிறது; இது புதிய கடுமையான பொருளாதாரத் தடைகள், பாரசீக வளைகுடாவில் கடற்படைக் குவிப்பு, தெஹ்ரானின் பிராந்திய நட்பு நாடுகளை இலக்கு வைத்தல், குறிப்பாக ஜனாதிபதி பஷிர் அல்-அசாத்தின் சிரிய ஆட்சியைத் தகர்த்தல் ஆகியவற்றின் மூலம் நடைபெறுகிறது.
வியாழனன்று அமெரிக்க செனட் குழு ஒன்று ஈரானுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது; இது காங்கிரசினால் ஏற்கப்பட்டுவிடக்கூடும். இத்தொகுப்பு ஈரானின் தேசிய எண்ணெய், எண்ணெய் வாகன நிறுவனங்கள் ஆகியவற்றைக் கையாளும் வெளிநாட்டு வங்கிகளுக்கு எதிரான இலக்கைக்கொண்டுள்ளது. இதைத்தவிர ஈரானுக்கு யுரேனிய ஏற்றுமதி அல்லது அதற்கு சுரங்கப்பிரிவில் உதவி செய்யும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களையும் இலக்கு கொண்டுள்ளது. குறிப்பாக இச்சட்டம் அமெரிக்க நிர்வாகம் பெல்ஜியத்தைத் தளமாகக் கொண்ட Swift நிறுவனத்தைத் தண்டிக்க விரும்புகிறது; உலகெங்கிலும் பல வங்கிகள் நிதியங்களை மின்னஞ்சல் முறையில் பணத்தை இதற்கு மாற்றுகின்றனர். அம்முயற்சி தோற்றால், நிர்வாகம் ஈரானின் மத்திய வங்கி மற்றும் பிற நிதிய நிறுவனங்களை மூடிவிடும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
ஈரானுடனான அமெரிக்க மோதல் ஈரானிய ஆட்சியை தீயதாக சித்தரிக்கும் பிரச்சாரத்தை விரிவாக்கி, போருக்கான சூழலைத் தோற்றுவிக்கும் முறை என்றுதான் விளக்கப்பட முடியும். 2003ம் ஆண்டு ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் படையெடுப்பிற்கு முன் நடந்ததைப் போலவே, வாஷிங்டனுக்கு வளைந்து கொடுக்கும் அமெரிக்க மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்கள்,பெரும் சிதைவான தகவல்கள், அரை உண்மைகள் மற்றும் அப்பட்டமான பொய்கள் என மக்களுடைய கருத்தை நச்சுப்படுத்தும் நோக்கத்தைப் பிரச்சாரப்படுத்தும் கருவிகளாக உள்ளன.
உதாரணமாக நேற்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அமெரிக்கா அல் குவேடாவுடனான ஈரானியப் பிணைப்புக்களைக் கண்டு அஞ்சுகிறது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது; இத்தகைய அச்சம் பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் கூற்றான தெஹ்ரான் சிறையில் 2003ல் இருந்து அடைக்கப்பட்டுள்ள ஐந்து அல் கெய்டாக் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்பதை தளமாகக் கொண்டுள்ளது. தெஹ்ரானிலுள்ள ஷியைட் அடிப்படைவாத ஆட்சிக்கும்  சுன்னித் தீவிரவாத அல்கெய்டாவிற்கும் இடையே உள்ள வெளிப்படையான மோதல்கள் இருந்தாலும், இக்கட்டுரை சில அதிகாரிகளும் வல்லுனர்களும் ஒரு நேரடிப் பங்காளித்தனத்திற்கான காலம் கனிந்திருக்கலாம் என்று கவலைப்படுகின்றனர்” என்று தெரிவிக்கிறது.


இதேபோல் ஆய்வு விளையாட்டும்” தொடங்கிவிட்டது. தெஹ்ரானின் அழைப்பின்பேரில், ஐ.நா. ஆய்வாளர்கள் இந்த வாரம் ஈரானுக்கு அதன்அணுச்சக்தித் திட்டங்கள் குறித்து விவாதிக்கச் சென்றனர். இப்பொழுதுள்ள அழைப்பான இருக்கும் அணுச்சக்தி நிலையங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக (அதில் போர்டோ ஆலையும் உண்டு), இக்குழு பார்ச்சின் இராணுவ வளாகத்தை விசாரிக்க வேண்டும் என்று கோரியதுஅது பற்றி அணுவாயுதங்கள் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அமெரிக்க, இஸ்ரேலிய போர் அச்சுறுத்தல்கள் உள்ள நிலையில், தெஹ்ரான் விருப்பத்தை மறுத்தது வியப்பு அல்ல. ஆனால் இந்த மறுப்பு அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் உயர்த்திக்காட்டப்பட்டதுடன், இரகசிய ஆயுதத் திட்டம்என்னும் கூற்றுக்களும் வெளிவந்துள்ளன. இவைகள் அனைத்தும் ஈராக்கின் இராணுவத் தளங்களைப் பார்வையிட வேண்டும், ஜனாதிபதி அரண்மனைகளைப் பார்க்க வேண்டும், மற்றும் இரகசிய நிலையங்களைப்பார்க்க வேண்டும் என்று அமெரிக்காவானது ஈராக் மீது படையெடுப்பதற்கு முன்வைத்த முடிவில்லாத கோரிக்கைகளைத்தான் நினைவிற்குக் கொண்டு வருகின்றன.
இச்செய்தி ஊடகப் பிரச்சாரம் பாரசீக வளைகுடாவில் போர் ஆபத்தை உயர்த்தும் வகையில் அழுத்தங்களை நேரடியாகத் தீவிரப்படுத்துகிறது. ஈரானை இஸ்ரேல் தாக்கிவிட்டால், அது வெறும் அறுவை சிகிச்சைத் தாக்குதல், ஈரானின் முக்கிய அணுச்சக்தி நிலையங்களை அழிப்பதற்கு என்று அழைக்கப்படும். ஈரானிய பதிலடி அமெரிக்காவால் ஈரானின் இராணுவ மற்றும் உள்கட்டுமானத்தை அழித்து விடும் நோக்கம் கொண்ட பெரும் வான் போருக்கு போலிக்காரணமாகப் பயன்படுத்தப்படும். இதன் விளைவாக, எந்தமோதலும் பிராந்திய போராக மாறும் உண்மையான ஆபத்தைக் கொண்டிருப்பதுடன் முக்கிய சக்திகளையும் இச்சச்சரவில் சிக்கவைத்துவிடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.

வியாழன், 3 நவம்பர், 2011

போதி தர்மன் யார்? Bodhidharma

போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

ஏழாம் அறிவு திரைப்படத்தின் கதைக் கருவை பற்றிய விடயங்களையும் யார் இந்த போதிதர்மன் என்று ஆராய்ந்து இணையத்தேடல் வாயிலாக  பகிர்ந்து கொள்வதில் ஒரு முயற்சி...

(Bodhidharma was a Buddhist monk who lived during the 5th/6th century and is traditionally credited as the leading patriarch and transmitter of Zen (Chinese: Chán, Sanskrit: Dhyāna) to China. He was the third son of a Tamil king of the Pallava Dynasty) http://en.wikipedia.org/wiki/Bodhidharma

போதி தர்மன்... தமிழ் சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் அதிகமாககத் தேடிக் கொண்டிருக்கும் பெயர் இன்றைக்கு இதுதான்!காரணம், சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் கதையின் நாயகன் இந்த போதி தர்மன்தான்!முதலில் போதி தர்மன் யார் என்பதை சுருக்கமாகப் பார்த்து விடுவோம்

இப்போது சாவலின்குங்க்பூவில் "பூமராங்" என்றொரு ஆயுதம் இருக்கிறதே, இது வளரி எனும் பெயரில் அகஸ்தியரால் முன்பே பயன்படுத்தப்பட்டது. உலகத் தற்காப்புக் கலைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் நமது சித்தர்கள் என்பதை எவரும் மறுக்கமுடியாது. ஆன்மீக ரகசியங்களை உணர்ந்து கொள்வதற்கு உறுதுணையாக இருந்தது சிலம்பம் எனும் தற்காப்புப் பயிற்சியே என்பதை அகஸ்தியர் தனது"கம்பு சூத்திரத்தில்" தெளிவு படக் கூறுகிறார். மேலும் எதிரியின் "கால்" வரிசையை வைத்து அவருடைய சுவாசம் இடகலையிலா? பிங்கலையிலா? என்பதை கவனித்து அந்த நிலையில் அவரைத் தாக்க வேண்டுமா? அல்லது அவரின் தாக்குதலைத் தடுக்க வேண்டுமா? என்பதையெல்லாம் தனது "கம்பு சூத்திரத்தில்" தெளிவுபடக்கூறுகிறார் அகஸ்தியர்.

இன்று உலக ராணுவப்பயிற்சிகளிலெல்லாம் "லெப்ட்,ரைட்" என்று கூறுகிறார்களே இதற்கு முன்னோடி நமது அகத்தியர் என்றால் அது மிகையாகாது. martial arts என்று சொல்லக்கூடிய எல்லாத் தற்காப்புப் பயிற்சிகளிலும் இடது காலை முன் வைத்தே பயிற்சி தொடங்கப்படுகிறது. வலது சுவாசத்தைச் செயல்படச் செய்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். சாவலின்குங்க்பூவிற்கும், சிலம்பத்திற்கும், வர்மத்திற்கும், யோகாசனத்திற்கும், ஆடல் கலையான பரதத்திற்கும் அடிப்படை ஒன்றுதான்.

குங்க்பூவிலும் முத்திரை உண்டு, வர்மத்திலும் முத்திரை உண்டு, யோகத்திலும் முத்திரை உண்டு, பரதத்திலும் முத்திரை உண்டு, குங்க்பூவில் ஆரம்ப நிலையில் செய்யக்கூடிய "sengoose stance" என்னும் நிலையே யோகத்தில் வீரபத்ராசனம். பரதத்தில் ஊர்த்துவ தாண்டவமாக செய்யக்கூடிய ஒரு நிலை குங்க்பூவில் elephant stance. இந்த நிலையே யோகத்தில் ஏகபாத ஊர்த்துவாசனம். பரதத்தை மித வேகமாக செய்தால் குங்க்பூ. அதையே மிக வேகமாக செய்தால் அது களறி, குங்க்பூவை மென்மையாக செய்தால் அது பரதம். அது சரி, இதுக்கும் போதி தர்மனுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கத் தோன்றுகிறதா?.......

சாவலின் கோவிலை நிர்மாணித்து குங்க்பூவை அறிமுகப்படுத்தியது போதிதர்மன் என்பது உலகறிந்த செய்தி. ஆனால் போதி தர்மன் குங்க்பூவின் தாய் பயிற்சியான களரியைப் பயின்றது பொதிகை மலையில் என்பது மறைக்கப்பட்ட வரலாறு. போதி தர்மன் புத்தபிக்கு என்றபோதும் அகத்தியரின் நேரடி சீடர் என்பதும் மறைக்கப்பட்ட செய்தி.

பல்லவ சாம்ராஜ்யத்தில் வைஷ்ணவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் புத்தப்பிக்குவாக அறிமுகம் செய்யப்பட்டப் பல்லவ இளவரசனைக் கொன்றுவிட வைஷ்ணவர்கள் முயற்சி செய்கிறார்கள். போகமஹரிஷியின் உதவியுடன் புத்தப்பிக்குவான இளவரசன் பொதிகைமலைக்கு அழைத்துவரப்பட்டு அகஸ்தியருக்கு அறிமுகப்படுத்தப் படுகிறான். "இறையில்லை ஆனால் இறைத்தன்மை உண்டு அதனை விழிப்புணர்வால் மட்டுமே அடையமுடியும்" எனக்கூறுகின்ற புத்தமும், "நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்" எனக்கூறுகின்ற சித்தமும், கைகோர்த்ததில் ஒரு புது சந்நியாசி உருவானார். அவரே அக்கால தமிழ்நாடு, கேரள எல்லைப்பகுதியில் உள்ள மக்களால் “லாட சன்யாசி” எனும் திருப்பெயரால் அழைக்கப்பட்ட போதிதர்மன்.

குதிரையின் லாடத்தைத் தனது மரச் செருப்பின் அடியில் பதித்திருந்த இந்த லாட சன்யாசியால் இப்போதைய தென்காசி, செங்கோட்டை, நாகர்கோவில் பகுதியில் வாழும் மனிதர்களின் மூதாதையர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதே “அப்பியும்”, "விலங்குவர்மமும்". இன்றும் இந்தப்பகுதியிலேயே வர்மத்தில் சிறந்த வர்மானிகள் இருக்கிறார்கள் என்பது கண்கூடு. லாட சன்யாசியின் நினைவாக இன்றும் இந்தப்பகுதியில் சன்யாசி எனும் பெயருடன் பலர் வாழ்ந்து வருகிறார்கள். அகத்தியரிடம் வித்தை கற்பதற்காகப் போதிதர்மன் குற்றாலமலையில் தங்கியிருந்த குகை “பரதேசிப்புடவு” என்னும் பெயரில் இன்றும் உள்ளது. குற்றாலத்தில் உள்ளவர்களுக்கேக் கூடத் தெரியாத இந்தக் குகைக்கு சீனப் புத்தப் பிக்குகள் வந்து செல்வது ஆச்சரியமான அதிசயம்.

அகத்தியரிடம் தான் கற்றுக்கொண்ட யோகபாடத்தையும், களரியையும் இணைத்து ஷாவலின் குங்க்பூவை வடிவமைத்தப் பெருமை போதிதருமனையே சாரும். பொதிகைமலையில் தங்கியிருந்த போதிதருமன் விலங்குகள் சண்டையிடும் காட்சியைப் பார்க்கிறார். உருவத்தில் பெரிய யானை, உருவத்தில் சிறிய சிறுத்தையிடம் தோற்றுப்போவதின் சூட்சுமம் புரிகிறது. ஒவ்வொரு விலங்கும் தனக்குள் இருக்கும் விஷேச சுவாசத்தைச் சப்தமாக,சக்தியாக மாற்றிக்கொள்வதின் ரகசியத்தைத் தனதுக் கூர்ந்த ஞானத்தால் உணர்ந்த போதிதர்மன், தான் கற்ற களரியில் விலங்குகளின் நிலைகளை(stance) இணைத்துக் கொள்கிறார். Monkey stance, elephant stance, tiger stance, snake stance, cat stance போன்ற பயிற்சி முறைகளே இன்றும் குங்க்பூவை மற்ற கராத்தே பயிற்சி முறைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. “சிட்டோரியன்,” “ஹயசிக்கா” போன்ற கராத்தே பயிற்சி முறைகளையும் நான் கற்றிருக்கிறேன். ஆனால் அவற்றிலெல்லாம் animal stance கிடையாது என்பதே நான் உணர்ந்த உண்மை.

ஒவ்வொரு விலங்குகளின் நிலையில் நிற்கும் போதும் மனிதனுக்குளிருக்கும் “தச வாயுக்கள்” இயக்கப்படுகிறது” . இந்த விஷேச நிலையினால் சுவாசம் கட்டுப் படுகிறது. “சலே வாதம், சலே சித்தம் நிச்சலம் நிச்சல பவதி” என்னும் பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் கூறியபடி சுவாசக் கட்டுப்பாடு மனத்தைக் கட்டுப்படுத்துகிறது. மன ஒடுக்கம் மனிதனின் ஞானப்பாதைக்கு வழி வகுக்கிறது. யோகத்தில் மேம்பட்ட சுவாசப் பயிற்சியாகக் கூறப்படும் “பதினெட்டுக் கதிகளையும்” தனது தற்காப்புப் பயிற்சியில் போதிதர்மன் பயன்படுத்தி இருக்கிறார். யோகத்தில், ஒரு குரு தனது நெருக்கமான, மேம்பட்ட சீடனுக்குக் கற்றுக்கொடுக்கும் உச்சக்கட்டப் பயிற்சியான “முத்திரைப் பயிற்சியையும்” குங்க்பூவில் இணைத்த பெருமை போதி தருமனையே சாரும்.

ஒருமுறை ஐந்தலைப்பொதிகையில் போதிதர்மன் இருந்தபோது, மூங்கில் மரத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுப் பனியின் எடை தாங்காமல் மூங்கில் மரம் வளைகிறது. ஒரு குறிப்பிட்ட நிலையில் பனியின் எடை முழுவதையும் இறக்கிவிட்டு மூங்கில் மரம் நிமிர்கிறது. கூர்ந்த மதியுடைய போதிதர்மனுக்கு இந்த நிகழ்வு ஒருப் புது யுக்தியைப் போதிக்கிறது. நினைத்த மாத்திரத்தில் உடலின் எடையைக் குறைக்க முடியுமா? என அகத்தியரை வினவுகிறான். நமது உடலில் தசவாயுக்களில் ஒன்றான “உதானனைச்” செயல்படச் செய்தால் மனித உடலின் எடையைக் காற்றை விடக் கனம் குறைந்ததாக மாற்றிக் கொள்ளமுடியும்.எனும் அறிவியல் போதிக்கப்படுவதோடு உதானனைச் செல்படுத்த யோக பாடத்தில் ஒன்றான “உட்டியானா பந்தமும்” கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இன்றும் சீன தேசத்தில் மூங்கில் மரத்தில் நின்று கொண்டே பறந்து பறந்து பயிற்சி செய்யும் “உட்டான்” பயிற்சி முறை மிகவும் பிரபலம். சிலம்பத்திலும் ஒரு வீட்டிலிருந்து,இன்னொரு வீட்டிற்குப் பரந்த நிலையில் தாவிச் செல்லும் நிலைக்கு “உடான்” எனும் பெயரே வழக்கத்தில் உள்ளது. கொக்கும், நாகமும் சண்டையிடுவதைப் போதிதர்மன் பார்த்ததின் விளைவே இன்று உலகம் போற்றும் யோக ஆடல் கலையான “தாய்ச்சி” தோன்றியதின் ரகசியம்.

இவ்வளவு பெருமை வாய்ந்த போதி தர்மன் ஏன் சீனாவுக்குச் சென்றார் என நீங்கள் வினா எழுப்புவது எனக்குப் புரிகிறது.

அக்காலத்தில் சீன தேசத்தில் “இறைவன் இல்லை, ஆனால் இறைத்தன்மை உண்டு, ஒவ்வொருவரும் தனது விழிப்புணர்வின் மூலமாக மட்டுமே இறைத்தன்மையை உணர முடியும்” எனும் புத்தரின் போதனைகள் இறைவனை வெளியில் தேடிக்கொண்டிருந்தவர்களிடையே ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது. மதகுருமார்களும், பேரரசர்களும் வெகுண்டெழுந்தார்கள். புத்த பிக்குகள் சித்திரவதைக்கு உட்பட்டதோடு ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். அதிகமான நியமங்களைக் கடை பிடித்த பிக்குகள் உடல் நிலையிலும் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டார்கள். இந்தப்பிக்குகளால் எதிரியின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. இந்தப் பிக்குகளுக்கு எதிரியின் தாக்குதலைச் சமாளித்துக்கொள்ள தற்காப்புப் பயிற்சியுடன் கூடிய உடல் சக்தியை அதிகரித்துக் கொள்ளும் பயிற்சி முறைத் தேவைப்பட்டது. ..............காலம் கனிந்தது., சிறப்பு பயிற்சி பெற்ற போதிதர்மன் என்னும் திராவிடப்பிக்கு சித்த குருமார்களின் ஆசியோடு சீன தேசம் நோக்கிப் பயணப்பட்டார்.


இன்று யோகயுவகேந்திராவின் லோகோவாக வைத்திருக்கிறோமே “யின்-யாங்”, இதுதான் அன்றைய போதிதர்மனின் கொடிச்சின்னம். இந்த யின்-யாங்கை சீனர்கள் இன்று தங்களுடையது எனக்கூறினாலும், இது நமது சித்தகுருமார்களால் வடிவமைக்கப்பட்டது என்பதே உண்மை. வலது சுவாசமான யின் னையும், இடது சுவாசமான யாங் கையும் இணைக்கத் தெரிந்தால் ஒரு மகத்தான சூட்சும, சுழுமுனைச் சக்தியைப் பெறமுடியும் என்பதே யின்-யாங் சொல்லும் தத்துவம். இன்றும் சித்தகுருமார்கள் இருக்கிற ஊர்களிலுள்ள கோவில்களில் யின்-யாங் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. குறிப்பாகத் திருவண்ணாமலைக் கோவிலில் இந்தச் சின்னம் அதிகமாகப் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.


பின்னாட்களில் நான் “அக்குபஞ்சர்” பயின்றபோது, இந்த குத்தூசி வைத்தியத்திலும் போதிதர்மன் சிறந்த ஞானத்துடன் இருந்ததை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. ஷாவலின் கோவிலுள்ள புத்தப்பிக்குகளுக்கு போதி தருமன் "குத்தூசி வைத்தியம்" செய்ததாக அக்குபஞ்சரின் மூலப் புத்தகமான "நெய்ஜிங்கில்" குறிப்புகள் காணப்படுகிறது.

போதிதர்மன் நோக்கு வர்மத்திலும் தலை சிறந்து விளங்கியிருக்கிறார். யோக சத் கிரியாக்களில் ஒன்றான "திராடகப்" பயிற்சியின் உச்சக்கட்ட நிலையே வர்மத்தில் "நோக்கு வர்மமாகப்" பேசப்படுகிறது. பிராணயாமப் பயிற்சியின் மூலமாகப் பிராண சக்தியைத் தனக்குள் தேக்கி வைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்ற ஒரு மேம்பட்ட யோகிக்கு மட்டுமே நோக்கு வர்மம் சித்தியாகும் என்பது யோக ரகசியம்.

வெளியில் போராடும் குணம் உள்ள ஒரு ரஜோ குண வாதியே பின்னாளில் மனதுடன் போராடத் தகுதியுள்ள சத்துவ குண யோகியாக மாற முடியும் என்பதே போதிதர்மன் கண்ட உண்மை. குற்றாலமலையிலுள்ளப் “பரதேசிப்புடவில்” லாடசன்யாசி இன்றும் வந்துபோகிறார். அவருடைய லாடம் பதித்த மரச் செருப்பின் தடம்தான் இதுவென எனது களறி குருமார்கள் காட்டியக் காலடித் தடங்களை இன்றும் என்னால் நினைவு கூற முடிகிறது. இன்று எனது களறி, மற்றும் வர்ம குருமார்கள் என்னுடன் இல்லை. கிருஷ்ணன் தாத்தாவையும், பாஸ்கர நாயரையும், காலம் என்னிடமிருந்து பிரித்துவிட்டது. ஆனால் “பரதேசிப் புடவில்” வைத்து அவர்கள் கற்றுத்தந்த “சித்த வித்தை” என் அடி மனதில் நீங்காமல் நிலைத்திருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பாக சமாதியடைந்த "சண்முகச்சாமி" எனும் சித்த வித்யார்த்தி இந்த பரதேசிப்புடவில் நீண்ட காலம் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாத அறிவுடன் சீனம் சென்று, ஏழாம் அறிவையும் தாண்டி, எட்ட முடியாப் புகழுடன் விளங்கும் போதிதருமன் எனும் திராவிடப் பிக்குவின் யோகப்பணி நினைந்து பெருமை கொள்கிறது -

குங்ஃபூவும் போதி தருமனும்

போதி தருமன் vs prinze ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple – kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.

3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).

4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.

5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.

6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué
யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)

8.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī (波斯國胡人 bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.

9. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.

10. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.
கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)


11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.நன்றி இணையம்,,yogashiva,wiki

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

உண்மையில் மனிதன் யார் ?

நான் காதலிக்கிறேன்... பாசமாக இருக்கிறேன்... தோழமையோடு இருக்கிறேன்... எல்லாவற்றுக்கும் மேல், சிந்திக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? உங்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது சமீபத்திய ஆய்வு.

மனிதன் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை; காதலிப்பதுமில்லை; பாசம் செலுத்துவதுமில்லை; தோழமையோடு பழகுவதுமில்லை என பொட்டில் அடிப்பதுபோல் சொல்கிறது.

1. மேம்பட்ட விலங்கு என்பதைத் தவிர மனிதனுக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் கிடையாது. சிந்திப்பது மட்டுமே மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்துக் காட்டுகிறது என்று சொல்வது, அபத்தம் என்கிறார்கள் மானிட ஆய்வாளர்கள்.

2. ஒருபோதும் நாமாக சிந்திப்பதில்லை. ஒரு புத்தகமோ, ஒரு உரையாடலோ, ஒரு இசையோ, ஒரு மவுனமோதான் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. தூண்டுவதற்கு ஏதாவது இல்லாவிட்டால் நம்மால் சிந்திக்கவே முடியாது. நம்மை சிந்திக்கத் தூண்டும் புத்தகத்தை எழுதிய மனிதனுக்குக்கூட வேறு ஏதேனும் ஒன்று தூண்டுதலாக இருந்திருக்கும்.

3. மொத்தத்தில் கூட்டு சிந்தனையே அனைத்து தத்துவங்களுக்கும் காரணம்.
இந்த இடத்தில்தான் மொழியின் சிக்கல் விஸ்வரூபம் எடுக்கிறது. உதாரணமாக, "அம்மா" என்று ஒருவரை அழைக்கும்போதே மற்றவர்கள் யாரும் "அம்மா" இல்லை என்பதை உணர்த்துகிறோம். எதிர்பாலினத்தைக் காதலிப்பதாகச் சொல்லும்போதே, மற்றவர்களை வெறுக்கிறோம் என்பதை ஏற்கிறோம். ஒருவரை நேசிக்கும்போதே, அடுத்தவரை நேசிக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறோம். மொத்தத்தில், ஒவ்வொரு வார்த்தையும் அதற்கான எதிர்மறையை சுமந்துகொண்டே அலைகிறது.

4. இப்படி புனிதமாக நாம் நினைக்கும் எல்லாம் வெறும் புடலங்காய்தான் என்றால் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான்.

5. உண்மையில் தன்னைத் தவிர யாரையும் யாரும் காதலிப்பதுமில்லை, நேசிப்பதுமில்லை. சுயநலமாக வாழ்வது மட்டுமே இயல்பானது.

6. அடுத்தவரை வீழ்த்த நாம் நடத்தும் நாடகமே வாழ்க்கை. வாழ்க்கையின் அர்த்தமே, அடுத்தவர் முன்னேறாமல் தடுப்பதுதான். மனதின் சந்தோஷமே அடுத்தவர் வீழ்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது.

7. விலங்குகளின் இயல்பே மனிதனின் இயல்பு. அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கும் போதுதான் குற்ற உணர்வுகளும் மன அவஸ்தைகளும் ஏற்படுகின்றன.

8. புனிதம் என்று காலம் காலமாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் வரும் விஷயம் காதல். உண்மையில் காதலைப் போன்ற பம்மாத்து வேறு எதுவுமே கிடையாது.

9. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஓர் ஆண் இருக்கிறான். தனக்குள் இருக்கும் பெண்ணின் பிரதிபலிப்பை வேறொரு பெண்ணிடம் சாயலாகக் காணும் ஆண், அவளைக் காதலிப்பதாக நினைக்கிறான். அவளை அடைவதன் மூலம், வேறொரு ஆணிடம் அவள் போவதைத் தடுக்கிறான். இதே தியரியை பெண்ணுக்கும் பொருத்தலாம்.

10. பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும், தனக்குள் இருக்கும் மறுபாதியை பலரிடம் காண்பதுதான். அதனால்தான், அனுபவம் கூடக் கூட, காதல் உணர்வு வளர்ந்துகொண்டே போகிறது; மாறிக்கொண்டே இருக்கிறது. மறுபாதியின் பிரதிபலிப்பைக் காணும்போதெல்லாம் உணர்ச்சிப் பெருக்கெடுக்கிறது. பரிணாம வளர்ச்சியில் இந்த உண்மையை ஆண், பெண் இருவருமே புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இப்போது காதலுக்காக வகுக்கப்பட்ட பல வார்த்தைகள் இறந்து, ஆவணக் காப்பகங்களில் செல்லரித்துப் போயிருக்கின்றன.

11. இன்று சராசரியாக ஒவ்வொருவரும் பன்னிரெண்டு, பதிமூன்று வயது முதலே மறுபாதியை எதிர்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். அது முதலே காதல் உணர்வு அரும்ப ஆரம்பித்துவிடுகிறது. அதனால்தான், இருபத்து மூன்று வயதுப் பெண்ணிடம் காதலிப்பதாக ஓர் ஆண் சொல்லும்போது அவள் சிரிக்கிறாள். அவளுக்குத் தெரியும், போகப் போக இன்னும் அதுபோன்ற பலரை தான் எதிர்கொள்ள நேரிடும் என்று!

12. ஒவ்வொருவரும் இன்று நேரில், போனில், இன்டர்நெட்டில் என்று எதிர் பாலினத்தைச் சேர்ந்த பலரிடம் தினமும் பேசுகிறார்கள். கொஞ்சுகிறார்கள். எதற்காகப் பேசுகிறோம், பழகுகிறோம் என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் தெரியாதது போல நடந்துகொள்வதில் இருக்கும் சுவாரஸ்யம், அந்த உறவை அனுமதிக்கிறது. தப்பித் தவறி யாராவது ஒருவர் வெளிப்படுத்தும்போது, திடுக்கிடுவது போல் காட்டிக்கொள்வது நமது ‘புனிதத்தைக் காப்பாற்றுகிறது.

13. உண்மையில் அன்றாடம் நாம் சந்திப்பவர்களில் நமது எதிர்காலத்துக்கு யார் உதவுவார்களோ அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்க மனம் அனுமதிக்கிறது.

14. இன்றைய தேதியில் திருமண மையங்களில் பதிவு செய்பவர்கள்கூட, இன்ன தகுதியுள்ள, இன்ன வேலை செய்யக்கூடிய வரன்தான் தேவை என்பதைத் தெளிவாகக் கேட்டுப் பெறுகிறார்கள். காதலிப்பதாக சொல்பவர்கள்கூட, சாதாரணமானவர்களைக் காதலிப்பதில்லை. தகுதியானவர்களை, தங்கள் எதிர்காலத்துக்கு பயன்படக் கூடியவரை மட்டுமே காதலிக்கிறார்கள்.

15. பரஸ்பர உதவிகளே காதலின் அடித்தளம். இந்தத் தகுதியும், பயனும் ஆறு போல ஓடிக்கொண்டிருக்கும் வரைதான் காதல் உறவும் நீடிக்கும். குட்டையைப் போல தேங்கிவிட்டால், சாக்கடையைப் போல உறவும் நாறி, பிரிவை நோக்கி நகர்ந்துவிடும்.
தோழமையும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

16.தேவை அறிந்து உதவுபவன் மட்டுமே நண்பனாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவான். உதவாதவன் விரோதி பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பான்.
இப்படி உதவுபவனும் சாகும் வரை உதவ வேண்டும். அப்போதுதான் அவன் உயிர் நண்பன்.

17. எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்போதுதான் சந்தோஷம் பிறக்கிறது. எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது துக்கம் தொண்டையை அடைக்கிறது. அப்படியானால் சந்தோஷமும் துக்கமும்கூட கற்பிதம்தானே?

18. மனது ஏற்கும் விஷயம் சரியாகவும் ஏற்க அச்சப்படும் விஷயம் தவறாகவும் அர்த்தமாகும்போது, உணர்வுகளும் பொய்யாக அல்லவா போகிறது?

19. நன்றி, விசுவாசம், நேர்மை, நியாயம்... போன்ற வார்த்தைகள் புனிதமல்ல. ஒரு செயலைச் செய்ய அச்சப்படும்போது, நம்மை நாமே சமாதானப்படுத்துவதற்காக உச்சரிக்கப்படும் வார்த்தைகள் அவை. அவ்வளவுதான்.

20. விசுவாசிகளை தலைவன்கூட நம்புவதில்லை. தலைவனைத் தவிர வேறு யாரையும் சமூகம் அங்கீகரிப்பதில்லை. இந்த விலங்கின் இயல்பை ஏற்றுக்கொண்டவன் புத்திசாலி. ஏற்கத் தயங்கி யோசிப்பவன் முட்டாள்!

21. இந்த சமூகத்தில் வேட்டையாடத் தெரிந்தவன் மட்டுமே வாழத் தகுதியானவன். வேட்டையாட அஞ்சுபவன், வேட்டையாடப்பட வேண்டியவன். நீங்கள் வேட்டையாட விரும்புகிறீர்களா? வேட்டையாடப்பட விரும்புகிறீர்களா? இந்த இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்து உங்கள் எதிர்காலம் இருக்கும். ?

சேகுவேரா வரலாற்றின் நாயகன்

http://amalathaselroy.blogspot.com/சேகுவேரா - வரலாற்றின் நாயகன் - 1

ஜனவரி1, 1959 உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. குயூபா அதிபர் பாட்டிஸ்டா தனது பணிதுறப்பு (இராஜினாமா, resignation) செய்தார். பணிதுறப்பு செய்ததும் இரவோடு இரவாக தனது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ அதிகாலை 3 மணிக்கு கேம்ப் கொலம்பியா விமானதளத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவர் அடைக்கலமாய் சேர்ந்த இடம் டொமினிக்கன் குடியரசில். அதே வேளை ஹவானா முதல் குயூபாவின் தெருக்களில் புரட்சியாளர்கள் மக்கள் வரவேற்புடன் கூடிய நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. பாட்டிஸ்டாவின் அரசில் அதிகாரம் செலுத்தியவர்களை காப்பாற்றி ஐக்கிய அமெரிக்க தேசத்தின் (USA) மயாமி, நியூ ஓர்லியன்ஸ், ஜாக்ஸன்வில் நகரங்களுக்கு கொண்டு செல்ல அன்று இரவு பல விமானங்கள் கேம்ப் கொலம்பியாவிலிருந்து பறந்துகொண்டிருந்தது. தன்னையும், தனது நெருங்கிய சகாக்களையும் காப்பாற்றுமளவு வல்லமை பொருந்திய அமெரிக்காவின் ஆதரவு தனக்கிருந்தும் பாட்டிஸ்டா எதற்காக நாட்டை விட்டு வெளியேறினார்? அவரை வெளியேற்றுமளவு வீறுகொண்ட புரட்சிக்கு காரணமென்ன? விடைகாண இன்னும் 26 வருடங்களுக்கு பிந்தைய கியூபாவுக்கு வாருங்கள்.

செப்டெம்பர் 4, 1933 கியூபாவில் 'சிப்பாய்கள் கலகம்' என்ற இராணுவ புரட்சி நடந்தது. ஜெரால்டொ மசாடோ தலைமையிலான அரசு அன்றைய இராணுவ புரட்சியில் வீழ்ந்தது. 33 வயது நிரம்பிய பாடிஸ்டா கியூபாவின் அரசு அதிகாரத்தை கைப்பற்றினார். அப்போது முதல் இராணுவத்தின் விளையாட்டுகள் அரச அதிகாரத்தில் ஆரம்பமானது. பாடிஸ்டா தன்னை இராணுவத்தலைவராக, அரசை உருவாக்கும் வல்லமையுள்ளவரா, அமெரிக்காவின் ஆதரவு பெற்றவராக உயர்த்தினார். பின்னர் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டின் அன்பிற்குரியவராக மாறிய இந்த பாடிஸ்டா யார்?

********
பாடிஸ்டா பிறந்தது கியூபாவின் ஓரியன்டே மாகாணத்தில் ஜனவரி 16, 1901. இனக்கலப்பு (வெள்ளை, இந்திய, சீன, கருப்பின) கொண்ட கரும்பு விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்த இந்த சிறுவனின் பெயர் ரூபன் புல்ஜென்சியோ பாட்டிஸ்டா சால்திவர். சிறுவயதிலேயே பொருளாதார பிரச்சனைகளை சந்தித்த பாடிஸ்டா பகலில் வேலைக்கு சென்று இரவில் பள்ளிக்கு சென்றார். புத்தகங்கள் படிப்பதே தனது பொழுதுபோக்காக கொண்டிருந்தவர் பாடிஸ்டா. 1921 இல் இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் சேர ஹவானாவுக்கு செல்ல பயணம் செய்வதற்காக கைக்கடிகாரத்தை அடகுவைத்தார். பொருளாதார பிரச்சனையான பின்னணியிலிருந்து வந்த பாடிஸ்டா 1932இல் சார்ஜெண்டாக பதவியுயர்வு பெற்று மறுவருடத்தில் ஆட்சியை கைப்பற்றுமளவு வளர்ந்தார். அதே நேரம் பாடிஸ்டாவின் அதிகாரத்தையே அப்புறப்படுத்த போகிற ஒருவர் பிறந்து ஆறு வருடங்கள் கடந்திருந்தது பாடிஸ்டாவின் கழுகுப்பார்வையில் தெரியவில்லை. அதுவும் தனது மாகாணத்தில் மிக அருகில் அவர் இருப்பதை. யார் அவர்?
Posted Image
*********
பாடிஸ்டா பிறந்த அதே ஒரியன்டே மாகாணத்தில் மயரி என்கிற நகரிய எல்லைக்குட்பட்ட ஒரு பண்ணைக் குடும்பத்தில் ஆகஸ்டு 13, 1926இல் பிறந்த அந்த குழந்தையின் பெயர் பிடல் அலெஜண்டோ காஸ்ரோ ரூஸ். காஸ்ட்ரோவின் தந்தையார் காலனியாதிக்கத்தில் ஸ்பானிய சிப்பாயாக இருந்தவர். தாயார் தந்தையாருக்கு சமையல் வேலையாக வந்த பெண். காஸ்ட்ரோவுக்கு இரு சகோதரர்களுண்டு. மிகவும் வசதியான பண்ணைக் குடும்பத்தில் பிறந்ததால் காஸ்ட்ரோவுக்கு பொருளாதார பிரச்சனைகளில்லை. அமெரிக்க டாலரை பார்க்கும் ஆர்வ மிகுதியால் அமெரிக்க அரச அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுதியதாக நம்பப்படுகிறது (உண்மை கடிதமா தெரியவில்லை, யாரவது தெரிந்தால் உறுதிபடுத்துங்கள்). அந்த சிறுவயது காஸ்ட்ரோவுக்கு தெரியாது அமெரிக்காவை அலற வைக்கிற வலிமை தன்னிடமிருப்பது. குடும்பத்தின் அரவணைப்பில் கியூபாவின் சந்தியாகு, ஹவானாவில் உயர்தர கிறிஸ்தவ பள்ளிகளில் கல்வி கற்றார். 1945இல் சட்டம் பயில துவங்கி 1950இல் ஹவானா பல்கலைப்பட்டம் வாங்கினார். 1948இல் மிர்றா டியஸ் பலர்ட் என்ற பெண்ணை மணந்தார். அவரது திருமணத்திற்கு பாடிஸ்டா கணிசமான தொகையில் பரிசனுப்பினார். இருந்தும் பாடிஸ்டாவின் ஆட்சியை அப்புறப்படுத்த இளைஞர்களை திரட்டி புரட்சிக்கு புறப்பட்டார் பிடல் காஸ்ட்ரோ. அவரை இந்த புரட்சிகர நிலைக்கு தள்ளியது எது? இதனால் கியூபாவின் சரித்திரம் மட்டுமல்ல, உலகின் பார்வையும், விடுதலைப்போரியலில் புதிய வழிமுறையும் பிறக்கபோவது அப்போது அவருக்கு தெரியுமா? அவருக்கு துணையாக புறப்பட்டு உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பிய அந்த சரித்திர மனிதன் யார்?

வரலாறு விரியும்...

ஜூன் 14, 1928 அர்ஜென்டினாவின் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்லிருந்து (Buenos Aires)400 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ரொசாரியோவிலுள்ள ஒரு வீடு. ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர் தங்களுக்கு அன்று பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டெ ல செர்னா என பெயர் சூட்டினர்.

அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. குட்டிப்பையனாக இருந்த ஏர்னெஸ்டோவுக்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். ஏர்னெஸ்டோவுக்கு ஒரு வயதிருக்கும் பொழுது ரோசாரியோவிலிருந்து அந்த பண்ணைக்கு குடிபுகுந்தார்கள் அங்கு ஏர்னெஸ்டோவுக்கு தங்கை ஒருவர் கிடைக்கப்பெற்றார். அவரது 2வது வயதில் விளையாடிக் கொண்டிருந்த நேரம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் ஆஸ்துமா நோயிருப்பது கண்டறியப்பட்டது. ஏர்னெஸ்டோவின் மூன்றாவது வயதில் அவரது குடும்பத்தினர் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்க்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கு அவருக்கு தம்பியொருவர் பிறந்தார். ஏர்னெஸ்டோவின் ஆஸ்துமா அதிகமானதால் அவரது உடல் நலனுக்கேற்ற காலநிலையுள்ள அல்டா கிரேசியா என்ற நகரில் குடிபெயர்ந்து, சுமார் 10 வருடங்கள் அங்கு வாழ்ந்தார்கள்.

நோய்வாய்ப்பட்டதால் அதிகமாக புத்தகம் படிப்பதும், சிறு வயதிலேயே அறிவுக்கருத்துக்களால் நிரம்பிய சிந்தனைவாதியாகவுமே காணப்பட்டார் ஏர்னெஸ்டோ. சிறு வயதில் ஏர்னெஸ்டோ தனது தாயாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். தாயார் அவரை சுயமாக சிந்தித்து வளரும் தன்மை மிக்கவராக வளரத் தூண்டினார். விடுமுறையில் குடும்பம் சந்தோசமாக பொழுதை கழித்துவந்தனர். தந்தையார் வைத்திருந்த படப்பிடிப்பு கருவியால் ஏர்னெஸ்டோவை படம் பிடிப்பது வாடிக்கை. அவரது 9வது வயதில் ஸ்பெயினில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது. அவரது மாமா அர்ஜெண்டினாவில் ஒரு பத்திரிக்கைக்கு யுத்தச்செய்திகள் சேகரித்து வந்தார். அதனால் சிறுவயதிலேயே யுத்தம் சம்பந்தமான நேரடி செய்திகளை மாமாவிடமிருந்து கேட்டு தெரிந்துகொண்டார் ஏர்னெஸ்டோ. அது தான் ஏர்னெஸ்டோவின் அரசியல் பாடத்தின் துவக்கம். அங்கிருந்து துவங்கிய இந்த அலை அவரை சமூகத்தின் அவலங்களை தேட வைத்தது.

அர்ஜென்டினாவில் ஏர்னெஸ்டோ வளர்ந்து கொண்டிருக்கையில், கியூபாவில், பாடிஸ்டா அதிகாரத்தை கைப்பற்றியதன் பின் அமெரிக்க வல்லரசு பாடிஸ்டாவின் எதிராளிகளை சரிகட்டி அமெரிக்க நிறுவனங்களை அங்கே நிறுவ ஆரம்பித்தது. இடைக்கால அதிபராக இருந்த ரமோன் கிரயு சன் மார்டினுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு, புதிய அதிபராக கார்லோஸ் மெண்டியெட்டா அமர்த்தபட்டார். அமெரிக்கா இந்த புதிய அரசை உடனடியாக அங்கீகரித்தது. மே 29, 1934 குயான்றனாமோ பே (Guantnamo Bay) தீவை பயன்படுத்த உடன்படிக்கையை கியூபாவுடன் எற்படுத்தியது அமெரிக்கா. அன்று முதல் இன்று வரை அந்த தீவு அமெரிக்காவின் வசம்.
தொடர்ந்து வந்த அமெரிக்க ஆதரவு பாடிஸ்டாவை பலம் மிக்கவராக மாற்றியது. பாடிஸ்டா பல நிழல் உலக வர்த்தக பிரமுகர்களுடன் தொடர்பை வலுப்படுத்தினார். இந்த தொடர்புகள் வழியாக பல சூதாட்ட விடுதிகள் ஹவானாவில் திறக்கப்பட்டது. அமெரிக்க நிறுவனங்களுக்கு பாடிஸ்டா அதிகாரத்திலுள்ள நண்பனாக இருந்தார். அரசு நிர்வாகம் லஞ்சமும், ஊழலுமாக மக்களுக்கெதிராக நடந்துகொண்டிருந்தது. மாணவர்களும், பொதுவுடமையாளர்களும் எதிர்ப்புகளை காட்டிய வண்ணமிருந்தனர். பல எதிர்ப்பாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பாடிஸ்டாவை கொல்லவும் முயற்சிகள் நடந்தன. மாணவர் தலைவர் ஒருவர் எழுதிய கடிதத்தில் பாடிஸ்டா பற்றி "புரட்சி என ஒன்று நடந்தால், தான் தப்பிச் செல்ல விமானம் ஒன்றை தயாராக வைத்திருக்கும் குணமுடையவர்" என்றார். கியூபாவில் அதிபருக்கான தேர்தலும் வந்தது.

அர்ஜென்டினாவில் 1930ல் ஏற்பட்ட புரட்சியின் பின்விளைவாக பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. அர்ஜென்டினாவிலிருந்து மாட்டிறைச்சி, கோதுமை முதலியவை ஐரோப்பியாவிற்கு ஏற்றுமதியை மையமாக உற்பத்தி நடைபெற்றது. உள்நாட்டில் மக்களுக்கு தேவையான பொருட்கள் கடுமையாக விலையேறியது. பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தங்களது வாழ்விற்காக வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். புயெனெஸ் எயர்ஸ்ல் மட்டும் சுமார் 1.4 மில்லியன் பேர் கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தார்கள். ஏழைகள், நடுத்தர வர்க்கம், பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்க துவங்கியது. பாதிப்புக்குள்ளான மக்கள் சமூக போராட்டங்கள், கருத்தியல் அடிப்படையில் அணிசேர்வது என அல்டா கிரேசியாவின் காலச்சாரச் சூழலும் மாறியது. இதன் தாக்கம் ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. அவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு மாற்றம் அடிக்கடி நடந்தது. சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு இடம் விட்டு இடம் மாறுவது என்பது பழக்கமாகியது.

அவர்கள் வசித்த வீடு கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரமான இடம். உடல்நிலைக்கு ஏற்ற சுத்தமான, இனிமையான காலநிலையுள்ள சிறிய நகரம் தான் அல்டா கிரேசியா. ஏர்னெஸ்டோவின் தந்தையார் அந்த நகரின் பணக்கார, மத்தியதர குடும்பத்தினர்களுக்கு வீடு கட்டும் வேலை செய்துகொண்டிருந்தார். ஏர்னெஸ்டோவின் தந்தையார் மிகவும் நட்பாகவும் பொறுப்புடனும் பழகக்கூடியவர். கடினமான வேலை செய்துகொண்டிருந்தாலும் அவர் குழந்தைகளை பாசமுடன் கவனித்தார். ஏர்னெஸ்டோவுடன் நீச்சல், கோல்ப்(golf) விளையாடுதல் என இனிமையாக தனது ஓய்வு நேரங்களை செலவிட்டார். ஏர்னெஸ்டோவுக்கு தனது செல்ல நாயின் முதுகில் அமர்ந்து விளையாடுவது, உடன்பிறந்தவர்களுடன் விளையாடுவது என குழந்தைப்பருவம் இனிதாக இருந்தது. தொடர்ந்த மருத்துவம், இதமான சூழல், அன்னையின் அரவணைப்பு அனைத்துமாக ஏர்னஸ்டோவின் குழந்தைப்பருவம் நகர்ந்தது. மற்ற எல்லா குழந்தைகளையும் விட தாயின் அரவணைப்பு ஏர்னெஸ்டோவுக்கு அதிகமாகவே அமைந்தது. அன்னையின் அன்பான பார்வையில் விளையாட்டும், கரங்களை பிடித்தபடியே நடப்பது வருவது என இருவருக்குமிடையே பாசப்பிணைப்பு அதிகமாக இருந்தது.

புத்தகம் படிபதில் அடங்காத அறிவுப்பசியுடன் வளர்ந்தார் ஏர்னஸ்டோ. ஆஸ்துமாவின் அழுத்ததினால் 9 வயது வரை தாயின் கவனிப்பில் வீட்டிலேயே படித்தார் ஏர்னெஸ்டோ. 2 வது மற்றும் 3வது வகுப்புகள் மட்டுமே முறையாக பள்ளிக்கூடத்தில் கற்றார். அவரது உடன்பிறந்தவர்கள் 5வது, 6வது வகுப்பறை பாடங்களை எழுதிக்கொண்டுவந்து கொடுக்க வீட்டிலிருந்தவாறு படித்துவந்தார். ஆஸ்துமாவை எதிர்கொள்ள மனபலம் அவசியம் என்பதையுணர்ந்த அவரது பெற்றோர் அதற்கான உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தனர். மலையேறுதல், ஓட்டப்பயிற்சி, நீச்சல், குதிரையேற்றம் என பயிற்சிகள் வழியாக ஒரு அசாதாரணமான மன உறுதியை சிறுவயதிலேயே பெற்றிருந்தார். உடல் பலவீனத்தை எதிர்கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் அவரை ஒரு ஆளுமை மிக்கவராக வளர்த்தியது. சிறு வயதிலேயே பல தரப்பட்ட மக்களிடம் குறிப்பாக தன்னையொத்த வயதினரிடம் பழகியதில் ஏர்னெஸ்டோவுக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். கட்டிடவேலை செய்த உதவியாட்களின் பிள்ளைகள் முதல் நடுத்தர வீட்டு பிள்ளைகள் வரை அனைவரிடமும் தொடர்புகள் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. அவர்களிடம் பழகுவதோ நட்புடன் விளையாடுவதோ அவருக்கு கடினமாக இல்லை. சிறுவயதிலேயே அவரிடம் தலைமைக்கான ஆளுமை இருந்தது. அல்டா கிரேசியாவின் சிறுவயது நண்பர்கள் மத்தியில் ஏர்னெஸ்டோ தனித்தன்மையுடனே இருந்தார்.

லத்தீன் அமெரிக்காவில் புகழ் வாய்ந்த விடுதலைக் கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதைகள், ஸ்பானிய கவிதைகள், கதைகள் என பலவிதமான புத்தகங்கள் படித்தார். ஸ்பெயினிலிருந்து மாமா அனுப்பிய செய்தி ஏடுகள், புத்தகங்களில் யுத்தச் செய்திகளை படிப்பது சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு விருப்பம். ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம் சிறுவயது ஏர்னெஸ்டோவிற்குள் மாற்றங்களை உருவாக்கியது. மேட்ரிட் (Madrid), டெருயெல்(Teruel), குயுரென்சியா(Querencia) நகரங்களின் வீரம் செறிந்த இராணுவ போராட்டங்கள் அவரை வெகுவாக கவர்ந்தது. அவரது அறையில் ஸ்பெயின் நாட்டு வரைபடம் வைத்து அதில் படைகளை நகர்த்தி விளையாடினார். வீட்டு தோட்டத்தில் யுத்தகளங்கள், பதுங்குகுழிகள் மலைகள் போல அமைத்து வைத்திருந்தார் சிறுவயது ஏர்னெஸ்டோ.
~o00o~
கியூபாவில் நடந்த இராணுவ புரட்சிக்கு பின்னர் புதிய அரசியல் சட்டம் உருவானது. புதிய அரசியல் அமைப்பு சட்டம் குடிமக்களுக்கான சமூக உரிமைகள், வேலைவாய்ப்பு, சம ஊதியம், சமூக பாதுகாப்பு திட்டங்கள் என நல்ல பல திட்டங்களை உள்ளடக்கியிருந்தது. தனிநபர்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் கட்டுப்பாட்டில் குவித்து வைத்திருந்த பெரிய பண்ணை நிலங்களை சட்டத்துக்கு புறம்பானதாக்கியது. வெளிநாட்டு நிறுவனங்களின் தலையீட்டை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, நிலசீர்திருத்தத்தை வலியுறுத்தியது புதிய அரசியல் சட்டம். அதன் பின்னர் 1940ல் நடந்த தேர்தலில் பாடிஸ்டா அதிபராக போட்டியிட்டார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அந்த தேர்தலில் தனது பழைய எதிரி சன் மார்டினை தோற்கடித்து கியூபவின் 14வது அதிபராக பதவியேற்றார் பாடிஸ்டா. பாடிஸ்டாவின் அரசு 1943 இல் கம்யூனிஸ்டு கட்சியை சட்டப்படி செயல்பட அனுமதித்தது. அமெரிக்காவுடன் வியாபார தொடர்புகள் அதிகரித்தன. யுத்தவரி என்ற பெயரில் கியூபா மக்கள் மீது கடும் வரிச்சுமை உருவானது. இதன் பிரதிபலிப்பு அடுத்து 1944இல் நடந்த தேர்தலில் சன் மார்டின் வெற்றிபெற்று பாடிஸ்டாவை பதவியிலிருந்து இறக்கினார். வெற்றிபெற்று வந்த புதிய அதிபர் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்த்தார். பதவிக்கு வந்ததும் அரசியல் சட்டத்தை முறையாக செயல்படுத்த துவங்கியது. அதனால் அமெரிக்காவின் ஆதிக்கம் கியூபாவில் தளர துவங்கியது. அமெரிக்காவின் நிழல் விளையாட்டுக்கள் மீண்டும் கியூபாவில் ஆரம்பமானது.


(வரலாறு வளரும்)

குயூபாவில் சன் மார்டின் அதிபராக பதவியேற்ற போது பிடல் காஸ்ட்ரோ சேசு சபையினர் நடத்திய உயர்நிலை பள்ளியில் கல்வி கற்க சேர்ந்தார். 1944 ல் உயர்நிலை பள்ளி அளவிலான குயூபாவின் சிறந்த விளையாட்டு வீரராக காஸ்ட்ரோ தேர்வு செய்யப்பட்டார். தன்னம்பிக்கையும், இலட்சிய உறுதியும் மிக்க காஸ்ட்ரோ பள்ளிப்படிப்பை முடித்து 1945ல் ஹவானா பல்கலைகழகத்தில் பயில துவங்கினார். மாணவப் பருவத்திலேயே அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ ஏப்ரல் 8, 1948ல் கொலம்பியா நாட்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சியில் கலந்துகொண்டார்.

குயூபாவில் சன் மார்டின் ஆட்சியின் முதற் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் அமைந்தாலும் பின்னர் நிழல் உலக தாதாக்களின் குழப்பங்கள் அதிகமாகவும் இருந்தது. இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்ட நிழல் உலகம் சார்ந்தவர்கள் ஹவானாவில் நேசனல் விடுதியில் இரகசிய கூட்டம் நடத்தி படுகொலைகளுக்கு திட்டமிட்டது வாடிக்கையானது. தொடர்ந்து நடந்த தேர்தலில் 1948 அக்டோபர் மாதம் கார்லோஸ் ப்ரியோ சொக்கரஸ் வெற்றி பெற்று அதிபரானார். பாடிஸ்டா லஸ் வில்லாஸ் பகுதியிலிருந்து குயூபாவின் செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

******

யுத்தத்தின் காரணமாக ஸ்பெயினிலிருந்து மருத்துவர் ஜுயன் கொன்சலெஸ் அகுலர் குடும்பத்தினர் 3 குழந்தைகளுடன் அர்ஜெண்டினாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் ஏர்னெஸ்டோவின் அண்டை வீட்டில் குடியிருந்தனர். ஏர்னெஸ்டோ வீட்டிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பள்ளியில் ஏர்னெஸ்டோவும் அந்த 3 குழந்தைகளும் சேர்ந்து படித்து வந்தனர். இரு குடும்பத்தினருக்குமிடையே நெருக்கமான உறவு இருந்தது. மருத்துவர் ஜுயனும் அவரது குடும்பத்தினரும் பகிர்ந்துகொண்ட ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டு யுத்த அனுபவங்கள் ஏர்னெஸ்டோவுக்குள் விடுதலைக்கான விதையை சிறுவயதில் விதைத்திருந்தது.

பெற்றோர் அரசியல் சூழல் பற்றிய கருத்துக்களை இளம் ஏர்னெஸ்டோவுடன் பகிர்ந்து வந்தனர். ஏர்னெஸ்டோவை பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் இளையோர் அமைப்பில் உறுப்பினராக பதிவு செய்தனர் அவரது பெற்றோர். மனான அசியன் அர்ஜெண்டினா என்ற இந்த இயக்கத்தின் கிளையை அந்த பகுதியில் நிறுவியது ஏர்னெஸ்டோவின் தந்தையார். அப்போது ஏர்னெஸ்டோவுக்கு வயது பதினொன்று. அர்ஜெண்டினாவில் நாஜிகள் ஊடுருவலை தடுக்க கூட்டங்கள், நிதிசேகரிப்பு என பலவிதமான நடவடிக்கைகளில் ஏர்னெஸ்டோ பங்கெடுத்தார். அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் பிரதிபலிப்பு ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. தனது 16 வயதில் லத்தீன் அமெரிக்கவில் பலரது எண்ணங்களில் புரட்சியை தூண்டிய மாபெரும் மக்கல் கவிஞன் பாப்லோ நெருடாவின் கவிதைகளால் கவரப்பட்டார் ஏர்னெஸ்டோ. இளம் வயதிலேயே கார்ல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" படித்திருந்தார் ஏர்னெஸ்டோ.

The Me Bird by Pablo Neruda

I am the Pablo Bird,
bird of a single feather,
a flier in the clear shadow
and obscure clarity,
my wings are unseen,
my ears resound
when I walk among the trees
or beneath the tombstones
like an unlucky umbrella
or a naked sword,
stretched like a bow
or round like a grape,
I fly on and on not knowing,
wounded in the dark night,
who is waiting for me,
who does not want my song,
who desires my death,
who will not know I'm arriving
and will not come to subdue me,
to bleed me, to twist me,
or to kiss my clothes,
torn by the shrieking wind.

That's why I come and go,
fly and don't fly but sing:
I am the furious bird
of the calm storm.


ஏர்னெஸ்டோவின் தந்தையாருக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டது. ஒருமுறை அந்த பெண்மணியை வீட்டிற்கு அழைத்து வந்து அறிமுகம் செய்தார் அவர். ஏர்னெஸ்டோவையும் அவரது தாயாரையும் எரிச்சலடைய வைத்தது அந்த நிகழ்வு. அது விசயமாக ஏர்னெஸ்டோ மிகவும் கோபமடைந்திருந்தார். அந்த பெண்ணின் பெயரை கேட்டாலே அவர் கோபமடந்தார். இந்த நிகழ்விற்கு பின்னர் ஏர்னெஸ்டோ அவரது தாயாருடன் மேலும் நெருக்கமானார்.

ஆஸ்துமாவின் தாக்கத்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களாலும் ஏர்னெஸ்டோ ஒரு சராசரி மாணவனாகவே திகழ்ந்தார். மனிதவியல் மற்றும் தத்துவ பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றார் ஏர்னெஸ்டோ. ராகத்திற்கும் தாளத்திற்குமுள்ள வேறுபாடு தெரியாதவராகவே வளர்ந்தார். நடனமாடவோ இசைக்கருவிகளை மீட்டவோ தெரியாதவராக இருந்தார்.

சிறுவயதிலேயே பரந்த மனதுடன் அவர் வாழ்ந்த கொர்டொபா பகுதி வாழ் ஏழைகளுக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளியை அகற்றவும், அடக்குமுறைகளையும் அநீதியையும் எதிர்க்க கடுமையாக முயன்றார். லத்தீன் அமெரிக்காவின் பிற பகுதிகளைப்போல அங்கு புறக்கணிக்கப்பட்டவர்களும், இடம்பெயர்ந்தோரும் தகரத்தாலும், அட்டைபெட்டிகளாலும் அடைத்த வீட்டில் வாழ்ந்தனர். கால்களை இழந்த ஒருவர் அந்த பகுதியில் நாய்கள் இழுக்கிற வண்டியில் பொருட்களை வைத்து விற்று பிழைத்து வந்தார். அவரது வீட்டிலிருந்து வீதிக்கு வரும் வழியில் ஒரு பள்ளத்தில் வண்டியை இழுக்க நாய்கள் சிரமப்படுவது வழக்கம். அந்த மனிதர் அவ்வேளைகளில் நாய்களை அடித்து துன்புறுத்தி நடைபாதையில் வண்டியை செலுத்துவார், இது அந்த பகுதி மக்களை எரிச்சலடையை செய்த அன்றாட நிகழ்வு. ஒரு நாள், அந்த பகுதி குழந்தைகள் அவர் மீது கற்களை வீசினார்கள். ஏர்னெஸ்டோவும் அவரது நண்பரும் அந்த காட்சியை கண்டு, குழந்தைகளிடம் தாக்குதலை நிறுத்த அறிவுறுத்தினர். ஆனால் நன்றி சொல்வதற்கு பதிலாக அந்த மனிதர் ஏர்னெஸ்டோவை வசைபாடி அவர் மீது பணக்காரர்கள் மீதுள்ள வெறுப்பை உமிழ்ந்தார். இந்த நிகழ்வின் வழி பணக்காரர்கள் ஏழைகள் மீது கொள்ளும் இரக்கம் விடுதலையாகாது என்பதை உணர்ந்தார்.

பொறியியல் படிக்க திட்டமிட்டதை மாற்றி 1947 ல் புயெனெஸ் எயர்ஸ் பல்கலைகழகத்தில் மருத்துவ துறையில், தொழுநோய் பற்றி சிறப்பு பாடமாக படித்தார் ஏர்னெஸ்டோ. கல்லூரியில் செயல்பட்ட புரட்சிகர மாணவர் இயக்கத்தில் ஏர்னெஸ்டோ பங்கெடுக்கவில்லை. படித்தவாறு ஒரு மருத்துவமனையில் பகுதி நேர வேலையும் செய்துவந்தார். கல்லூரியில் படித்து வந்த காலங்களில் தனக்கு பிடித்தமான ரக்பி விளையாட்டு விளையாடுவதில் அதிகமான நேரத்தை செலவிட்டார் ஏர்னெஸ்டோ. ரக்பி விளையாட்டு அவருக்கு உடல் வலுவையும் திட்டமிடும் கலையையும் உருவாக்கியது. இருந்தாலும் ஆஸ்துமா கொடுத்த தொந்தரவால் விளையாட்டு களத்திலிருந்து அடிக்கடி வெளியேறி தனக்குத்தானே ஊசி மருந்தை செலுத்துவது ஏர்னெஸ்டோவுக்கு பழக்கம். விடுமுறை நாட்களில் ஏர்னெஸ்டோ மோட்டார் சைக்கிள் பயணங்கள் போவது வழக்கம்.

ஏர்னெஸ்டோவின் நண்பர் ஆல்பர்டோ கிரானடோ, அர்ஜெண்டினா, கொர்டொபாவில் மருந்துக்கடை வைத்திருந்தார். இருவருமாக ஒரு விடுமுறைநாளில் சந்தித்தபோது லத்தீன் அமெரிக்கா முதல் வட அமெரிக்கா வரையிலான மோட்டார் சைக்கிள் பயணத்தை திட்டமிட்டனர். பயண திட்டத்தின் படி ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து 1 வருட விடுப்பில் டிசம்பர் திங்கள் 1951 இல் பொதெரோசாII என பெயரிடபட்ட நோர்டன் 500சிசி மோட்டர் சைக்கிளில் பயணம் துவங்கினர்.

(வரலாறு வளரும்

குயூபாவின் முக்கிய நகரமான ஹவானாவில் படிப்பை முடித்த பின்னர் பிடல் காஸ்ட்ரோ வழக்கறிஞராக பணியாற்ற துவங்கினார். தங்களது வழக்குகளுக்கான கூலியை கொடுக்க முடியாத ஏழைகளுக்காகவே காஸ்ட்ரோ வாதாடினார். இதனால் காஸ்ட்ரோவுக்கு அடிக்கடி பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. வழக்குகளுக்காக வந்த ஏழைகளிடமிருந்து வாழ்க்கை போராட்டங்களை நேரடியாகவே பிடல் அறிந்துகொண்டார். ஏழைகள் வறுமையில், நோயின் கோரப்பிடியில் தவிப்பதும், செல்வந்தர்கள் ஆடம்பரங்களும், கேளிக்கைகளும் நிரம்பிய மயக்கத்தில் வாழ்வதையும் காஸ்ட்ரோ புரிந்துகொண்டார். சிலருக்கு மட்டுமே பயன்படுகிற விதமாக அரசின் திட்டங்களும், அமைப்புகளும் செயல்படுவதை அவர் உணர்ந்தார். குயூபாவில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை பற்றிய அறிவை காஸ்ட்ரோவுக்கு வழக்கறிஞரான அனுபவம் வழங்கியது.

எல்லா குயூபா மக்களையும் போல அமெரிக்க வர்த்தகர்களின் பொருளாதார ஆதிக்கத்தையும் அதன் விளைவாக குயூபா அடிமையாவதையும் கண்ட காஸ்ட்ரோ வேதனையடைந்தார். இந்த அனுபவங்கள் காஸ்ட்ரோவை அரசியலில் ஈடுபட வைத்தது. அரசியல் அறிவு வளர்ந்த வேளையில் மக்களுக்காக பணிசெய்ய தீர்மானித்த காஸ்ட்ரோவுக்கு குயூபா மக்கள் கட்சியின் செயல்பாடு கவர்ந்தது.

காஸ்ட்ரோ 1947 ல் குயூபா மக்கள் கட்சியில் இணைந்தார். ஊழல், அநீதி, வறுமை, வேலையின்மை மற்றும் குறைந்த கூலிக்கு எதிராக குயூபா மக்கள் கட்சியினர் போராடி வந்தனர். காஸ்ட்ரோ அதிகமான நேரத்தை கட்சிப்பணியில் மக்கள் பிரச்சனைகளுக்காக செலவிட்டார். அரசாங்க அமைச்சர்கள் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்று குயூபாவை அடிமையாக்குவதாக குயூபா மக்கள் கட்சி குற்றம் சாட்டியது. காஸ்ட்ரோவின் ஈடுபாடு குயூபா மக்கள் கட்சியில் மேலும் பொறுப்புகளில் வளர்த்தெடுத்தது. மிக அருமையான பேச்சாளரான காஸ்ட்ரோவுக்கு இளைஞர்களை கவர்வது எளிதான செயலாக இருந்தது. காஸ்ட்ரோவால் கவரப்பட்டு இளைய வயதினர் குயூபா மக்கள் கட்சியில் அதிகமாக இணைந்தனர்.

1952ல் குயூபாவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இளமையும் செயல் திறனும் கொண்ட காஸ்ட்ரோ வேட்பாளராக போட்டியிட்டார். அந்த வேளையில் குயூபா மக்கள் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே மிகவும் வலுவாக இருந்தது. தேர்தலில் குயூபா மக்கள் கட்சி வெற்றி பெறும் நிலை இருந்தது. இந்த சூழலில் தேர்தலை நடத்த விடாமல் இராணுவத்தின் துணையுடன் பாடிஸ்டா நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றினார். இந்த நடவடிக்கையானது குயூபா மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தொடர் நிகழ்வுகள் குயூபாவின் வரலாற்றை மாற்றியமைத்தது.



-o0o00o000o00o0o-



அர்ஜெண்டினாவில் 4, ஜனவரி 1952ல் புத்தாண்டு கொண்டாட்டம் ஓய்ந்த வேளை புயனெஸ் எயர்ஸ்லிருந்து ல பேதரோஸ் என்ற 500 சி.சி நார்ட்டன் (Norton 500 cc motorcycle named La Poderosa II ("The Mighty One, the Second")) வகை மோட்டார் வாகனத்தில் ஏர்னெஸ்டோவும் அவரது நண்பர் ஆல்பர்டோ கிரனேடோவும் தங்களது நீண்ட பயணத்தை துவங்கினர்.

ஏர்னெஸ்டோவைப் போல ஆல்பர்டோவும் வாலிப வேகமும், தேடலும் நிறைந்தவர். தென் அமெரிக்காவின் சிலி, பெரு, கொலம்பியா, வெனெசுவேலா நாடுகளுக்கும் அதன் பின்னர் வட அமெரிக்காவிற்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து ஒரு வருடம் விடுமுறை பெற்றிருந்தார். இருவரும் முறையான திட்டமிடல் இல்லாமல், மிகவும் குறுகிய கால அவசரத்தில் பயணத்தை துவக்கினார்கள். பயணம் துவங்கும் முன்னர் நண்பர்களும் குடும்பத்தினரும் கலந்துகொள்ள விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். விருந்து முடிந்து ஏர்னெஸ்டோவும், ஆல்பர்ட்டோவும் புறப்பட்ட வேளையில், ஏர்னெஸ்டோவின் அன்னை சிசிலி அரவணைத்து தழுவி விடை கொடுத்தார். தாயும் மகனும் பிரியும் வேளை பாசத்தின் வெளிப்பாடாய் இருவரின் கண்களும் கலங்கியது. விடை பேற்று வீறிட்டு கிழம்பி காட்சியிலிருந்து மறையும் புள்ளியான வண்டியை பார்க்கையில் ஏர்னெஸ்டோவின் தாயார் மனம் பிரிவின் முதல் வலியை உணர துவங்கியது. எப்போதும் அருகே வைத்து கவனமாக தன்னம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட தனது அருமை மகன் தொலைதூர பயணம் செல்கையில் எழும் வெறுமை, நிச்சயமற்ற தன்மை அன்னையின் மனதை கனமாக்கியது. ஏர்னெஸ்டோ தனக்கு அருகேயே இருந்து ஆதரவாக இருந்த நேரங்களின் அருமை அன்னனயை வாட்டியது. இணைந்திருந்த வேளைகளின் சிறப்பு பிரிவில் தெரியும் மானிட பாசத்தின் இயல்பு ஏர்னெஸ்டோவின் அன்னைக்கும் ஏற்பட்டது.

ஏர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி வேகமாக மனிதர்கள், மரங்கள், புல்வெளிகள், அழுத்தமான காற்று என அனனத்தையும் கடந்து காற்றில் பறக்கும் புரவியாக புயனெஸ் ஏர்ஸ் நகரை விட்டு வெளியேறியது. கடந்து செல்லும் காட்சிகளுக்கு ஏற்ப கவிதை, சிந்தனை என ஏர்னெஸ்டோவின் மனம் சிறகடித்து பறந்துகொண்டே இருந்தது. இயற்கை அழகை அள்ளி தனக்குள் மறைத்து வைத்திருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலும், காதோரம் கிழித்து செல்லும் காற்றும் ஏனெஸ்டோவை கவர்ந்தது. பல மணிநேரங்களில் சந்திக்க இருக்கும் தனது மனம் கவர்ந்த காதலியை நினைத்தபடியே ஏர்னெஸ்டோ காற்றில் மிதந்தபடி பயணம் போகிறார்.

இந்த இளம் வாலிபனின் மனதை கொள்ளைகொண்ட நாயகி யார்?

ஏர்னெஸ்டோவின் காதலி!

தனக்காக காத்திருப்பதாக உறுதியளித்த காதலி சிசினாவை விட்டு பயணம் செய்த ஏர்னெஸ்டோவின் வண்டி கரடு முரடான சாலையில், காற்றை கிழித்து வேகமாக சென்றது. காதலியை பிரிந்த ஏர்னெஸ்டோவின் மனதில் தான் எத்தனை அழகிய பசுமையான எண்ணங்கள். நினைவு அருவி சுழலில் சிக்கி தவிக்கும் மனது பழைய நிகழ்வுகளை சுழல வைத்தது. அழகிய அந்திப்பொழுதில் சிசினாவை சந்தித்த முதல் வேளை ஏர்னெஸ்டோவின் மனதில் பசுமையாய் படர்ந்தது.

மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டு பிசானி கிளினிக்ல் வேலை பார்த்து கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. ரக்பி விளையாடுவதும் ஜார்ஜ் மாமாவிடம் க்ளைடர் பாடங்கள் கற்பதுமாக இருந்தார். அர்ஜென்டினா முழுவதும் மோட்டார் பயணம் செய்து வந்திருந்ததால் உலகை சுற்றிப்பார்க்க ஆசை அலைமோதிய காலகட்டமது. அடுத்த பயணத்திற்கான திட்டங்களை தயாரித்துக்கொண்டே இருந்த அந்த அக்டோபர் மாத கடைசியில் ஏர்னெஸ்டோவின் வாழ்வில் புதிய இனிய அனுபவம் வந்தது.

கொன்சலஸ் அகுலியார் அவர்களுடைய மகள் கார்மன் திருமணத்திற்காக ஏர்னெஸ்டோ குடும்பத்தினர் கொரடோப பயணம் செய்தனர். அந்த திருமண விருந்தில் மரியா டெல் கார்மன் "சிசினா" பெரேரோ என்ற 16 வயது மங்கையை கண்டார். கொரடோபவின் மிகவும் வசதி படைத்த வீட்டு மங்கையான சிசினா அழகாய் இருந்தார். சிறுவயதில் ஏர்னெஸ்டோவும் சிசினாவும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தாலும் நீண்ட நாட்களின் பின்னர் சந்தித்தபோது விழிகள் வீழ்ந்து, இதயங்களில் இறகுகள் முளைத்தது. இருவரின் பார்வையில் இதயங்கள் இடமாறிய வேளையில் "ஏர்னெஸ்டோவின் மீது மின்னல் பாய்ந்த உணர்வு" ஏற்பட்டதாக இந்த நிகழ்வை கண்ட பெப்பெ அகுல்யர் விவரிக்கிறார். முதல் முறையாக காதல் வயப்பட்டார் ஏர்னெஸ்டோ.

ஏர்னெஸ்டோவால் சிசினாவும் கவரப்பட்டார். அவரது அழகிய உருவமும், கலகலப்பும் வெகுளியான பேச்சும், கள்ளமில்லா மனதும் சிசினாவை கவர்ந்தது. "அவரது அழுக்கான கசங்கிய ஆடைகள் சில வேளைகளில் பிடிக்காவிட்டாலும் எங்களை சிரிக்க வைத்தன... அதை ரசித்து ஏர்னெஸ்டோவும் சிரித்து மகிழ்ந்தார்" என சிசினாவின் வார்த்தைகளில் அவர்களது நெருக்கம் வெளிப்பட்டது. சிசினா முதிர்ச்சியடையாதவராக இருந்தாலும் கற்பனை வளமும் புத்தி கூர்மையும் மிக்க பெண்ணாக காணப்பட்டார். சிசினா தான் தனது வாழ்வில் இணையப்போகிற பெண் என ஏர்னெஸ்டோ நம்பினார். ஏர்னெஸ்டோ காதலில் தீவிரமானார்.

தேவதை கதைகளில் வருகிற காதல் போன்றது ஏர்னெச்டோவின் காதல். சிசினா அர்ஜெண்டினாவில் மிகவும் வளம் கொழித்த செல்வந்தரின் மகள். அவர்களுக்கென இருந்த சுண்ணாம்பு சுரங்கம், அரண்மனை போன்ற வீடு, மிகப்பெரிய தோட்டம் என செழிப்புற வாழ்ந்தவர். ஏர்னெஸ்டோ சாதாரணமான குடும்பத்தை சார்ந்தவர். சிசினாவும் அவரது பெற்றோரும் ஏர்னெஸ்டோ குடியிருந்த பழைய வீட்டிற்கு அருகாமையில் குடியிருந்தனர். கொரடொபாவிற்கு வெளியே அவர்களுக்கு சொந்தமான "மலகுயெனோ" என்ற மாளிகையில் கோடைவிடுமுறையில் கழித்த வேளை ஏர்னெஸ்டோ மோட்டார் பயணத்தில் சிசினாவை பார்க்க சென்றிருந்தார்.

ஏழு நாட்களும் அவர் தங்கியிருந்த அந்த அழகு மாளிகை 2000 ஏக்கர் பரப்பளவுடைய நிலத்தில் அமைந்திருந்தது. அரேபிய குதிரைகள், 2 போலோ விளையாட்டு மைதானம், சுண்ணாம்பு சுரங்க்க தொழிலாளர் குடியிருப்பு என பரந்து விரிந்த அந்த இடத்தில், எழிலாய் நிமிர்ந்து நின்றது அழகிய அரண்மனை போன்ற அந்த மாளிகை. ஞாயிற்றுக் கிழமைகளில் சிசினாவின் குடும்பம் அருகிலுள்ள தேவாலயத்தில் சென்று வழிபடுவது வழக்கம். தேவாலயத்தில் அவர்கள் குடும்பம் மற்ற தொழிலாளர்களிடம் சேராது தனியாக ஜெபங்களில் பங்கு பெற தனி வாசல், அமர்ந்து கொள்ள தனியறை என ராஜகுடும்பத்தின் அனைத்து வகை ஆடம்பரமும் நிறைந்தது சிசினா வளர்ந்த சூழல். இந்த அழகிய ராஜகுமாரி மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக சிசினாவும் ஏர்னெஸ்டோவை மிகவும் நேசித்தார். ஏர்னெஸ்டோவுக்கு அந்த மாளிகையின் செல்வந்த உபசரணைகள் தராத இனிய உணர்வை மனதிற்கு இனிய காதலியோடு இருந்த நேரங்களும் நினைவுகளும் தந்திருந்தது.

சிசினாவின் குடும்பத்தினர் ஏர்னெஸ்டோவை ஒரேயடியாக நிராகரிக்கவில்லை. சில விடயங்களில் சிசினாவிற்கு பொருத்தமானவராக ஏர்னெஸ்டோவை பார்த்தனர். அவரது எளிமையான தோற்றம் சிசினா குடும்பத்தினரை கவர்ந்தது. ஏர்னெஸ்டோ இலக்கியம், வரலாறு, தத்துவம் பற்றி பேசிய போதும், அவரது பயண அனுபவங்களை பகிர்ந்த வேளையும் அனைவரும் கவனமாக கேட்டனர். அப்போதெல்லாம் சிசினாவின் கண்களில் ஒளி படர்ந்து கன்னங்கள் சிவந்து புன்னகை வெளிப்பட்டது.

சிசினாவின் பெற்றோர் ஏர்னெஸ்டோவின் பயணங்கள் பற்றி அதிகம் கவலை கொள்ளவில்லை. அவர்களும் உலக அறிவு படைத்து, பன்முக கலாச்சாரத்துடன் எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மையுடன் இருந்தது அதற்கு காரணம். பிற்போக்கு தன்மையுடைய சமுதாயத்தில் அவர்கள் வேறுபட்ட மனிதர்களாக காணப்பட்டனர் அதனால் மற்றவர்களுக்கு சிசினா குடும்பத்தினர் வாழ்க்கை வித்தியாசமானதாக தென்பட்டது. சிசினாவின் தந்தையார் ஆபத்தான அடர்ந்த அமேசான் காடுகளில் பயணம் செய்திருந்தார். சாலைகள் சரியாக அமையாத காலத்தில் 4 சக்கர வாகன பந்தயத்தில் கலந்துகொண்டிருந்தனர். சிசினாவின் பாட்டியின் மேற்பார்வையில் முதல் விமானத்தை ஓட்டிய பெருமை கொண்டவர். சிசினாவின் மாமா ஒருவர் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்களால் மூழ்கடிக்கப்பட்ட யுத்த கப்பல் ஒன்றில் பலியானார். இப்படி பன்முக தன்மையுடைய குடும்பம் சிசினாவுடையது.

ஏர்னெஸ்டோவுக்கு சிசினாவின் குடும்வ சூழல் சவாலாகவும் அதே வேளை மனதை கவரவும் செய்தது. காதலியை காண அடிக்கடி கொரடோபா நோக்கி பயணம் போனார் ஏர்னெஸ்டோ. 1951ல் தொடர்ந்து மலகுயெனோவிலும், நகரில் அமைந்த வீட்டிலுமாக பலமுறை சிசினா மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டார் ஏர்னெஸ்டோ. சிசினாவின் உறவினர்களின் ஏர்னெஸ்டோவை அதிகம் விரும்பியவர் சிசினாவின் மாமா மார்டின். மலகுயெனோவில் அவர் அரேபிய குதிரைகளை வளர்த்து வந்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நேசநாடுகளின் படைகளை விரும்பி ஆதரவு தெரிவிக்க இவர் மட்டும் நாஜிப் படைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். இரவு முழுவதும் விழித்திருந்து ஏர்னெஸ்டோ, சிசினா மற்றும் நண்பர்கள் விடியும் வரை நடனமாடுவதற்கு பியானோ வாசித்த பாசமான மனிதர் அவர்.

காதல் வளர, ஆசையும் வளர்ந்தது. ஏர்னெஸ்டோ சிசினாவை திருமணம் செய்யவும், தேனிலவு செல்ல தென் அமெரிக்கா முழுவதும் "காரவேன்" பயணம் செல்ல தூண்டினார். பதினாறு வயது மங்கையான சிசினா முடிவெடுக்க முடியாமல் தத்தளிக்க, பெற்றோர் இந்த திட்டத்தை ஆதரிக்கவும் இல்லை. இதன் பின்னர் ஏர்னெஸ்டோவுக்கும் சிசினா குடும்பத்தினருக்குமிடையே இடைவெளி உருவானது. விருந்து உபச்சார மேசையில் ஏர்னெஸ்டோவின் முக்கியத்துவம் குறைய துவங்கி, வீண் விவாதங்கள் அவ்வப்போது தென்பட்டது. குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாவிடினும் ஏர்னெஸ்டோ-சிசினா காதல் இரகசிய சந்திப்புகளில் வளர்ந்தது.

செவிலியர் சான்றிதழ் பெற்ற ஏர்னெஸ்டோ கப்பலில் சில காலம் வேலை பார்த்தார். துறைமுகத்தில் கப்பல் நிற்கிற சிறிது இடைவெளியில் சிசினாவின் கடிதம் கிடைத்தால் கொண்டு சென்று தர அவரது தங்கை செலியாவை அடிக்கடி துரத்துவது ஏர்னெஸ்டோவுக்கு வாடிக்கை. ஓடி வரும் தங்கையின் கைகளில் கடிதம் இருப்பதை பார்க்கும் வேளைகளில் அவர் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை. சிசினாவின் தொடர்புகள் குறைந்து கப்பலில் வேலை பார்ப்பது விருப்பமில்லாமல் வேலையை விட்டு நீங்கி மருத்துவ படிப்பை தொடர்ந்தார். அவருக்கும் சிசினாவுக்கும் காதலில் எந்த பிரச்சனியும் இருப்பதாக குடும்பத்தினரிடம் ஏர்னெஸ்டோ வெளிப்படுத்தவில்லை. சிசினாவை காதலிப்பதில் ஏற்பட்ட அழுத்தங்கள் ஏர்னெஸ்டோவின் மனதை வாட்டியது.

இப்படியான ஒரு சூழலில் 7 நாட்கள் இனிதாக காதலியுடன் கழித்து விடைபெற்ற காதலர் கண்களும் நெஞ்சமும் ஈரமானது இயற்கையே. காதலியை சந்தித்த நிகழ்வுகளை மனதில் சுமந்ததால் பயணத்தின் தூரத்தை ஏர்னெஸ்டோ உணரவில்லை. ஏர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி நெகோசியா என்ற இடத்தில் ஆல்பர்டோவின் கல்லூரி தோழியின் வீட்டை நோக்கி சென்றது.
(வரலாறு வளரும்)

புகைப்பிடிப்போரும் புகை பிடிக்காதோரும் – ஒரு ஒப்பீட்டு ரீதியான ஆய்வு

20000 இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் அறிவாற்றல் குறைவாக இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது.

தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்களின் அறிவுத்திறன், சராசரி ஆண்களை விட எட்டு புள்ளிகள் வரை குறைவாக இருக்கின்றது. தினமும் அவர்கள் புகைக்கும் சிகரெட்டின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறிவாற்றல் குறைவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு 101 புள்ளிகள் அறிவுத்திறன் இருக்கும் நிலையில் புகைப் பிடிப்பவர்களுக்கு 94 புள்ளிகள் மட்டுமே அறிவுத்திறன் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். மன அழுத்தம் அதிகம் உள்ள இளைஞர்களே அதிகம் புகைப்பிடிக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் புகைப்பழக்கம் மன அழுத்தத்தை அதிகரித்து மனநல பாதிப்புகளுக்கு உள்ளாக்குகிறது மேலும் புகைப்பழக்கம் குடிப்பழக்கத்திற்கும் வழிவகுக்கிறது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மாரடைப்பு, புற்றுநோய், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரிந்த விசயம். ஆனால் மனைவிக்கு நுரையீரல் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றையும், குழந்தைகளுக்கு காதுகோளாறு, ஆகியவையும் பரப்புகின்றனர். புகைப்பழக்கத்தில் இருந்து மீள மனரீதியான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

வேலையில் டென்சன் ஏற்பட்டால் புகையை நாடாமல் நல்ல இசையை ரசிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உடற்பயிற்சி, தியானம் போன்றவையும் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

வியாழன், 28 ஜூலை, 2011

உலகிலேயே முதன் முதலில் கடலுக்கு அடியில் நட்சத்திர ஒட்டல்


நாம் அனைவரும் பல நட்சத்திர ஒட்டல்களை பார்த்திருப்போம், ஆனால் கடலுக்கு அடியில் பார்த்திருக்கிங்களா படங்களை பாருகங்கள். இந்த நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட ஹைடிரோபாலிஸ் ஒட்டல் துபாயில் உள்ளது. இது உலகின் முதன் முதலில் கடலுக்கு அடியில் உருவக்கப்பட்டதாகும்.

சுமார் 300 ஹெக்டோ் பரப்பும் 66 அடி உயரம் கொண்டது. 2006 ம் ஆண்டு இதன் கட்டடப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஹைடிரோபாலிஸசை வடிவமைத்தவர் Joachim Hauser ஆவார். ஹைடிரோபாலிஸ்ன் மேற்ப்பகுதியில் திரையரங்கம் மற்றும் உணவகமும் உள்ளது.









புதன், 22 ஜூன், 2011

நெப்போலியனின் காதலும் வீரமும்.


காதல், நாணம், துணிச்சல், வீரம், ஆசை, ஆளுமை,ஈகை, நகைச்சுவை திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை மனிதகுலத்தின் பிரத்யேக குணங்களாக விளங்கின. மனித நாகரீகத்தில் காதல், வீரம் ஆகிய இரண்டு உணர்வு வெளிப்பாடுகள் மிகுந்து காணப்படும் மனிதன் தளபதியாக, தலைவனாக, அரசனாக கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை ஏற்றுக் கொள்ளப்படுகின்றான்.

17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸ் தேசத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு சின்னஞ்சிறிய தீவில் 'போனபர்ட்' என்றுஅழைக்கப்படும் குடும்பத்தில் பிறந்த நெப்போலியன் தன்னுடைய இருபதாவது வயதிலேயே போர்வீரனாக வாழ்க்கையை தொடங்கியவன். தன் வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட நாட்களை யுத்த களங்களிலேயே கழித்தவன். நெப்போலியனின் போர் தந்திரங்களும், போரிடும் முறையும்,படைவீரர்களிடையே ஆற்றும் வீரம் மிக்க சொற்பொழிவுகளும், ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாக தன் ஆளுகைக்கு கீழ் கொணர்ந்த திறனும் உலகின் வரலாறு அறிஞர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டவை ஆகும். நெப்போலியனின் அசாதரணமான யுத்த குணங்களை போலவே அவனின் காதலும், அதன் தொடர்ச்சியும் முடிவும் வித்தியாசமானதாக அமைந்து விட்டது.

பிரான்ஸ் தேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தை அடக்கிவிட்டு மாளிகையில் அமர்ந்திருக்கின்றான் நெப்போலியன். அப்பொழுது ஒரு சிறுவன் அவனை வணங்கிவிட்டு சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தில் அவனுடைய அப்பா இறந்து விட்டதாகவும் அப்பொழுது அவனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வாள் படையினரால் கைப்பற்றப் பட்டதாகவும், அந்த வாள் வழிவழியாக வந்த தன் குடும்பச் சொத்து என்பதால் தாங்கள் அதை பையனின் பணிவும், குடும்ப பாரம்பரியத்தின் மீது கொண்ட அவனுடைய பற்றுதலும் நெப்போலியனை வியப்பில் ஆழ்த்துகின்றது. பாரட்டத்தக்க நற்பண்புகள் கொண்ட இப்பையனை வளர்த்த தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிட அவன் வீட்டிற்கு செல்கின்றான் நெப்போலியன், அவன் நினைத்துக் கொண்டு சென்றதோ நரை முடியும் சுருங்கிய கன்னங்களும் கொண்ட நடுத்தர வயது பெண்ணை. ஆனால் கண்டதோ கட்டுக்குலையாத மேனியும், சொக்கி விழ வைக்கும் அழகும் கொண்ட சொக்கத்தங்கம் போன்ற சொர்ணமயிலை. போர் களங்களில் வெற்றிகளை குவித்த நெப்போலியன் காதல் களத்தில் முதன்முறையாக தோற்றுப் போகின்றான்... பார்த்தவுடன் பற்றிக் கொள்ள நினைத்த அந்த இளம் விதவையின் பெயர் ஜோஸபைன். தன்னை விட இரண்டு வயது மூத்தவளும் இரண்டு ஆண் மக்களுக்குத் தாயுமான ஜோஸபைனிடம் தன் காதலை தெரிவிக்கின்றான். மறுக்கின்றாள் அவள். விடாமல் தொடர்கின்றான். மண்டியிடுகின்றான். அவள் முன் கெஞ்சுகின்றான். பிதற்றுகின்றான். இரண்டு குழந்தைகளையும், விதவைக் கோலத்தையும், சமூகத்தின் ஏச்சுப் பேச்சுக்களையும், நெப்போலியனின் எதிர்கால யுத்த நடவடிக்கைகயையும் சுட்டிக் காட்டி மறுக்கின்றாள் ஜோஸப்பின். இறுதியில் எப்பொழுதும் போல் வென்றான் நெப்போலியன். திருமணம் இனிதே நடைபெறுகின்றது. இன்பமாய் வாழ்வைத் தொடங்கினர் நெப்போலியன்-ஜோஸப்பின் தமபதியினர்.

யுத்தக் களத்தில் நினைத்த மாத்திரத்தில் தூங்கவும், நினைத்த மாத்திரத்தில் திரும்பி எழவும் தெரிந்த நெப்போலியன் திருமணம் முடிக்கும்போது சாதாரண படைத்தளபதி, விரைந்து செயலாற்றும் திறனும், துணிச்சலும், வெறித்தனம் மிக்க வேகமும் கொண்ட நெப்போலியன் இத்தாலி, ஆஸ்ட்ரியா, சார்டினாயா ஆகிய நாடுகளின் வெற்றிக்குப் பின் பிரான்ஸ் தேசத்தின் படைத் தவைனாகின்றான். தேன் குடத்தைச் சுமந்து வரும் வண்டிணை போல் காதல் மனைவியின் சுகத்தை துளித்துளியாய் அனுபவித்த நெப்போலியனால் இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையும், காட்டாறுகளும், கற்பாறைகளும் காட்டு விலங்குகளும் பாலைவனங்களும் அவனுக்கு பூந்தோட்டமாய்க் காட்சியளித்தன. நினைத்த மாத்திரத்தில் நாடுகளை வெல்வதும். கைப்பற்றிய நாட்டிலிருந்து கொண்டு வந்த செல்வங்களைக் குவிப்பதும் என தொடர்நது நெப்போலியன் பிரான்ஸ் தேசத்தின் மக்களால் பெருமிதத்தோடு பார்க்கப் பட்டான். உலக அரங்கில் பிரான்ஸ் தேசத்தின் மதிப்பு மிக வேகமாய் உயர்ந்தது. புதினாறாம் லூயி மன்னனின் முடியாட்சியை முறியடித்து குடியாட்சியை பதினேழாம் நூற்றாண்டிலேயே மலரவிட்ட பிரான்ஸ் தேசம் மெல்ல மெல்ல நெப்போலியனின் வீரத்தால் வசீகரிக்கப்பட்டு அவனைப் பேரரசனாக ஏற்றுக்கொண்டது ஜோஸபின் பேரரசியாக முடிசூட்டப்பட்டான்.

பின்விதி மெல்ல விளையாடியது. உலகின் கால்பகுதி நிலங்களை தன் ஆளுகையில் வைத்திருந்த இங்கிலாந்த௉யும் மிகப்பெரிய நாடான ரஸ்யாவையும் கைப்பற்றினால் இந்த பூமிப்பந்து முழுக்க தன் கையில் வந்து விடும் என கணக்குப் போட்டான் நெப்போலியன் ரஸ்யாவின் போர் தந்திர முறைகளாலோம், அனுபவத்தறியாத கடுங்குளிராலும் தோற்றுப் போனான். இப்போரில் சுமார் ஒன்றறை லட்சம் பேர் குளிரில் விறைத்து இறந்து போனார்கள் மக்கள் மெல்ல வெறுக்க ஆரம்பித்தனஒரு வருடத்தில் மகன் பிறக்கின்றான். சூழ்நிலை மாறி காற்று மாதிரி வீசுகின்றது பாரம்பர்யமாய் அரசியல் தந்திரமும் போர் திறனும் மிக்க இங்கிலாந்து நேசநாடு கிளன் கூட்டணியை ஏற்படுத்தி பிரான்ஸில் உள்நாட்டுக் கலவரத்தை உண்டாக்குகின்றது. நெப்போலியன் செயிண்டு எலினா தீவில் சிறைப் பிடிக்கப் படுகின்றான் வெற்றி பெற்ற நாடுகளின் உப்பரிகைகளில் உலவிய நெப்போலியன் தனிமையில் தவிக்கின்றான். இரண்டாவது மனைவி மேரி லூயி நாட்டை விட்டு ஓடிவிடுகின்றாள். விரட்டி விடப்பட்ட காதல் மனைவி மட்டும் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் நெப்போலியன்-எலினா- நெப்போலியன் என்று புலம்பியபடியே லோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றாள்.

ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் காதலித்தனர் நெப்போலியனும், ஜோஸப்பினும். நெப்போலியன் காதலிலும் வீரத்திலும் தோற்றுப் போனான். ஜோஸப்பின் வாழ்க்கையில் தோற்று காதலில் வென்றாள்.

காதலும் வீரமும் மனித குலத்தின் அடையாளங்கள். சமூக அமைப்புகளையும், இயற்கை நியதிகளையும் மீறிய முரட்டுத்தனமான ஆளுமைகளுடன் கூடிய வீரமும் தோற்றுப் போகும். காதலும் தோற்றுப் போகும்.ர். தனக்குச் சொந்த மகன் பிறந்தால் மண்ணாட்சியை தக்க வைத்துக் கொளளலாம் என்ற தவறான ஆலோசனையால் மனம் மாறிய நெப்போலியன் ஊனுருக. நெஞ்சுருக,நெத்குருக காதலித்த அன்பு மனையாளை மாளிகையை விட்டு அனுப்பிவிட்டு ஆஸ்டிரிய நாட்டு அரச வம்சத்தைச் சேர்ந்த மேரிலூயி என்னும் பெண்ணை மணக்கினறான்.
ஒரு வருடத்தில் மகன் பிறக்கின்றான். சூழ்நிலை மாறி காற்று மாதிரி வீசுகின்றது பாரம்பர்யமாய் அரசியல் தந்திரமும் போர் திறனும் மிக்க இங்கிலாந்து நேசநாடு கிளன் கூட்டணியை ஏற்படுத்தி பிரான்ஸில் உள்நாட்டுக் கலவரத்தை உண்டாக்குகின்றது. நெப்போலியன் செயிண்டு எலினா தீவில் சிறைப் பிடிக்கப் படுகின்றான் வெற்றி பெற்ற நாடுகளின் உப்பரிகைகளில் உலவிய நெப்போலியன் தனிமையில் தவிக்கின்றான். இரண்டாவது மனைவி மேரி லூயி நாட்டை விட்டு ஓடிவிடுகின்றாள். விரட்டி விடப்பட்ட காதல் மனைவி மட்டும் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் நெப்போலியன்-எலினா- நெப்போலியன் என்று புலம்பியபடியே லோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றாள்.

ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் காதலித்தனர் நெப்போலியனும், ஜோஸப்பினும். நெப்போலியன் காதலிலும் வீரத்திலும் தோற்றுப் போனான். ஜோஸப்பின் வாழ்க்கையில் தோற்று காதலில் வென்றாள்.

காதலும் வீரமும் மனித குலத்தின் அடையாளங்கள். சமூக அமைப்புகளையும், இயற்கை நியதிகளையும் மீறிய முரட்டுத்தனமான ஆளுமைகளுடன் கூடிய வீரமும் தோற்றுப் போகும். காதலும் தோற்றுப் போகும்.