வெள்ளி, 13 ஜனவரி, 2017

PETA அமைப்பின் மறுபக்கமும் ஜல்லிக்கட்டும்

சல்லிக்கட்டு என இன்று அடையாலப்படுத்தப்படும் தமிழர்களின் பண்டைய வீர விளையாட்டான
ஏறுதழுவுதலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் PETA தலைமையிலான மிருக நல ஆர்வலர்களூடாக மேற்கொள்ளப்பட்டுவருவதை நாம் அனைவரும் அறிவோம்.

PETA அமைப்பு :

“விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals) ” என்ற முழுப்பெயரை உடைய இவ் நிறுவனம், 1980 ஆம் ஆண்டு Ingrid Newkirk மற்றும் Alex Pacheco ஆகிய இருவரால் அமெரிக்காவில் தொடக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டில் சில வழக்குகள் மூலம் மக்களிடையே பிரபலமாகி இன்று விலங்குகளின் உரிமைகளுக்கான மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. (மேலதிக விபரங்கள் இணையத்தில் உள்ளன)


விலங்குகளை காப்பாற்ற முனைவதாக கூறும் இந்த அமைப்பின் மறுபக்கத்தை ஆதாரங்களுடன் இப்போது பார்ப்போம்.


PETA கொலை வீதம்!

VDACS, என்ற விவசாயத்தொடர்புடைய அமைப்பு மேற்கொண்ட கணிப்பின்படி,
ஒரு வருடத்தில் PETA அமைப்பால் மீட்கப்பட்டதாக கூறப்படும் விலங்குகளின் எண்ணிக்கைக்கும், அந்த ஆண்டு முடிவில் PETA அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த விலங்குகளிற்கும் இடையிலான எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, மீட்கப்பட்ட விலங்குகள்; தத்தெடுக்கும் திட்டங்களுக்கமைய தத்துக்கொடுக்கப்படுகின்றன. சில விலங்குகள் உடல் நலம் இன்றி இறக்கின்றன. மீதி விலங்குகள் மிச்சமாக இருக்கவேண்டும்.
ஆனால், மீட்கப்பட்ட விலங்குகளில் இருந்து தத்து, நோயால் இறந்த விலங்குகளின் எண்ணிக்கைய கழித்துப்பார்க்கும் போது மிஞ்சும் விலங்குகள் PETA இன் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படும் விலங்குகளின் எண்ணிக்கைக்கு சமமாக‌ இருக்கவில்லை. அதாவது மீட்கப்பட்ட விலங்குகளில் மெகப்பெரும் எண்ணிக்கையிலான விலங்குகள் PETA அமைப்பினால் கொல்லப்பட்டுள்ளன.

இவ் விலங்குகள் தெருவோரங்கள், பிச்சை எடுப்போர், கட்டிவைத்து வளர்ப்போர் மற்றும் துன்புறுத்துபவர்களிடம் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தெருவோரங்களில் வாழ்ந்த இவ் விலங்குகள் விட்டிருந்தால் அவ்வாறே சுதந்திரமாக வாழ்ந்திருக்கும். நோய் பரப்பியாக இருக்கும் என காரணம் சொன்னால், அது விலங்கு நல அமைப்பில்லை. “மனித சுய நல அமைப்பே.
பிச்சை எடுப்போரிடம் வாழும் விலங்குகள் மகிழ்வுடன் வாழ்வ்தை நாமே கண்கூடாக பார்க்கமுடியும்.
கட்டி வைத்து வளர்ப்போர் (கண்டிக்கப்படவேண்டியது தான்) இடம் இருந்து கைப்பற்றப்பட்ட விலங்குகள். PETA வால் அமைக்கப்பட்ட சிறைகள் போன்ற கூடாரங்களில் வளர்க்கப்பட்டுள்ளன. பெரிய வித்தியாசமில்லை. (தத்தெடுக்கப்பட்டவற்றை தவிர)

PETA அமைப்பால் கொல்லப்பட்ட விலங்குகளின் வீதாசார விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கான விளக்கம் PETA அமைப்பால் இதுவரை கொடுக்கப்படவில்லை.


PETA அமைப்பானது பல நிறுவனங்கள் மூலமும் சாதார‌ன எம்மைபோன்ற மக்கள் மூலமும் நிறுவனத்திற்கு தேவையான பணத்தை ஈட்டி வருகிறது. அவ் பணம் கொடுக்கப்படுவதற்கான காரணம் விலங்குகளை பாதுகாப்பதற்கே. ஆனால், விளம்பரம் என்ற பெயரில் உலக பிரபலங்களை (ஆபாசமாக) காட்டுவதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக கூறி குறித்த பணத்தை விரையம் செய்துவருகிறது இவ் அமைப்பு.
தெருக்களில் நடாத்தப்படும் இவ்வாறான விழிப்புணர்வு என வகைப்படுத்தப்படும் நிகழ்வுகளால் அத்தெருக்களில் சென்றுவரும் சிறார்களின் மனது பாதிக்கப்படுவதாகவும், தெருக்களில் ஆபாச நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் அவ் நிறுவனம் உருவாக்கப்பட்ட அமெரிக்காவிலேயே பல எதிர்ப்புக்கள் கிழம்பியுள்ளமை சுட்டிக்காட்டப்படவேண்டிய விடையம்.

மேலும் சில விளம்பரங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் விளம்பரப்படுத்தப்படுகிறது..
உதாரணமாக, சைவம் சாப்பிடுவோர் பாலியல் விடையத்தில் திறமையானவர்கள் என விளம்பரப்படுத்தப்படுகிறது. இதற்கு எந்த விதமான மருத்துவ விஞ்ஞான ஆதாரமும் இல்லை.

PETA அமைப்போடான நேர்காணல் காணொளி பகிரப்பட்டுள்ளது.


அடுத்து,
PETA அமைப்பிற்கு பின்னான வர்த்தக அரசியல் பற்றி ஏற்கனவே பல பதிவுகள், காணொளிகள் பகிரப்பட்டு விட்டன. அவற்றை இணையத்தில் பார்க்கலாம்.

PETA அமைப்பு உண்மையிலேயே கருனை மிக்கதுதான். ஏறுதழுவுதல் தேவையில்லை என வாதிடுவோருக்கு.

ஏறுதழுவுதலை தடுப்பதனால், வலிமை மிக்க நாட்டு காளை மாடுகளை ஒழித்து அதன் அடுத்த கட்டமாக நாட்டு மாட்டு இனம் இல்லாமல் போகும். இது ஒரு இன அழிப்பு. எவ்விதத்திலும் கருனையாகாது.
மேலும் இன்னும் கொஞ்சம் காலம் கடந்து பார்த்தால், இயற்கையாக மாட்டில் கறக்க கூடிய பாலை விட அதிக பாலை கறக்க வைக்க மரபணு மாற்றப்பட்ட Jersey வகை மாடுகளின் பால்கள் சந்தையில் முதன்மை பெறும். (ஏற்கனவே அவை தான் முன்னிலை. நாட்டு மாடுகள் அற்ற நிலையில். போட்டியில்லை.)
மரபணு மாற்றப்பட்ட பாலினால், 50-60 ஆண்டுகளிற்கு பிறகு மனிதர்களுக்கு என்ன என்ன நோய் வரும் என்பதை எதிர்வு கூறமுடியாது. 50-60 ஆண்டுகளின் பின்னர்தான் அதன் விளைவுகளை பார்க்க முடியும். (அப்போது நாட்டு மாட்டினம் அழிந்திருக்கும்.) இப்போதே, சில நோய்களுக்கு இவ்வகை மாட்டுப்பால் காரணமாக இருப்பதாக அறியப்பட்டுவருகிறது.
+ மாடுகள் அற்ற நிலையில், விவசாயத்திற்கு பல் நாட்டு நிறுவன உழுதியந்திரங்களை வாங்கவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள்.

அதே நேரம் PETA, செயற்கை விவசாய உணவுகளுக்கும் ஆதரவு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அவற்றின் பின் விளைவுகளுக்கு 100 ஆண்டுகள் பொறுத்திருக்கவேண்டும்.

பெரும் கேள்வி.
பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களுக்கென சொந்தமான பகுதியில் தமிழர் அடிப்படை தொழிலான விவசாயத்திற்கு பயன்பட்டு தமிழரோடு ஒன்றி வாந்துவரும் இவ் மாட்டு இனத்தையும், அதன் விளையாட்டையும் அவர்கள் விரும்பும் போது. 60 ஆண்டுகளுக்குட்பட்ட ஒரு அமைப்பு எப்படி தடுக்க முடியும். இத்தனைக்கும் அவ் அமைப்பினரே வெளி நாட்டு வகை நாய்களை வெப்பம் நிறைந்த பகுதிகளில் வளர்க்க கூடியவர்கள்.

எவளவு தான் நாம் பேசினாலும், தடை உத்தரவு பெறப்படத்தான் போகிறது. ஒரு 10-20 வருடம் தடைய மீறி நடாத்தப்படும். அதன் பின்னர் காங்கேயன் மாடு என்று ஒரு இனம் வாழ்ந்ததாக புத்தகங்களில் படிக்க முடியும். :)

மேலும் சில…
#வெள்ளைக்காரன்_சொன்னாத்தான்_கேட்போம்_moment





Ref : petakillsanimals.com / vdacs.virginia.gov / Youtube / wikipedia / google search